இறக்குமதி செய்யப்பட்ட எண்ணை மீள் ஏற்றுமதி
இறக்குமதி செய்யப்பட்ட எண்ணை மீள் ஏற்றுமதி
தரமற்ற தேங்காய் எண்ணையை இறக்குமதி செய்த 3 நிறுவனங்களில் ஒரு நிறுவனம் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணையை மீள் ஏற்றுமதி செய்யவுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய ´கட்டான ரிபைனரிஸ்´ நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணையை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3 நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தேங்கா எண்ணையில் புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லாடாக்சின் என்ற இரசாயன பதார்த்தம் கலந்துள்ளதாக அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
இது குறித்து மேற்க்கொள்ளப்பட்ட இரண்டாவது தர நிர்ணய பரிசோதனையிலும் தேங்காய் எண்ணையில் புற்று நோயை ஏற்படுத்த கூடிய இரசாயனம் கலந்துள்ளமை உறுதியானது.
இவ்வாறான நிலையில் குறித்த தேங்காய் எண்ணையை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத்திணைக்களம் சம்பந்தப்பபட்ட நிறுவனங்களுக்கு அறிவித்தது.
தற்போது இறக்குமதி செய்யப்பட்ட எண்ணை தொடர்பான பரிசோதனைகள் முடிவடைந்துள்ள நிலையில் கட்டானையில் உள்ள ´கட்டான ரிபைனரிஸ்´ நிறுவனத்திற்கு எண்ணையை மீள் ஏற்றுமதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த வாரத்தில் எண்ணை மீள் ஏற்றுமதி செய்யப்படும் என சுங்க பணிணப்பாளர் தெரிவித்துள்ளளளார்.
இதேவேளை, இன்றைய தினம் மற்றுமொரு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணைய் மாதிரிகள் தொடர்பான பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்
.
forex வாங்கி விற்பது எப்படி
forex வாங்கி விற்பது எப்படி HOW TO BUY AND SELL -NO LOST GET PROFIT
உலக பங்கு சந்தையில் எவ்வாறு இலகுவாக பணத்தை ஈட்டுவது ,அதற்கு நாம என்ன செய்ய
வேண்டும் ..? அதனை எவ்வாறு கற்று கொண்டு நகர்வது ,அது தொடர்பான விளக்கம்
forex வாங்கி விற்பது எப்படி ,தெளிவான பார்வையுடன் ஆதார விளக்கத்துடன் உள்ளது பார்த்து பழகி வெல்லுங்கள் ,பணத்தை அள்ளுங்கள்
,இலக்கை சொல்வது நாம் ,வெற்றியை தீர்மானிப்பது நீங்கள்
forex trade click here full video
நீதியின் குரல்”இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
நீதியின் குரல்”இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம்!
இடர் வரினும் அஞ்சாமல் உண்மையும் நீதியும் தேடும் அர்ப்பணிப்புடன் தீரமிகு உன்னத வாழ்க்கை வாழ்ந்து, மறைந்த அதிவணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு ‘நீதியின் குரல்’ என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை புகழ்வணக்கம் செலுத்திக் கொண்டது.
2009ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காவின் இனஅழிப்புப் போர்,பெருந்திரளான வன்கொடுமைக் குற்றங்களாகும் என்பதை நிறுவுவதில் இராஜப்பு ஆண்டகை முக்கியப் பங்கு வகித்தவர் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அரசவையில் குறிப்பிட்டிருந்தார்.
அனைத்துலக சமூகத்தின் சாட்சிகளின்றி நிகழ்த்தப்பட்ட இனவழிப்பின் வலுமிக்க சாட்சியாக ஆண்டகை இருந்வர் என்பதோடு, 146,678 பேர் கொல்லப்பட்டனர் என்ற புள்ளிவிவரக் கணக்கீடுகளின் அடிப்படையில் அவர் தெரிவித்த முடிவை யாராலும் மறுத்துப் பேச முடியவில்லை எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறித்துரைத்திருந்தார்.
மேலும் அவர் தனதுரையில், 2011ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் அமைத்திருந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம், இறுதிப்போரின் நிகழ்ந்த பாரிய குற்றங்கள், மனித உரிமைமீறல்கள் தொடர்பில், ஆணைக்குழுவினை அமைத்திருந்த அரசுக்கு எதிராக, ஏனைய உயர்நிலை கத்தோலிக்கக் குருமார்களுடன் சேர்ந்து ஆண்டகை அவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தமையானது பெருந்துணிச்சலான செயலாக அமைந்தது.
வாழ்நாள் முழுக்க அவர் அதிகாரத்தில் இருந்தவர்களிடம் பகிரங்கமாகவும் ஒளிவுமறைவின்றியும் உண்மை உரைத்திருந்தார்.
முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு நீதி கோரும் தமிழர் குரலின் ஆளுருவமாகத் திகழ்ந்தவர் ஆயர் இராஜப்பு.
விடுதலைக்கும், அரசியல் இறைமைக்குமான தமிழர் அரசியல் பெருவிருப்பு கோரிக்கையின் உருவமாகத் இராஜப்பு ஆண்டகை திகழ்ந்தவர் என்பதோடு, ஈழத்தமிழர் விடுதலைஅரசியலில் முக்கியப் பங்கு வகித்தவர்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையில், உலகெங்கும் தமிழர்கள் இன்று ஒன்றுபட்டிருக்கும் இந்த நேரத்தில், ஆயரின் குரலை நாம் இழந்து விட்ட போதிலும் அவரது தொலைநோக்கும் பெரும்பணியும் நம்முள் உயிர்ப்புடன் இருக்கும்.
எந்தக் குற்றங்களை அம்பலமாக்கவும் கண்டிக்கவும் ஆயர் தம்முயிரைப் பணயம் வைத்துப் பாடுபட்டாரோ, அந்தக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்ய நம்மை அர்ப்பணித்துக் கொள்வதே இராயப்பு ஆண்டகை நமக்கு விட்டுச்சென்ற மரபுக்கு நாம் செலுத்தக் கூடிய, செலுத்த வேண்டிய மதிப்பின் ஆகச் சிறந்த அடையாளமாகும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.
நீதியின் ஒரு குரலிலிருந்து பல குரல்கள் எழும்.
இராஜப்பு ஆண்டகையின் மறைவு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் இழப்பாகும் எனத் தெரிவித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை துணைத்தலைவர் ரஜினிதேவி செல்லத்துரை அவர்கள், போரின் இறுதிக் கட்டங்களில் 146,679 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற அவர் சாட்சியத்தை எவராலும் நிராகரிக்க முடியவில்லை என தனது இரங்கல் உரையில் தெரிவித்திருந்தார்.
ஆயர் இராஜப்பு ஆண்டகை அவர்கள், தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிழலாக விளங்கினார் எனத் தெரிவித்த தாயக தொடர்பாடலுக்கான அமைச்சர் விஜிதரன் அவர்கள், தமிழர் போராட்டத்தின் நியாயத்தைப் பன்னாட்டுச் சமுதாயத்துக்கு
எடுத்டுரைப்பவராகவும், தமிழினவழிப்பின் சாட்சியாகவும் இருந்தார் என்றார். இறுதி வரை தமிழர் போராட்டத்தின் வழிகாட்டியாக இருந்து தமிழ்த் தேசியத்துக்கு உரமூட்டியிருந்ததோடு, என்றார்.
இறுதிப்போரின் போது தமிழர்க்கு ஏற்பட்ட இழப்புகளைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லி உலகின் மனசாட்சியை ஓங்கி அறைந்தார் என தனது இரங்கலில் தெரிவித்திருந்தார்.
போர்க் காலத்தில் சிறிலங்கா அரசு திட்டமிட்ட முறையில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்லி தமிழ்மக்களுக்கான உணவையும் ,மருந்தையும் குறைத்து நேரடியாகத்
தமிழர்களை அழிக்க முயன்ற போது, சிறிலங்கா அரச திணைக்களங்களின் அறிக்கைகளைக் எடுத்க்காட்டி, சிறிலங்கா அரசாங்கத்தினை உண்மை முகத்தினை உலகின் முன் ஆண்டகை அவர்கள் அம்பலமாக்கினார் என பிரதமர் பணிமனை பணிப்பாளர் நாயகம் கலாநிதி தவேந்திர ராஜா அவர்கள் தெரிவித்திருந்தார்.
தாயகத்திலுள்ள மக்கள் ஆயர் இராயப்பு ஆண்டகைக்கு ‘புனிதர்’ என்ற சிறப்பை வழங்கும்படி பொப்பாண்டகையினை வேண்டிக் கொள்ள வேண்டுமென துணை அமைச்சர் கலையழகன் தனது இரங்கலுரையில் தெரிவித்திருக்க, நாடுகடந்த தமிழீழ அரசங்கமும் இக்கோரிக்கையினை
பொப்பாண்டகைக்கு விடுக்க வேண்டுமென கோரிய அரசவை உறுப்பினர் லிங்க ஜோதி அவர்கள்,தமிழர் ஆன்மிகத்திற்கும் சான்றாக ஆண்டகை அவர்கள் திகழ்ந்திருந்தார் என குறித்துரைத்திருந்தார்.
லெபனானில் காணாமல் போன 3 சகோதரிகள் சிரியா கடலில் மீட்பு
லெபனானில் காணாமல் போன 3 சகோதரிகள் சிரியா கடலில் மீட்பு
;லெபனானில் காணமல் போன மூன்று சகோதரிகள் சிரியாவின் கடற்கரையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் ,
இவர்கள் கடலுக்குள் மூழ்கிய நிலையில் இறந்த நிலையில் சிரியாவில் சடலங்களாக கரை ஒதுங்கியதாக தெரிவிக்க படுகிறது
இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன
பொலிசார் மீது பெற்றோல் குண்டு வீச்சு – 27 போலீசார் காயம்
பொலிசார் மீது பெற்றோல் குண்டு வீச்சு – 27 போலீசார் காயம்
வட அயர்லாந்தில் காவல் துறையினருக்கும் போராட்ட காரர்களுக்கும் இடையில் இடம்பெற்று வரும் தொடர் ,
போராட்டத்தினால் , போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது பெற்றோல் குண்டுகளை வீசினர் ,இந்த
குண்டு தாக்குதல்களில் சிக்கி 27 காவல்துறையினரை படுகாயமடைந்தனர் ,மேலும் அவர்கள் வாகனங்களும் சேதமடைந்தன ,
இவர்களுடன் எட்டு பொதுமக்களும் காயமடைந்துள்ளனர் ,வன்முறையாக வெடித்து பறக்கும் இந்த போராட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தீவிர நகர்வுகள் மேற்கொள்ள பட்டுள்ளன
லண்டனுக்குள் நுழைய முயன்ற 159 அகதிகளை மீட்ட பிரான்ஸ் இராணுவம்
லண்டனுக்குள் நுழைய முயன்ற 159 அகதிகளை மீட்ட பிரான்ஸ் இராணுவம்
பிரான்ஸ் கடல் எல்லை வழியாக பிரிட்டனுக்குள் நுழைய முயன்ற சுமார் 159 அகதிகள் பிரான்ஸ் இராணுவத்தினர் ,மற்றும் காவல்துறையினர் இணைந்து மீட்டுள்ளனர்
இவ்வாறு நுழைந்தவர்களில் பத்து சிறுவர்கள் மற்றும் ,கர்ப்பிணி பெண்கள் உள்ளடங்கும்
இவர்கள் ஆங்கில கால்வாயை ஊடறுத்து நுழைய முயன்ற பொழுதே மேற்படி சுற்றிவளைப்பை மேற்கொண்டு கைது செய்தனர்
இந்த கைதிகள் கைதின் பொழுதுஉலங்குவானூர்திகள் பயன் படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
பிரான்சில் தாக்குத்தல் நடத்த முனைந்த 5 பெண்கள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
பிரான்சில் தாக்குத்தல் நடத்த முனைந்த 5 பெண்கள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
தெற்கு பிரான்ஸ் Montpellier பகுதியில் பெரும் தாக்குதல் ஒன்றை ஏற்றுக் கொள்ள முனைந்த ஐந்து பெண்களை பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்
இதில் 18 வயது மற்றும் அதற்கு குறைவான பெண் ஒருவரும் கைது செய்யப் பட்டுள்ளார்
இதில் இருவர் சகோதரிகள் என அடையாளம் காண பட்டுள்ளது
கைது செய்யப்பட்டவர்கள் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்
- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி
- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்
முடி உதிர்தலை கட்டுப்படுத்த-இதை சாப்பிடுங்க
முடி உதிர்தலை கட்டுப்படுத்த-இதை சாப்பிடுங்க
முடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்பம், சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவது, ரத்தசோகை, ஹைப்போ தைராய்டிசம், வைட்டமின் பி குறைபாடு, ரசாயனம் கலந்த பொருட்களை
கூந்தலுக்கு அதிகம் பயன்படுத்துவது போன்றவை முடி உதிர்வதற்கான பொதுவான காரணங்கள். அதேநேரத்தில் முடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல்
ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்:
உலர்ந்த அத்திப்பழம்: கூந்தல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. அவை ரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர்ச்சியை விரைவுபடுத்தும்.
அத்திப்பழத்தில் அதிக அளவு கால்சியமும் உள்ளது. இது தலை முடியை உருவாக்கும் கொலாஜன் உருவாகுவதற்கு முக்கிய பங்களிக்கிறது. இரவில் 2-3 உலர்ந்த அத்திப்பழங்களை ஊற
வைத்துவிட்டு காலையில் தண்ணீருடன் சேர்த்து சுவைக்கலாம். இரண்டு மாதங்கள் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கூந்தல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும்.
கருப்பு உலர் திராட்சை: ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. இது தலையில் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிப்பதற்கும், மயிர்கால்களின் வளர்ச்சிக்கும்
உதவுகிறது. கருப்பு திராட்சை முடி உதிர்வதை தடுக்கும் சக்திகொண்டது. 7-8 கருப்பு உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு காலையில் நீரை வடிகட்டிவிட்டு உட்கொள்ளலாம்.
முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்
கறிவேப்பிலை: இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை தலையில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு இறந்த மயிர்கால்களை நீக்கவும் உதவுகின்றன. கருவேப்பிலையில் இருக்கும் பீட்டோ கரோட்டின் மற்றும் புரத சத்துக்கள் முடி உதிர்வதை தடுக்கக்கூடியவை.
முடிக்கு வலிமையும் அளிக்கும். கருவேப்பிலை சமையலில் உபயோகிப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கு முன்பாக 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொள்வது சிறந்த பலனை தரும்.
பூசணி: பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் பூசணியில் நிறைந்துள்ளன. அவை கூந்தல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும்.
முடி உதிர்தலை கட்டுப்படுத்த-இதை சாப்பிடுங்க
கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு துத்தநாகம் உதவும். மேலும் இறக்கும் மயிர்க்கால்களை அகற்றவும், மீண்டும் அதில் வலுவான முடி வளர்ச்சிக்கும் வித்திடும்.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியை தூண்டவும் உதவும். பூசணிக்காய் விதைகளை ஊட்டச்சத்துக் களின் புதையல் என்றே ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பூசணி விதையை சாப்பிடலாம். குறிப்பாக அளவுக்கு அதிகமாக டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரந்து வழுக்கை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிறிதளவு பூசணி விதைகளை இரவில் ஊறவைத்து காலையில் உட்கொள்ளலாம்.
முள்ளங்கி : முடி உதிர்தல், முடி பலவீனம், முடி வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முள்ளங்கி இலைகள் நிவாரணம் தரும். கூந்தலில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து முடி உதிர்வதற்கான
கேரட் ஜூஸுடன் முள்ளங்கி இலைகளை சேர்த்து பருகலாம்.
சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அறிந்துகொள்வது எப்படி
சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அறிந்துகொள்வது எப்படி
உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதை கண்டறிவது எப்படி என்று டாக்டர் நந்திதா அருண் விளக்கம் அளித்துள்ளார்.
நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பது குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. இந்த சந்தேகத்திற்கு கிண்டியில் உள்ள டாக்டர்
ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
சர்க்கரை நோயை கண்டறிய டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் டயாபட்டிக் ரிஸ்க் ஸ்கோர்( Diabetes Risk Score) என்று முறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முறை மிகவும்
எளிமையானது. இந்த முறையில் இரத்த பரிசோதனை செய்யாமலேயே உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அறிந்துகொள்வது எப்படி
முதலாவது முறையில் உங்கள் வயது அடிப்படையில் கணக்கிடப்படும். 2-வது பாரம்பரியம் முறையில் உங்கள் தாய், தந்தை, உடன் பிறந்தவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அதன் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும்.
டயாபட்டிக் ரிஸ்க் ஸ்கோர்
3-வது உங்களது BMI அல்லது உடல் எடை கணக்கிடப்படும். 4-வதாக உங்கள் இடுப்பின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடப்படும்
5வது உடற்பயிற்சி செய்யாதவர்கள், அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு என்ற அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இந்த மதிப்பெண்களை கூட்டிப்பார்த்தால் வரும் மதிப்பெண் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதை ரத்த பரிசோதனை செய்யாமல் எளிய முறையில் கண்டுபிடித்து விடலாம்.
நோயானது உடலில் பரவாது தடுத்திட உணவு பழக்கம் மற்றும் உட்கொள்ளும் உணவு முறைகளும் முக்கிய அகாரணமாக அமைகிறது
இந்த மதிப்பெண் அதிகமாக இருக்கும் பட்சத்தில் உங்கள் மருந்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளலாம்.
தனுஷ் பட தயாரிப்பாளருக்கு கொரோனா
தனுஷ் பட தயாரிப்பாளருக்கு கொரோனா
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மும்பையில் தங்கி உள்ள நடிகர்கள்
கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு நடிகர்கள் அமீர்கான், மாதவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதுபோல் தமிழ் நாட்டில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை கவுரி கிஷன், உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு
கொரோனா தொற்று இருப்பதாக பதிவு செய்தார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சசிகாந்த்
தயாரிப்பாளர் சசிகாந்த், தமிழில் இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, ஏலே, மண்டேலா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.
மேலும் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்தையும் சசிகாந்த் தனது ஒய் நாட் ஸ்டியோஸ் மூலம் தயாரித்துள்ளார்.
ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்ற கொள்ளையடித்தால் ஜோடி
ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்ற கொள்ளையடித்தால் ஜோடி
பிரபல இயக்குனர் அகத்தியனின் இளைய மகள் நிரஞ்சனி. இவர் கடந்தாண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.
நடிகை நிரஞ்சனியும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும் காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததால், இருவரும் பிப்ரவரி 25ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
நிரஞ்சனி
இந்நிலையில், இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்றிருக்கிறார்கள். மாலத்தீவில்
இருக்கும் புகைப்படத்தை நடிகை நிரஞ்சனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
தமிழர் உணவு கடை உணவுகளின் மேலே ஓடும் கரப்பான் பூச்சி வீடியோ
தமிழர் உணவு கடை உணவுகளின் மேலே ஓடும் கரப்பான் பூச்சி வீடியோ
பிரபல தமிழர் உணவு கடை ஒன்றுக்குள் அறு சுவையாக சமைத்து வைக்க பட்ட உணவுகளின்
மேலே தனது விருப்ப படி ஓடி விளையாடும் கரப்பான் பூச்சி ஒன்றின் காட்சி அந்த கடைக்கு சென்ற நபர் ஒருவர் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்
அந்த காட்சிகள் இவை
தற்பொழுது சமூக வலைத்தளங்களில் குறித்த காட்சியானது வைரலாகி வருகிறது ,உணவுகளின்
மேலே கரப்பன் பூச்சி உலாவினால் உயிர் ஆபத்தை விளைவிக்கும் என நம்ப படுகிறது
How to change meta trader chart colour கலர் மாற்றுவது எப்படி
How to change meta trader chart colou கலர் மாற்றுவது எப்படி ,மிகவும் இலகுவான முறையில் தெரிந்து கொள்ள இதனை பாருங்கள்
மேலும் உங்களுக்கு உள்ள சந்தேகம் மற்றும் எது தொடர்பான காணொளிகள் நீங்கள்
விரும்புகிறீர்கள் என்பதனை நமக்கு தெரிய படுத்தும் பொழுது அவை தொடர்பாக தொடராக இங்கே வெளியிட உள்ளோம்
உங்கள் கமன்ட் பகுதியில் தெரிவியுங்கள்
மண் தரையில் தூங்கிய சிம்பு – ‘எளிய மனிதர்’ என வியந்து பாராட்டிய வெங்கட் பிரபு
மண் தரையில் தூங்கிய சிம்பு – ‘எளிய மனிதர்’ என வியந்து பாராட்டிய வெங்கட் பிரபு
மாநாடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
மண் தரையில் தூங்கிய சிம்பு – ‘எளிய மனிதர்’ என வியந்து பாராட்டிய வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு டுவிட்டரில் பகிர்ந்த சிம்புவின் புகைப்படம்
நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.
மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சிம்பு, எஸ்.ஜே.சூர்யா
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, சிம்புவை எளிய மனிதர் என குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த 2 புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
. அதில் ஒரு படத்தில் சிம்பு, மண் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். மற்றொரு படத்தில் தரையில் படுத்திருக்கும் சிம்புவின் பக்கத்தில் நின்று எஸ்.ஜே.சூர்யா பேசிக்
கொண்டிருக்கிறார். இந்தப் படங்களைப் பார்த்த சிம்பு ரசிகர்கள், அதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்
கமலுக்காக வீதியில் இறங்கி குத்தாட்டம் போட்ட அக்ஷரா ஹாசன்.
கமலுக்காக வீதியில் இறங்கி குத்தாட்டம் போட்ட அக்ஷரா ஹாசன்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கமலுக்காக அவரது மகள் அக்ஷரா ஹாசன் வீதியில் இறங்கி குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரித்து இருக்கிறார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் முதன்முதலாக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
கமலுக்கு ஆதரவாக திரையுலகினர் யாரும் பிரச்சாரம் செய்யவில்லை என்றாலும் அவரது அண்ணன் மகள் சுகாசினி கடந்த சில நாட்களாக கோவையின் ஒவ்வொரு தெருவிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அக்ஷரா ஹாசன் – சுஹாசினி
இந்த நிலையில் தற்போது கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசனும் கோவையில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்.
அக்சராவும் சுஹாசினியும் தெருவில் குத்தாட்டம் போட்டு வாக்குகளை திரட்டிய வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரது ஆட்டத்தை பார்த்த அந்த பகுதியில் உள்ள பெண்களும் அவருடன் சேர்ந்து ஆடினார்கள்.
வயது குறைவானவரை திருமணம் செய்வேன்… கவர்ச்சி நடிகை அறிவிப்பு
வயது குறைவானவரை திருமணம் செய்வேன்… கவர்ச்சி நடிகை அறிவிப்பு
என்னைவிட வயது குறைவான சின்ன பையனை தான் திருமணம் செய்வேன் என்று பிரபல கவர்ச்சி நடிகை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
வயது குறைவானவரை திருமணம் செய்வேன்… கவர்ச்சி நடிகை அறிவிப்பு
கவிதா ராதேஷ்யம்
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி’. இந்த படத்தில் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்தவர் நடிகை கவிதா ராதேஷ்யம். பாலிவுட் நடிகையான இவர் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே கவர்ச்சியாக நடித்திருப்பார்.
கவிதா ராதேஷ்யம்
சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் கவிதா ராதேஷ்யம், தற்போது அவர் மேலாடை மட்டுமே அணிந்த ஒரு கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்து இருக்கிறார்.
கவிதா ராதேஷ்யம்
மேலும், எனக்கு யாருடனும் எந்த விதமான ரிலேஷன்ஷிப் இல்லை, எனக்கு நிச்சயதார்த்தமோ, திருமணமோ ஆகவில்லை
. நான் இன்னும் 5 வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்வேன். ஆனால் கண்டிப்பாக என்னை விட வயது குறைவானவரைதான் திருமணம் செய்து கொள்வேன். எனவே என்னை பற்றி பரப்பும் வதந்தியை நிறுத்துங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
காட்டுக்குள் கடும் சண்டை 22 இந்திய இராணுவம் பலி -தொடரு ம் வேட்டை
காட்டுக்குள் கடும் சண்டை 22 இந்திய இராணுவம் பலி -தொடரு ம் வேட்டை
மாவோயிஸ்டுகளுடன் நடந்த சண்டையில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரை அதிர வைத்த என்கவுண்டர்… வீரர்கள் பலி 22 ஆக உயர்வு
துப்பாக்கி சண்டை நடந்த பகுதி
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. அங்குள்ள காட்டுப்பகுதிகளில் பதுங்கி இருக்கும் மாவோயிஸ்டுகளை பிடிக்க சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு படையினர் தேடுதல்
வேட்டை நடத்தி வருகிறார்கள். சுக்மா, பிஜப்பூர், தண்டேவாடா உள்ளிட்ட மாவட்டங்களின் காட்டுப் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று சி.ஆர்.பி.எப்.பின் சோப்ரா கமாண்டோ படை, மாவட்ட ரிசர்வ் படை மற்றும் சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்ட படைப் பிரிவுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து காட்டுப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சுக்மா-பிஜப்பூர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
துப்பாக்கி சண்டை நடந்த பகுதி
மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் காயம் அடைந்த 30 பாதுகாப்பு படை வீரர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பல வீரர்களை காணவில்லை. அவர்கள் காட்டுக்குள் வழி தவறி சிக்கினார்களா? அல்லது ஆபத்தில் இருக்கிறார்களா? என்பது தெரியாமல் இருந்தது. அவர்களை மீட்கும் பணியை தீவிரப்படுத்தினர். அதேசமயம், தப்பி ஓடிய மாவோயிஸ்டுகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
அதேசமயம், பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 9 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டார்கள். இதில் ஒரு பெண் மாவோயிஸ்டும் அடங்கும்.
இந்த நிலையில் காணாமல் போன வீரர்களில் 17 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதன்மூலம், உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 22 வீரர்கள் உயிரிழந்ததை பிஜப்பூர் எஸ்பி கமலோச்சன் காஷ்யப் உறுதி செய்தார்.
மாவோயிஸ்டுகளுடன் நடந்த சண்டையில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதில் வீரர்களின் தியாகம், என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். காயமடைந்த வீரர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டுவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியதாவது:–
சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த நமது துணிச்சலான பாதுகாப்பு படை வீரர்கள் தியாகத்திற்கு நான் தலை வணங்குகிறேன்.
அவர்களின் வீரத்தை தேசம் ஒருபோதும் மறக்காது. அவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
அமைதி மற்றும் முன்னேற்றத்தில் எதிரிகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன், என்று கூறி உள்ளார்.
கமல்ஹாசன் குறித்து அவதூறு: கோவையில் நடிகர் ராதாரவி மீது வழக்கு
கமல்ஹாசன் குறித்து அவதூறு: கோவையில் நடிகர் ராதாரவி மீது வழக்கு
கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதாவை சேர்ந்த வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.
கமல்ஹாசன் குறித்து அவதூறு: கோவையில் நடிகர் ராதாரவி மீது வழக்கு
நடிகர் ராதாரவி
கோவை:
கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்பிரமணியனிடம் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஒரு புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதாவை சேர்ந்த வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.
கமல்ஹாசன்
இவருக்கு ஆதரவாக கடந்த 28-ந் தேதி நடிகர் ராதாரவி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசனின் தனிப்பட்ட நடத்தை குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதனை ஆராய்ந்து பார்த்த தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்பிரமணியன் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் நடிகர் ராதாரவி மீது தனிப்பட்ட நபரின் நடத்தை குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
போன் பேசி கொண்டே கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திய நர்ஸ்
போன் பேசி கொண்டே கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திய நர்ஸ்
உத்தர பிரதேசத்தில் போன் பேசிய மும்முரத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை நர்சு ஒருவர் செலுத்தியுள்ளார்.
போன் பேசி கொண்டே கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திய நர்ஸ்
கோப்புபடம்
உத்தர பிரதேசத்தின் கான்பூர் தெஹாத் மாவட்டத்தில் அக்பர்பூர் பகுதியில் அமைந்த அரசின் முதன்மை சுகாதார மையம் ஒன்றில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதற்காக 50 வயது நிறைந்த கமலேஷ் குமாரி என்ற பெண் சென்றுள்ளார்.
அவருக்கு முதலில் ஒரு டோசுக்கான தடுப்பூசியை போட்டு விட்டு சில வாரங்கள் கழித்து அடுத்த டோஸ் செலுத்தப்பட வேண்டும். எனினும், போன் பேசியபடி அலட்சியமுடன் செயல்பட்ட சுகாதார மைய நர்ஸ் கவன குறைவாக 2 தடுப்பூசிகளை போட்டு உள்ளார்.
இதுபற்றி அந்த பெண் நர்சிடம் கேட்டுள்ளார். அதற்கு மன்னிப்பு கோருவதற்கு பதிலாக அவரிடம் நர்ஸ் சண்டை போட்டுள்ளார். இதனையறிந்த பெண்ணின் உறவினர்கள் அமளியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. 2 முறை தடுப்பூசி போட்டதில் பெண்ணின் கையில் லேசான வீக்கம் ஏற்பட்டு உள்ளது. எனினும் வேறு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
இந்த விவகாரம் பற்றி முதன்மை சுகாதார மையத்தின் மூத்த டாக்டரிடம் விசாரணை மேற்கொள்ளும்படி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி உத்தரவிட்டு உள்ளார். அறிக்கை ஒன்றை அளிக்கும்படியும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
வேட்பாளர் புகார்- கமல் மீது வழக்குப்பதிவு
வேட்பாளர் புகார்- கமல் மீது வழக்குப்பதிவு
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது கோவை காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சுயேட்சை வேட்பாளர் புகார்- கமல் மீது வழக்குப்பதிவு
கமல்ஹாசன்
கோவை தெற்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பழனிகுமார் என்பவர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம்நகர், காட்டூர் பகுதிகளில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.
அந்த பிரசாரத்தில் ராமர் மற்றும் அம்மன் வேடமிட்ட 2 பேர் கலந்து கொண்டு கையில் கமல்ஹாசனின் கட்சி பேனர்களை வைத்திருந்தனர்.
கமல்ஹாசன்
அப்போது பேசிய கமல்ஹாசன் ராமர் வேடமிட்டவரை நோக்கி இந்த கடவுள், அந்த கடவுள் எல்லாம் நமது கடவுள் தான். இந்த கடவுளை வைத்து சிலர் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர் என சொல்லியிருக்கிறார்.
எனவே இந்து கடவுள்களை வைத்து பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
அதன் பேரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்பட 3 பேர் மீது மதத்திற்கு இடையே பிரிவினை ஏற்படுத்துதல், தேர்தலை பயன்படுத்தி மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்துதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்







