Posted in Uncategorized

துரத்தும் கொரனோ – ஐந்து கிராமங்கள் முடக்கம்

துரத்தும் கொரனோ – ஐந்து கிராமங்கள் முடக்கம்

நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில்

தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச்

சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

Posted in சினிமா

அதிக வாய்ப்புகள் வருகிறது -நடிகை ரகுல் பிரீத் சிங்

அதிக வாய்ப்புகள் வருகிறது -நடிகை ரகுல் பிரீத் சிங்

சினிமாவோடு ஓ.டி.டி. தளமும் படிப்படியாக முன்னேறினால்தான் சினிமா துறை சிறப்பாக இருக்கும் என நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

ஓ.டி.டி. தளங்களால் அதிக வாய்ப்புகள் வருகிறது -நடிகை ரகுல் பிரீத் சிங் சொல்கிறார்
ரகுல் பிரீத் சிங்


நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: “ஓ.டி.டி. தளத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதன்

மூலம் நடிகர் – நடிகைகள், இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. கொரோனா காலத்தில் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பது இயலாத காரியம்.

இதனால் ரசிகர்கள் பார்வை ஓ.டி.டி. பக்கம் திரும்பி இருக்கிறது. இதன் மூலம் படங்களை உலக அளவில் ரசிகர்கள் எல்லோரும் பார்க்கிறார்கள். நல்ல கதையம்சம் இருந்தால் அதை பாராட்டவும்

செய்கிறார்கள். பெரிய திரையில் படங்களை பார்த்து சந்தோஷப்படும் ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அதேபோல் இப்போது ஓ.டி.டி.யில் வரும் படங்களை விரும்பும் ரசிகர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

ரகுல் பிரீத் சிங்

பொழுது போக்கு தளங்கள் எத்தனை இருந்தாலும் தியேட்டரில் பெரிய திரையில் படம் பாக்கும் மேஜிக் மட்டும் அப்படியேதான் இருக்கும். ஆனால் சினிமாவோடு ஓ.டி.டி. தளமும் படிப்படியாக

முன்னேறினால்தான் சினிமா துறை சிறப்பாக இருக்கும். ஓ.டி.டி. தளங்களை நான் ஆதரிக்கிறேன்.’’ இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.

Posted in சினிமா

அதிக படங்களில் நடிக்காதது ஏன்

அதிக படங்களில் நடிக்காதது ஏன்

அருவி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அதிதி பாலன் நடிப்பில் அடுத்ததாக `நவரசா’ என்ற வெப் தொடர் வெளியாக இருக்கிறது.

அதிக படங்களில் நடிக்காதது ஏன்? அதிதி பாலன் விளக்கம்
அதிதி பாலன்


அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 2017 ஆண்டு வெளியான திரைப்படம் ‘அருவி’. இப்படத்தில் நடித்த அதிதி பாலன் தன் நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன்

பக்கம் ஈர்த்தார். இத்திரைப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் அதிதி பாலன் நடிக்கவில்லை. இடையில், ஒரு ஆந்தாலஜி படத்தில் மட்டும் நடித்தார்.

இந்நிலையில், பிருத்திவிராஜ் நடிப்பில் உருவான ‘கோல்டு கேஸ்’ மலையாள படத்தில் அதிதி நடித்திருக்கிறார். இந்தப் படம் இன்று வெளியாகி இருக்கிறது.

நான்கு வருடங்களாக தமிழ் சினிமாவில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், “அருவி படத்துக்குக்குப் பிறகு நான் எடுத்துக்கொண்ட இந்த இடைவெளி நிறைய

பேருக்கு மிக நீண்டதாகத் தோன்றலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, இது சினிமாவைப் புரிந்துகொள்வதற்காக நான் தேர்ந்தெடுத்த ஒரு வழி.

அதிதி பாலன்

கடந்த சில ஆண்டுகளாக இந்த இடைவெளியில் நன்றாகவே திரைத்துறையைப் புரிந்துகொண்டேன். சினிமாவில் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைக் கண்டுபிடிக்கவும்

, சினிமா தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இடைப்பட்ட இந்த நேரத்தை நான் பயன்படுத்திக்கொண்டேன்” என்றார்.

அதிதி பாலன் நடிப்பில் அடுத்ததாக `நவரசா’ என்ற வெப் தொடர் வெளியாக இருக்கிறது. இதனை 9 இயக்குநர்கள் இயக்க, கொரோனாவால் உருக்குலைந்த தமிழ் சினிமா தொழிலார்களுக்கு உதவும் வகையில் மணிரத்னம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized சினிமா

போதை விருந்தில் கலந்துகொண்ட கவர்ச்சி நடிகை கைது

போதை விருந்தில் கலந்துகொண்ட கவர்ச்சி நடிகை கைது

பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போதை விருந்தில் கலந்துகொண்ட கவர்ச்சி நடிகை கைது
ஹீனா பாஞ்சல்


மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி மலை அருகே உள்ள சொகுசு பங்களாவில் ரகசியமாக போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து அந்த பங்களாவில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி

பார்ட்டி நடத்தப்பட்டதும், போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது. அதில் கலந்து கொண்ட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நடிகை ஹீனா பாஞ்சலும் ஒருவர். பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர், தமிழில் யாகாவாராயினும் நாகாக்க, கன்னட படமான லொட்டு, தெலுங்கில்

மல்லிபு போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானார்.

நடிகை ஹீனா பாஞ்சல் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Posted in Uncategorized

ஒரே மரத்தில் காய்க்கும் 121 வகையான மாம்பழங்கள்

ஒரே மரத்தில் காய்க்கும் 121 வகையான மாம்பழங்கள்

முகலாயர் மன்னர்கள் ஆட்சியில் பாரசீகத்தில் இருந்து பல்வேறு வகையான மரங்கள் வட மாநிலங்களுக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டன.

உத்தரபிரதேசத்தில் அதிசயம்- ஒரே மரத்தில் காய்க்கும் 121 வகையான மாம்பழங்கள்
மாமரம்

உத்தரபிரதேசத்தின் சகரான்பூரில் உள்ள கம்பெனி தோட்டம் என்ற இடத்தில் அதிசய மாமரம் ஒன்று வளர்ந்துள்ளது. முகலாய மன்னர்கள் காலத்தில் நிறுவப்பட்ட இந்த தோட்டத்தில் வேளாண் கல்வி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த தோட்டத்தில் சுமார் 10 வருடங்களுக்கு முன் 121 வகையான மாமரக்கன்றுகள் ஒன்றாக இணைத்து நடப்பட்டிருந்தது. இந்த மரக்கன்றுகளை உத்தரபிரதேச வேளாண் பயிற்சி நிலைய இணை இயக்குனர் ராஜேஷ் பிரசாத் என்பவர் நட்டார். ஆய்வுக்காக நடப்பட்ட இந்த மரத்தை பராமரித்து காப்பதற்காக தனியாக ஒரு பணியாளரும் அமர்த்தப்பட்டிருந்தார். இந்த மரத்தில் தற்போது 121 வகையான மாம்பழங்கள் கிடைத்துள்ளன.

மாம்பழங்கள்

அதாவது ஒரே மரத்தில் தசேரி, லங்கடா, சவுசா, ராம்கீலா, அமர்பாலி, சஹரான்பூர் அருண், சகரான்பூர் வருண், எல்.ஆர்.ஸ்பெஷல், ஆலம்பூர் உள்ளிட்ட 121 வகை மாம்பழங்கள் உள்ளன. இந்த அதிசய மரத்தை பற்றி அறிந்து அதை காண சகரான்பூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

முகலாயர் மன்னர்கள் ஆட்சியில் பாரசீகத்தில் இருந்து பல்வேறு வகையான மரங்கள் வட மாநிலங்களுக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டன. இவற்றில் பலவகையான மாம்பழங்கள் உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் இன்றும் கிடைத்து வருகின்றன. இதில் குறிப்பிட்ட சில மாம்பழ வகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது நினைவுகூரத்தக்கது.

Posted in உலக செய்திகள்

ஊரடங்கு தளர்வு- உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஊரடங்கு தளர்வு- உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

நாளை அல்லது 4-ந்தேதியில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.

ஊரடங்கு தளர்வு- உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் 5-ந்தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதில், 3 வகையான மாவட்டங்களாக பிரித்து வெவ்வேறு வகையான தளர்வுகளை அறிவித்துள்ளார்.

முதல் வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களும், 2-ம் வகையில் அரியலூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட 23 மாவட்டங்களும், 3-ம் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் வருகின்றன.

கொரோனா வைரஸ்

இந்த நிலையில், 5-ந்தேதி ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில், அதை மேலும் நீட்டிப்பதற்கான ஆலோசனை கூட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

பொது போக்குவரத்து இயங்கி வரும் நிலையில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா? மேலும் தளர்வுகளை அறிவிக்கலாமா? என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது. அதைத் தொடர்ந்து நாளை அல்லது 4-ந்தேதியில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.

Posted in Uncategorized

யாழில் வன்முறை – கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை

யாழில் வன்முறை – கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன்

சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், பொலிஸ் காவலரண்களையும் அதிகரிக்குமாறு சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைய நாள்களாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

வீடுகளுக்குள் அத்துமீறும் வாள்வெட்டுக் கும்பங்கள் அங்குள்ளோரை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகேயிடம் வினவிய போது, வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்கப்படுகின்றன. வன்முறையில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள்.

அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன் சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸ் காவலரண்களை அதிகரிக்குமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்குப் பணித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

அத்துடன், சில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவை தொடர்பில் விசாரணைகளை இடம்பெறுகின்றன.

பொதுமகன் ஒருவர் தனது முறைப்பாட்டை ஏற்க பொலிஸ் நிலையத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் எனது வட்ஸ்அப் இலக்கத்துக்கு தகவல் அனுப்பியிருந்தார். அவரது முறைப்பாட்டை ஏற்க மறுத்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. அத்துடன், முறைப்பாட்டாளர்கள் பலரது முறைப்பாடுகள் தேங்கிக் கிடைக்கின்றன. அவை தொடர்பில் எனது கண்காணிப்பின் கீழ் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே பொதுமக்கள் வன்முறைச் சம்பவங்கள், பொலிஸ் அலுவலகர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் எனது 0718 592 200 என்ற வட்ஸ்அப் எண்ணுக்கு தகவல்களை வழங்கினால் உடனடி நடவடிக்கைக்கு அறிவுறுத்தல் வழங்குவேன் என்றும் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே தெரிவித்தார்.

Posted in Uncategorized உலக செய்திகள்

அதிகூடிய 50C வெப்பம் -250 பேர் மரணம்

அதிகூடிய 50C வெப்பம் -250 பேர் மரணம்

அமெரிக்கா மற்றும் கனடா ,பசுபிக் பகுதிகளில் தற்போது நிலவி வரும் அதிக கூடிய வெப்பம் காரணமாக 250 பேர் மரணமாகியுள்ளனர்

இந்த வெப்பமானது தற்போது 50C நிலையை எட்டியுள்ளது ,இதனால் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன ,நீர் நிலைகள் வற்றி ,காடுகள் பற்றி எரிகின்றன

காட்டு தீயினை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருகின்றன

உலக

Posted in இலங்கை செய்திகள்

விபச்சாரத்திற்கு இளம் பெண்ணை விற்ற 17 பேர் கைது

விபச்சாரத்திற்கு இளம் பெண்ணை விற்ற 17 பேர் கைது

15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளம் ஊடாக கல்கிசையில் பாலியல் செயற்பாடுகளுக்காக கொள்வனவு செய்த மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (30) தெரிவித்தார்.

குறித்த சிறுமியின் தாய், சிறுமியை முதன்முதலில் விற்பனை செய்தவருடன் தகாத முறையில் உறவுகளை பேணும் பெண், ஆட்டோ சாரதி, மோட்டார்சைக்கிள் ஓட்டுநர், சிறுமி தொடர்பான

தகவல்களை இணையத்தளத்தில் பதிவேற்றியவர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, பாலியல் செயற்பாடுகளுக்காக சிறுமியை பணம் கொடுத்து வாங்கிய மேலும் 20 பேரை கைது செய்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குறித்த சிறுமியை பாலியல் நடவடிக்கைளுக்காக இணையத்தளத்தினூடாக விற்பனை செய்த பிரதான சந்தேகநபர் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 35 வயதான குறித்த சந்தேகநபர், மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    Posted in உலக செய்திகள்

    இந்தியாவில் 798 மருத்துவர்கள் பலி

    இந்தியாவில் 798 மருத்துவர்கள் பலி

    கொவிட்-19 இன் இரண்டாவது அலையின் போது இந்தியாவில் 798 மருத்துவர்கள் இறந்தனர்; டெல்லியில் உயிரிழப்பு அதிகமாக இருந்தது என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

    டெல்லியில் அதிகபட்சம் 128 மருத்துவர்கள் உயிர் இழந்தனர். பீகாரில் 115 பேர், உத்தரப்பிரதேசத்தில் 79 பேர் கொவிடுக்கு பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

    .
    டெல்டா பிளஸ் மாறுபாட்டின் பரவலான இந்திய மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் கொவிட் -19 இன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மகாராஷ்டிராவில் 23 மருத்துவர்களும், கேரளாவில் 24 இறப்புகளும் பதிவாகியுள்ளன. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒரு மருத்துவர் மட்டுமே இறந்துள்ளார். இதுதான் மருத்துவர்களின் பலி எண்ணிக்கையில் மிகவும் குறைவு.

    கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மக்களுக்கு உதவி செய்த மருத்துவர்களை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பாராட்டிப் பேசினார். மருத்துவர்கள்

    மதிக்கப்படுவார்கள், பாதுகாக்கப்படுவார்கள் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளதாக, ஐ.எம்.ஏ தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் தெரிவித்தார். மேலும் தடுப்பூசி போடுவதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்

    Posted in இலங்கை செய்திகள்

    இன்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

    இன்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

    மேல் மாகாணத்தில் இன்று முதல் 45 அரச வைத்தியசாலைகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 அரசாங்க வைத்தியசாலைகளில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

    இதன் கீழ் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று சயனோஃபார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.

    Posted in Uncategorized

    மாட்டுக்கார மணியக்காவுக்கு – மணியடிக்கும் பதிவி – உருட்டு கட்டையோடு அம்மணி

    மாட்டுக்கார மணியக்காவுக்கு – மணியடிக்கும் பதிவி – உருட்டு கட்டையோடு அம்மணி

    தமிழ் தேசிய விடுதலை போராளிகள் தமிழீழ மண்ணில் வீழ்ந்த பின்னர் அதன் பின்னர் முளைத்தது


    நாடு கடத்தும் அரசு ,அதற்குள் எதிர்கட்சி இல்லாத வெட்டு குத்து தாராளமாக நடந்துவருகிறது ,அணி சார் அரசியல் கேவலம் இங்கே தொடர்கிறது

    தேசிய நலனில் அக்கறை கொண்டு அர்ப்பணிப்புடன் செயல் பட்டவர்கள் அதில் இருந்து விரட்ட பட்டு
    மோசடி மன்னர்கள் கோர தாண்டவம் தலைவிரித்தாடுகிறது

    இவ்வாறான நிலையில் மக்களுக்கு மாடு வாங்கி கொடுத்ததாக கூறி அந்த பணத்தை ஆட்டை போட்ட மாட்டுக்கார மணியக்காவுக்கு இப்பொழுது மணி அடிக்கும் பதவி வழங்க பட்டுள்ளதாம்

    இந்த பதவியை அடுத்து கரும்புலி சங்கூத ,மணியக்க மணியடிக்க ,உருட்டு கட்டையுடன் ஊர்வலம் வருகிறார் , மேலும் இதற்குள் உள்ள பலருக்கு உருட்டு கட்டை அடி விழ போவதாக உள்ளே தகவல்கள் தெரிவிக்கின்றன

    நாடு கடத்தும் அவையில் அங்கம் பெற விரும்பினால் ,லஞ்சம் ,ஊழல்,மோசடி செய்தவர்கள் தாராளமாக பதவி வகிக்கலாம் ,அது தான் அதனை வழி நடத்தும் பிதா மகனின் தத்துவ கொள்கையாக உள்ளது

    அப்புறம் என்ன நீங்களும் விண்ணப்பிக்கலாம் ,மணியக்கா நல்லா தண்ணி குடிப்பாராம் ,ஒரு பாட்டியில் அம்மணி கிளாஸுடன் நின்ற காட்சிகள் அந்த காலத்தில் பிரபலமானது

    போத்தல் ஒன்றை வேண்டி கொடுத்து மணி அடித்தால் ,நீங்களும் மன்னர் ஆகலாம் .
    கரும்புலி காட்டில் சிங்கங்கள் ,ஓடி விளையாடுகின்றன

    சட்டம்பி அந்த மாட்டுக்கார மோசடி கணக்கை ஒருக்கா விசாரிக்க வேணும் ,

    அப்புறம் என்ன இனி எல்லாத்தையும் அவிழ்க்கலாம்

    • தகவல் -மாட்டுக்கார மணி –
      • தகவல் -குஞ்சு –
      Posted in உலக செய்திகள்

      தாலிபான்களிடம் வீழ்ந்த ஐந்து நகரங்கள் மீட்பாம் – இராணுவம்

      தாலிபான்களிடம் வீழ்ந்த ஐந்து நகரங்கள் மீட்பாம் – இராணுவம்

      ஆப்கனிஸ்தானில் தலிபான்கள் அரச இராணுவத்திடம் சிக்கிய முக்கிய மாகாணங்களில் மூன்றை மீட்டனர்

      எனினும் இவர்கள் மீட்ட பகுதிகளில் உள்ள மூன்று நகரங்களை தாம் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது

        Posted in Uncategorized

        1.717 சிறை கைதிகளுக்கு கொரனோ

        1.717 சிறை கைதிகளுக்கு கொரனோ

        இலங்கை சிறைகளில் உள்ள சுமாரா 1,717 கைதிகளுக்கு கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக சிறைச்சாலை ஆணையர் தெரிவித்துள்ளார்

        இவர்களுக்கு மேற்கொள்ள பட்ட மருத்துவ சோதனையின் பொழுது மேற்படிவிடயம் தெரிய வந்துள்ளது

        மேலும் இருபதுக்கு மேற்பட்ட சிறை கைதிகள் இந்த நோயினால் மரணமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          இலங்கையர்கள் தமது நாட்டுக்குள் நுழைய துருக்கி தடை

          இலங்கையர்கள் தமது நாட்டுக்குள் நுழைய துருக்கி தடை

          தமது நாடடுக்குகள் இலங்கையர்கள் உள்ளிட்ட ஆறு நாட்டவர்கள் உள்நுழைய தற்காலிக தடையினை துருக்கிய அரசு விதித்துள்ளது

          இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்க பட்டுள்ளது

            Posted in Uncategorized

            ஆறு கிராமங்கள் ,முடக்கம் – இராணுவம் குவிப்பு

            ஆறு கிராமங்கள் ,முடக்கம் – இராணுவம் குவிப்பு

            இலங்கையில் பரவி வரும் இரண்டாம் அலை கொரனோ நோயின் தாக்குதல் காரணமாக நான்கு

            மாவட்டங்களை சேர்ந்தஆறு கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன

            இவ்விதம் அறிவிக்க பட்ட பகுதிகளில் இராணுவம் காவல்துத்துறையினர் குவிக்க பட்டு கண் காணிப்பு பலப்படுத்த பட்டுள்ளது

              Posted in Uncategorized

              சிறுவர்களை மிரட்டி கற்பழித்த பெண் கைது – தொடரும் விசாரணை

              சிறுவர்களை மிரட்டி கற்பழித்த பெண் கைது – தொடரும் விசாரணை

              கண்டி பஹிரவகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள மிட்டாய் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் சிறுவன் ஒருவனை கொடூரமாக தாக்கி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு

              உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் குறித்த நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

              கண்டி கெடவல விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான அரச தொழில் பயிற்சி நிறுவனத்தினால் குறித்த சிறுவன் அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

              குறித்த மிட்டாய் உற்பத்தி நிறுவனத்திற்கு இவ்வாறு மூன்று சிறுவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

              குறித்த சிறுவர்களை வீடுகளுக்கு செல்ல விடாமல் நாளாந்தம் கொடூரமாக தாக்கி பணியில் ஈடுபடுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

              மேலும், குறித்த பெண் ஊழியர் அவரது பாலியல் ஆசையை தீர்த்துக் கொள்வதற்காக குறித்த சிறுவர்களை பலவந்தப்படுத்தியுள்ள நிலையில், அதற்கு இணங்காத சிறுவர்களை கொடூரமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

              தாக்குதலுக்கு உள்ளான மேலும் இரண்டு சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

              தப்பிச் சென்ற சிறுவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய நிறுவனத்தில் இருந்த மற்றைய சிறுவனின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் கண்டி பொலிஸார் குறித்த இடத்தை சோதனையிட்டுள்ளனர்.

              இதன்போது, மீட்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

              கைது செய்யப்பட்ட 41 வயதுடைய பெண்ணுக்கு மேலதிகமாக குறித்த மிட்டாய் நிறுவனத்தின்

              உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் சிறுவர்களுக்கு ஆபாச படங்களை காண்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

              இன்று காலை மிட்டாய் நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸில் சரணடைந்துள்ள நிலையில்

              அவருக்கு எதிராக பெண் துஸ்பிரயோக வழக்கு ஒன்று தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                Posted in இலங்கை செய்திகள்

                தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 433 பேர் கைது

                தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 433 பேர் கைது

                இலங்கையில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்றச் சாட்டில் 433 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                இவ்விதம் கைதானவர்கள் முக கவசம் அணிய மறுத்தமை, மற்றும் மாகாண எல்லைகளை

                தாண்டிய குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

                  Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                  மனைவியை துடி துடிக்க நான்கு முறை சுட்டு கொன்ற கணவன்


                  மனைவியை துடி துடிக்க நான்கு முறை சுட்டு கொன்ற கணவன்

                  அமெரிக்கா டெஸ்சஸ் பகுதியில் தனது முன்னால் மனைவியை அவரது கணவர் மூன்று முறை துப்பாக்கியால் துடி துடிக்க சுட்டு கொன்றுள்ளார்


                  மேற்படி சம்பவம் தற்போது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளது

                  கணவனின் இந்த திட்டமிட்ட பட படுகொலைக்கு அவருக்கு மரண தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

                    Posted in Uncategorized

                    வேக சாலையில் கார் மேலே வீழ்ந்த மின்னல்

                    வேக சாலையில் கார் மேலே வீழ்ந்த மின்னல்

                    Waverly, Kansas. அதிக வேக சாலை ஒன்றில் பயணித்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மின்னல் திடீரென தாக்கியது ,இதன் பொழுது அந்த கார் பலத்த சேதமடைந்துள்ளது

                    குறித்த கார் மீது மின்னல் தாக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது ,மேற்படி சம்பவ நிகழ்வு பார்ப்பவர்களை மிரள வைக்கிறது