அமெரிக்காவில் 200 பிரபல நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்
உலக
அமெரிக்காவில் 200 பிரபல நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்
அமெரிக்காவின் முக முக்கிய இருநூறு நிறுவனங்கள் மீது சபைர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இணைய கைக்கர்கள் அவர்களின் கணணிக்குள் புகுந்து இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர்
இதனால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
IT and security management services to small- and medium-sized businesses
யப்பானில் மண்சரிவு – 19 பேர் மாயம் – இடிந்த வீடுகள்
யப்பானில் மண்சரிவு – 19 பேர் மாயம் – இடிந்த வீடுகள்
யப்பானில் மண்சரிவு – 19 பேர் மாயம் – இடிந்த வீடுகள்
ஜப்பான் தலைநகர் மேற்கு டக்கியோ பகுதியில் ஏற்பட்ட திடீர் நில நடுக்கம் காரணமாக வீடுகள் இடிந்து வீழ்ந்தன
இதன் பொழுது பத்தொன்பது பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர் , .இவாறு காணாமல்
போனவர்களை தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது
குளியல் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்
குளியல் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்
குளிக்கும் முன்னர் நல்லெண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து சூடுநீரில் குளிப்பதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக பராமரிக்கப்பட்டு நாடி நரம்புகள் வலுவடைந்து ஆரோக்கியம் மேம்படும் என்பது அனுபவ ரீதியான உண்மையாகும்.
நல்லெண்ணெய் குளியல் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்
நலம் காக்கும் நல்லெண்ணெய் குளியல்
இன்றைய நாகரிக உலகில் நாம் மறந்து விட்ட பாரம்பரிய பழக்கங்களில் ஒன்று நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதாகும்.
உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக்கூடிய தன்மை கொண்டதால் அதை நல்ல எண்ணெய் என்றே முன்னோர்கள் குறிப்பிட்டார்கள்.
தீபாவளி பண்டிகையன்று அதிகாலையில் உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது. குளிக்கும் முன்னர்
நல்லெண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து சூடுநீரில் குளிப்பது தான் முறையான பழக்கம்.
குளியல் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்
அதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக பராமரிக்கப்பட்டு நாடி நரம்புகள் வலுவடைந்து ஆரோக்கியம் மேம்படும் என்பது அனுபவ ரீதியான உண்மையாகும்.
எண்ணெய் தேய்க்கும் முறை
சுத்தமான நல்லெண்ணெய்யை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்றாக மசாஜ் செய்வது போல் தேய்க்க வேண்டும்.
முக்கியமாக தொப்புள், கை, கால் விரல் நகக்கண்களில் நன்றாக
படியும் படி அழுத்தி தடவ வேண்டும். அதன் பின்னர் அரை மணிநேரம் ஊற விட்டு அரைத்த வெந்தயத்துடன் சிகைக்காய் கலந்து தேய்த்து சுடுநீரில் குளிக்க வேண்டும்.
கண்களில் எண்ணெய் விடுதல்
உடலுக்கு எண்ணெய் தேய்த்த பிறகு கண்களிலும் இரு துளிகள் நல்லெண்ணெய்யை விட்டு மேலிருந்து கீழாகவும். இடமிருந்து வலமாகவும் (பிளஸ் வடிவில்) தலா ஐந்து முறை கண்களை
சுழற்ற வேண்டும். இதே போல் எக்ஸ் வடிவிலும் சுழற்றிய பின்னர் வட்ட வடிவத்தில் 5 முறை கடிகார சுற்றாகவும் அதற்கு எதிர்ப்புறமாகவும் சுழற்ற வேண்டும்.
10 மில்லி நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். அதை உடனடியாக துப்பி விடாமல் கைகளால் பற்களை துலக்கிய பின்னர் மீண்டும் சில
குளியல் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்
நிமிடங்கள் வாய் கொப்பளிக்க வேண்டும். சிறிது நேரத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு குறைந்து தண்ணீர் போல மாறியவுடன் அதை கீழே துப்பி விட வேண்டும். இதன் மூலம் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
அருந்தும் முறை
இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்யை சிறிது சிறிதாக வாய்க்குள் உறிஞ்சி உமிழ் நீருடன் நன்றாக கலந்து விழுங்க வேண்டும். அதன் மூலம் மலம் எளிதாக வெளியேறி குடல் சுத்தமாகும்.
உடலையும் கண்களையும் குளிர்ச்சியடைய செய்து பார்வை திறனை கூர்மையாக்குகிறது. இதில் உள்ள சத்துக்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், சீரான செரிமானத்துக்கும், நீரிழிவுநோயை
கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சருமத்தை மிருதுவாக மாற்றுகிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
இமான் பெயர் இல்லாத அண்ணாத்த போஸ்டர்
இமான் பெயர் இல்லாத அண்ணாத்த போஸ்டர்
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் போஸ்டரில் இமான் பெயர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இமான் பெயர் இல்லாத அண்ணாத்த போஸ்டர்…. பாராட்டும் ரசிகர்கள்
இமான்
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படம் இந்த வருட தீபாவளி தினமான நவம்பர் 4ம் தேதியன்று வெளியாகும் என்று படக்குழுவினர் நேற்று அறிவிப்பை வெளியிட்டார்கள்.
இந்த போஸ்டரில் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்க இசையமைப்பாளர் இமான் பெயர் மட்டும் இடம் பெறவில்லை. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இமான்
ரசிகர்களும் இமானுக்கு டேக் செய்து, உங்கள் பெயர் போஸ்டரில் இல்லை, எனினும் போஸ்டரை பகிர்ந்திருப்பது உங்களின் பெருந்தன்மை என பலரும் பாராட்டி உள்ளனர்.
என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய பாட்டி காலமானார்
என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய பாட்டி காலமானார்
என்ஜாய் எஞ்சாமி பாடலில் இடம்பெற்ற ஒப்பாரி பாடும் பாட்டி பாக்கியம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய பாட்டி காலமானார்
பாடகி பாக்கியம்மா
அறிவு மற்றும் பாடகி தீ கூட்டணியில் வெளியான என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் பலருடைய கவனத்தை ஈர்த்து வைரலானது. இந்த பாடலில் ‘என்னக் குறை என்னக் குறை என் செல்லப்
பேராண்டிக்கு என்னக் குறை’ என்ற வரிகளை பாடகி பாக்கியம்மா பாடி இருந்தார். இந்நிலையில் இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
பாக்கியம்மா
இவரது மறைவிற்கு பாடகர் அறிவு, பல இறந்த உயிர்களுக்காக ஒப்பாரி பாடிய நீங்க இவ்வளவு சீக்கிரமா போவீங்கன்னு எதிர்பார்க்கல பாட்டி. பாக்கியம்மா ஒரு அற்புதமான பாடகி. ஒப்பாரி
பாடல்களை பாடுவதில் தனிச் சிறப்பு கொண்டவர். அவரது இந்த எதிர்பாராத மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
யூரோ கோப்பை – ஸ்பெயின், இத்தாலி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின
யூரோ கோப்பை – ஸ்பெயின், இத்தாலி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின
சுவிட்சர்லாந்துடனான ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் 3 – 1 என்ற கணக்கில் ஸ்பெயின் அணி அபார வெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்தது.
யூரோ கோப்பை – ஸ்பெயின், இத்தாலி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின
கோல் அடித்த மகிழ்ச்சியில் இத்தாலி வீரர் இன்சைன்
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்ட்கில் நேற்று நடந்த முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு 8-வது நிமிடத்தில் கோல் வந்தது. கார்னரில் இருந்து வந்த பந்தை ஸ்பெயின் அணி வீரர் ஜார்டி ஆல்பா கோல் வலையை நோக்கி
அடித்தார். அந்த பந்து சுவிட்சர்லாந்து நடுகள வீரர் டெனிஸ் ஜகாரியா காலில் பட்டு கோல் வலைக்குள் புகுந்து சுய கோலானது.
68-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி கேப்டன் ஹெர்டான் ஷாகிரி இந்த கோலை அடித்தார். இதனால் சமநிலை (1-1) ஏற்பட்டது. 77-வது நிமிடத்தில் எதிரணி
வீரரின் காலில் பலமாக மிதித்த சுவிட்சர்லாந்து வீரர் ரெமோ புருலெர் நடுவரால் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டதால் அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டியதானது.
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஸ்பெயின் வீரர்கள்
வழக்கமான 90 நிமிடம் முடிவில் சமநிலை நீடித்ததால் கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அதிலும் முடிவு கிடைக்கவில்லை. இதனை அடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ‘ஷூட்-அவுட்’ முறை கடைபிடிக்கப்பட்டது.
பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெயின் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இன்று அதிகாலை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி, பெல்ஜியம் அணிகள் மோதின.
முதல் பாதியில் இத்தாலி அணி 2 கோல்களை அடித்தது. பெல்ஜியம் சார்பில் 47-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்கப்பட்டது. அதன் பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இறுதியில், இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இலங்கையில் 7 காவல்துறை அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
இலங்கையில் 7 காவல்துறை அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
இலங்கையில் அதி உயர் காவல்துறை அதிகாரிகள் ஏழுபேருக்கு திடீர் இடமாற்றம் இடம்பெற்றுள்ளது
உடனடி அமுலுக்கு வரும் நிலையில் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க, இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இயக்குனர் சங்கர்
சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் திரைப்படம் இந்தியன் 2. லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
இதனிடையே, இயக்குனர் சங்கர், தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் ஒரு படத்தையும், ‘அந்நியன்’ படத்தின் இந்தி ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தம் ஆனார்.
இதனால் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க, இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் வழக்குத்
தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் சங்கர்
ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி எடுக்கும் முடிவை அறிக்கையாக தாக்கல் செய்த பிறகு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறி நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. இந்நிலையில் ‘இந்தியன் 2’
பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் சங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஒருவர் சுட்டுக்கொலை – விசாரணைகள் ஆரம்பம்
ஒருவர் சுட்டுக்கொலை – விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை காலி பகுதியில் கடந்த தினம் இரவு ஒருவர் சுட்டுக்கொலை செய்ய பட்டுள்ளார் ,இறந்தவரது சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இந்த படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
விசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இம்மாதம் முதல் மீண்டும் கல்வி நடவடிக்கை
இம்மாதம் முதல் மீண்டும் கல்வி நடவடிக்கை
100 மாணவர்களுக்கும் குறைந்த 2962 பாடசாலைகளில் இம் மாதத்திற்குள் (ஜூலை) கல்வி நடவடிக்கைகளை முழுமையான
சுகாதார சிபார்சுகளுக்கு அமைவாக ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
மாணவர்கள் எண்ணிக்கை 50 ஐ விடக் குறைந்த சுமார் ஆயிரத்து 439 பாடசாலைககள் மற்றும் 51-100 வரையான எண்ணிக்கையைக்
கொண்ட ஆயிரத்து 523 பாடசாலைகளுமாக மொத்தமாக 2 ஆயிரத்து 962 பாடசாலைகள் இவ்வாறு இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பாடசாலைகளை ஆரம்பித்த பின் வருகை தரும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமானது என்பதை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் கூறினார்.
முதற்கட்டமாக இந்த பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஏனைய பாடசாலைகளை உரிய திட்டத்திற்கு அமைய திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்
கடல்சார் பொருளாதார அபிவிருத்திக்கு – – இந்தியா உதவவேண்டும் டக்கிளஸ்
கடல்சார் பொருளாதார அபிவிருத்திக்கு – – இந்தியா உதவவேண்டும் டக்கிளஸ்
கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்று தெரவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் போது தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கிய இந்தியாவிற்கு நன்றியினையும் தெரிவித்தார்.
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் போது அவசர உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கிய இந்திய கடலோர காவற்படை மற்றும் இந்தியக் கடற்படையினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கொழும்பு துறைமுக்தில் நேற்று (02.07.2021) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர், ‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் எக்ஸ பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எமது அவசர கோரிக்கையை ஏற்று, தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கிய இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவற்படை ஆகியவற்றுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவும் இலங்கை மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இலங்கைக்கு உதவிகளும் ஒத்துழைப்புகளும் தேவைப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் உடனடியாக உதவுகின்ற இந்தியா கப்பல் விபத்தின் போதும், விரைந்து வந்து தமது உதவிகளை வழங்கியிருந்தன.
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவற்கு மாத்திரமன்றி, ஏற்பட்ட பாதிப்புக்ளை மதிப்பிடுவதிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு எமக்கு பேருதவியாக அமைந்திருந்தது.
எதிர்காலத்திலும், கடலுக்கு அடியில் இருக்கின்ற கொள்கலன்களை கண்டறிந்து அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கான தொழில் நுட்ப உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றோம்’ என்று தெரிவித்தார்.
மேலும், கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை இந்திய அரசாங்கத்திடம் தான் கோரியிருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரண்டு நாடுகளும் அவசர தேவைகளில் மாத்திரமன்றி கடல்சார் பொருளாதார அபிவிருத்தியிலும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பறக்கும் படை வேட்டை – 563 பேர் கைது
பறக்கும் படை வேட்டை – 563 பேர் கைது
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து தற்பொழுது
விதிக்க பட்டுள்ள விதிகளை மீறி செயல் பட்டனர் என்ற குற்ற சாட்டில் 563 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைதானவர்கள் அனைவரும் முக கவசம் அணியாது உலவியமை மற்றும் மாகாண எல்லைகளை கடந்த குற்ற சாட்டு சுமத்த பட்டுள்ளது
வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பிசிஆர் அறிக்கை கொண்டு வர வேண்டியது அவசியம்-இராணுவ தளபதி
வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பிசிஆர் அறிக்கை கொண்டு வர வேண்டியது அவசியம்-இராணுவ தளபதி
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார
சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன ஆகியோரின் தலைமையில் புதன்கிழமை (30) கொவிட் – 19 தடுப்புச் செயற்பாடுகள் தொடர்பிலான மீளாய்வு கூட்டமொன்று இடம்பெற்றது.
மாகாணங்களுக்கிடையில் தொடர்ச்சியாக பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், பிரதேசங்களை தனிமைப்படுத்துதல், வெவ்வேறு தரப்பினரின் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான கோரிக்கைகள், தொடர்ந்து தடுப்பூசி ஏற்றும் திட்டங்கள், வெளிநாட்டிலிருப்பவர்களின் வருகை மற்றும்
தனிமைப்படுத்தல் நடைமுறைகள், பிசிஆர் சோதனைகள் மற்றும் ஆன்டிஜென் சோதனைகள் நடத்துதல், அரசாங்க தனிமைப்படுத்தல் நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பில் பெரிதும் ஆராயப்பட்டன.
முறையான பீசிஆர் பரிசோதனைகளை செய்துக்கொண்டு வருவோருக்கு மாத்திரமே இலங்கைக்குள் இடமளிக்க முடியும் என்றும் இலங்கைக்கு அழைத்து வரப்படுவோர் சிலர் அண்டிஜன் பரிசோதனைகளை மாத்திரமே செய்துக்கொண்டுள்ளனர் எனவும், இனிவரும்
நாட்களில் அவர்கள் முறையான பிசிஆர் அறிக்கையுடனேயே நாடு திரும்ப வேண்டும் எனவும் அரசாங்கத்தினால் அங்கீகிக்கப்பட்ட பகுதிகளில் மாத்திரமே பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் தனிமைப்படுத்தல் நிலையங்கள் நிரம்ப
ஆரம்பித்துள்ளமையால் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றும் திட்டம் சுமூகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதே நேரத்தில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் 2021 ஜூன் வரையிலான நிலைமை மற்றும் இலங்கையின் மூலோபாயம் என்பன தொடர்பில் விளக்கமளித்துடன் “வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்போம்” என்றும் எடுத்துரைத்தனர்.
அதனையடுத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அண்மையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், புதிய வைரஸ் வகைகள், இரத்தினபுரி மற்றும் நுவரெலியா பகுதிகளிலிருந்து உருவான கொத்தணிகள், புதிய தரவுகள், புள்ளி விபரங்கள் மற்றும் தரவுகளை சமர்பித்து 6
நாட்களில் 2000 க்கும் குறைவான நோயாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் வைத்தியசாலைகள் , இடைநிலை பராமரிப்பு நிலையங்கள், இறப்பு போன்ற விடயங்கள்
தொடர்பிலும் விளக்கமளித்தார். அத்தோடு டெல்டா மாறுபாடு வைரஸ் பரவி வருகின்றமை தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பறக்கும் கார் சோதனை வெற்றி – பயணிக்க அனுமதி
பறக்கும் கார் சோதனை வெற்றி – பயணிக்க அனுமதி
பறக்கும் கார் சோதனை வெற்றியாக முடிவடைந்துள்ளது ,35 நிமிடங்கள் நடத்த பட்ட பறக்கும்
சோதனையில் அதன் செயல்பாடு வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது ,இதனை அடுத்து தற்போது பறக்கும் கார்கள் வானில் செலுத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது
உள் நாட்டுக்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த கார் ஓட்டம் மகிழ்ச்சியை அளித்துள்ளது
இந்தியாவில் கொரானாவுக்கு 400,000 பேர் மரணம்
இந்தியாவில் கொரானாவுக்கு 400,000 பேர் மரணம்
இந்தியாவில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை
நான்கு லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர்
மேலும் தொடர்ந்து பரவி வரும் இந்த நோயினால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்
,நோயினை கட்டுப்படுத்த பலவேறு பட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்ட பொழுதும் மரணத்தை தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிட தக்கது
லண்டனில் கத்தி வெட்டு – பொலிசார் குவிப்பு
லண்டனில் கத்தி வெட்டு – பொலிசார் குவிப்பு
லண்டன் Regent’s Street பகுதியில் நபர் மீது கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் ,இதில்
ஒருவர பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
மேற்படி விடயம் தொடர்பாக போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை
இராணுவம் மக்கள் மோதல் – விசாரணை ஆரம்பம்
இராணுவம் மக்கள் மோதல் – விசாரணை ஆரம்பம்
இராணுவ சேவையிலிருக்கும் சிரேஸ்ட அதிகாரி ஒருவருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிலருக்கும் இடையில் கடந்த ஜூன் 25 ஆம் திகதி ஹபரனை பகுதியில் ஏற்பட்ட
முறுகல் நிலைமை வலுவடைந்ததன் காரணமாக அது தொடர்பிலான உண்மையான விடயங்களை அறிவதற்கான விசாரணைகளை நடத்துவதற்காக, உரிய பொலிஸ் நிலையத்தில்
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு முறைபாடொன்று செய்யப்பட்டுள்ளமையாலும் அது தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிகைகளை
முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல்
ஷவேந்திர சில்வா அவர்களினால் சிரேஸ்ட மேஜர் ஜெனரல்கள் இருவர் அடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விசாரணைகளுக்கு அவசியமான தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் விசாரணை
குழுவினால் திரட்டப்பட்டு வருகின்றது. இது தொடர்பான அறிக்கை விரைவில் இராணுவ தளபதியிடம் கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பா ஒன்றியத்திடம் மண்டியிட்ட இலங்கை
ஐரோப்பா ஒன்றியத்திடம் மண்டியிட்ட இலங்கை
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வழக்கமான ஈடுபாடு மற்றும் உரையாடலின் ஒரு பகுதியாக, நல்லிணக்கத்தின் குறிப்பிட்ட துறைகளிலான முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, தற்போதுள்ள சட்டங்கள், கடந்தகால நடைமுறைகள் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்தல் உட்பட 1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து, ஜூன் 25ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் முன்னுரிமையை மீளாய்வு செய்வதற்காகவும், ஒரு அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்காகவும், அமைச்சரவை துணைக்குழுவுக்கு உதவும் முகமாக அமைச்சரவை துணைக்குழு மற்றும் அதிகாரிகள் குழுவை
நியமிப்பதற்காகவும் ஜூன் 21ஆந் திகதி அமைச்சரவை எடுத்த தீர்மானம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்காக, நீதித்துறை, பாதுகாப்பு, வெளிநாட்டு
உறவுகள், பொது பாதுகாப்பு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய புலனாய்வு தலைமை அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதிநிதிளுடன் ஜூன் 24ஆந் திகதி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற மற்றும் தண்டனை அனுபவித்த பதினாறு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர்களுக்கு, அரசியலமைப்பின் 34வது பிரிவின் படி ஜூன்
24ஆந் திகதி ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மேலும் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், நீண்ட காலமாக நீதித்துறைக்
காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய நல்லிணக்க வழிமுறைகளில் முன்னேற்றம் குறித்து தெரிவிக்கையில், 1,230 இழப்பீட்டு உரிமைக்கோரல்களைத் தீர்ப்பதற்காக, ஜூன் மாதத்தில் ரூபா. 79 மில்லியன் தொகையை இழப்பீட்டு அலுவலகத்திற்கு விடுவித்தமையை அரசாங்கம் ஐரோப்பிய
ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது. 3,389 மொத்த இழப்பீட்டு உரிமைக்கோரல்களில், 1,451 இழப்பீட்டு உரிமைக்கோரல்களைத் தீர்ப்பதற்காக மேலதிகமாக ரூபா. 80 மில்லியன் தொகை ஜூன் 29ஆந் திகதி ஒதுக்கப்பட்டது.
வழக்கமான, நல்ல மற்றும் பன்முகத்தன்மையானதொரு உரையாடலை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை அரசாங்கம் பேணி வருகின்றது. 27 சர்வதேச சாசனங்களுடன் நாட்டின்
ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. + வரிச்சலுகையை மீளாய்வு செய்வதில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கும் இடையில் உள்ள ஆக்கபூர்வமான ஒத்துழைப்பும் இதில் உள்ளடங்கும்.
இது சம்பந்தமாக, 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான ஜி.எஸ்.பி. + கண்காணிப்பு செயற்பாட்டில் இலங்கையின் மூன்றாவது சுழற்சி மீளாய்வு நடைபெற்று வருகின்றது. இந்த செயன்முறையின் ஒரு பகுதியாக, இராஜதந்திர இணைப்புக்களின் மூலமாக, ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவைக்
கடைப்பிடித்து, தற்போதைய ஜி.எஸ்.பி. + கண்காணிப்பு சுழற்சியில் பின்தொடர்தல் கேள்விகளுக்கான இலங்கை அரசாங்கத்தின் விரிவான பதிலை வெளிநாட்டு அமைச்சு ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளது. 26 வரிசை அமைச்சுக்கள் / இராஜாங்க
அமைச்சுக்கள் / முகவர் நிலையங்கள் மற்றும் ஆணைக்குழுக்களுடன் கலந்தாலோசித்து வெளிநாட்டு அமைச்சு பதிலளித்தது. மூன்றாம் சுழற்சிக்கான ஜி.எஸ்.பி. + கண்காணிப்புக்
குழுவினர் 2021 செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில் பரஸ்பரம் வசதியான திகதிகளில் இலங்கைக்கு வருகை தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வழக்கமான ஈடுபாட்டின் பிரகாரம், இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட திகதிகளில் ஆட்சி,
ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்ட விதி தொடர்பான செயற்குழுவைக் கூட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மீளாய்வு
செய்வதற்காக 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 24வது அமர்வை ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்தாலோசித்து கூட்டுவதற்கு வெளிநாட்டு அமைச்சு எதிர்பார்க்கின்றது.
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளில் நாட்டின் கணிசமான முன்னேற்றத்தை நிரூபிக்கும் அதே வேளையில், இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதன் நெருக்கமான மற்றும் நல்லுறவு உரையாடலைத் தொடரும்.
இலங்கையின் இணைந்த ஆடை சங்க மன்றம், இலங்கையின் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகளை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே
ஆகியோர் சந்தித்து, நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் ஜி.எஸ்.பி. + வரிச்சலுகையை தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேணுவதை உறுதி செய்வதிலான அரசாங்கத்தின்
உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தினர். ஐரோப்பிய ஒன்றியத்துடனான அரசாங்கத்தின் ஈடுபாட்டைப் புதுப்பிக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட வணிக சபைகளுடனான சந்திப்புக்களும் திட்டமிடப்பட்டுள்ளன.
வெளிநாட்டு அமைச்சு
யாழில் தெரு ரவுடிகள் வீடு புகுந்து அட்டகாசம்
யாழில் தெரு ரவுடிகள் வீடு புகுந்து அட்டகாசம்
மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் ஒருவரைத் தாக்கியுள்ள நிலையில் வீட்டிலிருந்த
பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்தி விட்டு கும்பல் தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் நேற்று (01) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
4 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.
வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவில் காவல்துறை அதிகாரி தற்கொலை
முல்லைத்தீவில் காவல்துறை அதிகாரி தற்கொலை
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (01) பதிவாகியுள்ளது.
கண்டி மாவட்டத்தை சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன்,
குடும்ப பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.







