Tag: யானை
யானையுடன் கொழும்பில் போராட்டம்
யானையுடன் கொழும்பில் போராட்டம்
யானை மனித மோதலைத் தீர்ப்பதற்கான தேசிய செயற்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரி பல சிவில் அமைப்புக்கள் மற்றும்
சுற்றாடல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை புதன்கிழமை (18) காலை நடத்தியது.
இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஏறக்குறைய 300 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் யானைகளுக்கும் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு எனவும் யானைகள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்
எனவும் இல்லையெனில் யானைகள் எதிர்காலத்தில் புகைப்படங்களில் மட்டுமே காணப்படுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட குழு சுட்டிக்காட்டியுள்ளது.
யானையுடன் கொழும்பில் போராட்டம்
யானைகள் – மனித மோதலினால் ஹக்க பட்டாசுகளினால் 651 மரணங்கள் பதிவாகி உள்ளதாக அக்குழு சுட்டிக்காட்டியது.மேலும், யானைக் காணிகளை
பாதுகாக்குமாறும், யானை வழித்தடங்களைத் தடுக்க வேண்டாம் என்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளை பிரதிநிதிகள் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சிறிய யானையொன்றையும் நிர்மாணித்து,
போட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி
- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்
- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை
வீடுகளை உடைத்தெறிந்த காட்டுயானைகள்
வீடுகளை உடைத்தெறிந்த காட்டுயானைகள்
திருகோணமலை பாலம்போட்டாறு கிராமத்தின் பத்தினிபுரம் பகுதியில் காட்டு யானைகளினால் பயிர்கள் மற்றும் வீடுகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்படுவதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வியாழக்கிழமை(12) திகிதி காட்டு யானைகளினால் பலன் தரும் தென்னை,வாழை,கத்தரி,வெண்டி உள்ளிட்டவற்றை துவம்சம் செய்து விட்டு சென்றுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியை அண்மித்த இடத்தில் பாதுகாப்பான யானை வேலி இன்மை காரணமாக ஊருக்குள் யானைகள் வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி
- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்
- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை
காட்டு யானையின் தாக்குதல் பெண் பலி
காட்டு யானையின் தாக்குதல் பெண் பலி
காட்டு யானையின் தாக்குதல் காரணமாக குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில் நேற்றிரவு (03) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது குடும்பத்துடன் கல்முனையில் இருந்து நிந்தவூர் வழியாக இறக்காமம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் இரவு வேளை பயணம் செய்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காட்டு யானையின் தாக்குதல் பெண் பலி
இவ்வாறு உயிரிழந்தவர் இறக்காமம் பகுதி 9 ஆம் பிரிவைச் சேர்ந்த 43 வயதுடைய புஹாரி சரீப் சிபானி என்ற 3 பிள்ளைகளின் தாயாவார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி
- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்
- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை
யானையில் வந்த பிள்ளையார்
யானையில் வந்த பிள்ளையார்
புதுக்குடியிருப்பு உலகளந்த பிள்ளையார் ஆலய வேட்டை திருவிழாவில் விநாயகர் யானையில் ஊர் சுற்றி வந்துள்ளார்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள உலகளந்த பிள்ளையார் ஆலய திருவிழாவின் சிறப்பு வாய்ந்த 7 ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா நேற்று (26) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
யானையில் வந்த பிள்ளையார்
பாரம்பரியமாக வேட்டை திருவிழா இடம்பெறும் துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் புடைசூழ ஆரம்பித்த வேட்டை திருவிழாவானது வேட்டையாடப்பட்டு யானையில் பிள்ளையார் துர்க்கா வீதி வழியாக வலம் வந்து உலகளந்த பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்தது.
இந்த வேட்டை திருவிழாவில் வேடுவர் வேடம் தரித்து அடியவர்கள் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.
எந்தவொரு ஆலயங்களிலும் இடம்பெறாத வகையில் இங்கே வேட்டைத்திருவிழா யானையில் சுவாமி வலம்வந்து சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்by நிருபர் காவலன்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்by நிருபர் காவலன்
- நாய்களை எரிக்க சுடலைby நிருபர் காவலன்
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைதுby நிருபர் காவலன்
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவுby நிருபர் காவலன்
யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி
யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி
பனாமுர பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பனாமுர காவன்திஸ்ஸ ரஜமஹா விகாரையில் இன்று நடைபெறவிருந்த பெரஹரவிற்காக அழைத்து வரப்பட்ட யானையொன்று கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற போதே இந்த பாடசாலை மாணவன் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த பாடசாலை மாணவர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி
எம்பிலிபிட்டிய கல்ஹமுன பிரதேசத்தில் வசிக்கும் 12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யானைக்கு பொறுப்பான யானை பாகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பனாமுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்by நிருபர் காவலன்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்by நிருபர் காவலன்
- நாய்களை எரிக்க சுடலைby நிருபர் காவலன்
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைதுby நிருபர் காவலன்
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவுby நிருபர் காவலன்
ரஷ்ய குடும்பத்தை விரட்டியடித்த காட்டுயானை| இலங்கை செய்திகள்
ரஷ்ய குடும்பத்தை விரட்டியடித்த காட்டுயானை| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வாகனம் ஒன்று காட்டுயானையால் தாக்கப்பட்ட சம்பவம் பொலன்னறுவை மின்னேரியா தேசிய பூங்காவில் பதிவாகியுள்ளது.
8 வயது பிள்ளை மற்றும் 10 மாத குழந்தையை உள்ளடக்கிய ஒரு ரஷ்ய குடும்பம் காட்டு யானையின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்ற
போது அவர்களை யானை துரத்தியுள்ளது, அவர்கள் ஓடத் தொடங்கி வாகனத்தில் ஏறிய போதும் யானை வாகனத்தைத் தாக்கி சேதப்படுத்தியது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனத்துடன் பொலன்னறுவைக்கு சுற்றுலா சென்ற குடும்பம்,
திரும்பி வரும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
காவலுக்குச் சென்றவருக்கு எமனாக வந்த யானை| இலங்கை செய்திகள்
காவலுக்குச் சென்றவருக்கு எமனாக வந்த யானை| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |அறுவடை நெல்லை பாதுகாப்பதற்காக யானை காவலுக்கு சென்று யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய கொக்கனாரை வட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை (24) அதிகாலை இடம்பெற்றிருந்ததுடன் மாலை யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற வேளை யானை காவலுக்காக நின்ற ஒருவர் பலியாகியதுடன் இருவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவலுக்குச் சென்றவருக்கு எமனாக வந்த யானை| இலங்கை செய்திகள்
சம்பவ இடத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான 55 வயது மதிக்கத்தக்க முஹமட் அலியார் சுபையிர் மட்டக்களப்பு தரவை 1 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த குடும்பஸ்தரே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.
மேலும் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தாக்குதலில் காயமடைந்துள்ள 29 வயதையுடையவர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதுடன் 52 வயதையுடைய மலையடி கிராமம் 2 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்தவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் 395 யானைகள் பலி
இலங்கையில் 395 யானைகள் பலி
இலங்கை காடுகளில் வசித்து வந்த காட்டு யானைகள் 395 பலியாகியுள்ளது .
மின்சார வேலிகள் மற்றும் தந்தை வேட்டை உள்ளிட்ட, குற்றச்செயல்களில் ஈடு படுவர்களினாலும் ,யானைகள் வேட்டையாட பட்டுள்ளன .
இதனால் இலங்கையில் 395 யானைகள் பலியாகியுள்ளதாக, இலங்கை வனவள பாதுகாப்பபு அமைச்சு அறிவித்துள்ளது .
இலங்கை வரும் உல்லாச பயணிகள், அதிக ம் யணைகளை விரும்பி பார்த்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
யானை தாக்குதலில் சிக்கி 34 பேர் மரணம்
யானை தாக்குதலில் சிக்கி 34 பேர் மரணம்
இந்த வருடத்தின். முதலாவது நான்கு மாத்தில் மட்டும் .யானைகளின் தாக்குதலில் சிக்கி 34 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 47 காட்டு யானைகளும் .கொலை செய்ய பட்டுள்ளன .
எண்ணிக்கையில் ,இவை அதிகமாக உள்ளதாக, வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காட்டு யானைகளின் .அத்துமீறும் தாக்குதல்களில். சிக்கி உயிரிழக்கும் மக்கள் எண்ணிக்கை .நாள் தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த. காட்டு யானைகளின் இருந்து. தம்மை பாதுகாத்து கொள்ளுமாறு. மக்கள் அரசை வேண்டியுள்ள பொழுதும்,வன ஜீவாரசிகள் காப்பகத்தினால் ,மக்கள் காப்பாற்ற தவறி வரும் நிலையில், மனித உயிரிழப்பு அதிகமாகி வருவதாகதெரிவிக்க படுகிறது .
யானை தாக்கி ஒருவர் மரணம்
யானை தாக்கி ஒருவர் மரணம்
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தளவாய் காட்டுப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பட்டிப்பளை பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட அருள்நேசபுரம் கடுக்காமுனை கிராமத்தில் வசிக்கும் 57 வயதுடைய
ராசசிங்கம் மோசிகவாகனம் என்பவரே காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
கடுக்காமுனை பகுதியில் இருந்து விறகு எடுப்பதற்காக 3 பேர் திக்கோடை தளவாய் காட்டுப்பகுதிக்கு சென்ற போது மறைந்திருந்த காட்டு யானை துரத்தியுள்ளது.
யானை தாக்கி ஒருவர் மரணம்
இதன்போது ஏனைய இருவரும் ஓடி தப்பியுள்ள நிலையில் ஒருவர் காட்டு யானை தாக்குதலினால் உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
காட்டு யானைகளின் தாக்குதல்கள் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ச்சியான மரணங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் அதிசய யானை கண்டுபிடிப்பு
கனடாவில் அதிசய யானை கண்டுபிடிப்பு
கனடா நாட்டில் ஆதிகாலத்து அதிசய யானை குட்டி ஒன்று கண்டுபிடிக்க பட்டுள்ளது .
இந்த யானை குட்டி தற்கால யானைகளை விட ஆதிகாலத்தில் காடுகளில் அதிகமாக வாழ்ந்து வந்தவை இவை தற்பொழுது அழிந்து போயுள்ளன.
அவ்வாறான யானை குட்டி ஒன்றின் சடலாமே தற்போது மீட்க பட்டுள்ளது
மீட்க பட்ட யானை குட்டி தொடர்ந்து ஆய்வுகளுக்கு உள்ளாக்க பட்டு வருகிறது.
வீதியால் சென்றவரை தாக்கிய யானை
வீதியால் சென்றவரை தாக்கிய யானை
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை ஆற்றங்கரை பிரதான வீதியில் இன்று (16)
யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார் என வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
கொண்டயன்கேணியில் இருந்து இன்று அதிகாலை இருவர் காயான்கேணி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது, மீராவோடை ஆற்றங்கரை பிரதான வீதியில் வைத்து யானை தாக்கியுள்ளது.
இதன்போது ஒருவர் தாக்கப்பட்டுள்ளதுடன், மற்றவர் தப்பியோடியுள்ளார். அவர்கள் பயணித்த சைக்கிளையும் யானை சேதப்படுத்தியுள்ளது.
வாழைச்சேனை, கொண்டயன்கேணியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கே.தஸீஸ்கரன் (வயது 25) என்பவரே யானையால் தாக்கப்பட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்துக் காணப்படும் இப்பிரதேசத்தில் யானை வேலி அமைக்காவிட்டாலும் வீதி மின் விளக்குகளைப் பொருத்தியாவது தமது பாதுகாப்பை
உறுதிப்படுத்துமாறு, வாழைச்சேனை பிரதேச சபையிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
பாடசாலைக்குள் புகுந்த காட்டு யானைகள்
பாடசாலைக்கு வந்த யானைகள்
மஹகோடயாய கிராமத்தில் உள்ள பாடசாலைக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த மரங்களை அழித்துவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைக்கு வந்த காட்டு யானைகள் பாடசாலையை சுற்றி உள்ள வேலியை உடைத்து பாடசாலையில் உள்ள வாழைத்தோட்டத்தை அழித்துவிட்டன.
இப்பகுதியில் காட்டு யானை அச்சுறுத்தல் நாளாந்தம் தொடரும் நிலையில், அண்மைய நாட்களில் பாடசாலைக்கு அருகே வசிக்கும் ஒரு பெண்ணுக்கு சொந்தமான 350 பப்பாளி மரங்களை கொண்ட தோட்டம் யானைகளால் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி கல்மடு பகுதியில் யானை பலி – நபர் கைது
கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காட்டு யானை ஒன்று வயல் நிலத்தினை உணவாக்கி அழித்துள்ளதுடன், பின்னர் அப்பகுதியில் உயிரிழந்துள்ளது.
நேற்றுக் காலை வயல் நிலத்தை பார்வையிட சென்ற பொது மக்கள் யானை உயிரிழந்திருப்பது தொடர்பில் கிராம சேவையாளர் ஊடாக
வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
உயிரிழந்த யானை தந்தந்துடன் காணப்படுவதுடன் குறித்த பகுதி அடர்ந்த காட்டினை அண்மித்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த யானை சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட
விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கல்மடு பகுதியை சேர்ந்த ஒருவரை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்
கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன..

விகாரைக்குள் புகுந்து ஆளை அடித்து கொன்ற யானை
விகாரைக்குள் புகுந்து ஆளை அடித்து கொன்ற யானை
கருவலகஸ்வெவ, ரஜவிகம விகாரையில், இன்று (30) மாலை இடம்பெற்ற விசேட பூசை வழிபாடொன்றின் போது காட்டு
யானையொன்று புகுந்து அட்டகாசம் புரிந்ததால், குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
சம்பவத்தில், நான்கு வயதான ஆண் குழந்தையொன்றே உயிரிழந்துள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.
பௌர்ணமி தினமான இன்றைய தினம், குறித்த விகாரையில் இடம்பெற்ற விசேட வழிபாட்டில், குறித்த குழந்தை, தனது தாயுடன்
அதில் கலந்துகொண்டுள்ளது. இதன்போது, காட்டு யானையொன்று விகாரைக்குள் புகுந்து அட்டகாசம் புரியத் தொடங்கியுள்ளது.
இதன்போது, குறித்த குழந்தை, அதனது தாயால் கைவிடப்பட்டிருந்த நிலையில், யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்துள்ள குழந்தை, ஆனமடுவ வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட போதிலும், அதற்கு முன்னரே குழந்தை உயிரிழந்துள்ளது.
விகாரையை தாக்கிய யானைகள் – தப்பி ஓடிய பிக்குகள்
இலங்கையில் -விகாரையை தாக்கிய யானைகள் – தப்பி ஓடிய பிக்குகள்
இலங்கை -வெள்ளவாய பகுதியில் காட்டு யானைகள் விகாரை ஒன்றுக்குள் புகுந்து திடீர் தாக்குதலை நடத்தின .
இந்த தாக்குதலிலும் விகாரை பலத்த சேதமடைந்துள்ளது ,யானையை கண்ணுற்ற பிக்குகள் அங்கிருந்து தப்பி
ஓடியதால் உயிர் தப்பித்தார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
சிம்பாவேயில் 200 யானைகள் பலி
சிம்பாவேயில் 200 யானைகள் பலி
சிம்பாவே நாட்டில் திடீரென 200 யானைகள்பலியாகியுள்ளனர் ,அங்கு நிலவு வறட்சி காரணமாக இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,மேலும் காட்டு யானைகளை காப்பாற்றும் நகர்வில் வனவிலங்கு பாதுகாப்பு துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்


இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள்
இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள்
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற யானை தாக்குதலில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர் ,யானைகளின் இந்த கோரா தாக்குதல் தொடருகின்ற பொழுதிலும் மக்களை காப்பாற்ற இவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவிலை என தெரிவிக்க படுகிறது























