சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு

சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு

சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு.இலங்கையை சுற்றி நடக்கும் வாலிபருக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சாதனை நிகழ்வு .

சிங்கள சகோதர மொழி நண்பரான செல்டன் பெராரோ ஒருவர் ,சாதனையையும் ஒற்றுமையும் நிலை நாட்ட ,இலங்கை தேசிய கொடியை தாங்கி பிடித்தவாறு நடை பயில்கின்றார் .

இவரது இந்த சாதனை நல்லிணக்க நிகழ்வானது அம்பாறை மத்திய முகாமில் இருந்து ஆரம்பிக்க பட்டுள்ளது .

சாதனை படைக்க நடை பயணம்

52 நாட்கள் திட்டமிட்ட படி இவர் எங்கு தொடங்கியதோ அங்கு சென்றடைவார் .

இவ்வாறு இவரது நடைபயணமானது 12 நாட்கள் கழிந்து யாழ்ப்பாணம் வந்தடைந்தது . இவரை கண்ணுற்ற மக்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர் .

இலங்கை தேசிய கொடியை பிடித்து செல்கின்ற பொழுது ,இவருக்கு ஏதும் நேர்ந்து விடலாம் என்பதால் போலீசார் பாதுகாப்பு வழங்க இவர் நடந்து செல்கின்றார் . .

இவரது இந்த நடவடிக்கையானது இலங்கை சிங்கள தேசம் என்பதை பறை சாற்ற இவர் தேசிய கொடியினை பிடித்து நடந்து செல்கிறார் .

சிங்கள மக்கள் மொழி இனம் என்கின்ற அடிப்படையில் ,அவர் தனது தாய் நாட்டு கொடியை தாங்கி பிடித்து நடந்து செல்கிறார் .

புலிக்கொடி பிடித்து தமிழர் நடந்திட அனுமதி உண்டா ..?

ஆனால் இதே போன்று புலிக்கொடியை பிடித்து எம் தமிழரை இலங்கை முழுவதும் கடந்து செல்ல இனவாத சிங்களவர்கள் அனுமதி அளிப்பார்களா..? ,அரசு பொலிஸ் அனுமதி அளிக்குமா என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .

எனினும் இவர் தன்னை வருத்தி சாதனை நிலை நாட்ட நடக்கும் ,இந்த பயணத்தை ,இன பேதம் கடந்து வரவேற்று வாழ்த்தி அனுப்பி வையுங்கள் .

தமிழ் உரையாடி அசத்திய சிங்கள சகோதரர்

எம் தமிழை பேசி யூடுப்பர் ஒருவருக்கு இவர் வழங்கிய செவ்வி அளப்பெரியது .எம் மொழியை முயன்றவரை அவர் அதிலேயே உரையாடி, தனது நடை பயண நோக்கத்தை விளங்க படுத்தினார் .

அதற்கு தலை சாய்த்து நன்றிகள் தெரிவிப்போம் ,மனிதத்தோடு அணுகி சகோதர மொழி நண்பரை வாழ்த்தி அனுப்புங்கள் தமிழர்களே .

தமிழர்கள் அறம் நிறைந்தவர்கள் என்பதை இதன் பொழுது தெரிய படுத்துங்கள் மக்களே .

பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் இந்த கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் உள்ள அனைத்து பள்ளிவாசல் நிர்வாகத்தோடு கலந்துரையாடி சிறப்பு பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 3,203 பள்ளிவாசல்களில் மத வழிபாடுகள் நடைபெறும் 2,453 பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கபடவுள்ளன.

இந்த பணிகளில் 5,580 பொலிஸார், 510 விசேட அதிரடிப்படையினர் மற்றும் 1,260 இராணுவ வீரர்கள் உட்பட 7,350க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய கும்பல்
Posted in இலங்கை செய்திகள்

வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய கும்பல்

வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய கும்பல்

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையினுள் உட்புகுந்த இனம் தெரியாத சிலர் பாதுகாப்பு உத்தியோகரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

வைத்தியசாலைக்கு இன்று மாலை மது போதையில் வந்த சிலர்
கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாக தாக்கினர்.

பாதுகாப்பு உத்தியோகத்தரின் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை தடுக்க வந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் கடுமையாக மிரட்டிச் சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசாருக்கு வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு, பொலிசார் வாக்கு மூலங்களைப் பதிவு செய்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தை நாங்கள் ரத்து செய்வோம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தை நாங்கள் ரத்து செய்வோம்

ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தை நாங்கள் ரத்து செய்வோம்

உண்மையான நிகழ்நிலை பாதுகாப்பிற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எனவே சிறுவர் ஆபாச மற்றும் பிற தீவிரமான ஒன்லைன் குற்றங்கள் போன்ற பிரச்சனைகளை முக்கிய தளங்களின் ஒத்துழைப்புடன் நாங்கள் அறிமுகப்படுத்துவோம்.

இது இலங்கை சமூகத்தின் நல்வாழ்வுக்கு முக்கியமானது. அவசர முடிவுகளை விட பயனுள்ள தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிப்போம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறினார்.

ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தை நாங்கள் ரத்து செய்வோம்

“ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை அமல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நிறைவேற்றப்பட்டால், எதிர்கால SJB தலைமையிலான அரசாங்கம் இந்த சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை விரைவில் ரத்து செய்யும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

மேட்டா, கூகுள் மற்றும் யூடியூப் போன்ற முக்கிய தளங்களுடனான எங்கள் உறவுகளை நாங்கள் பாதிக்க மாட்டோம். அவை பொருளாதார வளர்ச்சிக்கு மிக அவசியமானவை” என அவர் தனது சமீபத்திய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்

கஜேந்திரனின் வீட்டுக்கு பாதுகாப்பு கோரினார் டிலான்
Posted in இலங்கை செய்திகள்

கஜேந்திரனின் வீட்டுக்கு பாதுகாப்பு கோரினார் டிலான்

கஜேந்திரனின் வீட்டுக்கு பாதுகாப்பு கோரினார் டிலான்

எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டையும் சுற்றிவளைக்க எவருக்கும் இடமளிக்க
முடியாது என்றும் கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க
உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுயாதீன எதிரணி எம்.பியான
டிலான் பெரேரா சபையில் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இலங்கை கிரிக்கெட் தொடர்பான சபை ஒத்திவைப்பு
வேளை விவாதம் இடம்பெற்றது.

அதன் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலத்தின் வீட்டை சுற்றிவளைக்கவுள்ளதாக குழுவொன்று அறிவித்துள்ளமை
தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே டிலான் பெரேரா இவ்வாறு
கோரிக்கை விடுத்தார்.

கஜேந்திரனின் வீட்டுக்கு பாதுகாப்பு கோரினார் டிலான்

மேலும் தெரிவிக்கையில், “கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி, நாளை (இன்று) பாராளுமன்ற
தெரிவுக்குழுவுக்கு வர வேண்டும் என்ற போதும், அவரால் வர முடியாது என்று கூறியுள்ளார்.

அதற்கு காரணம் அவரின் கொழும்பிலுள்ள வீட்டை குழுவொன்று சுற்றி வளைக்கவுள்ளதாக
தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் சென்றே
இவ்வாறு சுற்றிவளைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாரதூரமான விடயமே.

கஜேந்திரகுமார் எம்.பியின் தாயார் மிகவும் நோய்வாய்ப்பட்டவராக இருக்கின்றார். இது
தொடர்பில் பாதுகாப்பு தரப்புக்கு அறிவிக்க வேண்டும். ஒவ்வொருக்கும் வேண்டியவாறு
எம்.பிக்களின் வீடுகளை சுற்றிவளைக்க இடமளிக்க முடியாது.

இதனால் தயவு செய்து அவருக்கும், அவரின் வீட்டுக்கும் தேவையான பாதுகாப்பை உடனடியாக
அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் சமன் பிரிய ஹேரத், இந்த விடயம்
தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்

புதைகுழிக்கு பொலிஸ் பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

புதைகுழிக்கு பொலிஸ் பாதுகாப்பு

புதைகுழிக்கு பொலிஸ் பாதுகாப்பு

நீதிமன்ற உத்தரவையடுத்து, தினேஷ் ஷாஃப்டரின் உடல் மே 25ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில், அவரது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் டிசெம்பர் 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இதன்படி தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், சுமார் 100 இற்கும் மேற்பட்ட வாக்கு மூலங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன

அமெரிக்காவில் ஆயுத முனை பாதுகாப்புடன் திறக்க பட்டுள்ள பாடசாலை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் ஆயுத முனை பாதுகாப்புடன் திறக்க பட்டுள்ள பாடசாலை

அமெரிக்காவில் ஆயுத முனை பாதுகாப்புடன் திறக்க பட்டுள்ள பாடசாலை

அமெரிக்கா வடக்கு கலிபோனியாவில் உள்ள பாடசாலைக்குள் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து தற்போது ஆயுத முனை பாதுகாப்புடன் பாடசாலை மீள திறக்க பட்டுள்ளது.

இந்த பாடசாலையில் பத்தொன்பது மாணவர்கள் சுட்டு கொலை செய்ய பட்ட நிலையில் இந்த ஆயுத முனை பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.

அமெரிக்காவில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும்
நிலையில் இந்த தற்பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    அணைத்து எம்பிகளுக்கும் பாதுகாப்பு பலப் படுத்தல்

    அணைத்து எம்பிகளுக்கும் பாதுகாப்பு பலப் படுத்தல்

    இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

    இதன் பொழுது அமைச்சர்கள் எம்பிக்கள் வீடுகளும் தாக்குதளுக்கு உள்ளாக்க பட்டன

    ,இதனை அடுத்து தற்போது ஒவ்வொரு எம்பிக்கும் ஆறு போலீசார் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி பாதுகாப்பில் ஈடுபடுத்த உத்தரவு வழங்க பட்டுள்ளது

    இது அணைத்து கட்சி எம்பிகளுக்கும் உள்ளடங்கும் என்பது குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      கடலில் பறக்கும் ஈரான் இராணுவம் – பாதுகாப்பு தீவிரம்

      கடலில் பறக்கும் ஈரான் இராணுவம் – பாதுகாப்பு தீவிரம்

      ஈரான் கடல் வழியாக எதிரிகள் நுழைந்து விடலாம் என்பதால ஈரான் கடல் படையின்

      பறக்கும் சுற்று காவலில் ஈடுபட்டுள்ளனர்

      திடீரென அதிகரிக்க பட்டுள்ள இந்த பாதுகாப்பு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

        Posted in Uncategorized

        கோட்டா பாதுகாப்பு இறுக்கம் – புதிய அதிகாரிகள் நியமனம்

        கோட்டா பாதுகாப்பு இறுக்கம் – புதிய அதிகாரிகள் நியமனம்

        இலங்கையில் ஆளும் அதிபர் கோட்டபாயாவின் பாதுகாப்பில் திடீர் மாற்றம் இடம்பெற்றுள்ளது ,

        அதன்படி, ஜனாதிபதி பாதுபாப்பு படையணியின் உதவிக்காக பிரதி பொலிஸ் மா

        அதிபர் ஒருவரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.


        ஜனாதிபதி பாதுகாப்பு படையணிக்கு பொறுப்பாக புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.


        இதேவேளை, ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக புலனாய்வு மற்றும் கண்காணிப்புக்கு

        பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.டி.ஜயலத் உட்பட 100 பொலிஸ்

        புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக
        இன்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

          Posted in இலங்கை செய்திகள்

          கோட்டாபாயா எங்களை கொலை செய்யலாம் – பீதியில் எம்பிக்கள்

          கோட்டாபாயா எங்களை கொலை செய்யலாம் – பீதியில் எம்பிக்கள்

          இலங்கையில் கோட்டபாயவுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்


          அந்த போராட்டங்களுக்கு மூளையாக செயல் பட்டவர்களை கொலை செய்யும்

          திட்டத்தில் கோட்டபாய உள்ளதாக ஜேவிபியின் பிரமுகர் அனுராச திசாநாயக்க தெரிவித்துள்ளார்

          தமது பாதுகாப்பை தனக்கே உறுதி செய்வதாகவும் ,நிகழ்வு இடத்திற்கு

          செல்லும் முன்னரும் பின்னரும் நமது சகாக்கள் தமக்கு பாதுகாப்பு பணியில்

          ஈடுபடுகின்றனர் என அவர் தெரிவித்தார்

          கோட்டாபாயவின் மறுமுகம் எமக்கு நன்கு தெரியும் என அவர் கூறியுள்ள

          விடயம் சர்வதே தேச அளவில்
          கவனத்தை ஈர்த்துள்ளது .

            Posted in இலங்கை செய்திகள்

            பாகிஸ்தான் அதிபர் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை வருகை

            எதிர் வரும் வாரம் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் இலங்கை வரவுள்ள நிலையில் அவருக்குரிய

            பாதுகாப்பினை வழங்கும் நோக்குடன் இலங்கைக்கு அவரது பாதுகாப்பு துறையினர் வருகை தந்துள்ளனர்

            அவர் செல்ல போகும் சாலைகள் ,மற்றும் தங்குமிடங்கள் என்பனவற்றை

            இவர்கள் ஆராய்ந்ததன் பின்னரே அவர் அங்கு வருகை தரவுள்ளமை குறிப்பிட தக்கது