Tag: ஜனாதிபதி பாதுபாப்பு
Posted in Uncategorized
கோட்டா பாதுகாப்பு இறுக்கம் – புதிய அதிகாரிகள் நியமனம்
Author: நலன் விரும்பி Published Date: 06/05/2022 Leave a Comment on கோட்டா பாதுகாப்பு இறுக்கம் – புதிய அதிகாரிகள் நியமனம்
கோட்டா பாதுகாப்பு இறுக்கம் – புதிய அதிகாரிகள் நியமனம்
இலங்கையில் ஆளும் அதிபர் கோட்டபாயாவின் பாதுகாப்பில் திடீர் மாற்றம் இடம்பெற்றுள்ளது ,
அதன்படி, ஜனாதிபதி பாதுபாப்பு படையணியின் உதவிக்காக பிரதி பொலிஸ் மா
அதிபர் ஒருவரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்பு படையணிக்கு பொறுப்பாக புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக புலனாய்வு மற்றும் கண்காணிப்புக்கு
பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.டி.ஜயலத் உட்பட 100 பொலிஸ்
புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக
இன்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.






