நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
Posted in இலங்கை செய்திகள்

நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு

நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு


நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் ,ஏப்ரல் மாதத்தில், நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் 62.05 வீதமாக இருந்த உற்பத்தித் துறையின் இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் கடந்த மாதத்தில் 42 வீதமாக பதிவாகியுள்ளது.

அதன்படி, இந்த மாதத்தில் புதிய முன்பதிவு, உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் மொத்த கொள்முதல் குறியீடுகளில் ஏற்பட்ட சரிவின் விளைவாக ஒட்டுமொத்த சுட்டெண் வீழ்ச்சியடைந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாக ஏப்ரல் மாதத்தில் பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டமையே இந்த பின்னடைவுக்கு

முக்கிய காரணம் எனவும், நீண்ட விடுமுறை காரணமாக விநியோகஸ்தர்கள் முன்பதிவை வழங்குவதற்கு எடுத்துக்கொண்ட நேரம் முன்னையதை விட ஏப்ரலில் வேகமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவைத் துறையில், இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் 56.7 வீத மெதுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளது.

மார்ச் மாதத்தில் கொள்கை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதன் மூலம், நிதிச் சேவைகள் துணைத் துறையின் வணிக நடவடிக்கைகள் மேலும் வளர்ச்சியடைந்துள்ளதுடன்,

பண்டிகைக் காலத்தின் தேவை

பண்டிகைக் காலத்தின் தேவைக்கு மத்தியில் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக உப பிரிவின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், நிகழ்ச்சிகள் மற்றும் ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு மற்றும் சொத்து விற்பனை ஆகிய துணைத் துறைகளும் ஏப்ரல் மாதத்தில் சாதகமான முன்னேற்றங்களை பதிவு செய்துள்ளன.

எவ்வாறாயினும், மார்ச்ச மாதத்துடன் ஒப்பிடும் போது ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததிற்கு அமைய தங்குமிடம் மற்றும்

உணவு விநியோக சேவையின் உப பிரிவானது சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டில் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் பட்சத்தில்,

அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலதிக நிதி ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

2320 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இதன் போது நியமனம் வழங்கப்பட்டதோடு ஜனாதிபதி அடையாள ரீதியில் சிலருக்கு நியமனங்களை வழங்கி வைத்தார்.

ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டு உரையாற்றுகையில், எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கௌரவமான தொழிலான ஆசிரியத் தொழிலின் மரியாதையை அழிக்கும் வகையில் ஒருபோதும் செயற்படக் கூடாது என தெரிவித்த ஜனாதிபதி, ஆசிரியர்கள் எப்பொழுதும் பாட அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது

நீங்கள் ஒரு வகுப்பறையை மாத்திரம் பொறுப்பேற்கவில்லை. அந்த வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை தான் நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள். 05 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவர்கள் உங்களுடன் தான் தமது நேரத்தை செலவிடுகிறார்கள்.

அதனால்தான் அவர்கள் வீட்டில் இருந்து பெறும் வழிகாட்டுதலைப் போன்றே பாடசாலையிலிருந்து அவர்கள் பெறும் வழிகாட்டுதலும் மிகவும் முக்கியமானது.

அந்தப் பொறுப்பை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். மாணவர்களுக்கு பாட அறிவை மட்டும் கொடுக்க வேண்டியதில்லை. இந்த மாணவர்களின் வாழ்க்கையை நீங்கள்தான் வடிவமைக்க வேண்டும்.

இன்று, இணையத்தில் பாட அறிவை பெறலாம். ஆனால் மாணவர்களின் குணாதிசயத்தை கட்டியெழுப்ப இணையத்தால் முடியாது. நம் அனைவரின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதில் பெற்றோரிடமிருந்து பெற்ற வழிகாட்டுதலைப் போன்றே ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது. அதனால்தான் ஆசிரியர் தொழில் உயர் தொழிலாகக் கருதப்படுகிறது. அந்த மரியாதையை பாதுகாக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் ஆசிரியர்களாகிய உங்களது அறிவு மிகவும் முக்கியமானது. இன்று நாளுக்கு நாள் அறிவைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு சமூகம் உள்ளது.

எனவே, கடந்த காலங்களில் பாட அறிவை அதிகரிக்காமல் ஆசிரியர்கள் பணியாற்றுவது சாத்தியமாக இருந்த போதிலும், இன்று அவர்களால் அவ்வாறு செய்ய முடியாது.

உங்கள் அறிவு இன்னும் 10, 20 ஆண்டுகளில் போதுமானதாக இருக்குமா என்று சிந்தியுங்கள். எனவே, ஆசிரியர்கள் பாட அறிவை மேம்படுத்த எப்போதும் பாடுபட வேண்டும்.

இன்று 2300 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படுகிறது. மேலும் 700 நியமனங்கள் வழங்கப்பட உள்ளன. வெற்றிடங்களுக்கு ஏற்ப மேலும் 1000 ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த வருடத்தில் சுமார் 4000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த நியமனங்களை வழங்க முடிந்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சி மற்றும் கோவிட் தொற்றுநோய் காரணமாக இந்த நியமனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மறைப்பெறுமானத்தை எட்டியது. ஆனால் அரசாங்கம் மேற்கொண்ட சரியான பொருளாதார முகாமைத்துவத்தினால் ரூபாயின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது.

எனவே, இன்று இந்த நியமனங்களை வழங்குவதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

கடந்த ஆண்டு டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி 370 ஆக இருந்தது. இன்று டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 300 ஆக உள்ளது, எதிர்காலத்தில் அதை 280 ரூபாவாகக் குறைக்க எதிர்பார்க்கிறோம்.

அப்போது அரசாங்க செயற்பாடுகளுக்கான பணத்தைத் தேட வேண்டியுள்ளது. இன்று நாம் கடினமான பாதையில் சென்றாலும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியும்

. இதன் போது அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடிந்தது. அத்துடன், சிங்களத் தமிழ்ப் புத்தாண்டுக் காலத்தில் நெல்லுக்கு சிறந்த விலையை வழங்க முடிந்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

செல் எரிபொருள் நிறுவனம் 115 வருடத்தின் பின்னர் அள்ளிய இலாபம்
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் விலையை 55 ரூபாவால் குறைக்க நடவடிக்கை

எரிபொருள் விலையை 55 ரூபாவால் குறைக்க நடவடிக்கை

திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருளின் விலை சூத்திரம் தொடர்பில் உரியவர்களை அழைத்து கேட்டறிந்துகொண்டதன் பின்னர் விலையை மேலும் குறைக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

2024 மார்ச் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் மின்சார கட்டணத்தை 21.9% இனால் குறைக்க முடிந்தது. 30 அலகுகளுக்கு குறைவான மின் பாவனையாளர்களின் மின் அலகு ஒன்றுக்கான விலை 33% இனால் குறைக்கப்பட்டுள்ளது. 31 – 60 அலகுகளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு அலகு ஒன்றுக்கு 28% இனால் கட்டணம் குறைந்துள்ளது. 60 – 90 அலகுளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு 30% கடடண குறைப்புச் செய்யப்பட்டுள்ளது. மேலும் 90 – 180 இடையிலான பாவனையாளர்களுக்கு 24% இனால் கட்டண குறைப்புச் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், 180 அலகுகளுக்கு மேலான வீட்டு பாவனையாளர்களுக்கு 18% கட்டண குறைப்பும் வழிபாட்டுத் தலங்களுக்கு 33% கட்டண குறைப்பும் ஹோட்டல் மற்றும் தொழில்துறை துறைகளுக்கு 18% கட்டண குறைப்பும் அரச துறைக்கு 23% கட்டண குறைப்பும் தனியார் துறைக்கு 22% கட்டண குறைப்பும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அதற்கு நிகராக உணவு விலைகள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குரியாக உள்ளது. பொது சேவைகளில் ஈடுபடுவோரால் மக்களுக்கு பெருமளவான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் . அதனை மின்சார சபையோ அல்லது அமைச்சுக்களோ செய்ய முடியாது என்பதே எனது நிலைப்பாடாகும்.

மேலும், அண்மைக் காலமாக கிடைத்த பெரும் மழைவீழ்ச்சியின் காரணமாக, மின் உற்பத்தி செயல்பாட்டில் உள்ள பிரச்னைகளை குறைந்துள்ளது. அதன் பலனாக 2022 ஆம் ஆண்டின் 270 பில்லியன் ரூபா இழப்பீட்டையும் அதனால் சரிசெய்ய முடிந்தது. இருப்பினும் இருள் யுகத்தில் கிடந்த நாடு பொருளாதார முன்னேற்றம் கண்டு வருவதன் பலனாகவே மின்சார கட்டணத்தை குறைக்க முடிந்துள்ளது.

அதனால் மின்சார உற்பத்திச் செலவு பெருமளவில் குறைவடைந்துள்ளதோடு, அதேபோலு மூன்றிலக்க பெறுமதியாக காணப்பட்ட வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளமையும் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

மேலும், இந்திய கடனின் கீழ் பெறப்பட்ட 100 மில்லியன் டொலர்களில் முதல் பகுதியைக் கொண்டு, பாடசாலைகள், பாதுகாப்பு முகாம்கள், பல்கலைக்கழகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களில் மின்சாரம் பெறுவதற்கு சூரிய சக்தி படலங்களை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மின் கட்டணத்தை மேலும் குறைக்க, தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் அல்லது தற்போது அதிக விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்வதை விடுத்து குறைந்த செலவிலான மாற்று முயற்சிகளுக்கு செல்ல வேண்டும்.

2025 ஆம் ஆண்டில் சியாம்பலாண்டுவ மின் உற்பத்தித் திட்டத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் நூறு மெகாவோட் மின்சாரத்தை 25 – 26 ரூபாய்க்கு பெற்றுகொள்ள முடியும். இதேபோன்ற பல பாரிய மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதற்காக ஏராளமான முதலீட்டாளர்கள் எம்மோடு இணைந்துகொண்டுள்ளனர்.

மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புதிய முதலீட்டாளர்களுக்காக 10 காற்றாலை மற்றும் சூரிய ஒளி திட்டங்கள் திறக்கப்பட்டுள்ளன. மன்னார் பகுதியை மையமாக கொண்டு 50 மெகாவாட் காற்றாலைக்கான விலைமனு அடுத்த வாரம் கோரப்படும்.

மேலும் உரியவர்களுடன் கலந்துரையாடி எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையினையும் மேலும் குறைக்க எதிர்பார்க்கிறோம். “இது ஒரு குழுவாகப் பார்த்து செய்யப்படும் காரியம் அல்ல. விலைச் சூத்திரத்தில் செலவுகளைக் காட்டுவதற்காக மட்டுமே இது செய்யப்படுகிறது. VAT சேர்க்காவிட்டால் ஒரு லீற்றர் எரிபொருளை 50 – 55 ரூபாய் வரை குறைக்கலாம்.”

அத்துடன், மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதன்படி, புதிய சட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் மாற்றங்களை உரிய தரப்பினரும், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கத்தினரும் சுட்டிக்காட்டியிருந்தனர். இது தொடர்பான 46 திருத்தங்களுடன் கூடிய சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்க முடியும்” என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
Posted in இலங்கை செய்திகள்

பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது

பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது

பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது செய்யப்பட்டனர் ,கடந்த 24மணித்தியாலத்தில் யுக்திய நடவடிக்கையில் பொலிசாரால் இந்த கைது இடம்பெற்றுள்ளது .

இந்த யுக்திய நடவடிக்கை பொலீசாருடன் சிக்கிய நபர்கள் பல்வேறு பேட் குற்ற செயல்களுடன் தொடர்பு பட்டவர்களாக காண படுகின்றனர் .

அதிக அளவான நபர்கள் போதைவஸ்துடன் கைது செய்ய பட்டுள்ளதாக யுக்தியை நடவடிக்கை பொலிசார் தெரிவித்துள்ளனர் .

வீடியோ

ஊழல் மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

ஊழல் மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை

ஊழல் மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை

2024 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் மருந்துகளைக் கொள்முதல் செய்வது தொடர்பான சிறப்பு வழிகாட்டல்களை வெளியிடுவது மற்றும் அதற்காக ஒரு தனி நிறுவனத்தை நிறுவுவது குறித்து கவனம்

செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகள் மற்றும் ஏனைய சர்ச்சைக்குரிய

விடயங்களைத் தடுக்க வழி ஏற்படும் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.

மேலும், சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சுகாதார அமைச்சின் மனித வளங்கள், சட்டவிதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல இவ்வாறு தெரிவித்தார்.

ஊழல் மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல,

தற்போது, நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையங்களுக்குத் தேவையான தரமான மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளோம்.

தற்போதைய பொருளாதார நிலை காரணமாக சிகிச்சை மற்றும் பராமரிப்பு பணிகளில் சில பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றைத் தவிர்த்து, அடுத்த ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியுதவிகளைக் கொண்டு எதிர்வரும் வருடத்தில் இந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

மேலும், சுகாதார அமைச்சில் பல கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். கடந்த வாரம் சில மாற்றங்களைச் செய்தோம். அடுத்த வாரத்திலும் இதுபோன்ற சில மாற்றங்களைச் செய்ய தயாராக இருக்கிறோம்.

மேலும், மனித வளங்கள், சட்டவிதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் மாற்றங்களைச் செய்யவும் எதிர்பார்க்கிறோம். மருந்துக் கொள்வனவு செயல்முறையிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.

குறிப்பாக, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக, மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பான விசேட வழிகாட்டுதல்களை வெளியிடுதல் மற்றும் அதற்கென தனியான நிறுவனமொன்றை ஸ்தாபிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், மருந்து இறக்குமதியின் போது இடம்பெறும் ஊழல், முறைகேடுகள் மற்றும் பிற சர்ச்சைக்குரிய சம்பவங்களைத் தவிர்க்க முடியும்.

நாட்டில் உள்ள மருந்துகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்நாட்டில் மருந்துகளை உற்பத்தி செய்தல், அவற்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் பணியை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத் துறையில் தாக்கம் செலுத்தும் மனித வள மேலாண்மைக்காக பிரபலமற்ற முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதற்காக, பதவிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த ஒவ்வொரு மாற்றங்களுடனும், தற்போது மருந்துகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.

மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள தயாராகி வருகிறோம். அனைவருக்கும் ஒரே மாதிரியான சுகாதார சேவையை எவ்வாறு வழங்குவது ((Universal Health Coverage)) மற்றும் (Social protection) சமூகப் பாதுகாப்பு வழங்குவது குறித்து உலகில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. அதற்காக உலக சுகாதார நிறுவனத்துடன் சுகாதார அமைச்சு இணைந்து செயல்பட்டு வருகிறது.

மேலும், தற்போது பெய்து வரும் மழையால் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகிறது. சுகாதார குழுக்களின் முயற்சிகளினால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோய் இறப்பு விகிதத்தை குறைக்க முடிந்தது.“ என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல மேலும் தெரிவித்தார்.

எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

கடமை தவறும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

கடமை தவறும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கும் ஆலோசனைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நேற்று (04) கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நுவரெலியாவை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்துவதற்கு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.

கடமை தவறும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்திக்காக தற்போது வரை முன்னெடுக்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் எதிர்கால அபிவிருத்திக்கான திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மாவட்ட வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாட்டைக் குறைத்தல், பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல்,

வீதி புனரமைப்பு, குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடித் தீர்மானங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது

இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை

இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை

இலங்கை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக விளங்கிய சரவணராஜா,
நாட்டை விட்டு தப்பி சென்றார் .இவ்வாறு சென்றவரை இண்டர்போல் பிடியாணை மூலம் ,கைது செய்ய நடவடிக்கை .மேற்கொள்ள படுகிறது .

நீதி வழங்கிய நீதிபதி ஒருவரை கேவல படுத்தும் முகமாக ,இலங்கை நீதித்துறையின் கருத்துக்கள் காணப்படுகின்றன .

குற்றாவளி போன்று சித்தரிக்க பட்டு ,நீதிக்கு புறம்பாக ,துரோகம் செய்தார் ,
என்ற வகையில் ,சிங்கள பெரும்பான்மை இனம் கருத்துக்களை பகிர்ந்து வருகிறது .

சமாதான நாயகனாக தன்னை காண்பித்து வந்த,
குள்ள நரி ரணில் தந்திரம் இப்பொழுது அம்பலமாகியுள்ளது .

ராஜபக்ஸ குடும்பத்தின் வாரிசாக மற்றம் பெற்றுள்ள ரணில் ,
தமிழர்களினால் துரத்தியடிக்க படவேண்டியவர் தான் என்பதை ,
நீதிபதியின் நாடு விட்டு வெளிறிய செயல் எடுத்து காட்டுகிறது .

இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை

மக்கள் ஆதரவை பெற்றுக்கொள்ள ரணில் நடத்த போகும் நாடகங்கள் ,
வரும் நாட்களில் அரங்கேறும்

அவை வாக்கு அரசியலாக மாற்றுவதற்கு ரணில் முயல்வார் என்பதை ,
இப்பொழுதே அடித்து கூறலாம் .

தமிழ் நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் உள்ளதும் ,அவர்கள் எமது அடிமைகள் தான் என்பதை ,சிங்கள தேசம் சொல்லி கொள்கிறது என்பதே ,நீதிபதி சராவணராஜா ,உயிர் அச்சுறுத்தல் ,விரட்டியடிப்பு கற்பிக்கிறது எனலாம் .

வீடியோ

ஈரானை தாக்க எதிரிகள் சதி நடவடிக்கை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை தாக்க எதிரிகள் சதி நடவடிக்கை

ஈரானை தாக்க எதிரிகள் சதி நடவடிக்கை

full video

https://www.youtube.com/watch?v=L2USiqhmc8I
அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார்,

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் கல்வி அமைச்சர் என்ற வகையில் கல்வித் துறையின் முன்னேற்றம் குறித்து விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், கல்வித் துறையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்வதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருதாகவும் தெரிவித்தார்.

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை

நவீன உலகுக்கு முகங்கொடுக்கக் கூடியவாறு, எமது மாணவர்களை தயார்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், அதற்காக விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல்,

கலைத்துறை, கணிதவியல் உள்ளிட்ட பாட விடயதானங்களை உள்ளடக்கிய வகையில் “STEAM” என்ற தொனிப்பொருளில் எதிர்காலத்தில் கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரவித்தார்.

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படும் வரை மாணவர்கள் தமது நேரத்தை வீணாகக் கழிப்பதைத் தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு ஆங்கிலம், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சிகளுடன் கூடிய பாடநெறிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இது மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள உதவும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, அண்மையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறிவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது

பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்கவும் மேலும் இரண்டாம் மொழி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கும் அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை

அந்த வகையில் ஏற்கனவே சுமார் 8000 பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் மேலும் 5500 பட்டதாரிகள், ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் மேலும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் தமிழக உலருணவுப் பொதிகள் வழங்க நடவடிக்கை

முல்லைத்தீவில் தமிழக உலருணவுப் பொதிகள் வழங்க நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலருணவுப் பொதிகளை வழங்குவதறக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 15,857 குடும்பங்களுக்கு அரிசியும், 3,964 குடும்பங்களுக்கு பால் மாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்

இதில் மிகவும் வறுமையான குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு 15,857 குடும்பங்களுக்கு அரிசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இன்னும் எங்களுக்கு அது வந்து சேரவில்லை. அதேபோல் பால்மாவை பொறுத்தவரையில் 3,964 குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட

குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான தெரிவுகள் பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக இடம்பெற்றுக் கொண்டு வருகின்றன. உண்மையில் 35,000க்கும் அதிகமான குடும்பங்கள் தகுதியானவர்களாக

இருக்கின்றார்கள். ஆனால் எங்களுக்கு வழங்கப்பட்டது 15,857. ஆகவே இதற்குள் அவர்களை தெரிவு செய்து வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்

வழங்கியிருக்கிறோம். அந்த தெரிவு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. எங்களுக்கு பொருட்கள் வந்து சேரும் பட்சத்தில் அதனை நாங்கள் அவர்களுக்கு உடனடியாக
வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

    Posted in இலங்கை செய்திகள்

    ஊரடங்குச் சட்டம்: மீறுவோர் மீது கடும் நடவடிக்கை photo

    ஊரடங்குச் சட்டம்: மீறுவோர் மீது
    கடும் நடவடிக்கை photo

    கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் – தற்போது நடைமுறையில்

    உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும். இதன் ஒரு கட்டமாக இன்று காலையில் புஸ்ஸலாவ நகரம் இவ்வாறு

    காட்சியளிக்கின்றது

    ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் – மார்ச் இன்று 30 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6:00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு

    மீண்டும் இன்றே பிற்பகல் 2:00 மணிக்கு நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.

    களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தின் அக்குரணை ஆகிய கிராமங்கள் முற்றாகத்

    தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த பகுதிகளுக்குள் யாரும் உள் நுழையவோ அல்லது அங்கிருந்து யாரும் வெளியேறவோ தடை செய்யப்பட்டுள்ளது.

    அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

    அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாகப் பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளைத் துஷ்பிரயோகம்

    செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

    கொரோனா கிருமி பரவுவதைத் தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த

    நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது

    ஊரடங்குச் சட்டம்
    ஊரடங்குச் சட்டம்