Tag: துப்பாக்கிச் சூடு
குருநாகலையில் துப்பாக்கிச் சூடு
குருநாகலையில் துப்பாக்கிச் சூடு
குருநாகலையில் துப்பாக்கிச் சூடு ,குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற நான்காவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.
மற்றைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கொஹுவல, தங்காலை மற்றும் மிதிகம பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளன.
இதில் 3 பேர் உயிரிழள்ள நிலையில், இருவர் காயமடைந்தனர்.
- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ,சம்மாந்துறை போலீஸ் பிரிவில் இடம் பெற்றுள்ள துப்பாக்கிச் சம்பவம் இதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாக உள்ளதாக சம்மாந்துறை போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பொருநர் பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் சகோதர்களுக்கு இடையில் இடம்பெற்ற தர்க்கத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 21 வயதுடையவர் அழைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியரான இவர் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் பல்வேறுபட்ட சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
இது சகோதரருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாத மூர்த்தி துப்பாக்கி பிரயோகத்தில் முடிவுற்றுள்ளதாகவும் தனது சகோதரனை சகோதரனை சுட்டு படுகொலை செய்துள்ளனர் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தேர்தல் முடிவுகள் இடம்பெறுகின்ற வேளையில் தற்பொழுது இறுக்கமான தேர்தல் காணப்படுகின்ற வகையில் ,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பகுதியில் தொடராக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம் பெற்று வருகின்ற சம்பவம் பல்வேறுபட்ட சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தேர்தல் இடம்பெறுகின்ற காலப்பகுதியில் குண்டு வெடிப்புகள் அதிகம் இடம்பெறப் போவதாக இந்த விடயங்கள் காண்பிக்கின்றன .
வரும் நாட்களில் இலங்கையில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்ற பயம் காணப்படுகிறது.
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு

துப்பாக்கிச் சூடு இளைஞன் பலி
துப்பாக்கிச் சூடு இளைஞன் பலி
துப்பாக்கிச் சூடு இளைஞன் பலி ,அநுராதபுரம் – ஸ்ரீபுர, கெமுனுபுர, பிள்ளையார் சந்தியில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 26 வயதுடைய நபர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரி – 56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து அவசரகாலக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

துப்பாக்கிச் சூடு இருவர் காயம்
துப்பாக்கிச் சூடு இருவர் காயம்
துப்பாக்கிச் சூடு இருவர் காயம் ,இலங்கை ஹபராதுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் ,காயம் அடைந்தவர்களில் ஒருவர் ஆட்டோ சாரதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்தவர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
இதன் பொழுது அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல் அதை சாரதி மீதும் நடத்தப்பட்டுள்ளதால் ,சாரதியின் படுகாயம் அடைந்த நிலையில் முட்கப்பட்டு தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென் இலங்கை பகுதியில் கூலிக்கு அமர்த்தப்படுகின்ற ஆயுத கலாச்சார குழுக்கள் ஊடாக ,இவ்வாறு திட்டமிட்டு இடம்பெற்று வருவதான புதிய புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
வர்த்தகர்கள் பிரபலங்கள் ஊடக நபர்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் என பலர் இவ்வாறான மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட வருகின்றனர்.
கோட்டபாய ஆட்சி காலப்பகுதியில் இவ்வாறான துப்பாக்கி சூடு சம்பவங்கள் இடம் பெற்று வந்தன.அவ்வாறான சம்பவங்கள் இப்பொழுதும் தொடர்கின்ற அறிகுறியாக இவை காணப்படுகின்றன.
ஆட்டோ சாரதி மற்றும் பயணி மீது துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என கண்டறியும் நடவடிக்கையில் ,குற்றப் புலனாய்வுத் துறையில் தமது விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு

ஆறுபேர் கைது துப்பாக்கிச் சூடு
ஆறுபேர் கைது துப்பாக்கிச் சூடு
ஆறுபேர் கைது துப்பாக்கிச் சூடு, அத்துருக்கிரியாவில் உள்ள வணிக கட்டிடத்தில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்பானவர்கள் என தெரிவித்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட வணிக உரிமையாளர் மிகப் பெரும் செல்வாக்கு நிறைந்த ஒருவராக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அரசியல்வாதிகளுடைய உறவினர்கள்
இவருடன் 72க்கு மேற்பட்ட அரசியல்வாதிகளுடைய உறவினர்கள் மனைவிகள் பிள்ளைகள் தொடர்பில் இருப்பதாகவும் எனவே இவர் அரசியல் சக்தி பலமிக்க ஒரு பிரபலமான வர்த்தகராக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவரது கிளப்பிற்கு பலர் சென்று செல்வதாக ஒரு படியாகியுள்ளது .
அவ்வாறான நீண்ட நெடிய அரசியல் பின்புலத்தைக் கொண்ட ஒருவர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியுள்ளது பெரும் சந்தேகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .
கைது செய்யப்பட்டவருக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படுமா என்ற கேள்வியைஎழுப்பப்பட்டுள்ளது .
அரசியல் பின்புலத்தில் செயல்படுகின்ற இருவராக காணப்படும் இவர் துப்பாக்கி சூடு சம்பவத்திலிருந்து சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவே தெரிவிக்கப்படுகிறது.
அதனை அடுத்து தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவர் விடுதலை பெற்று செல்ல கூடுமென மக்கள் பேசி வருகின்றனர் .
அதிகரித்து வருகின்ற படுகொலைகள்
இலங்கையில் நாள்தோறும் அதிகரித்து வருகின்ற படுகொலைகள் பின்னால் அரசியல் பின்புலங்கள் இருப்பதாக மக்கள் தமது சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர் .
அவ்வாறான நிலையில் தற்போது இந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்ட ஆறு பேரும் உரிய முறை விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு உரிய முறையில் தண்டனை வழங்கப்படுமா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு

பெண் மீது துப்பாக்கிச் சூடு
பெண் மீது துப்பாக்கிச் சூடு
தனிமையில் வசித்த பெண் மீது துப்பாக்கிச் சூடு , இலங்கை காத்தான்குடி பகுதியில் தனிமையில் மகுடன் வசித்து வந்த பெண் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் குறித்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் திடீரென அவர் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார் .
காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குறித்த இளம் பெண் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .
இளம் பெண் மீது துப்பாக்கி சூடு
32 வயதுடைய இந்த இளம் பெண் உடைய கணவர் ஒரு ஆஸ்திரேலிய நாட்டில் வசித்து வருவதாகவும் அவ்வாறான அந்த இளம் தாய் மீது மர்ம நபர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை மேற்கொண்டார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் தொடர்பாக உடனடியாக எதுவும் தெரியவில்லை.
துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்திய மர்ம நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடத்தில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தனிநபர் பகமை காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
எனினும் துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தியவர் தொடர்பான விடயங்கள் தற்பொழுது கிடைக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என விசாரிக்க படுகிறார்கள் .
கூலிக்கு படுகொலை துப்பாக்கி சூடு
கூலிக்கு படுகொலையினை இவர் மேற்கொள்ள முயன்றாரா அல்லது இவரது தனிப்பட்ட பகைமை காரணமாக மேற்கொண்டாரா என்பது தொடர்பாக பல்வேறுபட்ட விடயங்கள் ஊடாக இந்த விசாரணங்கள் இடம் பெற்று வருகின்றன.
இலங்கையில் என்றும் இல்லாதவாறு படுகொலை கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் எகிறி காணப்படுகின்றது .
நாள்தோறும் அல்லது வாரத்தில் இரண்டுக்கு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இலங்கை எங்கும் காணப்படுகின்றது .
அமெரிக்காவில் இடம்பெறுகின்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போன்று இலங்கையிலும் தற்பொழுது காணப்படுவது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
இடம்பெற்று வருகின்ற விசாரணை பின்னரே முழுமையான விடயங்கள் தெரிய வருமென காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
துப்பாக்கி சூட்டை நடத்தியவருக்கு துப்பாக்கி எப்படி வந்தது என்பது தொடர்பாகவும் ,விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்ற இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு

சந்திரிகா வீட்டில் துப்பாக்கிச் சூடு
சந்திரிகா வீட்டில் துப்பாக்கிச் சூடு
சந்திரிகா வீட்டில் துப்பாக்கிச் சூடு , இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவிற்கு சொந்தமான ஹரஹலா தோட்டத்தில் தேங்காய் திருட முற்பட்ட திருடன் மீது அங்கு இருந்து வாயில் காவலாளி திடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினார்.
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
பொலிஸ் துப்பாக்கிச் சூடு
23 வயதுடைய இளைஞனே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார் .
அவசர சிகிச்சை மேலதிகமாக வழங்கப்பட வேண்டிய காரணத்தினால் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார் .
அதனை அடுத்து இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்திய 2 போலீஸ் காவலர்கள் காவலர்கள் தற்பொழுது கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் .
தேங்காய் திருட வந்தவர் மீது ஏன் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்த வேண்டும் என்ற கேள்வி இப்பொழுது எழுப்பப்பட்டுள்ளது .
இலங்கையில் காவல்துறையினர் வன்முறையாளர்கள்
இலங்கையில் காவல்துறையினர் வன்முறையாளர்கள் என தெரிவித்து அவர்கள் மீது உடனடியாக துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்துவது இயல்பான ஒரு விடயமாக காணப்படுகின்றது.
தேர்தல் இடம்பெற உள்ள இந்த காலப்பகுதியில் சந்திரிகாவின் வீட்டில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தேர்தலை விட மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது .
இது ஒரு திட்டமிடப்பட்ட சதியா அல்லது தவறுதலாக இடம்பெற்ற ஒரு விடயமா என்பது தொடர்பாகவே ,போலீசார் தற்பொழுது விசாரணை ஆரம்பித்து இருக்கின்றனர்.
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு

துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் , இலங்கை ஹரஹல்லா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
அத்துமறி நுழைந்த இவர் மீது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோஸ்தர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் .
அதன் பொழுது இந்த நபர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
காணி ஒன்றுக்குள் அத்துமீறி நுழைவு
தனியார் காணி ஒன்றுக்குள் அத்துமீறி முறை நுழைந்த பொழுது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த வாயில் காவலாளி துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விடயம் தொடர்பாக தற்பொழுது இலங்கை குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை பாதுகாப்பற்ற நாடாக காணப்படுவதையும் அடுத்தடுத்து இடம்பெறுகின்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதனால் ஏற்படுகின்ற படுகொலைகள் காயங்கள் என்பன மீளவும் அடுத்து உரைக்கின்றன.
ஆயுத கலாச்சாரத்தை கட்டுப்படுத்தி நாடு அமைதி வழியில் திரும்பி உள்ளதாக இலங்கை கூறி வருகின்ற பொழுதும் ,இவ்வாறான தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இலங்கை உலுக்கிய வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து அவசரகாலக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

பிறந்தநாள் நிகழ்வில் துப்பாக்கிச் சூடு
பிறந்தநாள் நிகழ்வில் துப்பாக்கிச் சூடு
பிறந்தநாள் நிகழ்வில் துப்பாக்கிச் சூடு, அமெரிக்காவில் பிறந்தநாள் நிகழ்வில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகியும், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக ,அமெரிக்கா காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர் .
அமெரிக்கா ஹம்தன் பகுதியில் பிறந்தநாள் நிகழ்வு ஒன்று இடம்பெற்று கொண்டிருந்த பொழுது, அங்கு ஒரு பந்தயம் வைக்கப்பட்டதாகவும், அந்த பந்தயத்தில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, திடீர் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் ஒருவர் பலியாகியம் , நால்வர் காயமடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
பிற்பகல் 7 50 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக நேரில் கண்ணுற்ற சாட்சிகள் தெரிவித்துள்ளனர் .
அதன் பொழுதே தமது அவசர சேவைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து ,அங்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் காவல்துறையினர் ,பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்
பந்தயம் இடம்பெற்று கொண்டிருந்ததாகவும் ,அதில் இடம்பெற்ற முரண்பாட்டை அடுத்தே இந்த துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் இடம் பெற்றதாக அங்கு கலந்து கொண்ட நேரடி சாட்சிகள் தமது கருத்துக்களை தெரிவித்தனர் .
நேரடி சாட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்த போலீசார் ,அவர்களை பிரதான சாட்சிகளாக வைத்து இந்த சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை முன் நகர்த்தி செல்கின்றனர் .
நாள்தோறும் இடம் பெற்று துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் நாள்தோறும் இடம் பெற்று வருகின்ற ,இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர் .
கடந்த ஆண்டு மட்டும் 17,000க்கு மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் இவ்வாறு சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதான புதிய புள்ளிவிவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
சட்டவிரோத ஆயுதப் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பொழுதும், சட்டமாக பெறப்பட்ட ஆயுதங்களை வைத்து ,இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம் பெற்ற வருவதான ,தகவல்களும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத் தக்கது.
- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா

- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்

- அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல பேச்சுவார்த்த நடத்துகின்றன என்கிறார் டிரம்ப்

- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- ஈரானை தாக்க அமெரிக்கா புதிய திட்டம்

துப்பாக்கிச் சூடு களுத்துறையில்
களுத்துறையில் துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு களுத்துறையில் ,களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது 8 வயது மகள் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (20) இரவு கட்டுகுருந்த புகையிரத நிலைய பொல வீதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீட்டினுள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுகுருந்த பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டு கொலை
குறித்த நபர் தனது 3 பிள்ளைகளுடன் தனது வீட்டில் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரி 56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Featured
துப்பாக்கிச் சூடு பெண் படுகாயம்
துப்பாக்கிச் சூடு பெண் படுகாயம்
துப்பாக்கிச் சூடு பெண் படுகாயம் ,மதவாச்சி மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண் மதிவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஹெட்டவீரகொல்லேவ பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய பெண் ஒருவரே காயமடைந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று (10) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகரிக்கும் துப்பாக்கி சூடு
இலங்கை அதிகரிக்கும் துப்பாக்கி சூடு தாக்குதல்களினால் மக்கள் மத்தியில் நாள் தோறும் ஒருவித அச்ச நிலை ஏற்பட்டுள்ளது .
கோட்டபாய ஆட்சி காலத்தில் ஆயுத வியாபாரத்தால் ஆவர் ஈடுபடடர் . வியாபாரம் மூலம் அதிக இலாபத்தை பெற்றார் .
சோமாலியா போன்றா நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை சேட்டு வந்தார் .
அவ்வாறு வழங்க பட்ட ஆயுதங்களை வைத்தே தற்போது இவ்விதமான கொலை குற்ற செயல்களில் ,மர்ம நபர்கள் ஈடுபட்டு வருவதாக மன்றம் கருத்துரைத்துள்ளது .
Featured
துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொள்ளையடிப்பதற்காக வந்த மூவரில் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்வதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்து கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்தவர்களிடம் கொள்ளையர்கள் பணத்தைத் திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த விளம்பரத்திற்கு அமைய, ருவன்வெல்ல பிரதேசத்தில் இருந்து கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய சிலர் வந்ததாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்து பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் அவர்களைச் சந்திக்கச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
அவர்களை நாரம்மல பகுதியில் உள்ள இடமொன்றுக்கு வருமாறு கூறிய கொள்ளையர்கள், அந்த இடத்தை அடைந்ததும் கொள்ளையர்கள் கூரிய ஆயுதங்களால் அவர்களது மோட்டார் வாகனத்தை தாக்கியுள்ளனர்.
இதன்போது, பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது, பொலிஸ் அதிகாரிகள் கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு கொள்ளையர்கள் தப்பியோடியதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கொள்ளையர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த இருவர், கொள்ளையர்களின் தாக்குதலால் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு இருவர் கைது
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு இருவர் கைது
எல்பிட்டிய – பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருவல பிரதேசத்தில் கடை ஒன்றின் முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (16) தல்கஸ்வல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றத்தை திட்டமிட்ட சந்தேகநபரும், அதற்கு உதவிய சந்தேக நபருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தல்கஸ்வல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இருவர் என தெரியவந்துள்ளது.
குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 03 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 11ஆம் திகதி பிடிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவல சந்தி பகுதியில் உள்ள கடையொன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் T-56 ரக துப்பாக்கியால் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
அம்பலாங்கொடை பொலிஸ் துப்பாக்கிச் சூடு
அம்பலாங்கொடை பொலிஸ் துப்பாக்கிச் சூடு
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடந்தோட்டை – பொனதுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பாதாள உலக உறுப்பினரான ‘சமன்கொல்லா’ என்ற அகம்பொடி சஜித் சமன் பியந்தவின் வீட்டின் மீதே இன்று (14) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் வீட்டின் சுவர் மற்றும் கதவுகளை பல தோட்டாக்கள் தாக்கியுள்ளதுடன், சம்பவத்தின் போது சமன்கொல்லாவின் தாயும் மூன்று சகோதரிகளும் உடனிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
மட்டக்குளிய அலிவத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு
மட்டக்குளிய அலிவத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு
மட்டக்குளிய அலிவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, அம்பலாங்கொடையில் நேற்று இரவு 8.35 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் வௌியாகியுள்ளன.
அம்பலாங்கொட, கலகொட, வெல வீதியில் அமைந்துள்ள கடையொன்றுக்கு அருகில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் மூவர் காயமடைந்திருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் டி 56 ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் செல்வது சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில், ஹலம்ப உதேஷ் மதுஷங்க என்ற பொடி மெந்திஸ் என்ற நபரும் மற்றும் தடல்லகே சித்தும் அங்ஜன என்ற சுது ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
லொகு சத்துர என்ற சத்துர மதுஷங்க, பத்தினி வசம் அகில மற்றும் சங்கமகே சம்பிக்க துஷார ஆகியோர் காயமடைந்து, தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிக்கு மீது துப்பாக்கிச் சூடு சந்தேக நபர் கைது
பிக்கு மீது துப்பாக்கிச் சூடு சந்தேக நபர் கைது
மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொணராகல, ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
இன்று (21) காலை 7.15 மணி அளவில் மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெட்டியாராச்சிகே டொன் சுஜித் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் வெல்லே சாரங்க என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உறவினர் என தெரியவந்துள்ளது
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு

மீகொட பொருளாதார மையத்தில் துப்பாக்கிச் சூடு
மீகொட பொருளாதார மையத்தில் துப்பாக்கிச் சூடு
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் நேற்று (11) இரவு கொள்ளையடிக்க வந்தவர்களே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆட்டுப்பட்டி தெரு பொலிஸில் அதிர்ச்சி சம்பவம்
ஆட்டுப்பட்டி தெரு பொலிஸில் அதிர்ச்சி சம்பவம்
ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்தின் சிறையில் இருந்த சந்தேகநபர்கள் இருவர், இனந்தெரியாத ஒருவர் வழங்கிய பால் பாக்கெட்டை அருந்தி சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு வழங்கப்பட்ட பால் பாக்கெட்டில் விஷம் கலந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதன்போது சந்தேக நபர்களில் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்ததுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிச் சென்றார்.
விசாரணையின் பின்னர், தம்பனை பகுதியில் வைத்து தப்பியோடிய துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் அவர் ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அதன்படி குறித்த சந்தேகநபருக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவரும் ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்தில் ஒரே சிறையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆட்டுப்பட்டி தெரு பொலிஸில் அதிர்ச்சி சம்பவம்
இவ்வாறானதொரு பின்னணியில், துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் காதலி நேற்று காலை ஆட்டுப்பட்டி தெரு பொலிஸாருக்கு வந்து சுகம் விசாரித்ததுடன் மற்றுமொரு சந்தேக நபரிடம் நலம் விசாரிக்க மேலும் ஒருவரும் அங்கு வந்துள்ளார்.
குறித்த நபர், சந்தேக நபர்களிடம் இரண்டு மீன் பாணையும், பால் பால் பாக்கெட்டினை கொடுத்து விட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், சந்தேக நபர்கள் இருவரும் மீன் பாண்களை சாப்பிட்டுள்ளனர்.
ஜிந்துபிட்டியவில் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு தம் கையில் வைத்திருந்த பால் பாக்கெட்டினை வழங்கியதாக துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் காதலி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அதைக் குடித்தவுடன் அவர் சுருண்டு விழுந்ததுடன், மற்றைய சந்தேக நபர் தரையில் விழுந்த பால் பாக்கெட்டை எடுத்து குடித்துள்ளார்.
இதனால் மயக்கமடைந்த சந்தேக நபர்கள், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த பால் பாக்கெட்டில் விஷம் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பால் பாக்கெட்டை கொடுத்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொள்ளையிட வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
கொள்ளையிட வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை பகுதியில் உள்ள ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் சொத்துக்களை கொள்ளையிட வந்த மூவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (26) காலை சந்தேகநபர்கள் மூவரும் சொத்துக்களை கொள்ளையிட முற்பட்ட போது, அதனை தடுக்க சென்ற ரயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒருவரை சந்தேகநபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்க முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு அதிகாரி, சந்தேக நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
கொள்ளையிட வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
இந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், மற்றைய இரு சந்தேகநபர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்தவர் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.