தபால் திணைக்களத்தின் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

தபால் திணைக்களத்தின் எச்சரிக்கை

தபால் திணைக்களத்தின் எச்சரிக்கை

தமது உத்தியோகபூர்வ இணையத்தளம் எந்தவொரு இணையப் பரிவர்த்தனைகளுக்கும் உதவவில்லை என இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்று போலியான இணையத்தளத்தை உருவாக்கி பொதுமக்களின் கடனட்டை மற்றும் வரவட்டைகளின் தகவல்களைப் பெற்று மோசடிகள் இடம்பெற்றுவருவதாக அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமது இணையதளம் இதுபோன்ற எந்த ஒன்லைன் பரிவர்த்தனைக்கும் வசதி செய்யவில்லை என்றும், மோசடி செய்பவர்கள் தங்களது இணையத்தள முகவரியை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் இலங்கை தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தபால் திணைக்களத்தின் எச்சரிக்கை

முன்பதிவு செய்யப்பட்ட பொதிகளுக்கு சிறிய தொகையை செலுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட இணையதளம் மூலம் ஒன்லையினில் குறுஞ்செய்தி அனுப்பி இந்த மோசடி இடம்பெறுவதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், இந்தச் செயலைச் செய்யும் மோசடியாளர்களுக்கு இரையாகிவிட வேண்டாம் என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் தபால் திணைக்களம், இது தொடர்பாக ஏதேனும் முறைப்பாடு, விசாரணை அல்லது விளக்கங்கள் தேவைப்பட்டால் 1950 என்ற அவசர அழைப்பு பிரிவு அல்லது அஞ்சல் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பச்சை குத்தியவர்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

பச்சை குத்தியவர்களுக்கு எச்சரிக்கை

பச்சை குத்தியவர்களுக்கு எச்சரிக்கை

இதன் காரணமாக பச்சை குத்தியவர்களிடம் இருந்து இனி இரத்த தானம் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஸ்மன் எதிரிசிங்க கூறியுள்ளார்.

இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பச்சை குத்தும் மையங்கள் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை பின்பற்றாததால் ஆபத்து மேலும் தீவிரமடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இரத்த தானம் செய்பவரின் இரத்தம் கூறுகளாக பிரிக்கப்படுவதால், இரத்தம் பெறுபவர்களின் உயிருக்கு தேவையற்ற ஆபத்துக்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் தேசிய இரத்தமாற்ற சேவை தீர்மானித்துள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.

இதற்கமைய, பச்சை குத்துதல், தோல் குத்துதல் போன்ற செயல்களைச் செய்பவர்கள், ஒரு வருடத்திற்கு இரத்த தானம் செய்பவர்களாகத் தொடர்பு கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுளள்து

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்ற பல நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தமது தனிப்பட்ட விபரங்களை வெளிநபர்களுக்கு வழங்கும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் எச்சரித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பொது மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது தனிப்பட்ட தகவல்களை அறியாதவர்களுக்கு வழங்க வேண்டாம்.

குறிப்பாக தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம், சாரதி அனுமதி பத்திர இலக்கம், அவற்றின் பிரதிகளுடன், வங்கி கணக்கு விபரங்களையும் வழங்க வேண்டாம்.

மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

விசேடமாக வங்கி கணக்கு தொடர்பில் குறுந்தகவல் ஊடாக பெறப்படும் OPT இலக்கத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் யாருக்கும் வழங்க வேண்டாம்.

பல்வேறு விதமான கவர்ச்சிகரமான சலுகைகள் வரலாம், அவற்றால் ஏமாற வேண்டாம் என பொலிஸார் சார்பில் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

இவ்வாறான மோசடியாளர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக உங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள்.

எனவே இது போன்ற நபர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.

உங்களுக்கு அடையாளம் தெரியாதவர்களிடம் சிக்கி சொத்துக்களை இழக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை நாட்டினுள் 27 துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடாக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், இந்த துப்பாக்கி பிரயோக சம்பங்கள் ஊடாக 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No posts found.
கடும் புயல் மழை மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கடும் புயல் மழை மக்களுக்கு எச்சரிக்கை

கடும் புயல் மழை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் கடும் புயல் மற்றும் மழை பொழிந்த வண்ணம் உள்ளது .

வங்களா விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக ,இந்த சீரற்ற காலநிலை தொடர்கிறது .

இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி வேண்ட படுகிறது .

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியா எச்சரிக்கை

இலங்கையில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியா எச்சரிக்கை

இலங்கையில் வசிக்கும் இந்தியா மக்களை மிக விழிப்பாக இருக்கும் படி கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.

இலங்கையில் கோட்டபாய மீள நாடு செல்ல உள்ள ,நிலையில் அங்கு போராட்டம் வெடிக்கும் என எதிர் பார்க்கும் ,இந்திய இவ்வேளை இந்தியர்கள் குறிவைத்து தாக்க பாடலாம் என எதிர் பார்க்கிறது.

அதனால் இலங்கை வாழ் இந்தியா மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கும் படி எச்சரிக்கை பட்டுள்ளனர் .

இந்தியாவின் இந்த அதிரடி அறிவிப்பின் பின்னால் ஏதோ இலங்கையில் நடக்க போவதை காண்பிக்கிறது .

    Posted in இலங்கை செய்திகள்

    மக்களுக்கு அவசர எச்சரிக்கை

    மக்களுக்கு அவசர எச்சரிக்கை

    வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

    அனர்த்தங்கள் நிகழுமாயின் அதுபற்றி துரித தொலை பேசி இலக்கத்தின் ஊடாக நிலையத்திற்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    துரித தொலைபேசி இலக்கம் 117 என்பதாகும்.

    10 மாவட்டங்களைச் சேரந்;த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக .
    அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

      நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை
      Posted in இலங்கை செய்திகள்

      நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை

      நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை

      நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டு மக்கள் இந்நோய்க்கு வேகமாக பலியாகி வருவதாக டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

      20-45 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 55 வீதமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

      இவ்வருடம் பதிவாகியுள்ள 476,677 டெங்கு நோயாளர்களில் 25 வீதமானோர் 5 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட பாடசாலைகளை மாணவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

      மேலும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் மூன்று நாட்களில், 806 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானோர் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆவர்.

      நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை

      எவ்வாறாயினும், நாடு முழுவதும் டெங்கு நோய் பரவி வருவதால், நாட்டின் 67 வலயங்கள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

      தற்போதைய மழை காலத்துடன் இந்த அபாய வலயங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

      இதேவேளை, டெங்கு நுளம்பு பெருகும் இடங்களான, அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் வளாகங்கள், பாடசாலைச் சூழல்கள், கட்டட நிர்மாணப் பகுதிகள்,

      என்பனவற்றை உடனடியாகச்
      சுத்தப்படுத்தாவிட்டால் நிலைமை மேலும் அபாயகரமானதாக மாறக் கூடும் என்று அவர் சுட்டிக்கட்டினார்.

        Posted in இலங்கை செய்திகள்

        மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

        மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

        இலங்கையில் பொதுவில் முதல் காலி வரையிலான கடல் பகுதியில் புயல் வீசுவதால் மீனவர் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.

        இந்த புயலானாது மணிக்கு எழுபது கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும், இதனால் கடலில் கொந்தளிப்பு காணப்படலாம் என தெரிவிக்க படுகிறது.

        கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்ட பட்டுள்ளது.

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டனில் வற்றிய நீர் நிலைகள் மக்களுக்கு எச்சரிக்கை

          பிரிட்டனில் வற்றிய நீர் நிலைகள் மக்களுக்கு எச்சரிக்கை

          ,

          பிரிட்டன் ; பிரிட்டன் நாட்டில் கடந்தவாரம் இடம்பெற்ற அகோர வெப்ப நிலை காரணாமாக நீர் நிலைகள் வற்றிய நிலையில் காட்சியளித்தன .

          பிரிட்டனில் 1976 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெப்ப நிலையின் பின்னர் கடந்த வாரம் இடம் பெற்ற வெப்பத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

          பிரித்தானியாவில் இடம்பெற்ற அகோர வெப்ப நிலை காணமாக இரண்டு நாட்களில் 13 பேர் பலியாகி இருந்தனர் ,மேலும் பலர் அதிக வெப்ப நிலை

          தாக்கத்தினால் பாதிக்க பட்டு இருந்தத்துடன் நீர் நிலகைகள் வற்றிய நிலையில் காட்சியளித்தன .

          பிரிட்டனில் வற்றிய நீர் நிலைகள் மக்களுக்கு எச்சரிக்கை

          இவ்விதமான சூழல் எதிர் காலத்தில் மேலும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது .

          வெப்பநிலை அதிகரித்தால் பூமியில் வாழும் உயிரினங்கள் அதிக வெப்பத்தை
          ஏற்றுக்கொள்ள முடியா நிலையில் மரணிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் நீர்

          நிலைகள் வற்றிவிட்டால் உயிரினம் வாழமுடியா சூழல் ஏற்படும் என்கின்ற மிரட்டல் கணிப்புக்கள் மக்களை பீதியில் உறைய வைத்துள்ளன .

            Posted in இலங்கை செய்திகள்

            எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

            நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

            கொழும்பு, காலி, களுத்துறை, நுவரெலியா, மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இதுபற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.

            கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புளத்கொஹுபிட்டிய, வரக்காபொல ஆகிய நகரங்களுக்கும், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல, பிட்டபெத்தர ஆகிய பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல்

            விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் கிரி-அல்ல, பெல்மடுல்ல, அயகம, நிவித்திகல ஆகிய பிரதேசங்களிலும் மண்சரிவு அபாயம் காணப்படுகிறது.

            இரத்தினபுரி மாவட்டத்தின் அலபாத்த, கலவான, குருவிட்ட, எஹலியகொட ஆகிய நகரங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்

            விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு பற்றிய அறிகுறிகள் தென்படுமாயின் அங்குள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வது அவசியமாகும். இதுபற்றிய

            மேலதிக தகவல்களை 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

            நாட்டின் பல்வேறு ஆறுகளினதும் நீர்மட்டம் அதிகரித்திருக்கிறது. மாதுலுஓயா, குடாகங்கை என்பனவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் பத்தேகம, வெலிவிட்ட

            , நியாமகம, நெலுவ, அக்மீமன, நாகொட, அல்பிட்டிய, போபே, போத்தல ஆகிய இடங்களின் தாழ்நிலப் பிரதேசங்களில் சிறு வெள்ளம் ஏற்படலாம். நில்வளா கங்கை – அளுத்கம – கல்ஹாகொட ஆகிய பகுதிகளில் பெருக்கெடுக்கலாம்.

            குக்குலே கங்கை, தெதுறுஓயா ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் பிரதேச வாசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை,

            நாட்டில் தற்சமயம் நிலவும் மழையினால் கடல் பிரதேசம் கொந்தழிப்பாக இருக்கும் எனவும் இதனால் கடலுக்குச் செல்வோர் எச்சரிக்கையாக
            இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

              Posted in இலங்கை செய்திகள்

              மூன்று மாதத்தில் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் – அபாய எச்சரிக்கை

              மூன்று மாதத்தில் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் – அபாய எச்சரிக்கை

              இலங்கையில் எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் நாடெங்கும் . உணவு பற்றாக்குறை

              ஏற்பட்டு ,உணவு பஞ்சம் ஏற்படும் எனவும் ,இதனால் பல ஆயிரம் மக்கள் பட்டியணியால் தவிக்கும் நிலை ஏற்பட போகிறது என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

              மத்திய வங்கியின் கயானாவை காலி செய்த, பசில் தலைமையிலான குழுவினரின்

              செயல் பாட்டினால் இவ்விம்மன நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது

              தற்கால நெருக்கடி நிலை தொடர்ந்து பயணித்தால் ,இலங்கை சோமாலிய போன்ற நாடாக மாற்றம் பெறும்
              என எதிர் பார்க்க படுகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                மண்சரிவு அபாயம் ஆறு மாவாட்டங்களுக்கு எச்சரிக்கை

                மண்சரிவு அபாயம் ஆறு மாவாட்டங்களுக்கு எச்சரிக்கை

                இலங்கையில் நிகழ்கால கலாநிலை காரணமாக ஆறு மாவாட்டங்களுக்கு மண்சரிவு

                அபாயம் ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது

                இதன் பிரகாரம் Ratnapura, Kalutara, Kandy, Kegalle, Matara and Nuwara Eliya. பகுதியில் இந்த


                அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என்பதாக தெரிவிக்க பட்டுள்ளது

                  Posted in Uncategorized

                  உக்கிரேனுக்குஆயுதம் வழங்குவதை நிறுத்துக – பிரான்சுக்கு ரசிய ஏச்சரிக்கை

                  உக்கிரேனுக்குஆயுதம் வழங்குவதை நிறுத்துக – பிரான்சுக்கு ரசிய ஏச்சரிக்கை

                  உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்துள்ள வேளை மேற்கு நாடுகள் ஆயுதங்களை அள்ளி


                  வழங்கி வருகின்றன ,இவ்வேளை பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய

                  புட்டீன் உக்கிரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்த்துளளார் ,


                  அவ்வாறு வழங்கினாள் விளைவுகளை சநதிப்பீர்கள் என அவர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized உலக செய்திகள்

                    இஸ்ரேலுக்கு ரசியா எச்சரிக்கை – முறுகல் உச்சம்

                    இஸ்ரேலுக்கு ரசியா எச்சரிக்கை – முறுகல் உச்சம்

                    உக்கிரேனுக்கு இஸ்ரேல் அரசு ஆயுதங்களை வழங்கி வருகிறது ,இஸ்ரேலின் இந்த

                    முடிவிற்கு ரசியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது

                    தொடர்ந்து இஸ்ரேல் இவ்விதம்ஸ் செயல்பட்டால் அது விளைவுகளை சந்திக்கும் என ரசியா எச்சரித்துள்ளது .


                    உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுறும் நிலையில் உள்ள போதும், சர்வதேச முக்கிய நாடுகள்


                    ஆயுதங்களை அள்ளி வழங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      1901 பேருக்கு பொலிசார் எச்சரிக்கை

                      1901 பேருக்கு பொலிசார் எச்சரிக்கை

                      சுகாதார விதிமுறைகளை மீறிய மேலும் 1901 நபர்கள் பொலிசாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

                      மேல் மாகாணத்தில் ,சுகாதார வழிகாட்டி தொடர்பான விதிமுறைகள் உரிய வகையில் பொது

                      மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்றதா? என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே பொலிசார் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.

                      இந்த நடவடிக்கையின் போது 9,793 பேர் நேற்று (02) பரிசோதிககு உட்படுத்தப்பட்டனர்.

                      4,121 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3,276 முச்சக்கர வண்டிகளும் இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

                      இந்த நடவடிக்கையில் 10,199 பொலிசார் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      சொத்து சேர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை

                      சொத்து சேர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை

                      சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்ப்பவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க, பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

                      அவ்வாறானவர்கள் தொடர்பான நியாயமான சந்தேகங்கள் இருப்பின் மாத்திரம் 1917 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடத்தில் கோரியுள்ளனர்.

                      இந்த அவசர தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணிநேரமும் தகவல்களை வழங்க முடியும்.

                      எவ்வாறாயினும், தனிப்பட்ட விரோதங்கள் காரணமாக குறித்த இலக்கத்தினை தவறான முறையில் பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

                        Posted in இலங்கை செய்திகள்

                        சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு எச்சரிக்கை

                        சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு எச்சரிக்கை

                        மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்களை பரிசோதிப்பதற்காக பொலிசாரினால் நேற்று (21) விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

                        இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 2,910 ஆகும். முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை 2,640 ஆகும்.

                        இந்த வாகனங்களில் பயணித்த 7,285 பேரில் சுகாதார விதிமுறைகளை மீறிய 1,901 நபர்கள் எச்சரிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் ஒமிக்ரோன் எச்சரிக்கை

                          இலங்கையில் ஒமிக்ரோன் எச்சரிக்கை

                          நாட்டில் ‘ஒமிக்ரோன் வைரஸ் திரிபு’ இனங்காணப்பட்டிருப்பதனால் பண்டிகைக் காலத்தில்

                          பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரான

                          விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹோரத் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

                          இம்மாதம் மற்றும் ஜனவரி மாதங்களில் மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதில்

                          மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            கடலில் கொந்தளிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

                            கடலில் கொந்தளிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

                            இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

                            அடுத்த 24 மணித்தியாலத்துக்கானஇ நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

                            2021 நவம்பர் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

                            மழை நிலைமை:

                            பெந்தோட்டையிலிருந்து காலிமற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான

                            கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                            நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் குறிப்பாக பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                            காற்று :

                            திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன்,

                            நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும்.

                            நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

                            திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளில்

                            காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                            கடல் நிலை:

                            திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

                            இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              கடைகளுக்கு எச்சரிக்கை – மீறினால் அனுமதி இரத்து

                              கடைகளுக்கு எச்சரிக்கை – மீறினால் அனுமதி இரத்து

                              பொதுமக்கள் முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுகிறார்களா என்பதை

                              பரிசீலிப்பதற்காக மேல் மாகாணத்தில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

                              அதன்படி, பஸ்களில் இருக்கைகளுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது, முகக்கவசம் அணியாமை, குளிரூட்டப்பட்ட பஸ்களுக்கு நடமாடும் வியாபாரிகள் நுழைதல் போன்ற

                              நடடிக்கைகளை ஆராய்வதற்காக, இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

                              நேற்று (14) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையிலான இரண்டு மணிநேர சோதனை

                              நடவடிக்கையில், 451 பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

                              318 பஸ் ஊழியர்கள், 65 குளிரூட்டப்பட்ட பஸ்கள் மற்றும் 505 வர்த்தக நிலையங்களுக்கு சுகாதார

                              வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.