Tag: இலங்கை
பேரூந்துகள் நேருக்கு நேர் மோதல் பலர் காயம்
பேரூந்துகள் நேருக்கு நேர் மோதல் பலர் காயம்
எஹலியகொட ;இலங்கை எஹலியகொட, கெட்டஹெட்ட பகுதியில் நேற்று அரச பேரூந்து மாற்றும் தனியார் பேரூந்து நேருக்கு நேருக்கு நேர் மோதி கொண்டன.
இவ்வாறு நேருக்கு நேர் மோதிய பேரூந்துகளில் பயணித்த பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர்
இந்த பேரூந்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பயணிகள் அவிஸ்ஸாவளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளனர் .
முடக்கு வளைவு பகுதியில் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றை ,அரச பேரூந்துடன் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது .
அரச பேரூந்து சாரதி முடக்கு பகுதியில் பேரூந்தை வேகமாக செலுத்தி சென்றமை இந்த விபத்துக்கு காரணமாக மைந்துள்ளது .
பேரூந்தின் வேகத்தை கட்டு படுத்த முடியாது திணறியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
குறித்த பேரூந்துகள் நேர் எதிர் மோதல் விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
காவல்துறையால் நான்கு பேர் கைது
காவல்துறையால் நான்கு பேர் கைது
இலங்கை ;இலங்கை காவல்துறையினர் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்ற சாட்டில் நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
எரிபொருள் நிலையங்களில் குவிந்த இவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஊழியர்களுக்கு இடையாறு விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் .
அவ்விதம் இடையூறு விளைவித்த நான்கு பேரும் கைது செய்ய பட்டுள்ளதுடன் தொடர் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
நாள் கணக்கில் கியூவில் காத்திருந்தும் எரிபொருள் இன்றி மக்கள் வீடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது .
காவல்துறையால் நான்கு பேர் கைது
இவ்விதம் கோபமடையும் மக்களுக்குள்
மோதல் இடம்பெறும் நிலையும் ஏற்பட்டு விடுகின்றது .
ஆளும் அரசு தனது நாட்டை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது ,இதனால் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது .
இந்த நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு எழுந்திட இலங்கையால் முடியாது உள்ளது .
அரசுக்கு எதிராக நடத்த படும் போராட்டங்களில் கலந்து கொள்ளும் மக்களுக்கும் நூற்று கணக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.
இலங்கையில் மதுபான விற்பனை வீழ்ச்சி
இலங்கையில் மதுபான விற்பனை வீழ்ச்சி
இலங்கை ;இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது முப்பது வீதத்தினால் மதுபான விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது .
மக்கள் வேலைவாய்ப்பு இழந்து சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்து வரும் நிலையில் ,குடி பிரியர்கள் குடிப்பதற்கு பணம் இன்றி தவிப்பதால இந்த மதுபான விற்பனையில் திடீரென பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .
மதுபான விற்பனை வீழ்ச்சி அடைந்திருப்பதால் அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது .
மதுபான விற்பனை மூலாமே அரசு அதிகளவு வரி சம்பாதித்து வருகிறது .
இவ்வாறு அறவிடப்படும் வரி மூலமே நாட்டை நடத்தி வருகிறது பல நாடுகள் .
அவ்விதமான முக்கிய வருமானத்தை அதிகமாக பெற்று தரும் புகைத்தல் ,மற்றும் மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்திருப்பது அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது .
மீளவும் மதுபானத்தை குடி மகன்கள் குடித்திட இயல்பு நிலைக்கு நாடு திரும்பினால் மட்டுமே மதுபான விற்பனை மீள சூடு பிடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
எரிபொருள் விநியோகம் இயல்பு நிலைக்கு திருப்பினால் மூட பட்ட அல்லது முடங்கிய தொழில் துறைகளை மீள இயங்கும் நிலை ஏற்படும் .
அதன் பின்னர் வருமானத்தை அரசு மற்றும் மக்கள் பெற்று கொள்ளும் நிலை ஏற்படும் .
இலங்கை வந்தடைந்த இந்தியா தூதுக்குழுவிடம் சிக்கிய இலங்கை
இலங்கை வந்தடைந்த இந்தியா தூதுக்குழுவிடம் சிக்கிய இலங்கை
கொழும்பு ;இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து இலங்கைக்கு உதவும் முகமாக இந்தியா தூதுக்குழு இலங்கை வந்தடைந்துள்ளது .
இந்தியா தூதுக்குழு
இந்த விசேட தூதுக்குழுவில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா,இந்திய பொருளாதார உறவுகள் தொடர்பான
செயலாளர் அஜய் சேத், த பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் முக்கிய அதிகாரிகள் பங்கெடுத்துள்ளனர் .
ஆளும் ஜனாதிபதி கோட்டபாய ,மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை சந்தித்து பேச்சில் ஈடுபடவுள்ளது .இந்தியா வெளியுறவு அமைச்சர் தலைமையில் மேற்படி குழு வருகை தந்துள்ளது .
இலங்கை வந்தடைந்த இந்தியா தூதுக்குழு இலங்கை ஜனாதிபதி கோட்டபாய பிரதமர் விக்கிரமசிங்க சந்திப்பு
இலங்கை வந்தடைந்துள்ள இந்திய விசேட குழுவினர் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தனிப்பதற்குரிய வேலைகளை இந்த இந்தியா தூதுக்குழு செயல்முறை படுத்தும் .
ஆனால் அதற்கு கைமாறாக இலங்கையிடம் கச்சத்தீவை இந்தியா குத்தகைக்கு 99 வருடங்களுக்கு மீளப்பெற்று கொள்ளும் பேச்சுக்களும் இதில் இடம் பெற்று உள்ளதாக முக்கிய அரசியல்வாதிகள் தெரிவித்து வருகின்றனர் .
மிக ஆபத்தான நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு சீனாவின் பாணியில் பணத்தை அள்ளி வழங்கி இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்தியா முனைகிறது .
அவ்வாறான நகர்வுகள் இன்று இங்கே வந்த இந்தியா விசேட குழுவினர் பேசியுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது .
இந்தியாவுக்கு ஜனாதிபதி கோட்டபாய நன்றி
இலங்கை சந்தித்து வரும் மிக நெருக்கடியான கால கட்டத்தில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகின்றது .அவ்வாறான அவசர புரிந்துணர்வு உதவிகளுக்கு இலங்கை மக்கள் சார்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார் .
இலங்கை வந்தடைந்த இந்தியா தூதுக்குழுவிடம் சிக்கிய இலங்கை
இந்தியா சும்மாவா உதவி செய்கிறது என்பதற்கு இன்று உள்ளே இடம்பெற்ற பேச்சுக்கள் மூலம் கொழும்பு புரிந்திருக்கும்.
சோழியன் குடும்பி சும்மாவா ஆடும் என்பதும் தமிழக மீனவர்கள் மீது தேவையற்று கைது செய்திட முனைந்து இன்று இடியாப்ப சிக்கல்லுளுக்குள் இலங்கை சிக்கியுள்ளது .
மேலும் இலங்கையை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அணைத்து நகர்விலும் இந்தியா ஈடுபட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
குறுந்தூர் மலையில் புத்தகோயில் அமைப்போம்
குறுந்தூர் மலையில் புத்தகோயில் அமைப்போம்
இலங்கை தமிழர் தாயக பகுதியான குறுந்தூர் மலையில் புத்த விகாரைகள் இருந்தமைக்கான வரலாற்று சான்றுகள் உள்ளதாக மகாவம்சம் கூறுவதாக அமைச்சர் சரத் வீரசேகரா தெரிவித்துள்ளார்,
அமைச்சர் சரத் வீரசேகராவின் இந்த இனவாத கருத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது இந்த கருத்தின் பின்னர் தமிழர்கள் பெரும் போராட்டங்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது.
ராஜபக்சே ஆட்சியில் தமிழர் தேசம் சிங்கள மயமாக்க பட்டு வருவதும் ,தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை நிகழத்தப்பட்டு
தமிழ் மண் அபகரிக்க பட்டு சென்ற வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது
மகாவம்சத்தை மைய படுத்தி இங்கு புத்த கோயில் நிறுவும் நடவடிக்கை தீவிர படுத்த படும் என்பதாக இவரது மறை பொருள் பேச்சு அமைய பெற்றுள்ளது .
விவசாயிகளுக்கு இந்தியாவின் உரம்
விவசாயிகளுக்கு இந்தியாவின் உரம்
தேசிய சுற்றாடல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தமது கருத்துக்களை முன்வைக்குமாறு கேட்டுக் கொள்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்
இந்தியாவிடமிருந்து கிடைக்க உள்ள உரங்கள் அடுத்த மாதம் 6ஆம் திகதியளவில் இலங்கையை வந்தடையவுள்ளன.
அத்துடன், ஜூலை மாதம் 15ஆம் திகதிக்குள் இந்த உரங்களை விவசாயிகளுக்கு விநியோகிக்க முடியும் எனறும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் போகத்திற்குத் தேவையான உரம் அடுத்த மாதம் 6ம் திகதியளவில் இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெரும்போகத்திற்குத் தேவையான உரத்தை விநியோகிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண்ட
நாடொன்றை உருவாக்குவது இதன் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி
- பென்டகன் இணையதளத்தில் அமெரிக்க இராணுவ இறப்பு எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டது
- பஹ்ரைன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு
- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி
- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது
- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது
- ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் போக்குவரத்து தடை
- வத்தளையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தொடங்கியது
- ஈரான் முழுதும் தாக்குவோம் டிரம்ப் மிரட்டல்
- பிரிட்டன் தளங்களிலிருந்து அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களைப் பறக்க ஈரான் எச்சரிக்கை
- நீதிபதி படுகொலை அதிரும் பாகிஸ்தான்
- ஐந்து வீரர்களுடன் சென்ற செக் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஒருவர் பலி
இலங்கையில் மருந்து தட்டுப்பாடு
இலங்கையில் மருந்து தட்டுப்பாடு
இலங்கையில் சுகாதாரத்துறையில் முகாமைத்துவம் செய்ய முடியாத அளவுக்கு பாரிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை.
இவ்வாறான சூழ்நிலையில சுகாதார அமைச்சு இந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் இல்லை என்று சுகாதார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்…
இந்த நேரத்தில், சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து குழுக்களையும் ,விசேட வைத்திய நிபுணர்களையும் இந்த நிர்வாகத் துறையில் இணைக்க முடியும்.
பங்குதாரர்கள் அனைவரும் இதை தமது பொறுப்பாகக் கருதி, கொவிட் காலத்தில் இருந்தே ஒன்றாகச் செயல்பட்டு வருகின்றனர். இது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்றும் தெரிவித்தார்.
மருந்து வகைப்படுத்தலில் 14 வகையான மருந்துகள் பிரத்தியேகமாக இனங்காணப்பட்டுள்ளன. அவை மிகவும் முக்கியமான மருந்து வகைகள்.
இந்த சந்தர்ப்பத்தில் அவ்வகையான மருந்து வகைகள் நாட்டில் இல்லை என்றும் அவற்றிற்கு தட்டுப்பாடு காணப்படுவதாக பேசப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், அந்த 14 வகையான மருந்துகளுக்கும் இப்போதைக்கு தட்டுப்பாடு இல்லை என்று தன்னால் தெளிவாகக் கூற முடியும். இதில் ஒரு வகையான மருந்துக்கு மாத்திரம் தட்டுப்பாடு காணப்பட்டது.
அந்த தட்டுப்பாடும் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுவருகிறது. இந்த மருந்துகளில் 25,000 நாளை நாட்டுக்கு கிடைக்க உள்ளன.
அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் 100,000 மருந்து சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
எனவே, அந்த 14 வகையான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இருப்பதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறுவது தவறானது. 664 அத்தியாவசிய மருந்துகள் காணப்படுகின்றன.
அவற்றில் 51 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருந்ததுடன். அவை நேற்றைய தினம் 49 ஆக குறைந்துள்ளது.
இலங்கையில் மருந்து தட்டுப்பாடு
பிரச்சினைகள் இன்னும் சில நாட்களில் தீர்க்கப்படும். 49 அல்லது 50 வகையான மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் எங்களிடம் இருக்கின்றன.
வைத்தியசாலைக்கு வரும் கடுமையான நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலைக்கு நாம் தள்ளப்படவில்லை என்பதை மிகவும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
விசேட வைத்தியர்கள் உட்பட சுகாதாரத் துறையில் பல பங்குதாரர்கள் ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டிய அமைச்சர், இதன்போது மருந்துகளை கொள்வனவு செய்வதில் அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
அத்துடன், சுகாதாரத்துறையில் மருந்துகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் விஞ்ஞான ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களின் உயிருடன் விளையாடுவதற்கு தாம் தயாரில்லை.
இலங்கையின் சுகாதாரத் துறை வீழ்ச்சியடையாமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் உலகெங்கிலும் உள்ள பல நண்பர்கள் இந்த நேரத்தில் பெருமளவில் நன்கொடைகளை வழங்க இணங்கியுள்ளனர்.
நாங்கள் ஆண்டு தோறும் சுமார் 260 மில்லியன் டொலர்களை மருந்து மற்றும் ஏனைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு செலவழிக்கின்றோம்.
இதுவரை பல்வேறு துறைகளில் இருந்தும் 439 மில்லியன் டொலர்களை நாங்கள் பெற்றுள்ளோம். நேற்று அவுஸ்திரேலிய அரசாங்கம் சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய உணவுக்காக மேலும் 50 மில்லியன் டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டது.
அதன் பின்னர் அடுத்த ஒன்றரை வருடத்திற்கு கண்டிப்பாக அந்நியச் செலாவணி பற்றாக்குறையில் இருந்து மருந்து கொண்டு வர முடியாது என்ற கதை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, அந்த சவாலுக்கு முகம்கொடுக்க நமது நண்பர்கள் உதவியிருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு 3 மாதங்கள் ஆகும். ஆனால், அது தற்போது 2 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளன.
இந்த 6 வாரங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் வரைதான் இந்தக் கஷ்டங்கள் இருக்கும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளினால் விசேட வைத்தியர் தொடக்கம் சிற்றூழியர் வரை போக்குவரத்துப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.
இது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் விசேட வைத்தியர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
தற்போது போக்குவரத்து அமைப்பு சாதகமான நிலையில் உள்ளதாகவும் இந்த வாரத்தில் தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நாடளாவிய ரீதியில் உள்ள 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதாரத் துறையின் விசேட வைத்திய நிபுணர்கள் தொடக்கம் தொழிலாளர்களுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதற்கு
வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
பேலியகொட மெனிங் சந்தையில் ஒருவர் சுட்டு கொலை
பேலியகொட மெனிங் சந்தையில் ஒருவர் சுட்டு கொலை
இன்று மதியம் அளவில் பேலியகொட மெனிங் சந்தையில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்குரிய காரணம் தெரியவரவில்லை ,இரத்த வெள்ளத்தில் தோய்ந்த நிலையில் சடலம் மீட்க பட்டு மருத்துவமனையில் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
பேலியகொட மெனிங் சந்தையில் நபர் படுகொலை
இலங்கையில் நாள்தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது ,இந்த துப்பாக்கி சூட்டுக்கு பின்புலத்தில் அரசியல்வாதிகள் மறைந்திருப்பதாக சந்தேகிக்க படுகிறது.
பேலியகொட மெனிங் சந்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு படுகொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
குறித்த மெனிங் சந்தையில் சந்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு படுகொலை காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .
நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடுவோம் -காளியம்மாள்
நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடுவோம் -காளியம்மாள்
நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடுவோம் என நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சீறும் சிறுத்தை காளியம்மாள் தெறிக்க விட்டுள்ள பேச்சு வைரலாகி வருகிறது .
நாம் தமிழர் காளியம்மாள் உணர்ச்சி பறக்கும் கேள்விக்கும் அதற்கு பதில் வழங்க முடியா திணறும் திரவிட முன்னேற்ற கழகம் அதன் உறுப்பினர்களை வெளுத்து வாங்கியுள்ளார் நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளியம்மாள் .
மேடையில் கண் கலங்கிய காளியம்மாள் video
மீனவ பெண்ணை கற்பழித்து தீ வைத்து அதன் பின்னர் கல்லை போட்டு கொன்றார்களே அந்த பெண்ணுக்கு இரண்டு லட்சம் ருபாயா இழப்பீடு ..?காளியம்மாள் கேள்விக்கு பதில் என்ன ..?
இது தான் தமிழகமா ..? இது தான் மனு நீதியா ..? ஆம் காளியம்மாள் கோபமும் கேள்வியும் அறம் சார்ந்த ஒன்று தான் என்றால் அது மிகையாகாது .
எரிபொருள் வழங்கும் நடைமுறை
சுகாதாரப் பணியாளர்களுக்குள் மோதல் ஏற்படும் வாய்ப்பு
சுகாதாரப் பணியாளர்களுக்குள் மோதல் ஏற்படும் வாய்ப்பு
எரிபொருள் வழங்கும் நடைமுறை
சுகாதாரப் பணியாளர்களுக்குள் மோதல் ஏற்படும் வாய்ப்பு
எரிபொருள் நெருக்கடி காரணமாக சுகாதாரப் பணியாளர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத காரணத்தினால் வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகள் உள்ளிட்ட பல வைத்திய சேவைகள் தாமதமாக நடைபெறுவதாக சுகாதார அமைச்சின்
அதிகாரிகளும், அரச வைத்திய உத்தியோகத்தர்கள் சங்கமும் (GMOA) இணைந்து முன்வைத்த கருத்திற்கமைவாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும் பிரத்தியேகமாக எரிபொருள் கொடுப்பனவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் இணைந்து முன்னெடுத்த இந்த நடைமுறையில் சுகாதாரப் பணியாளர்கள் தங்களின் கடமைகளை நிறைவேற்ற பெரிதும் உதவியாக
இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமே இல்லை. இந்த நடைமுறையை பெரிதும் வரவேற்கின்றோம். பாராட்டுகின்றோம்.
ஆனால் அதில் பாரிய சிக்கல் நிலை இருப்பதை இரு அமைச்சர்களும் மறந்துவிட்டார்கள்.
சுகாதார சேவைகளுக்கு எரிபொருள் வழங்க மாவட்ட வாரியாக 74 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு மாவட்ட ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிலையங்கள் குறித்த நகரை அன்மித்ததாகவே
இருக்கின்றது. அதுமாத்திரமன்றி சுகாதார ஊழியர்கள் பாவிக்கின்ற வாகங்களுக்கெற்ப வாராந்தம் அதிகபட்சமாக மோட்டார் கார்கள் மற்றும் ஜீப்களுக்கு 40 லீற்றரும், முச்சக்கரவண்டிகளுக்கு 15 லீற்றரும், மோட்டார் சைக்கிள்களுக்கு 10 லீற்றர் என்ற அடிப்படையில் எரிபொருள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தூரப் பிரதேசங்களில் கடமையாற்றும் பல பணியாளர்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கிலோ மீற்றர் தூரம் வந்து
செல்லவேண்டிய நிலைமையும், அன்றைய தினம் கடமைகளுக்கு செல்ல முடியாமல் சொந்த விடுமுறையில் வரவேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலைமைக்கும் ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக, இந்த சலுகையைப் பெறவுள்ள சுகாதாரப் பணியாளர்கள் தங்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை எரிபொருள் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது சுகாதார நிறுவனம், ஊழியரின் பெயர், பதவி, தேசிய அடையாள
எரிபொருள் வழங்கும் நடைமுறை சுகாதாரப் பணியாளர்களுக்குள் மோதல் ஏற்படும் வாய்ப்பு
அட்டை இலக்கம், வாகன வகை மற்றும் பதிவு இலக்கம் ஆகியவற்றை நிறுவன தலைவரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில்
சமர்ப்பிக்கபட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறையிலும் பாரியதொரு சிக்கல்நிலை ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளது.
ஏனென்றால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அன்மித்ததாக கடமையாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தங்களின் வாகனங்களுக்கு முதலில் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் மிக அதிகமாகவே காணப்படுகின்ற அதேவேளை
அடுத்த எரிபொருள் நிலையத்துக்கும் சென்று மீண்டு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளது.
எரிபொருள் வழங்கும் நடைமுறை சுகாதாரப் பணியாளர்களுக்குள் மோதல் ஏற்படும் வாய்ப்பு
இதனால் தூர இடங்களில் இருந்து வருகின்ற பணியாளர்களுக்கு சிலவேளைகளில் எரிபொருள் கிடைக்காமல் போய்விடும் துர்ப்பாக்கிய நிலைமையும் ஏற்படலாம்.
இந்நிலைமையை தீர்க்கும் வகையில் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு பாஸ் நடைமுறையை
அறிமுகப்படுத்தி அந்த பாஸினை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வழங்கிவிட்டு தங்களுக்கான
எரிபொருளை பெற்றுக்கொள்ளும் திட்டத்ததை அமுல்படுத்து வேண்டும். அவ்வாறு அமுல்படுத்துவதன்
மூலமே அதற்கான சிறந்ததொரு தீர்வை பெற்றுக்கொள்ளலாம்.
கோட்டா ரணில் திருட்டு அரசாங்கம் – அனுரா குமார பாய்ச்சல்
கோட்டா ரணில் திருட்டு அரசாங்கம் – அனுரா குமார பாய்ச்சல்
இலங்கையை ஆளும் ஜனாதிபதி கோட்டபாய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் திருட்டு அரசாங்கம் என ஜேவிபியின் முக்கியஸ்தர் அனுரா குமார நாயக்க பாரளுமன்றில் காரசாரமாக பாய்ச்சல் நடத்தினார் .
மக்கள் சொல்லென்னா துயரங்களை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,அவர்களை பிச்சைக்காரர்கள் போல வீட்டுக்கு அனுப்பும் நிலையிலேயே ஆளும் ரணில் கோட்டபாயா கூட்டாட்சி திருட்டு அரசு உள்ளதாக அவர் பாராளுமன்றில் முழங்கினார்.
கோட்டபாய அரசுக்கு எதிராக முன்னெடுக்க பட்ட மக்கள் போராட்டங்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்க வில்லை.
கோட்டா ரணில் திருட்டு அரசாங்கம் – அனுரா குமார பாய்ச்சல்
ஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம்
இலங்கை நாட்டை ஏழ்மையில் அழைத்து சென்ற கோட்டபாய வீட்டுக்கு செல்ல வேண்டும்.
கோட்டா ஆட்சி நீடித்தால் மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவர் ராணில்
ஆளும் கூட்டாட்சி திருட்டு அரசாங்கம் நமக்கு ஏன் என மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் என்ன என அனுரா குமரா பாராளுமன்றில் பாய்ச்சல் நடத்தினார்.
நாட்டு மக்கள் நலனை கருத்தில் கொள்ளாது ஆளும் அரசியல் வாதிகள் ,தமது குடும்ப வாழவை அரசியலாக கலந்து தமது சுக போக வாழ்க்கை யில் கொடி கட்டி பறக்கின்றனர் .
கோட்டா ரணில் ஆட்சியில் அமைச்சர்கள் எம்பிக்கள் வாகனங்கள் எரிபொருள் நிரப்பிய வண்ணம் ஓடி செல்கிறது .
ஆனால் இதே ரணில் ,கோட்டா ஆட்சியில் அமர அவர்களுக்கு வாக்களித்த மக்கள் பசியால் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது .
மக்களாட்சி அரசு என கூறும் இந்த அரசில் மக்கள் வாழ்வியல் மேம்படும் நிலை தோற்றம் என்ன இருக்கிறது ..?
பாராளுமன்றில் உணர்ச்சி வசப்பட்டு அடுக்கு மொழிகளையே அடுக்கி அழகு படுத்திய அனுரகுமார இவரும் ஒரு சிங்கள இனவாதி தான் என்பதை தமிழர் சமுகம் மறந்து விட முடியாது .
அனுரா குமார பாரளுமன்றில் முழங்கிய இந்த பாய்ச்சல் அவர் தம் அரசியல் வாழ்வை நடத்தி செல்ல பேச படும் உணர்ச்சி பேச்சுக்கள் என்பது இங்கே கவனிக்க தக்கது .
தங்கம் வென்ற தமிழ் பெண்
தங்கம் வென்ற தமிழ் பெண்
இந்தியாவில் 27 அன்று நடைபெற்ற மிக்ஸ் பாக்சின்கில் தற்காப்பு கலை போட்டியில் தங்கம் வென்ற மாங்குளத்தைச் சேர்ந்த செல்வி ஜெகதீஸ்வரன் விஜிதா நேற்றைய தினம் நாடு திரும்பியிருந்தார்.
தங்கம் வென்று நாடு திரும்பிய இவருக்கு நேற்று மாலை மாங்குளத்தில் பெரும் கௌரவிப்பு இடம்பெற்றிருந்தது.
மாங்குளம் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து மாங்குளம் சந்தி வரை வீதி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட தங்கம் வென்ற விஜிதா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
தங்கம் வென்ற தமிழ் பெண்ணை வாழ்த்திய கோட்டா – சர்ச்சைகள் பின் தீர்வு
இந்த சாதனை படைத்த தமிழ் பெண் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் கழக வீரர்கள்,
மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
120 மொழிகளில் பாடி அசத்தும் சிறுமி
தங்கம் வென்ற தமிழ் பெண் சாதனை தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை பிரதமர் ரணில் செய்த வேலை
இலங்கை பிரதமர் ரணில் செய்த வேலை
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யோகா தினத்தில் இணைந்து செய்த வேலை சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .
நாட்டு மக்கள் எரிபொருள் மாற்று உணவு விலையேற்றத்தினால தள்ளாடி கொண்டிருக்க ,ரணில் திறந்த வெளி யோகாதினத்தில் கலந்து கொண்டு உடலை ஆட்டிடை நிமிர்த்தும் காட்சிகள் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
பிரதமர் பதவி பறிபோகும் கவலையில் ரணில்
இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது ரணில்
ரணில் செய்த இந்த வேலை தாம் தமது அதிகாரத்தில் அமரவே மட்டும் என்பதையும் மக்களை பற்றிய கவலை
இல்லை என்கின்ற விடயத்தை இந்த சம்பவம் ஊடாக இடித்துரைத்துள்ளது .
வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் வயதெல்லையில் மாற்றம்
வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் வயதெல்லையில் மாற்றம்
இலங்கையில் அமைச்சரவை முடிவுகள் வெளியாகியுள்ளது ,இதில் சவுதி நாட்டுக்கு செல்லும் பெண்களின் வயதெல்லை 25 ஆகவும்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும்பெண்களின் வயதெல்லை 23 ஆகவும் பிற நாடுகளுக்கு செல்லும் பெண்களின் வயதெல்லை 21 ஆகாவும் திருத்தும் செய்ய பட்டுள்ளது.
ஒரு லட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் பணிக்கு செல்லும் பெண்கள் அதிகம்
பாதிக்க படுவதால் இந்த வயதெல்லையில் அதிரடி மாற்றம் செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.
அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
2022.06.20 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)
- சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக ‘தேசிய தனி முகப்பிடம்’ (National Single Window) கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
உலக வர்த்தக அமைப்பின், வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் ஒப்பந்தம் 2017 பெப்ரவரி மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இலங்கையும் குறித்த ஒப்பந்தத்தின் பங்காளராக கையொப்பமிட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்திற்கமைய தேச
எல்லைகளுடாக நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகள் (இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மீள்ஏற்றுமதி) பங்கேற்பு வர்த்தக நடவடிக்கை ஒழுங்குபடுத்தல் அதிகார சபைகளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும்
தரவுகளை சமர்ப்பிப்பதற்கு ஒரு நிலையத்தை (தனி முகப்பிடம்) ஆரம்பித்து மேற்கொண்டு செல்வதற்கான கடப்பாடு இலங்கைக்கு உள்ளது. உலக வங்கியின் நிதியுதவியுடன் குறித்த கருத்திட்டத்திற்குரிய முறைசார்ந்த திட்டமொன்று 2018 ஆம்
ஆண்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்திற்கமைய மூன்று கட்டங்களின் (03) கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இக்கருத்திட்டத்தின் மதிப்பீட்டு செலவு 15 மில்லியன் அமெரிக்க டொலர்களாவதுடன், உலக வங்கி மற்றும் ஏனைய
தரப்பினர்களுடன் குறித்த நிதியைப் பெற்றுக் கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள ‘தேசிய தனி முகப்பிடம்’ கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார
உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- 2021 ஆம் ஆண்டுக்கான நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஆண்டறிக்கையை (இறுதி வரவு செலவு நிலைமை தொடர்பான அறிக்கை) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஆண்டறிக்கை (இறுதி வரவு செலவு நிலைமை தொடர்பான அறிக்கை)
குறித்த நிதியாண்டு முடிவடைந்த பின்னர் 05 மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்படல் வேண்டும். அதற்கமைய, 2021 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை குறித்த அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையை
பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆழமற்ற கடற்பகுதியில் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு கடலட்டை உற்பத்திக் கிராமங்களை உருவாக்கல்
இயற்கைக் கடல்சார் சூழலில் பிடிக்கப்படும் கடலட்டைகளின் ஏற்றுமதியால் குறிப்பிடத்தக்களவு வெளிநாட்டு செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும்.
அதற்கமைய, பெற்றுக்கொண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு கடலட்டை இனப்பெருக்க நிலையத்தை நிறுவுதல், கடலட்டைப் பண்ணைகளை விரிவாக்கம் செய்தல், வணிக ரீதியான உயிரின வளர்ப்பு போன்ற கடலட்டை
ஏற்றுமதிக் கிராமங்களை உருவாக்குவதன் மூலம் வெளிநாட்டு செலாவணி ஈட்டுவதை அதிகரித்தல் மற்றும் மீனவர் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வணிக ரீதியான கடலட்டை உயிரின
அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
வளர்ப்பு கருத்திட்டமொன்று இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் (NAQDA) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்திற்காக யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில்
5000 ஏக்கர் காணிகளை அடையாளங் கண்டு, அவற்றில் 100 ஏக்கர்களுடன் கூடிய கடலட்டை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக் கிராமங்களை உருவாக்குவதற்கும், மற்றும் 100 ஏக்கர் காணியில் 01 ஏக்கர் வீதம் கடலட்டை உற்பத்திப் பண்ணைகளைத் தாபித்து
குறித்த கருத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்காகவும் கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- புகையிரதத் திணைக்களத்திற்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக தற்காலிக அடிப்படையில் வழங்கல்
இலங்கைப் புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட காணிகள் மொத்தமாக 14,000 ஏக்கர்கள் காணப்படுவதுடன், அவற்றில் 10மூ வீதமான காணிகள் பல்வேறு பணிகளுக்காக குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
ஏனைய பாதுகாக்கப்பட்ட காணிகளில் புகையிரத் திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக துரிதமாகப் பெறவேண்டிய தேவையற்றதும் மற்றும் புகையிரதப் பாதை மற்றும் புகையிரத நிலையங்களுக்கு அருகாமையிலுள்ள
பாதுகாக்கப்பட்ட காணிகளாக ஒதுக்கப்பட்டுள்ளதும், பயிர்ச்செய்கைக்குப் பொருத்தமானதுமான காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்காக தற்காலிக குத்தகை அடிப்படையில் வழங்குவது உகந்ததென
அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பிரதேசங்களில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, புகையிதப் பாதைக்கு அருகாமையில் வசிக்கின்றவர்களுக்கு மற்றும் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு
முன்னுரிமை வழங்கப்பட்டு குறித்த காணிகளை விவசாயப் பயன்பாட்டுக்காக குத்தகை அடிப்படையில் (01) ஒரு வருடகாலத்திற்கு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்
அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- முத்துராஜவெலவில் அமைந்துள்ள 10 ஏக்கர் காணித்துண்டை மின்சார சபைக்கு ஒப்படைத்தல்
முத்துராஜவெலவில் அமைந்துள்ள யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்திற்கு அருகாமையிலுள்ள 10 ஏக்கர் காணித்துண்டில் 300 மெகாவோட் டுNபு மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்காக
இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த காணித்துண்டைக் கொள்வனவு செய்வதற்காக மின்சார சபையின் பணிப்பாளர் சபையின் அனுமதி கிடைத்துள்ளது.
அதற்கமைய, அரச விலைமதிப்பீட்டாளரால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள குறித்த காணித்துண்டின் சந்தைப் பெறுமதியை அறவிட்டு, அதனை இலங்கை மின்சார
சபைக்கு வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- தேசிய சுற்றாடல் கொள்கையை அங்கீகரித்தல்
2003 ஆம் ஆண்டு அப்போதைய சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள ‘தேசிய சுற்றாடல் கொள்கைகள் மற்றும் மூலோபாயங்கள்’ பிரகடனம் தற்போது இலங்கையில் சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு
வழிகாட்டுகின்ற பிரதான கொள்கைப் பிரகடனமாகும். கடந்த காலப்பகுதியில் தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் சுற்றாடலுக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்ற குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பல இடம்பெற்றுள்ளன. அதேபோல் சுற்றாடல்
மாற்றங்களால் ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார ரீதியான காரணிகளும், சுற்றாடல் விடயத்தானம் பற்றிய விஞ்ஞான ரீதியான அறிவும் குறிப்பிடத்தக்களவு மாற்றமடைந்துள்ளது. குறித்த நிலைமைகளைக் கருத்தில்
கொண்டு சுற்றாடல் விடயதானம் பற்றிய நிபுணர்கள், பங்காளர்;கள் மற்றும் பொதுமக்கள் கருத்துகளையும் பெற்றுக்கொண்டு 2003 ஆம் வெளியிடப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் கொள்கை மற்றும் மூலோபாயங்கள், சமகாலத் தேவைகளுக்குப்
அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
பொருத்தமான வகையில் இற்றைப்படுத்துவதற்கு சுற்றாடல் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள தேசிய
சுற்றாடல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- வீட்டு மற்றும் வீட்டுப் பணிகள் சார்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஈடுபடும் இலங்கைப் பெண்களின் குறைந்தபட்ச வயதெல்லையை திருத்தம் செய்தல்
இலங்கைப் பெண்களுக்கு வீட்டு மற்றும் வீட்டுப் பணிகள் சார்ந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் ஈடுபடுவதற்காக தற்போது காணப்படும் குறைந்தபட்ச வயதெல்லை சவூதி அரேபியாவுக்கு 25 உம், ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு 23 உம் மற்றும்
எனைய நாடுகளுக்கு 21 உம் ஆகவுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளைக் கருத்தில் கொண்டு குறித்த வயதெல்லையைத் திருத்தம் செய்தல் தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து
அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்றை நியமிப்பதற்கு 2022 யூன் மாதம் 06 ஆம் திகதி
இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த உபகுழுவால் சமர்;ப்பிக்கப்படும் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு இலங்கைப் பெண்கள் வீட்டு மற்றும் வீட்டுப் பணிகள் சார்ந்த வெளிநாட்டு
அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
வேலைவாய்ப்புக்களில் ஈடுபடுத்தும் குறைந்தபட்ச வயதை 21 ஆக திருத்தம் செய்வதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
- தேசிய சேமிப்பு வங்கிக்கான பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கான பெறுகைக் கோரல்
தேசிய சேமிப்பு வங்கியின் தலைமைக் காரியாலயம் மற்றும் நாடளாவிய ரீதியில் காணப்படும் அதன் கிளைகளுக்குப் பாதுகாப்புச் சேவைகளை வழங்குவதற்காக தேசிய போட்டி விலைமுறிப் பொறிமுறையைப் பின்பற்றி விலைமனுக்
கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய ஒவ்வொரு பிரிவுக்கமைய தகைமை பெற்ற பாதுகாப்புச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்குக் குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு நிதி,
பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு புதிய அணுக்கக் கண்காணிப்பு முறைமையை நிறுவுதல்
இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவால் தற்போது பயன்படுத்தப்படுகின்ற அணுக்கக் கண்காணிப்பு முறைமை (Surveillance System) 2008 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டுள்ளதுடன், சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான
வகையில் குறித்த முறைமையை நவீனமயப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. உலக வங்கியின் நிதியத்தின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிதிப்பிரிவின் நவீனமயப்படுத்தல்
கருத்திட்டத்தின் மூலம் அதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை உள்ளது. அதற்கமைய, தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் அணுக்கக் கண்காணிப்பு முறைமையைப் பொருத்திய லண்டன் பங்குப் பரிவர்த்தனைக் குழுவின்
உறுப்பினரான இலங்கையில் அமைந்துள்ள Millennium IT Software (Pvt) Ltd. இற்கு நேரடிப் பெறுகைக் கோரலாக பிரேரிப்பொன்றை பெற்று குறித்த அணுக்கக் கண்காணிப்பு முறைமையை நவீனமயப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி,
பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- அநுராதபுரம் அஞ்சல் அலுவலக வளாகத்தில் கலப்பு அபிவிருத்தி வீடமைப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை மூலம் அநுராதபுரம் அஞ்சல் அலுவலகத்தில் அமைந்துள்ள 99 ஏக்கர் காணியில் கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
காணியின் சமகாலப் பெறுமதிக்கு சமமான வகையில் அஞ்சல் அலுவலக வளாகத்தை அஞ்சல் திணைக்களத்திற்கு வழங்கும் உடன்பாட்டுடன், குறித்த காணியை விடுவிப்பதற்கு அத்திணைக்களம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய,
முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அக்காணியை அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் 6(1) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய விடுவிப்பு வழங்கலாக நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு
வழங்குவதற்கும், தேசிய அல்லது சர்வதேச போட்டி விலைமுறிப் பொறிமுறையைப் பயன்படுத்தி விருப்பக் கோரல்களைப் பெற்று பொருத்தமான முதலீட்டாளர்களைத் தெரிவு செய்து அரச-தனியார் பங்குடமைக் கருத்திட்டமாக இக்கருத்திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம்
20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பற்றித் தற்போது நாட்டில் பெரும் சர்ச்சைக்குரிய நிலைமைகள் தோன்றியுள்ளமையால், 19 ஆவது அரசியலமைப்புத்
திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற நன்மைபயக்கும் பிரிவுகளை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலைமையின் கீழ் தற்போது முகங்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்கடி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்திற்கும் இடையில் அதிகாரச் சமநிலையை ஏற்படுத்தும் வகையில்
பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் கூட்டாகப் பொறுப்புக் கூறும் அமைச்சரவைக்கும் மற்றும் அரசியலமைப்புப் பேரவைக்கும் ஒருசில அதிகாரங்களை ஒப்படைக்கும் வகையிலும் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது
பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
சமர்ப்பித்துள்ள அடிப்படைச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
இலங்கையில் தொடரும் போராட்டம் 21 பேர் கைது
இலங்கையில் தொடரும் போராட்டம் 21 பேர் கைது
இலங்கை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சின் முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தமது போராட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர்.

இந்த போர் களத்தில் வழமைக்கு மாறாக புத்த பிக்குகள் பெருமளவு கலந்து கொண்டுள்ளது ஆளும் கோட்டபாய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த போராட்டம் வீச்சம் பெற்றுள்ளது .

கோட்டாவை வீட்டுக்கு போ ,ராஜபக்சே குடும்பம் ஒழிக என்ற கொட்டு முரசு வாசகங்கள் அதிர்ந்த வண்ணம் உள்ளது.

இந்த அமைதியான போராட்டத்தை நடத்திய இருபத்தி ஒரு போராட்டக்காரர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .இதில் ஒரு புத்த பிக்கும் அடங்கும் என்பது குறிப்பிட தக்கது

கோட்டபாய பிறந்த நாளில் தொடரும் போராட்டம்
கோட்டபாய பிறந்த நாளில் தொடரும் போராட்டம்
இலங்கை செய்திகள்
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே 73 தாவது பிறந்த நாளில் காலிமுக திடலில் புத்துயிர் பெறும் போராட்டம் .
கடந்த தினம் இரவு ஜனாதிபதி செயலகம் மற்றும் காலிமுக திடல் கோட்டா கோ காம திடலில் விஷேட கொட்டகைகள் அமைக்க பட்டு மக்கள் கோட்டபாய ராஜபக்சே 73 தாவது பிறந்தநாளுக்கு அதிர்ச்சிகர பரிசாக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அந்த போராட்ட களத்தில் உள்ள மக்கள் சிலர் கருத்துரைத்துள்ளனர்.

இந்த கோட்டபாய ராஜபக்சே அரசாங்கத்தை நாம் துரத்தியடித்து புதியவரை இந்த நாட்டுக்கு நியமிக்க வேண்டும் என அந்தமக்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர்.
இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டபாய பிறந்த நாளில் தொடரும் போராட்டம் காரணமாக நாடு மீள செயல் இழக்கும் நிலக்கு செல்லும் என எதிர் பார்க்க படுகிறது.
தொடரும் இந்த போராட்டம் காரணமாக மீளவும் பலத்த அவமானத்தை சந்தித்த வண்ணம் ராஜபக்சே குடும்பம் நாட்டை விட்டு தப்பி ஓடும் நிலை ஏற்படும் என போராட்டக்கார்கள் ஆவசேமாக முழங்கி வருகின்றனர்

இதன் எதிர் திசை செயல் நோக்கு காலிமுக திடல் கோட்டா கோ காம போராட்டம் உச்சம் பெற போவதை எடுத்துரைக்கிறது .

ஜனாதிபதி செயலகம் முன்பாக மக்கள் போராட்டம்
ஜனாதிபதி செயலகம் முன்பாக மக்கள் போராட்டம்
இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே
ஜனாதிபதி செயலகம் முன்பாக மக்கள் ஒன்று கூடி பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினர்
ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டம் நடத்தியமாக்கல் அங்கு கூடாரம் அமைத்து தொடர போர்த்தில் ஈடுபட்டனர்
மக்கள் நடத்திய இந்த போராட்டம் காரணமா அந்த வழி சாலை போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது .
இதனை அடுத்து இராணுவத்தினர் குவிக்க பட்டு மக்களால் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் .
தொடர்ந்து ஸ்லேலு பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் நாடு பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது .
கோட்டாவே வீட்டுக்கு போ லண்டனில் மக்கள் போராடட்ம
இந்த பொருளாதார சுமைகளில் இருந்து தம்மை விடுவிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு ஆளும் அரசு தமது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளா வருகிறது என்ற நிலையில்
கோட்டா கோ காம காலிமுக திடல் ஆர்ப்பாட்ட காரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .
மக்கள் சாத்வீக மாக நடைபெறும் போராட்டங்களில் வன்முறை புகுத்தி மக்களை கைது செய்யும் வேட்டையில் இராணுவம் ,
போலீஸ் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது .
சர்வதேச நாணய நிதியம் ரணில் பேச்சு
சர்வதேச நாணய நிதியம் ரணில் பேச்சு
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய உறுப்பினர்களுகுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேச்சு வார்த்தை நடத்திய வண்ணம் உள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் முகமாக இந்த விசேட சந்திப்பு இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து இலங்கைக்கு உதவும் என அறிவித்திருந்த நிலையில் ,இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுடன் இந்த பேச்சு இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
சர்வதேச நாணய நிதியதுடன் பேச்சு
தற்போது இடம்பெற்ற வண்ணம் உள்ள பேச்சுக்களின் பொழுது உடன்பாடு
எட்டப்பட்டு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
நாட்டில் ஆளும் அரசுகளுக்கு எதிராக வெடித்துள்ள போராட்டம் ,அதனால் எழுந்து மனவிரக்தி தற்கொலைகள் என்பனவற்றை சர்வதேச நானன்யா நிதிய வருகையும் அதன் சந்திப்பும் தீர்த்து வைக்குமா என்பதே கேள்வியாக உள்ளது .
விபத்தில் இருவர் மரணம்
விபத்தில் இருவர் மரணம்
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற இரு வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி இருவர் மரணமாகியுள்ளனர் .
இலங்கையில் நாள் தோறும் வீதி விபத்துக்களில் சிக்கி நான்கிற்கு மேற்பட்ட மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .
வீதி விதிமுறைகளை கடைபிடிக்க மறுக்கும் மக்களின் செயல் நடவடிக்கையால் இந்த வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
இந்த வீதி விபத்துக்களை தடுத்திட மக்களே விழிப்பாக செயல் படுத்தல் அவசியம் என்கிறது காவல்துறை .



















