மின்சாரப் பவனை சிக்கனமாக பயன்படுத்தவும் மாகாண ஆணையாளர் வேண்டுகோள்

Spread the love

கிழக்கு மாகாணம் ;மின்சாரப் பவனை சிக்கனமாக பயன்படுத்தவும் மாகாண ஆணையாளர் வேண்டுகோள்

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடனான கலந்துரையாடல் இன்று காலை

மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் தலைமையில் சுதேச மருத்துவத் திணைக்கள கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், சுதேச மருத்துவத் திணைக்கள திட்டமிடல் பிரிவு வைத்தியர் எஸ்.சதீஸ், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாட்டில் தற்போது நிலவுகின்ற எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக எமது நாடு பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.

அதனால் எமது திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் தேவைக்கேற்ப மின்சாரப் பவனை மற்றும் ஏனைய பாவனைகளை மிக சிக்கனமாக பயன்படுத்துமாறும்,

மின்சாரப் பவனை சிக்கனமாக பயன்படுத்தவும் மாகாண ஆணையாளர் வேண்டுகோள்

எமது திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகளை மிக விரைவாக வழங்க வேண்டும் என மாகாண ஆணையாளர் இதன்போது சகல உத்தியோகத்தர்களிடமும் கேட்டுக்கொண்டார்.

கடந்த பல வருடங்களாக சுதேச மருத்துவத் திணைக்களத்தில் கடமையாற்றி
வேறு திணைக்களங்களுக்குச் சென்ற உத்தியோகத்தர்களை பாராட்டி அவர்களுக்கு


ஞாபகச் சின்னம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் ஊழியர்கள் நலபுரிச் சங்கத்தின்


ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதன்போது மாகாண ஆணையாளர் அவர்களினால் பரிசுப்
பொதிகள் மற்றும் ஞாபகச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பைஷல் இஸ்மாயில்.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply