லண்டனில் சாதனை படைக்கும் தமிழன்

Spread the love

லண்டனில் சாதனை படைக்கும் தமிழன்

லண்டன் ;லண்டனில் வீதியில் உறங்கிய தமிழன் ஒருவர் படைக்கும் சாதனை மக்களை வியபில் உறைய வைத்துள்ளது .

இலங்கையில் இடம்பெற்ற கொடிய போரின் பிடியில் சிக்கிய யோகி என்ற தமிழர் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு இலங்கையில் இருந்து லண்டன் வந்தடைந்தார் .

அப்பொழுது அவருக்கு லண்டனில் தங்குவதற்கு வீடில்லா நிலையில் வீதிகளில் உறங்கியுள்ளார் .அவ்வேளை பலத்த மன நல பிரச்சைக்குள்ளும் சிக்கி இருந்தார் .

அவ்வாறான யோகி என்ற ஈழ தமிழன் தற்போது சமையல் கலை நிபுணராக லண்டனில் சமையலில் அசத்தி வருகிறார் .

நம்மவர்கள் மத்தியில் சமையல் செய்பவர் கூடாத நபரை போன்று பார்க்கும் நிலை தொடர்கிறது .

லண்டனில் சாதனை படைக்கும் தமிழன்
லண்டனில் சாதனை படைக்கும் தமிழன்


ஆனால் வெளிநாடுகளில்,லண்டனில் நீங்கள் சிறந்த சமையல்காரர் என்றால் அவருக்கு அதிக சம்பளமும் சிறந்த வரவேற்புடன் கூடிய தனி மரியாதை உள்ளது .

அவ்வாறே இந்த ஈழ தமிழன் யோகியும் லண்டன் மாநகரில் சாதனை படைக்கும் தமிழன் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார் .

லண்டனுக்கு வரும் பொழுது தனக்கு ஒரு தேனீர் வைக்க தெரியாது ,ஆனால் இன்று நான் சிறந்த சமையல்காரனாக சாதனை மாற்றம் பெற்றுள்ளேன் என நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறார் .

மேலும் நான் கற்று கொண்ட சமையல் கலையை நமது பிள்ளைகளுக்கும் ,மக்களுக்கும் கற்று கொடுக்கிறேன் என தெரிவித்து யோகி தனது மகிழ்ச்சியை புன்னகையோடு வெளிப்படுத்தியுள்ளார்.

வந்த வெள்ளையர் நாடுகளில் ,பிரிட்டனில் நம் தமிழர்கள் பலவேறு துறைகளில் கொடி கட்டி பறக்கும் முதல்தர நபர்களாக மாற்றம் பெற்றுள்ளனர்.

நாம் நமது நாட்டில் வாழும் ,சுதந்திரம் ,பாதுகாப்பு வழங்க பட்டால் இலங்கை ஒரு சிங்கப்பூராக மாற்றம் பெறுவதுடன் தன்னிறைவு பொருளாதாரத்தில் தமிழர் தேசம் கொடி கட்டி பறக்கும் .

ஆனால் ஆளும் இலங்கை அரசியல்வாதிகள் முற்போக்கு சிந்தனையில் யோசிக்கும் நிலையில் யாரும் இல்லை.

தற்காலத்தில் உலக அளவில் சமையல் காணொளிகள் அதிகம் மக்கள் விரும்பும் ஒன்றாக உள்ளது ,அதற்கே மவுசு அதிகமாக உள்ளது.

காரணம் யாவரும் நாளாந்தம் சமையலில் பங்கு பெறுவதால் சமையல் கலை நிபுணர்களுக்கு மவுசு அதிகமாக உள்ளது.

நமது ஈழ தமிழ் மகன் யோகி இதுபோல மேலும் பல சாதனைகளை நிகழ்த்தி தமக்கும் தான் பிறந்த தமிழ் மண்ணுக்கு பலம் சேர்ப்பாராக.

உங்கள் பணி தொடர்ந்து வெற்றி பெற எதிரி இணையம் உங்களை நெஞ்சார வாழ்த்துகிறது .

பிரிட்டனில் உள்ள ஆங்கில ஊடகம் ஒன்றில் யோகி கீரோவாக வர்ணிக்க பட்டுளளார் .

தமிழன் என்றால் சும்மாவா என்ன .வெல்லட்டும் தமிழ் .வளரட்டும் சாதனைகள் .

    Leave a Reply