Posted in இலங்கை செய்திகள்

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது ஊசி

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது ஊசி

இலங்கையில் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்

மூன்றாவது தடுப்பூசி செலுத்த படவுள்ளது என அறிவிக்க பட்டுள்ளது


பரவி வரும் நோயின் பரவலை தடுக்கவும் ,உயிர்களை காப்பாற்றவும் இந்த நடவடிக்கை

முன்னெடுக்க பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 13,821 பேர் மரணம்

    இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 13,821 பேர் மரணம்

    இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இது வரை
    13,821 பேர் மரணமாகியுள்ளனர்

    மேலும் 544,013 பேர் பாதிக்க பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    பொல்லால் அடித்து பெண் ஒருவ படு கொலை

    பொல்லால் அடித்து பெண் ஒருவ படு கொலை

    வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

    இச் சம்பவம் நேற்று (04.11.2021) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

    அயல் குடும்பத்திற்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட சண்டையை விலக்குவதற்கு சென்ற தாயே இவ்வாறு பொல்லால் அடிப்பட்டு இறந்துள்ளார்.

    இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி வயது 57 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

    உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    ஹட்டன் நீதிமன்றத்தின் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து அட்டன் கைரேகை அடையாள பிரிவு மற்றும் வட்டவளை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தயாராகும் ஆசிரியர்கள்

      பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தயாராகும் ஆசிரியர்கள்

      அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

      அதிபர் – ஆசிரியர்கள் சங்கங்களினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என குறித்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

      எமது அனைத்து போராட்டங்களும் ஒன்றிணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      ஹிட்லரை போல மகிந்தாவும் சாவார் – ரஜனி

      ஹிட்லரை போல மகிந்தாவும் சாவார் – ரஜனி

      தீபாவளி தினத்தன்று ரஜனி நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியாகியுள்ளது
      இதில் ரஜனி அரசியல் தலைவர்களை இலக்கு வைத்து பேசுவது வழமை


      அதில் ஹிட்லர் ,முசோலின் ,இடிஅமீன் போல நீயும் சாவாய் என்கிறார் ,அது இலங்கையில் பெரும் தமிழ் இனப்படுகொலைகளை நடத்திய மகிந்தாவுக்கு தெரிவிக்க பட்ட சொல்லாக உள்ளது

      இதே ரஜனி இலங்கை சென்று மகிந்தாவுடன் குலாவி வந்தமை இங்கே குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

        மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

        நாட்டில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

        கண்டி, நுவரெலியா. மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறைஇ காலி மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இததொடர்பில் அவதானத்துடன் செயல்பட வேண்டுமென்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

        தற்சமயம் நிலவும் சீரற்ற காலநிலையினால் மலையக பகுதிகளில் மண்சரிவு, மண்மேடுகள் சரிவு போன்ற அனர்த்தங்கள் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

        இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உரிய பகுதியை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வது அவசியமாகும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

        பொலிசாரும் முப்படையினரும் மாவட்ட பிரதேச செயலகங்களும் அனர்த்த நிலையை எதிர்கொள்ள தயார் நிலையிலுள்ளன

        Posted in இலங்கை செய்திகள்

        வெடித்து சிதறிய கடை – ஓடிய மக்கள்

        வெடித்து சிதறிய கடை – ஓடிய மக்கள்

        வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் உள்ள சிற்றூண்டிச்சாலை ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

        சம்பவத்தில் இருவர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

        சிற்றூண்டிச்சாலையின் எரிபொருள் சிலிண்டர் வெடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

        சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          வாகனத்தால் மக்களை இடித்து கொன்ற சிறுவன்

          வாகனத்தால் மக்களை இடித்து கொன்ற சிறுவன்


          இன்று காலை வெலிசர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

          கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி, குறித்த சிறுவனால் செலுத்தப்பட்ட அதிசொகுசு வாகனம், வீதியை விட்டு விலகி எதிர் திசையில் பயணித்த கார், ஓட்டோ மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

          ‍வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், இந்த விபத்து தொடர்பில் மஹபாகே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

            Posted in இலங்கை செய்திகள்

            தீபாவளியை புறக்கணித்த மக்கள்

            தீபாவளியை புறக்கணித்த மக்கள்

            நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பொருள்களின் விலை ஏற்றம் மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், மன்னார் மாவட்டத்தில், தீபாவளி கொண்டாட்டங்களில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

            குறிப்பாக, பொருள்கள் மற்றும் ஆடைகளின் விலைகள் அதிகரித்துள்ளமையால், பொருள்களின் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

            மேலும், தொடர்ச்சியாக மன்னாரில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையால், இம்முறை தீபாவளி திருநாள் கொண்டாட்டங்களில், மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

            அதேநேரம், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கோவில்களில் சிறிய அளவிலான விசேட

            வழிபாடுகள் இடம்பெற்றதுடன், மக்கள் குறைந்த அளவிலேயே கோவில்களுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

            Posted in இலங்கை செய்திகள்

            பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

            பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

            அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது.

            அத்துடன், அது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

            இதன்படி, சீனி, பருப்பு, பாசிப்பயறு, நெத்தலி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன்,

            கடலை, கோதுமை மா, கருவாடு, தேங்காய், கோழி இறைச்சி, பால்மா மற்றும் சோளம் ஆகியவற்றின் அதிகபட்ச சில்லைறை விலைகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன.

              Posted in இலங்கை செய்திகள்

              தமிழன் இறந்த நாளை கொண்டாடும் தமிழர்கள்

              தமிழன் இறந்த நாளை கொண்டாடும் தமிழர்கள்

              இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் ஆகிய இரண்டு தேசிய இனங்கள் மோதல் நிலையில் இருந்து வருகின்றனர் .

              ஆனால் இவர்கள் இருவரும் தீபாவளி பண்டிகையை ஒன்றாக இணைந்து கொண்டாடி

              வருகின்றனர்,இது எவ்வாறு சாத்தியம் என்பதை கூட அறியாது தமிழர்கள் தமது தமிழ் அரசனை

              அழித்த அதே நாளில் சிங்களவர்கள் போல கொண்டாடி வருகின்றனர்

              அதற்கு ஆளும் இனவெறி அரசு தமிழர் பாடசாலைகளிற்கு விடுமுறை அளித்து ஊக்கமளித்துள்ளது குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                முகமலையில் 316 ஏக்கர் காணிவிடுவிப்பாம் – இராணுவம்

                முகமலையில் 316 ஏக்கர் காணி விடுவிப்பாம் – இராணுவம்

                சிங்கள அரச பயங்கரவாத இராணுவத்தால் ஆக்கிரமிக்க பட்ட தமிழர் பகுதிகளில் உள்ள 316 ஏக்கர் காணியினை தாம் விடுத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது

                முகமாலை கிராமசேவர் பிரிவில் உள்ள காணிகள் இவ்வித விடுவிக்க பட்டுள்ளனவாம்

                இந்த பகுதியில் இராணுவத்தின் முன்னரங்க வேலிகள் அமைக்க பட்டு உக்கிர சமர் இடம்பெற்ற பகுதி என்பது இங்கே குறிப்பிட தக்கது

                  Posted in இலங்கை செய்திகள்

                  தமிழீழத்தை கண்ட பின்னரே நான் மரணிப்பேன் செல்லப்பா உருக்கம் – வீடியோ

                  தமிழீழத்தை கண்ட பின்னரே நான் மரணிப்பேன் செல்லப்பா உருக்கம் – வீடியோ

                  தமிழீழத்தின் தேசிய பாடல்களில் முதல்வராக விளங்கி வரும் செல்லப்பா அவர்கள்

                  மரணமானதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பட்டு வந்தன ,ஆனால் தற்போது அவர்

                  உயிருடன் உள்ளேன் என நேரலையில் தோன்றி செய்தியை வெளியிட்டுள்ளார்

                  தமிழீழத்தை கண்டே பின்னரே நான் மரணிப்பேன் என செல்லப்பா உருக்கம்

                  click here watch full video

                  video

                    Posted in Uncategorized

                    சாரதியை அடித்து துன்புறுத்தி நிர்வாணமாக்கிய சிங்கள பொலிஸ்

                    சாரதியை அடித்து துன்புறுத்தி நிர்வாணமாக்கிய சிங்கள பொலிஸ்

                    இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசில் சாரதி ஒருவர் கைது செய்ய பட்டு துன்புறுத்த பட்டு நிர்வாணமாக்க பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                    மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .

                      Posted in Uncategorized

                      வேகமாக பரவும் நோய் – மக்களுக்கு எச்சரிக்கை

                      வேகமாக பரவும் நோய் – மக்களுக்கு எச்சரிக்கை

                      கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் குறிப்பாக ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இருந்து வயிற்றோட்டம் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

                      சிறுவர்கள் மாத்திரம் இன்றி பெரியவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இது தொடர்பில் அவதானம் தேவை என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட

                      விரிவுரையாளரும் மட்டு. போதனா வைத்தியசாலையின் விசேட குழந்தை நல வைத்திய நிபுணருமான டொக்டர் விஜி திருக்குமார் தெரிவித்தார்.

                      அவர் மேலும் தெரிவிக்கையில்: “இதன் அறிகுறிகளாக காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றோட்டம்

                      காணப்படும். சில சமயம் இரத்தம் கலந்த சளியுடன் வயிற்றோட்டம் காணப்படும். இது ஒருவகை பற்றீரியா தொற்றினால் ஏற்படுகிறது.

                      “சில சமயம் வயிற்றோட்டம் இல்லாமல் அல்லது குறைவான வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிறு ஊதுதல் போன்ற குணங்குறிகளுடன் தோன்றலாம்.

                      “சிறுவர்கள், உணவு மற்றும் நீர் அருந்துவது குறைவாகவும் நீர் இழப்பு அதிகமாகவும் இருப்பதால் சோர்வு மற்றும் மயக்க நிலை ஏற்படும்.

                      “எனவே, இவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுவது அவசியம்.

                      “மேலும், கொரோனா தொற்றின் பின் சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற Miss-C எனப்படும் பல்தொகுதி அழற்சி நோய் நிலையின் போதும் காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகள்

                      தோன்றும். எனவே, உங்கள் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு காணப்படுமாயின் விரைவாக வைத்தியசாலையை நாடுதல் சாலச்சிறந்தது” என்றார்

                        Posted in Uncategorized

                        கோட்டாவை ஓடவைத்த தமிழர்கள் – பறந்த புலிக்கொடி

                        கோட்டாவை ஓடவைத்த தமிழர்கள் – பறந்த புலிக்கொடி

                        பிரிட்டன் ஸ்கொட்லாந்து கிளாஸ்க்கோ பகுதிக்கு வருகை தந்த இலங்கை அதிபரும் தமிழ் இன


                        படுகொலையாளியுமான கோட்டாயாவுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் தமிழர்கள் திரண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்

                        இவ்வேளை அவரை தூக்கில் போடு என கோஷங்கள் முழங்கின ,இது கோட்டாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ,


                        புலிகளின் செயல் திறன்களை மழுங்கடித்து விட்டதாக ஏப்பம் இட்ட இவருக்கு இந்த மக்கள் ஒன்று கூடல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                        அங்கு திரண்ட மக்களை சிங்கள உளவுத்துறை படம் பிடித்து சென்றுள்ளதாம்

                          Posted in இலங்கை செய்திகள்

                          இரண்டு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதல் – பெரும் விபத்து

                          இரண்டு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதல் – பெரும் விபத்து

                          இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                          ராகம மற்றும் பேரலந்த புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                          பாரிய அளவில் எந்தவொரு விபத்தும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            மாட்டு திருடர்களை மடக்கிய காவல்துறை

                            மாட்டு திருடர்களை மடக்கிய காவல்துறை

                            திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர பிரதேசத்தில் சிறிய

                            லொறியொன்றில் நேற்று (31) அதிகாலை 4.30 மணியளவில் இறைச்சிக்காக கடத்திச் செல்லப்பட்ட 16 மாடுகளை தாம் மீட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

                            அத்தோடு, மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி பரிமுதல் செய்யப்பட்டு, லொறியின் ஓட்டுநரையும் உதவியாளரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

                            மீட்கப்பட்ட 16 மாடுகளில் 10 ஆண் மாடுகளும் 6 பசுக்களும் அடங்குவதாகவும் கைது

                            செய்யப்பட்டவர்களையும் மீட்கப்பட்ட மாடுகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

                              Posted in இலங்கை செய்திகள்

                              யாழில் ஒன்று கூடி பேசிய கோட்டா அடிமைகள்

                              யாழில் ஒன்று கூடி பேசிய கோட்டா அடிமைகள்


                              வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜா அவர்களுக்கும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட

                              ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று பு நேற்று (31.10.2021) இடம்பெற்றது.


                              இச்சந்திப்பில், புதிய ஆளுநர் அவர்களுக்கு அங்கஜன் இராமநாதன் அவர்கள் வாழ்த்துக்களை

                              தெரிவித்ததுடன், வடக்கில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடினார்கள்.

                                Posted in Uncategorized

                                பிரிட்டனில் முழங்கிய கோட்டா – இது முக்கியமாம்

                                பிரிட்டனில் முழங்கிய கோட்டா – இது முக்கியமாம்

                                இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்துச் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்,

                                நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம் என்று எடுத்துரைத்தார்.

                                ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் COP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக்கு இணையாக “நைதரசனை மீண்டும் கண்டுபிடித்தல், காலநிலை மாற்றம், சுகாதார உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் நிலையான பொருளாதாரத்துக்கான தீர்வுகள் மற்றும் இணைச் செயற்பாடுகள்” என்ற தலைப்பின் கீழ் இலங்கை ஏற்பாடு செய்திருந்த விசேட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

                                அந்நாட்டு நேரப்படி, நேற்று (31) மாலை 5.00 மணிக்கு இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது.

                                நிலையான அபிவிருத்தியே தமது அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பாகும் என்று எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்துக்கமைய, இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட தேசிய நிர்ணயங்கள் மற்றும் அபிலாஷைகள் என்பன நன்கு பிரதிபலிக்கின்றன என்று குறிப்பிட்டார்.

                                நவீன, விஞ்ஞான பொறிமுறைகள் மற்றும் பண்டைய வழிமுறைகள் ஊடாக, சுற்றாடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதே, தற்போது எமக்கு உள்ள சவாலாகக் காணப்படுகின்றது. இலங்கையில் விவசாயிகளிடையே, பல தசாப்தங்களாக சிறுநீரக நோய் பரவுவது பாரிய பிரச்சினையாக உள்ளது. இரசாயனப் பசளையை அதிகளவில் பயன்படுத்துவதே இதற்கு மிக முக்கிய காரணமாகியுள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், இச்சூழ்நிலையிலேயே இரசாயனப் பசளை இறக்குமதியைக் குறைப்பதற்கும் சேதன விவசாயத்தை அதிகளவில் ஊக்குவிப்பதற்கும் எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது” என்றும் குறிப்பிட்டார்.

                                “இச்செயற்பாடுகள் பாரியளவில் பாராட்டப்பட்டாலும், ஒருசில விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றோம். இரசாயனப் பசளைப் பயன்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் குழுக்களுக்கு மத்தியில், அதிகளவில் பசளையைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரித்துக்கொள்ளும் வழிவகைகளைக் கையாளப் பழகியிருக்கும் விவசாயிகளும் இதனை எதிர்க்கின்றனர். இலங்கையின் சிறந்த விவசாய உரிமைகளை அவதானிக்கும்போது, இந்நிலை மிகவும் வருத்தத்துக்குரியது” என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

                                அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்ற வகையில் முகங்கொடுத்து வருகின்ற வளப் பற்றாக்குறைக்கு மத்தியிலேயே, சுற்றாடல் தொடர்பான இலங்கையின் முற்போக்கு நிகழ்ச்சி நிரல் செயற்படுத்தப்படுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அபிவிருத்தித் திட்டங்களோடு அவ்வாறான நிகழ்ச்சி நிரல் ஒன்றை நடைமுறைப்படுத்துவதென்பது, விசேடமாக நோய்த் தொற்றின் பின்னர் அபிவிருத்தி அடைந்துவரும் அனைத்து நாடுகளுக்கும் பாரியதொரு சவாலாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

                                அவ்வாறான நாடுகளுக்கான அபிவிருத்தி உதவிகள், தொழில்நுட்பப் பரிமாற்றல்கள், திறன் அபிவிருத்தி, முதலீடுகள் மற்றும் நிதி உதவிகளையும் இயலுமான பங்களிப்புகளையும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் வழங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அவற்றில் வர்த்தகத்துக்கு பாரியதொரு பொறுப்பு உள்ளதோடு மேலாண்மைக்காக முதலீடு செய்யும்போது, பாரியதொரு பிரதிபலன் கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

                                எதிர்காலச் சந்ததியினருக்காகவே, இந்தப் பூமியின் பாதுகாவலர்களாக நாம் அனைவரும் இன்று வாழ்ந்து வருகின்றோம் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இயலுமான வகையில் அதற்குப் பங்களித்து, சுகாதார நலனை உறுதி செய்துகொள்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

                                அனைவரும் ஒற்றுமையாகவும் நல்லெண்ணத்துடனும் இதனை நடைமுறைப் படுத்துவோமாயின், மக்களுக்கும் எமுது பூமிக்கும் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் மேலும் தெரிவித்தார்.

                                100 சதவீதமளவில் பசுமை விவசாயத்துக்கு மாறுவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ள உலகின் முதல் நாடாக இலங்கை இருப்பதாகக் குறிப்பிட்ட சுற்றாடற்றுறை அமைச்சர் மஹிந்த அமரவீர, காலநிலை மாற்றத்துக்கான சிறந்த தீர்மானத்துடன்கூடிய பசுமை – சமூகப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அதன் நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்.

                                வரலாற்றுக் காலம் முதல் தற்போது வரை முன்னெடுக்கப்பட்டுள்ள நைதரசன் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்த அமைச்சர், நைதரசன் கண்டுபிடிக்கப்பட்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இலங்கையும் அந்தச் சவாலை வெற்றிகொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

                                சர்வதேச நைதரசன் முகாமைத்துவக் கட்டமைப்பின் பணிப்பாளர் பேராசிரியர் மார்க் ஸட்ன் அவர்கள், “நைதரசன் மற்றும் காலநிலை” என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார்.

                                “காலநிலைக்கு முகங்கொடுப்பதற்கான இயலுமை மற்றும் ஒத்துப்போதல் தொடர்பாக இலங்கையின் எதிர்பார்ப்புகள் COP: 26 மற்றும் அதனைக் கடந்த” என்ற தலைப்பின் கீழ், சுற்றாடற்றுறை அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க கருத்து தெரிவித்ததோடு, ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிரிசேனவும் தமது கருத்துக்களை முன்வைத்தார்.