Posted in இலங்கை செய்திகள்

இ.போ.ச பஸ் – ரயில் சேவைகள் அதிகரிப்பு

இ.போ.ச பஸ் – ரயில் சேவைகள் அதிகரிப்பு

அரச ஊழியர்கள் வழமைப்போன்று கடமைக்கு சமூகம் அளிப்பதாலும், பாடசாலைகள் மீண்டும்

திறக்கப்பட்டதினாலும் இன்று (தொடக்கம் சேவையில் ஈடுப்படும் இ.போ.ச பஸ் மற்றும் அலுவலக ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பட்டுள்ளன.

இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவின் பிரதி பொது முகாமையாளர்

பண்டுக்க சுவர்ண ஹங்ஷ இதுதொடர்பாக தெரிவிக்கையில், 5,000 க்கு மேற்பட்ட பஸ்கள் நாளாந்த சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

பசில் இந்தியா பயணம்

பசில் இந்தியா பயணம்

புத்தாண்டுக்கு முன்னரான விடுமுறையைக் கழிப்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்று, புத்தாண்டு தினத்தன்று நாடுதிரும்பிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ, இந்தியாவுக்கு மீண்டும்

விஜயம் செய்யவுள்ளார். நிதியமைச்சராக அவர், பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக இந்தியாவுக்குச் சென்று பல தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று இந்தியாவுக்குச் செல்லும் அவர், ஜனவரி 12 ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பூகோள மாநாட்டிற்காக இந்தியா செல்லும் நிதியமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது டிசெம்பர் முதலாம் திகதியன்று பெசில் ராஜபக்‌ஷ இந்தியா சென்றிருந்தார்.

இந்த விஜயத்தின்போது திருகோணமலை எரிபொருள் களஞ்சியசாலையின் நவீனமயமாக்கல் ,

எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள நான்கு நிவாரணங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    பிள்ளைகளை நிர்வாணமாக்கி மிளகாய்த்தூள் பூசிய தந்தை

    பிள்ளைகளை நிர்வாணமாக்கி மிளகாய்த்தூள் பூசிய தந்தை

    ஹட்டன்- குடாகம பிரதேசத்தில் சிறுவர்கள் இருவரை துன்புறுத்திய அச்சிறுவர்களின் தந்தை ஹட்டன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

    6 வயதுடைய சிறுவனும் 7 வயது சிறுமியுமே, இவ்வாறு அவர்களது தந்தையால் துன்புறுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது அவர்களது தாயும் அருகிலிருந்துள்ளார்.

    அச்சிறுவர்களை நிர்வாணமாக்கி, அவர்களது முகத்திலும் உடலிலும் மிளகாய்த்தூளைப் பூசி, அவர்களது வீட்டுக்கு முன்பாகவுள்ள மரத்தில் கட்டி வைத்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

    குறித்த சிறுவர்கள் இருவரும் விறகுக் கட்டு ஒன்றை திருடியதாகவும் அதற்கே இவ்வாறு தண்டனை வழங்கியதாகவும் அச்சிறுவர்களின் தந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான சிறுவர்கள் இருவரும் சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

      கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
      Posted in இலங்கை செய்திகள்

      வங்கியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

      வங்கியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

      நாரம்மலாவில் உள்ள அரச வங்கியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 20 வயதான பெண் ஊழியர் படுகாயமடைந்துள்ளார்.

      வங்கியின் பாதுகாப்பு அதிகாரிக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

      காயங்களுக்கு உள்ளான அந்த பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

        Posted in இலங்கை செய்திகள்

        மகிந்த அப்படி செய்யவில்லை -குத்துகாரணம் அடிக்கும் கோட்டா

        மகிந்த அப்படி செய்யவில்லை -குத்துகாரணம் அடிக்கும் கோட்டா

        பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன.

        சில நாட்களுக்கு முன்னரும் இன்றையதினமும் இவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த

        செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதம அமைச்சின் அலுவலகம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

        பிரதமர் இராஜினாமா என்ற செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதமரின்

        ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

          Posted in இலங்கை செய்திகள்

          கோட்டா விசேட கூட்டம் – நடக்க போவது என்ன ..?

          கோட்டா விசேட கூட்டம் – நடக்க போவது என்ன ..?

          நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில், இன்று (03) விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று

          நடைபெறவுள்ளது. வழமைப்போன்று அல்லது மிகவும் இரகசியம் காக்கும் வகையில், மூடிய கதவுகளுக்குள் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக அறியமுடிகின்றது.

          சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்றைய விசேட அமைச்சரவையில் ஆகக் கூடுதலான கவனம் செலுத்தப்படுமென அறியமுடிகின்றது.

          இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் மற்றும் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர் ஆர்டிகல ஆகியோரும் பங்கேற்று, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கையிருப்பு உள்ளிட்டவை தொடர்பில் அமைச்சரவைக்குத் தெளிவுப்படுத்துவர்.

          இந்நிலையில், தனிப்பட்ட விஜயமொன்றை ​மேற்கொண்டு புத்தாண்டுக்கு முன்னரே, அமெரரிக்கவுக்குச் சென்றிருந்த நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ, 2022 புத்தாண்டு தினத்தன்று நாடு திரும்பினார். அவரும் இன்றைய விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டாயமாக பங்கேற்பார்.

          இன்றைய வி​சேட அமைச்சரவையில், சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெற்றுக்கொள்வது தொடர்பில் மட்டுமே விரிவாக ஆராயப்படும்

          முடங்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை இலங்கைக்கு இல்லையென்பதில் மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால் உறுதியாக இருக்கிறார்.

          எனினும், சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டுமென அமைச்சர்கள் சிலர் விரும்புகின்றனர். அரசாங்கம் அங்கு செல்லக்கூடாதென அமைச்சர்களான பந்துல குணவர்தன மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

          சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தான் தனிப்பட்ட முறையில் நம்புவதாக அமைச்சர் சி.பி ரத்நாயக்க கூறினார். ” சர்வ​தே நாணய நிதியம், எங்கள் மீது விதிக்க விரும்பும் அனைத்து நிபந்தனைகளையும் நாங்கள் கடைப்பிடிக்கிறோம் என்று அர்த்தமல்ல, ஆனால், குறைந்தபட்சம் நாங்கள் ஒரு உரையாடலையாவது ஆரம்பிக்கவேண்டும். சர்வதேச நாணய நிதியத்தை நிராகரிப்பதும் மக்களுக்கு உதவாது என்றார்.

          சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்கம் செல்ல வேண்டுமென தாம் நம்புவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சரவையில் இருக்கும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

            Posted in இலங்கை செய்திகள்

            வீட்டில் சடலமாக தமிழ் போலீசார் மீட்பு

            வீட்டில் சடலமாக தமிழ் போலீசார் மீட்பு

            யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

            கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

            மட்டக்களப்பைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை ரமணன் (வயது-47) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

            அவரது குடும்பத்தினர் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு சென்றிருந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார் என்றும் பொலிஸார் கூறினர்.

            அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

              கிளிநொச்சியில் எரிந்த கடை
              Posted in இலங்கை செய்திகள்

              கிளிநொச்சியில் எரிந்த கடை – சதி முயற்சியா ..?

              கிளிநொச்சியில் எரிந்த கடை – சதி முயற்சியா ..?

              கிளிநொச்சி சேவியர் கடைச் சந்திக்கருகில் இயங்கி வந்த அமுத கடல் கட்டட பொருட்கள்

              விற்பனை நிலையத்தில் இன்று (02) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய தீ அனர்த்தம்

              காரணமாக கோடிக்கனக்கான பெறுமதியான பொருட்கள் எரிந்து அழிந்துள்ளன.

              மின்சார ஒழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

              சம்பவ இடத்திற்கு கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவினர் சென்று தீயினை 11

              மணியளவில முழுமையாக கட்டுப்படுத்தினார்கள்.

              கிளிநொச்சியில் உள்ள பாரிய கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் ஒன்றாக இயங்கி

              வந்த மேற்படி நிறுவனத்தின் ஏற்பட்ட தீயினால் கோடிக்கான பெறுமதியான கட்டடப் பொருட்கள் எரிந்து அழிந்தும், முற்றாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துமுள்ளன

                சிறிதரன்
                Posted in Uncategorized

                துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற கோட்டா – பொங்கிய சிறிதரன் video

                துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற கோட்டா – பொங்கிய சிறிதரன்

                பொருளாதாரத்தை கட்டி வளர்க்கின்ற ஒரு நல்லெண்ணம் பொருந்திய ஜனாதிபதி இந்நாட்டில்

                இல்லை எவ் விடயத்தையும் துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற ஜனாதிபதியே

                காணப்படுகின்றார்- சி.சிறீதரன்

                இதில் அழுத்தி காணொளி பாருங்கள்

                https://www.facebook.com/ImShritharan/videos/426069292549340/

                  உயிர் குடிக்கும் டிப்பர்
                  Posted in இலங்கை செய்திகள்

                  உயிர் குடிக்கும் டிப்பர் – மிதக்கும் உடல்கள்

                  உயிர் குடிக்கும் டிப்பர் – மிதக்கும் உடல்கள்

                  கேப்பாபிலவு – புதுக்குடியிருப்பு வீதியில், இன்று (01) மாலை 5.30 மணியவில் இடம்பெற்ற விபத்தில்

                  இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

                  வற்றாப்பளை பகுதியில் இருந்து கேப்பாபிலவு பகுதிநோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த

                  மூவர், எதிர்திசையில் வந்த டிப்பருடன் மோதியதையடுத்தே விபத்து சம்பவித்துள்ளது.

                  இந்த சம்பவத்தினை தொடர்ந்து டிப்பர் சாரதி முள்ளியவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

                  விபத்தில், பிலக்குடியிருப்பு கேப்பாபிலவினை சேர்ந்த கிருஸ்ணசாமி மாரிமுத்து (வயது 48), அதே

                  இடத்தைச் சேர்ந்த சூரியகுமார் கரிதாஸ் (வயது 17) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

                  ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பை சேர்ந்த சண்முகம் நிறோஜன் (வயது 22) என்ற இளைஞன்

                  படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு

                  மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

                  விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் கிராம மக்களுக்கும் இடயில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

                  டிப்பர் வகானத்தினை அந்த இடத்தில் விட்டு எடுத்துசெல்லமுடியாதவாறு மக்கள் ஒன்று

                  கூடியதால் பதற்ற நிலை ஏற்பட்டு பொலிஸாருக்கும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

                    சித்தி விநாயகர் ஆலய சிலை உடைப்பு - பதட்டம் அதிகரிப்பு
                    Posted in Uncategorized

                    சித்தி விநாயகர் ஆலய சிலை உடைப்பு – பதட்டம் அதிகரிப்பு

                    சித்தி விநாயகர் ஆலய சிலை உடைப்பு – பதட்டம் அதிகரிப்பு

                    அக்கரபத்தனை நகரில் ஒருவகையான பதற்றம் நிலவுவதாகவும் அங்கிருக்கும் கடைகளில் சில கடைகள் இழுத்து மூடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

                    அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் திருவுருவச் சிலைகளும் பொம்மைகளும் இனந்தெரியாதோரால் நேற்றிரவு அல்லது இன்று விடியற்காலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

                    இது தொடர்பாக ஆலய நிர்வாக சபையினர் அக்கரபத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

                    அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள பிரதான ஆலயமான சித்தி விநாயகர் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை விசேட பூஜை

                    வழிபாடுகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக சபையினர் மேற்கொண்டுள்ளனர்.

                    புனர்நிர்மாண பணிகள் நிறைவடைந்து தற்பொழுது பொம்மைகளுக்கு வெளிப்புற பூச்சு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்து நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

                    இதனையடுத்து ஆலயத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் கடும் எதிர்பை தெரிவித்து வருகின்றனர்.

                    இது இனந்தெரியாத குழு ஒன்றின் செயற்பாடு எனவும் ஆலயத்தில் நடைபெற இருந்த கும்பாபிஷேக நிகழ்வை குழப்புவதற்கான செயற்பாடு எனவும் மேலும் மத ரீதியிலான

                    முரண்பாடுகளை உருவாக்க திட்டமிடப்பட்ட செயற்பாடாகவும் இதனை கருதுவதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர்.

                    இது தொடர்பாக அக்கரபத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                    லிந்துலை பகுதியில் அமைந்துள்ள மாதா சிலை ஒன்றும் அண்மையில் உடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

                      கொரானா
                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் கொரானாவுக்கு 17 பேர் மரணம்

                      இலங்கையில் கொரானாவுக்கு 17 பேர் மரணம்

                      இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கி கடந்த

                      தினம் 17 பேர் பலியாகியுள்ளனர் மேலும் அதே தினம் 499 பேர் பாதிக்க பட்டுள்ளதாகக் சுகாதார

                      அமைச்சு தெரிவித்துள்ளது

                        Posted in இலங்கை செய்திகள்

                        வீடுகளுக்கு வரவுள்ள வைத்தியர்கள் – கிளி மருத்துவமனை அறிவிப்பு

                        வீடுகளுக்கு வரவுள்ள வைத்தியர்கள் – கிளி மருத்துவமனை அறிவிப்பு

                        கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை இன்று முதல் வீட்டுத் தரிசிப்பும், பராமரிப்பும் வைத்திய

                        சேவையினை பொது மக்களின் வீடுகளுக்கு வருகை தந்து வழங்கவுள்ளனர் என மாவட்ட

                        வைத்தியாசலையின் பணிப்பாளர் மருத்துவர். எஸ். சுகந்தன் அறிவித்துள்ளார்.

                        இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

                        கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய குழுவினர் இன்று முதல் நாட்பட்ட

                        நோயாளர்கள் மற்றும் வீட்டில் படுகை நோயாளர்களாக உள்ளவர்களின் மருத்துவ தேவையினை அவரவர் வீடுகள் தேடி வந்து பூர்த்தி செய்யவுள்ளனர்.

                        எனவே இச் சேவையினை பெற்றுக்கொள்ள விரும்பும் பொது மக்கள் 021 2283037 எனும்

                        தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளுமாறும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                        மேலும் இச் சேவையின் முதற்கட்டமாக பொன்னகர், மலையாளபுரம், பாரதிபுரம்,

                        விவேகானந்தநகர், கிருஸ்ணபுரம், உதயநகர் மேற்கு, உதயநகர் கிழக்கு, அம்பாள்குளம்,

                        ஆனந்தபுரம், தொண்டமான்நகர், கணகாம்பிகைகுளம், அம்பாள்புரம், திருவையாறு, திருவையாறு

                        மேற்கு இரத்தினபுரம், கிளிநொச்சிநகர், மருதநகர்,பன்னங்கண்டி, கனகபுரம், திருநகர் வடக்கு

                        திருநகர் தெற்கு,ஜெயந்திநகர், பெரியபரந்தன் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் மேற்கொள்ளப்படவுள்ளதும் எனவும் அறிவித்துள்ளனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          ரயில் கார் மோதல் ஒருவர் மரணம் – யாழில் சம்பவம்

                          ரயில் கார் மோதல் ஒருவர் மரணம் – யாழில் சம்பவம்

                          யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த


                          ரயிலுடன் கார் ஒன்று மோதி சிதறியதில் அதில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளார்

                          கார் பலத்த சேதமடைந்துள்ளது

                          ரயில்வே கடவையை கடக்க முற்பட்ட பொழுதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது

                            பெண்கள்
                            Posted in இலங்கை செய்திகள்

                            நீரில் அடித்து செல்ல பட்ட யாழ்ப்பாணத்து பெண்கள்

                            நீரில் அடித்து செல்ல பட்ட யாழ்ப்பாணத்து பெண்கள்

                            ஹங்வெல்ல – அவிசாவளை, புவக்பிட்டிய தும்மோதர குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூவரில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

                            யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உறவினர் வீட்டுக்கு வந்த இவர்கள் நேற்று உறவினர்களுடன் குமாரி எல்ல நீர்வீழ்ச்சிக்கு நீராட சென்றுள்ளனர்.

                            நேற்று மாலை பெய்த கடும் மழையினால் திடீரென நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

                            இதன் காரணமாக நீராடிக்கொண்டிருந்த ஆறு நபர்கள் நீரில் அடித்துச் சென்றுள்ளனர்.

                            மூன்று நபர்களை பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர். ஒரு யுவதியும் இரண்டு சிறுமிகளும் நீரில் அடித்துச் சென்றுள்ளனர்.

                            ஹங்வெல்ல பொலிசார் மற்றும் களுவக்கல்ல இராணுவ முகாமின் அதிகாரிகள், பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை தேடியுள்ளனர்.

                            இதன்போது, இரவு 11 மணியளவில் சிறுமி ஒருவரின் சடலம் நீர்வீழ்ச்சியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.

                            உயிரிழந்த சிறுமி 16 வயதுடைய எக்மன் தேவதாஸ் இஷாரா என்று நம்பப்படுகின்றது.

                            மேலும், காணாமல் போயுள்ள இருவரையு தேடும் பணி தொடர்கின்றது.

                            காணாமல் போனவர்கள்

                            எக்மன் தேவதாஸ் மிதுஷா வயது 14
                            132 மடம் கொன்வன்ட் வீதி யாழ்ப்பாணம்

                            வேவனி ஜேசுதாஸ் 29 வயது இலக்கம் 30/3 கெரவலபிட்டிய – வத்தளை

                            காணி
                            Posted in இலங்கை செய்திகள்

                            திருமணம் செய்த இளைஞர்களுக்கு அரசாங்கத்தினால் காணி

                            திருமணம் செய்த இளைஞர்களுக்கு அரசாங்கத்தினால் காணி

                            புதிதாக திருமணம் செய்த ,குறைந்த வருமானமுடைய இளம் வயதினருக்கு, 2000 காணிகளை

                            பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

                            காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான

                            காணிகளை குறைந்த வருமானம் பெறும் இளைஞர் யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை

                            எடுக்கப்படும் என காணி அமைச்சின் செயலாளர் ஆர். டி. ரணவக்க தெரிவித்துள்ளார்.

                            ஜனவரி மாதம் முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலிருந்தும் இதற்கான

                            விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              இராணுவத் தளபதி வடக்கிற்கு விஜயம்

                              இராணுவத் தளபதி வடக்கிற்கு விஜயம்

                              புத்தாண்டு விடியலை முன்னிட்டு புதுவருடகால பாராட்டுக்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், தங்கள் குடும்பங்களிலுருந்து அன்புக்குரியவர்களிடமிருந்து விலகி, வடக்கில் தமது கடமைகளில்

                              ஈடுபட்டுள்ள முப்படையினர் மீதான தனது அக்கறையை எடுத்துக்காட்டுவதற்காவும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியும் பசுமை விவசாய நடவடிக்கை மையத்தின்

                              தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று முன்தினம் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டார்.

                              இதன்போது மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிரிழந்த அனைத்து முப்படை வீரர்களின் நினைவாக முதலில் அஞ்சலி செலுத்தினார்.

                              குணமடைந்து வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் காயமடைந்த போர்வீரர்கள் நலமுடன் இருக்க பிராத்தனை செய்தார். மேலும் முப்படையினர்களினால் மீட்புபணிகளில் ஆற்றப்படும் சிறந்த

                              பணிகளை இராணுவத் தளபதி பாராட்டியதுடன் அதேபோன்று எதிர்வரும் காலங்களிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் இராணுவத் தளபதி கேட்டுக் கொண்டார்.

                              ‘2021 ஆம் ஆண்டு முழுவதும் கொவிட்-19 தொற்றுநோய்களின் போது, நீங்கள் மற்றும் எங்கள் சகோதர சேவைகள், சொந்த உயிருக்கு ஆபத்துகள் இருந்தபோதிலும், தேசத்தின் சிறந்த

                              நலனுக்காக எவ்வாறு செயல்பட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ‘முடியாதென்று எதுவும் கிடையாது’. என்ற உறுதிமொழியுடன் தொற்றுநோயின் மோசமான நிலையைக்

                              கட்டுப்படுத்துவதன் மூலம் சிறந்த முடிவுகளைக் கொண்டுவருவதற்கு இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்குவதற்கு கடற்படை பெரிதும் பங்களித்துள்ளது.

                              ஜனாதிபதி மற்றொரு சவாலான சேதனை பசளை உற்பத்தியை ஆரம்பித்து அதற்காக தொழில்முறை வீரர்களாகிய எமக்கு இப்பணியை ஒப்படைத்துள்ளார். மிகுந்த நம்பிக்கையுடன் பசுமை வேளாண்மை நடவடிக்கை மையத்தின் தலைவராக ஜனாதிபதி என்னை நியமித்துள்ளார்,

                              மேலும் இந்த புதிய சவாலான பொறுப்பில் உங்கள் பங்கேற்பு நாட்டை பசுமையாக மாற்றும் அதே வேளையில் விரும்பிய இலக்குகளை அடைய உதவும், ‘என்று அவர் குறிப்பிட்டார்.

                              போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் ஏனைய சமூகவிரோத செயற்பாடுகளை எமது மண்ணில் இருந்து ஒழிப்பதற்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவு அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

                              ஜனாதிபதியின் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வசதியற்ற பாடசாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை கருத்தில் கொண்டு பாடசாலைக் கட்டிடங்கள், விளையாட்டு

                              மைதானங்கள், பொது மைதானங்கள், பொது இடங்கள், குளங்கள், மேம் பாலங்கள் போன்றவற்றை நிர்மாணிப்பது போன்ற அபிவிருத்தி சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவதும்

                              சமாந்தர முக்கியத்துவமானது. அந்த தேசிய பணிகளுக்கான உங்கள் அர்ப்பணிப்பின் அளவு வரும் ஆண்டிலும் எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்

                              Posted in இலங்கை செய்திகள்

                              26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் 05 சந்தேக நபர்கள் கைது

                              26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் 05 சந்தேக நபர்கள் கைது

                              முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, சுகந்திபுரத்தில் கடற்படையினரால் நேற்றையதினம் (டிசம்பர், 30) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து சந்தேக நபர்கள்

                              கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

                              இதற்கமைய, கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் கீழ் உள்ள கோட்டாபய முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் முல்லைத்தீவு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து

                              மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 89 கிலோ மற்றும் 200 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியதுடன் நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

                              மேலும், இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர்

                              கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

                              இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் சந்தைப் பெறுமதி ரூ.26 மில்லியனுக்கும் அதிகம் என நம்பப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

                              இந்த முழு நடவடிக்கையும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய இடம்பெற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் விஸ்வமடு தெற்கு,

                              உடையார்கட்டு, உடையார்கட்டு தெற்கு மற்றும் மூங்கிலாறு ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21 முதல் 43 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

                              கைப்பற்றப்பட்டுள்ள சட்டவிரோத பொருட்களுடன் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட

                              நடவடிக்கைகளுக்காக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது

                                Posted in Uncategorized

                                இலங்கையில் கொரானாவுக்கு 18 பேர் மரணம்

                                இலங்கையில் கொரானாவுக்கு 18 பேர் மரணம்

                                இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர்


                                இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 14,962 ஆக பதிய பெற்றுள்ளது

                                தொடர்ந்து நோயானது பரவி வருவதால் நாடு மீளவும் முழு அடைப்புக்கு செல்ல கூடும் என நம்ப படுகிறது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையில் பால்மா விலை திடீரென அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்

                                  இலங்கையில் பால்மா விலை திடீரென அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்

                                  அதன்படி, 400 கிராம் பால் பெக்கெட் ஒன்றின் விலை 60 ரூபாவாவலும், ஒரு கிலோ கிராம் பால் மா

                                  பெக்கெட் ஒன்றின் விலையை 150 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                                  இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக

                                  பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.