மாணிக்கவாசகர் இளஞ்செழியன்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டதுடன்,

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டிருந்த மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்களால் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    கொரோனாத் தொற்று ஏற்பட்டாலும் பணிக்குச் செல்ல வேண்டும்

    கொரோனாத் தொற்று ஏற்பட்டாலும் பணிக்குச் செல்ல வேண்டும்

    கொரோனாத் தொற்று ஏற்பட்ட மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்கள், தொடர்ந்து பணிக்குச் செல்ல வேண்டும் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

    இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பிரான்ஸில் ஒவ்வொரு நாளும் கொரோனோ பாதிப்பு

    அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே, மருத்துவமனைகளில் அதிக நோயாளிகள் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படலாம்.

    எனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சுகாதார ஊழியர்கள் சிறிய அறிகுறிகள் ஏற்பட்டால்

    அவர்கள் வேலைக்கு செல்லலாம். அவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டிருக்க

    தேவையில்லை. மருத்துவமனையில் ஊழியர்கள் தட்டுப்பாட்டை சரி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் இந்த நடவடிக்கையால் பிறருக்கு தொற்று பரவக்கூடிய அபாயம் இருக்கிறது. எனினும்

    அத்தியாவசிய மருந்து தேவைகள் தொடர்ந்து நடைபெற இந்த நடவடிக்கை

    மேற்கொள்ளப்படவுள்ளது”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

      கோழிகள்
      Posted in இலங்கை செய்திகள்

      142 கோழிகள், வெள்ள அனர்தத்தினால் இறந்துள்ளன.

      மட்டக்களப்பு, காத்தான்குடியில் கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்ட 142 கோழிகள், வெள்ள அனர்தத்தினால் இறந்துள்ளன.

      கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடைமழையை அடுத்து ஏற்பட்ட

      வௌ்ளத்தில், காத்தான்குடி முதலாம் குறிச்சி பகுதியிலுள்ள கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்ட

      142 கோழிகள் வியாழக்கிழமை (06) இறந்துள்ளன.

        Posted in இலங்கை செய்திகள்

        மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

        மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

        முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்

        பாராளுமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

        2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள

        குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்குமாறே மைத்திரி கோரிநின்றார்.

          காக்கை தீவு மீன் சந்தை
          Posted in இலங்கை செய்திகள்

          காக்கை தீவு மீன் சந்தை, இறங்குதுறை சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை

          காக்கை தீவு மீன் சந்தை, இறங்குதுறை சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை

          காக்கை தீவு மீன் சந்தை மற்றும் இறங்குதுறை போன்றவை, சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி

          மன்றத்தினால் சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை, இதனை ஆராய்ந்து தனக்கு

          அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

          காக்கைதீவு மீன் சந்தை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றைய (06) தினம் விஜயம் மேற்கொண்ட நிலையிலேயே குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

          இந்த முறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

          இதேவேளை மின்விளக்கு பொருத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பிரதேச கடற்றொழில் செயற்பாட்டாளர்கள் கடற்றொழில் அமைச்சரிடம் முன்வைத்தனர்.

          குறித்த கோரிக்கைகள் தொடர்பாக அவதானம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்ட கடற்றொழில் அமைச்சர், முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

            Posted in இலங்கை செய்திகள்

            எரிவாயு தட்டுப்பாடு – பல நூறு உணவகங்கள் அடித்து பூட்டு

            எரிவாயு தட்டுப்பாடு – பல நூறு உணவகங்கள் அடித்து பூட்டு

            இலங்கையில் சிலிண்டர் தட்டு பாடு மற்றும் வெடித்து சிதறி வந்த நிலையில் இருபது வீதமான

            உணவகங்கள் தற்காலிகமா அடித்து மூட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

            கோட்டா ஆட்சியில் மக்கள் சொல்லென்னா துயரங்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              போலி சீன உர கப்பலுக்கு -6.7 மில்லியன் டொலர் செலுத்தும் இலங்கை

              போலி சீன உர கப்பலுக்கு -6.7 மில்லியன் டொலர் செலுத்தும் இலங்கை

              சீனாவில் இருந்து இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட உரம் போலியான ,தரமற்ற முறையில் உள்ளவை

              என கோரி குறித்த கப்பல் சீனாவுக்கு திருப்பி அனுப்ப பட்டது

              மேற்படி விடயம் தொடர்பில் சர்ச்சைகள் முறுகல் எழுந்து வந்த நிலையில் தற்போது குறித்த

              கப்பலுக்குரிய 6,7 மில்லியன் டொலரினை இலங்கை நாளை செலுத்த உள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது

              அமைச்சரவை
              Posted in இலங்கை செய்திகள்

              10ஆம் திகதி அமைச்சரவை மாற்றம்

              10ஆம் திகதி அமைச்சரவை மாற்றம்

              எதிர்வரும் 10ஆம் திகதி அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

              அமைச்சரவை மாற்றத்தின் போது பல அமைச்சுப் பதவிகள் மாற்றப்படவுள்ளதுடன் விவசாய அமைச்சு பதவியும் மாற்றப்படவுள்ளதாக தெரியவருகிறது.

              தற்போது காணி அமைச்சராக உள்ள எஸ்.எம்.சந்திரசேன புதிய விவசாய அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

                Posted in இலங்கை செய்திகள்

                தனியார் துறை ஊழியர்களுக்கும் 5,000 ரூபா கொடுப்பனவு

                தனியார் துறை ஊழியர்களுக்கும் 5,000 ரூபா கொடுப்பனவு

                வாழ்க்கை சுமைக்காக அரச ஊழியர்களை போன்று தனியார் துறையில் பணியாற்றுவோருக்கும் ஒரே மாதிரியாக கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

                நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் தனியார் துறைக்கும் 5,000 ரூபா கொடுப்பனவு அவசியம் கிடைக்க வேண்டும் என்று நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

                இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர், இந்த விடயம் தொடர்பிலான முதலாவது சுற்று பேச்சுவார்த்தை இம்மாதம் 7 ஆம், 10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

                தனியார் துறையில் ஆடை தொழில்துறை, பெருந்தோட்ட தொழில்துறை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை நேரடியாக மற்றும் அலுவலக சேவை சட்டத்தில் உள்வாங்கும்

                நிறுவனங்கள் அடங்கலாக அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிமார்களை அழைத்து அவர்களுடன் இந்த 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும்

                நட்புறவுடனான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

                  எஸ்.பி.திவாரத்ன
                  Posted in இலங்கை செய்திகள்

                  தமிழர்களிடத்தில் மன்னிப்புக் கேட்டால் பிரச்சினை தீரும்

                  தமிழர்களிடத்தில் மன்னிப்புக் கேட்டால் பிரச்சினை தீரும்

                  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்களமக்களிடம் அடிமட்டத்துக்கு இறங்கி பகிரங்கமாக, தேசிய ரீதியில் மன்னிப்புக் கோரினாலேயே எமது நாட்டின் அரைவாசிப்

                  பிரச்சினைகள் தீா்ந்து விடுமென யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் மீள் புனா்வாழ்வு மற்றும் அத்தியாவசிய சேவை ஆணையாளராக இருந்த எஸ்.பி.திவாரத்ன தெரிவித்துள்ளார்.

                  ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்தோன்றி சாட்சியமளிக்கும்போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                  அவா் அங்கு தொடா்ந்து சாட்சியமளிக்கையில், தமிழ், முஸ்லிம் மக்கள் நல்லவர்கள், எனது 40

                  வருடகால அரச சேவையில் அவர்களோடு இணைந்து சிறப்பாக சேவையாற்றியுள்ளேன். கொடுத்த ஒரு விடயத்தை அவா்கள் சிறப்பாக செய்து தருவார்கள் எனவும் தெரிவித்தார்.

                  நாட்டில் இன்றும் மொழிப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இன்றும் தெற்கில் உள்ள அரச

                  அதிகாரிகள் தனிச் சிங்களத்திலேயே வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு அலுவலக கடிதங்களை அனுப்புகின்றார்கள்.

                  இம்மொழிப்பிரச்சினைக்கு அரசமட்டத்தில் இருந்து கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்க

                  வேண்டும். இந்த மொழிப்பிரச்சினைகள் இன்று மட்டுமல்ல ஜி.ஜி.பொண்னம்பலம் காலம்தொட்டு தொடர்கிறது எனவும் தெரிவித்தார்.

                  பேருந்து ஒன்றை
                  Posted in இலங்கை செய்திகள்

                  பேருந்து ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவர் கைது.

                  பேருந்து ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவர் கைது.

                  குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பேருந்து ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

                  கைது செய்யப்பட்டவர்கள் 39, 46, 53 வயதுடைய கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12 பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

                  பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில்

                  மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கராஜ மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக

                  விசாரணைகளுக்காக மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ்

                  ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ்

                  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ்

                  தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

                  அவருக்கு நடத்தப்பட்ட ரெபிட் அன்டீஜன் பரிசோதனையில், கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

                  கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

                  இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுடன், கடந்த சில தினங்களாக

                  நெருங்கி பழகியவர்கள், தங்களை தாங்களாகவே சுய தனிமையில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது

                    யாழ் பஸ்மீது தாக்குதல்- பீதியில் பயணிகள்
                    Posted in இலங்கை செய்திகள்

                    யாழ் பஸ்மீது தாக்குதல்- பீதியில் பயணிகள்

                    யாழ் பஸ்மீது தாக்குதல்- பீதியில் பயணிகள்

                    யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து

                    சபைக்குச் சொந்தமான பஸ் மீது தாக்குதலை மேற்கொண்டு, சாரதி மற்றும் நடந்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                    நெல்லியடி பஸ் நிலையத்தில் நேற்று (04) செவ்வாய்க்கிழமை இரவு குறித்த பஸ்ஸை, இடைமறித்த

                    கும்பலொன்று பஸ்ஸின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், சாரதி மற்றும் நடத்துனர் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.

                    அதில, காயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

                    சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

                    கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், ஏனைய நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

                    அதேவேளை , பருத்தித்துறை – திருகோணமலைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை

                    போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் மீது , நெல்லியடி புறாப்பொறுக்கி சந்தி பகுதியில் வைத்து இனம் தெரியாத கும்பல் கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

                    இன்று (04) புதன் கிழமை அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

                    சம்பவம் தொடர்பில் சாரதியால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

                    முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு

                      தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு

                      ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா

                      மாளிகையில் இன்று (05) முற்பகல் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

                      ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்களை, தியவடன நிலமே நிலங்க தேல வரவேற்றார்.

                      தலதா மாளிகைக்கு வழிபாட்டுக்காக வருகை தந்திருந்த பொதுமக்களும், ஜனாதிபதி அவர்களுக்கு அமோக வரவேற்பளித்தனர். இதன்போது அந்த மக்களுடன் சுமூகமாகக்

                      கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், அவர்களின் நலன் விசாரித்தறிந்து கொண்டார்.

                      மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும்

                      புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        வீட்டுக்கு வந்த பெண்ணை கற்பழித்த நபர் கைது

                        வீட்டுக்கு வந்த பெண்ணை கற்பழித்த நபர் கைது

                        திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை

                        விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் இன்று (4) உத்தரவிட்டார்.

                        மூதூர், தோப்பூர், பங்களா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய திருமணமான ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

                        சந்தேக நபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

                        சந்தேகநபர் அயல் வீட்டில் வசித்து வந்த 13 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்து சிறுமியின் பெற்றோர்களினால் மூதூர் பொலிஸ் நிலையத்தில்

                        மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

                        சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          மன்னார் நகர் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு

                          மன்னார் நகர் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு

                          மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு

                          ஒழிப்பு செயற்றிட்டம் நேற்றைய தினம் (04) மன்னார் பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

                          பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைஇ மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி

                          பணிமனை மற்றும் பிரதேச செயலகம்இ மாவட்ட செயலகம் இணைந்து இந் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளன.

                          வீடுகள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழல்களை அடையாளப்படுத்தல் மற்றும் அவற்றை அப்புறப்படுத்துதல் என்ற நோக்கில் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரதேச

                          செயலக உத்தியோகத்தர்கள்இ டெங்கு ஒழிப்பு செயலணிஇ உத்தியோகத்தர்கள்இ பாதுகாப்பு துறையினர் விசேட செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

                          இதேவேளை மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும்

                          வைத்தியசாலை பகுதிகளை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினரின் உதவியுடன் விசேட சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

                          இவ்வாரம் முழுவதும் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு மன்னார் மாவட்டத்தில்

                          உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்

                            டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்

                            சர்வதேச அளவில் அங்கிகரிக்கப்பட்ட ‘பிளக்செயின்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 15 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட நபர்களுக்கான ‘டிஜிட்டல் அடையாள அட்டை’ தேசிய

                            இளைஞர் சேவைகள் மன்றத்தினால், நேற்று (03) அறிமுகப்படுத்தப்பட்டது.

                            இளைஞர்களின் திறன்கள், கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட தரவுகளைக் கொண்ட தரவுத்தளமாகப் பயன்படுத்தக்கூடிய ‘டிஜிட்டல் அடையாள அட்டை’

                            அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் பணிப்பாளர் நாயகம் தமித விக்ரமசிங்க தெரிவித்தார்.

                            டிஜிட்டல் அடையாள அட்டையானது, அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தரவு வங்கியாக பயன்படுத்தப்படுவதோடு, இளைஞர்களுக்கு

                            நேரடி வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான கருவியாகப் பயன்படுத்த முடியும் எனவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தெரிவித்தார். .

                            சர்வதேச அளவில் அங்கிகரிக்கப்பட்ட ‘பிளக்செயின்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய குறித்த ‘டிஜிட்டல் அடையாள அட்டை’ ஒரு தகவல் தொழில்நுட்பக் கருவியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

                            இந்த அடையாள அட்டை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்று (03) இடம்பெற்றது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              வெற்றி கொள்ள ஒன்றிணைந்து செயற்படுவோம் – கடற்றொழில் அமைச்சர்

                              வெற்றி கொள்ள ஒன்றிணைந்து செயற்படுவோம் – கடற்றொழில் அமைச்சர்

                              கடந்த காலங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றதைப் போன்று

                              எதிர்காலத்திலும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு சவால்களில் வெற்றியடைய வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

                              கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளை புதிய ஆண்டில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

                              ‘இந்த வருடத்தில் நாம் எல்லோரும் இணைந்து கடந்த வருடத்தைப் போலவே, எமது அமைச்சின் பொறுப்புக்களையும், கடமைகளையும் விரைந்து செயற்படுத்த வேண்டும்.

                              எம்மத்தியில் காணப்படுகின்ற சவால்களை வெற்றிகொள்வது மாத்திரமன்றி, எமது பயணத்தில் எதிர்கொள்ளுகின்ற சவால்களையும் இதன்மூலம் வெற்றிகொள்ள வேண்டும்.

                              எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எமக்கு சிறந்த இராஜாங்க அமைச்சரும், அமைச்சின் செயலாளரும், இராஜாங்க அமைச்சின் செயலாளரும், பணிப்பாளர் நாயகமும் ஏனைய அதிகாரிகளும் கிடைத்துள்ளனர்.

                              ஜனாதிபதியின் சபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக, ஜனாதிபதி தலைமையில் பிரதமரின் வழிகாட்டலில், நிதி அமைச்சரின் பக்கத் துணையுடன் எமது பொறுப்புக்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.

                              இதுவரை காலமும் இந்த அமைச்சை முன்னெடுப்பதற்கு நீங்கள் அனைவரும் வழங்கி வரும் ஒத்துழைப்பினை நான் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்.

                              தங்கு தடைகளற்ற உங்களது நலன் சார்ந்த சுதந்திரமான பணிகளுக்கு எனது ஒத்துழைப்புக்கள் தொடர்ந்து கிடைக்கும்’ என்றும் கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

                                சுசில் பிரேம்ஜயந்த்
                                Posted in இலங்கை செய்திகள்

                                அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேம்ஜயந்த் நீக்கப்பட்டார்

                                அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேம்ஜயந்த் நீக்கப்பட்டார்

                                உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள் நீக்கப்பட்டார்.

                                ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

                                சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள், கல்வி மறுசீரமைப்பு மற்றும் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்தார்

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  1901 பேருக்கு பொலிசார் எச்சரிக்கை

                                  1901 பேருக்கு பொலிசார் எச்சரிக்கை

                                  சுகாதார விதிமுறைகளை மீறிய மேலும் 1901 நபர்கள் பொலிசாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

                                  மேல் மாகாணத்தில் ,சுகாதார வழிகாட்டி தொடர்பான விதிமுறைகள் உரிய வகையில் பொது

                                  மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்றதா? என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே பொலிசார் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.

                                  இந்த நடவடிக்கையின் போது 9,793 பேர் நேற்று (02) பரிசோதிககு உட்படுத்தப்பட்டனர்.

                                  4,121 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3,276 முச்சக்கர வண்டிகளும் இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

                                  இந்த நடவடிக்கையில் 10,199 பொலிசார் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டனர்.