Tag: விசாரணை
லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய ரணிலுக்கு அழைப்பு
லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய ரணிலுக்கு அழைப்பு
லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய ரணிலுக்கு அழைப்பு ,லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, ஏப்ரல் 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமலின் சட்ட பரீட்சை சிஐடி விசாரணை
நாமலின் சட்ட பரீட்சை சிஐடி விசாரணை
நாமலின் சட்ட பரீட்சை சிஐடி விசாரணை ,பாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டக் கல்லூரிப் பரீட்சைக்கு சட்டவிரோதமாகத் தோன்றியமை குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பாஸ்டன்லங்கா சமூக ஊடக வலையமைப்பில் ஒளிபரப்பான நேர்காணலில் கூறப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு வழக்கறிஞர்களின் உதவியுடன் சட்டக் கல்லூரியில்
நடைபெற்ற தேர்வுக்கு ஆஜராகி சட்டவிரோதமாக சட்டப் பட்டம் பெற்றதாகக் கூறி, ”லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான சிட்டிசன் பவர்” என்ற அமைப்பு குற்றப் புலனாய்வுத் துறையில் (சிஐடி) புககர் அளித்துள்ளது.
மேற்கண்ட சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி இது தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறை பணிப்பாளருக்கு பதில் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி )அறிவுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது
ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உட்பட 09 பேர் மீது விசாரணை
ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உட்பட 09 பேர் மீது விசாரணை
ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உட்பட 09 பேர் மீது விசாரணை ,தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் யாழ் மாவட்டத்தில் ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உட்பட 09 பேர் மீது விசாரணை
தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட 09 பேர் மீதான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட யாழ். தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ், அ.உமாகரன், சி.மயூரன், த.கிருஸ்ணானந், ந. கௌசல்யா, குருசாமி சுரேன் உட்பட 09 பேர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் சசிகலா ரவிராஜிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஏனையவர்களிடமும் வாக்குமூலங்களை பெற்ற பின்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை யாழ். தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்களில் இதுவரை தமது தேர்தல் செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு
சமர்ப்பிக்காத 35 பேருக்கு எதிராகவும் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்

- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.

- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் ,போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பான விடயங்கள் இன்று (21) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்தானது, இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்

- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.

- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

மஹிந்த மகன் மீது விசாரணை
மஹிந்த மகன் மீது விசாரணை
மஹிந்த மகன் மீது விசாரணை , மஹிந்த ராஜபக்சின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ மீது குற்ற புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை இன்று ஆரம்பித்தனர்.
கதிர்காம பகுதியில் காணி ஒன்றை அவர் கொள்வரவு செய்த தொடர்பாகவும் அதற்கு உரிமை கொண்ட தொடர்பாகவும் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது .
அரசுக்கு சொந்தமான காணிகளை இவர் அபகரித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி ஆதாரங்கள் திரட்டப்பட்ட நிலையில்,
அது தொடர்பாக இந்த விசாரணை குற்ற புலனாய்வு பிடிவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைந்தா கோத்தாவினுடைய ஆட்சிக்கால பகுதியில் அரசகாணிகள் பலதை ஆக்கிரமித்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது .அதனை அடுத்து இந்த விசாரணைகள் தற்போது இடம் பெற்று வருகின்றன.
ஊழல் செய்து நாட்டை கொள்ளையடித்தவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையிலே தற்பொழுது இந்த விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தோற்றப்பாட்டை ஆளுகின்ற ஆட்சி காண்பித்து வருகின்றது .
குறிப்பிடத்தக்கது இது விசாரணை முடிந்து விடாமல் சம்பந்தப்பட்ட ஒரு கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதை இப்பொழுது கேள்வியாக இருக்கிறது .
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

விமல் வீரவன்சா விசாரணை வலையத்த்தில்
விமல் வீரவன்சா விசாரணை வலையத்த்தில்
விமல் வீரவன்சா விசாரணை வலையத்த்தில் , முன்னாள் ஜேவிபின் உடைய கட்சி உறுப்பினரும் என்னால் எதிர்க்கட்சிகளில் அமைந்திருக்க கூடிய விமல் வீரவன்சா மீது விசாரணை என்று இடம் பெற்றுள்ளது.
குற்றப்பிவு துறைக்கு சமூகம் அளித்திருந்த விமல் வீரவன்சா பல்வேறுபட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் .
மேடைகளில் பேசிய பேச்சில் உள்ள காரணமாக இவர் மீது இந்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டதாகவும், தொடராக மீது அவர் மீது பல மணி நேரம் இந்த விசாரணை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுரா குமர திசநாயகன் ஆட்சியில் இடம்பெற்ற முதலாவது விசாரணை இவருக்கு இதுவாக அமைகிறது.
தமது ஆட்சியில் லஞ்ச ஊழல் செய்தவர்கள் தேடி கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என ஆளுகின்ற ஆட்சி தெரிவித்திருந்தது.
அதனை அடுத்து அனுரா குமர திசநாயாக்காவுடைய ஆட்சியில் விமல் வீரவன்சா மீது இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இவரை போன்று ஏனையவர்கள் மீதும் விசாரணை நடத்தி லஞ்ச உடலுக்கு உடந்தையாக இந்த மோசடிகளுக்கு இருந்தவர்கள் கைது செய்ய போடுவார்களா .
நாட்டில் வன்முறைகளை தூண்டி கலவரத்தை ஏற்படுத்தியவர் தொடர்பாக அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்களா என்பதை இப்பொழுது உள்ள கேள்வியாகும்.
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

மகிந்தா மகனிடம் விசாரணை
மகிந்தா மகனிடம் விசாரணை
மகிந்தா மகனிடம் விசாரணை , மஹிந்தாவின் நிலையமாக யோசித்தால் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர் கதிர்காமத்தில் அரசகாணியை பெறப்பட்டதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதைவிட இவருக்கு மேலதிகாரி இருந்த அரசு அதிகாரி ஒருவர் மீதும் இந்த விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது .
மஹிந்த கோத்தபாய ஆட்சிக்காலப் பகுதியில் அரசகாணிகளை உடமையாக்கி அபகரித்து தொடர்பான விசாரணைகளே தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை நாடளாவிய ரீதியில் மஹிந்த மகளுக்கு ஏராளமான சொத்துக்கள் காணப்படுகின்றன .
தனது தந்தை மற்றும் சித்தப்பா ஆகியோர் ஆட்சிக்காலத்தில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அரச மற்றும் மக்களது காணிகளை அடார்த்தாக பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
அந்த செய்திகளை அடுத்து தற்பொழுது இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன.
எனினும் மேற்படி விசாரணைகள் திட்டமிட்டபடி அரசியல் கலப்பில்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமா ..?
இவர் கைது செய்து அனுரா ஆராட்சி இவர்களை சிறையில் அடைக்குமா என்பது தான் கேள்வியாகிறது.
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

விசாரணையில் பிள்ளையான்
விசாரணையில் பிள்ளையான்
விசாரணையில் பிள்ளையான் ,முன்னாள் புலிகள் இயக்கத்தை காட்டி கொடுத்து சிங்க பாதுகாப்பில் வாழ்ந்து வரும் பிள்ளையான் குற்றப்புலானய்வு துறையில் விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
இன்று நடந்த விசாரணையில் வகைக்கு மூலத்தை பெற்று விட்டு பவர் வெளியேறி சென்றுள்ளார் .
பிள்ளையான் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவிக்க பட்ட நிலையில் ,தற்போது இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது குறிப்பிட தக்கது .
எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்
எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்
எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ் ,மட்டக்களப்பு வவுணதீவிலிருந்து விளாவெட்டுவானுக்குச் செல்லும் வீதியில் ஆட்டோ ஒன்று எறிந்த நிலையில் காணப்பட்டுள்ளது .
இந்த ஆட்டோ எப்படி எரிந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இயந்திர கோளாறு காரணமாக தீ பற்றி எரிந்ததா அல்லது விஷமிகளினால் தீயிட்டு கொழுத்த பட்டதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன
மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன
மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன ,நீதிக்கான கேள்வி .மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன.
விசாரணை குழுவினர் இவவிடயத்தில் மருத்துவ விதிமுறைக்கள் பல்வேறு தரப்பினரால் மீறப்பட்டுள்ளத்தையும் உறுதிப்படுத்தியுள்ளனர் என கூறப்படுகிறது .
இனி இதற்கான தண்டனை அளிக்கும் அதிக்காரம் சுகாதார அமைச்சிடம் மட்டுமே உள்ளது. .
இனி நாங்கள் என்ன செய்யலாம்
1.தகவல் அறியும் சடடத்தின் மூலம் விசாரணை அறிக்கையை வெளிக்கொனரலாம் (இதை வைத்தியாசலை தரப்பால் அமைச்சின் விசாரணைகள் முடியாமல் செய்யமுடியாது )
2.இத்தாயின் இறப்பில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் ஒரு சிவில் வழக்கை கணவரின் உதவியோடு தாக்கல் செய்யலாம். .
ஏன் இவை இன்னும். நடைபெறவில்லை.
இவவிடயத்தை சொந்த அரசியலுக்கு பயன்படுத்தாமல் அந்த தாயில் உண்மையான அக்கறை கொண்டோர் இதனை செய்தால் நீதி நோக்கி பயணிக்கலாம்.
இவ்வாறு மருத்துவர் அர்ச்சுனா முக நூலில் பகிரப்பட்டுள்ளது .
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

- NPP பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது

- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்

- ஞானசார தேரோ மீதான வழக்கு பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- முன்னாள் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் கரியவசம் கைது

யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை
யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரவு வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று நான்கு வீடுகளை அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்று இருந்தது.
அந்நிலையில் மறுநாளும் குறித்த வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட முனைந்தவேளை ஊரவர்கள் அவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை நால்வர் பிடிபட்டனர், ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி சென்று இருந்தனர்.
யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை
பிடிபட்டவர்களிடம் ஊரவர்கள் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் எமக்கு ஆதரவாக செயற்படுபவர் என கூறியுள்ளனர்.
அதேவேளை பிடிபட்டவர்களின் கைபேசிகளை ஊரவர்கள் சோதனை செய்த போது , அவற்றில் வன்முறை கும்பலை சேர்ந்த சிலர் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ள புகைப்படங்கள் காணப்பட்டன.
தம்மால் பிடிக்கப்பட்ட நால்வரையும் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஊரவர்கள் கையளித்ததை அடுத்து, பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளின் பின்னர் மன்றில் முற்படுத்தினர்.
அதேவேளை , தமக்கு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆதரவு உண்டு என வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் ஊரவர்களுக்கு கூறியமை தொடர்பிலான வீடியோ பதிவு மற்றும் , ஆயுதங்களுடன் காணப்பட்ட புகைப்படங்கள் என்பன சட்டத்தரணி ஊடாக நீதவானின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனை அடுத்து புகைப்படத்தில் உள்ள ஆயுதங்கள் அனைத்தும் , வன்முறை கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டு சான்று பொருட்களாக மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு உதவுவதாக கூறிய பொலிஸ் உத்தியோகஸ்தர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து மன்றில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மன்று உத்தரவிட்டுள்ளது
Featured
யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை
யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போதான இல்ல அலங்கரிப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
அதன் போது, கார்த்திகைப் பூ வடிவிலும், போர் டெங்கி வடிவிலும், இல்ல அலங்கரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அவை தொடர்பிலான புகைப்படங்கள் நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன.
விடயம் தொடர்பில் நேற்றைய தினம் விளையாட்டு போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையே பொலிஸார் , இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் பாடசாலைக்கு நேரில் சென்று இல்லங்களை பார்வையிட்டு, புகைப்படங்கள், காணொளிகள் என்வற்றை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை
அத்துடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் அதிபர் உள்ளிட்டவர்கள் பொலிஸ் நிலையம் சென்று இருந்த நிலையில், பொலிஸார் அவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் அவர்களை விடுவித்துள்ளனர்.
இதேவேளை அண்மையில் கிளிநொச்சி மாவடத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பிலான படங்கள் சமூக வலைத்தளங்களில்
வெளியாகி சர்ச்சைகள் ஏற்பட்டதை அடுத்து, வடமாகாண கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு , இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவனை தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினரை தேடி விசாரணை
பாடசாலை மாணவனை தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினரை தேடி விசாரணை
பாடசாலை மாணவனை தாக்கிய திவுலபிட்டிய உள்ளுராட்சி சபையின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான தனது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்களாகியும், சந்தேகத்திற்குரியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என குறித்த மாணவனின் தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி, பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவனை, பந்துராகொட நகரில் வைத்து உள்ளுராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் தாக்கியுள்ளார்.
பந்துராகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலின் பின்னர் சந்தேகத்திற்குரியவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில், எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக குறித்த முன்னாள் உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மத்திய வங்கி சம்பள அதிகரிப்பு விசாரணைக்கு அழைப்பு
மத்திய வங்கி சம்பள அதிகரிப்பு விசாரணைக்கு அழைப்பு
எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் இன்று (04) அமைச்சரவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கி ஊழியர்கள் அண்மையில் தமது சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் இது சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மத்திய வங்கி அதிகாரிகள் இவ்வாறு சம்பளத்தை உயர்த்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மத்திய வங்கி சம்பள அதிகரிப்பு விசாரணைக்கு அழைப்பு
இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்று பிற்பகல் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு மத்திய வங்கியின் பிரதானிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நாளை (05) நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கும் மத்திய வங்கியின் பிரதானிகள் அழைக்கப்பட்டு இவ்விடயம் தொடர்பில் வினவப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கும், அரசாங்க நிதி பற்றிய குழு கூட்டம் நாளை முற்பகல் 11.30 மணிக்கும் நடைபெறவுள்ளது
புலிகளின் ஒத்த ஆடை அறுவரிடம் விசாரணை
புலிகளின் ஒத்த ஆடை அறுவரிடம் விசாரணை
மாவீரர் தின நிகழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும்
குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை (27) நடைபெற மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப்புலிகளின் போராளிகள்
புலிகளின் ஒத்த ஆடை அறுவரிடம் விசாரணை
போன்ற ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து இருந்தனர் என சில புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன.
அவை தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , படங்களில் இனம் காணப்பட்ட சிறுவர்களின் பெற்றோரை
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களின் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.
வாக்கு மூலங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுக்க உள்ளதாகவும் , எவரையும் இது வரையில் தாம் கைது செய்யவில்லை எனவும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்
- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்
- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்
- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன
- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது
- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது
- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
- NPP பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
வெல்லம்பிட்டி பாடசாலை அனர்த்தம் தொடர்பில் விசாரணை
வெல்லம்பிட்டி பாடசாலை அனர்த்தம் தொடர்பில் விசாரணை
வெல்லம்பிட்டி பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 மாணவர்கள்
காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சு கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலய கல்வி அலுவலக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, குறித்த பாடசாலைக்குச் சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஜயவர்தனபுர வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெல்லம்பிட்டி பாடசாலை அனர்த்தம் தொடர்பில் விசாரணை
நேற்று முற்பகல் (15) கைகளை கழுவிக் கொண்டிருந்த முதலாம் தரத்தைச் சேர்ந்த 06 மாணவர்கள் மீது பாடசாலையில் தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த கொங்கிரீட் சுவர் இடிந்து விழுந்தது.
விபத்தில் காயமடைந்த மாணவி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் பிரதேசவாசிகள் குழுவொன்று பாடசாலையின் அதிபரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையில் நிலவிய அமைதியின்மை காரணமாக பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்
- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன
- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது
- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது
- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
- NPP பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்
- ஞானசார தேரோ மீதான வழக்கு பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- முன்னாள் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் கரியவசம் கைது
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்
முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் மிகவும் பாரதூரமான விடயமாகும் என்றும், இது நீதித்துறை சுதந்திரம் சார் பிரச்சினை என்றும், அவருக்கு கொலை மிரட்டல்களும், அழுத்தங்களும் வந்ததாக கூறப்பட்டுள்ளதாகவும்,
இது ஒரு பாரதூரமான அறிவிப்பு என்பதால், சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு, இதன் பின்னனியில் உள்ள உண்மை குறித்து இந்த சபைக்கு
அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கம் சகல பக்கங்களிலிருந்தும் மக்களின் பேச்சுச் சுதந்திரத்தை இல்லாதொழிக்கவும், ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவும்
தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில்,அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால், சிறையில் அடைக்க வாய்ப்பு உள்ளதாகவும்,நிகழ் நிலை காப்பு சட்டத்தின்
ஊடாக இவ்வாறான தண்டனைகளை விதிக்கவும் வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்
அப்பிள், அமேசான், கூகுள், மொட்டா, எக்ஸ், புக்கிங்.காம் போன்றவற்றை உள்ளடக்கிய Asia Internet Coalition கடுமையான எதிர்ப்பை
வெளியிட்டுள்ளதாகவும், இவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் வெளிநாட்டு முதலீடுகள் வீழ்ச்சியடையும் என்றும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நிகழ் நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டு வந்து இன்று என்ன நடந்துள்ளது என்று சிந்தித்து பார்க்குமாறும்,ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பானது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும், இவற்றை விரட்டியடுத்து
விட்டால் சர்வதேச முதலீட்டை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்றும், நிகழ் நிலையில் எவ்வித பாதுகாப்பும் இல்லை என்றும்,அரசாங்கத்தின்
பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எடுக்கும் முயற்சியே இதுவாகும் என்றும்,இது
சர்வாதிகாரமான தவறானதோர் திட்டமாகும் என்பதனால் இதை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்
- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன
- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது
- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது
- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
- NPP பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்
- ஞானசார தேரோ மீதான வழக்கு பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- முன்னாள் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் கரியவசம் கைது
ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணை
ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணை
இலங்கை ; ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் விஞ்ஞான ரீதியான சாட்சியங்களைப் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு
அதிகாரிகள் ((SOCO)) மற்றும் கைரேகை அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம், பிரதான நுழைவாயில் மற்றும் அண்மித்த பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்காக
முப்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து இன்று (22)அதிகாலை விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டதாக பொலிஸ்
ஊடக பேச்சாளர் அலுவலகம வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் களனி, எம்பிலிபிட்டிய, ஜா-எல, இரத்தினபுரி, செவனகல, வெல்லம்பிட்டிய, பிடிகல, வாதுவ மற்றும் நுகேகொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
26 முதல் 58 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்
எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்
இலங்கை ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையில் உள்ள மருந்துகள் வைக்க படும்
சேமிப்பு அறையில் திடீரென தீ பற்றி கொண்டதில்
அந்த மருந்துகள் எரிந்து அழிந்துள்ளன
மின்சார கசிவினால் ஏற்பட்ட மின் ஒழுக்கே இந்த தீ பரவலுக்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
மூன்று எம்பிக்களிடம் விசாரணை – தயாராகும் சிறை
மூன்று எம்பிக்களிடம் விசாரணை – தயாராகும் சிறை
இலங்கையில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்கள் மீது மகிந்த ஆதரவாளர்கள் போத்தல் ,பணம் கொடுத்து வன்முறை தாக்குதலை நடத்தினர்
இந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் இருந்து செயல் பட்டனர் என்ற குற்ற சாட்டில் மூன்று
எம்பிக்கள் கைது செய்ய பட்டு குற்றப் புலனாய்வு துறையினரால் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
ரோஹித அபேகுணவர்தன, சி.பி ரத்நாயக்க மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகிய மூவரது குற்றம் நிரூபிக்க பட்டால்
கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது