Tag: சுமந்திரன்
சரத் வீரசேகரவுக்கு எதிராக நடவடிக்கை
சரத் வீரசேகரவுக்கு எதிராக நடவடிக்கை
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி என்று கூறி அவரை சாடிய சரத் வீரசேகர எம்.பிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) விசேட கூற்றொன்றை முன்வைத்தே இவ்வாறு வலியுறுத்திய சுமந்திரன் எம்.பி. மேலும் பேசுகையில்,
“முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியை சரத் வீரசேகர எம்.பி. இந்த பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கடுமையாக விமர்சித்துள்ளார். நீதிபதியின் மனைவி என்று அவர்களது தனிப்பட்ட விடயங்களை பாராளுமன்றத்தில் குறிப்பிட்டதுடன் நீதிபதியை ஒரு மனநோயாளி என்று முறையற்ற வகையில் விமர்சித்துள்ளார்.
சரத் வீரசேகரவுக்கு எதிராக நடவடிக்கை
பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் 83 ஆவது பிரிவுக்கு அமைய நீதிபதிகளையும், நீதிமன்ற நடவடிக்கைகளையும் பாராளுமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது. ஆனால் சரத் வீரசேகர தனது உரையின் போது நீதிபதியின் பெயரை சுட்டிக்காட்டி அவரை விமர்சித்துள்ளார் .இவை பாரதூரமானது. நிலையியற்கட்டளை 83 ஐ அப்பட்டமாக மீறும் செயல்.
சரத் வீரசேகர எம்.பி. இதற்கு முன்னரும் பாராளுமன்ற சிறப்புரிமை ஊடாக நீதிபதியை கடுமையாக விமர்சித்தார். இவரது கருத்துக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டதுடன், நீதிபதிகள், சட்டத்தரணிகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அவர் மீண்டும் இவ்வாறு நீதிபதியை விமர்சித்துள்ளார். ஆகவே இவ்விடயம் குறித்து சரத் வீரசேகர எம்.பி. மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
அத்துடன் அவர் ஒரு முறை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு எழுதிய கடிதத்தில் எனது பெயரைக்குறிப்பிட்டு நான் நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டியிருந்தார். அதனை நான் நிராகரிக்கின்றேன். நான் எந்தவொரு நீதிபதியின் பெயரையும் குறிப்பிடவில்லை” என்றார்.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றனby நிருபர் காவலன்
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதிby நிருபர் காவலன்
- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைதுby நிருபர் காவலன்
- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவுby நிருபர் காவலன்
அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடிப்போம்
அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடிப்போம்
புதிதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டமூலத்தை அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடித்தே ஆக வேண்டும் என தமிழ் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
சனிக்கிழமை (01) சங்கானை பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்மாதம் பாராளுமன்றத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயங்கரவாத சட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயருடன் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த நிலையில் தற்போது தெற்கில் வாழும் மக்களும் குறித்த சட்டத்தினால் அடக்கப்பட்டு வருகின்றனர்.
அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடிப்போம்
கடந்த வருடம் பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்க வேண்டும் எனக் கோரி பருத்தித்துறை முனையில் இருந்து தெய்வேந்திர முனைவரை பேரணியாக நாம் சென்றோம்.
எமது பேரணி இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களையும் ஊடறுத்துச் சென்ற நிலையில் எந்த ஒரு பகுதியிலும் எமது பேரணிக்கு எதிர்ப்புக்கள் எழவில்லை.
இந்த நாட்டினுடைய மக்கள் பெரும்பாலானவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள நிலையில்
தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறோம் என கூறி ஆபத்தான புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிறைவேற்றுவதற்கு முனைகிறது.
குறித்த சட்டமூலத்தை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன அண்மையில் அறிவித்துள்ள நிலையில் குறித்த சட்டமூலத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்.
அதற்கான அழுத்தங்களை வழங்குவதற்கு இன மத மொழிகளுக்கு அப்பால் சென்று மக்கள் பேரழிச்சியுடன் போராட்டங்கள் இடம்பெற வேண்டும்.
அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடிப்போம்
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஊடக நிறுவனங்கள்
தொழிற்சங்கங்கள் சுயாதீன அமைப்புக்கள் என அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.
தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் வரையறை இல்லாத நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில்
அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு ஜனநாயக வழியில் போராடுபவர்களை கட்டுப்பாடுத்துவதற்கான வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நீதி அமைச்சர் குறித்த சட்டமூலத்தை தெளிவு படுத்துவதற்கு நீதிமன்றம் செல்வோம் என்கிறார் நீதிமன்றம் அரசியல் அமைப்பு உட்பட்டே வியாக்கியானங்களை முன்வைக்கும்.
நாங்கள் குறித்த சட்டமூலத்தை தோற்படிப்பதற்கு சிங்கள புத்திஜீவிகள் தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து பாரி ஒரு போராட்டத்தை நடத்தவுள்ளோம்
ஆகவே, ஆபத்துக்கள் நிறைந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கு இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் பேர் எழுச்சியாக வீதியில் இறங்கினால் தோற்கடிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Featured
கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்தில் போட்டி: சுமந்திரன் தகவல்
கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்தில் போட்டி: சுமந்திரன் தகவல்
உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொழிநுட்ப யுக்தியை கையாளும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இதற்கமைய, தமிழரசு கட்சி வீட்டுச் சின்னத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடுவதோ தமிழரசு கட்சி பிரிந்து தனித்து போட்டியிடுவதோ இல்லை என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (07) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இல்லத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்றது.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்
வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்
வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்
வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நேற்று (21) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொது இணக்கப்பாட்டுக்கு வரும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 14 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டை கூட்டியிருந்தார்.
ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காத காரணம் என்ன? சுமந்திரன் விளக்கம்
வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காத காரணம் என்ன? சுமந்திரன் விளக்கம்
வரவு செலவு திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிராக வாக்களிக்க இருந்தது.
இருப்பினும் ஜனாதிபதி வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வை பெற்று தருவதற்காக அழைப்பு விடுத்துள்ளதினால், வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகியிருக்க தீர்மானம் மேற்கொண்டதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது சிறப்பானது அல்ல என்று சிந்தித்தே வாக்கெடுப்பில் இருந்து விலகியிருக்க தீர்மானித்ததாக தெரிவித்தார்.
வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காத காரணம் என்ன? சுமந்திரன் விளக்கம்
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஜனாதிபதி கடந்த பத்து நாட்களில் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளார். கலந்துரையாடுவதற்காக அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஜனாதிபதிக்கு மதிப்பளித்து, அவருக்கு எமது நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காகவே, நாம் வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை என்று தீர்மானித்தோம்.வாக்குறுதிகள் உறுதிப்படுத்தும் போதே நல்லிணக்கம் ஏற்படும். உண்மைகளை மூடி மறைத்தால் நல்லிணக்கம் ஏற்படாது என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் கூறினார்.
வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டபோதே இந்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
Featured
மகிந்தா தமிழ் கைக்கூலிகள் ,சம்பந்தன்,சுமந்திரன்,டக்கிளஸ்,கருணா,பிள்ளையான் வீடுகளை எரிக்க தமிழர் கோரிக்கை – வீடியோ
மகிந்தா தமிழ் கைக்கூலிகள் ,சம்பந்தன்,சுமந்திரன்,டக்கிளஸ்,கருணா,பிள்ளையான் வீடுகளை எரிக்க தமிழர் கோரிக்கை – வீடியோ
இலங்கையில் மகிந்தவின் ஆதரவு கைக்கூலிகளாக வாழும் தமிழர் முகமூடிகளான கருணா,பிள்ளையான் ,சம்பந்தன்,சுமந்திரன்,அங்கயன் ,சாணக்கியன் வீடுகளையும் எரியூட்டும் படி
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இவர்கள் யாவரும் இரட்டை வேடம் போடும் சிங்கள கைக்கூலிகள் என அவர்கள் கூறி வருகின்றனர்
இவ்வாறு சில காணொளிகள் சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது ,அதனை அவ்வாறே தமிழர்கள் அதிகமாக பகிர்ந்து தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்
இதன் எதிரொலியாக அங்கயன் அலுவலகம் எரியூட்ட பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
சுமந்திரனுக்கு செருப்படி – இனியாவது திருந்துமா வாலாட்டும் நாய்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்ச ஆட்சி முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக சுமந்திரன் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் போல் வாயில் அரசியல் பேசுபவர்கள் நாங்கள் கிடையாது.
யாழ். பொது நூலகத்தை எரித்த ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை அமைக்க ஆதரவு வழங்க முடியும் என்றால், அதைவிட அரசாங்கத்திலிருந்து நாங்கள் வெளியேறியதே பெரிய விடயமாக அமையாது.
ஜீவன் தொண்டமானை மக்கள் பாராளுமன்றம் அனுப்பியது மக்களுக்கு வேலை செய்வதற்கே தவிர அரசாங்கத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல.
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் 15 வருடகாலம் இணைந்து பணியாற்றியுள்ளார். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியுடன் 20 வருடங்கள் பணியாற்றியுள்ளோம்.
எமது கொள்கை மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதே தவிர ஆட்சியாளர்கள் யார் என்பதை கருத்தில் எடுப்பதில்லை.
அந்த வகையில் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து நமது மக்களுக்கு தொடர்ந்தும் பணியாற்ற முடியாத சூழ்நிலையில் நேரடியாக பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம்.
சுமந்திரனுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன். நீங்கள் உங்கள் மக்களுக்கு ஆற்றிய சேவையை நான் மாகாணசபை அமைச்சராக இருந்து ஆற்றிய சேவையுடன் முடிந்தால் ஒப்பிட்டு பார்க்க வாருங்கள்.
12 வருட காலமாக 13ஆவது திருத்தச் சட்டத்தை பற்றி பேசுகிறீர்கள் அதனை நிறைவேற்ற முடியவில்லை.
சிறையில் அரசியல் கைதிகள் வாழ்கின்றார்கள் அவர்களை கூட கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் விடுவிக்க முடியவில்லை.
இரவில் பிரதமரையும் ஜனாதிபதியும் சந்திக்கும் சிலரால் மக்களின் தேவைகளை பற்றி பேச முடியாமை கவலை அளிக்கிறது.
நான் மாகாண சபை அமைச்சராக இருந்தபோது பதுளை மாவட்டத்தில் 150 பாடசாலைகளுக்கு தமிழில் பெயர் வைத்தேன். 120 பாடசாலைகளுக்கு புதிய கட்டடங்களை அமைத்து கொடுத்தேன் ,200 மேற்பட்ட வீதிகளை அமைத்துக் கொடுத்தேன்.
அதுமட்டுமல்லாது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொடுத்தேன். இவ்வாறு பலதரப்பட்ட வழங்கலை மக்களுக்காக பெற்றுக் கொடுத்தேன்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு எவ்வித அருகதையும் இல்லாத நிலையில் எம்மை மீண்டும் சீண்டினால் பதில் கூற முடியாத கேள்விகளை சுமந்திரனிடம் கேட்க வேண்டிய சூழ்நிலை
உருவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்
சிங்களவர்களுடன் சேர்ந்து போராடுங்கள் – எட்டப்பன் சுமந்திரன் ஊளை
சிங்களவர்களுடன் சேர்ந்து போராடுங்கள் – எட்டப்பன் சுமந்திரன் ஊளை
இலங்கையில் மத ,மொழி வேறு பாடு இல்லாமல் காலிமுக திடலில் ஆளும் கோட்டா
அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் போராடி வருகின்றனர்
இந்த போராட்டத்தில் தமிழர்கள் இணைந்து கொண்டு ஆதரவு தருவித்து போராட
வேண்டும் என கோட்டா சட்டத்தரணியாக விளங்கும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்
இவரது இந்த பேச்சு உலக தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
யார் பிரதமராக வந்தாலும் – தமிழருக்கு பயனில்லை – சுமந்திரன் கூவல்
யார் பிரதமராக வந்தாலும் – தமிழருக்கு பயனில்லை – சுமந்திரன் கூவல்
இலங்கையில் யார் பிரதமராக வந்தாலும் ,அவர்களினால் தமிழர்களுக்கு தீர்வு ஏதும் கிட்டட்டது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்
ஊடக போராளிகளை சந்தித்து பேசியபோது இதனை அவர் தெரிவித்துள்ளார்
இவர் அரசியல் வியாபாரியாக செயல் பட்டு வருவதும் ,கோட்டா,மகிந்தாவுக்கு ஐடியா
கொடுக்கும் ஆசாமியாக உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
நகை கொள்ளையார் சுமந்திரன் – பாராளுமன்றில் டக்கிளஸ் செம்பு தூக்கி கூவல் – வீடியோ
நகை கொள்ளையார் சுமந்திரன் – பாராளுமன்றில் டக்கிளஸ் செம்பு தூக்கி கூவல் – வீடியோ
இலங்கை பாராளுமன்றில் சுமந்திரன் முள்ளி வாய்க்காலில் இறந்த தமிழர் உடல்களில் இருந்து
நகைகளை திருடி வந்தவர் என டக்கிளஸ் கூலி கும்பல் தலைவன் ஒருவர் பாராளுமனற
உறுப்பினர் என கூறிய படி சிறிதரன் எம்பியுடன் மோதினார்
அவரை கீழ்த்தரமான வார்த்தைகள் ஊடாக திட்டுவதை இங்கே காணலாம்
இவன் எல்லாம் ஒரு எம்பி தூ ,உங்களை போட்டு தள்ள பிரபாகரன் மீள் வரணுண்டா
click here video
விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும்-சுமந்திரன்
விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும்-சுமந்திரன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பவில்லை என தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார் .
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்களுக்கு நீதி கோரி உலக நாடுகளுடன், கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றோம் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எடுக்கப்பட்ட முயற்சியின் பயனாக கிடைத்தது அது அனைவரும் அறிந்த விடயமாகும்
ஆனால், தற்பொழுது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு விஷமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களையும் விசாரிக்க கோரி சம்பந்தனால் ஆவணம் ஒன்று அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.. அது முற்றிலும் ஒரு பொய்யான விடயம்.
இந்த விடயத்தில் ஊடகங்களும் பொறுப்புணர்வோடு செயற்பட வேண்டும் அதாவது ஒரு விடயத்தை செய்தியாக பிரசுரிக்கும் போது அதனை ஆராய்ந்த பின் செய்தியாக பிரசுரிக்க
வேண்டும் அத்தோடு தற்பொழுது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது தமிழரசுக்கட்சி தனியாகச் செயற்படப்போகின்றது கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செயற்படுகிறது என அவ்வாறான ஒரு சம்பவமும் இடம் பெறாது.
இலங்கை தமிழரசுக் கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து எந்த காலத்திலும் செயற்படுமே தவிர ஒருபோதும் தனித்து செயற்படுவதற்கு தயாராக இல்லை என்றார்.
அதே போல எந்தளவுக்கு இணைந்து செயல்பட முடியுமோ அந்தளவுக்கு இணைந்து செயற்படுகின்றோம் அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய
கட்சிகள் எம்முடன் நல்ல உறவாக உள்ளார்கள். அவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே இணைந்து செயற்படுகின்றோம் என கூறுகின்றார்கள்
நாங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒற்றுமையாக செயற்படுகின்றோம் எனினும் , கூட்டாகச் செயற்படும் போது பல பிரச்சனைகள், முரண்பாடுகள் ஏற்படும். ஆனால், தமிழ்
மக்களுக்காக பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரிந்தோ அல்லது தனித்தோ செயற்படவில்லை என்றார்.
நெல் பறிமுதல் என்ற போர்வையில், தமிழர்களை பழிவாங்கும் அரசாங்கம்- முழங்கிய கூலிக்காரன்
நெல் பறிமுதல் என்ற போர்வையில், தமிழர்களை பழிவாங்கும் அரசாங்கம்- முழங்கிய கூலிக்காரன்
நாட்டில் பிரப்பிக்கப்பட்டிருக்கும் அவசரகால நிலைமையின் ஊடாக ஜனாதிபதி ஆட்சியே நடக்கும். ஜனாதிபதி தான்விரும்பிய படி அவசரகால விதிமுறைகளை வகுக்கமுடியும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அவற்றையெல்லாம் சட்டமாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு
சென்றடையும் என்றார்.
ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன், நாடு பூராவும் அவசரகால
நிலைமையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டிருக்கும் அதிவிசேட வர்த்தமானி தொடர்பில் கருத்துரைக்கும் போதே, தனது டுவிட்டர் பதிவில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோ பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், உணவு விநியோகத்துக்கும் அத்தியாவசிய சேவைகளை முறையாக முன்னெடுப்பதற்கும் நேற்று முதல் (நேற்று முன்தினம் 30ஆம் திகதி) அவசரகால நிலைமை நாடு முழுவது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து இருந்தால், அல்லது அதனோடிணைந்த சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கு மட்டுமே இந்த சட்டத்தை பயன்படுத்த முடியும்“ என்றார்.
இதனால்தான், பொதுமக்கள் பொதுபாதுகாப்பு சுகாதார அவசரகால
நிலைமைகள் சட்டத்தை உருவாக்குமாறு நான் கோரியியிருந்தேன்.
தனிநபர் பிரேரணையாக அதற்கான யோசனைகளை சமர்ப்பித்துள்ளேன். அதனை
ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. எனினும்,
அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனூடாக ஆபத்து உள்ளது. அதாவது ஜனாதிபதி ஆட்சியே நாட்டில் நடைபெறும். அவசரகால விதிமுறைகளை விரும்பியபடி வகுக்க முடியும் சட்டமாக்கவும் முடியும். ஆகையால், இச்செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் சுமந்திரன் எம்.பி மேலும் தெரிவித்தார்.
விபத்தில் சிக்கிய சுமந்திரன் வாகனம் – உயிர் தப்பினார்
விபத்தில் சிக்கிய சுமந்திரன் வாகனம் – உயிர் தப்பினார்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான விளங்கும் சுமந்திரன் கல்முனை நோக்கி
பயணித்த பொழுது கட்டுநாயக்க பகுதியில் வைத்து விபத்தில் சிக்கியது ,இதில் காயங்கள் இன்றி அவர் தப்பித்தார்
எனினும் வேறு ஒரு வாகனம் மூலம் வார் கல்முனை நீதிமன்றம் நோக்கி த்னது பயணத்தை தொடர்ந்தார்
பொதுவில் முதல் பொலிகண்டி வரையிலான வழக்கு விசாரணிக்கு செல்லும் பொழுதே இந்த விபத்தில் சிக்கியதாக தெரிவிக்க படுகிறது
சிங்கள அரசிற்கு ஐநாவில் ஆப்படிக்க வேண்டுமாம் – சிங்கள பால்குடி சுமந்திரன் கூவல்
சிங்கள அரசிற்கு ஐநாவில் ஆப்படிக்க வேண்டுமாம் – சிங்கள பால்குடி சுமந்திரன் கூவல்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வில் இடம்பெற்று வரும் கூட்ட தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணை நிரைவேற்ற பட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்
சிங்கள பால் குடித்து வசித்து அதே சிங்களத்திற்கு சேவகம் புரிந்து வரும் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளது தமிழ் மக்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது
ஐநாவுக்கு சென்று இலங்கையை காப்பாற்றும் நகர்வில் ஈடுபட்ட இவர் உள்ளே மாப்பிள்ளையாகவும் ,வெளியே மக்கள் மத்தியில் கீரோ வேஷம் போடுவதை மேற்படி சம்பவங்கள் அப்பட்டமாக தோல் உரித்து காட்டுகின்றன
சிங்கள பால்குடி சுமந்திரன் என்று திருந்துவீர்கள் …?
கோட்டாவை காப்பாற்ற பிரிட்டனுடன் பேசியசுமந்திரன் – கொதிக்கும் தமிழர்கள்
இலங்கை ஆளும் அரச பயங்கரவாதம் மேற்கொண்ட தமிழ் இன அழிப்பை அடுத்து அந்த குற்றங்களுக்கு நீதி பெற்று கொடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் விவாதம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
தமிழ் இன அழிப்பு
பன்னிரெண்டு ஆண்டுகள் கழிந்தும் கொலையாளிகள் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .
இந்த கொலையாளிகளுக்கு இதுவரை எவ்வித தீர்வும் வழங்க படவில்லை ,
சர்வதேச நீதி
ஆனால் ஐநா மனித உரிமை ஆணையர் இலங்கையை, சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனு
சிங்கள அரசை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்தது அதனை தொடர்ந்து பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் வியாபாரி சுமந்திரன் ஊடக பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனை சந்தித்து பேசியுளளார்
பொத்துவில் முதல் பொலி கண்டிவரை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதை அடுத்து தனக்கு வழங்க பட்ட இராணுவ பாதுகாப்பு
விலக்க பட்டதாக கொக்கரித்த சுமந்திரனின் நரி தந்திரம் இது தான் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது
சுமந்திரன் பாதுகாப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடர் முடிவுற்றதும் மீளவும் சிங்கள இராணுவ பாதுகாப்பு சுமந்திரனுக்கு வழங்க படும் என அடித்து கூறலாம்
கூட்டமைப்பு அரசியல் வியாபாரி
தமிழர்களே இந்த அரசியல் வியாபாரி சுமந்திரன் தொடர்பில் யாக்கிரதையாக இருங்கள் ,தமிழ் இனத்தை விற்று பிழைக்கும்
இவரை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பும் வேலையில் தமிழர்கள் ஈடுபட வேண்டும் என்பதே நமது எதிர் பார்ப்பாகும்
மக்கள் எழுச்சியை கிளப்பியது நானே – சுமந்திரன் முழக்கம் – கொதிப்பில் தமிழர்கள்
மக்கள் எழுச்சியை கிளப்பியது நானே – சுமந்திரன் முழக்கம் – கொதிப்பில் தமிழர்கள்
இலங்கையில் 12 ஆண்டு சிங்கள ஆளும் சர்வதிகார அடக்குமுறைக்கு
பின்னர் தமிழ் மக்கள் பெரும் எழுச்சியுடன் கூடிய போராட்டம் ஒன்றை
நடத்தியுள்ளனர் ,அந்த போராட்டத்தை கண்டு சிங்களம் மட்டும் அல்ல உலகமும் திரும்பி பார்த்துள்ளது
இவ்வாறான இந்த ஒன்று பட்ட போராட்டத்தை தாமே நிகழ்தியதாக அரசியல்
வியாபாரி நாரதர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் ,அந்த மக்கள் முன்பு பேசும்
பொழுது இந்த கூட்டத்தில் அதிகம் பேசாதே ,சாணக்கியன் தனிமனித
விடயம் பேசாதே என அங்கிருந்து மக்கள் சிலர் நேர்வாதமாக பேசியதும் ,
மைக்கை கொடுத்து விட்டு சுமந்திரம் ஓட்டம் பிடித்த காட்சிகளும் பதிவாகியுள்ளது
சுமந்திரனின் இந்த திமிர் பேச்சு மக்கள் மத்தியில் விசனத்தை கிளப்பியுள்ளது
புலம்பெயர் புலிகளை காட்டி கொடுத்த சுமந்திரன்
புலம்பெயர் புலிகளை காட்டி கொடுத்த சுமந்திரன்
ஜெனீவா விவகாரம் தொடர்பில் நான் முன்னர் கையளித்த வரைவு புலம்பெயர் அமைப்புக்கள் வரைந்த வரைபு. அது எனது வரைபு
இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா விவகாரங்களை கையாள்வது தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று (03.01) இடம்பெற்ற பின்
ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜெனீவா விவகாரங்களை கையாள்வது தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் கிளிநொச்சியில் அண்மையில் இடம்பெற்றது. அதனையடுத்து இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னனியினருடன்
சேர்ந்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலுக்கு பின்னர் இங்குள்ள அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பாதிக்கப்பட்டவர்களின் தரப்புக்கள் எல்லோரும்
இணைந்து ஜெனீவா அமர்வு நடைபெறுகிற போது பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்து உள்ளன.
அதை வருகிற சிலநாட்களில் அமர்ந்திருந்து ஒரு வரைபை தயாரித்து அதற்கு பின்னர் அனைத்து தரப்புகளிடத்திலுரும் பேசி ஒரு தீர்மானத்தை எடுக்கலாம் என நினைக்கின்றேன்.
முன்னர் வெளியான ஜெனீவா தொடர்பான வரைபு நான் வரைந்த வரைபு அல்ல. அது புலம்பெயர் அமைப்புக்கள் வரைந்த வரைபு. அவர்கள் எங்களுக்கு அனுப்பினார்கள். மற்றைய இரண்டு
கட்சிகளுக்கும் கொடுக்கும்படி சொன்னார்கள். அவர்கள் நான் வரைந்ததாக நினைத்து நிராகரித்து உள்ளார்கள். அதனை பின்னர் விக்கினேஸ்வரன் ஐயா ஏற்றுக் கொண்டுள்ளதாக மின்னஞ்சல்
ஒன்று பார்த்தேன். அது வேற கதை. நாங்கள் அடுத்த சில நாட்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோர்
இணைந்து இங்கு பேசி இணைக்கப்பாட்டுக்கு வந்த விடயங்களை பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு அனைவரும் வரலாமா என ஆராயவுள்ளோம் என்றார்.
இதன்போது மாகாணசபை முறையை அரசாங்கம் நீக்குவது குறித்து பேசுவது தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது,
அரசாங்கத்திடம் கையளித்த அரசியலமைப்பு தொடர்பான எமது யோசனையில் மாகாணசபை முறை தொடர்பில் தீர்க்கமாக குறிப்பிட்டுள்ளோம். மாகாணசபையை முறையை ஒழிக்க
இடம்கொடுக்க முடியாது. அதில் பாரிய பின்விளைவுகள் இருக்கிறது. அரசாங்கம் வேறு வேறு ஜனாதிபதிகளின் கீழ் சர்வதேசம், இந்தியா மற்றும் பல தரப்புகளுக்கு தமது
வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்கள். அதை எல்லாம் மீறி செயற்பட முடியாது. அதை மீறி செயற்படுமாக இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் முடிவுகள் எடுப்போம் என்றார்..
இலங்கை நீதி துறையில் நம்பிக்கையில்லை – சூத்து மாத்து சுமந்திரன்
இலங்கை நீதி துறையில் நம்பிக்கையில்லை – சூத்து மாத்து சுமந்திரன்
இலங்கையின் நீதிப் பொறிமுறையில் நம்பிக்கையிழந்த காரணத்தாலேயே, சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம் என்று தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான நீதி
நிலைநாட்டப்படுவதில் நீண்டகால இழுத்தடிப்புகள் காணப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.
நீதி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (09)
கலந்துகொண்டு உரையாற்றும் போதேஇ அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்துரைத்த சுமந்திரன் எம்.பி, ‘இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக இல்லை என்பதைஇ ஆட்சி
செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனங்களில் இருந்தே வெளியாகி விட்டன’ என்றார்.
‘நாட்டில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. எமது மக்களின் பிரச்சினைகள்இ வேறு ஒரு கோணத்தில் இருந்தே பார்க்கப்படுகின்றது. அண்மைக் காலமாக,
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் மேலெழுகின்ற போது, நீதி அமைச்சர், டுவிட்டர் மூலமாக கருத்துகளைக் கூறுவதை மட்டுமே செய்து வருகின்றார். அதனை மாத்திரமே அவரால் செய்ய முடியும்.
‘சிறைச்சாலைகளில், 1983, 2000 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில், அரச பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்த
விசாரணைகள் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது மஹர சிறைச்சாலையிலும் படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.
‘திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை, கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம்,
சிவநேசன், ரவிராஜ் மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க போன்றோரின் படுகொலைகள், ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர்
பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமால் ஆக்கப்பட்ட சம்பவம், 34 தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட
சம்பவம் ஆகியவற்றுக்கு, இன்னமும் நீதி நிலைநாட்டப்படாதது ஏன்?
‘நாட்டில் மோசமான, சர்வதேசக் குற்றங்கள் பல இடம்பெற்றுள்ள காரணத்தாலேயே, சர்வதேச விசாரணைகளைக் கேட்கின்றோம்.
அதனை ‘வேண்டாம்’ எனக் கூற முடியாது’ என்று, அவர் மேலும் கூறினார்
என்னை மக்கள் வெல்ல வைப்பார்கள் – சிங்கள பால் குடி சுமந்திரன் முழக்கம்
என்னை மக்கள் வெல்ல வைப்பார்கள் – சிங்கள பால் குடி சுமந்திரன் முழக்கம்
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்டு இன்றுவரை பயணித்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் கடந்த
பத்து ஆண்டுகளாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக விளங்கி வரும் சிங்களது பால்குடி சுமந்திரன் பெரும் இடர்களை விளைவித்து வருகிறார்
தொடர்ந்து தமிழீழ,விடுதலை போராட்டம் ,மற்றும் மக்கள் மீதான அடக்குமுறை அனைத்தயும் பிரோயோகித்து
இலங்கையில் இடம் பெற்ற முள்ளி வாய்க்கள் தமிழின
படுகொலையினை மூடி மறைத்து சர்வதேச ரீதியில் சிங்களத்தை காப்பாற்றிய வண்ணம் நகர்ந்து செல்கின்றார்
அண்மையில் விடுதலை புலிகளது ஆயுத போராட்டத்தை கொச்சை படுத்திய சுமந்திரன் கருத்து உலக தமிழர்கள் மத்தியில் கடும் கொதிப்பி கிளப்பியது
தற்போது அதை எல்லாம் மறந்து புலிகளினால் உருவாக்க பட்ட கூட்டமைப்பு எதை செய்தாலும் தமிழர்கள் அதனை வெல்ல வைப்பாராகள் என இறுமாப்பாக பேசியுள்ளார்
மேலும் மக்கள் வாக்கு கிடைக்காவிடினும் போனஸ் ஆசனங்கள் ஊடாக தன பாரளுமன்றம் செல்லலாம் என்ற நிலையில் இவரது திமிர் பேச்சு உள்ளது
எனவே மக்கள் இம்முறை சம்பந்தர் மற்றும் சுமந்திரனை தோற்கடிக்கும் தீவிர முயற்சியில் உள்ளனர்
இரண்டு நபர்களும் கூட்டமைப்பின் எதிர்காலத்திற்கு விரோதமானவர்கள் என்பது அண்மைய சம்பவங்கள் மீளவும் இடித்து உரைக்கின்றன
நாம் எது செய்தாலும் எம்மை மக்கள் வெல்ல வைப்பார்கள் என்ற இவர்களது
இந்த கண்மூடித்தனமான பேச்சுக்கு மக்கள் இம்முறை தகுந்த பதிலடி
கொடுக்க வேண்டும் என்பதே உலக தமிழர்கள் அவாவாக உள்ளது குறிப்பிட தக்கது
தமிழ் மக்கள் ஒரு அணியாக நிற்க வேண்டும்-நாரதர் சுமந்திரன் கூவல்
தமிழ் மக்கள் ஒரு அணியாக நிற்க வேண்டும்-நாரதர் சுமந்திரன் கூவல்
யுத்தம் முடிந்த பின்னரே தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை சுதந்திரமாக வாக்களித்து தெரிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
முன்னைய காலத்தில் நடந்த கேலிக்கூத்தான தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சிலர் தெரிவு செய்யப்பட்டார்கள் என்றும் சாடியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு நேற்று (03) வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நாட்டில் தற்போது உள்ள சூழ்நிலையில் இந்த தேர்தல் முக்கியமான தேர்தலாகும். இதில் மக்களுடைய தீர்ப்பு என்பது அவசியம். நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் நடந்த எந்த ஆட்சி முறைகளிலும் இல்லாத வித்தியாசமான ஆட்சிமுறை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அதாவது இராணுவ ஆட்சி இன்று தலை தூக்கியுள்ளது. முன்னர் எப்போதும் இராணுவ ஆட்சி இருந்தது இல்லை. 2015 ஆண்டு நல்லிணக்க அரசாங்கத்தை உருவாக்கினோம். அந்த ஆட்சி முன்னேற முடியாமல் கவிழ்ந்து பழையபடி முன்னர் ராஜபக்ஷ ஆட்சிக்கு நாடு சென்றுவிட்டது. ஆனால் பழையபடி ராஜபக்ஷக்களின் ஆட்சிக்கு நாடு சென்றுவிட்டது என்பதை சரியான விளக்கமாக நாங்கள் எடுத்துக் கொள்ள முடியாது.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சகோதரர்களாக இருந்தாலும் இருவருக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் உள்ளது.
அண்ணன் 24 வயதில் பாராளுமன்றத்திற்கு சென்றவர். இப்போது 50 வருட பாராளுமன்ற வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார்.
பாராளுமன்ற ஜனநாயகத்தில்தான் மஹிந்த பயிற்றப்பட்டனர். அவரை ஜனநாயகவாதி என்று யாரும் சொல்லாவிட்டாலும், அவருடைய பயிற்சி முழுவதும் பாராளுமன்றத்தில்தான் இருந்தது. ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பயிற்சி முழுவதும் இராணுவத்துடன் தொடர்பட்டே இருந்தது.
இராணுவத்திலே கேள்வி கேட்கும் உரிமை கிடையாது, மாற்று கருத்துக்கு உரிமை கிடையாது, கலந்துரையாடலுக்கு உரித்து இருக்காது. கட்டளையிடுவதும் இடப்படும் கட்டளையை நிறைவேற்ற வேண்டியதுமே இராணுவத்தின் பயிற்சியில் உள்ளது.
இவ்வாறான பின்புலத்தில் இருந்து வந்தவர் இன்று நாட்டில் தலைவராக வந்துள்ளார். அதனால்தான் இன்றைய ஆட்சி முறை இராணுவமயப்பட்டதாக உள்ளது. குறிப்பாக அரச திணைக்களங்கள் மற்றும் செயலணிகளுக்கும் இளைப்பாறிய இராணுவ அதிகாரிகள் நியமிக்கின்றார்.
இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய சவால். நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியும் இப்போது இரண்டாக உடைந்து போயுள்ளது.
எனவே அரசை எதிர்க்க சக்தி இல்லாத எதிர்கட்சிதான் நாட்டில் உள்ளது. தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவம் இதுவரை காலமும் ஒரே மாதிரியானதாகத்தான் இருந்து வருகின்றது.
56 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்கள் சமஸ்டி தீர்வுக்கே வாக்களித்து வந்தார்கள். சமஸ்டி என்பது நீண்ட கால ஜனநாயக தீர்ப்பாகும். அதில் எந்தவித சலனமும் இடையில் ஏற்படவில்லை. 56 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மட்டுமே ஆணைகொடுத்து வந்துள்ளார்கள்.
சமஸ்டி என்பதுதான் மக்கள் தந்த ஆணை. இருப்பினும் 77 ஆம் ஆண்டு தேர்தலின் போது தனிநாட்டுக்கான ஆணையையும் கொடுத்தார்கள். யுத்த காலத்தில் மக்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாத பாரளுமன்றமும் இருந்திருக்கின்றது.
அல்லது கேலிக்கூத்தான் தேர்தல்களில் சிலர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் தமது பிரதிநிதிகளை மக்கள் வாக்களித்து தெரிவு செய்யலாம் என்ற சூழ்நிலையில் எங்களுடைய ஒரே நிலைப்பாட்டை தெரியப்படுத்துவது அவசியமானது.
இப்போது மாற்று கட்சிகள் என்று சொல்லி பலர் முன்வருகின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. இதனால் மாற்று அணி ஒன்று வேண்டும் என்று கூறி வருகின்றவர்களின் எதிர்பார்ப்பு தமக்கு ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதுவும் செய்யவில்லை என்பது முழுமையான பொய்யான பிரச்சாரமாகும். விசேடமாக கடந்த 5 ஆண்டில் ஒரு அரசியல் தீர்வினை கொண்டுவருவதற்கு முயற்சித்தோம்.
அதிகாரப்பரவல் தொடர்பில் அனைத்து கட்சிகளும் இணங்கிய வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு நிறைவேறாவிட்டாலும், அது முக்கியமான மயில் கல்லாகும். மக்களின் நாளாந்த பிரச்சினைகளுக்கு விடிவு பெற்றுக் கொடுத்துள்ளோம்.
குறிப்பாக இராணுவத்திடம் இருந்த ஏராளமான நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் சில மாதங்களுக்குள்ளேயே 3 இல் 2 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
முழு நாட்டையும் ஒப்பிட்டு பார்க்கின்ற போது மற்றைய பிரதேசங்களில் நிகழாத அபிவிருத்திகள் வடக்கு, கிழக்கில் நடந்துள்ளன. சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது. மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டது. பருத்தித்துறை மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படுகின்றது. இவ்வாறு பலவிதமான அபிவிருத்திகள் இங்கு நடத்திருக்கின்றன.
பல விடயங்கள் இன்னும் செய்யப்படாமல் விடப்பட்டுள்ளது என்பதும் உண்மை. ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று சொல்வது முழுமையான பொய்யாகும். இனிவரும் காலத்தில் விசேடமாக ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.
குறிப்பாக தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மீட்சியாகும். மக்களுக்கு அரசியல் தீர்வு வரும் வரைக்கும் காத்திருக்காமல் சுய மரியாதையுடன் வாழ வேண்டும்.
இவ்வாறு வாழ வேண்டுமாக இருந்தால் மக்கள் தமது சொந்த காலில் நிற்க வேண்டும். மற்றவர்களிடம் கையேந்தி நிற்கக் கூடாது. அப்படியான மாற்று பொருளாதார கட்டமைப்பை கொண்டு வருவதற்கு பல முன்னெடுப்புக்களை செய்துள்ளோம்.
தேர்தலுக்கு பின்னர் அத்திட்டங்களை அமுல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதில் முக்கியமான விடயமாக இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது முக்கியமான ஒன்றாகும்.
இளைஞர்களுக்கு வேலை இல்லாதுவிட்டால் அவர்கள் வெளிநாட்டிற்குத்தான் போவார்கள். அரசியல் தீர்வை கவனிக்கும் போது சமாந்திரமாக பொருளாதார மேம்பாட்டிற்காக வேலை செய்வோம்.
இவற்றை செய்ய வேண்டுமானால் நாங்கள் பலமான அணியாக பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். வேறு அணிகளுக்கு வாக்குகள் போகுமாக இருந்தால் அவை வீணாகவும், சிதைவடைந்து போகும் வாக்குகளாகும் என்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை 10 ஆசனங்களுக்கு அடக்கிவிட்டு ஏனைய கட்சிகளில் இருந்து ஒருவர் இருவர் பாராளுமன்றத்திற்கு சென்றால் அதைவிட பலவீனமான சூழல் என்று ஒன்று இருக்க முடியாது.
எனவேதான் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்கள் ஒரு அணியாக நிற்க வேண்டும். என்றார்.



















