Tag: கொள்ளை
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொள்ளை
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொள்ளை
பமுனுகம தெலத்துர எலபெம்ம பகுதியில் கூரிய ஆயுதங்களால் மூவர் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இணையத்தில் வெளியான விளம்பரத்துக்கு அமைய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக லொறியில் வந்த மூவரே இவ்வாறு தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியில் மறைந்திருந்த நால்வர் இந்த தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 132,000 ரூபாய் பணம், 5 அலைலைபேசிகள், தங்க நகை மற்றும் வளையல் என்பவற்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட சந்தேக நபர்கள் பமுனுகம பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொள்ளையிட வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
கொள்ளையிட வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை பகுதியில் உள்ள ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் சொத்துக்களை கொள்ளையிட வந்த மூவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (26) காலை சந்தேகநபர்கள் மூவரும் சொத்துக்களை கொள்ளையிட முற்பட்ட போது, அதனை தடுக்க சென்ற ரயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒருவரை சந்தேகநபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்க முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு அதிகாரி, சந்தேக நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
கொள்ளையிட வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
இந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், மற்றைய இரு சந்தேகநபர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்தவர் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மகனிடமே கொள்ளையிட்ட தாய்
மகனிடமே கொள்ளையிட்ட தாய்
ராகமை நகரிலுள்ள நகை அடகு கடையொன்றில் கொள்ளையிடப்பட்ட நகைகள் மற்றும் பணத்துடன் ஐந்து சந்தேக நபர்களை ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களில் அடகு கடை உரிமையாளரின் தாயும், காசாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராகமை நகரின் மத்தியில் அமைந்துள்ள நகை அடகுக் கடையொன்றில் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் மற்றும் ஐந்து சந்தேகநபர்கள் நேற்று (09) பிற்பகல் ராகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகம ரெய்லி என்ற ராகுல அமரசேகர சிறிவர்தன உள்ளிட்ட ஐவரே கைது செய்யப்பட்டனர்.
மகனிடமே கொள்ளையிட்ட தாய்
அடகுக் கடையில் கொள்ளையிடப்பட்டிருந்த 14 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் ஆறு இலட்சத்து இருபத்தி ஒன்பதாயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொள்ளைச் சம்பவம் உரிமையாளரின் தாய் மற்றும் அடகு கடையின் காசாளர் ஆகியோரின் ஒத்துழைப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளதுடன், அது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொள்ளையர்கள் வருவதற்கு முன், அடகுக் கடையின் காசாளர் நகைகளை ஒரு பையில் இடுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், கொள்ளையின் பிரதான சந்தேகநபரான ராகம ரெய்லி அங்கு வந்த பின்னர் அவரது உத்தரவைப் பின்பற்றியே ஏனைய கொள்ளையர்கள் அடகு கடைக்குள் நுழைந்துள்ளனர்.
எனினும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னரே அங்கு இருந்த சிசிடிவி கேமரா அமைப்பை கொள்ளையர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர்.
அதன்படி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை
- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்
- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை
- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது
- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை
- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை
- பேருந்து மோதி ஒருவர் பலி
- தடம் புரண்ட ரயில்
- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்
- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
தம்பதியை கொன்று பணம் தங்க நகைகள் கொள்ளை
தம்பதியை கொன்று பணம் தங்க நகைகள் கொள்ளை
தம்பதியரை கொன்று பணம் மற்றும் தங்க நகையை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் செட்டிகுளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 30 ஆம் திகதி அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர்களை கைதுசெய்வதற்காக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தம்பதியை கொன்று பணம் தங்க நகைகள் கொள்ளை
கிளிநொச்சி, உரிட்டிகுளம் பகுதியில் தேடப்பட்டு வந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குற்றச் செயலின் போது அவர் அணிந்திருந்த ஆடைகளும், திருடப்பட்ட தங்க நகையின் ஒரு பகுதியும் கிணற்றில் இருந்த பையில் காணப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்
- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது
- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை
கூட்டுறவு கிராமிய வங்கியில் கொள்ளை
கூட்டுறவு கிராமிய வங்கியில் கொள்ளை
குருநாகல் – உயந்தன பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு கிராமிய வங்கியில் ஆயுதம் ஏந்திய இருவர் இன்று பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தொரடியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வங்கிக்குள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள், கையில் கைத்துப்பாக்கியை ஏந்திய நிலையில் வங்கியில் பணிபுரியும் இரு
அதிகாரிகளை மிரட்டி அவர்களிடமிருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூட்டுறவு கிராமிய வங்கியில் கொள்ளை
எனினும், கொள்ளையடிக்கப்பட்ட பணம் எவ்வளவு என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
குறித்த கொள்ளையர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்துள்ளதுடன், உயந்தனை எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளிட்ட மக்கள்
அதிகம் நடமாடும் இடத்தில் அமைந்துள்ள வங்கியில் இவ்வாறு கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் , குருநாகல் பகுதியில் இவ்வாறானதொரு பொதுக் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றிருப்பது இதுவே முதல் தடவை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தகொள்ளைச் சம்பவம் தொடர்பில் தொரடியாவ பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்
- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது
- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை
முல்லைத்தீவில் கொள்ளை கும்பலின் அட்டகாசம்
முல்லைத்தீவில் கொள்ளை கும்பலின் அட்டகாசம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் மூன்று பெண்கள் மாத்திரம் இருந்த பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் மகளின்
கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ள நிலையில், குறித்த குடும்பம் செய்வதறியாது தவித்து வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் கடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில்
கணவனை இழந்துவிட்ட நிலையில், தனது மகளை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வளர்த்து வருவதோடு தனது தாயாரையும் பராமரித்து வருகின்றார் சிறீபாலன் ஜுட் கிறிஸ்ரா.
இவ்வாறான பிண்ணனியில் மூன்று பெண்கள் மாத்திரம் வசித்துவரும் குறித்த வீட்டின் கூரையை பிரித்து நேற்று முன்தினம் (04) இரவு 11.00 மணியளவில் வீட்டினுள் நுழைந்த மூன்று கொள்ளையர்கள் குறித்த வீட்டில் இருந்த தாய், மகள், தாயின் தாய் ஆகிய மூவரின் கண்கள் கைகளை கட்டிவிட்டு வீட்டில் கொள்ளையிட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் கொள்ளை கும்பலின் அட்டகாசம்
மகளிர் சிறு சேமிப்பு குழுவின் தலைவியான குறித்த பெண்ணிடம் மக்கள் வழங்கிய பணம், பாடசாலை வகுப்பு தலைவியான மகள் பாடசாலை மாணவர்களிடம் பாடசாலையில் இடம்பெறவுள்ள நிகழ்வுக்கு சேமித்த பணம்,
வாழ்வாதாரத்துக்காக அவர்கள் நடாத்திவரும் சிறு கடையின் வியாபார பணம் என 90,000 ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தினை கொள்ளையிடப்பட்டுள்ளது.
அத்தோடு மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மகளை கொலை செய்யப்போவதாக மிரட்டி நகைகளை கோரி அவர்களிடம் இருந்த சுமார் ஆறு
பவுனுக்கும் அதிகளவான நகைகளையும் கொள்ளையடித்து அவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்
இரவு 11.00 மணியளவில் வீட்டில் நுழைந்த குறித்த கொள்ளையர்கள் அதிகாலை 3.00 மணிக்கு பின்னரே வீட்டை விட்டு சென்றதாகவும், தமது கடையில் இருந்த சிகரெட்களை எடுத்து வந்து தமக்கு முன்னால் புகைத்து
கடையில் இருந்த சோடாவை எடுத்து குடித்து தம்மை கெட்ட வார்த்தைகளால் பேசி பல்வேறு அட்டகாசம் புரிந்து சென்றதாகவும் குறித்த தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் கொள்ளை கும்பலின் அட்டகாசம்
முன்னைய காலத்தில் நாம் எந்த பயமும் இன்றி வாழ்ந்தோம் ஆனால் இன்று நிம்மதியாக வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எம்மை பொலிசுக்கோ ஊடகங்களுக்கோ தகவல் வழங்க கூடாது எனவும் அதை மீறி கூறினால் மூவரையும் வந்து கொலை செய்வோம் எனவும் மிரட்டி சென்றுள்ளனர் என அந்த தாய் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
ATM இல் கொள்ளை மூவர் கைது
ATM இல் கொள்ளை மூவர் கைது
மதுரங்குளிய, 10 ஆம் கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி சந்தேகநபர்கள் ATM இயந்திரத்தில் இருந்த 10 லட்சத்து 54 ஆயிரத்து 490 ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய மதுரங்குளிய பொலிஸார் மற்றும் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி நேற்று (17) காலை அனுராதபுரம் பொலிஸ் பிரிவில், புத்தளம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபர்களை கைது செய்ததுடன், சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 9 லட்சத்து 277 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ATM இல் கொள்ளை மூவர் கைது
கல்கமுவ, வரெல்லாகம மற்றும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 28, 32 மற்றும் 35 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஆடைகள், தலைக்கவசம் மற்றும் பாதுகாப்பு கேமராவுக்கு தெளிக்கும் ஸ்பிரே ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மதுரங்குளிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

10 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை சிக்கிய திருடன்
10 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை சிக்கிய திருடன்
இளைஞர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து தங்க நகைகள், கைக் கடிகாரம், தொலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அறுவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி குறித்த குழுவினர் தொலைபேசி ஊடாக குறித்த இளைஞனை மறவன்புலவுக்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு இளைஞனைத் தாக்கி அவரிடமிருந்த நான்கரைப் பவுண் தங்க நகைகள், இரண்டு கையடக்க தொலைபேசிகள், கைக்கடிகாரம் மற்றும் 50 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
அதன் பெறுமதி 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை சிக்கிய திருடன்
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சிலாபத்தைச் சேர்ந்த 3 பெண்களும், கனகராயன்குளத்தை சேர்ந்த இரு ஆண்களுமாக ஐவர் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது குறித்த நகைகளை கொள்வனவு செய்த வவுனியாவைச் சேர்ந்த கடை உரிமையாளர் அவற்றை உருக்கி தங்க தட்டுகளாக மாற்றிய நிலையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சாவகச்சேரி நீதிமன்றில் குறித்த சந்தேக நபர்கள் 6 பேரையும் நேற்றைய தினம் ஆஜர்படுத்திய போது அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை
- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்
- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை
- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது
- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை
- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை
- பேருந்து மோதி ஒருவர் பலி
- தடம் புரண்ட ரயில்
- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்
ATM இலிருந்து கோடி கொள்ளை
ATM இலிருந்து கோடி கொள்ளை
புத்தளம் – மதுரங்குளி 10 ஆம் கட்டைப் பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் இருந்து சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சனிக்கிழமை (07) இரவு 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது, மதுரங்குளி 10 ஆம் கட்டைப் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் ATM இயந்திரத்தை நோக்கி முகங்களை மறைத்த மூவர் மோட்டார் சைக்கிளில் வந்தமை குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி கமெராவில் பதிவாகியுள்ளது.
ATM இலிருந்து கோடி கொள்ளை
அங்கு வருகை தந்த கொள்ளையர்கள், ATM இயந்திரம் பழுது என்றும் அதனை திருத்தப்போவதாகவும் கூறி, திறப்பு ஒன்றின் மூலம் ATM இயந்திரத்தின் பின் கதவைத் திறந்து பணம் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைக்குள்ளே சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதனையடுத்து, இரகசிய இலக்கங்களை உட்செலுத்தி குறித்த ATM இயந்திரத்தை திறந்த கொள்ளையர்கள் அந்த இயந்திரத்தில் இருந்த சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துணிகரமான கொள்ளைச் சம்பவத்தில் ATM இயந்திரத்திரத்திற்கோ அல்லது பாதுகாப்பு அறையின் கதவுக்கோ எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த தனியார் வங்கியுடன் தொடர்புடைய ஒருசிலரின் உதவியுடன் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் பொலிஸ் தடயவியல் பிரிவினரும், கைரேகை பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் காமினி விக்ரமசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்
- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது
- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை
வங்கியில் 7 கோடி தங்க ஆபரணங்கள் கொள்ளை
வங்கியில் 7 கோடி தங்க ஆபரணங்கள் கொள்ளை
புத்தளம் – வென்னப்புவ கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட வாய்க்கால, அங்கம்பிட்டிய பிரதேசத்திலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கிக்குள் புகுந்த
கொள்ளையர்கள் குழுவொன்று வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து அதிலிருந்து சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் கூட்டுறவு கிராமிய வங்கியின் முகாமையாளர் வென்னப்புவ தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவில் சனிக்கிழமை (30) முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த வங்கியின் ஜன்னல் கம்பியை வெட்டி அதன் வழியாக உள்ளே சென்ற கொள்ளையர்கள், தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை (சேப்) இயந்திரங்களின் உதவியுடன் உடைத்து அதிலிருந்த தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் வங்கியில் அடகு வைத்திருந்த தங்க நகைகளே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி 7 கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கியில் 7 கோடி தங்க ஆபரணங்கள் கொள்ளை
குறித்த வங்கியில் சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும், இந்த கொள்ளையின் பின்னர் வங்கியில் பொருத்தப்பட்ட கெமராக்களின் சில
பகுதிகளையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, குறித்த வங்கியைச் சுற்றியுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்களை பரிசோதனை செய்து,
இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய கொள்ளையர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
பயணிகள் நகை திருட்டு கட்டுநாயக்காவில் நடந்த கொள்ளை
பயணிகள் நகை திருட்டு கட்டுநாயக்காவில் நடந்த கொள்ளை
இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடக பயணித்த பெண் ஒருவர் எடுத்து சென்ற நகைகள் அங்கு பணியில் இருந்த அதிகாரி ஒருவர் திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பயணிகள் விமான நிலையமாக விளங்கி வரும் காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ,குறித்த அதிகாரி மீது நடவடிகை மேற்கொள்ள பட்டுள்ளதாக கட்டுநாயாக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
பயணிகள் நகை திருட்டு கட்டுநாயக்காவில் நடந்த கொள்ளை
இவ்வாறான திருட்டு சம்பவங்கள் ,பாதுகாப்பற்ற விமான தளமாக கட்டுநாயக்காவை மாற்றும் என்பதுடன் ,பயணிகள் வருகை வீழ்ச்சியுற வைக்கும் செயலாக இவை காணப்படும் நிலைக்கு இட்டு செல்லும் என ,மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் லஞ்ச பெருச்சாளிகள் ,கொள்ளையர்கள் இவ்வாறு உள்ளதை இந்த செயல் அம்பல படுத்தியுள்ளது .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனைby நிருபர் காவலன்
- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்by நிருபர் காவலன்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்by நிருபர் காவலன்
- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததுby நிருபர் காவலன்
யாழில் வீடொன்றினுள் நுழைந்து கொள்ளை
யாழில் வீடொன்றினுள் நுழைந்து கொள்ளை
யாழ்ப்பாணம் – பலாலி, தெற்கு வசாவிளான் பகுதியில் வீடொன்றினுள் நுழைந்த திருடர்கள் 25 பவுண் நகைகளையும், 40,000 ருபாய் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (24) காலை இடம் பெற்றுள்ளது.
காலை 10 மணிக்கு 11 மணிக்கு இடையில் வீட்டிலிருந்து வீட்டின் உரிமையாளர்கள் வெளியில் சென்ற போது வீட்டினுள் நுழைந்த திருடர்கள் வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 பவுண் நகைகளையும் 40,000 ரூபா பணமும் திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் வீடொன்றினுள் நுழைந்து கொள்ளை
சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வீட்டுக்கு வந்த தடவியல் பொலிஸார், கைரேகை நிபுணர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
மோப்ப நாயின் உதவியுடன் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டது சந்தேக நபர்களின் கைவிரல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை திருட்டு நபர்கள் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் பிடுங்கி எடுத்து சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனைby நிருபர் காவலன்
- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்by நிருபர் காவலன்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்by நிருபர் காவலன்
- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததுby நிருபர் காவலன்
கத்தி முனையில் ஒன்றரை கோடி கொள்ளை
கத்தி முனையில் ஒன்றரை கோடி கொள்ளை
சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட மூவரை பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொரலஸ்கமுவ கட்டுவாவல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு கூரிய கத்தியுடன் நுழைந்து பணிப்பெண்ணை பயமுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது, அவர்களிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் 24 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

பொலிஸ் வேடமிட்டு 4 இலட்சம் கொள்ளை
பொலிஸ் வேடமிட்டு 4 இலட்சம் கொள்ளை
கஹதுடுவ பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்குச் சென்று தம்மை பொலிஸ் உத்தியோகத்தர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட இருவர், வீட்டின் உரிமையாளரைக் கைது செய்து ரூ.160,000 ஐ கொள்ளையடித்ததுள்ளனர்.
அதனையடுத்து குறித்த உரிமையாளரை மொறட்டுவைக்கு அழைத்துச் சென்று மேலும் ரூ.300,000 ஐ அபகரித்துள்ளனர்.
பொலிஸ் வேடமிட்டு 4 இலட்சம் கொள்ளை
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இரு சந்தேக நபர்களும் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ஒருவரின் முன்னாள் சாரதி எனவும் தெரிய வந்துள்ளது.
நல்லூர் ஆலயத்தில் சங்கிலி கொள்ளையடித்த பெண் கைது
நல்லூர் ஆலயத்தில் சங்கிலி கொள்ளையடித்த பெண் கைது
இலங்கை யாழ்ப்பாணம்நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ,ஈடுபட்ட பெண் ஒருவர் ,அணிந்திருந்த தங்க சங்கிலியை , திருடி சென்ற பெண் ஒருவர், கைது செய்யப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்க பட்டுள்ளார் .
தங்க சங்கிலியை பறிகொடுத்த பெண் ,வழங்கிய புகாரின் அடிப்படையில் ,இந்த கைது இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கொள்ளையில் ஈடுபடும் ,பெண்கள் சிலர் சமீப காலங்களாக கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.
ஆண்களிடம் பெண்குரலில் பேசி பணம் கொள்ளையடித்த நபர் – மாப்புள்ளை சிக்கினார்
கைபேசியில் பெண் குரலில் பேசி ஆண்களை ஏமாற்றி, அவர்களிடம் பணம் பறித்த
குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வந்த அழைப்பில் பெண் ஒருவர் உரையாடியுள்ளார். அதன் பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக உரையாடியுள்ளனர். பின்னர் அந்தரங்கப் படங்களையும் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
பின்னர் கைபேசியில் பேசிய குறித்த பெண், அந்த நபரை மிரட்டி ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளார்.
தொடர்ந்து மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அதில் சந்தேகமடைந்த அந்த நபர், இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கைபேசியில் பேசிய பெண்ணிடம், வங்கியில் பணம் வைப்புச் செய்ய முடியாது என்றும், நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பணத்தைப் பெற்றுக்கொள்ள வந்த 26 வயது இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அந்த இளைஞரே பெண் குரலில் பேசி ஏமாற்றியமை தெரியவந்துள்ளது. இந்த இளைஞர் ஏற்கனவே நால்வரிடம் இவ்வாறு பேசி நான்கு
லட்சம் ரூபாவுக்கும் மேல் பறித்துள்ளமை தெரியவந்துள்ளது என்று பொலிஸார் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து நான்கு கைபேசிகளும், ஒரு லட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்
கொள்ளையடிக்கப்பட்ட 1000 பவுன் நகைகள் மீட்பு
கொள்ளையடிக்கப்பட்ட 1000 பவுன் நகைகள் மீட்பு
சென்னை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 1000 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
சென்னை இரட்டை கொலை: கொள்ளையடிக்கப்பட்ட 1000 பவுன் நகைகள் மீட்பு
தென்சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் கண்ணன் கைப்பற்றப்பட்ட நகைகளை பார்வையிட்டார்
சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியில் வசித்து வந்தவர் ஸ்ரீகாந்த் (60). இவரது மனைவி அனுராதா (55).
தொழில் அதிபரான ஸ்ரீகாந்த்தும், அனுராதாவும் அமெரிக்காவில் உள்ள தங்களது மகளின் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலையில் சென்னை திரும்பினர்.
இந்த நிலையில் இருவரும் கொடூரமாக தங்களது கார் டிரைவரால் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் மயிலாப்பூர் பகுதியை மட்டுமின்றி சென்னை மாநகரையே அதிர வைத்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-
தொழில் அதிபர் ஸ்ரீகாந்தும், அவரது மனைவி அனுராதாவும், அமெரிக்காவில் உள்ள தங்களது மகள் சுனந்தாவை பார்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
க ொலை செய்யப்பட்ட ஸ்ரீகாந்த், அனுராதா
கர்ப்பிணியாக இருந்த மகளுக்கு குழந்தை பிறந்ததும் சில மாதங்கள் அமெரிக்காவிேலயே தங்கி இருந்த கணவன்-மனைவி இருவரும் அமெரிக்காவில்
இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தனர். இருவரையும் அவர்களது டிரைவர் கிருஷ்ணா மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அங்கு வைத்து தனது நண்பர் ரவி என்பவருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தையும், அனுராதாவையும் திடீரென தாக்கிய டிரைவர் கிருஷ்ணா இருவரையும் வீட்டில்
வைத்தே துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். ஏற்கனவே வீட்டில் இருந்த நகைகளை மூட்டை கட்டி வைத்திருந்த டிரைவர் கிருஷ்ணாவும், அவரது நண்பர் ரவியும், தொழில்
அதிபரையும் அவரது மனைவியையும் விடியும் முன்னர் ஒன்றாக புதைப்பதற்கு முடிவு செய்தனர்.
தொழில் அதிபர் ஸ்ரீகாந்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் நெமிலிச்சேரி பகுதியில் உள்ள சூலேரிகாட்டில் பிரமாண்ட பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு உடலை
கொண்டு சென்று புதைப்பதற்கு முடிவு செய்தனர். இதன்படி ஸ்ரீகாந்தின் காரிலேயே 2 பேரின் உடல்களையும் மூட்டை கட்டி தூக்கி போட்டனர். பின்னர் மயிலாப்பூரில் இருந்து
மின்னல் வேகத்தில் காரை எடுத்துக் கொண்டு நெமிலிச்சேரி பண்ணை வீட்டுக்கு சென்றனர்.
அங்கு ஸ்ரீகாந்த், அனுராதா இருவரின் உடல்களையும் பெரிய குழி தோண்டி புதைத்தனர்.
பின்னர் கொள்ளை அடித்த நகைகளுடன் தப்பிச் சென்ற கிருஷ்ணா அவரது நண்பர் ரவி இருவரும் ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கொலையாளிகளை கைது செய்து விசாரணை நடத்திய பிறகே இருவரும் கொன்று புதைக்கப்பட்டது தெரிய வந்தது. இருவரும் நேற்று மாலை 6.30 மணி அளவில்தான் பிடிபட்டனர். இதன் பின்னர் உடனடியாக உடல்களை தோண்டி எடுக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து இன்று காலையில் இருவரின் உடல்களும் புதைக்கப்பட்ட பண்ணை தோட்டத்துக்கு போலீசார் கொலையாளிகளை இன்று பிற்பகலில் அழைத்துச் செல்கின்றனர். உடல்கள் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது.
தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் மிகவும் வசதி படைத்தவர் ஆவார். ஸ்ரீகாந்தும் அவரது மனைவி அனுராதாவும் தங்களது மகள் சுனந்தாவை அமெரிக்க மாப்பிள்ளைக்கு
திருமணம் செய்து கொடுத்திருந்தனர். மகளுக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தில் 3 மாதங்கள் அமெரிக்காவில் பொழுது போக்கி விட்டு இருவரும் சென்னை திரும்பி இருந்தனர்.
இந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடங்கும் முன்னரே இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் மகள் சுனந்தாவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அவரும், ஸ்ரீகாந்த் அனுராதாவின் உறவினர்களும் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த கொலை வழக்கில் துப்பு துலங்கியது எப்படி? என்பது பற்றி தென்சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மயிலாப்பூரைச் சேர்ந்த தம்பதியை கொலையாளிகள் இருவரும் திட்டம் போட்டு கொலை செய்திருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து நேற்று அதிகாலையில்
ஸ்ரீகாந்தும் அவரது மனைவியும் வீடு திரும்பியதும், முதல் மாடியில் வைத்து மனைவி அனுராதாவை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்றுள்ளனர். கீழ் தளத்தில் வைத்து ஸ்ரீகாந்தை கொன்றுள்ளனர்.
பின்னர் இருவரது உடலையும் போர்வையில் சுற்றி காரில் எடுத்துச் சென்று மாமல்லபுரம் அருகே உள்ள ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள்.
இந்த கொலை சம்பவத்தில் டிரைவர் கிருஷ்ணா, அவரது நண்பரான டார்ஜிலிங்கை சேர்ந்த ரவிராய் இருவரும் ஈடுபட்டுள்ளனர். நகை பணத்துக்கு ஆசைப்பட்டு இருவரும்
இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளிடமிருந்து 1000 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் எடை 9 கிலோவாகும். 60ல் இருந்து 70 கிலோ வரையில் வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று மதியம் 1 மணி அளவில் இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பது எங்களுக்கு தெரிய வந்தது. உடனயாக தனிப்படையினர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
போலீஸ் பிடியில் சிக்காமல் எப்படியாவது நேபாளத்துக்கு தப்பிச் சென்று விட முடிவு செய்து காரில் வேகமாக சென்றனர். 6 அல்லது 7 மணி நேரம கழித்திருந்தால் நேபாளம் சென்றிருப்பார்கள்.
ஆனால் அதற்குள் ஆந்திரா போலீசாரின் துணையுடன் கொலையாளிகள் இருவரையும் பிடித்து விட்டோம்.
பிச்சைக்கரா வேடமிட்டு வீடுகளில் கொள்ளை – மடக்கிய போலீஸ்
பிச்சைக்கரா வேடமிட்டு வீடுகளில் கொள்ளை – மடக்கிய போலீஸ்
இலங்கை பாணந்துறை பகுதியில் தனியாக வசிக்கும் பெண்களை இலக்கு வைத்து நடத்த பட்ட கொள்ளை அம்பலமாகியுள்ளது
பகலில் இவர்கள் வீடுகளுக்குள் பிச்சைக்கார வேடத்தில் செல்லும் நபர்கள் அவர்களை அங்கு நோட்டமிட்டு
இரவில் கூரிய ஆயுதங்களை தாங்கிய வண்ணம் வீட்டு கதவுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளமை அம்பலமாகியுள்ளது
கைதானவர்களிடம் இருந்து நகைகள்,மற்றும் பணம் என்பன மீட்க பட்டுள்ளன ,
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .மக்களே உசார் ,கொள்ளையர்கள் உங்கள் அருகில்,
குடும்பத்தை கடத்தி 75 லட்சம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு
குடும்பத்தை கடத்தி 75 லட்சம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு
இலங்கை குடா ஓயா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பூசகர் மற்றும் அவரது மனைவி
பிள்ளைகளை வானில் கடத்தி சென்று எழுபத்தி ஐந்து லட்சம் கொள்ளையடித்த நல்லவர் அடங்கிய குழு ஒன்று காவல்துறையின் விசேட வேட்டையில் சிக்கினார்
இந்த கடத்தல் காரர்கள் பயன்படுத்திய வான் உள்ளிட்டவை மீட்க பட்ட நிலையில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
தீபாவளிக் தினத்தில் 28 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணம் கொள்ளை!
தீபாவளிக் தினத்தில் 28 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணம் கொள்ளை!
தீபாவளிக்கு வீட்டை பூட்டிவிட்டு ஆலையத்துக்கு சென்று வழிபட்டுவிட்டு வீடுதிரும்பிய போது பூட்டியவீட்டை கொள்ளையர்கள் உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்கள், உட்பட
28 இலச்சம் ரூபா பெறுமதியானவற்றை கொள்ளையிட்ட சம்பவம் நேற்று (04) மட்டு. ஏறாவூர்
பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மைலம்பாவெளி பிரதான வீதியிலுள்ள குறித்த வீட்டின் உரிமையாள் உட்பட 4 பேர் வசித்துவந்துள்ள நிலையில் சம்பவதினமான தீபாவளி தினத்தையிட்டு காலை 11 மணி அளவில்
வீட்டை பூட்டிவிட்டு பிள்ளைகளுடன் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு மதியம் 1 மணி அளவில் வீடுதிரும்பிய போது பூட்டியிருந்த வீட்டின் முன்கதவு மற்றும் அறை கதவு உடைத்து அறையில்
இருந்த அலுமாரியை உடைத்து அங்கிருந்த 6 இலச்சம் ரூபா பணம் மற்றும் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தார்.
இதனை அடுத்து பொலிஸார் மேப்ப நாய் மற்றும் தடவியல் பிரிவு பொலிஸாரை வரவழைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.























