Posted in சினிமா

சின்னத்திரை நடிகை வீட்டில் கொள்ளை – போலீஸ் விசாரணை

சின்னத்திரை நடிகை வீட்டில் கொள்ளை – போலீஸ் விசாரணை

கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகை வீட்டில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல சின்னத்திரை நடிகை வீட்டில் கொள்ளை – போலீஸ் விசாரணை
சின்னத்திரை நடிகை ஸ்ரீகலா

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கண்ணூபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீகலா(வயது24). இவர் கேரள சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானார். மேலும் சினிமாவிலும் சிறு, சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

இவர் கண்ணூபுரம் பகுதியில் தனது தந்தை மற்றும் தங்கை ஜெயாவுடன் வசித்து வருகிறார். தினமும் வீட்டில் இருந்து படப்படிப்பிடிப்புக்கு செல்வது வழக்கம்.

நேற்று காலை வழக்கம்போல் ஸ்ரீகலா தனது வீட்டில் இருந்து சினிமா படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் அவரது தந்தையும், தங்கையும் மட்டுமே இருந்தனர். இந்த நிலையில் ஸ்ரீகலாவின் தங்கை தனது தந்தையுடன் பொருட்கள் வாங்குவதற்காக மதியம் அந்த பகுதியில் உள்ள கடைவீதிக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் மாலை 3 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த அலமாரி திறந்து கிடந்ததுடன், பொருட்களும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. அலமாரியில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகை திருடு போய் இருந்தது.

இவர்கள் 2 பேரும் வெளியில் சென்றதை நோட்டமிட்ட நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கதவை உடைத்து, உள்ளே நுழைந்து அலமாரியை உடைத்து, அதில் இருந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சின்னத்திரை நடிகை ஸ்ரீகலாவின் தங்கை ஜெயா கண்ணூபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் மீள பரவும் கொரனோ

    இலங்கையில் மீள பரவும் கொரனோ

    இலங்கையில் வேகமாக பரவி வந்த கொரனோ தளர்த்த பட்டு வந்த நிலையில் அதுவே மீளவும் உயிர் பெற்று அதிகரித்து செல்கிறது

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 1300 க்கு மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

      Posted in சினிமா

      வேதாளம் ரீமேக்கில் இணைந்த தமன்னா

      வேதாளம் ரீமேக்கில் இணைந்த தமன்னா

      தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் தற்போது ‘போலா ஷங்கர்’ என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

      வேதாளம் ரீமேக்கில் இணைந்த தமன்னா
      தமன்னா


      சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘வேதாளம்’. இப்படம்

      தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘போலா ஷங்கர்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

      இந்நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தில் இணைந்து நடித்திருந்த

      தமன்னா, தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 11-ந் தேதி பூஜையுடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

        Posted in உலக செய்திகள்

        இங்கிலாந்தில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா

        இங்கிலாந்தில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா

        இங்கிலாந்தில் தற்போது குளிர்காலமாக இருப்பதே கொரோனா தொற்று உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

        இங்கிலாந்தில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு
        கொரோனா வைரஸ்

        இங்கிலாந்தில் 3 மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின்பு சமீப நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி அங்கு ஒரே நாளில் 49 ஆயிரத்து 156 பேருக்கு புதிதாக தொற்று பதிவாகி உள்ளது. குறிப்பாக தொடர்ந்து 6-வது

        நாளாக 40 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இதுவரை மொத்தம் 84 லட்சத்து 97 ஆயிரத்து 868 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். திங்கட்கிழமை 45 பேர் கொரோனாவுக்கு

        பலியானதை தொடர்ந்து இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 629 பேர் இறந்து உள்ளனர். தற்போது அங்கு 7 ஆயிரத்து 97 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

        கொரோனா தடுப்பூசி

        இங்கிலாந்தில் தற்போது குளிர்காலமாக இருப்பதே கொரோனா தொற்று உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 85 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும், 78 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

        Posted in Uncategorized

        கொரனோவில் சிக்கி உயிருக்கு போராடும் 2 வயது சிறுவன்

        கொரனோவில் சிக்கி உயிருக்கு போராடும் 2 வயது சிறுவன்

        அமெரிக்காவில் இரண்டு வயது சிறுவன் ஒருவன் கொரனோ நோயினால் பாதிக்க பட்டு உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளார்

        தற்போது செயற்கை சுவாசம் பொருத்த பட்டுள்ள நிலையில் சிறுவன் தொடர்ந்து கண்காணிக்க பட்டு வருகிறார்

        மேற்படி சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

          Posted in Uncategorized

          இந்தியாவில் கொரோனா -புதிதாக 29,616 பேருக்கு தொற்று

          இந்தியாவில் கொரோனா -புதிதாக 29,616 பேருக்கு தொற்று

          கொரோனா பாதிப்பால் கேரளாவில் 127, மகாராஷ்டிராவில் 51 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 290 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,46,658 ஆக உயர்ந்தது.

          இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 29,616 பேருக்கு தொற்று

          மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,616 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

          கடந்த 2 நாட்களாக பாதிப்பு 31,923, 31,382 ஆக இருந்த நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 36 லட்சத்து 24 ஆயிரத்து 419 ஆக உயர்ந்தது.

          நாடு முழுவதுமான நேற்றைய பாதிப்பில் கேரளாவில் மட்டும் 61 சதவீதம் உள்ளது. அதாவது அங்கு புதிதாக 17,983 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

          இது தவிர மகாராஷ்டிராவில் 3,286, தமிழ்நாட்டில் 1,733, மிசோரத்தில் 1,322, ஆந்திராவில் 1,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

          கொரோனா பாதிப்பால் கேரளாவில் 127, மகாராஷ்டிராவில் 51 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 290 பேர் இறந்துள்ளனர்.

          இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,46,658 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,38,776 பேர் அடங்குவர்.

          நோய் பாதிப்பில் இருந்து மேலும் 28,046 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 28 லட்சத்து 76 ஆயிரத்து 319 ஆக உயர்ந்தது.

          தற்போது 3,01,442 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்று முன்தினத்தை விட 1,280 அதிகம் ஆகும்.

          கோப்புப்படம்

          நாடு முழுவதும் நேற்று 71,04,051 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 84.89 கோடியாக உயர்ந்துள்ளது.

          இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 15,92,421 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

          இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை 56.16 கோடியாக உயர்ந்துள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் கொரோனா 93 உயிரிழப்பு

          இலங்கையில் கொரோனா 93 உயிரிழப்பு

          இலங்கையில் நேற்றைய (19) தினம் மேலும் 93 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

          சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (20) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

          Posted in Uncategorized

          உலக அளவில் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 22.66 கோடி

          உலக அளவில் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 22.66 கோடி

          உலக அளவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத்தொடங்கியுள்ளது.

          தற்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

          டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

          உலகம் முழுவதும் இதுவரை 226,659,107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 4,662,831 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 203,339,045 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 18,657,231 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

          இவர்களில் 18,554,702 பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 102,529 பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          மன்னார் மாவட்டத்தில் 1960 கொவிட் தொற்றாளர்கள்

          மன்னார் மாவட்டத்தில் 1960 கொவிட் தொற்றாளர்கள்

          மன்னார் மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 1960 தொற்றாளர்கள் அடையாளம்

          காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

          மன்னார் மாவட்டத்தில் சனிக்கிழமை (11) மேலும் புதிதாக 95 கொரோனா தொற்றாளர்கள்

          அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 11 நாட்களில் மாவட்டத்தில் 276 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ரி.வினோதன் குறிப்பிட்டார்.

          மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்ளுள் 22பேர் உயிரிழந்துள்ளனர்.

          Posted in Uncategorized

          கொரோனா மரண எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது

          கொரோனா மரண எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது

          நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 157 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

          குறித்த அனைவரும் நேற்றைய தினம் (10) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

          அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்துள்ளது.

          இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 482,360 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

          மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411,233 ஆக அதிகரித்துள்ளது.

            Posted in Uncategorized

            தியாகிகளின் பழிவாங்குதல் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த ஈரான்

            தியாகிகளின் பழிவாங்குதல் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த ஈரான்

            சிரியா ஈராக் எல்லை பகுதியில் ஈரானிய இராணுவம் புதிய பழிவாங்கும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது

            ஆயிரம் கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட எல்லையோரத்தில் இந்த திடீர் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது

            இதற்கு சோலைமானியின் நினைவாக தியாகிகளின் பழிவாங்குதல் என்ற குறியீட்டு பெயருடன் தாக்குதல் ஆரம்பிக்க பட்டுள்ளது

            இதுவே உலக போராக மாற்றம் பெற கூடும் என்ற அச்சம் நிலவுகிறது

            புலிகளை போல குருதீஸ்தான போராளிகள் இந்த இராணுவ வேட்டையில் இல்லாது அழிக்க படலாம் என எதிர்பார்க்கலாம் ,

            • வன்னி மைந்தன்-
              Posted in இலங்கை செய்திகள்

              மரணச்சடங்கில் கலந்துகொண்ட 28 பேருக்கு கொரோனா

              மரணச்சடங்கில் கலந்துகொண்ட 28 பேருக்கு கொரோனா

              வவுனியா – ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில்

              கலந்துகொண்ட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

              இம்மாதம் 24ஆம் திகதி, ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பட்டடைபிரிந்தகுளம் பகுதியில், மரணச்சடங்கு ஒன்று இடம்பெற்றது. பின்னர் அவரது குடும்ப உறுப்பினர் இருவருக்கு

              சுகவீனம் ஏற்பட்டதையடுத்து, புளியங்குளம் வைத்தியசாலைக்கு சென்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட போது, இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

              இதையடுத்து, வவுனியா வடக்கு சுகாதார பிரிவினரால் மரண சடங்கில் கலந்துகொண்ட நெருங்கிய உறவினர்கள் 30 பேருக்கு, இன்றைய தினம் (30) அன்டிஜன் பரிசோதனை

              மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

              இதையடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் மரணச்சடங்கில் பங்கேற்ற ஏனையவர்களை இனங்கண்டு பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதோடு, சுகாதார

              பிரிவினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.

              Posted in இலங்கை செய்திகள்

              தடுப்பூசிக்கு பின்னரும் கொரோனா

              தடுப்பூசிக்கு பின்னரும் கொரோனா

              தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரும் கொரோனா பரவுவது தொடர்ந்தால், அடுத்தகட்ட நடவடிக்கையை பரிந்துரைப்பதற்காக சிறப்பு மருத்துவ குழுக்களை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, சுகாதார துறை பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார்.

              கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 100 சதவீதமும், இரண்டாவது டோஸ் சுமார் 56 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த ஜனாதிபதி, இந்த மாத இறுதிக்குள் கணிசமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

              30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதா அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதா அடுத்த முன்னுரிமை என்பதை ஆராய்ந்து கருத்துக்களை முன்வைக்குமாறு சுகாதாரத் துறை பிரதானிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

              Posted in இலங்கை செய்திகள்

              மருதங்கேணி – செம்பியன்பற்று குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

              மருதங்கேணி – செம்பியன்பற்று குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

              நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மருதங்கேணி – செம்பியன்பற்று நாவலடி குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

              நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் பணிகளின் ஓர் அங்கமாக மருதங்கேணி பிரதேச

              செயலகத்துக்குட்பட்ட, J/427 செம்பியன்பற்று தெற்கு கிராமத்தின் நாவலடி குளத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

              இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன்;

              அடிக்கல் நாட்டி பணிகளை ஆரம்பித்ததுடன், திட்டத்தின் பெயர்ப்பலகையையும் திரைநீக்கம் செய்தார்.

              மேலும், அப்பகுதி விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்ததோடு உடனடி நடவடிக்கைகளை

              எடுத்து அவற்றை தீர்த்துவைக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

              இந் நிகழ்ச்சித்திட்டமானது நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படுகின்றது.

              அதன்படி, நாவலடி குளத்தின் அபிவிருத்திப்பணிகளுக்காக 3,866,000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


              யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இச்செயற்பாடுகள் 4 மாதங்களில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

              இக்குளத்தை அபிவிருத்தி செய்து குளத்தின் நீர் கொள்ளளவை அதிகரிக்கச் செய்வதனூடாக, நெல் மற்றும் வெங்காயப் பயிர்ச்செய்கைகளை பெருமளவில் மேற்கொள்ளும் செம்பியன்பற்று கிராம மக்கள் நன்மையடையவுள்ளனர்.

              இக்குளத்தை அபிவிருத்தி செய்துதருமாறு குறித்த கிராம மக்கள் முன்வைத்த கோரிக்கையை கருத்தில் கொண்ட அங்கஜன் இராமநாதனுக்கு நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தமது நன்றியை நேரில் தெரிவித்தனர்.

                Posted in Uncategorized

                300 பொலிஸாருக்குக் கொரோனா

                300 பொலிஸாருக்குக் கொரோனா

                தடுப்பூசி செலுத்திக் கொண்ட 300 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குக்

                கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் செலுத்திக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே

                இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  சிறைக் கைதிகள் 72 பேருக்கு கொரோனா

                  சிறைக் கைதிகள் 72 பேருக்கு கொரோனா

                  சிறைச்சாலை கைதிகள் 72 பேர் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று, நேற்று (05) உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன், இன்று (06) தெரிவித்தார்.

                  கொரோனாவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

                  கொரோனா தொற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவரும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

                  மாவட்டத்தில் தொடர்ந்து எழுமாறாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

                  மட்டக்களப்பு சிறைக் கைதிகள் 72 பேருக்கும், பொலிஸார் இருவருக்கும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேரும், களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி , காத்தான்குடி ஆகிய இரு

                  சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட மூன்று பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும் தொற்று நேற்று உறுதியாகியுள்ளது.

                  அத்துடன், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி

                  பிரிவில் 2 பேர் உட்பட 116 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

                    Posted in Uncategorized

                    இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

                    இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

                    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க் கொல்லியான கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

                    ஒரு சில நாடுகள் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ள நிலையில் பல நாடுகளில் கொரோனா வைரசின் புதிய, புதிய அலைகள் கடும் பாதிப்புகளை

                    ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

                    குறிப்பாக, இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் அங்கு வேகமாகப் பரவிவருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை கடந்த சில நாட்களாக இருந்து வந்தது.

                    இந்த நிலையில், இன்றைய பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்துள்ளது. அந்நாட்டில் கடந்த பிப்ரவரி 25- ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு இதுதான் ஆகும்.

                    இங்கிலாந்தில் 9,055- பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 9 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்

                    Posted in Uncategorized

                    2 மாத குழந்தைக்கு கொரனோ – கண்ணீரில் குடும்பம்

                    இலங்கை

                    2 மாத குழந்தைக்கு கொரனோ – கண்ணீரில் குடும்பம்

                    கிளிநொச்சி – கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராமத்தில், 2 மாத சிசுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

                    நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருந்தே, இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

                    குறித்த சிசுவின் தந்தை கிளிநொச்சியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில்

                    பணியாற்றுபவர் என்றும், அவருக்கு அண்மையில் தொற்றுறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

                    இதைத் தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் இரண்டு மாதக் சிசுக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில், சிசவுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதுடன், தாய்க்கு தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்டது.

                    இருந்த போதும், அவருக்கு இருக்கும் அறிகுறிகள், தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதனால், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                    Posted in உலக செய்திகள்

                    அதிக கட்டணம் வசூலிப்பு – 10 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து

                    அதிக கட்டணம் வசூலிப்பு – 10 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து

                    தெலுங்கானா மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிடம் சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

                    இதுதொடர்பாக, தெலுங்கானா அரசு தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் அம்மாநிலத்தில் உள்ள 10 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும்

                    நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தது. மேலும், மருத்துவமனைகள் சரிவர செயல்படாததும் தெரியவந்தது.

                    இந்நிலையில், அந்த 10 தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய கொரோனா

                    நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து குணமடைந்த பின் புதிதாக எந்த கொரோனா நோயாளியையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கக் கூடாது என தெலுங்கானா சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

                    கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் மேலும், 79 மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

                      Posted in மருத்துவம்

                      கொரோனா நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எப்படி?

                      கொரோனா நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எப்படி?

                      கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எவ்வாறு? என்பது குறித்து குமரி மாவட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குனர் டாக்டர் துரை கூறியதாவது:-

                      ஒரு நோயாளிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் காய்ச்சல் ஏற்படும். சிலருக்கு இருமல், உடல்வலி போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

                      கொரோனா கிருமி நமது உடலுக்குள் சென்றவுடன்

                      அதை எதிர்த்து நமது உடலிலுள்ள வெள்ளை அணுக்கள் போராடும். அப்போது நமது உடல் வெற்றி பெற்றால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு விடும்.

                      ஆனால் தற்போது உள்ள கொரோனாவை எதிர்த்து வெள்ளை அணுக்கள் தூண்டப்படும்போது சைட்டோகெய்ன்ஸ் எனப்படும் திரவங்கள் சுரக்கும். அது எதற்காக என்றால் வைரசை

                      கொல்வதற்காகத்தான். ஆனால் இந்தத் திரவம் வைரஸை மட்டும் கொல்லாது. நமது நுரையீரலில் இருந்து ரத்தத்துக்கு பிராணவாயு செல்லும் இடத்தையும் சேதப்படுத்தும். இது கொரோனா பாதிப்பு

                      ஏற்பட்ட நபருக்கு 5-வது நாள் அல்லது 6-வது நாளில் நடக்கும். நமது உடலில் கொரோனா வைரஸ் இந்த சேதத்தை ஏற்படுத்த வில்லை. அந்த வைரசை எதிர்த்துப் போராடும் நமது உடலில் உள்ள

                      வெள்ளை அணுக்கள் அளவுக்கதிகமாக செயல்பட்டு சைட்டோகெய்ன்ஸ் திரவத்தை சுரப்பதினால் நுரையீரலின் மாற்றம் நடைபெறும் பகுதி சேதம் ஏற்படுகிறது.

                      சேதத்தை பொறுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு ஆக்சிஜன் அளவு குறைய தொடங்கும்.

                      அதனால் தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க டாக்டர்களால் சீராய்டு மருந்து கொடுக்கப்படுகிறது.

                      கொரோனா நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எப்படி?

                      இந்த சீராய்டு மருந்து வெள்ளை அணுக்களால் அதிகமாக சுரக்கப்படும் சைட்டோகெய்ன்ஸ் திரவத்தை கட்டுப்படுத்துகிறது.

                      கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு காய்ச்சல் வந்தால் இரண்டு நாள் அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும்.

                      சம்பந்தப்பட்ட நபர் காய்ச்சல் ஏற்பட்டதும் மாத்திரைகளை மருந்து

                      கடைகளில் வாங்கி சாப்பிடுவார். அதன் மூலம் குணமாகிவிடும். ஐந்து அல்லது ஆறாவது நாளில் மூச்சுத்திணறல் தொடங்கும்.

                      அப்படி தொடங்கினாலே கொரோனா வைரஸ் நுரையீரல் பகுதியில் வலுவாக இருக்கிறது என்று அர்த்தம்.

                      எனவே முதலிலேயே நோயாளிகள் சிகிச்சைக்கு வந்துவிட்டால் எளிதாக அவர்களது உயிரைக் காப்பாற்றி விடலாம்.

                      இவ்வாறு துணை இயக்குனர் டாக்டர் துரை கூறினார்.