Tag: இலங்கை
மன்னார் நகர் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு
மன்னார் நகர் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு
மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு
ஒழிப்பு செயற்றிட்டம் நேற்றைய தினம் (04) மன்னார் பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைஇ மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி
பணிமனை மற்றும் பிரதேச செயலகம்இ மாவட்ட செயலகம் இணைந்து இந் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளன.
வீடுகள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழல்களை அடையாளப்படுத்தல் மற்றும் அவற்றை அப்புறப்படுத்துதல் என்ற நோக்கில் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரதேச
செயலக உத்தியோகத்தர்கள்இ டெங்கு ஒழிப்பு செயலணிஇ உத்தியோகத்தர்கள்இ பாதுகாப்பு துறையினர் விசேட செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும்
வைத்தியசாலை பகுதிகளை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினரின் உதவியுடன் விசேட சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாரம் முழுவதும் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு மன்னார் மாவட்டத்தில்
உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்
டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்
சர்வதேச அளவில் அங்கிகரிக்கப்பட்ட ‘பிளக்செயின்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 15 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட நபர்களுக்கான ‘டிஜிட்டல் அடையாள அட்டை’ தேசிய
இளைஞர் சேவைகள் மன்றத்தினால், நேற்று (03) அறிமுகப்படுத்தப்பட்டது.
இளைஞர்களின் திறன்கள், கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட தரவுகளைக் கொண்ட தரவுத்தளமாகப் பயன்படுத்தக்கூடிய ‘டிஜிட்டல் அடையாள அட்டை’
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் பணிப்பாளர் நாயகம் தமித விக்ரமசிங்க தெரிவித்தார்.
டிஜிட்டல் அடையாள அட்டையானது, அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தரவு வங்கியாக பயன்படுத்தப்படுவதோடு, இளைஞர்களுக்கு
நேரடி வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான கருவியாகப் பயன்படுத்த முடியும் எனவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தெரிவித்தார். .
சர்வதேச அளவில் அங்கிகரிக்கப்பட்ட ‘பிளக்செயின்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய குறித்த ‘டிஜிட்டல் அடையாள அட்டை’ ஒரு தகவல் தொழில்நுட்பக் கருவியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அடையாள அட்டை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்று (03) இடம்பெற்றது.
வெற்றி கொள்ள ஒன்றிணைந்து செயற்படுவோம் – கடற்றொழில் அமைச்சர்
வெற்றி கொள்ள ஒன்றிணைந்து செயற்படுவோம் – கடற்றொழில் அமைச்சர்
கடந்த காலங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றதைப் போன்று
எதிர்காலத்திலும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு சவால்களில் வெற்றியடைய வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளை புதிய ஆண்டில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
‘இந்த வருடத்தில் நாம் எல்லோரும் இணைந்து கடந்த வருடத்தைப் போலவே, எமது அமைச்சின் பொறுப்புக்களையும், கடமைகளையும் விரைந்து செயற்படுத்த வேண்டும்.
எம்மத்தியில் காணப்படுகின்ற சவால்களை வெற்றிகொள்வது மாத்திரமன்றி, எமது பயணத்தில் எதிர்கொள்ளுகின்ற சவால்களையும் இதன்மூலம் வெற்றிகொள்ள வேண்டும்.
எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எமக்கு சிறந்த இராஜாங்க அமைச்சரும், அமைச்சின் செயலாளரும், இராஜாங்க அமைச்சின் செயலாளரும், பணிப்பாளர் நாயகமும் ஏனைய அதிகாரிகளும் கிடைத்துள்ளனர்.
ஜனாதிபதியின் சபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக, ஜனாதிபதி தலைமையில் பிரதமரின் வழிகாட்டலில், நிதி அமைச்சரின் பக்கத் துணையுடன் எமது பொறுப்புக்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.
இதுவரை காலமும் இந்த அமைச்சை முன்னெடுப்பதற்கு நீங்கள் அனைவரும் வழங்கி வரும் ஒத்துழைப்பினை நான் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்.
தங்கு தடைகளற்ற உங்களது நலன் சார்ந்த சுதந்திரமான பணிகளுக்கு எனது ஒத்துழைப்புக்கள் தொடர்ந்து கிடைக்கும்’ என்றும் கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
1901 பேருக்கு பொலிசார் எச்சரிக்கை
1901 பேருக்கு பொலிசார் எச்சரிக்கை
சுகாதார விதிமுறைகளை மீறிய மேலும் 1901 நபர்கள் பொலிசாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் ,சுகாதார வழிகாட்டி தொடர்பான விதிமுறைகள் உரிய வகையில் பொது
மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்றதா? என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே பொலிசார் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 9,793 பேர் நேற்று (02) பரிசோதிககு உட்படுத்தப்பட்டனர்.
4,121 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3,276 முச்சக்கர வண்டிகளும் இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் 10,199 பொலிசார் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டனர்.
இ.போ.ச பஸ் – ரயில் சேவைகள் அதிகரிப்பு
இ.போ.ச பஸ் – ரயில் சேவைகள் அதிகரிப்பு
அரச ஊழியர்கள் வழமைப்போன்று கடமைக்கு சமூகம் அளிப்பதாலும், பாடசாலைகள் மீண்டும்
திறக்கப்பட்டதினாலும் இன்று (தொடக்கம் சேவையில் ஈடுப்படும் இ.போ.ச பஸ் மற்றும் அலுவலக ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பட்டுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவின் பிரதி பொது முகாமையாளர்
பண்டுக்க சுவர்ண ஹங்ஷ இதுதொடர்பாக தெரிவிக்கையில், 5,000 க்கு மேற்பட்ட பஸ்கள் நாளாந்த சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
பசில் இந்தியா பயணம்
பசில் இந்தியா பயணம்
புத்தாண்டுக்கு முன்னரான விடுமுறையைக் கழிப்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்று, புத்தாண்டு தினத்தன்று நாடுதிரும்பிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, இந்தியாவுக்கு மீண்டும்
விஜயம் செய்யவுள்ளார். நிதியமைச்சராக அவர், பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக இந்தியாவுக்குச் சென்று பல தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று இந்தியாவுக்குச் செல்லும் அவர், ஜனவரி 12 ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பூகோள மாநாட்டிற்காக இந்தியா செல்லும் நிதியமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது டிசெம்பர் முதலாம் திகதியன்று பெசில் ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்தார்.
இந்த விஜயத்தின்போது திருகோணமலை எரிபொருள் களஞ்சியசாலையின் நவீனமயமாக்கல் ,
எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள நான்கு நிவாரணங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிள்ளைகளை நிர்வாணமாக்கி மிளகாய்த்தூள் பூசிய தந்தை
பிள்ளைகளை நிர்வாணமாக்கி மிளகாய்த்தூள் பூசிய தந்தை
ஹட்டன்- குடாகம பிரதேசத்தில் சிறுவர்கள் இருவரை துன்புறுத்திய அச்சிறுவர்களின் தந்தை ஹட்டன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
6 வயதுடைய சிறுவனும் 7 வயது சிறுமியுமே, இவ்வாறு அவர்களது தந்தையால் துன்புறுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது அவர்களது தாயும் அருகிலிருந்துள்ளார்.
அச்சிறுவர்களை நிர்வாணமாக்கி, அவர்களது முகத்திலும் உடலிலும் மிளகாய்த்தூளைப் பூசி, அவர்களது வீட்டுக்கு முன்பாகவுள்ள மரத்தில் கட்டி வைத்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவர்கள் இருவரும் விறகுக் கட்டு ஒன்றை திருடியதாகவும் அதற்கே இவ்வாறு தண்டனை வழங்கியதாகவும் அச்சிறுவர்களின் தந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான சிறுவர்கள் இருவரும் சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
வங்கியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
வங்கியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
நாரம்மலாவில் உள்ள அரச வங்கியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 20 வயதான பெண் ஊழியர் படுகாயமடைந்துள்ளார்.
வங்கியின் பாதுகாப்பு அதிகாரிக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
காயங்களுக்கு உள்ளான அந்த பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகிந்த அப்படி செய்யவில்லை -குத்துகாரணம் அடிக்கும் கோட்டா
மகிந்த அப்படி செய்யவில்லை -குத்துகாரணம் அடிக்கும் கோட்டா
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன.
சில நாட்களுக்கு முன்னரும் இன்றையதினமும் இவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த
செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதம அமைச்சின் அலுவலகம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் இராஜினாமா என்ற செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதமரின்
ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
கோட்டா விசேட கூட்டம் – நடக்க போவது என்ன ..?
கோட்டா விசேட கூட்டம் – நடக்க போவது என்ன ..?
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்று (03) விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று
நடைபெறவுள்ளது. வழமைப்போன்று அல்லது மிகவும் இரகசியம் காக்கும் வகையில், மூடிய கதவுகளுக்குள் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக அறியமுடிகின்றது.
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்றைய விசேட அமைச்சரவையில் ஆகக் கூடுதலான கவனம் செலுத்தப்படுமென அறியமுடிகின்றது.
இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் மற்றும் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர் ஆர்டிகல ஆகியோரும் பங்கேற்று, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கையிருப்பு உள்ளிட்டவை தொடர்பில் அமைச்சரவைக்குத் தெளிவுப்படுத்துவர்.
இந்நிலையில், தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு புத்தாண்டுக்கு முன்னரே, அமெரரிக்கவுக்குச் சென்றிருந்த நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, 2022 புத்தாண்டு தினத்தன்று நாடு திரும்பினார். அவரும் இன்றைய விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டாயமாக பங்கேற்பார்.
இன்றைய விசேட அமைச்சரவையில், சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெற்றுக்கொள்வது தொடர்பில் மட்டுமே விரிவாக ஆராயப்படும்
முடங்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை இலங்கைக்கு இல்லையென்பதில் மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால் உறுதியாக இருக்கிறார்.
எனினும், சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டுமென அமைச்சர்கள் சிலர் விரும்புகின்றனர். அரசாங்கம் அங்கு செல்லக்கூடாதென அமைச்சர்களான பந்துல குணவர்தன மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தான் தனிப்பட்ட முறையில் நம்புவதாக அமைச்சர் சி.பி ரத்நாயக்க கூறினார். ” சர்வதே நாணய நிதியம், எங்கள் மீது விதிக்க விரும்பும் அனைத்து நிபந்தனைகளையும் நாங்கள் கடைப்பிடிக்கிறோம் என்று அர்த்தமல்ல, ஆனால், குறைந்தபட்சம் நாங்கள் ஒரு உரையாடலையாவது ஆரம்பிக்கவேண்டும். சர்வதேச நாணய நிதியத்தை நிராகரிப்பதும் மக்களுக்கு உதவாது என்றார்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்கம் செல்ல வேண்டுமென தாம் நம்புவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சரவையில் இருக்கும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
வீட்டில் சடலமாக தமிழ் போலீசார் மீட்பு
வீட்டில் சடலமாக தமிழ் போலீசார் மீட்பு
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை ரமணன் (வயது-47) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
அவரது குடும்பத்தினர் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு சென்றிருந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார் என்றும் பொலிஸார் கூறினர்.
அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
கிளிநொச்சியில் எரிந்த கடை – சதி முயற்சியா ..?
கிளிநொச்சியில் எரிந்த கடை – சதி முயற்சியா ..?
கிளிநொச்சி சேவியர் கடைச் சந்திக்கருகில் இயங்கி வந்த அமுத கடல் கட்டட பொருட்கள்
விற்பனை நிலையத்தில் இன்று (02) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய தீ அனர்த்தம்
காரணமாக கோடிக்கனக்கான பெறுமதியான பொருட்கள் எரிந்து அழிந்துள்ளன.
மின்சார ஒழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவினர் சென்று தீயினை 11
மணியளவில முழுமையாக கட்டுப்படுத்தினார்கள்.
கிளிநொச்சியில் உள்ள பாரிய கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் ஒன்றாக இயங்கி
வந்த மேற்படி நிறுவனத்தின் ஏற்பட்ட தீயினால் கோடிக்கான பெறுமதியான கட்டடப் பொருட்கள் எரிந்து அழிந்தும், முற்றாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துமுள்ளன
துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற கோட்டா – பொங்கிய சிறிதரன் video
துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற கோட்டா – பொங்கிய சிறிதரன்
பொருளாதாரத்தை கட்டி வளர்க்கின்ற ஒரு நல்லெண்ணம் பொருந்திய ஜனாதிபதி இந்நாட்டில்
இல்லை எவ் விடயத்தையும் துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற ஜனாதிபதியே
காணப்படுகின்றார்- சி.சிறீதரன்
இதில் அழுத்தி காணொளி பாருங்கள்
https://www.facebook.com/ImShritharan/videos/426069292549340/
உயிர் குடிக்கும் டிப்பர் – மிதக்கும் உடல்கள்
உயிர் குடிக்கும் டிப்பர் – மிதக்கும் உடல்கள்
கேப்பாபிலவு – புதுக்குடியிருப்பு வீதியில், இன்று (01) மாலை 5.30 மணியவில் இடம்பெற்ற விபத்தில்
இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.
வற்றாப்பளை பகுதியில் இருந்து கேப்பாபிலவு பகுதிநோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த
மூவர், எதிர்திசையில் வந்த டிப்பருடன் மோதியதையடுத்தே விபத்து சம்பவித்துள்ளது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து டிப்பர் சாரதி முள்ளியவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விபத்தில், பிலக்குடியிருப்பு கேப்பாபிலவினை சேர்ந்த கிருஸ்ணசாமி மாரிமுத்து (வயது 48), அதே
இடத்தைச் சேர்ந்த சூரியகுமார் கரிதாஸ் (வயது 17) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பை சேர்ந்த சண்முகம் நிறோஜன் (வயது 22) என்ற இளைஞன்
படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் கிராம மக்களுக்கும் இடயில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
டிப்பர் வகானத்தினை அந்த இடத்தில் விட்டு எடுத்துசெல்லமுடியாதவாறு மக்கள் ஒன்று
கூடியதால் பதற்ற நிலை ஏற்பட்டு பொலிஸாருக்கும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
சித்தி விநாயகர் ஆலய சிலை உடைப்பு – பதட்டம் அதிகரிப்பு
சித்தி விநாயகர் ஆலய சிலை உடைப்பு – பதட்டம் அதிகரிப்பு
அக்கரபத்தனை நகரில் ஒருவகையான பதற்றம் நிலவுவதாகவும் அங்கிருக்கும் கடைகளில் சில கடைகள் இழுத்து மூடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் திருவுருவச் சிலைகளும் பொம்மைகளும் இனந்தெரியாதோரால் நேற்றிரவு அல்லது இன்று விடியற்காலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆலய நிர்வாக சபையினர் அக்கரபத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள பிரதான ஆலயமான சித்தி விநாயகர் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை விசேட பூஜை
வழிபாடுகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக சபையினர் மேற்கொண்டுள்ளனர்.
புனர்நிர்மாண பணிகள் நிறைவடைந்து தற்பொழுது பொம்மைகளுக்கு வெளிப்புற பூச்சு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்து நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து ஆலயத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் கடும் எதிர்பை தெரிவித்து வருகின்றனர்.
இது இனந்தெரியாத குழு ஒன்றின் செயற்பாடு எனவும் ஆலயத்தில் நடைபெற இருந்த கும்பாபிஷேக நிகழ்வை குழப்புவதற்கான செயற்பாடு எனவும் மேலும் மத ரீதியிலான
முரண்பாடுகளை உருவாக்க திட்டமிடப்பட்ட செயற்பாடாகவும் இதனை கருதுவதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அக்கரபத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லிந்துலை பகுதியில் அமைந்துள்ள மாதா சிலை ஒன்றும் அண்மையில் உடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரானாவுக்கு 17 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவுக்கு 17 பேர் மரணம்
இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கி கடந்த
தினம் 17 பேர் பலியாகியுள்ளனர் மேலும் அதே தினம் 499 பேர் பாதிக்க பட்டுள்ளதாகக் சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது
வீடுகளுக்கு வரவுள்ள வைத்தியர்கள் – கிளி மருத்துவமனை அறிவிப்பு
வீடுகளுக்கு வரவுள்ள வைத்தியர்கள் – கிளி மருத்துவமனை அறிவிப்பு
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை இன்று முதல் வீட்டுத் தரிசிப்பும், பராமரிப்பும் வைத்திய
சேவையினை பொது மக்களின் வீடுகளுக்கு வருகை தந்து வழங்கவுள்ளனர் என மாவட்ட
வைத்தியாசலையின் பணிப்பாளர் மருத்துவர். எஸ். சுகந்தன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய குழுவினர் இன்று முதல் நாட்பட்ட
நோயாளர்கள் மற்றும் வீட்டில் படுகை நோயாளர்களாக உள்ளவர்களின் மருத்துவ தேவையினை அவரவர் வீடுகள் தேடி வந்து பூர்த்தி செய்யவுள்ளனர்.
எனவே இச் சேவையினை பெற்றுக்கொள்ள விரும்பும் பொது மக்கள் 021 2283037 எனும்
தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளுமாறும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச் சேவையின் முதற்கட்டமாக பொன்னகர், மலையாளபுரம், பாரதிபுரம்,
விவேகானந்தநகர், கிருஸ்ணபுரம், உதயநகர் மேற்கு, உதயநகர் கிழக்கு, அம்பாள்குளம்,
ஆனந்தபுரம், தொண்டமான்நகர், கணகாம்பிகைகுளம், அம்பாள்புரம், திருவையாறு, திருவையாறு
மேற்கு இரத்தினபுரம், கிளிநொச்சிநகர், மருதநகர்,பன்னங்கண்டி, கனகபுரம், திருநகர் வடக்கு
திருநகர் தெற்கு,ஜெயந்திநகர், பெரியபரந்தன் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் மேற்கொள்ளப்படவுள்ளதும் எனவும் அறிவித்துள்ளனர்.
ரயில் கார் மோதல் ஒருவர் மரணம் – யாழில் சம்பவம்
ரயில் கார் மோதல் ஒருவர் மரணம் – யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த
ரயிலுடன் கார் ஒன்று மோதி சிதறியதில் அதில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளார்
கார் பலத்த சேதமடைந்துள்ளது
ரயில்வே கடவையை கடக்க முற்பட்ட பொழுதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது
நீரில் அடித்து செல்ல பட்ட யாழ்ப்பாணத்து பெண்கள்
நீரில் அடித்து செல்ல பட்ட யாழ்ப்பாணத்து பெண்கள்
ஹங்வெல்ல – அவிசாவளை, புவக்பிட்டிய தும்மோதர குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூவரில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உறவினர் வீட்டுக்கு வந்த இவர்கள் நேற்று உறவினர்களுடன் குமாரி எல்ல நீர்வீழ்ச்சிக்கு நீராட சென்றுள்ளனர்.
நேற்று மாலை பெய்த கடும் மழையினால் திடீரென நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நீராடிக்கொண்டிருந்த ஆறு நபர்கள் நீரில் அடித்துச் சென்றுள்ளனர்.
மூன்று நபர்களை பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர். ஒரு யுவதியும் இரண்டு சிறுமிகளும் நீரில் அடித்துச் சென்றுள்ளனர்.
ஹங்வெல்ல பொலிசார் மற்றும் களுவக்கல்ல இராணுவ முகாமின் அதிகாரிகள், பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை தேடியுள்ளனர்.
இதன்போது, இரவு 11 மணியளவில் சிறுமி ஒருவரின் சடலம் நீர்வீழ்ச்சியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்த சிறுமி 16 வயதுடைய எக்மன் தேவதாஸ் இஷாரா என்று நம்பப்படுகின்றது.
மேலும், காணாமல் போயுள்ள இருவரையு தேடும் பணி தொடர்கின்றது.
காணாமல் போனவர்கள்
எக்மன் தேவதாஸ் மிதுஷா வயது 14
132 மடம் கொன்வன்ட் வீதி யாழ்ப்பாணம்
வேவனி ஜேசுதாஸ் 29 வயது இலக்கம் 30/3 கெரவலபிட்டிய – வத்தளை
திருமணம் செய்த இளைஞர்களுக்கு அரசாங்கத்தினால் காணி
திருமணம் செய்த இளைஞர்களுக்கு அரசாங்கத்தினால் காணி
புதிதாக திருமணம் செய்த ,குறைந்த வருமானமுடைய இளம் வயதினருக்கு, 2000 காணிகளை
பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான
காணிகளை குறைந்த வருமானம் பெறும் இளைஞர் யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை
எடுக்கப்படும் என காணி அமைச்சின் செயலாளர் ஆர். டி. ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலிருந்தும் இதற்கான
விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.














