இந்தியாவில் நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் நிலநடுக்கம்

இந்தியாவில் நிலநடுக்கம்

இந்தியாவில் நிலநடுக்கம் ,இந்தியாவில் ஏற்பட்ட நிலடுக்கம் காரணமாக ஐந்து பேர் பலியாகி 3க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .Earthquake in India

ஹிமாலயா பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவு Landslide in the Himalayan region

இந்தியாவின் அதி உயரமான பகுதியாக காணப்படும் சீனா இந்திய எல்லையில் அமைந்துள்ள ஹிமாலயா பகுதியில்

இடம்பெற்ற நிலச்சரிவு சிக்கிய இந்த மக்கள் பலியாகியும் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலச்சரிவில் 100க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து தர மட்டமாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்பு பணி Rescue operations continue in affected areas

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்னரே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 380க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி 400க்கு மேற்பட்ட ஒரு காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது

3முக்கிய நாடுகளை இழந்த அமெரிக்கா
Posted in விசேட செய்திகள்

3முக்கிய நாடுகளை இழந்த அமெரிக்கா

3முக்கிய நாடுகளை இழந்த அமெரிக்கா

3முக்கிய நாடுகளை இழந்த அமெரிக்கா .இந்தியா சீனா ரஷ்யாவை இழந்த அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது .America lost 3 important countries.

இந்தியா சீன ராசியாவை இழந்த அமெரிக்கா India lost China to America

இந்தியா சீனா ராசிய போன்ற நாடுகளை தாங்கள் இழந்துவிட்டதாக அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் அவர்கள் தெரிவித்துள்ளார் .

இந்த நாடுகள் மூன்றும் இணைந்து அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

அதனை அடுத்து அவசர அவசரமாக இப்பொழுது இவ்வாறு தனது அறிவித்தலை அமெரிக்கா டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு எதிராக வர்த்தகம் பொருளாதார அபிவிருத்தி Trade against the United States Economic Development

அமெரிக்காவுக்கு எதிராக வர்த்தகம் பொருளாதார அபிவிருத்தி புதிய நாணயங்கள் ஊடாக புதிய வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர் .

இதன் பின்னர் அமெரிக்காவினுடைய எதிர்காலத்திற்கு மிகப்பெரும் நெருக்கடியாக இருக்கும் என்பதாக அவர் தெரிவிக்கிறார் .

அதனை அடுத்து தற்போது மீண்டும் இந்தியாவை நமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரும் நடவடிக்கையில் அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .

அமெரிக்காவின் சொல்லுக்கு தலை ஆட்ட இந்தியா மறுத்தால் இந்தியாவை பல நாடுகளாக உடைக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா அக்னி5 ஏவுகணை சோதனை
Posted in உலக செய்திகள்

இந்தியா அக்னி5 ஏவுகணை சோதனை

இந்தியா அக்னி5 ஏவுகணை சோதனை

இந்தியா அக்னி5 ஏவுகணை சோதனை இந்தியா அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணையை சோதனை செய்தது

செயல்படும் போது, ​​சீனாவின் எந்தப் பகுதிக்கும் அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட ஒரு இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையை

வெற்றிகரமாக சோதனை செய்ததாக இந்தியா புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில்

இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது, இது “அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப

அளவுருக்களையும் சரிபார்த்தது” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர், AFP செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான இந்தியாவும் சீனாவும் தெற்காசியா முழுவதும் செல்வாக்கிற்காக போட்டியிடும் தீவிர

போட்டியாளர்களாக உள்ளன, மேலும் 2020 இல் ஒரு கொடிய எல்லை மோதலுக்குப் பிறகு உறவுகள் சரிந்தன.

சீனாவிற்கு எதிரானதாகக் கருதப்படும் அமெரிக்கா

சீனாவிற்கு எதிரானதாகக் கருதப்படும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றுடன் குவாட் பாதுகாப்பு கூட்டணியில் இந்தியாவும் ஒரு பகுதியாகும்.

இந்தியாவின் கடுமையான போட்டியாளரான பாகிஸ்தானிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன, மேலும் இந்திய நிர்வாகத்தின் காஷ்மீரில் தீவிரவாதிகள் 26 பேரைக் கொன்ற பிறகு இரு நாடுகளும் மே மாதம் போருக்கு அருகில்

வந்தன, இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமாபாத் மீது புது தில்லி குற்றம் சாட்டியது. ஆனால் பாகிஸ்தான் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிப் போரால் தூண்டப்பட்ட உலகளாவிய வர்த்தக மற்றும் புவிசார் அரசியல் கொந்தளிப்பில் சிக்கி, டெல்லியும் பெய்ஜிங்கும் உறவுகளை சரிசெய்ய நகர்ந்துள்ளன.

கடந்த அக்டோபரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ரஷ்யாவில் நடந்த ஒரு உச்சி மாநாட்டில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.

இந்தியாவுடன் பேச்சு இளம்அரசியல்வாதிகள்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவுடன் பேச்சு இளம்அரசியல்வாதிகள்

இந்தியாவுடன் பேச்சு இளம்அரசியல்வாதிகள்

இந்தியாவுடன் பேச்சு இளம்அரசியல்வாதிகள் இலங்கையில் உள்ள 14 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 இளம் அரசியல்வாதிகள் குழு இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியைச் சந்தித்துள்ளது.

இரண்டு வார நிகழ்ச்சிக்காக இந்தக் குழு இந்தியாவிற்கு சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்

இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இந்திய-பாகிஸ்தான் நெருக்கடியின் தாக்கம் மற்றும் புதிய பிராந்திய கூட்டாண்மையை உருவாக்குவதில் இந்தியா எவ்வாறு வழிநடத்த முடியும் என்பது குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

அத்துடன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையும் குழு பாராட்டியது.

இதற்கிடையில், எதிர்கால பங்காளிகளாக இந்திய-இலங்கை கூட்டாண்மையில் தங்களுக்கு மதிப்புமிக்க பங்கு உண்டு என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

எயார் இந்தியா விமானத்தில் கோளாறு
Posted in உலக செய்திகள்

எயார் இந்தியா விமானத்தில் கோளாறு

எயார் இந்தியா விமானத்தில் கோளாறு

எயார் இந்தியா விமானத்தில் கோளாறு ,இந்திய விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரை இறக்க பட்டது .

ஜப்பான் டோக்கியோ விமானத்தில்

387 ஜப்பான் டோக்கியோ விமானத்தில் இருந்து புறப்பட்டு புது டெல்லிக்கு சென்று கொண்டிருந்த பொழுது,அந்த விமானத்திற்கு வளமையை விட அதிக வெப்பம் நிலவியது .

இதை எடுத்து பாதுகாப்பு கருதி விமான உடனடியாக கொல்கத்தா விமானத்தை தரை இறக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் பணிகளை டெல்லி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடராக எயார் ர் இந்திய விமானத்தில் ஏற்பட்டு வருகின்ற திடீர் கோளாறு காரணமாக மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர் .

விழுந்த நொறுங்கிய விமானம்

விழுந்த நொறுங்கிய விமான பயணத்தை அடுத்து தற்பொழுது எயார் இந்திய விமானத்தில் பயணிகள் பயணிக்கு அவதித்து வருகின்றனர்.

விமானங்கள் முறையான பயன்பாட்டுக்கும் பழுதுபார்த்தலுக்கும் ,சீரமைப்புக்கு உள்ளாக்காத நிலையிலேயே இந்த விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இடம்பெற்று வரும் விமான விபத்துகளினால் குறித்த விமான சேவை பயணங்களை பெற பயன்கள் ரத்து செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது மதுர பாக்க கவனத்தில் கொள்ளாது குறித்த விமான மூலமும் வளமை போன்ற செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதற்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு பெறுகின்றது குறிப்பிடத்தக்கது .

ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி

ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி

ஈரான் – இஸ்ரேல் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் இருக்கும் இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி எடுத்துள்ளது.

நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் இருந்து இந்தியா மீட்டு அழைத்துவர உள்ளது.

ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் 290 இந்திய மாணவர்கள் டெல்லி அழைத்துவரப்பட்டனர்.

இதையடுத்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தது.

இதன்மூலம் ஈரானில் இருந்து இதுவரை 517 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

இந்நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள ருவிட்டரில்

“நேபாளம் மற்றும் இலங்கை அரசுகளின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் மீட்டு அனுப்பி வைக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவிக்கான தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது.

நேபாளம் மற்றும் இலங்கை குடிமக்கள் டெலிகிராம் வாயிலாகவோ அல்லது +989010144557, +989128109115, +989128109109 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

தற்போது ஈரானில் 37 இலங்கையர்கள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மற்றொரு இந்திய விமானம் அவசர தரையிறக்கம்
Posted in இந்தியா செய்திகள் இலங்கை செய்திகள் உலக செய்திகள்

மற்றொரு இந்திய விமானம் அவசர தரையிறக்கம்

மற்றொரு இந்திய விமானம் அவசர தரையிறக்கம்

மீண்டும் ஒரு இந்திய விமானம் அவசரமாக தரையிறங்கியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 12, அதாவது நேற்று அகமதாபாதில் நடந்த மிகப்பெரிய விமான விபத்தின் கோர காட்சிகளே இன்னும் மக்களின் மனதை விட்டு நீங்காமல் இருக்க,

மற்றொரு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறங்கியதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

தாய்லாந்து ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்குச் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை அவசரமாக தரையிறங்கக் கோரியதாக

ஃபூகெட் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

விமானம் AI 379 தரையிறங்கியதாகவும், விமான நிலையம் அவசரகால செயல்முறைகளை தொடக்கியுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

அவசரகால ப்ரோடோகால் படி, பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக தாய்லாந்து விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதற்கட்ட தேடலுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் எந்த வித வெடிகுண்டு இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.

விமானத்தில் 156 பயணிகள் இருந்தனர் என்றும் விமானத்தின் உள்ளிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9:30 மணிக்கு (0230) ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து இந்தியத் தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டது.

ஆனால் அந்தமான் கடலைச் சுற்றி வந்து பின்னர் மீண்டும் தாய் தீவில் தரையிறங்கியதாக விமான கண்காணிப்பாளர் Flightradar24 தெரிவித்துள்ளது.

உயிர் தப்பிய பயணி கூறியது என்ன
Posted in உலக செய்திகள்

உயிர் தப்பிய பயணி கூறியது என்ன

உயிர் தப்பிய பயணி கூறியது என்ன

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே பிரிட்டன் பிரஜையான விஷ்வாஸ் குமார் ரமேஷ், “நான் எப்படி உயிரோட இருக்கிறேன் எனக்கே தெரியவில்லை” என

விமானம் தரையிறங்கிய சில வினாடிகள் பின்னர் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் கூறினார் என அவரது சகோதரர் ஸ்கை நியூஸிற்கு தெரிவித்துள்ளார்.

விஷ்வாஸ் குமார் ரமேஷ், வியாழக்கிழமை பிற்பகலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புறப்பட்ட உடனேயே கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான

ஏர் இந்தியா விமானம் 171-இல் உயிர்தப்பிய ஒரே பயணியாகக் கருதப்படுகிறார்.

விபத்துக்குப் பிறகு விஷ்வாஸுடன் பேச முடிந்ததாக உறவினர்கள் உறுதிப்படுத்தினார்கள். ஆனால் அதே விமானத்தில் இருந்திருக்கக் கூடிய அவரது சகோதரருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

லெஸ்டரில் இருந்து பேசும் அவரது சகோதரர் நயன், ஸ்கை நியூஸின் ஷமான் ஃப்ரீமன்-பவலிடம் கூறியதாவது:

விமானம் எயார்வேயில் இருந்தபோது அவர்களது தந்தை விஷ்வாஸுடன் பேசிக்கொண்டிருந்ததாக தெரிவித்தார்.

“அப்பா அவரை அழைத்தார்,” என்று 27 வயதான நயன் கூறினார்.
“விஷ்வாஸ், ‘மீண்டும் சீக்கிரமே புறப்பட போகிறோம்’ என்றார்.”

இரு நிமிடங்களுக்குப் பிறகு, விபத்து நிகழ்ந்ததும், விமானம் விழுந்து விட்டதாகவும், அவர் உயிரோடு இருப்பதாகவும் வீடியோ அழைப்பு மூலம் அவர்களது தந்தைக்கு தெரிவித்தார்.

“விமானம் விழுந்தது… எனக்கு என் தம்பி எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. வேறு பயணிகள் எவரையும் பார்க்க முடியவில்லை. நான் எப்படி உயிரோட இருக்கிறேன்,

எப்படி விமானத்திலிருந்து வெளியே வந்தேன் எனக்கே தெரியவில்லை” என அவர் கூறியதாக நயன் தெரிவித்தார்.

அகமதாபாத் காவல்துறை அதிகாரி விதி சவுதரி கூறியதாவது, விஷ்வாஸ் 11A என்ற இருக்கையில் இருந்தார்.

அது அவசர வெளிச்செலுத்தும் கதவின் அருகில் இருந்தது. அவர் அந்த கதவின் வழியாக வெளியே குதித்து தப்பியுள்ளதாகவும் கூறினார்.

“தொடங்கிய 30 வினாடிகளுக்குப் பிறகு ஒரு பெரிய சத்தம் கேட்டது,” என விஷ்வாஸ் Hindustan Times செய்திதழுக்கு தெரிவித்தார்.

“அது அனைத்தும் நொடிகளில் நடந்தது. என் மார்பிலும், கண்களிலும், கால்களிலும் காயங்கள் ஏற்பட்டன,” என்றும் கூறினார்.

“நான் எழுந்தபோது, என் சுற்றிலும் சடலங்கள் இருந்தன. நான் பயந்து விட்டேன். எழுந்து ஓடினேன். விமானத்தின் துண்டுகள் எனக்கு எல்லாம் சுற்றிலும் இருந்தன. யாரோ என்னை பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.”

Sky News இந்தியா செய்தியாளர் நெவிலே லசரஸ், மருத்துவமனையில் விஷ்வாஸை நேரில் சந்தித்து பேசினார். அப்போது விஷ்வாஸ், “நான் நன்றாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்திய விமான விபத்தில் பிரித்தானியர் மூவர் பலி
Posted in உலக செய்திகள்

இந்திய விமான விபத்தில் பிரித்தானியர் மூவர் பலி

இந்திய விமான விபத்தில் பிரித்தானியர் மூவர் பலி

பிரித்தானியாவுக்கு புறப்பட்ட நிலையில் இந்திய விமானம் வெடித்துச் சிதறியதில் மூன்று பிரித்தானியர்கள் பலி ஆகியுள்ளதாக செய்திகள் உறுதியாகியுள்ளது.

இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அகீல் நனபாவா, அவரது மனைவி ஹன்னா, மற்றும் அவர்களது நான்கு வயது மகள் ஸாரா ஆகியோர் விமானத்தில் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என்று

Gloucester Muslim Community அவர்கள் Facebook-இல் தெரிவித்துள்ளது.

இந்த விமானம் வியாழக்கிழமை மாலை 1.38 மணிக்கு அகமதாபாதிலிருந்து லண்டன் கேட்விக் நோக்கி புறப்பட்டது. இதில் மொத்தம் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.

அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 169 பயணிகள், பிரித்தானியாவைச் சேர்ந்த 53 பயணிகள், 7 போர்ச்சுகீசியர்கள் மற்றும், 1 கனடா பயணி ஆகியோர் இருந்ததாக ஏர்லைன் தெரிவித்துள்ளது.

Flightradar எனும் விமான தடதள விளக்கதளத்தின் படி, விமானம் புறப்பட்ட பிறகு ஒரு நிமிடத்துக்குள் அதன் சிக்னல் காணாமல் போனது.

அதன் பின்னர் விமானம் குஜராத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத்தில் உள்ள மேகானிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் குடியிருப்பு வளாகத்தில் விழுந்துவிட்டது.

இது தொடர்பில், லண்டன் கேட்விக் விமான நிலையம் கூறியதாவது,

இந்த விமானம் வியாழக்கிழமை மாலை 6.25 மணிக்கு பிரிட்டன் நேரப்படி தரையிறங்க வேண்டியது.

பிரிட்டன் வெளியுறவுத்துறை, “இந்தியாவின் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணிபுரிந்து உண்மைகளை அறிந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவி அளிக்கிறது” என்று தெரிவித்தது.

முதலில், அகமதாபாத் காவல் ஆணையர் ஒருவர் உயிரிழந்தவர்களில் யாரும் உயிர்தப்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.

பின்னர், ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, குறைந்தது 204 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என உள்ளூர் காவல் துறை தலைவர் கூறியுள்ளார்.

இந்த விபத்து, Boeing 787 Dreamliner என்ற விமான வகையில் இதுவரை நிகழ்ந்த முதல் விபத்து என Aviation Safety Network தரவுத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விமான வகையானது, இரண்டு என்ஜின் கொண்ட விசாலமான பயணிகள் விமானமாகும். 14 வருடங்களாக இந்த Dreamliner மாடல் ஐந்து மில்லியன் பயணங்களை மேற்கொண்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, Twitter) தளத்தில் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்:
“அகமதாபாத்தில் நிகழ்ந்த விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத துக்கமான நிகழ்வாகும். இந்த சோகமான தருணத்தில், பாதிக்கப்பட்ட அனைவரும் என் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் இருக்கின்றனர்.”

இந்தியாவில் வெடித்துசிதறிய விமானம் 242பலி
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் வெடித்துசிதறிய விமானம் 242பலி

இந்தியாவில் வெடித்துசிதறிய விமானம் 242பலி

இந்தியாவில் வெடித்துசிதறிய விமானம் 242பலி ,இந்திய விமான விபத்து சமீபத்தியது: 242 பேருடன் லண்டன் விமானம் அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானதில் ‘பலர் கொல்லப்பட்டனர்’

வியாழக்கிழமை 240க்கும் மேற்பட்டவர்களுடன் லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்தியாவில் விபத்துக்குள்ளானது.

மேற்கு நகரமான அகமதாபாத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் குடியிருப்பு பகுதியில் சரிந்ததாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடத்திலிருந்து பெரிய அளவிலான கரும்புகை மேகங்கள் வெளியேறுவதையும், போயிங் 787 விமானத்தின் உடலின் ஒரு பகுதி ஒரு கட்டிடத்தில் இருப்பதையும், மற்ற படங்கள் இடிபாடுகள் மற்றும் சுற்றியுள்ள கட்டிடங்களை அணைக்க அவசர சேவைகள் பணியாற்றுவதையும் காட்டுகின்றன.

விபத்து நடந்த இடத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து குறைந்தது 30 உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர், மீட்புப் பணியாளர்கள் மேலும் பலர் உள்ளே சிக்கியுள்ளதாக தெரிவித்தனர்.

விமானத்தில் 12 பணியாளர்கள் உட்பட 242 பேர் இருந்தனர். பயணிகளில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன்கள், ஏழு போர்த்துகீசிய குடிமக்கள் மற்றும் ஒரு கனடியர் அடங்குவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தங்களுக்குத் தொடர்ந்து தகவல்களைத் தெரிவித்து வருவதாக இந்திய மற்றும் பிரிட்டிஷ் பிரதமர்கள் இருவரும் தெரிவித்தனர்.

“இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மனவேதனை அளிக்கிறது” என்று நரேந்திர மோடி X இல் கூறினார். சர் கெய்ர் ஸ்டார்மர், காட்சிகள் “பேரழிவு” என்று கூறினார்.

கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்

கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்

கல்யாணத்தின் போது குங்குமம் வைக்கையில் கை நடுங்கியதால் உடனே நிறுத்தப்பட்ட திருமணத்தால் பரபரப்பாகியுள்ளது திருமண நிகழ்வு.

இந்தியா ,பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நடந்த ஒரு ஆச்சரியமான சம்பவத்தில்,

குங்குமம் வைக்கும் விழாவின் போது மணமகனின் கை நடுங்குவதை மணமகள் கவனித்ததால் திருமணம் ரத்து செய்யப்பட்டது.

மணமகன் மனநிலை சரியில்லாதவர் என்று கூறி, மணமகள் திருமணத்தை தொடர மறுத்துவிட்டார்.

இந்த சம்பவம் பபுவா பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கத்ரா கிராமத்தில் நடந்தது.

செனாரி பகுதியில் உள்ள பகதி கிராமத்தைச் சேர்ந்த ஷிவ்பச்சன் பிந்தின் மகன் ஹீரா குமார் என்ற மணமகன் தனது திருமண ஊர்வலத்துடன் வந்தார், மேலும் அனைத்து ஆரம்ப சடங்குகளும் நிறைவடைந்தன.

இருப்பினும், முக்கியமான குங்குமம் வைக்கும் சடங்கின் போது, ​​மணமகனின் கை நடுங்கியதாகவும், அவரால் குங்குமத்தை சரியாகப் பூச முடியவில்லை என்றும் மணமகள் கூறினார்.

மணமகள் உடனடியாக திருமணத்திலிருந்து பின்வாங்கி, மணமகன் “பைத்தியம்” போல் இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் கூறினார்.

நிலைமை விரைவாக மோசமடைந்து உள்ளூர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு குடும்பத்தினரும் பபுவா பொலிஸ் நிலையத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இறுதியில், மணமகன் மணமகள் இல்லாமல் வீடு திரும்ப வேண்டியிருந்தது.

இலங்கையிலிருந்து சென்ற கப்பலுக்கு நேர்ந்த கதி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையிலிருந்து சென்ற கப்பலுக்கு நேர்ந்த கதி

இலங்கையிலிருந்து சென்ற கப்பலுக்கு நேர்ந்த கதி

கொழும்பில் இருந்து மும்பை நோக்கி ‘எம்.வி. வான ஹை 503’ என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

கொழும்பில் இருந்து மும்பை நோக்கி ‘எம்.வி. வான ஹை 503’ என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது.

அந்த சரக்கு கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று கப்பலின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

கப்பலில் இருந்த கொள்கலன்களுக்கும் தீ பரவியதால், அவற்றில் சில பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனால் சரக்கு கப்பலில் இருந்த கப்டன் உள்பட 22 பேர் உயிர் தப்பிக்க கடலில் குதித்தனர். இதனால் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் அழிக்கல் துறைமுகத்தில் இருந்து கடலோர பாதுகாப்பு படையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விமானம் மூலமும் மீட்பு பணியை மேற்கொண்டனர்.

இந்த மீட்பு பணியில் இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். சூரத் ஈடுபட்டது. இதனைத்தொடர்ந்து நடுக்கடலில் தத்தளித்த 18 பேரையும் மீட்பு குழுவினர் மீட்டு

ஐ.என்.எஸ். சூரத் கப்பல் மூலம் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பனம்பூரில் உள்ள புதிய மங்களூரு கப்பல் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

மீட்கப்பட்டவர்களில் 6 பேர் காயம் அடைந்திருந்தனர். அவர்களில் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது. இதையடுத்து அவர்கள் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 12 பேர் காயமின்றி தப்பினர்.

கடலில் மாயமான மீதமுள்ள 4 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணியில் டிரோன்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டவர்கள் சீனாவை சேர்ந்த 8 பேர், தைவானை சேர்ந்த 4 பேர், மியான்மரை சேர்ந்த 4 பேர், இந்தோனேசியாவை சேர்ந்த 2 பேர் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் கேரள கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தற்போது வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம் உள்ளிட்ட இரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால் வெடித்துச் சிதறலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

கப்பலில் தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை. இந்திய கடற்படையின் கப்பல்கள் மற்றும் கடலோர காவல்படையின் விமானங்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.

ஒருவேளை வெடிப்பு ஏற்பட்டால், கேரளக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில், சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது
Posted in இலங்கை செய்திகள்

5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது

5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது

5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது ,இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஐந்து இலங்கையர்கள் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

படகு மூலம் இந்தியாவின் ராமேஸ்வரம் கடற்கரையை அடைந்த இந்தக் குழுவினர், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில் இரண்டு சிறு குழந்தைகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக விசாரணை அதிகாரிகளிடம் அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்களையும் இலங்கை தமிழ் அகதிகளுக்காக நிறுவப்பட்ட மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு

இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு

இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு வழங்க ப்பட்டுள்ளதாக அனுரா மனோர அரசு அறிவித்தல் விடுத்துள்ளது .

நாட்டை விட்டு இறுதியாக தப்பிச்சென்ற இலங்கை அகதிகள்

யுத்த காலத்தில் நாட்டை விட்டு இறுதியாக தப்பிச்சென்ற இலங்கை அகதிகள் மீளவும் நாடு திரும்பிட தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இலங்கையை விட்டு உயிர் பாதுகாப்பு காரணமாக .இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை வாழ் தமிழர்கள் .மீளவும் நாடு திரும்புவதற்கு தற்பொழுது இலங்கை அரசு தடைகளை விலக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

அகதிகளாக தப்பிச் சென்ற தமிழர்கள்

குடி வரவு குடியாக சட்ட திருத்தங்கள் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , அதை எடுத்து நாட்டை விட்டு அகதிகளாக தப்பிச் சென்ற தமிழர்கள், மீண்டும் இலங்கை வருவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்தியாவுக்கு சென்ற தமிழ் அகதிகள் பெருமளவில் நாடு திரும்பும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இவ்வாறு இந்த மக்கள் வருகின்ற பொழுதும் தங்களது காணிகளை அரசு அபகரித்துள்ளது. அந்த காணிகளை வழங்குவதற்கு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றனர்.

அயல் வீட்டுக்காரர்களும் தமது காணிகளை எல்லையை போட்டு பிடித்துள்ளதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அகதிகளின் பாதுகாப்பு இந்தியா வலியுறுத்து
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு

இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு

இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு ,இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்லும் அகதிகள் குறித்து இந்தியா தனது கருத்தை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகள் பாதுகாப்பாக அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை

இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பியின் சகோதரர் நடேசன் (வயது 92) புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.

அவரது உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் திருமாவளவன் எம்பி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

இந்திய அரசை நம்பி, தாயகம் திரும்பியவர்களை இலங்கை அரசு கைது செய்வது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. இந்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்.

தமிழகத்தில் இருந்து அல்லது இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தும் இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகளை பாதுகாப்பாக

அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

45பேர் பலி இந்தியாவில் அகோரம்
Posted in உலக செய்திகள்

45பேர் பலி இந்தியாவில் அகோரம்

45பேர் பலி இந்தியாவில் அகோரம்

45பேர் பலி இந்தியாவில் அகோரம், இந்தியாவில் தற்பொழுது கடந்த 24 மணித்தியாலமாக இடம்பெற்று வருகின்ற ,சீரற்ற காலநிலை காரணமாக 45 பேர் உத்தரபிரதேச பகுதியில் இறந்துள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இடி மின்னல் காற்று ஆகியவற்றின் பாதிப்புகளினால் .இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் புயல் .காரணமாக டசினுக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்

கடும் புயல் .காரணமாக டசினுக்கு மேற்பட்ட வீடுகள் அங்கு சேதம் அடைந்தும், முற்றாக இடிந்தும் காணப்படுகின்றன.

அதேபோன்று வர்த்தக நிலையங்களும் சேதமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் வாகனங்களும் சேதமடைந்து காணப்படுகின்றன.

இந்தப் புயல் காற்றினால் காயமடைந்த நிலையில் ,பல டசினுக்கு மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு ,அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு படைகள் தற்பொழுது களமிறக்கப்பட்டு ,பாதிக்கப்பட்ட இடங்களில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு கடும் எச்சரிக்கை

மக்களை வீடுகளை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் என்ற எச்சரிக்கையும், மரங்களுக்கு கீழ் நிற்க வேண்டாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் நுழைந்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவிலிருந்து இலங்கைள் வந்தவர்கள் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைள் வந்தவர்கள் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைள் வந்தவர்கள் கைது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் சட்ட விரோதமான முறையில் நுளைத்த நாலு இலங்கையர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் கடல் வழியாக நுழைய முற்பட்ட பொழுது இந்த கைது இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மற்றும் மன்னர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் பெண் மற்றும் இரு சிறு சிறுமிகள் என ,நால்வர் இலங்கையில் சட்ட விரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற நிலையில் ,இந்திய கடலோர காவல்துறையால் கைது செய்யப்பட்டு மண்டப முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.

இலங்கையில் குறித்த நால்வரும் இந்தியாவுக்கு சட்ட விவரமுறையில் யில்கடல்வழியாக வழியாக திரும்பி வந்துள்ளனர்.

அவ்வாறு வந்த பொழுது இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல் படைகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வல்வெட்டித்துறையை நோக்கி வந்தவர்களே இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட வருகின்றனர்.

நீதிமன்ற விசாரணையின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படலாம் அல்லது சிறையில் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் வழியாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு .இலங்கை இருந்து இந்தியாவுக்கும் செல்கின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா

பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா

பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா , நாட்டின் சதி நடவடிக்கை தற்பொழுது ஆரம்பித்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான் எல்லைகளில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரிக்கும் எனவும் அது தனி நாடாக பிரிந்து செல்லும் என இந்தியா சவால் விட்ட்டுள்ளது .

இந்தியா பாகிஸ்தான் இடையில் இடம்பெற்று வருகின்ற, யுத்தத்தை அடுத்து இந்தியாவுடைய பெண் விமானி ஒருவர் சிறைபிடிக்கப்பட்டார்.

இந்தியாவுடைய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டதை அடுத்து தற்போது பாரத தேசத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் யுத்தம் தீவிரபடுத்த பட்டுள்ளது .

இவ்வாறான காலப் பகுதியில் பாகிஸ்தானை உடைத்து சிதைத்து, தனது ஆட்சிக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் இந்தியா ஆதிக்க வெறி துடித்துக் கொண்டுள்ளது.

அதனை அடுத்து இந்தியா இந்த விடயத்தை தெரிவித்து வருகிறது.

அதனை அடுத்து தற்போது பாகிஸ்தானின் மிக முக்கியமான பகுதியாகவும் ,அதிகமான தாக்குதல் சம்பவங்கள் வன்முறை சம்பவங்கள் இடம்பெறும் பகுதியாக காணப்படும், பலுசிஸ்தான் பகுதியை தனி நாடாக அறிமுகப்படுத்துவோம் என இந்தியா சவால் விட்டுள்ளது.

இலங்கையில் விடுதலை புலிகளை இல்லாது அழித்து எவ்வாறு வெற்றி கொண்டதோ ,அதுபோன்று இந்த நடவடிக்கை மேற்கோள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கள ஆதிக்க வெறியர்களால் தமிழர்கள் அழிக்கப்பட்ட பொழுது, அதே தமிழினத்தை அழித்து, அந்த நாட்டை இல்லாத அழித்த இந்தியா

இப்பொழுது பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அங்கீகரித்து ,உலகில் புதிய நாடாக அதனை அழைக்கும் என தெரிவித்துள்ளது .

இதனால் இந்தியாவின் இந்த சர்ச்சை கருத்து பாகிஸ்தான் இந்தியா உறவுகளுக்கு இடையில் மேலும் முறுகளை அதிகரித்துள்ளது.

இந்- பாகிஸ் போர் முடிவுற்றது அமெரிக்கா தலையீடு
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு

இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு

இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு அமெரிக்காவின் தலையீட்டால் இந்தியா பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்ததாக ட்ரம்ப் பெருமிதம் கொண்டுள்ளார்.

இந்தியா -பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முடிவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்த் அவர் கூறியதாவது:-

இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியாவிற்கும்- பாகிஸ்தானுக்கும் இடையே நிரந்தரமான போர் நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்த போரை நிறுத்த உதவிய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் ரூபியோவுக்கு நன்றி.

இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம். சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம்.

வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை.

இந்தியாவுடன் தற்போது வர்த்தகப் பேச்சு நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுடன் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும். அது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமைகள் அசைக்க முடியாதவை மற்றும் சக்தி வாய்ந்தவை.

உண்மையில் இந்தியா- பாகிஸ்தான் தலைவர்கள் சூழ்நிலையின் தீவிரத்தை முழுமையாக அறிந்து புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைக் கொண்டவர்கள்.

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா போர்க்கப்பல்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா போர்க்கப்பல்

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா போர்க்கப்பல்

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா போர்க்கப்பல் தரித்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கராச்சி பகுதியை முற்று முழுதாக தாக்கி அழிக்கும் நோக்குடன் ,இந்தியாவுடைய ராட்சத போர்க் கப்பல்கள் ,தற்பொழுது தரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தை அடுத்து ,தற்பொழுது மேலதிக பாதுகாப்புக்காக தற்பொழுது இந்தியா பாகிஸ்தானுடைய கராச்சி

பகுதியை முடக்கும் நோக்குடன் ,இந்த கப்பல் படையை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல்களில் ராட்சத ஏவுகணைகள் மற்றும் படைகள் விசேட கமாண்ட படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்குள் நுழைந்து பாகிஸ்தான் தொடர் அட்டூழிய தாக்குதலை நடத்தினால் அதற்கு பதிலடி தருவோம் என்கிறது இந்தியா.

இது போன்று பாக்கிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா தாக்குதல் நடத்திட முற்பட்டால் ,அதேபோன்று பலத்த அடியை தாங்களும் தருவோம் என இப்படி சொல்கிறது பாகிஸ்தான்.

இரு நாடுகளும் ஏட்டிக்கு போட்டியாக தமது கருத்துக்களை தெரிவித்து வருவதால் மக்கள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது.

இந்தப் போர் மீள எப்போது முடிவுக்கு வரும் என்பதே இந்தியா பாகிஸ்தான் மக்கள் பேச்சாக இருக்கிறது .