இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

பணத்தை பறித்தெடுத்த 3 பொலிஸ் அதிகாரிகள் அதிரடி கைது

பணத்தை பறித்தெடுத்த 3 பொலிஸ் அதிகாரிகள் அதிரடி கைது

மட்டக்களப்பில் உணவகம் ஒன்றில் வேலை முடித்துவிட்டு ஏறாவூரிலுள்ள தனது வீட்டுக்கு இரவு 11 மணிக்கு திரும்பிக் கொண்டிருந்த ஒருவரிடம் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார் 6,500 ரூபா

பணத்தை பறித்தொடுத்த சமபவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 3 பொலிஸாரை இன்று (11) அதிகாலையில் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த நபர் புதன்கிழமை இரவு ஏறாவூர் மிச் நகரிலுள்ள வீட்டிற்கு மோட்டர் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த பொது ஜீப் வண்டியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு பொலிஸ் சாஜன் உட்பட 3 பேர் குறித்த நபரை நிறுத்தி சோதனையிட்டனர்.

பணத்தை பறித்தெடுத்த 3 பொலிஸ் அதிகாரிகள் அதிரடி கைது

இதனையடுத்து குறித்த நபருக்கு அடையாள அட்டை இல்லாததையடுத்து அவரை தமது ஜீப் வண்டியில் ஏற்றி அந்த பகுதி வீதிகளில் சுற்றிதிரிந்து 25 ஆயிரம் ரூபா பணம் தந்தால் விடுவதாக அல்லது கைது செய்து சிறையில்

அடைப்பதாக அச்சுறுத்திய நிலையில் அவர் தன்னிடம் பணம் இல்லை 6500 ரூபா மாத்திரம் தான் இருக்கின்றது என தெரிவித்த போது அந்த பணத்தை அவரிடமிருந்து பறித்தெடுத்து விட்டு ஜீப் வண்டியில் இருந்து அவரை இறக்கி விட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரியின் கவனத்திற்கு சென்றதையடுத்து உடனடியாக அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற் கொண்டு அவர்களை கைது செய்யமாறு மாவட்ட குற்ற விசாரணைப்

பிரிவிடம் ஓப்படைக்கப்பட்டதையடுத்து 3 பொலிஸாரை இன்று அதிகாலை 5.30 மணிக்கு கைது செய்து மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்..

இதல் கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
Posted in இலங்கை செய்திகள்

சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

சுற்றிவளைப்புக்கு சென்ற அஹங்கம பொலிஸ் அதிகாரிகள் குழு மீது தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காயம் அடைந்ததுடன், கல்வீச்சு காரணமாக ஜீப் வண்டியின் பின்பக்க கண்ணாடியும் சேதமடைந்துள்ளது.

உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் சட்டவிரோத மதுபானங்களை சுற்றிவளைப்பதற்காக வெதகேவத்தை, தித்தகல்ல, பகுதிக்கு சென்றிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

375 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்ட நபரை ஜீப் வண்டியில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வர முற்பட்ட போது, சந்தேகநபரை மீட்பதற்காக பொலிஸ் அதிகாரிகளை சுற்றிவளைத்து 8 பேர் கொண்ட குழுவொன்று பொல்லுகள் மற்றும் கற்கலினால் தாக்குதல் நடத்தியுள்ளது.

சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

பொலிஸ் விசாரணையில் பொலிஸ் உப பரிசோதகரை பொல்லினால் தாக்கிய நபர், சம்பவத்தின் பின்னர் கடற்றொழிலுக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பதில் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் கொனகஹஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பில் குறித்த சந்தேகநபருக்கு மேலதிகமாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

இதன் போது ஏ9 பிரதான வீதியில் பயணிப்பவர்களுக்கு ஏற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

இச் சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த வீதி போக்குவரத்து பொலிஸாரும் பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கிய முள்ளிவாய்க்கால்கஞ்சியினை பெற்று குடித்தனர்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை

வீதி போக்கு வரத்து பொலிஸார் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடிக்கும்புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிந்தன. பின்னர் அவை சிங்கள ஊடகங்களிலும் வெளிவந்தன.

இதனை தொடர்ந்தே குறித்த இரண்டு பொலிஸார் மீதும் விசாரணையை மேற்கொள்ளுமாறு கொழும்பிலிருந்து தகவல் வழங்கப்பட்டு அவர்களுக்கு உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழக பொலிஸ் அடாவடி செருப்பால அடிக்கணும் இவரை
Posted in இலங்கை செய்திகள்

வெசாக் பண்டிகையில் விசேட பாதுகாப்பு

வெசாக் பண்டிகையில் விசேட பாதுகாப்பு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு பிரதான நகரங்களிலுள்ள வெசாக் வலயங்களுக்கு வருகை தரும் பொது மக்களினது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேலதிக பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், நேரில் சோதனை செய்வதற்கும் மேலதிக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

காதலனை அச்சுறுத்தி யுவதியை நிர்வாணப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாருக்கு ஒரு மாத காலக்கேடு

பொலிஸாருக்கு ஒரு மாத காலக்கேடு

நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வினைத்திறனான சேவையை முன்னெடுப்பதற்காகப் பொலிஸ் திணைக்களத்தில் கொண்டுவர உத்தேசித்துள்ள வேலைத்திட்டத்தை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண நேற்று (26) பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்தார்.

2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றை ஆராய்வதற்காக பொலிஸ் திணைக்களம், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டிருந்தபோதே அக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் இக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தனர்.

2016 ஆம் ஆண்டு கோபா குழுவின் முன்னிலையில் பொலிஸார் அழைக்கப்பட்டிருந்தபோது, இது குறித்த பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தபோதும் அவை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது. இலங்கை பொலிஸாருக்கு ஒரே தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை அமைப்பது கடினம் என்பதால், பகுதிகளாக தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புக்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு ஒரு மாத காலக்கேடு

அதற்கமைய, ஹட்டன் மற்றும் நுவரெலியா பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்தல் முதல் நீதிமன்ற நடவடிக்கைகள் வரை விபரங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய புதிய முன்னோடி திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை பொலிஸில் பணியாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2419 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு வெற்றிடம் இருப்பதாகவும், 2023 ஆம் ஆண்டு இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு உத்தேசித்திருந்தபோதிலும் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக அதனை நிறைவேற்ற முடியாமல் போனது என்பதும் இங்கு தெரியவந்தது.

பொலிஸாரின் பழைய நிலை மாற்றப்பட்டு, எதிர்காலத்தில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்குப் பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தேவையான மாற்றங்களை மேற்கொள்வதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு ஒரு மாத காலக்கேடு

இதன்படி எதிர்காலத்தில் பெண் பொலிஸ் மா அதிபர் ஒருவர் தோன்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பொலிஸாரிடமுள்ள காலாவதியான கண்ணீர் புகை குண்டுகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. காலாவதியான கண்ணீர்ப்புகைக் கண்டுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவை ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது எனவும் பொலிஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் காணப்படும் காலாவதியான கண்ணீர் புகைக்குண்டுகளை அகற்றுமாறும் குழு அறிவுறுத்தியது.

அத்துடன், பொதுக் கலவரங்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது சர்வதேச மரபுகளின்படி கண்ணீர்ப் புகைக்குண்டு உள்ளிட்டவற்றின் பயன்பாடு குறித்து அறிக்கையொன்றைத் தயாரித்து கோபா குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

பொலிஸ் அதிகாரிகளின் மொழித்திறனை மேம்படுத்துவதன் அவசியம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழித்திறனை வழங்குவதற்காக பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அந்த செயற்பாடுகளை நெறிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.

பொலிஸ் பதவி உயர்வுகள் தொடர்பான பிரச்சினைகள், பொலிஸ் வெகுமதி நிதி நிர்வாகம், வீதி விபத்துக் கட்டுப்பாடு, குற்றங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் ஏனைய பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம்
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம்

இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம்

சாவகச்சேரியில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் லஞ்சமாக கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தினை பெற மறுத்து தன் கடமையை சரிவர புரிந்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்திற்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர் கடமையில் இருந்த பொலிஸ் சாஜனுக்கு 50 ஆயிரம் ரூபா பணத்தினை லஞ்சமாக வழங்கி தப்பிக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது குற்றச்செயலுன் தொடர்புடையவர் லஞ்சமாக கொடுத்த பணத்தினை வாங்க மறுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சாஜன் தர பொலிஸ் உத்தியோகத்தருக்கு மதிப்பளித்து சன்மானம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்

Error: View 9293b2au4w may not exist
மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பிரதான பொலிஸ் பரிசோதகர் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

26 பொலிசாருக்கு பதவி உயர்வு

26 பொலிசாருக்கு பதவி உயர்வு

இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு 26 பொலிசாருக்கு பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது .

இந்த பதவி உயவ்வு வழங்க பட்டத்தை போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார் .

No posts found.
தமிழக பொலிஸ் அடாவடி செருப்பால அடிக்கணும் இவரை
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட குழுவினர்

பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட குழுவினர்

சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதையடுத்து அவர்களது உறவினர்கள் என கூறிக்கொள்ளும் குழுவினர் அங்குலான பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் ​பொலிஸ் நிலையத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த உறவினர்களுடன் சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இவ்வாறு தப்பிச் சென்ற குறித்த இரு சந்தேகநபர்களும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட குழுவினர்

ஜோன்டியா மற்றும் கலயா என்ற இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைத்தொலைபேசி தொடர்பில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து அதனை சமரசம் செய்து கொள்வதற்காக அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதன்போது அங்குலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் கைது செய்ததாகவும், பின்னர் அவர்களது உறவினர்கள் குழுவொன்று வந்து சந்தேக நபர்களை அழைத்துச் செல்ல முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

இதன்போது ​​அங்கு பதற்றமான சூழல் உருவானதுடன், நிலைமையை கட்டுப்படுத்த முற்பட்ட போது அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.

அவர் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், பதற்றமான நிலைமையைக் கருத்தில் கொண்டு, அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களின்
அதிகாரிகளும் அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

No posts found.
தமிழக பொலிஸ் அடாவடி செருப்பால அடிக்கணும் இவரை
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை

பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை

களுத்துறை, கட்டுகுருந்த சந்திக்கு அருகில் பொலிஸார் போன்று நடித்து பணத்தை கொள்ளையிட்ட இருவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு, வீதிக்கு அருகில் பஸ்ஸிற்காக காத்திருந்த நபரை

சோதனையிட்டு, அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை

குறித்த நபர் கால் நடையாக கறுவா மற்றும் மிளகு விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (16) கட்டுகுருந்த சந்தியில் பஸ்ஸிற்காக காத்திருந்த போதே கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை களுத்துறை
தெற்கு பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No posts found.
இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் பொலிஸ் சுற்றிவளைப்பு பலர் கைது

கிளிநொச்சியில் பொலிஸ் சுற்றிவளைப்பு பலர் கைது

கிளிநொச்சி பகுதியில் பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பில் ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

இவர்கள் யாவரும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியமை ,திருட்டில் ஈடுபட்டமை ,மக்களை அச்சுறுத்தியமை ,வீடுகளை உடைத்தமை போன்ற குற்ற சாட்டுக்கள் சுமத்த பட்ட நிலையில் கைது செய்ய பட்டுள்ளனர் ,

சுருங்க கூறின் ஆறு ரவுடிகள் கைது செய்ய பட்டுள்ளனர் .

குடிபோதையில் மக்களுக்குள்க் புகுந்த வண்டி ஏற்பட்ட விபத்து
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

வாகன விபத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்துச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கொழும்பு வீதி மியாங்குளம் பகுதியில் வைத்து நேற்று மாலை (24) இடம்பெற்றுள்ளது.

கேகாலையிலுள்ள தனது வீட்டிலிருந்து கடைமைக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பஸ் வண்டியுடன் மோதியதிலே பொலிஸ் உத்தியோகத்தர் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் 33 வயதுடைய அசங்க என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்துச் சம்பவம்
தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் பொலிஸ் உள்ளிட்ட ஐவர் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் பொலிஸ் உள்ளிட்ட ஐவர் சுட்டு கொலை

அமெரிக்காவில் பொலிஸ் உள்ளிட்ட ஐவர் சுட்டு கொலை

அமெரிக்கா வடக்கு கரோலினா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிக்கி ,பொலிஸ் ஊழியர் ஒருவர் உள்ளிட்ட ஐவர் பலியாகியுள்ளனர் .

மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் ,காயமடைந்தவர்கள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளடக்கம் பெறுகிறது .

இதில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் முல்லைத்தீவில் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் முல்லைத்தீவில் பதற்றம்

பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் முல்லைத்தீவில் பதற்றம்

முல்லைத்தீவில் மீனவர்கள் இரு தரப்பாக போராட்டம்!அமைதியின்மை மை அடுத்து இரண்டு தரப்புக்கும் மீதும் பொலிஸார் கண்ணீர் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள

திணைக்கள அலுவலகத்தை 03 ஆம் திகதி காலை முற்றுகையிட்ட மீனவர்கள் தமக்கான தீர்வு கிடைக்கும் வரை போராடப் போவதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் குதித்திருந்தனர்.

இவர்களது போராட்டம் இன்று (05) மூன்றாவது நாளாக தொடர்ந்து இடம்பெறுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள்

கிடைக்காத நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்றனர்.

பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் முல்லைத்தீவில் பதற்றம்

கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தொழிலுக்கு செல்லும் மீனவர்களான தமது நிலைமையை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத

தொழிலுக்கு உடந்தையாகவுள்ளதாகவும் இவ்வாறான அதிகாரிகள் எமக்கு தேவையில்லை எனவும் அவர்களை உடனடியாக மாற்றம் செய்து தமக்கான ஒரு தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி போராடி வருகின்றனர்

கடந்த 3ஆம் திகதியன்று காலை கடல் தொழில் நீரியல் வள திணைக்கள உத்தியோகத்தர்கள் அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்காத போதிலும் பின்னர் அனுமதித்தனர் .

தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை தேசிய கடற்றொழில் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் தமக்கான தீர்வுகள் வரும் வரையில் குறித்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படும் வரையில் தமது

போராட்டம் தொடரும் என அறிவித்த மீனவர்கள் கடற்தொழில் நீரில்வள திணைக்களத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கொட்டகை அமைத்து தொடர் போராட்டத்தில் மீனவர்கள் தற்போதும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் 24 சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்

இந்நிலையில் குறித்த மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை வைத்த கொக்கிளாய் சாலை பகுதிகளில் தென்பகுதியில் இருந்து வருகைதந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் மற்றும் மாத்தளன்

பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள் முஸ்லிம் மீனவர்கள் என சுமார் 300 பேர் முல்லைத்தீவு பேருந்து நிலையம் அருகே காலை பதினொரு

மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்து முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளை மாற்ற வேண்டாம் என கோரி போராட்டத்தை ஆரம்பித்தனர்

பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் முல்லைத்தீவில் பதற்றம்

இந்நிலையில் குறித்த மீனவர்கள் மற்றும் ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் இடையே முரண்பாடுகள் ஏற்படலாம் என்ற நிலையில் பொலிஸார் போராட்டக்காரர்கள் கடற்றொழில் நீரியல் வள

திணைக்கள அலுவலகம் நோக்கி செல்லாத வகையில் முல்லைத்தீவு இலங்கை வங்கிக்கு முன்பாக ஒரு வீதித்தடையும் தொடர் போராட்டத்தில் ஈடுபடும்

மீனவர்கள் போராட்டக்காரர்களை நோக்கி வரமுடியாத வகையில் மற்றுமொரு வீதித் தடையையும் ஏற்ப்படுத்தியிருந்தனர் .

இந்நிலையில், அதிகாரிகளை மாற்ற வேண்டாம் என கோரிய போராட்டக்காரர்கள் இலங்கை வங்கி முன்பாக பொலிஸார் அமைத்திருந்த

வீதித்தடையை உடைத்து கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நோக்கி செல்ல முற்ப்பட்டபோது போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர்.

இதனையடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற மீனவர்கள் வீதித்தடையை உடைத்து செல்ல முற்பட்ட போது அவர்கள் மீதும் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர் இதன்போது பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்கள் காரணமாக அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.

இதன் பின்னர் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலக

வாயிலில் அமைக்கப்பட்ட கொட்டகையில் போராடி வரும் அதேவேளை அதிகாரிகளை மாற்ற வேண்டாம் என்று கேட்டு


போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மாவட்ட செயலக முன்றலில் போராடி வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

துப்பாக்கி வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

இலங்கையில் பொலிஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைதுப்பாக்கியுடன் கைது செய்ய பட்டுள்ளார்.

இந்த பொலிஸ் அதிகாரியிடம் இருந்து சிறியரக துப்பாககி மற்றும் தோட்டாக்கள் என்பன மீட்க பட்டுள்ளன .


கைதானவர் பொலிஸ் அதிகாரி விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்.

துப்பாக்கி வைத்திருந்த குற்ற சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது செய்ய பட்டுள்ள செயல் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி சட்டவிரோதமாக துப்பாக்கியை பயன் படுத்தி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    வீதியில் பணம் உரைமியாளரிடம் ஒப்படைத்த பொலிஸ்
    Posted in இலங்கை செய்திகள்

    வீதியில் பணம் உரைமியாளரிடம் ஒப்படைத்த பொலிஸ்

    வீதியில் பணம் உரைமியாளரிடம் ஒப்படைத்த பொலிஸ்

    மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் சார்ஜன்ட் கிட்னண் குலேந்திரன் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் கடந்த 3.8.2022 அன்று பணப்பை ஒன்றை கண்டெடுத்துள்ளார்.

    அதனை பரிசோதித்து பார்த்த போது 75520/- பணமும் ஏனைய பெறுமதியான ஆவணங்களும் காணப்பட்டுள்ளது. உடனே குறித்த உத்தியோகத்தர்

    இவ்விடயத்தினை அவரது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்கள்
    முன்னிலையில் குறித்த பணத்தையும் ஆவணங்களையும் உரிய நபரிடம் சேர்த்துள்ளார்.

      அமேசன் வானை திருடி சென்ற திருடன் துரத்திய பொலிஸ் வீடியோ
      Posted in உலக செய்திகள்

      அமேசன் வானை திருடி சென்ற திருடன் துரத்திய பொலிஸ் வீடியோ

      அமேசன் வானை திருடி சென்ற திருடன் துரத்திய பொலிஸ் வீடியோ

      அமெரிக்கா ; அமெரிக்காவில் முதன்மை நிறுவனமாக விளங்கும் அமேசன் நிறுவனத்தின் வான் ஒன்றை கறுப்பின திருடன் ஒருவர் திருடி சென்றுள்ளார் .

      அதனை அறிந்த பொலிஸ் உலங்கு வானூர்தி உதவியுடன் அந்த திருடனை துரத்தி பிடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது

      அதிக வாகன போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலையில் உயிராபத்தை விளைவிக்க கூடிய விதத்தில் செயல்பட்ட திருடன் செயல் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.

      அந்த அக்காணொளியை நீங்களும் பாருங்கள்.

        Posted in இலங்கை செய்திகள்

        இராணுவத்திடம் இருந்து பறிக்க பட்ட ஆயுதங்கள் மீட்பு

        இராணுவத்திடம் இருந்து பறிக்க பட்ட ஆயுதங்கள் மீட்பு

        பெல்துவ சந்தியில் இடம்பெற்ற போராட்டத்த்தின் பொழுது இராணுவத்திடம் இருந்து பறிக்க பட்ட டி-56 ரபில்,

        மற்றும் அதற்குரிய குண்டுகள் என்பன பாலத்திற்கு கீழ் இருந்து மீட்க பட்டுள்ளதா பொலிஸ் தெரிவித்துள்ளது.

        இந்த பாலத்திற்கு கீழ் குறித்த ஆயுதங்கள் வைக்க பட்டுள்ளது என்பதை இராணுவம் எவ்வாறு கண்டுபிடித்தது என்பது தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுளளது.

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கை பாராளுமன்றை சுற்றி கடும் பாதுகாப்பு

          இலங்கை பாராளுமன்றை சுற்றி கடும் பாதுகாப்பு

          இலங்கை பாராளுமன்றில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்திடும் வாக்கெடுப்பு இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

          யார் இலங்கையின் புதிய ஜனாதிபதி என்ற பர பரப்பான நிலை தோற்றம் பெற்று வரும் நிலையில் முன்னால் ஜனாதிபதி மகிந் ராஜபக்ச பதட்டத்தில் உள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன.

          இவ்வேளை பாரளுமன்றை சுற்றி இராணுவம் பொலிசார் குவிக்க பட்டுள்ளனர் ,

          தமது ஆதரவு ஜனாதிபதியை தெரிவு செய்வதில் மகிந்த அணியினர் தீவிரமாக உள்ளனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            கோட்டா வாகனங்கள் திருட்டு தேடும் பொலிஸ்

            கோட்டா வாகனங்கள் திருட்டு தேடும் பொலிஸ்

            ஜனாதிபதி இல்லம் மற்றும் மாளிகையை முற்றுகையிட்ட போராட்ட காரர்கள் அந்த ஜனாதிபதி மாளிகை மற்றும் காரியாலயங்கள் என்பனவற்றை சேதமாக்கினர் .

            அவ்வேளை ஜனாதிபதி மாளிகை மற்றும் காரியாலயங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருபது வாகனங்கள் மற்றும் அதன் கராச்சில் வைக்க பட்டிருந்த வாகன உதிரி பாகங்கள் என்பன காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

            இவ்வாறு கணம் போன வாகனங்களை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

            மேலும் ஜனாதிபதி மாளிகை என்பனவும் சேதமாக்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

            இதன் திரொலியாக பலர் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.


            போலீசார் தகவல் அடிப்படையில் அங்கிருந்த வாகன உதிரிபாகங்களில் கிட்டத்தட்ட முழுவதுமாக காணாமல் போயுள்ளதக தெரிவிக்க படுகிறது.

            கோட்டா கொள்ளையடித்த பணத்தை விட அந்த வாகன உதிரி பக்கங்கள் பெறுமதியா என மக்கள் மன்றம் கேட்பது சரியாகாதான் உள்ளது .

              Posted in இலங்கை செய்திகள்

              எரிபொருள் பொலிசுக்கு மட்டும் – மக்கள் பொலிஸ் மோதல்

              எரிபொருள் பொலிசுக்கு மட்டும் – மக்கள் பொலிஸ் மோதல்

              இலங்கை மக்களுக்கு எரிபொருள் வழங்குதல் நிறுத்த பட்டு இராணுவம் மற்றும் பொலிஸ் பெற்று கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

              மக்கள் வரிசையில் காத்திருக்க பொலிசார் இராணுவம் தமது வாகனங்களில் வருகை தனது பெற்றோல் டீசல் பெற்று செல்லும் நிலை மக்கள் மத்தியில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது.

              கோட்டபாய ராஜபக்சவின் இந்த நடவடிக்கை சிங்கள மக்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

              அதே சிங்கள மக்களை பொலிசார் ஆடு மாடுகள் போல விரட்டும் நிலை ஏற்பட்டுள்ளது .


              இலங்கை காவல்துறையின் இந்த செயல்பாடு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதால் பெரும் போராட்டம் அரசுக்கு எதிராக வெடிக்கும் என எதிர் பார்க்கலாம்.

              அத்துடன் அரச உடைமைகள் சூறையாடப்பட்டு அரச சொத்துக்கள் எரிக்க படும் நிலையும் தோற்றம் பெற போகிறது .

              மாத்தளையில் இடம்பெற்ற இந்த போலீஸ் மக்கள் மோதல் சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

              எரிபொருள் பொலிசுக்கு மட்டும் எனும் சிங்கள ஆளும் அரசின் செயல் பாடு மக்கள் பெரும் போருக்கு தயாராகும் நிலையை உருவாக்கியுள்ளது.

              எரிபொருள் பொலிசுக்கு மட்டும் - மக்கள் பொலிஸ் மோதல்