Tag: தற்கொலை
மனைவியைக் கொலை செய்த கணவர் தூக்கிட்டுத் தற்கொலை
மனைவியைக் கொலை செய்த கணவர் தூக்கிட்டுத் தற்கொலை
அளுத்கம, பெனிபெந்திகொட பிரதேசத்தில் தனது மனைவியைக் கொலை செய்த நபர் ஒருவர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (04) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் தனது மனைவியை சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்த பின்னர் வீட்டுக்குள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான மனைவி மற்றும் 36 வயதான கணவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
- அதிக விலையில் கீரி சம்பா அரிசி
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்
- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை
- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்
- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா
- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்
- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்
தாய்ப்பால் சுரக்கவில்லை தாய் தற்கொலை
தாய்ப்பால் சுரக்கவில்லை தாய் தற்கொலை
குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தவறான முடிவெடுத்து தாய் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் பதிவாகியுள்ளது.
40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தாய்ப்பால் சுரக்கவில்லை தாய் தற்கொலை
குறித்த பெண்ணுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகளின் பின்னர் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள போதும், தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற மன அழுத்தத்தில் குறித்த பெண் இருந்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே அவர் நேற்று தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்சன் தயான் அன்ரலா மேற்கொண்டுள்ளார்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைதுby நிருபர் காவலன்
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்துby நிருபர் காவலன்
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வுby நிருபர் காவலன்
- அதிக விலையில் கீரி சம்பா அரிசிby நிருபர் காவலன்
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்by நிருபர் காவலன்
காரில் வந்து கடலில் குதித்து தற்கொலை
காரில் வந்து கடலில் குதித்து தற்கொலை
மொரட்டுவ எகொடஉயன விஜயபுர பிரதேச கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
இன்று (12) காலை 11 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவர் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவர் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காரில் இந்தப் பகுதிக்கு வந்த குறித்த நபர், காரை அங்கேயே நிறுத்திவிட்டு கடலில் குதித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த காட்சிகள் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
by நிருபர் காவலன் - கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
by நிருபர் காவலன் - கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
by நிருபர் காவலன் - அதிக விலையில் கீரி சம்பா அரிசி
by நிருபர் காவலன் - அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்
by நிருபர் காவலன்
இராணுவ சிப்பாய் தற்கொலை
இராணுவ சிப்பாய் தற்கொலை
அண்ணமார்கோவில், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை பழக்கத்திற்கு ஆளான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இவர் கடந்த காலத்தில் இராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டார். பின்னர் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் அவரது வீட்டுக்கு முன்னால் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இராணுவ சிப்பாய் தற்கொலை
அண்ணமார்கோவில், புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் சத்தியசீலன் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலமானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்by நிருபர் காவலன்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்by நிருபர் காவலன்
- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாதுby நிருபர் காவலன்
- புட்டீன் ஈரன் சந்திப்புby நிருபர் காவலன்
- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்by நிருபர் காவலன்
முன்னாள் காதலியை சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்
முன்னாள் காதலியை சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்
வவுனியாவில் இன்று (13) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரு பிள்ளையின் தாயை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதுடன், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா, பறயனாலங்குளம், நிலியமோட்டையில் உள்ள வீடொன்றில் வைத்து பெண் ஒருவர் இன்று (13) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பின்னர் சந்தேக நபரும் இன்று காலை நிலியமோட்டை கோவிலுக்கு அருகில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பெண் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நிலியமோட்டை பிரதேசத்தில் குடியேறியுள்ளார்.
திருமணத்திற்கு முன்னர் குறித்த சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரிடம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Featured
மாடியில் இருந்து குதித்து இளம் பெண் தற்கொலை| இலங்கை செய்திகள்
மாடியில் இருந்து குதித்து இளம் பெண் தற்கொலை| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |இந்திய ராஜ்பூர் பகுதியில் உள்ள அடுக்கு மாடியில் இருந்து குதித்து 17 வயது இளம் பெண் ஒருவர் தற்கொலை புரிந்துள்ளார் .
புதிய கட்டட தொகுதி ஒன்று அமைக்க பட்டு வரும் ,ஏழாவது மாடியில்,
ஏறிய இளம் பெண் ,அங்கிருந்து குதித்து தற்கொலை புரிந்துள்ளார் .
பாடசலை சீருடையுடன் காணப்பட்ட இந்த பெண் ,
ஏன் தற்கொலை புரிந்தார் என்பது
தொடர்பாக தெரியவில்லை .
இவரது தற்கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பிள்ளைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை
பிள்ளைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை
இலங்கை அரநாயக்க ப்குதியில் 6 வயது மற்றும் 9 வயது பிள்ளைகளை கொன்று விட்டு தந்தை தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார் .
தூக்கிட்டு தற்கொலை செய்தவர் 33 வயதுடைய தந்தை என தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது.
இலங்கை மட்டக்களப்பில் 180 தற்கொலை
இலங்கை மட்டக்களப்பில் 180 தற்கொலை
இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் மற்றும் கடந்த 2022 ஆண்டு 180 பேர் தற்கொலை புரிந்துள்ளனர் .
நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் பண நெருக்கடி ,குடும்ப தகராறு ,பகை ,காதல் மாற்று இதர வாழ்வியல் நிலைப்பாட்டு நெருக்கடி காரணமாக, இந்த தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன .
இவ்வாறு இறந்தவர்களில் இளம் வயதுடையவர்கள் அதிகம் எனப்படுகிது .
அதிகரித்து செல்லும் இந்த தற்கொலைகள், மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி நிற்கிறது .
இலங்கையில் எகிறும் தற்கொலைகள் தடுப்பது யார்
இலங்கையில் எகிறும் தற்கொலைகள் தடுப்பது யார்
இலங்கையில் எகிறும் தற்கொலைகள் ,இதனை தடுப்பது யார் என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .
இலங்கையில் ஆண்டு தோறும் ஒருலட்சம் மக்களுக்கு ,14 பேர் வரையில் தற்கொலை செய்து வருகின்றனர் .
இந்த தற்கொலை விகிதம் ,ஆண்டு வாரி கணக்கெடுப்பில் அதிகரித்த வண்ணமே செல்கிறது .
வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு , மற்றும் புற சூள்நிலையால் , ஏற்பட்ட மன பாதிப்பு காரணமாக , இந்த தற் கொலைகள் ,அதிகரித்த வண்ணம் உள்ளன .
இந்த தற்கொலைகளை தடுப்பதற்கு,அரசு உரிய கவனம் செலுத்தி ,மக்களின் வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்தினால் ,தடுக்க
முடியும் என்கிறது ,மனிதாபிமான தன்னார்வு நிறுவனம் ஒன்று .
யாழில் பகிடிவதை பேராசியர் மாணவர்கள் தற்கொலை முயற்சி
யாழில் பகிடிவதை பேராசியர் மாணவர்கள் தற்கொலை முயற்சி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேராசியரையர் அறுவர் உள்ளிட்ட மாணவர்கள் தற்கொலைக்கு முயன்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
துணை துறை தலைவர் பதவியில் உள்ள ஒருவர் வெளிநாடு சென்று கல்வி கற்க முனைந்துள்ளார் .
ஆனால் அந்த பதவி பறிபோய் விடும் என்ற பீதியில் ,அவர் வெளிநாடு செல்லாது அங்கே கல்வியை தொடர்ந்துள்ளார் .
யாழில் பகிடிவதை பேராசியர் மாணவர்கள் தற்கொலை முயற்சி
இதனால புதிதாக துறை தலைவர் கிடைக்க பெறவிருந்த பேராசிரியர் , யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் முன்னிலையில் ,உடலில் எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார் .
இவரால் இதே பல்கலைக்கழகத்தில் ,18 மாணவர்கள்பகிடிவதை புரிந்தனர் எனவும் ,அதில் சில மாணவர்கள் பெயரை குறிப்பிட்டு, இவர்களே மாபியாக்கள் என திட்டிய நிலையில் ,
மாணவர் ஒருவனும் ,மாணவியும் வீட்டிற்குள் தூக்கு மாட்டி தற்கொலை செய்திட முனைந்துள்ளனர்.
மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டாவை வெளியில் அனுப்பவேண்டும்- ஹரின்
கோட்டாவை வெளியில் அனுப்பவேண்டும்- ஹரின்
புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள்
சக்தியின் உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரும் கொழும்பில் இன்று (20) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.
அந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அமைச்சர் ஹரின்,
நாட்டின் நெருக்கடியை தீர்க்கும் முயற்சிக்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளேன். ஆனால், இது ஒரு தற்கொலை முயற்சியாகும். சூறாவளி ஒன்றில் சிக்கிய படகில் நான்
சென்றுகொண்டிருக்கின்றேன். கப்டன் படகை செலுத்துவதில் தடுமாறுகிறார். அப்படியானால் துணிந்துவந்து கப்டனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றார்.
அதுமட்டுமன்றி, கோட்டாவை வெளியில் அனுப்ப வேண்டும்.
அதை ஜனநாயக அணுகுமுறைக்குள் செய்யவேண்டும் என்றும் அவர் கூறினார்.
காதலி தற்கொலை – மனமுடைந்த காதலனும் தற்கொலை
காதலி தற்கொலை – மனமுடைந்த காதலனும் தற்கொலை
இலங்கை ஊர் காவல்துறை பகுதியில் சிலநாட்களுக்கு முன்னர் காதலி தற்கொலை
செய்துள்ள நிலையில் அதனால் மனமுடைந்த 22 வயது காதலன் தற்கொலை செய்துள்ளார்
அதிக மன உளைச்சலில் இருந்த இவர் இந்த தவறான முடிவினை மேற்கொண்டு காதலி
சென்ற இடத்திற்கு பயணித்துள்ளார்
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
அவுஸ்ரேலியாவில் இரு பிள்ளைகளை கொன்று இலங்கையர் தற்கொலை
அவுஸ்ரேலியாவில் இரு பிள்ளைகளை கொன்று இலங்கையர் தற்கொலை
அவுஸ்ரேலிய பேர்த் நகரில் 40 வயதுடைய இந்தி குணதிலக என்பவர் தனது மகள் ,மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்
மனைவியை பிரிந்து வசித்து வரும் இவரே இந்த தற்கொலையினை புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
அதிக மன விரக்தியில் இருந்த நிலையில் இந்த தற்கொலை இடம்பெற்றுள்ளது
மக்கள் கண்ணீருடன்குழந்தைகள் கொலை புரிய ப்பட்ட பகுதியில் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
இலங்கையர்கள் வெளி நாடுகளில் அதிக மன அழுத்தம் காரணமாக இவ்வாறான
மரணங்கள் இடம்பெற்று வருவது குறிப்பிட தக்கது
மதம் மாற வற்புறுத்தியதால் – தற்கொலை புரிந்த 17 வயது பெண்
மதம் மாற வற்புறுத்தியதால் – தற்கொலை புரிந்த 17 வயது பெண்
மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோரிடம் திருவையாறு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ்மோகன் விசாரணை நடத்தினார்.
மதம் மாறும்படி வற்புறுத்தியதே லாவண்யாவின் தற்கொலைக்கு காரணம்- சித்தி பகிரங்க குற்றச்சாட்டு
லாவண்யாவின் சித்தி சரண்யா
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யாவை, மதம் மாறும்படி கூறி வற்புறுத்தியதாலும், தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாலும் அவர் தற்கொலை
செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக லாவண்யா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர். லாவண்யாவின் மரணத்துக்கு நீதி வழங்கக் கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு, டுவிட்டரில் #JusticeforLavanya என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோரிடம் திருவையாறு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ்மோகன் விசாரணை நடத்தினார்.
பின்னர் லாவண்யாவின் சித்தி சரண்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மதமாற்றம் செய்யக்கோரி 2 ஆண்டுகளாக லாவண்யாவை வற்புறுத்தி வந்தனர். விடுதி கழிவறையை சுத்தம் செய்ய சொல்லியும்
பாத்திரம் கழுவச் சொல்லியும் தொந்தரவு செய்துள்ளனர். தொடர்ந்து மதம் மாறும்படி வற்புறுத்தியதால் லாவண்யா தற்கொலை செய்திருக்கிறாள். மதம் மாறச்சொல்லி வற்புறுத்திய 2
பேரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம். எங்கள் பெண்ணுக்கு நடந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்கக் கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்கொலை
தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்கொலை
தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்வதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கேயே
பயிரிடப்பட்ட காய்கறிகளை பார்வையிட்டு, இதுப்போல் காய்கறி உற்பத்தி, இம்மருத்துவமனையில் குணமடைந்த தோழர்களை வைத்து செய்ய அறிவுறுத்தினார்.
மேலும் ரிவைவ் அடுமனையை திறந்து வைத்தார். சமூகநீதி நாள் உறுதிமொழி மற்றும் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு மாதம் உறுதிமொழி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் எடுக்கப்பட்டது. பின்னர் அவர்
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இம்மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைப் பெற்று குணமடைந்து செல்கிறார்கள். அப்படி சிகிச்சைப் பெற்று செல்பவர்களில் 100 பேர் குணமடைந்தும், தங்களது குடும்பத்தாரால் ஏற்றுக்கொள்ளாமல், புறந்தள்ளிவிடுகிற
சூழ்நிலையில் இருக்கின்றனர். வேளாண்மை துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, சென்னை மாநகராட்சி ஆகிய துறைகள் இணைந்து காலியாக இருக்கிற இடங்களில் காய்கறிகளைப்
பயிரிடுகிற பணிகளை இங்கு சிகிச்சை பெற்று குணமடையது இருப்பவர்களுக்கு வழங்க இருக்கிறோம்.
இந்த வளமான நிலத்தை பதப்படுத்தி இங்கு சிறப்பாக விளையதிருக்கக்கூடிய மரவள்ளிக்கிழங்கு, பலவகையான வாழை, வெண்டை, கத்தரி போன்ற காய்கறிகளை விளைவித்து, அவற்றையெல்லாம் சென்னையில் இருக்கிற அரசு ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனை,
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டாலின் அரசு மருத்துவமனைகளுக்கு உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்திக்கொள்ள வழங்கலாம் என்று
முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்படி இந்த நிலங்களில் அவரவர் உடல் நலத்திற்கேற்ப தங்களது உடலுழைப்பை செலுத்துகிற தோழர்களுக்கு கூலி வழங்கப்பட்டு அவை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உலக தற்கொலைத் தடுப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு தற்கொலை செய்துகொண்டு இறப்பவர்களின் எண்ணிக்கை 15
ஆயிரத்திலிருந்து 16 ஆயிரமாக உள்ளது. விபத்துக்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரமாக உள்ளது. விபத்துக்களினால் இறப்பவர்களைவிட தற்கொலையினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டாலே, தொடர்யது ஒன்று, இரண்டு, மூன்று முறை தற்கொலை செய்துகொள்வதற்கு முயன்று சாவின் விளிம்புக்குச் சென்றுவிடுகிறார்கள்.
தற்கொலை செய்துகொள்பவர்கள் என்ன காரணத்தினால் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று அதற்கு கவுன்சிலிங் கொடுக்கலாம். 15 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதம் பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர்.
பாலிடாயில், எலிமருந்து, சாணிபவுடர் போன்றவற்றை பயன்படுத்தியும் தற்கொலை செய்துகொள்கின்றனர். அண்மையில் நான் திருமங்கலம் மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது, அங்கு இந்த சாணி பவுடரைச் சாப்பிட்டுத்தான் இரண்டு பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
அந்தக் காலத்தில் வீட்டில் மாட்டு சாணத்தை பூசுவது என்பது சுபகாரிய விசயமாகக் கருதப்பட்டது. விஷக் கிருமிகள் வீட்டிற்குள் அண்டாமல் இருக்க சாணி பூசுவது என்பது
செய்யப்பட்டது. அதுவும் கூட இப்போது விஷம் கலந்து, விஷப் பவுடராக மாற்றி, வணிகநோக்கத்தோடு செயல்படுகின்றனர். இந்த சாணிப் பவுடரில் விஷத்தின் அளவு கூடுதலாக இருப்பதால், அதைச் சாப்பிடுபவர்களை காப்பாற்றவே முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
எனவே ஒரு பண்பாட்டிற்கு எதிராக, ஒரு கலாச்சாரத்திற்கு எதிராக, சாணிக்கு பதிலாக சாணி பவுடர் தயாரிக்கிற நிறுவனங்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, மிக விரைவில் சாணிப் பவுடர் தமிழகத்தில் தயாரிப்பதற்கு தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பாலிடாயில், எலி மருந்துகளை பாதுகாப்பானப் பெட்டகங்களை வைத்து விற்க வேண்டும். அவற்றை வெளிப்படையாக தெரிகிற வகையில் விற்கக் கூடாது என்று வணிகர்களுக்கும், அதேப்போல் பாலிடாயில், எலி மருந்துகளை வாங்க வருபவர்கள் தனியாக வருபவர்களுக்கு
வழங்கக்கூடாது. 2 அல்லது மூன்று பேர் சேர்யது வந்து கேட்டால் மட்டுமே பாலிடாயில், எலி மருந்துகளை வழங்க வேண்டுமென்று வணிகர்களுக்கு அதை வலியுறுத்தி, மருத்துவ துறையின்
அலுவலர்கள் மூலம் அரசு ஆணைப் பிறப்பிக்கப்படும். இதன்மூலம் தற்கொலை செய்கிற எண்ணத்தை மாற்றவும், தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
யாழில் இராணுவ சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை
யாழில் இராணுவ சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை
இன்று (22) அதிகாலை நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையில்
இருந்த இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிப்பாய் இராணுவத்தில் இணைந்து 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில் வீட்டில் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண விசாரணையின் பின்னர் உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவில் காவல்துறை அதிகாரி தற்கொலை
முல்லைத்தீவில் காவல்துறை அதிகாரி தற்கொலை
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (01) பதிவாகியுள்ளது.
கண்டி மாவட்டத்தை சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன்,
குடும்ப பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
சவுதிக்கு வேலைக்கு சென்ற 233 இலங்கையர் தற்கொலை
சவுதிக்கு வேலைக்கு சென்ற 233 இலங்கையர் தற்கொலை
இலங்கையில் இருந்து பெரும் கனவுகளை சுமந்தவாறு சவூதி நாட்டுக்கு சென்ற 233 இலங்கையர்கள்
2011 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்துள்ள புள்ளி விபரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அரேபிய நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ,குறிப்பாக பெண்கள் பாலியல் வல்லுறவு
,மற்றும் வன்கொடுமைகளுக்கு உள்ளான நிலையில் தாயகம் திரும்பினார்
இதில் பல பெண்கள் உடல்களில் ஆணி அடிக்க பட்டு இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது ,
தொடர்ந்து இலங்கை திரும்பும் நோக்கில் சவூதி பாலங்களின் கீழ் பல்லாயிரம் இலங்கையர்கள்
விசாக்கள் ஏதுமின்றி காத்திருக்கின்ற பேரவலம் தொடர்கின்றமை குறிப்பிட தக்கது
மனைவியை குத்திக்கொன்று கணவன் தற்கொலை-அமெரிக்காவில் இந்தியர் கொலை வெறி செயல்
மனைவியை குத்திக்கொன்று கணவன் தற்கொலை-அமெரிக்காவில் இந்தியர் கொலை வெறி செயல்
மராட்டிய மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகையை சேர்ந்தவர் பாலாஜி ருத்ரவார் (வயது 32). இவர் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆரத்தி (வயது 30). குடும்பத்தலைவி.
இந்த தம்பதியருக்கு 2014-ம் ஆண்டு டிசம்பரில் திருமணமானது. அதைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு நியூஜெர்சி மாகாணத்தில் நார்த் ஆர்லிங்டனில்
உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ஆரத்தி மீண்டும் கர்ப்பமாக இருந்தார்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு பாலாஜி, ஆரத்தி தம்பதியரின் மகள் வீட்டின் பால்கனியில் நின்று அழுதுகொண்டு இருந்திருக்கிறாள்.
இதைக்கண்டதும் அக்கம்பக்கத்தினர் என்னவோ ஏதோ என பதறிப்போய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, பாலாஜியும், ஆரத்தியும் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர்.
போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
கணவன், மனைவி இருவருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் ஆரத்தியை, பாலாஜி கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, அதே கத்தியால் தானும் குத்திக்கொண்டு தற்கொலை செய்துள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
இதுபற்றி அம்பாஜோகையில் உள்ள பாலாஜியின் தந்தையும், தொழில் அதிபருமான பரத் ருத்ரவாருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பரத் ருத்ரவார் கூறியதாவது:-
உள்ளூர் போலீசார் நடந்த துயர சம்பவம் குறித்து எனக்கு தெரிவித்தனர். என்ன நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னர் அது பற்றிய தகவல்களை தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
என் மருமகள் 7 மாத கர்ப்பிணி. நாங்கள் அமெரிக்கா சென்று அவர்களுடன் இருந்து விட்டு வந்தோம். மீண்டும் அமெரிக்காவுக்கு அவர்களை பார்க்கச்செல்ல திட்டமிட்டிருந்தோம்.
இந்த நிலையில்தான் இப்படி ஒரு துயரம் நடந்து விட்டது. இதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் மகிழ்ச்சியான தம்பதியராகத்தான் இருந்து வந்தார்கள்.
எல்லா சட்டநடைமுறைகளும் முடிந்து அவர்களது உடல்களை எடுத்து வர 10 நாட்கள் வரை ஆகலாம். எனது பேத்தி, எனது மகனின் நண்பர் வீட்டில் இருக்கிறாள். என் மகனுக்கு அங்கு நிறைய இந்திய நண்பர்கள் உள்ளனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு
திருகோணமலை, தம்பலகாமம் பாலம்போட்டாறு பத்தினிபுரப் பகுதியில் உள்ள வயல் நிலத்தை அண்டிய குடியிருப்பு குடிசையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இன்று (21) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர், மூதூர் எனும் முகவரியை கொண்ட கந்தவேல் இந்திரானி வயது (46) என்ற பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஆடு மேய்ப்பதற்காக குறித்த குடியிருப்பு பகுதியில் தனது கணவன் மற்றும் தாயுடன் குறித்த பெண் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே, குடிசைப் பகுதிக்குள் கழுத்து கட்டப்பட்ட நிலையில் அரைப்பகுதி உடம்பு தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது கொலையா ?தற்கொலையா? எனபது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




























