Posted in உலக செய்திகள்

மாலியில் வெடித்த குண்டு -ஐநா பணியாளர்கள் பலி

மாலியில் வெடித்த குண்டு -ஐநா பணியாளர்கள் பலி- அடுத்து என்ன

மாலி நாட்டில் இடம்பெற்று வரும் உள் நாட்டு போரில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகி வருகின்றனர்


இவ்வேளை மாலியில் சமாதான பணிகளில் ஈடுபட்டிருந்த, ஐக்கிய நாடுகள் தூதரக பணியாளர்கள்பயணித்த வாகனம் மீது திடீரென இந்த வன்முறை தூண்டும் குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது

மாலியில் ஐநா பணியாளர்கள் பயணித்த வாகனம் மீது நடத்த பட குண்டு தாக்குதலில்

சிக்கி இருவர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்

நாடுகளில் நடை போரின் ,யுத்த வலய பகுதிகளில் சமாதான தூதர்களாக பயணிக்கும்

இவர்கள் ,இரட்டை உளவாளிகளாக செயல் பாட்டு வந்தமை ஈழ தமிழர் போராட்த்தில் அப்பட்டமாக இடம்பெற்றுள்ளது

அவ்விதம் இவர்கள் கறுப்பு கண்ணாடி மாட்டிய உளவாளிகள் என வர்ணித்த , போராளி குழுக்களினால் கொலை செய்ய பட்டுள்ளனர்

எதிரி எமக்கு நண்பன் என கூறும் போராளி குழு ,இவர்களே எமது, பரம எதிரிகள் என கூறி வருகினறனர்


,புரையோடி போயுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு, நாட்டை முன்னோக்கி நகர்த்தி செல்ல வேண்டிய அரசியல் வாதிகள் ,தமது சட்டை பைகளை நிறைத்த வண்ணம்

உள்ளதை ,ஆசிய நாடுக்ளின் அரசியல் சாபக்கேடுகாட்டி நிற்கிறது

மாலியில் வெடித்து சிதறும் குண்டுகளினால் அப்பாவி மக்களும் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,முடிவில்லா தொடரும் இந்த போருக்கு, ஐக்கிய நாடுகள் சபை எவ்விதம் தீர்வு காணலாம் என்பதே கேள்வியாக உள்ளது

மாலியில் இதற்கு முன்னரும் வெடித்த குண்டு தாக்குதலில் ,ஐநா பணியாளார்கள் இவ்விதம் படுகொலை செய்ய பட்டனர் ,

அதனை தொடர்ந்து , அந்த நாட்டில் இருந்து ஐநா வெளியேற போவதாக அறிவித்த நிலையில் மீளவும் இந்த தாக்குதல்கள்
இடம்பெற்றுள்ளது

ஆளும் மாலிய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது ,தமது நாட்டின் நலன்

சார்ந்து செயல் படும் இந்த பணியாளர்கள் ,சமாதன வேடம் இட்டவாறு வெள்ளை

வண்டிகளில் பயணித்து சொகுசு வாழ்ககை அனுபவித்து வருகினறனர்

மேற்படி குண்டு தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .

    Posted in இலங்கை செய்திகள்

    மக்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது – இலங்கைக்கு ஐநா கண்டணம்

    மக்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது – இலங்கைக்கு ஐநா கண்டணம்

    இலங்கையில் ஆளும் சகோத ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

    இந்த போராட்டம் காரணமாக நாடு பதட்டத்தில் உள்ளது

    சீற்றமடைந்துள்ள ஆட்சியாளர்களும் படை தரப்பும் மக்கள் மீது

    கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

    இவ்வாறானவர்கள் மீது தாக்குதல் நடத்திட கூடாது எனவும் ,ஆத்திரமுற்றுள்ள


    மக்களை மேலும் தூண்டிவிட எதிர்க்கட்சிகள் கூடாது எனவும் அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளதுடன் ,


    பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு ஐநா எடுத்துரைத்துள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே- ஐநா கேள்வி

      இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே- ஐநா கேள்வி

      முக்கிய அரசு நிறுவனங்களில் இன-மத தேசியவாதம் மேலும் வெளிப்படையாக தெரிகிறது; இதனால், சிறுபான்மை இனத்தவர் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதும்,

      அஞ்சுவதும் அதிகரித்து, நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது என்று ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையர் மிச்சல் பேச்சலெட்.

      ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 49 வது கூட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை (2022 மார்ச் 4) நடைபெற்ற ‘இலங்கை குறித்த பங்கேற்பு உரையாடல்’ என்ற நிகழ்வில் பேசிய அவர் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில்

      பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அரசாங்கம் விரைவாக அங்கீகரிக்கவேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே என்பதை விரைவாக முடிவு செய்து,

      பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனையும் விரைவாக வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

      சர்வதேச குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பேற்பதற்கான நீதிமுறையை உருவாக்காத இலங்கை அரசு அதோடு, போர்க்குற்றங்கள் தொடர்புடைய ராணுவ அதிகாரிகளை அரசாங்க உயர் பொறுப்புகளிலும் அமர்த்தியுள்ளதால்,

      சர்வதேச அளவில் பொறுப்பேற்பை மேம்படுத்த மாற்று உத்திகளை மனித உரிமை கவுன்சில் கையாளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

      அவரது உரை

      இலங்கை தொடர்பாக பெப்ரவரி 25ம் திகதி அனுப்பிய எழுத்துப்பூர்வமான அறிக்கையை பேரவை உறுப்பினர்கள் பெற்றிருப்பார்கள். 2021 பெப்ரவரியில் வெளியிடப்பட்ட முந்தைய அறிக்கைக்குப் பிறகான செயல்பாடுகளைப் பற்றியே இந்த

      அறிக்கை கவனம் செலுத்துகிறது. இந்த விஷயத்தை மனித உரிமை பேரவை தொடர்ந்து கண்காணிப்பதற்கான இன்றியமையாத தேவையை இந்த அறிக்கை காட்டுகிறது.

      ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையர் அலுவலகத்துடன் இலங்கை அரசாங்கம் இணைந்து பணியாற்றுவது சமீப காலத்தில் அதிகரித்திருப்பதற்கும், சீர்திருத்தங்களை தொடங்குவதற்குமான அறிகுறிகள் தெரிகின்றன.

      பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை திருத்துவதற்கும், இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்குமான முன்மொழிவுகள் வரவேற்கத் தகுந்த ஆரம்பகட்ட நடவடிக்கைகள்.

      பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பான அடிப்படையான பிரச்னைகளை பரிசீலனை செய்ய மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசாங்கத்தை ஊக்குவிக்கிறேன்.

      தவறிழைத்தவர்கள் தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவர, கடந்த கால அத்துமீறல்கள் மீண்டும் நிகழ்வதைத் தடுக்க ஆழமான சட்ட, நிறுவன, பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும்.

      ஆனால், பொறுப்பேற்கும் விஷயத்தில் கடந்த ஆண்டும் மிகப்பரிய தடைகளும், பின்னடைவுகளும் ஏற்பட்டுள்ளன என்பது வருந்தத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்ந்து உண்மையும் நீதியும் மறுக்கப்படுகிறது.

      விமர்சனங்கள் மீதான அரசாங்கத்தின் பதில் நடவடிக்கை ஜனநாயக, குடிமை செயல்பாடுகளுக்கான வெளியை சுருக்குவதாக உள்ளது. குறிப்பாக மனித உரிமை நடவடிக்கைகளுக்கான வெளி சுருங்குகிறது

      குறிப்பிட்ட சில போக்குகள் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பது 2021 பிப்ரவரி அறிக்கையில் அடையாளம் காணப்பட்டது. இந்த போக்குகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன.

      அரசாங்கத்தின் குடிமை செயல்பாடுகள் ராணுவ மயமாவது தொடர்ந்து ஆழமடைந்துவருகிறது என்று தெரிவித்துள்ளார் மிச்சல் பேச்சலெட்.

      குடிமை பதவிகள் ராணுவ அதிகாரிகள் கையில் குவிவது குறித்து நான் ஆழமாக கவலை கொண்டிருக்கிறேன். அந்தப் பதவிகள் தரப்படுகிற சிலர் சில மோசமான மனித உரிமை மீறல்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.

      2020 இறுதியில் இருந்து புத்தமத மரபு பாதுகாப்பு, வனப்பாதுகாப்பு தொடர்பில் நிலம் தொடர்பான தகராறுகள் அதிகரித்துள்ளன. இதனால், சிறுபான்மை சமூகங்களின் குறைகள் தீவிரமைடந்துள்ளன. புதிய பதற்றங்களை இது தோற்றுவிக்கிறது.

      அரசமைப்புச் சட்டத்தின் (யாப்பு) 20வது திருத்தத்துக்குப் பிறகு இலங்கை மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட நாட்டின் சில ஆணையங்கள், நிறுவனங்களின் சுதந்திரத் தன்மை செல்லரித்துப் போவது கண்டு வருத்தம் கொள்கிறேன்.

      வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல பத்தாயிரம் பேர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் மீது பாதிக்கப்பட்டோருக்கு போதிய நம்பிக்கை இல்லை.

      வரவிருக்கிற அரசமைப்புச் சட்ட மறு வரைவு நடவடிக்கை முக்கிய நிறுவனங்களின் சுதந்திரம் காக்கப்படுமா என்பதற்கான முக்கியச் சோதனையாக இருக்கும். இந்த மறுவரைவு நடவடிக்கை, அதிகாரப் பகிர்வுக்கும், மனித உரிமைக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்.

      உள்நாட்டிலேயே வடிவமைத்து செயல்படுத்தப்படும், எல்லோரையும் உள்ளடக்கும் நல்லிணக்க மற்றும் பொறுப்பு ஏற்பு செயல்முறை தொடர்பாக இந்த கவுன்சிலில் வாக்குறுதி அளித்து இரண்டாண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் பொறுப்பேற்பதற்கும், நல்லிணக்கத்துக்கும் இட்டுச் செல்வதற்கான நீதிமுறை ஒன்றுக்கான நம்பத்தகுந்த செயல்திட்டம் எதையும் அரசாங்கம் வழங்கவில்லை.

      காணாமல் ஆக்கப்பட்டோர் விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பங்கள் ஆகியோரின் தொடர் வேதனைகளையும், மன உளைச்சலையும் கண்டு கவலை கொண்டுள்ளேன்.

      அவர்களது உரிமைகளை அரசு அங்கீகரிக்கவேண்டும். அவர்களுக்கு என்ன நேர்ந்தது அல்லது எங்கே இருக்கிறார்கள் என்பதை அவசரமாக உறுதி செய்யவேண்டும். தவறிழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

      ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும், மத தலைவர்களும் தொடர்ந்து நீதிக்காக, நிவாரணத்துக்காக, எப்படி அந்த தாக்குதல் நடந்தது என்ற உண்மையைக் கேட்டு குரல் கொடுக்கிறார்கள். குறிப்பாக பாதுகாப்பு அமைப்பின் பங்கு அதில் என்ன என்பதை அவர்கள் கேட்கிறார்கள்.

      குடிமை அமைப்புகள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் கண்காணிப்புக்கும், தொந்தரவுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாவதாக தொடர்ந்து வரும் செய்திகளால் ஆழமான கவலை கொள்கிறேன். தொடரும் காவல் மரணங்கள், போலீஸ் என்கவுன்டர்கள் திரும்பத் திரும்ப நிகழ்வது எச்சரிப்பதாக உள்ளது. போலீஸ், ராணுவம் மோசமாக நடத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருகின்றன. பாதுகாப்புத் துறை சீர்திருத்தம் வேண்டும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

      இலங்கையில் நடந்த சர்வதேசக் குற்றங்கள், மோசமான மனித உரிமை மீறல்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில், நீதிமுறையை கடைபிடிப்பதில் அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் தவறிவிட்டன என்பதை கவுன்சிலில் சமர்ப்பித்த முந்தைய அறிக்கைகள் விவரிக்கின்றன.

      தற்போதைய அரசாங்கம், பொறுப்பேற்கும் நிலையை உருவாக்க விரும்பாதது மட்டுமல்ல போர்க்குற்றங்கள் தொடர்புடைய ராணுவ அதிகாரிகளை அரசாங்கத்தின் உயர் பதவிகளிலும் அமர்த்தியுள்ளது. இது தண்டனை குறித்து கவலை தேவையில்லை என்ற நிலையை இது மேலும் மோசமாக்குகிறது.

      இந்த காரணங்களாலும், பாதிக்கப்பட்டவர்கள் குறையை ஏதோ ஒரு வகையில் தீர்ப்பதற்கும், சர்வதேச அளவில் பொறுப்பேற்கும் நிலையை மேம்படுத்துவதற்காக மாற்று உத்திகளை கையாள வேண்டும் என்று கவுன்சிலை கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

      46/1வது தீர்மானத்தின் பொறுப்பேற்பு குறித்த அம்சங்களை செயல்படுத்துவது தொடர்பாக தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

      குற்றங்களுக்கு நீதி வழங்கல் என்ற பார்வையில், மேற்கொண்டு தகவல் திரட்டுவதில் உள்ள ஓட்டைகளை, முன்னுரிமைகளை கண்டறிவது என்ற நோக்கத்தில், பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய அணுகுமுறையில் ஆதாரக் களஞ்சியத்தில் உள்ள தகவல்களை எங்கள் குழு ஆராயும்.

      இதற்கு என் அலுவலகம் குறிப்பிடத்தக்க அளவு வேலை செய்யவேண்டும். இதற்கு நேரம், போதிய மனித, நிதி வளம், அரசுகளின் ஒத்துழைப்பு ஆகியவை தேவை. இலங்கையில் சர்வதேசக் குற்றங்களுக்கு உதவியாக இருந்த அனைத்துத் தரப்பையும் விசாரணைக்கு உட்படுத்தி, நீதி முறையில், உரிய எல்லையில், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒத்துழைப்பு இதில் அடங்கும்.

      ஏற்றுக்கொள்ளப்பட்ட, பிராந்தியம் கடந்த, உலகளாவிய நீதியெல்லை என்ற கோட்பாட்டின் கீழ் இந்த நடவடிக்கை அமைய வேண்டும்.

      மோசமான சர்வதேசக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்பேற்பை உறுதி செய்ய தீர்மான எண் 46/1-ன் கீழ் வழங்கப்பட்ட உரிமை ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இது இன்றியமையாத பணி. தண்டனை பற்றிய கவலை இல்லாத நிலை நீடிக்கும் வரையில் இலங்கை உண்மையான நல்லிணக்கத்தையோ, நீடித்த அமைதியையோ அடையாது.

      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      தூசு தட்டப்படும் தூக்கு மேடை – கோட்டா மகிந்தஉளிட்ட 50 இராணுவ தளபதிகளுக்கு ஆப்பு

      தூசு தட்டப்படும் தூக்கு மேடை – கோட்டா மகிந்தஉளிட்ட 50 இராணுவ தளபதிகளுக்கு ஆப்பு

      இலங்கையில் இறுதி போரில் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த பயங்கரவாத இனஅழிப்பிற்கு நீதி கோரி தமிழர் தரப்பு தமது முன்னெடுப்பு க்களை நகர்த்தி வந்தனர்

      அதனை அடுத்து தற்பொழுது சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்தும் நகர்வுகளில் ஐநா தீவிர கவனம் செலுத்தி வருகிறது ,பல்லாண்டுகள் விட்டு கொடுப்பும் ,கால அவகாசமும் செயலற்று போன நிலையில் மீளவும் இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது

      இலங்கையின் தொடர் அத்துமீறலும் ,சீனாவுடனான நெருக்கத்தாலும் அமெரிக்கா,இந்தியாவை சீற்றத்தில் உறைய வைத்தன ,இதனை அடுத்து இரகசிய நகர்வில் தீவிரமாக நகர்த்த படும்

      நகர்வின் ஊடாக இந்த விடயம்இறுக்க பட்டு வருகிறது ,சும்மா கிடந்த புலிகளையும் மக்களையும் அழித்து சிங்கள மக்கள் மத்தியில் கீரோவான மகிந்த குடும்ப ஆட்சி இத்துடன் காணமல் போகும் நிலை ஏற்பட போகிறது

      சொல்ல போனால் ,இலங்கையில் இனவாத ,கடும் போக்காளர்கள் ஆட்சிக்கு முடிவு கட்ட படுகிறது ,இதுபோல மீள ஒரு போரை சிங்கள பவுத்த இனவாத தேசம் உருவாக்கிட முடியா நிலைக்கு தலைகீழ் அரசியல் நிகழ்வு வரும் காலங்களில் அரங்கேற போகின்றன

      55 வாது மனித உரிமை அவையில் இலங்கைக்கு கிட்ட தட்ட தூக்கு கயிறு ஏற்றப்படும் நிலைக்கு தள்ள பட்டு இருக்கும் என்பதே நமது கணிப்பகிறது

      மகிந்த கோத்தபாயா உள்ளிட்ட ஐம்பது இராணுவ தளபதிகளுக்கு இந்த தணடனை ,வழங்க படும் அவ்வாறு எனின் இலங்கை இராணுவத்திற்குள் பெரும் பிளவுகள்,உள்கட்சி மோதல்கள் வெடிக்க

      போகிறது , மேலும் அமெரிக்கா சார்பு நிலை உள்ள ஆட்சியாளர்களே இலங்கையில் நிலை பெறும் நிலை ஏற்படும் காலம் அமைய போகிறது ,அது தமிழர் தரப்பின் விடயத்தை கையாள புதிய

      நகர்வுகளை வழிகோலும் என்பதை முன்னே நாம் கணித்திருந்தோம் ,அதன் படியே நிகழ்வுகள் மாற்றம் பெற போகிறது ,அழுத தமிழா சிரி ,இனி சிங்களவன்அழும் காலம்,துரோகிகள் விழும் காலம் உருவாகிறது,

      கொன்றவன் கோட்டையில் கொடி நாட்டி ஆள்வதோ ..?அவன் ஆழ தமிழன் வேடிக்கை பார்ப்பதோ ..?என்னடா நீதி என்னடா நீதி ,இன்றே சொல்லடா பகை கொலைக்கு நீதி

      • வன்னி மைந்தன் –
        Posted in Uncategorized

        இலங்கைக்கு ஐநா இட்ட கட்டளை

        இலங்கைக்கு ஐநா இட்ட கட்டளை

        ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (unchr) இலங்கை தொடர்பில் மையப்படுத்தப்பட்ட அணியால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

        இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான இந்த பிரேரணை, பிரித்தானியாவினால் சமர்ப்பிக்கப்பட்டது கனடா,. ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் சார்பாகவே அந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

        46/1 என அடையாளம் காணப்பட்ட அந்த வரைவு பிரேரணை, நேற்றையதினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தனது தரப்பின் சார்பில் கருத்துகளை முன்வைத்த சீனா, பிரேரணை வாக்கெடுப்புக்கு விடுமாறு கோரிநின்றது.

        அதனடிப்படையில், பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்தன, எதிராக 11 நாடுகள் வாக்களித்தன, இந்தியா, ஜப்பான உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்துகொண்டன.

        அவர்களின் பிரேரணையில், 2012 ஆம் ஆண்டுமுதல் இலங்கையில் எடுக்கப்பட்ட நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை நடவடிக்கைகள் குறித்து வெகுவாக கவனம் செலுத்தப்பட்டது.

        பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க இலங்கை விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் அந்தப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

        இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் மாகாண சபை முறையைத் தொடர்வது குறித்தும்,

        கொரோனா தொற்றை அடுத்து மத சுதந்திரத்துக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டமை தொடர்பிலும் அந்தப் பிரேரணையின் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கை ஐநாவில் தப்பியதா – வைக்க பட்ட ஆப்பு

          இலங்கை ஐநாவில் தப்பியதா – வைக்க பட்ட ஆப்பு

          இலங்கை புரிந்த தமிழ் இன படுகொலை தொடர்பாக அந்த ஆட்சியர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி ,

          நீதி காணப்பட வேண்டும் என தமிழர் தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது ,ஆனால் மேற்குலகமும் இந்தியாவும் தமது நலனை முன் நிறுத்தி சதுரங்க ஆட்டத்தை நடத்தி வருகின்றனர்

          ஆளும் இலங்கை பவுத்த பேரினவாதிகளே தமிழர்களுக்கு தீர்வினை வழங்க வேண்டும் என்பதாக இந்த மொழிவில் கூற பட்டுள்ளது ,இது இலங்கைக்கு வழங்க பட்டுள்ள மேலும் ஒரு கால

          அவகாசமாக மாறியுள்ளது ,இவர்கள் நீதி வழங்கா விடின் ,கலப்பு நீதிமன்றம் ,அல்லது சர்வதேச நீதிமன்றில் நிறுத்த படுவார்கள் என சுட்டி காட்ட படுகிறது

          அப்படி என்றால் மீளவும் பந்தை அடித்து இலங்கையின் காலில் வழங்கியுள்ளது ஐநா,இப்பொழுது ஆடுகளத்தை இலங்கையே திறந்துள்ளது ,

          ஆட்டம் முறையாக ஆட தவறின் அது பெரும் நெருக்கடியில் இலங்கையை அழைத்து செல்லும் ,அதாவது விளங்க

          சொல்லின் ,மைதானம் இன்றி விளையாட்டுக்கு இலங்கை செல்வது போன்ற நிலை ஏற்படும் வாய்ப்புக்கள் என்பதே இந்த விளையாட்டின் மறுபக்க பார்வையாகும்

          ஏமாற்ற பட்டது தமிழர்கள் தான் ,ஆனால் தொடர்ந்து அந்த மக்களை ஏமாற்ற முடியாத நிலைக்கு செல்லும் நிலை ஏற்படும் ,

          அதற்கான அறவழி போராட்டங்கள் தொடர வேண்டிய நிலையில் தமிழர் தேசம் தள்ள பட்டுள்ளது என்பதே நிகழ்வின் நிகழ்வுகளாக உருமாற்றம் பெற்றுள்ளது

            Posted in Uncategorized

            இலங்கைக்கு எதிராக ஐநாவில் வாக்கெடுப்பு

            ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சில நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை மீதான வாக்கெடுப்பை நாளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

            அதனடிப்படையில், வாக்கெடுப்பு ஜெனீவா நேரத்தில் முற்பகல் 9 மணிக்கும்(இலங்கை நேரத்தின் பிராகரம் இன்று பிற்பகல் 1 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

            ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை, இன்றைய தினம் (22)

            இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான

            குறித்த யோசனை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ, மலாவி ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது

              Posted in Uncategorized

              ஐநாவில் தப்பிய இலங்கை – தமிழர்களுக்கு பெரும் இடி

              ஐநாவில் தப்பிய இலங்கை – தமிழர்களுக்கு பெரும் இடி

              ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான மிக காட்டமான அறிக்கை முன்வைக்க பட்டது ,

              ஆனால் தற்போது வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் ,குற்றங்கள் செய்தவர்கள் நாடுகளுக்கு செல்வதற்கான பயணத்தடை அவர்கள்

              சொத்துக்கள் மூடப்படுவதற்கான விதிக்க பட்ட தடைகள் அதில் இருந்து அகற்ற பட்டுள்ளன ,மேலும் போர் குற்றங்கள் புரிந்தவர்கள்

              தொடர்பிலான சர்வதேச விசாரணை என்ற நிலையும் அதில் இருந்து நீக்க பட்டுள்ளது

              குறித்த இரண்டு முக்கிய விடயங்கள் நீக்க பட்டு ,அவை மொட்டை கடதாசியாக அறிக்கை வெளியாகியுள்ளது ,தமிழர் தரப்புக்கு

              பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது ,இந்தியாவின் முக்கிய நகர்வின் காரணமாக இந்த விடயம் அதில் இருந்து நீக்க பட்டுள்ளதாக கருத படுகிறது

              Home » ஐநா » Page 2
              Posted in உலக செய்திகள்

              வட கொரியா எமை மிரட்டுகிறது – ஐநாவில் அமெரிக்கா கதறல்

              வட கொரியா எமை மிரட்டுகிறது – ஐநாவில் அமெரிக்கா கதறல்

              உலக நாடுகளை வடகொரியா மிரட்டி வருவதாகவும் ,அதன் எல்லை

              தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க வேண்டும் என அமெரிக்கா தூதர் ஐக்கிய நாடுகள் சபையில் முழங்கியுள்ளார்

              வடகொரியா தனது ஏவுகணை பலத்த தொடர்ந்து அதிகரித்து செல்வதால் நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவி

              வருகிறது ,இதனை தடுக்க வடகொரியா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது

              இதன் நகர்வுகள் விரைவில் ஆளும் பைடன் ஆட்சியும் வடகொரியா

              மீது நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயராகி வருவதை இதன் ஊடக அவதானிக்க முடிகிறது

              Home » ஐநா » Page 2
              Posted in Uncategorized

              இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள் ஐநாவில் பேச்சு

              இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள் ஐநாவில் பேச்சு

              இலங்கை அரச பயங்கரவாதம் புரிந்த தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக ஐக்கியா நாடுகள் மனித உரிமை பேரவையில் விவாதம்

              இடம்பெற்று வருகிறது ,இதில் ஆளும் அரசு புரிந்த படு கொலைகளுக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்க பட மக்கள்

              நின்மதியாக வாழும் வாழ்வுரிமை நிலைநாட்ட பட வேண்டும் என பிரிட்டன் ,அமெரிக்கா,ஐரோப்பிய யூனியன் ,கனடா ,ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் குரல் கொடுத்தன

              ஆனால் இதற்கு எதிராகவும் ,இலங்கைக்கு ஆதரவாகவும் ,வடகொரியா,,பாகிஸ்தான்,சிரியா,நேபாளம்

              ,மலேசியா,கியூபா,எகிப்த்,கொலம்பியா,வியட்நாம் ,பிலிப்பைன்ஸ்,ரசியா,எரித்திரியா ,உள்ளிட்ட நாடுகள் இயங்கின

              யார் பக்கமும் சர்ப்பினிற் இந்தியா ,ஜப்பான்,அவுஸ்ரேலியா உள்ளிட்டவை ,

              வெளியில் நின்றன ,இதே நிலைய இந்தியா தொடர்ந்தும் செய்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              ஐநா மனித உரிமை கூட்ட தொடர் இன்று ஆரம்பம் – நெருக்கடியில் இலங்கை

              ஐநா மனித உரிமை கூட்ட தொடர் இன்று ஆரம்பம் – நெருக்கடியில் இலங்கை

              ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்ட தொடர் இன்று ஆரம்பமாகிறது

              நாற்பத்தி ஆறாவது கூட்டத் தொடரில் இலங்கை புரிந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரேரணைகள் கடுமையான மொழிவுகளுடன் முன் வைக்க பட்டுள்ளன

              இந்த விடயத்தில் இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது ,இந்த கூட்ட தொடர் தமிழர்கள் எதிர்பார்க்கும்

              தீர்வினை பெற்று தருமா என்பதை முடிவில் தெரிய வரும் என தமிழர் தேசம் நம்புகிறது

              Home » ஐநா » Page 2
              Posted in இலங்கை செய்திகள்

              ஐ.நா பாதூப்பு சபையில்-பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டி வரை பேரணியின் கோரிக்கை

              பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டி- இலங்கை ஹிட்லர் கோட்டாவுக்கு வலை -தயராகும் சர்வதே நீதிமன்ற கூண்டு

              தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்குசிறிலங்காவை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற ‘பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டி வரை’ எழுச்சிப் பேரணியின்

              கோரிக்கை, ஐ.நா பாதுகாப்பு சபையில் நாடுகளுடையே முரண்பாட்டை தோற்றிவிக்கட்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

              தமிழர் தேசத்தின் பேரெழுச்சியாக அமைந்த ‘பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டி வரை’ எழுச்சிப் பேரணி, சிறிலங்காவை

              சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு உரமூட்டியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

              இது தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டிருந்த ஆங்கிலச் செய்தியறிக்கையில்,

              https://www.einpresswire.com/article/535441814/massive-tamil-p2p-rally-reinforces-call-for-referral-of-sri-lanka-to-international-criminal-court-icc-tgte

              Massive Tamil P2P Rally Reinforces Call For Referral of Sri Lanka To International Criminal Court (ICC) – TGTE
              “Walk for Justice for Tamils” took place from Pothuvil to Polikandy (P2P) in Sri Lanka from Feb. 3 rd to Feb. 7 th 2021. Tens of thousands of Tamils joined.
              www.einpresswire.com

              அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பும் முயற்சி நடந்தால் ஐநா பாதுகாப்புப் பேரவையில் அதனை சீனா (வீட்டோ) தடுப்பதிகாரத்தால் அதனை தடுத்து விடும் என்பதால்

              இத்தகைய முயற்சியால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்று சில வட்டாரங்களில் கருத்துகள் பேசப்படக் கேட்கிறோம். முதலாவதாக, தார்ஃபூர் தொடர்பாக சூடான் அனைத்துலக குற்றவியல்

              நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்ட போது, சீனத்துக்கு சூடானுடன் நல்ல வணிக உறவு இருந்த போதிலும் அது இம்முடிவை எதிர்க்கவில்லை என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ

              அரசாங்கம், சீனா தனது வீட்டோ தடுப்பதிகாரம் கொண்டு தடுத்தால் தடுக்கட்டும் என தெரிவித்துள்ளதோடு, ஐ.நா

              பாதுகாப்புப் சபையில் சிறிலங்கா தொடர்பில் கருத்து மோதல் வரட்டும் என இடித்துரைத்துள்ளது.

              சென்ற வாரம் மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பாகப் பாதுகாப்புப் பேரவையிலிருந்து ஒருமித்த அறிக்கை வர விடாமல் சீனம் மறித்து விட்டது. இதன் பொருள் மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு

              பன்னாட்டு அக்கறைக்குரியதாக இல்லாமற்போய் விட்டது என்பதன்று. இந்த அக்கறையை சீனத்தால் வழிமறிக்க முடியவில்லை. மேலும், மியான்மர் போன்ற நாடுகளில் சனநாயகம்

              மீள வேண்டும் என்ற அறைகூவலுக்கு சீனத்தின் செயல் உரமூட்டியுள்ளது. இதே போல், சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பும் முயற்சியை

              சீனம் வழிமறிக்குமானால் இருதரப்பாகவோ பலதரப்பாகவோ நடவடிக்கைகள் எடுக்க மற்ற நாடுகளின் முயற்சிகளுக்கு அது ஊக்கமாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

              தமிழர் தேசம் சமீபத்தில் காணாத பெருந்திரள் மக்கள் எழுச்சியாக அமைந்திருந்த இப்பேரணியின் முதன்மைக் கோரிக்கைகளில்

              ஒன்றாக இது அமைந்திருந்ததோடு, முஸ்லிம் சமூகத்தினர், சிவில் அமைப்பினர் ஆகியோரது பங்களிப்பும் இந்த எழுச்சிக்கு வலுவூட்டியிருந்தது.

              ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் மிசேல் பசலே அம்மையார் அவர்கள், வெளியிட்டிருந்தn அறிக்கையில், சிறிலங்கா நிலைமையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின்

              பார்வைக்கு அனுப்பும் படி ஐ.நா மனிதவுரிமைப் பேரவை உறுப்பு நாடுகளை அவர் வலியுறுத்தியிருந்தார்.
              தமிழத் தாயகக் கட்சிகள், சமய அமைப்புகள், சிவில் சமூகம்,

              குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கம் ஆகியவையும் கூட சனவரி 15ஆம் நாள்

              ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு எழுதிய கூட்டு மடலில், சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறு கோரியிருந்தன.

              2015ம் ஆண்டு, உலகமெங்கும் இருந்து 15 இலட்சத்துக்கு மேற்பட்டோர் (சிறிலங்காவில் 70 ஆயிரம் பேர்) ‘சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புக!’

              என்னும் விண்ணப்பத்தில் கையொப்பமிட்டிருந்தனா. சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறு, பன்னாட்டுச் சட்டவாளர் ஆணையமும்

              2019ம் ஆண்டு கோரியிருந்தது.
              கடந்த காலத்திய சிறிலங்கா ஜனாதிபதி ஆணையங்கள் உள்ளிட்ட, உள்நாட்டுப் பொறிமுறைகள் முழுத் தோல்வியை

              தளுவியுள்ளமையினை ஆவணப்படுத்தியுள்ளது என ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் சிறிலங்கா தொடர்பில்

              நடத்திய புலனாய்வு (ழுஐளுடு) பொறுப்புக்கூறலுக்கான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

              ‘குறிப்பாகப் பன்னாட்டுக் குற்றங்களுக்கு‘ உள்நாட்டுக் குற்றவியல் நீதிப் பொறிமுறையில் நீதியைத் தடுக்க ஆழ வேரூன்றிய தடைக்கற்கள் இருப்பதை ஆய்வு செய்துள்ளது.

              ஐ.நா ஆணையாளரது 2020ம் ஆண்டு பிப்ரவரி அறிக்கையில் ‘இன்னுமொரு விசாரணை ஆணையத்தை நியமிப்பது

              பொறுப்புக்கூறலை முன்னெடுக்கும் என்று நான் நம்பவில்லை‘ என தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

              Posted in இலங்கை செய்திகள்

              ஐநாவில் இலங்கைக்கு பிரிட்டன் ஆப்பு -கிளறப்படும் மகிந்த தமிழ் இன அழிப்பு

              ஐநாவில் இலங்கைக்கு பிரிட்டன் ஆப்பு -கிளறப்படும் மகிந்த தமிழ் இன அழிப்பு

              இலங்கையில் மகிந்த அரசினால் மேற்கொள்ள பட்ட தமிழ் இன அழிப்பு

              தொடர்பில் இலங்கை அரசுகள் இதுவரை எவ்வித பொறுப்புக் கூறலையும்

              செய்திடாது காலம் கழித்து வந்த நிலையில் தற்போது இடம்பெறும் 46 ஆவது

              கூட்ட தொடரில் இலங்கை தொடரப்பிலான பொறுப்புக் கூறல் ,மற்றும்

              அதன் செயல்பாடுகள் குறித்து விரகத்தியடைந்துள்ள மனித உரிமை

              ஆணையம் சர்வதேச நீதிமன்றில் , இலங்கையை பார ப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டது

              இத்தகைமையை பிரிட்டனும் அந்த கோரிக்கையை ஆமோதித்து நடவடிகை

              மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது
              இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

              தமிழ் இனக் கொலையாளிகளே இலங்கையில் தற்போது ஆட்சி புரிந்து

              வருகின்றனர் ,இதனை மையப்படுத்தி சர்வதேசம் தீர்வு நோக்கி நகர்ந்து செல்கின்றமை கவனிக்க தக்கது

              Posted in Uncategorized

              இலங்கைக்கு எதிரான ஐநா அறிக்கையை நிராகரிக்க கோட்டா அரசு தீர்மானம்.

              இலங்கைக்கு எதிரான ஐநா அறிக்கையை நிராகரிக்க கோட்டா

              அரசு தீர்மானம்.

              ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில்

              சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான அறிக்கையை

              அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக

              அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

              Posted in இலங்கை செய்திகள்

              சர்வதேச நீதிமன்றில் இலங்கை – ஐநா அதிரடி அறிவிப்பு

              சர்வதேச நீதிமன்றில் இலங்கை – ஐநா அதிரடி அறிவிப்பு

              மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள்

              விதிக்கப்படலாம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

              ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட்

              வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

              இதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை

              செய்யப்பட்டுள்ளது. அத்துடன், யுத்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை பெறுவதற்கான சர்வதேச பொறிமுறையொன்று குறித்தும் பரிந்துரை செய்துள்ளார்.

              இந்நிலையில், ஆதாரங்கள் எவையும் நிருப்பிக்கப்படாதவர்களிற்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என

              தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே அவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

              “அவசியமற்ற சில விடயங்கள் அந்த அறிக்கையில் இந்த தருணத்தில் காணப்படுவதாக நாங்கள் கருதுகின்றோம்

              எங்களுக்கு அவதூறு கற்பிக்கமுனையும் நாடுகள் சிலவற்றை விட இலங்கையர்களான நாங்கள் அமைதியாகவும் ஸ்திரதன்மை

              மிக்கவர்களாகவும் காணப்படுகின்றோம்” என்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

              முன்னைய அறிக்கைகளை விட இந்த அறிக்கை மோசமானது இலங்கையில் ஆபத்தான போக்கு தென்படுகின்றது எனவும்

              அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஜயனத் கொலம்பகே, அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தீர்மானித்ததும் அதனை பகிரங்கப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

              Posted in இலங்கை செய்திகள்

              மகிந்த,கோட்டாவை தூக்கில் போடுக ஐநாவிடம் சம்பந்தர்,கூட்டணி வேண்டுதல்

              ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, நான்கு அம்சங்களை உள்ளடக்கி, தமிழ் மக்கள் சார்பாக கோரிக்கைக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நேற்று (17) திகதியிடப்பட்ட அந்தக்

              கடிதத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ சி.வி. விக்னேஸ்வரன்

              ஆகியோரும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அடங்கலாக 11 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

              ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில், தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு கோரல்’ எனத் தலைப்பிட்டுள்ள அக்கடிதத்தின் பிரதிகள் ஐக்கிய நாடுகள்

              மனித உரிமைப் பேரவையின் 47 உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

              இலங்கையின் நிலைமை குறித்து ஆராயப்படவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடருக்கு

              ஆயத்தமாகும் இவ்வேளையில், இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள், தமிழ்த் தேசிய கட்சிகளின்

              தலைவர்கள், பாதிக்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள், தமிழ் சிவில் அமைப்புகள் ஆகிய நாம் இக்கடிதத்தை எழுதுகின்றோம்.

              ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானங்களில் இலங்கை அரசாங்கம் உறுதிமொழி கொடுத்த விடயங்கள் சம்பந்தமாக ஆராய்வதற்காகக் கூடுகையில், இவ்வாறான முடிவெடுத்து இறுதித்

              தீர்மானமொன்றை நிறைவேற்ற வேண்டும். இத்தீர்மானமானது, இனப்பிரச்சினையால் ஏற்பட்ட ஆயுதப் போராட்டத்தின் போது,

              இழைக்கப்பட்ட இனப் படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்கும்.


              பொறுப்பிலிருந்து இலங்கை தவறிவிட்டதென்றும், இதை ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ, கலப்புப் பொறிமுறை

              மூலமாகவோ இலங்கை செய்யும் என்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்.

              ஆகையால்,
              1) இலங்கையை இனப்படுகொலை,மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும் வேறு

              பொருத்தமானதும் செயற்படுத்தக் கூடியதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான

              நடவடிக்கைகளை ஐ.நா பொதுச் சபை, ஐ.நா. பாதுகாப்புச் சபை போன்றவை எடுக்க வேண்டுமென்று, இப்புதிய தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

              2) ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தலைவர், இவ்விடயத்தை மேலே கூறப்பட்டபடி நடவடிக்கைக்காக மீளவும் செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


              3) ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலகம், இலங்கையில் தொடர்ந்து நடைபெறுகிற மீறுதல்களைக்

              கண்காணிக்கவும் இலங்கையில் அவ்வலுவலகம் ஒன்றை ஸ்தாபித்தல் வேண்டும்.

              4) மேலே ‘1’ இல் கூறியதற்குப் பங்கமில்லாமல் ஐ.நா பொதுச் சபையின் உப பிரிவாக, சிரியா சம்பந்தமாக உருவாக்கப்பட்ட சாட்சிகளைச் சேகரிக்கிற பொறிமுறை போன்றதொன்றை

              (ஐஐஐஆ) கடுமையான 12 மாத அவகாச நிபந்தனையோடு ஏற்படுத்துதல் வேண்டும்.


              ‘பொறுப்புக்கூறல் சம்பந்தமாக பலமான நடவடிக்கை எடுப்பதற்காக உயரிய தளங்களுக்கு இவ்விடயம் கொண்டு

              செல்லப்படல் வேண்டும் என்பதை நாம் மீளவும் வலியுறுத்துகிறோம்.

              ஆகையால்,இதுவரைக்கும் நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தீர்க்கமாகவும் காலம் கடத்தாமலும் நடவடிக்கை எடுக்குமாறு நாம் உறுப்பு நாடுகளுக்கு

              வலியுறுத்துகிறோம்’ என்று அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

              Posted in இலங்கை செய்திகள்

              உள்நாட்டு விவகாரங்களில் தலையிட கூடாது – மிரட்டும் கோட்டா -மிரளுமா ஐநா..?

              உள்நாட்டு விவகாரங்களில் தலையிட கூடாது – மிரட்டும் கோட்டா -மிரளுமா ஐநா..?

              ஏனைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை உரிய

              முக்கியத்துவம் கொடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

              நேற்று (21) இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் உயர் மட்டக் கூட்டத்தில் வீடியோ

              தொழிநுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

              ‘உலகம் ஒரு பொதுவானதும் நிகரற்றதுமான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில், ‘எமக்குத் தேவைப்படும் ஐக்கிய நாடுகள் சபை’, என்ற சுலோகம் நாடுகளின் இறையாண்மை

              சமத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் ஆள்புல ஒருமைப்பாட்டினை மதித்து அவர்களின் உள்நாட்டு

              விவகாரங்களில் தலையிடாதிருக்கும் என்றும் தான் நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

              ஒரு சிலரின் நலன்களுக்காக எந்த ஒரு நாட்டையும் பிணையாக வைத்திருக்காததன் மூலம் உறுப்பு நாடுகளுக்கும் ஐ.நா.வுக்கும்

              இடையிலான கூட்டாண்மயை மிகச் சிறந்த முறையில் பேண முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

              ஐ.நா. தனது 75 ஆவது ஆண்டு நிறைவை ஐ.நா. பொதுச் சபையின் ஒரு நாள் உயர்மட்டக் கூட்டத்துடன் 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் 21 திங்கட்கிழமையன்று பன்முகத்தன்மைக்கான கூட்டு

              உறுதிப்பாட்டை மீள் உறுதிப்படுத்தும் வகையில் ‘நாம் விரும்பும் எதிர்காலம்இ எமக்குத் தேவையான ஐக்கிய நாடுகள் சபை’ என்ற

              கருப்பொருளின் கீழ் கொண்டாடுவதாக ஐ.நா. உறுப்பு நாடுகள் 2019 ஜூன் மாதம் இணக்கம் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

              பொதுச் சபையின் 75 வது அமர்வின் தலைவர் வோல்கன் போஸ்கிர் மற்றும் ஐ நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் ஆகியோர் இக்கூட்டத்தின் ஆரம்ப மற்றும் இரண்டாவது உரைகளை

              நிகழ்த்தினர். 180 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக மாநாட்டில் உரைகளை நிகழ்த்தினர்.

              ‘முன்னெப்போதுமில்லாத வகையில் கொவிட்-19 தொற்றுநோயால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது, இது நமது பொருளாதாரங்கள்

              , சுகாதார அமைப்புகள் மற்றும் உண்மையில் நமது சமூகங்களை ஒரு சில மாதங்களுக்குள் பெரிதும் பாதித்துள்ளது’ என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

              ஒரு செயற்திறமான தலையீட்டின் மூலம் கொவிட்-19 இன் சவாலை இலங்கைக்கு வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது. இலங்கையில் முதல் நோயாளி கண்டறியப்படுவதற்கு முன்பே கொவிட்-19 ஐ

              தடுப்பதற்கான தேசிய நடவடிக்கைக் குழுவை நாங்கள் அமைத்தோம். இராணுவம், சுகாதாரத் துறை மற்றும் தேசிய மற்றும்

              பிராந்திய மட்டங்களில் உள்ள சிவில் அதிகாரிகளை அக்குழு உள்ளடக்கியிருந்தது.

              இலங்கையில் கொவிட்-19 நோயில் இருந்து மீளும் வீதம் உலகளாவிய மீட்பு வீதத்தை விட 90மூ அதிகமாக உள்ளது. எமது மிகப் பெரிய பலமாக இருந்த ‘தடமறிதல் மற்றும்

              தனிமைப்படுத்தலை’ நாம் சார்ந்திருந்தமை எமது வெற்றிக்கு பெரிதும் உதவியது என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். கடந்த ஒரு மாத காலப்பகுதியில் நாட்டில் கொவிட்

              நோய்த்தொற்றுக்கு ஆளான எந்வொருவரும் கண்டறியப்படவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

              ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்தவர்கள் என்ற வகையில் இந்த மாபெரும் நிறுவனத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் நாங்கள்

              விரும்பும் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

              ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் அரச தலைவர்களின் உயர் மட்ட கூட்டத்தில் வீடியோ

              தொழில்நுட்பத்தின் மூலம் பங்கேற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய முழுமையான உரை.

              பொதுச் சபையின் 75 வது கூட்டத்தொடரின் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. வோல்கன் பொஸ்கர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். இந்த வரலாற்று

              சிறப்புமிக்க தருணத்தில் இலங்கை மக்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கு கிடைத்தமை எனக்கு கிடைத்த மாபெரும் கௌரவமாகும்.

              துரதிஷ்டவசமாக இ 75 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கெளரவமான சபையை ஆரம்பித்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாற்றமானதாகவே இன்றைய உலகம் காணப்படுகின்றது.

              ஒரு சில மாதங்களுக்குள் எமது பொருளாதாரம், சுகாதார கட்டமைப்பு மற்றும் முழுமையாக எமது சமூக செயற்பாடுகளை

              இடை நிறுத்திய, முன்னர் எப்போதும் இருக்காத கொவிட் – 19 நோய்த்தொற்றினால் முழு உலகும் பாதிக்கப்பட்டுள்ளது.

              அறிவார்ந்த செயற்பாடுகளின் மூலம் கொவிட் – 19 சவாலுக்கு வெற்றிகரமாக இலங்கை முகங்கொடுத்தது. இலங்கையில் முதலாவது நோயாளியை இனங்காண்பதற்கு முன்னராகவே நாம்

              கொவிட் – 19 தேசிய நிவாரண செயற்பாட்டுக் குழுவை ஸ்தாபித்தோம். பாதுகாப்பு தரப்பினர், சுகாதார, தேசிய மற்றும்

              பிரதேச மட்டத்தில் சிவில் அதிகாரிகள் அனைவரையும் உள்ளடக்கிய வகையிலேயே எமது முன்னெடுப்புகள் அமைந்திருந்தன.

              இலங்கையில் கொவிட் – 19 நோயாளிகள் சுகம் அடையும் வீதம் நூற்றுக்கு 90 ஐ விடவும் அதிகமாக உள்ளதுடன் அது உலகின் சுகம் அடையும் வீதத்தின் உயர் நிலையாகும். எமது பலமான சக்தியாக

              அமைந்த ‘தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தல்’ என்பதே எமது வெற்றிக்கான காரணங்களாகும். கடந்த ஒரு மாத காலத்தில்

              எந்தவொரு கொரோனா தொற்றுக்குள்ளானவரும் நாட்டினுள் இனங்காணப்படவில்லை.

              கௌரவ அரச தலைவர்களே,

              பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை 2030 இல் அடைந்துகொள்வதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன்

              செயற்படுகின்றது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் வறுமையை ஒழிப்பது எனது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

              நாம் வருடத்தின் ஆரம்பத்தில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்காக எடுத்த பல்வேறு நடவடிக்கைகளான இறக்குமதியை கட்டுப்படுத்தல் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர

              தொழிற்முயற்சியாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதன் மூலம் எதிர்பார்த்த பிரதிபலன்களை அடைந்துகொள்ள முடிந்துள்ளது.

              இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்று 65 ஆண்டுகளை கொண்டாடுகின்ற இச்சந்தர்ப்பத்தில், நாம் ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி நிரலுக்கு பங்களிக்க கிடைத்தமையை ஒரு

              பாக்கியமாக கருதுகின்றோம். இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையினருடன் இணைந்து செயற்பட்டதோடு சபையின் பலவேறு விசேட நிறுவன திட்டங்களுக்கும் பங்களித்துள்ளது.

              ‘உலகம் ஒரு பொதுவானதும் நிகரற்றதுமான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில்இ ‘எமக்குத் தேவைப்படும் ஐக்கிய நாடுகள் சபை’, என்ற சுலோகம் நாடுகளின் இறையாண்மை

              சமத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் ஆள்புல ஒருமைப்பாட்டினை மதித்து அவர்களின் உள்நாட்டு

              விவகாரங்களில் தலையிடாதிருப்பதற்கும் உரிய கவனம் செலுத்தும் என்று நான் நம்புகின்றேன்.

              கௌரவ அதிதிகளே, ஒரு சிலரின் தேவைக்கு எந்தவொரு நாட்டையும் பணயக் கைதியாக்காமல் இருப்பதன் மூலமே அங்கத்துவ நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு

              இடையிலான பங்களிப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மேலாண்மையையும் நிலைத்தன்மையையும் இயன்றளவு

              அடைந்துகொள்ள முடியுமாக இருக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.

              ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடான இலங்கை எமக்கு அவசியமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக இந்த

              சிறப்புமிக்க அமைப்பை பலப்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றியளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது.

              எமது மக்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் அதன் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.