Posted in இலங்கை செய்திகள்

ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.455 ரக விமானத்தில் அவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான

நிலையத்தை வந்தடைந்தனர். ஜப்பானுக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த இலங்கையர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      காவல்துறை உயரதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்

      காவல்துறை உயரதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்

      பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் சிலர் இடமாற்றப்பட்டுள்ளனர்.

      சேவைத் தேவையின் அடிப்படையில் தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

      அதன்படி, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்

      எஸ்.சி.மெதவத்த பொலிஸ் நலன்புரி பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

      குறித்த பணியகத்தின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பதில் பிரதி பொலிஸ்மா அதிபர் ஜீ.கே.ஜே அபொன்சு

      நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

      மேல் மாகாண வடக்கு பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக பதில் பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.பி.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளா

          Posted in இலங்கை செய்திகள்

          றம்புட்டானால் பறிபோன குழந்தையின் உயிர்

          றம்புட்டானால் பறிபோன குழந்தையின் உயிர்

          கொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது.

          குழந்தை சிகிச்சைக்காக தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

          வைத்தியசாலையில் உரிய சிகிச்சை பெற்றுக் கொடுக்கப்படவில்லை என தெரிவித்து குழந்தையின் உறவினர்கள்

          வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் அதன் சொத்துக்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

          சம்பவத்தில் காயமடைந்த ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின்

          சொத்துகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

          இந்நிலையில், வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் சொத்துக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு

          தெரிவித்து அதன் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

          இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான பணிப்புறக்கணிப்பு நாளை (04) காலை 8 மணி வரையில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில்,

          குறித்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் மேற்கொள்ளப்படும் என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

          எவ்வாறாயினும், குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

              Posted in இலங்கை செய்திகள்

              கிராமங்களை கட்டியெழுப்ப, வங்கிகளை கிராமத்திற்கு கொண்டு செல்லுங்கள்- கோட்டா உத்தரவு

              கிராமங்களை கட்டியெழுப்ப, வங்கிகளை கிராமத்திற்கு கொண்டு செல்லுங்கள்- கோட்டா உத்தரவு

              கிராமங்களை கட்டியெழுப்ப வேண்டுமாயின் கிராமங்களின் பொருளாதாரம் மற்றும் மக்களின் தேவைகளை

              அடையாளம்கண்டு வங்கிச் சேவைகளை செயற்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

              வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து தொழிற்சாலைகளை ஆரம்பிக்கும் வரை இருக்காமல் ஏற்றுமதி விவசாயத்தை அபிவிருத்தி செய்வது காலத்தின் தேவையாகுமென்று ஜனாதிபதி

              அவர்கள் குறிப்பிட்டார். கைத்தொழில்கள் உருவாவது மட்டும் அபிவிருத்தி ஆகாதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள்,

              விவசாயத்தை மையப்படுத்தி கிராமிய தொழில்முயற்சிகளை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

              பிரதேச அபிவிருத்தி வங்கியின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இன்று (02) பிற்பகல்

              ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

              தேவையை மிகச் சரியாக அடையாளம் கண்டு விவசாயத்தை முன்னேற்றுவதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியை அடைவது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்காக பொருளாதாரத்தை

              கட்டியெழுப்பும் வழிமுறை குறித்து கீழ் மட்டத்திலிருந்து கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

              வணிக வங்கிகள் கடன்களை வழங்கும்போது உற்பத்தித்துறையை விடவும் வணிக பிரிவுக்கு அதிக கவனம் செலுத்துகின்றனர்.

              பாராம்பரியங்களுக்குள் மட்டுப்பட்டிருக்காது விவசாயிகளை உற்பத்திக்கு ஊக்குவிப்பது பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொறுப்பாகுமென்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

              விவசாய உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு இடமளிக்காது உழுந்து, குரக்கன், பயறு உட்பட தானிய வகைகளை பயிரிடுவதற்கு ஊக்குவிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள்

              சுட்டிக்காட்டினார். அந்தந்த பிரதேசங்களுக்கு இலக்குகளை வழங்கி விவசாயிகளை ஊக்குவிப்பதற்கு அவசியமான

              ஒத்துழைப்பை வழங்குவதே வங்கியை கிராமத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் தான் எதிர்பார்க்கும் இலக்காகும் என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

              நீண்டகாலமாக தவணைக்கொடுப்பனவின் அடிப்படையில் பாரியளவு கடன்களைப் பெற்றுக்கொண்டு திருப்பிச்

              செலுத்தாதவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அரச வங்கிகள்

              வசூலிக்க வேண்டிய கடன்களை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.

              ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர்

              டப்ளியு.டி.லக்ஷ்மன், பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஹிந்த சாலிய, பொது முகாமையாளர் டி.குகன் உள்ளிட்ட

              பணிப்பளார் சபையின் அங்கத்தவர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  ஒடுசுட்டான் தொழிற்சாலையில் தயாரிப்பு நடவடிக்கைகள மீள ஆரம்பம்

                  ஒடுசுட்டான் தொழிற்சாலையில் தயாரிப்பு நடவடிக்கைகள மீள ஆரம்பம்

                  ஒட்டுசுட்டான் செங்கல் மற்றும் ஓடு தொழிற்சாலையின் தயாரிப்பு நடவடிக்கைகளை தனியார் நிறவனத்தின் ஒத்துழைப்பின்றி மீள ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

                  தனிப்பட்ட முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பின்றி இந்த தொழிற்சாலையின் தயாரிப்பு நடவடிக்கைகளை லங்கா பீங்கான்

                  கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

                  இது தொடர்பாக 2020.07.01 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

                  1. இலங்கை மட்பாண்ட (பீங்கான்) கூட்டுத்தாபன மறுசீரமைப்பின் கீழ் ஒட்டுசுட்டான் தொழிற்சாலையில் உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் திட்டம்

                  2. வரையறுக்கப்பட்ட சம்சன் ரஜரட்ட டைல்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் இணைந்து இலங்கை மட்பாண்ட (பீங்கான்); கூட்டுத்தாபனத்தின் கீழ் நடத்தப்படும் ஒட்டுசுட்டான் செங்கல்
                  3. மற்றும் ஓடு தொழிற்சாலையின் தயாரிப்பு நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம்
                  4. திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது. இருப்பினும் இதுவரையில் இலங்கை மட்பாண்ட (பீங்கான்) கூட்டுத்தாபனத்தினால் இந்த
                  5. தொழிற்சாலையை மீள ஆரம்பிக்கும் நோக்கில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் தனியார் நிறவனத்தின் ஒத்துழைப்பின்றி தயாரிப்பு நடவடிக்கைகளை
                  6. ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக தனிப்பட்ட முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பின்றி இந்த
                  7. தொழிற்சாலை தயாரிப்பு நடவடிக்கைகள் லங்கா பீங்கான் கூட்டுத்தாபனத்தினாலேயே மேற்கொள்வதற்காக
                  8. கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவம் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகம் மற்றும்
                  9. தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
                      Posted in இலங்கை செய்திகள்

                      சிகிரியா – சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்காக திறப்பு

                      சிகிரியா – சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்காக திறப்பு

                      கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த சிகிரியா 3

                      மாதத்திற்கு பின்னர் உள்ளூர் சுற்றுலாப்பயணிகளுக்காக மீண்டும்

                      திறக்கப்பட்டுள்ளது.

                      சிகிரியா தொல் பொருள் பிரிவு மற்றும் சிகிரியா பவ்வ முதலானவற்றை

                      பார்வையிட முடியும் என்று மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளது.

                      நேற்றைய தினம் உள்நாட்டு வெளிநாட்டு பயணிகளின் வருகை மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது.

                      இருப்பினும் நீண்ட தூரம் இருந்து உள்ளூர் சுற்றுலாப்பயணிகள் வருகை

                      தந்தமையை காணக்கூடியதாக இருந்ததாகவும் எமது உள்ளூர் ஊடகவியலாளர் தெரிவித்தார்

                          Posted in இலங்கை செய்திகள்

                          கலைஞர்களை பாதுகாக்க உதவுவதாக ஜனாதிபதி உறுதியளிப்பு

                          கலைஞர்களை பாதுகாக்க உதவுவதாக ஜனாதிபதி உறுதியளிப்பு

                          கொவிட் நோய்த்தொற்றை ஒழித்து உலக நிலைமைகள் சீராகும் வரை பார்த்திராது கலைஞர்களை தேசிய பொருளாதாரத்துடன்

                          இணைத்து பாதுகாப்பதற்கு உதவுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

                          மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் பல சந்தர்ப்பங்களில் கலைஞர்கள் அவ்வாறு

                          இணைத்துக்கொள்ளப்பட்டார்கள். அதன் மூலம் அனைத்து மட்டங்களிலும் கலைஞர்களுக்கு தமது படைப்பு ரீதியான

                          பங்களிப்பை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

                          கடந்த காலத்திலும் கொவிட் நோய்த்தொற்றின் காரணமாகவும் இழந்த சந்தர்ப்பங்களை மீண்டும் உருவாக்குவதற்கான பின்புலத்தை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

                          கலைஞர்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் பற்றி நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது பற்றி தெரிவிக்கப்பட்டது.

                          9ஆம் வகுப்பில் நிறுத்தப்படும் அழகியல் பாடத்தை க.பொ.த சாதாரண தரம் வரை பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் முதியன்சே திசாநாயக்க

                          சுட்டிக்காட்டினார். இந்த முன்மொழிவை தேசிய கல்விக்கொள்கைக்கான செயலணிக்கு சமர்ப்பிப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

                          உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைத் தொகை கிடைக்கப்பெறாமைக்கான காரணங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சர்வதேச

                          ரீதியாக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை இதன் காரணமாக நாடு இழந்துள்ளது. இலத்திரனியல் ஊடகங்களினூடாக ஒளிபரப்பப்படும் பாடல்களுக்கும் உரிமைத்

                          தொகை கிடைக்கப்பெறாமை குறித்து கலைஞர்கள் ஜனாதிபதி அவர்களிடம் குறிப்பிட்டனர். இதுபற்றி அரச மட்டத்தில் நடவடிக்கை

                          எடுத்த தயாரிப்பாளர்களின் உரிமையை பாதுகாப்பதாக ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் தெரிவித்தனர்.

                          கலைஞர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் கடன் தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட

                          நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், அரச வங்கிகளின் ஊடாக அது உரிய முறையில் இடம்பெறாமை கவலைக்குரியதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

                          வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்களுக்கு வரித் தொகையை அறவிட்டு அதனை கலைஞர்களின் நன்மைக்கு பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கலைஞர்கள் சுட்டிக்காட்டினர்

                          . வெளிநாட்டு திரைபடங்களை நாட்டில் படமாக்குவதற்கு சந்தர்ப்பங்களை வழங்கி அந்நியச் செலாவணியை சம்பாதிப்பதற்காக முன்வைக்கப்பட்ட முன்மொழிவை

                          நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து ஆராய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. கிராமிய கலைஞர்கள் மாகாண மற்றும்

                          பிரதேச மட்டத்தில் ஒழுங்குபடுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

                          பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் திரைப்பட இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட

                          கலைத்துறையின் பல்வேறு தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தி கலைஞர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              கைவிடப்பட்ட பயிர்ச்செய்கை காணியில் சிவில் படையினர் பயிர்ச்செய்கை.

                              கைவிடப்பட்ட பயிர்ச்செய்கை காணியில் சிவில் படையினர் பயிர்ச்செய்கை.

                              கொழும்பு மாவட்டத்தில் கைவிடப்பட்ட நெற்செய்கை காணியில் பயிற்சியை மேற்கொள்ளும் திட்டத்தின் கீழ் ஹங்வெல்ல,

                              வெலிகண்ண பிரதேசத்தில் கைவிடப்பட்ட சிவில் பாதுகாப்பு படையினர் பயிர்ச் செய்கையை ஆரம்பித்துள்ளதாக சிவில்

                              பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

                              நாட்டில் கைவிடப்பட்ட பயிர்ச்செய்கை காணிகளில் மீள மேற்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்து

                              திட்டத்துக்கு அமைய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

                              சீதாவாக்கை பிரதேச செயலாளர் மற்றும் பிராந்திய விவசாய அதிகாரிகளுடன் இணைந்து சிவில் பாதுகாப்புப் படையினர்

                              திட்டத்தை முன்னெடுத்து வருவதாக சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

                              நாட்டில் விவசாய உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த பொருட்களைத் தயாரிப்பதற்கு சிவில் பாதுகாப்புப் படையினரால் அளிக்கப்பட்டு

                              வரும் பங்களிப்பை பாராட்டிய சீதாவாக்கை பிரதேச செயலாளர் கே.எஸ். தில்ஹானி ‘ நாட்டில் விவசாய உற்பத்தியில் நிலைபேறான

                              தன்மை அடைவதற்கு சிவில் பாதுகாப்பு படையினரின் பங்களிப்பு அவசியமான ஒன்று என அவர் தெரிவித்தார்.

                              வெலிகண்ன, லஹிருகம இப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தில் 5 ஏக்கர் பயிர்ச்செய்கை காணி உழுது

                              பயிரிடப்பட்ட உள்ளதாக சிவில் பாதுகாப்புப் படை ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நிலந்த ரணசிங்க தெரிவித்தார்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  வடக்கு வீதி இணைப்புத் திட்ட கடன் தொகைக்கான காலம் நீடிப்பு

                                  வடக்கு வீதி இணைப்புத் திட்ட கடன் தொகைக்கான காலம் நீடிப்பு

                                  ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வடக்கு வீதி இணைப்புத் திட்ட நிர்மாணப் பணிகளுக்கான கடன் தொகை செல்லுபடியான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

                                  இக் கடன் தொகைக்கான காலம் 2020 ஜுன் மாதம் 30 ஆம் திகதியாக இருந்த நிலையில் 2020 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

                                  இது தொடர்பான அமைச்சரவை தீர்மனம் பின்வருமாறு:

                                  1. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் வடக்கு வீதியுடன் தொடர்புபட்ட திட்டத்திற்கான கடன் தொகைக்கான கால எல்லையை நீடித்தல்

                                  2. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் வடக்கு வீதி இணைப்புத் திட்டத்தின் கீழ் தேசிய
                                  3. பெருந்தெருக்கள் மற்றும் மாகாண வீதி புனரமைப்பு மற்றும் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் தெரிவு
                                  4. செய்யப்பட்ட பாலங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு
                                  5. வருகின்றன. இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 98 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றன. கடன் தொகையில் எஞ்சும் தொகைகளில் மதவாச்சி –
                                  6. ஹொரவப்பத்தான வீதியின் மேலதிக ஒப்பந்த பொதி 02, 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த
                                  7. நிர்மாணப் பணிகளுக்கான கடன் நிதி செல்லுபடியான காலம் 2020 ஜுன் மாதம் 30 ஆம் திகதியாகும். இதற்கு முன்னர்
                                  8. இதனை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு செய்ய முடியாமல் போனது. இதற்கமைவாக
                                  9. சம்பந்தப்பட்ட கடன் தொகைக்கான காலத்தை 2020 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிப்பதற்காக வீதி மற்றும்
                                  10. பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
                                      செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      வவுனியாவில் வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

                                      வவுனியாவில் வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

                                      வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அண்மித்த

                                      பகுதியிலிலுள்ள வீடோன்றிலிருந்து இன்று (02) காலை இளைஞரின்

                                      சடலமொன்றினை வவுனியா பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

                                      வீட்டின் இரவு நித்திரைக்கு சென்ற இளைஞனை காலை தயார் எழுப்பிய சமயத்தில் இளைஞன் உயிரிழந்த நிலையில்

                                      காணப்பட்டுள்ளார். இதனையடுத்து தயார் அயலவர்களுக்கு தகவலை

                                      வழங்கியதினையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

                                      சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் இளைஞரின் மரணம்

                                      தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                                      27 வயதுடைய ராஜேந்திரன் விமலராஜ் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          2020.07.01 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு

                                          2020.07.01 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

                                          01. கொவிட் 19 தொற்றின் போது உடனடியாக பதிலளிப்பதன் ஆரம்ப ஒத்துழைப்பாக இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த கடன், மானியங்கள் மற்றும் பொருட்கள் ரீதியிலான உதவி

                                          கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அமைவாக மேற்கொள்ளப்படவேண்டிய அடிப்படை நடவடிக்கைகளுக்காக பல நாடுகள் சர்வதேச அமைப்புக்களினால் இலங்கை அரசாங்கத்திற்கு கடன் மானியங்கள் மற்றும் பொருட்கள் உதவி என்ற ரீதியில் 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வழங்கப்பட்டிருந்த பங்களிப்புக்கள் தொடர்பாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

                                          இதற்கமைவாக, உலக வங்கியினால் இலங்கையில் ஏற்பட்ட COVID 19 இன் உடனடித்தேவைக்காக பதிலளித்தல் மற்றும் சுகாதார கட்டமைப்பை ஏற்பாடு செய்யும் திட்டத்திற்காக 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வலைப்பின்னல் திட்டத்தின் கீழ் 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                          Covid 19 அவசர தேவைக்கு பதிலளித்தல் மற்றும் சுகாதார கட்டமைப்பை ஏற்பாடு செய்யும் திட்டத்தின் கீழ் உடன்பட்டுள்ள தொகையில் 57.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வலைப்பின்னல் திட்டத்தின் கீழ் உடன்பட்ட மொத்த நிதியான 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதுவரையில் நாட்டிற்கு கிடைத்திருப்பது தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியது.

                                          இதற்கு மேலதிகமாக சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மானியங்கள் மற்றும் அண்ணளவாக சுமார் 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்கள் மேலே குறிப்பிட்ட தினம் வரையில் இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்திருப்பதையும் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டது.

                                          02. மத்திய கலாசார நிதியத்தின் ஊழியர்களுக்கான சம்பளத்தை செலுத்துவதற்கான மானியத்தைப் பெற்றுக்கொள்ளல்

                                          இதுவரையில் மத்திய கலாசார நிதியம் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன், இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய செலவுகளை சமாளிப்பதற்கு முடியாதுள்ளது. இந்த நிலைமையின் கீழ் மாதாந்தம் 135 மில்லியன் ரூபா வீதம் திறைசேரியில் மானியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த நிதியத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கை புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிதியம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ற ரீதியில் திறைசேரி தலையீட்டின் அடிப்படையில் குறுகிய கால கடன் தொகையை தேசிய வங்கியொன்றின் மூலம் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்வதற்கும், எதிர்காலத்தில் நாட்டிற்குள் சுற்றுலா நடவடிக்கைகளை வழமை நிலைமைக்கு கொண்டுவருவதற்கும், மத்திய கலாசார நிதியத்தின் வருமானத்தை அதிகரித்து அதன் மூலம் கடன் தொகையை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

                                          03. சிறைச்சாலை திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல் 2019 / 2020

                                          2019 / 2020 வருடத்திற்காக சிறைச்சாலை திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் 2020.07.31 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்தபோதிலும், கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக அதற்காக புதிய வழங்குநர்களை தெரிவுசெய்வதற்கான பெறுகை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முடியாமல் போனது. இதனால், தற்பொழுது நாடு எதிர்கொண்டுள்ள நிலைமை மற்றும் தற்போதைய சந்தை நிலைமையை கவனத்தில் கொண்டு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழு சிபாரிசு செய்துள்ள வகையில், 2020.08.01 தொடக்கம் 2021.01.31ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு சிறைச்சாலை திணைக்களத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் தற்போதைய வழங்குநர்களிடம் ஒப்படைப்பதற்காக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

                                          04. உரத்தைக் கொள்வனவு செய்தல் – 2020 (ஜுலை மாதத்திற்காக)

                                          2020 ஜுலை மாதத்தின் தேவைக்காக வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனம் (லக்போர) மற்றும் வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் உர நிறுவனம் (கொமர்ஷல் போர) போன்ற நிறுவனங்களிடம் உர பெறுகையை மேற்கொள்வதற்காக சர்வதேச போட்டி விலைகள் கோரப்பட்டுள்ளன. இந்த விலைகள் தொடர்பில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள சிபாரிசை கவனத்தில் கொண்டு கீழ் குறிப்பிடப்பட்ட வகையில் உரத்தை வழங்குபவர்களிடம் கொள்வனவு செய்வதற்காக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

                                          • ஒரு மெற்றிக் தொன் 260 அமெரிக்க டொலர்கள் என்ற அடிப்படையில் 9இ000 10, 5% மெற்றிக் தொன் யூரியாவை (கிரனியுலர்) கொள்வனவு செய்வதற்கான பெறுகையை Agri Commodities and Finance FZE என்ற நிறுவனத்திடம் வழங்கல்.

                                          • ஒரு மெற்றிக் தொன் 249.07 அமெரிக்க டொலர்கள் என்ற அடிப்படையில் ரிபல் சுபர் பொஸ்பேட் 6000 மெற்றிக் தொன்னை 10 5% கொள்வனவு செய்வதற்கான பெறுகையை Aries Fertilizers Group Pvt Limited  என்ற நிறுவனத்திடம் வழங்குதல்.

                                          05.மகாவலி விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு கொவிஜன மந்திரஹேஹி என்ற விவசாய மாளிகையை அமைத்தல்

                                          2019 டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்திற்கு அமைவாக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சை மீண்டும் கொவிஜன மந்திரஹேஹி என்ற விவசாய மாளிகையை அமைப்பதற்காக தற்பொழுது தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அமைச்சின் நடவடிக்கைகளை, முன்னெடுப்பதற்காக அந்த கட்டிடத்தின் வடிவமைப்பை மீள தயாரித்து மின்சார கட்டமைப்பை செப்பனிட வேண்டியுள்ளது. இந்த பணிகளை மிக விரைவில் மேற்கொண்டு பூர்த்தி செய்வதற்கு தேவை இருப்பதினால் இதனை செப்பனிடுவதற்கான ஆலோசனை சேவைக்கான ஒப்பந்தம், பொறியியல் பணிகள் தொடர்பில் மத்திய ஆலோசனை செயலகத்திற்கு (CECP) நிர்மாணப்பணிகளுக்கான ஒப்பந்தத்தை வரையறுக்கப்பட்ட மத்திய பொறியியலாளர் சேவை (தனியார்) (central Engineering Services (Pvt) Limited) நிறுவனத்திற்கும் நேரடியாக வழங்குவதற்காக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

                                          06. நெல்லுக்கான இரசாயன உரத்தை விவசாய பணிகளுக்காக கொள்வனவு செய்வதற்கு வசதிகளை செய்தல்

                                          தற்பொழுது நடைமுறையிலுள்ள உர நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரையிலான நெல் உற்பத்திக்காக உர நிவாரணத்தின் கீழ் உரம் வழங்கப்படுவதுடன் இதற்கு மேலாக கூடுதலான நிலப்பரப்பிற்கு தேவையான உரத்தை பகிரங்க சந்தையில் கொள்வனவு செய்ய வேண்டும். இந்த நிலைமையின் கீழ் சில சந்தர்ப்பங்களில் பல்வேறு சந்தைகளில் ஏனைய பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் உரத்திற்கு தட்டுப்பாட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், விசேடமாக கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலப்பரப்பு அதிகரித்ததினால் உரத்திற்கான கோரிக்கை அதிகரித்துள்ளது. இதற்கமைவாக, அரசாங்கம் சிரமத்திற்குள்ளாகாத வகையில் விவசாயிகளுக்கு தேவையான மேலதிக உரத்தை கொள்வனவு செய்யவதற்கு அரசாங்கத்தின் உர நிறுவனத்தினால் நெல் உற்பத்திக்கான உரத்தை உர நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படுவதில் எஞ்சியிருக்கும் உரத்தை விவசாய அபிவிருத்தி மத்திய நிலையங்களின் மூலம் கொள்வனவு செய்து 50 கிலோ எடையைக் கொண்ட உரப்பொதியொன்று 1000 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டது.

                                          07. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் வடக்கு வீதியுடன் தொடர்புபட்ட திட்டத்திற்கான கடன் தொகைக்கான கால எல்லையை நீடித்தல்

                                          ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் வடக்கு வீதி இணைப்புத் திட்டத்தின் கீழ் தேசிய பெருந்தெருக்கள் மற்றும் மாகாண வீதி புனரமைப்பு மற்றும் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட பாலங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 98 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றன. கடன் தொகையில் எஞ்சும் தொகைகளில் மதவாச்சி – ஹொரவப்பத்தான வீதியின் மேலதிக ஒப்பந்த பொதி 02, 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த நிர்மாணப் பணிகளுக்கான கடன் நிதி செல்லுபடியான காலம் 2020 ஜுன் மாதம் 30 ஆம் திகதியாகும். இதற்கு முன்னர் இதனை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு செய்ய முடியாமல் போனது. இதற்கமைவாக சம்பந்தப்பட்ட கடன் தொகைக்கான காலத்தை 2020 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிப்பதற்காக வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

                                          08. இலங்கை மட்பாண்ட (பீங்கான்) கூட்டுத்தாபன மறுசீரமைப்பின் கீழ் ஒட்டுசுட்டான் தொழிற்சாலையில் உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் திட்டம்

                                          வரையறுக்கப்பட்ட சம்சன் ரஜரட்ட டைல்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் இணைந்து இலங்கை மட்பாண்ட (பீங்கான்) கூட்டுத்தாபனத்தின் கீழ் நடத்தப்படும் ஒட்டுசுட்டான் செங்கல் மற்றும் ஓடு தொழிற்சாலையின் தயாரிப்பு நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது. இருப்பினும் இதுவரையில் இலங்கை மட்பாண்ட (பீங்கான்) கூட்டுத்தாபனத்தினால் இந்த தொழிற்சாலையை மீள ஆரம்பிக்கும் நோக்கில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் தனியார் நிறவனத்தின் ஒத்துழைப்பின்றி தயாரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கமைவாக தனிப்பட்ட முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பின்றி இந்த தொழிற்சாலை தயாரிப்பு நடவடிக்கைகள் லங்கா பீங்கான கூட்டுத்தாபனத்தினாலேயே மேற்கொள்வதற்காக கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவம் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

                                          09. ப்ரோட்லேன்ட் மின் உற்பத்தி நிலைய திட்டத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஆலோசனை சேவைக்காக பொறியியல் பணிகள் தொடர்பிலான மத்திய ஆலோசனை செயலக (CECB) உடன் இருந்த ஆலோசனை சேவை ஒப்பந்தத்தை நீடித்தல்

                                          ப்ரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தி திட்டத்தை நிர்மாணிப்பதற்கான ஆலோசனை சேவைக்கான ஒப்பந்த பொறியியலாளர் பணிகள் தொடர்பான விடயங்கள் மத்திய ஆலோசனை செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட திட்டம் 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14 ஆம் திகதி பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், திட்டத்திற்கு எதிராக பிரதேசத்தில் பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு, காணிகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டமை, உபகரணங்களை விநியோகிக்கும் தயாரிப்பாளர் மற்றும் கடன் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டமை போன்ற காரணங்களினால் திட்டமிட்ட வகையில் திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. இதனால் பொறியியலாளர் பணிகள் தொடர்பில் மத்திய ஆலோசனை செயலகத்துடன் (CECB) உள்ள ஆலோசனை சேவை ஒப்பந்தத்தின் உடன்படிக்கைக் காலத்தை நீடிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இதற்கமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய இந்த ஆலோசனைக்கான ஒப்பந்தம் 2020.07.31 ஆம் திகதி வரையில் நீடிப்பதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

                                          10. 2020 / 2021 கால எல்லைக்குள் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் விமான துறை காப்புறுதியை புதுபித்தல் மற்றும் நிறுவுதல்

                                          விமான சேவையின் நடவடிக்கைக்கான விமான துறை காப்புறுதி மிக அவசியமான தேவையாவதுடன் வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறவனத்தினால் இந்த காப்புறுதி அமைச்சரவை அங்கீகாரத்துடன் 2018 ஆம் ஆண்டில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது வருடாந்தம் புதுபிக்கப்பட வேண்டும், அத்தோடு 2020 / 2021 ஆம் ஆண்டுக்கான காப்புறுதி இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் பெற்றுக் கொள்வதற்காக வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் நிலையான தொழில்நுட்பத்தை மதிப்பீடு செய்யும் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சம்பந்தப்பட்ட காப்புறுதி 4.05 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால் பெற்றுக் கொள்வதற்காக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

                                          11. சகத்திராண்டு சவால்கள் கூட்டுத்தாபனம் (MCC) உடன்படிக்கையை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை

                                          சகத்திராண்டு சவால்கள் கூட்டுத்தாபனத்துடன் (MCC) கைச்சாத்திடுவதற்கான உத்தேச உடன்படிக்கை தொடர்பில் மதிப்பீடு செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக பேராசிரியர் லலித ஸ்ரீ குணவர்தன அவர்களின் தலைமையின் நியமிக்கப்பட்டுள்ள குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. கௌரவ பிரதமர் அவர்களினால் இந்த அறிக்கை அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் அடங்கியுள்ள சிபாரிசுகள் தொடர்பாக அமைச்சரவையின் அனைத்து அங்கத்தவர்களினதும் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன.

                                          12. ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை

                                          தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனமான சௌபாக்யே இதிரி தெக்ம – சௌபாக்கியத்தின் எதிர்கால நோக்கில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காத்தொடுவ – இங்கிரிய – இரத்தினபுரி – பெல்மடுல்ல தொடக்கம் இணைப்புக்களை ஏற்படுத்தி ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வெளிநாட்டு நிதியில் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் இந்த உள்ளுர் நிதியின் கீழ் நிர்மாணிப்பதன் மூலம் நாட்டிற்கு மிகவும் சிறந்த நன்மைகளை பெற்றுக் கொள்ள முடிந்திருப்பதாக தெரிகிறது. இதற்கமைவாக உள்ளுர் வங்கியின் மூலம் பெறப்படும் நிதியைப் பயன்படுத்தி தேசிய நிர்மாண நிறுவனங்களின் சேவையைப் பெற்று இதன் அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

                                          13. அரசாங்கத்தின் எஞ்சிய காடு என்ற ரீதியில் கருதப்படும் காணிப்பகுதியை மாவட்ட செயலாளர் / பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைப்பதல்

                                          வன பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படாத பிரதேச செயலாளரின் கீழ் நிருவகிக்கப்பட்டு வரும் அரசாங்கத்தின் எஞ்சிய வனம் என்ற ரீதியில் அடையாளங் காணப்பட்டுள்ள காணிகளில் நிருவாகம் அதனுடனான வளங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள 2001.08.10 ஆம் திகதி இலக்கம் 05 / 2001 சுற்றரிக்கையின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவான வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு உட்படுத்தப்படும். இந்த சுற்றறிக்கையில் ஒழுங்கு விதிகளுக்கு அமைய இந்த காணி ஏனைய பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுமாயின் அதற்காக நீண்ட நடைமுறையொன்று கடைபிடிக்க வேண்டும் என்பதினால் இதில் எஞ்சிய காடுகளில் சேனை பயிர்ச்செய்கை போன்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் விவசாயிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் அந்த காணி பொருளாதார ரீதியில் பயனுள்ள பணிகளுக்காக பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் அமைச்சரவையின் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டதுடன் இது தொடர்பிலான விடயங்களை கண்டறிந்து எஞ்சிய வன பகுதி மற்றும் வன ஜீவராசிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த காணிகளின் உரிமையை தொடர்ந்தும் அரசாங்கம் கொண்டுள்ள வகையில் முன்னெடுத்து தற்காலிகமாக மாற்று நடவடிக்கைக்காக பயன்படுத்தக் கூடிய வகையில் அதற்கான அதிகாரத்தை மாவட்ட செயலாளர் / பிரதேச செயலாளரிடம் வழங்குவதற்கென பொருத்தமான நடைமுறையொன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறு சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சரிடம் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          57 கடற்படையினர் இங்கிலாந்து நோக்கி பயணம்

                                          57 கடற்படையினர் இங்கிலாந்து நோக்கி பயணம்

                                          கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த கப்பல் ஒன்றில்

                                          சேவையாற்றிய 57 கடற்படையினர் விஷேட விமானம் ஒன்றின் மூலம்

                                          மத்தள விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து நோக்கி சென்றுள்ளனர்.

                                          வாமோச் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றில்

                                          மூலம் இன்று அதிகாலை 5.50 மணியளவில் அவர்கள் இங்கிலாந்து நோக்கி பயணமாகி உள்ளனர்.

                                          குறித்த விமானம் நேற்று காலை 10.20 மணியளவில் ரோமில் இருந்து கொழும்பு

                                          துறைமுகத்தில் உள்ள கப்பல் ஒன்றில் சேவையாற்றுவதற்காக 155 கடற்படையினரை அழைத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதி இராணுத்தினரால் கிருமி நீக்கம்

                                              யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதி இராணுத்தினரால் கிருமி நீக்கம்

                                              யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதியினை யாழ்ப்பணத்தில் உள்ள இராணுவ வீரர்கள் நேற்று (30) கிருமி தொற்று நீக்கம் செய்துள்ளனர்.

                                              திருநெல்வேலியில் உள்ள ஆனந்த குமாரசுவாமி பெண்கள் விடுதி மற்றும்

                                              பாலசிங்கம் ஆண்கள் விடுதி என்பவற்றுடன் கொக்குவில் புதிய பெண்கள்

                                              விடுதி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளும் இவ்வாறு கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

                                              அண்மையில் யாழ் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவிடம்

                                              பல்கலைக்கழக அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகொளுக்கினங்க குறித்த தொற்று நீக்கப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

                                              இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இத் தொற்று நீக்கப்பணிகளுக்கு

                                              பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் தமது ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர்.

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  திரைப்பட விளம்பரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம் காட்சி படுத்த தடை

                                                  திரைப்பட விளம்பரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம் காட்சி படுத்த தடை

                                                  திரையரங்குகளில் திரைப்படங்களை காட்சிப்படுத்தும்

                                                  சந்தர்ப்பங்களில் எந்தவொரு வேட்பாளரினதும் புகைப்படம் காட்சி

                                                  படுத்தும் விளம்பரங்களை திரையிட வேண்டாம் என பதில் பொலிஸ்

                                                  மா அதிபர் சி.டி.விக்ரமரட்ண திரையரங்குகளின் உரிமையாளர்களுக்கு இன்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      முகக்கவசம் அணியாத 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கம்

                                                      முகக்கவசம் அணியாத 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கம்

                                                      முகக்கவசம் அணியாத 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு

                                                      உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                                                      இன்று (01) அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24

                                                      மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட

                                                      சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு

                                                      உட்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

                                                      இதன்போது, முகக்கவசத்தை சரியான முறையில் அணியாத 905 பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                                                      முகக்கவத்தை அணியாதவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக

                                                      முன்னெடுக்கப்படுவதாக மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          காணி பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

                                                          காணி பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

                                                          காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை துரிதப்படுத்துவதற்கும் ஈ – காணி

                                                          (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.

                                                          காணிப் பதிவின் போது இடம்பெறும் மோசடிகள் மற்றும் தாமதங்கள் காரணமாக பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். காணி ஆணையாளர் திணைக்களம்,

                                                          காணி உரித்துகள் நிர்ணய நிறுவனம், நில அளவைத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகத் திணைக்களம் ஒன்றிணைந்த வகையில் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவு செய்யும்

                                                          நடவடிக்கையை துரிதப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

                                                          ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவு செய்தல் நடவடிக்கை தொடர்பாக நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

                                                          காணிப் பதிவுசார் நிறுவனங்களை ஒன்றிணைப்பதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வனஜீவராசிகள், வன பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சையும் ஒன்றிணைத்து

                                                          குழுவொன்றை நியமித்து இவ்வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

                                                          ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவின் ஊடாக உறுதிப்பத்திரம், காணி பொழிப்பு அறிக்கை கணனிமயப்படுத்தப்படும். பொழிப்பு அறிக்கை

                                                          பெற்றுக்கொள்ளும்போது கணனிமயப்படுத்தப்பட்ட ஆவணத்தை வழங்குவதற்கும் சட்டத்தரணிகளுக்கு, பத்திரத்துறை

                                                          பதிவாளர்களுக்கு மற்றும் எந்தவொரு நபருக்கு அல்லது அரச நிறுவனத்திற்கு online மூலம் காணி பற்றிய தகவல்களை

                                                          பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் காணி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

                                                          இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்துடன் (ICTA) ஒன்றிணைந்து ஆகஸ்ட் மாதமளவில் இவ்வேலைத்திட்டத்தை மக்கள் மயப்படுத்த

                                                          எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு ஈ – காணி (இலத்திரனியல் முறைமை)யின் கீழ் பதிவு செய்யும் காணிகளுக்கு இலத்திரனியல்

                                                          கணக்குப் புத்தகம் ஒன்றையும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

                                                          பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க, பதிவாளர் நாயகம் என்.சி.வித்தான, காணி ஆணையாளர் நாயகம்

                                                          ஆர்.எம்.சி.எம்.ஹேரத், காணி உரித்துகள் நிர்ணய ஆணையாளர் நாயகம் ஜி.எம்.எச்.பிரியதர்ஷனி, நில அளவையாளர் நாயகம்

                                                          ஏ.எல்.எஸ்.சி.பெரேரா இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) தலைவர் ஜயந்த த சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டன

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              வவுனியாவில் ரயில் ஆட்டோ மோதல் – விசாரணையில் பொலிஸ்

                                                              வவுனியாவில் ரயில் ஆட்டோ மோதல் – விசாரணையில் பொலிஸ்

                                                              வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் இன்று (01) காலை ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

                                                              துடரிக்குளம் பகுதியில் ரயில் கடவையின் ஊடாக கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டியினை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதித்தள்ளியதில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

                                                              58 வயது மதிக்கத்தக்க நபரொருவரே விபத்தில் உயிரிழந்துளதாக தெரியவருகின்றது.

                                                              விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  களவாக மின்சாரம் பெற்ற 1937 பேர் மீது வழக்கு

                                                                  களவாக மின்சாரம் பெற்ற 1937 பேர் மீது வழக்கு

                                                                  2019 மே மாதம் தொடக்கம் இவ்வருடத்தின் மே மாதம் வரையான காலப்பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொண்ட

                                                                  1937 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

                                                                  இதன்போது, நீதிமன்ற தீர்ப்பின் படி அபராத் தொகையாக 59 மில்லியன் ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

                                                                  இலங்கை மின்சார சபையினால் விசாரணை குழு மற்றும் பொலிஸாருடன் இணைந்து சட்டவிரோதமாக மின்சாரத்தை

                                                                  பெற்றுக் கொள்ளும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

                                                                  இதேவேளை, பல்வேறு நபர்களால் ஆண்டுதோறும் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுக் கொள்ளப்படுவதால் இலங்கை மின்சார

                                                                  சபைக்கு 100 மில்லியன் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

                                                                  இதில், அநேகமானோர் பயிர்ச் செய்கைகளை விலங்குகளிடம் பாதுகாப்பதற்காக இவ்வாறு சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறுவதாக தெரியவந்துள்ளது.

                                                                  இதேவேளை, சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறுவதற்கு முயற்சிக்கும் போது ஆண்டுதோறும் 100 தொடக்கம் 150 பேர்

                                                                  வரையில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      மலையக தொழிலாளர் முன்னணியின் கிளை காரியாலயம் திறப்பு

                                                                      மலையக தொழிலாளர் முன்னணியின் கிளை காரியாலயம் திறப்பு

                                                                      மலையக மக்கள் முன்னணியின் தொழிற் சங்கமான மலையக தொழிலாளர்

                                                                      முன்னணியின் கிளை காரியாலயம் பத்தனையில் முன்னணியின் தலைவரும்

                                                                      நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணனினால் வைபவ ரீதியாக திறந்து

                                                                      வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் உட்பட உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள்

                                                                      மலையக தொழிலாளர்
                                                                      மலையக தொழிலாளர்

                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                          சிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மீண்டும் திறப்பு

                                                                          சிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மீண்டும் திறப்பு

                                                                          நாடு முழுவதுமுள்ள பகல்நேர பராமரிப்பு (Day Care Centre) நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சுகாதார சேவைகள்

                                                                          பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.

                                                                          2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி தொடக்கம் பகல்நேர பராமரிப்பு (பகல்நேர பராமரிப்பு நிலையங்களின் மொத்த பிள்ளைகளின் எண்ணிக்கைக்கான) நிலையங்களில்

                                                                          உள்வாங்கக்கூடிய மொத்த கொள்திறன் எண்ணிக்கைக்காக அந்த நிலையங்கள் திறக்கப்பட்டு முன்னெடுக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

                                                                          தற்பொழுதும் மீண்டும் திறக்கப்படும் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் 75 சதவீதமான கொள்திறனுடன் (சிறுவர்களின் எண்ணிக்கை) செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

                                                                          2020 ஆம் ஆண்டு ஜூலை 06 ஆம் திகதியுடன் கொள்திறனை (சிறுவர்களின் எண்ணிக்கையை) 100 சதவீதமாக அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குவதாகும் தெரிவித்தார்.

                                                                          இவ்வாறான அனைத்து பகல்நேர பராமரிப்பு நிலையங்களிலும் கொவிட் 19 வைரசு தொற்றில் இருந்து பாதுகாப்புக்காக

                                                                          கடைபிடிக்கப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டி ஆலோசனைகள் வலுவான முறையில் கடைபிடிப்படுவது கட்டாயமாகும்.

                                                                          சிறுவர் பகல்நேர
                                                                          சிறுவர் பகல்நேர