Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில்
இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில்
ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 2022-23 கல்வியாண்டில் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு/
பட்டப்பின்படிப்பு/கலாநிதி ஆகிய கற்கை நெறிகளை தொடர விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது.
- இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனையுடன் திறமைவாய்ந்த இலங்கை பிரஜைகளை தெரிவு செய்து இந்திய அரசாங்கம் இப்புலமைப்பரிசில்களை வழங்குகிறது.
- இப்புலமைப்பரிசில் திட்டங்கள் முழுமையான கற்கைநெறி கட்டணம் மற்றும் கற்கைநெறிக் காலம் முழுவதற்குமான மாதாந்த செலவின கொடுப்பனவுகள்
- அனைத்தையும் உள்ளடக்கியதுடன், இதற்காக தங்குமிட கொடுப்பனவு, வருடாந்த உதவித்தொகை மற்றும் சுகாதார நலன்புரி சேவைகள் போன்றவையும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
- இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை கல்வியமைச்சின் என்ற www.mohe.gov.lk. இணையதளத்தில் காணமுடியும்.
- இதற்கான விண்ணப்பங்களை
- ICCR A2A தளம் ஊடாக (www.a2ascholarships.iccr.gov.in ) பதிவேற்றம் செய்வதற்கான இறுதி திகதியான 2022 ஜூலை 15ற்கு முன்னதாக அனுப்பிவைக்கவும்.
- மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரிகள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தை தொடர்பு
கொள்ளலாம் (E-mail- eduwing.colombo@mea.gov.in /0112421605, 0112422788 ext-605).
முடங்கும் இலங்கை அதிர்ச்சியில் மக்கள்
முடங்கும் இலங்கை அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் இன்று இரவு முதல் நாடு முற்றாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது .எரிபொருள் கொள்வனவு செய்திட இலங்கை அரசிடம் பணம் இல்லாத காரணத்தினால் நாட்டுக்கு எரிபொருள் எடுத்து வரும் கப்பல்கள் தாமதமடைந்து வருகிறது .
அதனால் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் எரிபொருள் வழங்க முடியும் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து இலங்கை மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இலங்கையில் அடுத்து நடக்க போவது என்ன காணொளி
இந்த அறிவிப்பை அடுத்து மக்கள் வீதி இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது .எரிபொருளுக்காக மக்கள் இனி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது அரசு.
முடங்கும் இலங்கை அதிர்ச்சியில் மக்கள்
கோட்டபாய ராஜபக்சே அரசினால் இலங்கை வறுமை கோட்டின் கீழ் இழுத்து வரப்பட்டு மக்கள் வீதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவம் ,மற்றும் உணவு தேவை போக்குவரத்திற்கு மட்டுமே எரிபொருள் வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது.
அதனால் நாடு முற்றான முடக்க நிலைக்கு செல்கிறது என்ற அபாய எச்சரிக்கை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் பாடசாலைகள் அடித்து பூட்டு
இலங்கையில் பாடசாலைகள் அடித்து பூட்டு
இலங்கையில் பாடசாலைகள் அடித்து பூட்டுவதற்கு கலவி அமைச்சு உத்தரவிட்டுள்ளது .
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மேல்மாகாணத்தில் கொழும்பு வலயத்தில் மற்றும் அண்டிய பிரதேசங்களில் உள்ள
அனைத்து பாடசாலைகளையும் அடித்து பூட்டு .
அதே போல ஏனைய மாகாணங்களில் முக்கிய நகரங்களில்
அமைந்துள்ள பாடசாலைகளையும் ஜூலை 10 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் எரிபொருள் இன்றி பாடசாலை செல்ல முடியா நிலையில் தவித்து வந்தனர் ,கல்வி அமைச்சு அறிவித்துள்ள இந்த அறிவிப்பால் அவர்கள் சற்று மகிழ்வில் உறைந்துள்ளனர்
இதே போன்று மேலும் பல தொழில் துறைகள் அடித்து பூட்டும் ஆபாய நிலை ஏற்பட போகிறது.
அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்ற 54 பேர் கைது
அவுஸ்ரேலியாவுக்கு படகில் செல்ல முயன்ற 54 பேரை கைது செய்த கடற்படை
இலங்கை ; அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து கடல்வழியாக செல்ல முயன்ற 54 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதானவர்கள் பொலீஸ் விசாரணைக்கு உபடுத்த பட்டு நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலை படுத்தப்படவுள்ளனர் .
அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து கடல்வழியாக பயணிப்பவர்கள் கிரிஷ்மஸ் தீவில் சிறை வைக்க பட்டு இலங்கைக்கு மீள அவுஸ்ரேலியாவால் நாடுகடத்த பட்டு வருகின்றனர் .
அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 35 பேர் கைது
இலங்கையர் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா
அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 38 பேர் கைது
அவ்விதமான நாடு கடத்தல் செயல்பாடுகள் தொடராக இடப்பெற்ற வண்ணம் இருக்க ,இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு மக்கள் அகதிகளாக சென்றவண்ணம் உள்ளனர்.
இலங்கை கடல் வழியாக அவுஸ்ரேலியா செல்லும் படகுகள் எரிக்க படும் என இலங்கை அரசு எச்சரித்துள்ள போதும் இந்த அகதிகள் பயணம் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
தமது நாட்டுக்குள் இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்குள் நுழைவதை தடுக்க அவுஸ்ரேலியா அரசு இலங்கைக்கு கண்காணிப்பு படகுகளை இலவசமாக வழங்கி இருந்தமை குறிப்பிட தக்கது
தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கிய நிலையில் தம்பதிகள் மீட்பு
தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கிய நிலையில் தம்பதிகள் மீட்பு
இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற வயதான தம்பதிகள் கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்க பட்டுள்ளனர் .
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் தனுஷ்கோடி வழியாக சென்றுள்ளனர்.
இந்த நிலையில் திருகோணமலை பகுதியில் இருந்து படகு மூலம் வயதான தம்பதிகள் 2 பேர் இன்று (27) அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர்.
இவர்கள் இருவரும் மயக்கமுற்ற நிலையில் கடற்கரையில் சுருண்டு விழுந்து கிடந்தனர்.
கடற்கரையில் 2 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்
இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மயக்க நிலையில் இருந்த அவர்களை மீட்டு அம்பியூலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பதுக்கி வைக்கப்பட்ட எண்ணெய் மீட்பு
பதுக்கி வைக்கப்பட்ட எண்ணெய் மீட்பு
மட்டக்களப்பு ; மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகிலுள்ள பதுக்கி வைக்க பட்ட எண்ணெய்கள் மீட்க பட்டுள்ளன .
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த கட்டிடத்தை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர் டீசல், 258 லீற்றர் மண்ணெணையை மீட்டனர் .
இந்த எண்ணெய் திருட்டு பதுக்களில் சம்பந்த பட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
பதுக்கி வைக்கப்பட்ட எண்ணெய் மீட்பு
குறித்த எண்ணெய் பதுக்கல் தொடர்பாக குற்ற விசாரணைப் பிரிவு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உத்தரவிற்கு அமைய நடத்த பட்ட விசேட சோதனையில் இந்த பெரும் எண்ணெய் பதுக்கல் முறியடிக்க பட்டுள்ளது .
இந்த சோதனையின் போது பெரல்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர் டீசல், 258 லீற்றர் மண்ணெணையை மீட்டதுடன் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார் ,
எரிபொருள் வாங்க காத்திருந்தவர்கள் மீது பேரூந்து மோதி விபத்து
எரிபொருள் வாங்க காத்திருந்தவர்கள் மீது பேரூந்து மோதி விபத்து
மட்டக்களப்பு ; மட்டக்களப்பு ஊரணி பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வாங்கிட கடத்திருந்த மக்கள் மீது பேரூந்து ஒன்று மோதியுள்ளது.
பேரூந்து சாரதியின் காட்டு பாட்டை இழந்த பேரூந்து மக்கள் மீது மோதி விப்பதுக்குள்ளானது .
இந்த பேரூந்து விபத்தில் காயமடைந்த ஐந்து பேர் மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .,
இவ்வாறான விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
- இஸ்ரேலிய தூதரை போலந்து அழைத்தது
- தெற்கு லெபனானில் தொடர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள்
- மவுண்ட் லவினியா துப்பாக்கிச் சூடு 2நபர்கள் கைது
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல்
- இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- 2027 ஆம் ஆண்டுக்கான பள்ளிப் பருவ கால அட்டவணையை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது
- நந்த மாலினி மறைவையொட்டி இலங்கை அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்
- இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வு
- எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்பு
பொதுநலவாய உச்சிமாநாட்டில் சிறிலங்கா ! இராணுவ நீக்கத்தை கோரிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
பொதுநலவாய உச்சிமாநாட்டில் சிறிலங்கா ! இராணுவ நீக்கத்தை கோரிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !!
பொதுநலவாய நாடுகள் சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு காரணங்களில் முதன்மையாக இருக்கின்ற இராணுவச் செலவினங்கள் குறித்து கவனம் செலுத்த
வேண்டும் என கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இராணுவத்தினை விலக்குவத்தற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.
பொதுநலவாய நாடுகளின் 24வது உச்சி மாநாடு ஆபிரிக்காவின் றுவண்டாவில் யூன் 24ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. பிரித்தானிய இளவரசர் தலைமையில்
தொடங்கியுள்ள இந்த உச்சி மாநாட்டில் 54 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கெடுத்துள்ள நிலையில், சிறிலங்காவின் அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்து கொண்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியினை சந்தித்து வருகின்ற நிலையில், அதற்கு
முக்கிய காரணியாக இருக்கின்ற இராணுவச் செலவினங்கள் குறித்து பொதுநலவாய நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நா.
தமிழீழ அரசாங்கம், தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினை விலக்குவத்தற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.
6 சிவிலியன்களுக்கு 1 இராணுவம் என தமிழர் தாயகத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ளதோடு, தமிழர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் நா. தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
2022 ஆண்டுக்கான நிதியொதிக்கீட்டில் 12.3 வீதத்தினை தனது இராணுவச் செலவினங்களுக்கு ஒதுக்கியுள்ள சிறிலங்கா, மக்கள் எரிபொருளுக்காகவும், உணவுக்காகவும் வரிசையில் மணிக் கணக்கில் காத்திருக்கும் நிலையிலும்,
இராணுவத்துக்கான செலவினங்கள் எந்தவகையிலும் குறைக்கப்படாது என்ற சிறிலங்கா அதிபர் கோத்தபாய இராஜபக்சவின் சமீபத்திய கூற்றினையும் நா.தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுநலவாய நாடுகளில் அதிக இராணுவச் செலவினங்கள் கொண்டுள்ள
நாடாக சிறிலங்கா இருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடதக்கது.
யாழில் பெண் கற்பழித்து வெட்டி கொலை
யாழில் பெண் கற்பழித்து வெட்டி கொலை
யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் , தனிமையில் வசித்து வந்த 78 வயதுடைய பெண்மணி கற்பழிக்க பட்டு பின்னர் கழுத்து வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார் .
மருத்துவர்கள் மேற்கொண்ட மரண விசாரணை சோதனையில் மூதாட்டி கோரமாக கற்பழித்து பின்னர் கழுத்து வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை கற்பழித்து கொலை செய்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் .
கற்பழிப்பு குற்றம் புரிந்த நபரை கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன
ஆயிரம் லீற்றர் டீசல் காவல்துறையால் மீட்பு
ஆயிரம் லீற்றர் டீசல் காவல்துறையால் மீட்பு
கொட்டகலை, கொமர்ஷல் பகுதியிலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசலே திம்புள்ள – பத்தனை பொலிஸாரால் இன்று (26) பிற்பகல் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தில் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திம்புள்ள – பத்தன பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றில் அடிப்படையில், சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆயிரம் லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கைக்காக அவர் நாளை (27) அட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
” நாங்கள் மொத்த வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள். போக்குவரத்து சேவைக்கு எமக்கு டீசல் தேவை. அதற்காகவே சேமித்து வைக்கப்பட்டது.” என கைதானவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற கணவன்
மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற கணவன்
நுவரெலியா ; கணவனின் தாக்குதலுக்குள்ளான மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா ஒலிபென்ட் மேல்பிரிவு தோட்டத்திலே நேற்று (25) இரவு 09.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவரும் தனது வீட்டில் இருந்துள்ள நிலையில் கணவன் உணவு எடுத்துவருமாறு மனைவியிடம் கூறியுள்ள்ளார்
எனினும் நீண்ட நேரம் உணவு எடுத்து வராது மனைவி தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருப்பதை கண்ட கணவன் முரண்பட்டதையடுத்து மனைவி கணவனை தாக்கியதையடுத்து கணவன் அருகிலிருந்த கோடரியால் தாக்கியுள்ளார்.
இந்நிலையில், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் கோடரியால் தாக்கிய கணவன் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் இன்று காலை சரணடைந்துள்ளர்.
தாக்குதலில் 07,09 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சுப்ரமணியம் சத்யவாணி என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சாப்பாட்டு விலைகள் அதிகரிப்பு
சாப்பாட்டு விலைகள் அதிகரிப்பு
இலங்கையில் சாப்பாட்டு விலைகள் அதிகரிக்க படவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
தொடர்ந்து இலங்கையில் உணவு பொருட்களின் விலை அதிகரித்து
செல்வதால் மக்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்
மக்கள் வருமானம் இன்றி வாடும் நிலையில் உணவு பொருட்கள் விலை
மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை
அதிகரிக்க பட்டுள்ள செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
செல்வந்தர் சுட்டு கொலை
செல்வந்தர் சுட்டு கொலை
இலங்கை – எம்பிலிப்பிட்டிய மீத்தேனிய பகுதியில் மலர்சாலை உரிமையாளர் ஒருவர் தனது கடையினை திறக்க சென்ற பொழுது மறைந்திருந்த மர்ம ஆயுத தாரி நபரால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் .
ஐம்பத்தி இரண்டு வயதான நபரே இவ்வாறு சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .
இலங்கையில் சமீப காலங்களாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதும் இவ்வாறான கொலைகள் தொடர்கிறது .
இந்த துப்பாக்கி சுட்டு கொலைகளை நிறுத்த அரசு இவ்வாறு எவ்வித நகர்வுகள்
மேகொள்ளாது இருப்பது கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது.
எரிபொருள் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு
எரிபொருள் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு
இலங்கையில் உடனடி அமுலுக்கு வரும் நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்க பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பெட்ரோல் 50 ரூபாவினால் அதிகரிக்க பட்டு 470 ரூபாவாகவும்
டீசல் ஓரி லீட்டர் 60 ரூபாவினால் அதிகரிக்க பட்டு 460 ஆகவும்
ஓக்கேடான ஒரு லீற்றர் 100 ரூபாவினால் அதிகரிக்க பட்டு 550 ரூபாவான் விலை அதிகரிக்க பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் இந்த விலை அதிகரிப்பு செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரானுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட ஏழு பீரங்கி துப்பாக்கிகள் கையளிப்பு
இரானுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட ஏழு பீரங்கி துப்பாக்கிகள் கையளிப்பு
இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு, ஏழு 25 பவுண்டர் பீரங்கி துப்பாக்கிகளை புதுப்பித்து,
பனாகொடவில் உள்ள இலங்கை பீரங்கி (SLA) படைப்பிரிவினருக்கு சம்பிரதாய நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்துவதற்காக சமீபத்தில் கையளித்தது.
மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு துருப்புக்கள் அந்த பீரங்கிகளை புதுப்பித்ததன் மூலம் இராணுவத்திற்கு பாரியளவு நிதியை மீதப்படுத்த முடிந்துள்ளது என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிகழ்வில் இலங்கை பீரங்கி (SLA) படைப்பிரிவின் கட்டளைத் தளபதியும் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க,
உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகளும் படையினரும் கலந்துகொண்டனர்
அமெரிக்கா அதிகாரிகள் குழு இலங்கை வருகை
அமெரிக்கா அதிகாரிகள் குழு இலங்கை வருகை
இலங்கை ;அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் அமெரிக்க திறைச்சேறி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.
மூன்று நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு
அவர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இலங்கை வந்தடைந்த அமெரிக்கா அக்குழுவினர் பதமர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் ஜனாதிபதி கோட்டபாயவுடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார் .
இதில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு அவற்றுக்கு உதவும் திட்டங்களும் முன் வைக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .
கிணற்றில் இருந்து சிறுவன் சடலம் மீட்பு
கிணற்றில் இருந்து சிறுவன் சடலம் மீட்பு
கொமுகொமுவ : இலங்கை கொமுகொமுவ பகுதியில் கிணறு ஒன்றுக்குள் இருந் சிறுவன் சடலம் மீட்க பட்டுள்ளது .
வீட்டில் காணாமல் போன சிறுவனை தேடிய பொழுது கிணற்றுக்குள் இருந்து சிறுவன் சடலமாக மீட்க பட்டுள்ளான் .
பதினொரு வயதாகும் இந்த சிறுவன் எவ்வாறு இறந்தான் என்பது தொடர்பில் தெரியவில்லை .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நீதவான்முன்னிலையில் கிணற்றுக்குள் இருந்து சடலம் மீட்க பட்டு விசாரணைகள் ஆரம்பிக்க ப்பட்டுள்ளன .
இந்த சிறுவன் தவறி வீழ்ந்தானா அல்லது கொலை செய்யப்பட்டானா என்பது தொடர்பில் போலீசார் விசாரணைங்களை ஆரம்பித்துள்ளனர்.
சமீப காலங்களாக நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் தொடராக மீட்க பட்டு வருகின்றமை சுட்டி காட்ட தக்கது.
தமிழக முகாமில் 30 பேர் தற்கொலை முயற்சி
தமிழக முகாமில் 30 பேர் தற்கொலை முயற்சி
திருச்சி ;தமிழகம் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் 30 தமிழர்கள் மாத்திரை உட்க்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முகாமில் தடுத்து வைக்க பட்டுள்ள 21 அகதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இவ்வாறான நிலையில் திருச்சி மத்திய சிறையில் முப்பது பேரும் மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட செயல் உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்க பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதுடன் தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
ஈழ தமிழ் அகதிகள் இந்த கூட்டு தற்கொலை முயற்சி என்பது ஆளும் தமிழக முதல்வருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த உண்ணாவிரதிகள் கோரிக்கை ஏற்க பட்டு இருந்தால் இந்த அபயா முடிவுக்கு அவர்கள் சென்று இருக்க மாட்டார்கள் என்பது மக்கள் கருத்தாக உள்ளது
தமிழக முகாமில் 30 பேர் தற்கொலை முயற்சி
தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைந்துசெயல் பட்டு இந்த மக்களை விடுதலை செய்வதன் ஊடாகவே அவர் மீது விழுந்துள்ள கலங்கத்தை போக்கிட முடியும் என்பது அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது .
ஈழத்தில் இருந்து அகதிகளாக சென்ற ஈழ தமிழ் மக்கள் இந்தியாவில் இவ்வாறு கூட்டு தற்கொலை செய்துகொள்ள ஒருபோதும் முனைந்ததில்லை

தமிழக முகாமில் ஈழ தமிழர் தற்கொலை முயற்சி
உளவியல் ரீதியில் ஏற்பட்ட தாக்கம் அதன் எழுந்த மனவிரக்தி நிலையில் இந்த உயிர் மாய்க்கும் நிலைக்கு அவர்கள் சென்றுள்ளனர் .
ஒருவன் தனது உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு செல்கிறான் எனின் அவர் மன நிலை எவ்வாறு பாதிக்க பட்டு இருக்கும் என்பதை மக்கள் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் .
திருச்சி மத்திய சிறையில் நடந்துள்ள இந்த தற்கொலை முயற்சி தமிழக வரலாற்றில் எழுத பட்ட கறைபடிந்த வரலாறாக மாற்றம் பெற்றுள்ளது .
இந்த தற்கொலை முயற்சி பின்னர் எனினும் இவர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் .
இலங்கையில் 200 மருந்து தட்டுப்பாடு
இலங்கையில் 200 மருந்து தட்டுப்பாடு
கொழும்பு ;இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 200 மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .
தற்போது கையிருப்பில் உள்ள மருந்து பாவனை அதிகரிதத்தினால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .
மேலும் இரண்டு அல்லது மூன்று மதங்களில் 160 ,மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது .
இவ்வாறு தொடர்ந்து மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் இலங்கையில் மக்க அதிகம் பலியாகும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது.
மக்கள் பலிகளை தடுத்து நிறுத்திட ஆளும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விரைந்து செயல் பட வேண்டும் என கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இலங்கையில் 200 மருந்து தட்டுப்பாடு
இலங்கையில் மக்களின் உயிர்களை காப்பற்றி வரும் மருந்து இறக்குமதி தடை பட்டால் இலங்கையில் மக்கள் போராட்டங்கள் அதிகம் வெடித்து பறக்கும்நிலை ஏற்பட போகிறது .
இது இலங்கை நாட்டில் என்றும் இல்லாத அளவுக்கு பெரும் போராக வெடிப்பதுடன் இந்த போராட்டங்களில் சிக்கி பலநூறு மக்கள் பலியாகும் நிலையம் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இலங்கை நாட்டில் ல் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம் ஒருபுறம் ,மறுபுறம் உயிர் காக்கும் மருந்து பொருட்கள் தட்டுப்பாடு என தொடரும் அவலம் .
இறந்த பிணங்களை எரித்திட எரிபொருள் இன்றி மக்கள் தவிக்கும் பரிதாபம் என தொடரும் துயர்களை துடைத்திட ஆளும் ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்சே ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகினால் மட்டுமே இந்த நிலைக்கு முடிவு காணலாம் என்பது மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது .
எரிபொருளுக்கு காத்திருந்து இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் மக்கள் தொழில் துறைகள் பாதிக்க பட்டுள்ளன .
அவ்விதமான தொடர்ச்சியாக மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் மருத்துவமனைகள் அடித்து பூட்டும் நிலை ஏற்படுவதுடன் தனியார் மருத்துவமனைகள் அதிக இலாபம் ஈட்டும் நிலைக்கு சென்று விடும் .
இந்த பேராபத்தில் இருந்து மக்களையும் இலங்கை நாட்டையும் ஆளும் ஜனாதிபதி கோட்டபாய அரசு எவ்வாறு காப்பாற்ற போகிறது என்பதே மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
அரசியலமைப்பின் 21A திருத்த சட்டத்தின் முதலாவது கட்ட நடவடிக்கை ஆரம்பம்
அரசியலமைப்பின் 21A திருத்த சட்டத்தின் முதலாவது கட்ட நடவடிக்கை ஆரம்பம்
கொழும்பு ; அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் பொது வாக்கெடுப்புக்கு செல்லாமல் நிறைவேற்றப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
“நடைமுறையில் சாத்தியமானதை நாங்கள் செய்கிறோம். ஒரு மசோதாவை உருவாக்குவதன் மூலம் நாம் மாயங்களின் பின்னால் ஓட வேண்டியதில்லை எனவும் நாட்டின் சூழ்நிலையில் இத்தகைய அனுபவம் நடைமுறைக்கு வராது என்பதால், அது
மக்கள் வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்றும் ராஜபக்க்ஷ கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார்.
நாடு தற்போது எதிர்நோக்கும் பல சவால்களை முறியடிக்கும் நீண்ட முன்னெடுப்பின் முதல் படியாக 21வது திருத்தம் அமையும் எனவும் கூறியுள்ளார்.

“நாடாளுமன்றத்தையும் ஜனநாயகத்தையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க சர்வதேச சமூகமும் ஆர்வமாக உள்ளதாகவும், இது ஒரு அரசியல் வரலாற்றில் முக்கிய படியாகும்,” என்றும் அவர் கூறினார்.
அரசியலமைப்பின் 21A திருத்த சட்டத்தின் முதலாவது கட்ட நடவடிக்கை ஆரம்பம்
SJB பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட தனியார் உறுப்பினா்கள் சட்டமூலத்தின் மீதான தீர்மானத்தில் உச்ச நீதிமன்றம் அதன்
பல சரத்துக்களுக்கு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு இரண்டும் தேவைப்படும் என தெளிவாக கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் “எங்களால் முடிந்ததை செய்துள்ளோம்,” என்றும் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் அங்கீகாரம்
பெற்று விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
இலங்கை அரசியலமைப்பின் 21A திருத்த சட்டத்தின் முதலாவது நகர்வு நடவடிக்கை ஆரம்பம் என அறிவிக்க பட்டுள்ள பொழுதும் இந்த சட்டம் முற்றுமுதாக திருத்தும் செய்ய படுமா என்ற கேள்வி எழுகிறது .
இலங்கை வருகை தந்த இந்தியா உயர் குழு 13 வாது சட்டதின் மாற்றத்தை மேற்கொண்டு மாகாணங்களுக்கு உரிய அதிகார தீர்வை வழங்கவேண்டும் என்கிறது .
அவ்விதமான தீர்வு திட்டதை வழங்க இந்த சட்டத்தின் திருத்த முறைமை அவசியம் என்கிறது .
இங்கை நாட்டை முன்னோக்கி நகர்த்த ஆளும் ஜனாதிபதி கோட்டபாய அரசு அரசியல் அமைப்பில் சட்டத்தில் திருத்தம் செய்து கொள்ளுமா என்பது தான இங்குள்ள கேள்வியாகும் .
நாட்டின் எதிர்கால நிலை கருதி சில முடிவுகளை விரைந்து எடுத்து செயல்படுவதன் ஊடாகத்தான் நாட்டை முன்னோக்கி நகரத்தில் செல்ல முடியும் என்பது உலக இராயத்தந்திரிகள் பேச்சாக உள்ளது .
















