தமிழக முகாமில் 30 பேர் தற்கொலை முயற்சி

Spread the love

தமிழக முகாமில் 30 பேர் தற்கொலை முயற்சி

திருச்சி ;தமிழகம் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் 30 தமிழர்கள் மாத்திரை உட்க்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முகாமில் தடுத்து வைக்க பட்டுள்ள 21 அகதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இவ்வாறான நிலையில் திருச்சி மத்திய சிறையில் முப்பது பேரும் மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட செயல் உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்க பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதுடன் தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .

ஈழ தமிழ் அகதிகள் இந்த கூட்டு தற்கொலை முயற்சி என்பது ஆளும் தமிழக முதல்வருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த உண்ணாவிரதிகள் கோரிக்கை ஏற்க பட்டு இருந்தால் இந்த அபயா முடிவுக்கு அவர்கள் சென்று இருக்க மாட்டார்கள் என்பது மக்கள் கருத்தாக உள்ளது

தமிழக முகாமில் 30 பேர் தற்கொலை முயற்சி

தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைந்துசெயல் பட்டு இந்த மக்களை விடுதலை செய்வதன் ஊடாகவே அவர் மீது விழுந்துள்ள கலங்கத்தை போக்கிட முடியும் என்பது அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது .

ஈழத்தில் இருந்து அகதிகளாக சென்ற ஈழ தமிழ் மக்கள் இந்தியாவில் இவ்வாறு கூட்டு தற்கொலை செய்துகொள்ள ஒருபோதும் முனைந்ததில்லை

தமிழக முகாமில் 30 பேர் தற்கொலை முயற்சி

தமிழக முகாமில் ஈழ தமிழர் தற்கொலை முயற்சி

உளவியல் ரீதியில் ஏற்பட்ட தாக்கம் அதன் எழுந்த மனவிரக்தி நிலையில் இந்த உயிர் மாய்க்கும் நிலைக்கு அவர்கள் சென்றுள்ளனர் .

ஒருவன் தனது உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு செல்கிறான் எனின் அவர் மன நிலை எவ்வாறு பாதிக்க பட்டு இருக்கும் என்பதை மக்கள் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் .

திருச்சி மத்திய சிறையில் நடந்துள்ள இந்த தற்கொலை முயற்சி தமிழக வரலாற்றில் எழுத பட்ட கறைபடிந்த வரலாறாக மாற்றம் பெற்றுள்ளது .

இந்த தற்கொலை முயற்சி பின்னர் எனினும் இவர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் .

    Leave a Reply