வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சிறுமி துஷ்பிரயோகம் பெரியப்பா கைது

சிறுமி துஷ்பிரயோகம் பெரியப்பா கைது

வீட்டில் வறுமை காரணமாக பெரிய தந்தையின் வீட்டில் தமது பிள்ளையை தங்க வைத்த நிலையில் பெரிய தந்தை மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி உள்ளதாக, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

வறுமை காரணமாக 17 வயதான தமது மகளை, தந்தையின் அண்ணா வீட்டில் பெற்றோர் தங்க வைத்துள்ளனர்.

சிறுமி துஷ்பிரயோகம் பெரியப்பா கைது

இந்நிலையில் சிறுமியின் பெரிய தந்தை நீண்ட காலமாக சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சனிக்கிழமை பெற்றோரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சிறுமியின் பெரிய தந்தையை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

1 பில் டொலர்களை தாண்டியது வருமானம்
Posted in இலங்கை செய்திகள்

1 பில் டொலர்களை தாண்டியது வருமானம்

1 பில் டொலர்களை தாண்டியது வருமானம்

2023ஆம் ஆண்டில் இலங்கையின் சுற்றுலா வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள்

காட்டுகின்ற அதேவேளை, ஓகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் 51,594 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓகஸ்ட் மாதத்திலும் 9,146 இந்திய பிரஜைகள் வருகை தந்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

1 பில் டொலர்களை தாண்டியது வருமானம்

இதேவேளை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,939 பேரும், சீனாவிலிருந்து 3,707 பேரும், பிரான்சிலிருந்து 3,249 பேரும், ஜேர்மனியிலிருந்து 3,155 பேரும், ரஷ்யாவிலிருந்து 2,385 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ஜூலை மாதத்தில் மொத்தம் 143,039 சுற்றுலாப் பயணிகள் வந்ததாகவும் அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 819,507 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கிறது.

அரசியல் ஒரு சாக்கடை அரசியல்வாதி தாக்கு
Posted in இலங்கை செய்திகள்

அரசியல் ஒரு சாக்கடை அரசியல்வாதி தாக்கு

அரசியல் ஒரு சாக்கடை அரசியல்வாதி தாக்கு

பலர் அரசியலில் ஈடுபடுவதை சாக்கடை என்று கூறுகின்றார்கள் ஆனால் அதனை சுத்தம் செய்வதற்கு யாரும் வருவதில்லை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் கலை அமுது விழா 2023 கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பலர் அரசியலில் ஈடுபடுவதை சாக்கடை என்று கூறுகின்றார்கள் ஆனால் அதனை சுத்தம் செய்வதற்கு யாரும் வருவதில்லை. ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பரிணாமங்களுடன் விஸ்தரித்து பல இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சி நெறிகளை வழங்கி நாட்டின் கொள்கை தீர்மானத்தில் சந்தர்ப்பத்தையும் வழங்கி வருகிறோம்.

ஜனாதிபதி அவர்களுடன் மலையக மக்களின் அபிவிருத்திக்கான சந்திப்பு இடம்பெற்றது. ஆனால் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக பிரதிநிதிகள் இதனில் பங்கு கொள்ளாது தவிர்த்தனர்.

எமது மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றினையாது தமது அரசியல் நோக்கத்திற்காக எமது மக்களைப் பிரித்தாள நினைத்து இவர்கள் மட்டுமல்லாது எமது மக்களின் அபிலாசைகளையும் புறந்தள்ளி உள்ளார்கள்.

அரசியல் ஒரு சாக்கடை அரசியல்வாதி தாக்கு

கண்டி புனித சில்வர்ஸ்டர் கல்லூரி இலங்கைக்கு இளம் தலைவர்களை உருவாக்குகின்றனர் இம்மகத்தான செயலில் நானும் இணைந்து கொள்வது பெரும் மகிழ்ச்சியாகும். இக்கல்லூரி கட்டிட வசதிகளையும் நவீன கற்றல் வசதிகளையும் எதிர்பார்த்து இருப்பதை நான் அறிந்தேன்.

அந்த வகையில் எனது அமைச்சின் நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி ஊடாக இக்கல்லூரிக்கு நவீன திறன் வகுப்பறை ஒன்றிணையும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டிடத்தையும் வழங்க நான் தீர்மானித்துள்ளேன்.

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ள இப் பாடசாலை வளர்ச்சியில் நாம் என்றும் முன் நின்று செயல்படுவோம். இன அடையாளம் எமது உரிமை சிலர் இதனை இனவாதமாக மாற்றுவதாலயே

அரசியல் ஒரு சாக்கடை அரசியல்வாதி தாக்கு

எமது நாடு இவ்வாறான பொருளாதார வீழ்ச்சியை அடைந்தது. இளம் மக்கள் பிரதிநிதிகளாக நாம் இதனை மாற்றி அமைப்போம். என்றும் நாங்கள் உங்களுடன் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் என தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

13வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மீது விமர்சனம்

13வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மீது விமர்சனம்

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகளை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

நாடு ஜனநாயக அரசியல் நெருக்கடியை நோக்கி நகர்வதாக அதன் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தை பிளவுபடுத்த முயற்சித்ததன் காரணமாகவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரத்தை இழந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மீது விமர்சனம்

எவ்வாறாயினும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு வடக்கு கிழக்கில் இனப்பிரச்சினைக்கு ஏதேனும் தீர்வு காணப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற கலவரங்கள், ஹர்த்தால்கள் மற்றும் போராட்டங்களிலிருந்து எந்தவொரு கட்சியும் பாடம் கற்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாட்டில் அனைத்து துறைகளிலும் நெருக்கடியான சூழல் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையிலிருந்து தவறி விழுந்த பிரித்தானிய பிரஜை
Posted in இலங்கை செய்திகள்

மலையிலிருந்து தவறி விழுந்த பிரித்தானிய பிரஜை

மலையிலிருந்து தவறி விழுந்த பிரித்தானிய பிரஜை

பிரித்தானிய பிரஜை ஒருவர் சிறிய சிறிபாத மலையில் இருந்து தவறி சுமார் 50 அடி கீழே விழுந்துள்ளார்.

இன்று (13) காலை பண்டாரவளை, எல்ல சுற்றுலாப் பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சுற்றுலா பயணியின் ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலையில் இருந்து தவறி விழுந்த சுற்றுலா பயணி தற்போது தியத்தலாவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்

யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்

கரடியனாறு – மரப்பாலம், புத்தம்புரிக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டகப்பட்ட சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மயிலவெட்டுவானை சேர்ந்த 42 வயதுடைய இராசமன்னன் தேவராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்

குறித்த நபர் நேற்று இரவு களத்தில் மீன்படிக்கச் சென்றவர் காலையில் வீடு திரும்பாத நிலையில், அவரை உறவினர்கள் தேடிச் சென்ற நிலையில் குளத்துக்கு அருகாமையில் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

கார் விபத்து ஐவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

கார் விபத்து ஐவர் படுகாயம்

கார் விபத்து ஐவர் படுகாயம்

எரிபொருள் ஏற்றிச்சென்ற பௌசரும், காரொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர் என்று திம்புள்ள – பத்தன பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா- கிளங்கள் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் திம்புள்ள – பத்தனை சந்தியில் வைத்தே சனிக்கிழமை (12) இரவு 10 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கார் விபத்து ஐவர் படுகாயம்

வெலிமடையிலிருந்து கொட்டகலை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தேயிலை களஞ்சியசாலை வளாகத்துக்கு பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் பௌசரும், நோர்வூட்டிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காருமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

கார் வேகமாக செலுத்தப்பட்டுள்ளது எனவும், அதன் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார் எனவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த ஐவரும் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 20 -30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் திம்புள்ள – பத்தன பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சிறுமியை திருமணம் செய்ய அழைத்துச் சென்றவர் கைது

சிறுமியை திருமணம் செய்ய அழைத்துச் சென்றவர் கைது

15 வயதான சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி அழைத்துச் சென்ற இளைஞர் முல்லைத்தீவு கள்ளப்பாட்டு பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசுவமடுவினை சேர்ந்த குறித்த சிறுமியை காணவில்லை என கடந்த மாதம் சிறுமியின் பெற்றோரால் விசுவமடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறுமியை திருமணம் செய்ய அழைத்துச் சென்றவர் கைது

அதனையடுத்து, நேற்று (12) முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் வைத்து கள்ளப்பாட்டினை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு, மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட இளைஞரை தடுப்புக் காவலில் வைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது கடந்த மாதம் இந்த இளைஞர் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆணின் சடலம் மீட்பு மிரட்டும் படுகொலைகள்

ஆணின் சடலம் மீட்பு மிரட்டும் படுகொலைகள்

இலங்கை வெல்லவாய – ஊவா குடாஓயா பகுதியில் ஆன் ஒருவர் சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

சிதைவடைந்த நிலையில் சடலம் காணப்படுவதால் ,பல வாரங்களுக்கு முன்னதாக இவர் இறந்திருக்கலாமா என் அசந்தேகிக்க படுகிறது .

இவர் தற்கொலை புரிந்தாரா அல்லது படுகொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பான விசாரங்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாக பகுதியிலுள்ள பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆண் ஒருவர் இன்று (12) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பெகாக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது

குறித்த நபர் மைக்கல் என்று அழைக்கப்படுவதாகவும் இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்தபகுதி பொது கட்டிடங்களான சந்தை மற்றும்

பஸ்தரிப்பிட கட்டிடங்களில்; தங்கி வாழ்ந்து வருதாகவும் இவர் தொடர்பான மேலதிக விபரங்கள் தெரியவில்லை பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

13 வயதுடைய சிறுமிகள் மாயம் 17 வயது சிறுவர்கள் கைது

13 வயதுடைய சிறுமிகள் மாயம் 17 வயது சிறுவர்கள் கைது

மட்டக்களப்பு வாகரையில் பாடசாலை ஒன்றில் இல்லவிளையாட்டு போட்டிக்கு என வீட்டைவிட்டு வியாழக்கிழமை (10) சென்று காணாமல் போன 13 வயதுடைய 4 சிறுமிகளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள

சுங்காங்கேணி பிரதேசத்திலுள் வீடு ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (11) மீட்டதுடன் 17 வயதுடைய இரு சிறுவர்களை கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமிகள் பெற்றோரிடம் தலா 300 ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து பாடசாலை சீருடையுடன் வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமிகள் அதனை கழற்றி வேறு ஆடைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து

பஸ் வண்டியில் ஏறி பாசிக்குடா சென்று கடலில் நீராடிய நிலையில் அங்கு நீராடிய சுங்காங்கேணியைச் சேர்ந்த 17 ,16 வயது சிறுவர்களுடன் இரு சிறுமிகளுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

13 வயதுடைய சிறுமிகள் மாயம் 17 வயது சிறுவர்கள் கைது

இதனையடுத்து இரவாகியதால் சிறுமிகள் வீடு செல்ல பஸ் வண்டி இல்லாத காரணத்தால் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு காலையில் போகுமாறு

காதலன்கள் சிறுமிகளை கோரியதையடுத்து 4 சிறுமிகளும் காதலன் ஒருவரின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களையும் வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிறுமிகளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சிங்கராஜா வனப்பகுதியில் ஈரானியர்கள் மூவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சிங்கராஜா வனப்பகுதியில் ஈரானியர்கள் மூவர் கைது

சிங்கராஜா வனப்பகுதியில் ஈரானியர்கள் மூவர் கைது

சிங்கராஜா வனப்பகுதியில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாகங்களை சேகரித்த ஈரானிய பிரஜைகள் மூவருக்கு உடுகம நீதவான் நீதிமன்றம் ஒரு கோடியே முப்பத்திரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 44 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சிங்கராஜா வனப்பகுதியில் ஈரானியர்கள் மூவர் கைது

ஈரானிய பிரஜைகள் மூவரும் அண்மையில் சிங்கராஜா வனப்பகுதியில் தாவர மற்றும் விலங்கு பாகங்களை சேகரித்துக்கொண்டிருந்த போது நெலுவ லங்காகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் நெலுவ வன அதிகாரிகள் குழுவினால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலங்களை இழுத்துச் செல்லும் விலங்குகள்
Posted in இலங்கை செய்திகள்

சடலங்களை இழுத்துச் செல்லும் விலங்குகள்

சடலங்களை இழுத்துச் செல்லும் விலங்குகள்

யாழ்ப்பாணம் – ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 16.08.2023 அன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம், கோம்பயன்மணல் மயானத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றினுள் இருந்து நேற்றைய தினம் (10.08.2023) சிதைவடைந்த நிலையில் குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், நேற்றைய தினம் (10.08.2023) யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சடலங்களை இழுத்துச் செல்லும் விலங்குகள்

இதன்போது போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத சடலங்கள், சத்திர சிகிச்சையின்போது அகற்றப்படும் உடல் உறுப்புக்கள் என்பவை மாநகர சபை ஊடாக கோம்பயன்மணல் மயானத்திலேயே புதைக்கப்பட்டு வந்துள்ளது.

அவ்வாறு புதைக்கப்படுவதை மாநகர சபை பணியாளர்கள் உரிய முறையில் புதைப்பதில்லை, அதனால் நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் அவற்றை இழுத்துச் செல்வதாகவும், அதனால் அப்பகுதியில் துர்நாற்றங்கள் வீசுவதால், அப்பகுதி மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையிலையே யாழ் ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் , அப்பகுதிக்கான பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் கோம்பயன்மணல் மயானத்திற்குப் பொறுப்பான உத்தியோகஸ்தர் ஆகிய மூவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நடு வீதியில் கிடந்த இளைஞனின் சடலம்

நடு வீதியில் கிடந்த இளைஞனின் சடலம்

பதுளை – மஹியங்கனை வீதியில் கந்தகெட்டிய, எவெந்தாவ பகுதியில் உள்ள வீதியில் இன்று (12) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பதுலுஓயா, எவெந்தாவ பகுதியை சேர்ந்த திஸாநாயக்க முதியன்சலாகே நந்தன குமார என்ற 26 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நடு வீதியில் கிடந்த இளைஞனின் சடலம்

இறந்தவரின் தலையில் காயங்கள் இருந்ததாகவும் ​பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டு யானையின் தாக்குதலினால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், இந்த மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

நீர்கொழும்பில் துப்பாக்கிச்சூடு

நீர்கொழும்பில் துப்பாக்கிச்சூடு

நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு – லெல்லம பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

முட்டையால் பேக்கரி பொருட்கள் விலையேறும் அபாயம்
Posted in இலங்கை செய்திகள்

உள்நாட்டு முட்டை விலை 35 ரூபா

உள்நாட்டு முட்டை விலை 35 ரூபா

சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதித்தால், டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையை 35 ரூபாவுக்கு வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கட்டுப்பாட்டு விலையை நீக்கும் நடவடிக்கையால் தற்போது முட்டை விற்பனை வலையமைப்பு வலுவடைந்து வருவதாக அதன் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிடுகின்றார்.

ஒரு கிலோகிராம் பொதி செய்யப்பட்ட கோழி இறைச்சியை 1,250 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் குணசேகர குறிப்பிடுகின்றார்.

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

பணத்தை பறித்தெடுத்த 3 பொலிஸ் அதிகாரிகள் அதிரடி கைது

பணத்தை பறித்தெடுத்த 3 பொலிஸ் அதிகாரிகள் அதிரடி கைது

மட்டக்களப்பில் உணவகம் ஒன்றில் வேலை முடித்துவிட்டு ஏறாவூரிலுள்ள தனது வீட்டுக்கு இரவு 11 மணிக்கு திரும்பிக் கொண்டிருந்த ஒருவரிடம் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார் 6,500 ரூபா

பணத்தை பறித்தொடுத்த சமபவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 3 பொலிஸாரை இன்று (11) அதிகாலையில் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த நபர் புதன்கிழமை இரவு ஏறாவூர் மிச் நகரிலுள்ள வீட்டிற்கு மோட்டர் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த பொது ஜீப் வண்டியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு பொலிஸ் சாஜன் உட்பட 3 பேர் குறித்த நபரை நிறுத்தி சோதனையிட்டனர்.

பணத்தை பறித்தெடுத்த 3 பொலிஸ் அதிகாரிகள் அதிரடி கைது

இதனையடுத்து குறித்த நபருக்கு அடையாள அட்டை இல்லாததையடுத்து அவரை தமது ஜீப் வண்டியில் ஏற்றி அந்த பகுதி வீதிகளில் சுற்றிதிரிந்து 25 ஆயிரம் ரூபா பணம் தந்தால் விடுவதாக அல்லது கைது செய்து சிறையில்

அடைப்பதாக அச்சுறுத்திய நிலையில் அவர் தன்னிடம் பணம் இல்லை 6500 ரூபா மாத்திரம் தான் இருக்கின்றது என தெரிவித்த போது அந்த பணத்தை அவரிடமிருந்து பறித்தெடுத்து விட்டு ஜீப் வண்டியில் இருந்து அவரை இறக்கி விட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரியின் கவனத்திற்கு சென்றதையடுத்து உடனடியாக அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற் கொண்டு அவர்களை கைது செய்யமாறு மாவட்ட குற்ற விசாரணைப்

பிரிவிடம் ஓப்படைக்கப்பட்டதையடுத்து 3 பொலிஸாரை இன்று அதிகாலை 5.30 மணிக்கு கைது செய்து மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்..

இதல் கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

யாழில் பாடசாலை மாணவர்கள் போர்க்கொடி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பாடசாலை மாணவர்கள் போர்க்கொடி

யாழில் பாடசாலை மாணவர்கள் போர்க்கொடி

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி முன்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர் .

குறித்த பாடசாலையில் போதித்து வரும் ஆசிரியர் ஒருவர் ,சமூக வலைத்தலங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருவதாகவும் ,அதனால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த போராட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்க படுகிறது .

யாழில் பாடசாலை மாணவர்கள் போர்க்கொடி

உற்று நோக்கின் இதன் பின்புலத்தில் அரசியல் புதைந்துள்ளதை இந்த விடயம் எடுத்து காண்பிக்கிறது .

கல்வியை போதிக்கும் ஆசிரியர் சமூக வலைத்தளங்களில் தமது பகுத்தறிவு கருத்தை பதிவிட ,பாடசாலைகள் தடையா ..?அப்படி என்றால் அந்த பாடசாலை நிர்வாகத்தின் சிந்தனை போக்கும் ,செயல் திறனும் எவ்வாறான நிலையில் உள்ளது என்பதை கவனித்து கொள்ளலாம்

பாடசாலை முடிவுற்று பின்னர் மாணவர்கள் போராட்டத்தை நடத்தி இருப்பதில் இருந்தே மேற்படி விடயத்தை கணிக்க முடிகிறது ..

சீனா போர் கப்பலில் கொழும்பில்
Posted in இலங்கை செய்திகள்

சீனா போர் கப்பல் கொழும்பில்

சீனா போர் கப்பலில் கொழும்பில்

சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் போர்க்கப்பலான HAI YANG 24 HAO இன்று (ஆகஸ்ட் 10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கொழும்பை வந்தடைந்த 129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பேர் கொண்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர் மற்றும் கமாண்டர் ஜின் சின் தலைமை தாங்குகிறார்.

இதற்கிடையில், கப்பல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

முல்லைத்தீவில் மினி சூறாவளி
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் மினி சூறாவளி

முல்லைத்தீவில் மினி சூறாவளி

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (10) மாலை வேளையில் மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.

ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் கடும் காற்றும் மின்னல் தாக்கமும் இடம்பெற்றுள்ளது இதனால் தற்காலிக வீடுகளில் வாசித்தவர்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவில் மினி சூறாவளி

ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட மானுருவி கிராமத்தில் மின்னல் தாக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

மானுருவி கிராமத்தில் வசிக்கும் நாதன் என்ற விவசாயியின் காணில் உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியுள்ளதுடன் மின்னல் தாக்கத்தினால் வீட்டில் உழவியந்திரத்தின் கொட்டகை உடைந்துவீழ்ந்துள்ளது பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வீட்டில் பயன்தரு மரங்கள் சில மின்னல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.