Tag: விலங்குகள்
திடீரென பலியாகும் விலங்குகள்
திடீரென பலியாகும் விலங்குகள்
திடீரென பலியாகும் விலங்குகள் ,நாய்கள் மர்மமான முறையில் மரணம் மன்னர் நலவன் வாடி பகுதியில் வீட்டு வளர்ப்பு நாய்கள் மற்றும் காகங்கள் என்பன மர்மமான முறையில் இறந்து வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
கடந்த சில நாட்களாக போதையில் வசித்து வரும் மக்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர் .
காகங்கள் கோழிகள் பலி
இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் காகங்கள் கோழிகள் என்பனவும் இவ்வாறு மர்மமான முறையில் இறந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நாய்கள் மற்றும் கோவிலுக்கு நான் தடுப்பூசிகள் போடப்பட்டு அவை நல்ல நிலையில் இருப்பதாகவும் வீடுகளை விட்டு அவை கடந்து செல்கின்ற பொழுது இவ்வாறான முறையில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விச மருந்துகளை வைத்து நாய் கொலை
திருடர்கள் திட்டமிட்டு விச மருந்துகளை வைத்து நாய்களை கொல்கிறார்களா அல்லது வேறு ஏதாவது உணவுகளை உட்கொண்டு அதனால் நாய்கள் மற்றும் கோழிகள் காகங்கள் உள்ளிட்டவை இறந்து வருகின்றனவா என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .
மிகவும் ஆரோக்கியமாக அனைத்து தடுப்புசிகளும் செலுத்தி போடப்பட்ட முறையில் சுற்றித்திரிந்த இந்த விலங்குகள் பறவைகள் இவ்வாறு திரிவது மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது.
வீடுகளுக்கு சென்று திருடர்கள் தமது கைவரிசையை காட்டி வருகின்ற நிலையில் இங்கு இருக்கின்ற நாய்களுக்கு, இவ்வாறான மருந்துகள் வைத்து கொலை செய்யப்படுகின்றன சந்தேகமும் எழுப்ப பட்டுள்ளது .
சடலங்களை இழுத்துச் செல்லும் விலங்குகள்
சடலங்களை இழுத்துச் செல்லும் விலங்குகள்
யாழ்ப்பாணம் – ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 16.08.2023 அன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம், கோம்பயன்மணல் மயானத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றினுள் இருந்து நேற்றைய தினம் (10.08.2023) சிதைவடைந்த நிலையில் குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், நேற்றைய தினம் (10.08.2023) யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலங்களை இழுத்துச் செல்லும் விலங்குகள்
இதன்போது போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத சடலங்கள், சத்திர சிகிச்சையின்போது அகற்றப்படும் உடல் உறுப்புக்கள் என்பவை மாநகர சபை ஊடாக கோம்பயன்மணல் மயானத்திலேயே புதைக்கப்பட்டு வந்துள்ளது.
அவ்வாறு புதைக்கப்படுவதை மாநகர சபை பணியாளர்கள் உரிய முறையில் புதைப்பதில்லை, அதனால் நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் அவற்றை இழுத்துச் செல்வதாகவும், அதனால் அப்பகுதியில் துர்நாற்றங்கள் வீசுவதால், அப்பகுதி மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையிலையே யாழ் ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் , அப்பகுதிக்கான பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் கோம்பயன்மணல் மயானத்திற்குப் பொறுப்பான உத்தியோகஸ்தர் ஆகிய மூவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்புby நிருபர் காவலன்
- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைதுby நிருபர் காவலன்
- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைதுby நிருபர் காவலன்
- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடுby நிருபர் காவலன்
- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்ததுby நிருபர் காவலன்













