ராஜபக்ஷவின் கூரையில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ராஜபக்ஷவின் கூரையில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்பு

ராஜபக்ஷவின் கூரையில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்பு

மாத்தறை, மெத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அறை ஒன்றின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியின் பழைய அறையொன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்களே இவ்வாறு

மீட்கப்பட்டுள்ளன. மேலும் பாடசாலையின் குறித்த அறை பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ராஜபக்ஷவின் கூரையில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்பு

அங்கிருந்து டி56 தோட்டாக்கள் 20, மிமீ 3.2 தோட்டாக்கள் 24 , மி.மீ. 9 தோட்டாக்கள் 107 மற்றும் கல்கடஸ் வகை துப்பாக்கி ஒன்றும் TNT என சந்தேகிக்கப்படும் 194 கிராம் வெடிபொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

திலீபனின் ஊர்தி மீது கொலை வெறித் தாக்குதல் அறுவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

திலீபனின் ஊர்தி மீது கொலை வெறித் தாக்குதல் அறுவர் கைது

திலீபனின் ஊர்தி மீது கொலை வெறித் தாக்குதல் அறுவர் கைது

திருகோணமலை கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும்

திலீபனின் ஊர்தி மீது தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் இருவர் உட்பட 6 பேர் சீனன்குடா மற்றும் திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பின்னர் வாகனத் தொடரணி தம்பலகமுவவை நோக்கி திரும்பிச் சென்றதுடன் செல்வராசா கஜேந்திரன் எம்.பி, தொலைபேசி ஊடாக, பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்தார்.

திலீபனின் ஊர்தி மீது கொலை வெறித் தாக்குதல் அறுவர் கைது

அதன் பின்னர் திருகோணமலை பொலிஸ் குழுவொன்று தம்பலகாமுக்கு வந்து செல்வராசா கஜேந்திரன் எம்.பியிடம் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் விசாரணையை சீனன்குடா பொலிஸாரிடம் ஒப்படைத்தது.

இவ்வாறு சீனன்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் திருகோணமலை விஜேசேகரவை வசிப்பிடமாகவும் மற்றையவர் சர்தாபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளனர்.

திருகோணமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் மணயவெளி மற்றும் சுமேதங்கரபுர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

31 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
Posted in இலங்கை செய்திகள்

31 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

31 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி இலங்கைக்கு வரமுடியாமல் தங்கியிருந்த 31 இலங்கையர்கள், அங்குள்ள இலங்கை தூதரகத்தின்

தலையீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக விமான அனுமதியின் கீழ் இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் இலங்கைக்கு வருவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்ட இலங்கையர்களின் குழுவாகும்.

இவர்கள் இன்று காலை 06.16 மணியளவில் குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்களில் 03 ஆண்களும் 28 பெண்களும் அடங்குவர்.

31 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மேலும், கடந்த 12 ஆம் திகதி குவைத்தில் இருந்து 33 பேர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 09 ஆண்களும் 24 பெண்களும் இருந்தனர்.

அதன்படி, இந்த இரண்டு வாரங்களில், குவைத்தில் வீட்டு வேலை செய்யச் சென்று விசா இல்லாமல் தங்கியிருந்த 64 இலங்கையர்கள், அங்குள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டவர்கள், இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம், குருநாகல், காலி, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்களில் மூவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்துக்களில் மூவர் பலி

விபத்துக்களில் மூவர் பலி

சந்திவெளி மற்றும் கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் 4 வயது சிறுமி மற்றும் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்கள் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியின் வேப்பஅடி வளைவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் இளம் மகளும் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கிச் சென்ற வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடதுபுறத்தில் உள்ள வேப்ப மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த வேனின் சாரதி, அவரது மகள் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாரதியும், மகளும் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்களில் மூவர் பலி

படுகாயமடைந்த மனைவி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 54 வயதுடையவர் எனவும் உயிரிழந்த சிறுமி காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 04 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கல்கமுவ – ஆனமடுவ வீதியில் வாலசேன பிரதேசத்தில், ஆனமடுவவிலிருந்து கல்கமுவ நோக்கிச் சென்ற வேன், முன்னால் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த தம்பதியினர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 46 வயதுடைய மஹாநான்னேரிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

தன் மீதான துப்பாக்கி சூடு குறித்து பா.உ உத்திக விசேட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தன் மீதான துப்பாக்கி சூடு குறித்து பா.உ உத்திக விசேட அறிவிப்பு

தன் மீதான துப்பாக்கி சூடு குறித்து பா.உ உத்திக விசேட அறிவிப்பு

நாட்டில் தற்போதுள்ள முறைமை காரணமாகதான் தான் சுடப்பட்டதாக நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (19) தனது கார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தன் மீதான துப்பாக்கி சூடு குறித்து பா.உ உத்திக விசேட அறிவிப்பு

மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

“இந்தச் சம்பவத்தை யார் செய்தார்கள் என்பதை விட, தற்போதுள்ள முறைமையினால்தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று நான் நினைக்கிறேன், இந்த முறை தவறு என்று நாம் அனைவரும் அறிவோம், இந்த முறை தவறு என்பது நம் நாட்டு மக்களுக்கும் தெரியும். நமது நாட்டின் சமூக அமைப்பு தவறு. அரசியலும் தவறு. அதனால்தான் நாடு இன்று இந்த நிலைக்கு வந்துள்ளது.

உணவு விஷமானதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் குழுவொன்று மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Posted in இலங்கை செய்திகள்

உணவு விஷமாகி 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு விஷமாகி 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு விஷமானதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் குழுவொன்று மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உணவு விஷமாகி 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 30 மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்

சிலரால் தாக்கப்பட்டதில் தலாத்துஓயா பொலிஸில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

குருதெனிய வீதியில் நேற்று (17ஆம் திகதி) இரவு 11 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இருவரும் கடமைகளை முடித்துக் கொண்டு குறித்த இடத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், இது தொடர்பா

தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் தாய் மற்றும் மச்சானுக்கு நேர்ந்த கதி
Posted in இலங்கை செய்திகள்

தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் தாய் மற்றும் மச்சானுக்கு நேர்ந்த கதி

தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் தாய் மற்றும் மச்சானுக்கு நேர்ந்த கதி

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிடியில் இருந்து ஹரக் கட்டா தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் தற்போது தலைமறைவாகியுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளின் தாயாரையும், மற்றுமொரு நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் தாய் மற்றும் மச்சானுக்கு நேர்ந்த கதி

இதேவேளை, சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிளின் காரும் மாத்தறை பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள மற்றைய நபர் கான்ஸ்டபிளின் சகோதரியின் கணவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்திற்காக இவர்கள் உதவியுள்ளமை தெரியவந்துள்ளதை
தொடர்ந்து பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாயவும் ரணிலும் மறைக்கிறார்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாயவும் ரணிலும் மறைக்கிறார்கள்

முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என நாட்டு மக்கள் கோரும் இவ்வேளையில்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் அதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையையும் அரசியலாக்காது முழுமையான உண்மையைத்

தேடுவதே எதிர்க்கட்சியின் நோக்கம் என்றும், அரசாங்கம் உண்மைகளையும் தரவுகளையும் மறைப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமக்கும் சரியான உண்மைகள் தெரியாது என்பதனால்,இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துமாறே எதிர்க்கட்சி கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இங்கு உண்மையை மறைப்பது என்பதிலிருந்து கைகளில் இரத்தம் தோய்ந்த நபர்களின் சதியோ என்று சந்தேகம் எழுகிறது என்றும், இந்த தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

என்றாலும், இங்கு உண்மை மறைக்கப்படுவது மாத்திரம் இடம் பெற்றுள்ளதால் அரசியல் சாதகங்களைப் பொருட்படுத்தாமல், முழுமையான உண்மையை இங்கு வெளிக்கொணர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டம் இன்று (18) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாயவும் ரணிலும் மறைக்கிறார்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளையும் ஏனைய காரணத்தை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிப்பதாக அளித்த வாக்குறுதிகளின் பிரகாரமே ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத்

தேர்தலிலும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிக்கு 69 இலட்சம் மக்கள் ஆணை கிடைத்தாலும், அவர் அந்த உண்மையைத் தேடாது,உண்மையைக் கண்டறியாமல் பயங்கரவாத செயலை விசாரித்த குற்றப் புலனாய்வுத்

திணைக்களத்தின் அதிகாரிகள் பலரையும் அந்த நடவடிக்கைகளில் இருந்து நீக்கினார் என்றும், கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு செயற்பாடுகளை பார்க்கும் போது உண்மையை தேடுவதை விட உண்மை

மறைக்கப்பட்டுள்ளதையே மேற்கொண்டுள்ளதாக தோன்றுகிறது என்றும், இதன் காரணமாக உண்மையைக் கண்டறியும் பொறுப்பைக் கூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புறக்கணித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவ்வாறே,தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பின்பற்றி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை மறைத்து வருகிறது என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நேர்மையான, நம்பகமான, பக்கச்சார்பற்ற தேசிய

விசாரணையைத்தான் தாம் விரும்பினாலும், கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது, தேசிய விசாரணைகளில் அதிக நம்பிக்கை இல்லை என்றும், இவ்வாறான நிலையில் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் முதல் பாகம் மாத்திரமே வெளியிடப்பட்டிருந்த போதிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் குறைந்தபட்சம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது எதிர்க்கட்சித் தலைவரால் பரிசீலிக்க தடை

விதிக்கப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் மேற்பார்வையில் மாத்திரம் அதனை பரிசீலிக்க சந்தர்ப்பம் வழங்குவதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் கூட மீறப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 காணொளி தொடர்பில் விசாரணை நடத்த அரசாங்கம் நியமித்துள்ள புதிய குழுவிற்கு இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களும் கர்தினால் அவர்களும்

அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்றும், இவ்வாறு புதிய குழுக்களை நியமிப்பதாலும் கூட உண்மயை மூடி மறைக்கப்படுவதாகவே எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான தாக்குதலுக்கு இந்நாட்டில் உள்ள அனைத்து மதங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த தீவிரப்போக்குடையவர்களும் பொறுப்பாளிகள் என்றும்,இந்த தீவிரவாதிகளால் இந்நாட்டின் தேசிய பாதுகாப்பு பறிபோனது

என்றும், இந்த தாக்குதலின் உண்மை கண்டறியப்படாத வரை, இது தேசிய பாதுகாப்பிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், எனவே மதங்களுக்கும்

இனங்களுக்கும் இடையில் காணப்படும் நம்பமகற்ற தன்மையையும் சந்தேகத்தையும் நீக்க உண்மையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

எம் பி மீதான துப்பாக்கிச் சூடு விசாரணை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு
Posted in இலங்கை செய்திகள்

எம் பி மீதான துப்பாக்கிச் சூடு விசாரணை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

எம் பி மீதான துப்பாக்கிச் சூடு விசாரணை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பிலான விசாரணை உடனடியாக அமுலுக்கு வருமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது சில குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று (17 இரவு 10.35 மணியளவில் அவரின் வீட்டுக்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

எம் பி மீதான துப்பாக்கிச் சூடு விசாரணை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பும் போதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

காரில் அவர் மட்டுமே இருந்ததாகவும், தாக்குதலில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார்தெரிவித்தனர்.

காரின் இடது பின் இருக்கை பகுதியில் இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் அந்த விசாரணை தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வீட்டிற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் சிக்க போகும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

ஐ.நா பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐ.நா பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவதுகூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது

இந்த கூட்டத்தொடர் வரும் 21ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை

துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.

ஐ.நா பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று 17) அதிகாலை நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி கூட்டத்தொடரில் பங்கேற்று, தனது விசேடஉரையை ஆற்ற உள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருக்கு இணையாக செப்டம்பர் இன்று நடைபெறவுள்ள, 2030 ஆம் ஆண்டிற்கான மாற்றம் மற்றும் விரைவான நடவடிக்கைகள் என்பவற்றுக்காக உலக தலைவர்களினால் வழிகாட்டுதல்கள்
வழங்கப்படும் 2023 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் உச்சி மாநாட்டின் அரச தலைவர்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

மேலும், அன்று ஜனாதிபதி, உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், கடல்சார் நாடுகளுக்கான ஆசிய-பசுபிக் தீவு நாடுகள் கலந்துரையாடலிலும் பங்கெற்கவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

கடலரிப்புக்கு நடவடிக்கை எடுக்க கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கடலரிப்புக்கு நடவடிக்கை எடுக்க கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கடலரிப்புக்கு நடவடிக்கை எடுக்க கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கடலரிப்புக்கு நடவடிக்கை எடுக்க கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்ற கடலரிப்பிற்கு தீர்வு காணுமாறு சாய்ந்தமருது மீனவர்கள் வீதியை மறித்து போராட்டம் ஒன்றினை இன்று (18) மேற்கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் காலநிலை மாற்றம் காரணமான கடும் கடலரிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன.

இதில் சாய்ந்தமருது பகுதி கடற்கரை பகுதி பெரும்பாலும் கடலரிப்பு அதிகமாக இடம்பெற்று வருவதுடன் மீனவர்களும் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

கடலரிப்புக்கு நடவடிக்கை எடுக்க கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்த கடலரிப்பு காரணமாக மீனவர்களின் ஓய்வு அறைகள், வாடிகள், பள்ளிவாசல்கள் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அத்துடன் மீனவர்களின் தோணிகள் வலைகள் கடலரிப்பினால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளன.

மேலும் குறித்த கடலரிப்பினை தடுப்பதற்காக கரையோரம் பேணல் திணைக்களம் பல்வேறு நடவடிக்கைககளை மேற்கொண்டுள்ளதுடன் பாரிய கற்களும் வெளியிடங்களில் இருந்து கனரக வாகனங்களின் உதவியுடன் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆனால் இக்கற்கள் தமது மீன்பிடி தொழிலை பாதிப்புறும் வகையில் போடப்பட்டுள்ளதாகவும் கற்களில் மோதி தமது தோணிகள் உடைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

அத்துடன் குறித்த போராட்டத்தை சாய்ந்தமருது பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தள்ளதுடன் மீனவர்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.

தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான இனவெறி தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான இனவெறி தாக்குதல்

தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான இனவெறி தாக்குதல்

தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான இனவெறி தாக்குதலை கண்டிக்கின்றோம் என வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பொத்துவிலில் இருந்து நல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்த தியாக தீபம் திலீபன் அவர்களது உருவம் தாங்கிய ஊர்தி மீது நேற்று (17) மாலை, திருகோணமலை, கப்பல்துறையில் வைத்து இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் சூழ்ந்திருக்க இனவெறி கொண்ட காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தியாகி திலீபன் தமிழ் மக்களின் உரிமைக்காய் காந்தியை மிஞ்சிய வகையில் அகிம்சை வழியில் போராடிய போராளியாவார். அவரின் தியாகங்கள் என்றென்றும் அனைவராலும் மதிக்கப்படுவதடன், சர்வதேசத்தினால் அவரது தியாகம் வியந்து பார்க்கப்படுகின்றது.

தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான இனவெறி தாக்குதல்

ஈழத்தமிழர் எதிர்கொள்ளும் சவால்களை உலகறியச்செய்த பார்த்தீபனின் தியாகத்தினை கண்டு சிங்கள பௌத்த தேரர் ஒருவர் கடந்த வருடம் கவிதை இயற்றியிருந்தமை யாவரும் அறிந்ததே.

இவ்வாறான பெருமை மிக்க பெருந்தகையின் திருவுருவப்படத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட இனவெறித்தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்பதுடன் எமது நினைவேந்தல் உரிமை எமக்கு மறுக்கப்பட்டுள்ளதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தி நிற்கின்றது.

மேலும் இவ்வூர்தியில் சென்றுகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் மற்றும் அவருடன் பயனித்தவர்கள் மீதான தாக்குதல்கள் இலங்கையில் சிறப்புரிமை கொண்ட, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பதனை வெளிப்படுத்தியுள்ளது.

இவ்வாறான சூழலில் உள்நாட்டுக்குள் விசாரணை தீர்வு என்பவை சாத்தியமற்றது என்று நாம் தொடர்ந்து கூறிவருவதன் காரணங்களை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியானது
Posted in இலங்கை செய்திகள்

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியானது

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியானது

ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு தடை அல்லது இடையூறு ஏற்படக்கூடும் என கருதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியானது

மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும்
கனிய எண்ணெய் உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் அல்லது விநியோகம்


மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு,

உணவளித்தல் மற்றும் சிகிச்சைக்கு தேவையான அல்லது செய்ய வேண்டிய அனைத்து சேவை, வேலை அல்லது உழைப்பு ஆகியவை இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக பெயரிடப்பட்டுள்ளன

ஆபாச படங்கள்
Posted in இலங்கை செய்திகள்

ஆபாச படங்கள் வீடியோவை வெளியிடுவோருக்கு கடும் தண்டனை

ஆபாச படங்கள் வீடியோவை வெளியிடுவோருக்கு கடும் தண்டனை

நிர்வாண படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் சட்டங்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய சட்டமூலம் குறித்த அமைச்சரவைப் பத்திரம், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஆபாச படங்கள் வீடியோவை வெளியிடுவோருக்கு கடும் தண்டனை

காதல் உறவுகளின் போது எடுக்கப்பட்ட தனிப்பட்ட, நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த உறவு முறிந்த பின்னர் சிக்கலை ஏற்படுத்துவதற்காக

வேறு நபர்கள் பார்வையிடும் வகையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்புவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த புதிய விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, முதன்முறையாக இதுபோன்ற குற்றத்திற்காக சிக்கும் நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

அதேநேரம் இரண்டாவது முறை அல்லது மீண்டும் மீண்டும் சிக்கும் நபருக்கு தண்டனை மற்றும் அபராதத் தொகை இரு மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதல் சி ஐ டி விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

சைபர் தாக்குதல் சி ஐ டி விசாரணை

சைபர் தாக்குதல் சி ஐ டி விசாரணை

அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் மீதான சைபர் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் கனக ஹேரத் விடுத்த அறிவித்தலுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நடந்த சைபர் தாக்குதலால், அமைச்சரவை அலுவலகம் உட்பட பல அரச நிறுவனங்களின் மின்னஞ்சல்களின் தரவுகள் அழிக்கப்பட்டுள்ளன.

சைபர் தாக்குதல் தொடர்பில் தகவல், தொடர்பாடல் நிறுவனம் மற்றும் இலங்கை கணினி அவசர பதில் பிரிவிடம் இருந்தும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பதில் அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிடுகின்றார்.

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

பேராசைக்காக ஜனாதிபதி பதவியை பெற தயார் இல்லை

பேராசைக்காக ஜனாதிபதி பதவியை பெற தயார் இல்லை

கொள்கைகளை மீறிக் கொண்டு நாட்டு மக்களை மறந்துவிட்டு தனிப்பட்ட பேராசைக்காக ஜனாதிபதி பதவியையும் பிரதமர் பதவியையும் பெற தாம் தயாராக இல்லை என்றும், மொட்டுவின் 134 உறுப்பினர்களின் மட்டுப்படுத்தப்பட்ட ஆணையுடன் ஜனாதிபதி கதிரைக்கு சென்ற

தற்போதைய ஜனாதிபதி, மொட்டு திருடர்கள் குழுவின் பாதுகாவலராக மாறி தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை மறைத்து வருகின்றார் என்றும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கூட ஆணைக்குழு அறிக்கையின் பிரதிகளை பெற்றுக் கொள்ளமுடியாத விதமாக மறைத்து வைத்துள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உண்மையை மறைப்பதால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பூரண அரசாட்சியை தருவதாக கூறினாலும் மக்கள் ஆணையின்றி ஜனாதிபதி பதவியையோ பிரதமர் பதவியையோ ஏனைய பதவியையோ அரச அதிகாரத்தையோ பெற தாம் தயார் இல்லை என்றும் தெரிவித்தார்.

பேராசைக்காக ஜனாதிபதி பதவியை பெற தயார் இல்லை

சமய ஸ்தலங்கள் ஊடாக வெளியிடப்படும் சமய செய்திகளின் அடிப்படையில் ஐக்கிய இலங்கையின் தேசிய பாதுகாப்பு பாதுகாக்கப்பட்டாலும் கடந்த காலங்களில் மலட்டுக் கொத்து, மலட்டு அறுவை சிகிச்சை என கூறி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களுக்கு

இடையில் பிளவை ஏற்படுத்தினர் என்றும், இதனால்தான் போராட்டத்திற்கு முன் நல்லிணக்கம் என்பது கடுமையான வார்த்தை பிரயோகமாக அமைந்து காணப்பட்டதாகவும், தேசபிமானம் என்ற பெயரால் இவ்வாறு தாக்கப்பட்ட போதிலும் நாட்டை அடிமைப்படுத்தி நாட்டின் வளங்களை அபகரித்த

ஜனாதிபதியையும் குடும்பத்தையும் விரட்டியடிக்க மக்கள் ஒன்றாய் வீதியில் இறங்கி நடந்திய போராட்டத்தின் பின்னர் நல்லிணக்கம் என்ற வார்த்தை முக்கியமான அரச கொள்கையாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சதஹம் யாத்தரா நிகழ்ச்சியின் 1500 ஆவது நிகழ்வு 15 ஆம் திகதி கேகாலை, கலிகமுவ வட்டராம ரஜமஹா விகாரையில் இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டை அழித்த தரப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தால் தாம் தற்போது நாட்டின் ஜனாதிபதி என்றும்,நாட்டை அழித்த மொட்டுடன் எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும்,ஒப்பந்தமொன்று போட வேண்டிய தேவை ஏற்பட்டால் அத்தகையதொரு ஒப்பந்தம் அரசியல் கட்சிகளுடன் அன்றி 220 இலட்சம் பேருடன்தான் போடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு குடும்பம் ஒருதலைபட்சமாக அதிகாரத்திற்கு உரிமை கோரிவாறு தனி ஆட்சியை நடத்திய நாட்டில் ஒரு கட்சிக்குள் பிரதிவாதங்கள் ஏற்படும் போது, ​​கட்சிகளுக்குள் மோதல்கள் உருவெடுத்துள்ளது என்று விளம்பரம் செய்தாலும் அது மோதலாகாது என்றும், முறைமை மாற்றம் கோரும் நாட்டில் எழுந்துள்ள

இந்த வாதங்கள் ஒரு ஜனநாயகப் போக்கின் தொடக்கமாகும் என்றும்,தலைவர் தவறு செய்தாலும் சுதந்திரமாக பேசுவதே அடிமை அரசியலில் இருந்து விடுபட்டு ஜனநாயக பாதையில் பிரவேசிப்பதற்கான இலட்சனம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பேராசைக்காக ஜனாதிபதி பதவியை பெற தயார் இல்லை

வாத பிரதிவாதங்களை முன்வைப்பதில் இறுதியில் ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என்றும்,அடிமைத்தனமான குடும்ப அரசியலில் இருந்தும், மதத்தை விற்கும் குடும்ப அரசியலிலிருந்தும் விலகுவதிலும், ஜனநாயக

சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எதிர்ப்புத் தெரிவிக்கும் சுதந்திரம் உள்ள மத்தியஸ்த பாதையில் சமூக ஜனநாயக பயணத்தை மேற்கொள்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புத்த பகவான் கூட ஊழலையும் மோசடியையும் நிராகரித்தார் என்றாலும்,நாட்டு மக்களை அடிமைகளாக கனவு காணும் பெரும் குடும்பங்கள் தேசாபிமான பெருமிதத்துடன் பௌத்தத்தை முன்நிறுத்தி, மக்களை ஏமாற்றி

நாட்டைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் முன் வந்து இறுதியில் நாட்டின் வளங்களையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் உள்ள 220 இலட்சம் பேரினதும் வளங்களை கொள்ளையடித்தவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு இழந்த வளங்களை மீட்பதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சதஹம் யாத்ரா வேலைத்திட்டத்தின் கீழ் திஸ்ஸ அத்தநாயக்க அவர்கள் 1802 மத ஸ்தலங்களுக்குச் சென்று ஐக்கிய மக்கள் சக்தியின் சமயக் கொள்கைகள் மற்றும் சமூக நல்லிணக்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார் என்றும்,

பௌத்த விகாரைகளில் இடம் பெறும் நிகழ்வுகளில் 1500 ஆவது நிகழ்ச்சி 15 ஆம் திகதி நடைபெற்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இன்று (17) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 6 வயது சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், உயிரிழந்த குழந்தையின் தந்தை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடலில் விழுந்து உயிரிழந்த மீனவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடலில் விழுந்து உயிரிழந்த மீனவரின் சடலம் மீட்பு

கடலில் விழுந்து உயிரிழந்த மீனவரின் சடலம் மீட்பு

நடுக்கடலில் விழுந்து உயிரிழந்த மீனவரின் உடலம் பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பலநாள் மீன்பிடிப் படகில் மீன்பிடிக்க சென்ற நிலையில் கடலில் விழுந்து உயிரிழந்த மீனவர் ஒருவரின் சடலம் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பகுதியில் இருந்து நேற்று (16) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மீன்பிடிக்க சென்ற திருகோணமலையைச் சேர்ந்த 44 வயதுடைய ஆர்.பி.நிமல் கருணாரத்ன என்பவரே நடுக்கடலில் தவறி வீழ்ந்தது உயிரிழந்திருந்தார்.

பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகைள முன்னெடுத்து வருகின்றனர்.

மதிலில் வேன் மோதியதில் அறுவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

மதிலில் வேன் மோதியதில் அறுவர் காயம்

மதிலில் வேன் மோதியதில் அறுவர் காயம்

ஹாலிஎல பிரதேச செயலகத்திற்கு முன்பாக வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மதிலில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் படுகாயமடைந்துள்ளதுடன், அவர்கள் லுனுகலவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பண்டாரவளைக்கு இன்று (17) காலை திரும்பிக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் தந்தை, தாய் மற்றும் மூன்று மகள்கள் மற்றும் தந்தையின் சகோதரி ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.