Tag: மதிலில் வேன் மோதியதில்
Posted in இலங்கை செய்திகள்
மதிலில் வேன் மோதியதில் அறுவர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 17/09/2023
மதிலில் வேன் மோதியதில் அறுவர் காயம்
ஹாலிஎல பிரதேச செயலகத்திற்கு முன்பாக வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மதிலில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் படுகாயமடைந்துள்ளதுடன், அவர்கள் லுனுகலவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பண்டாரவளைக்கு இன்று (17) காலை திரும்பிக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் தந்தை, தாய் மற்றும் மூன்று மகள்கள் மற்றும் தந்தையின் சகோதரி ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
- இலங்கையில் இந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 2,400 பேர் பலிby நிருபர் காவலன்
- கஹவத்த அடிவார மருத்துவமனை சேமிப்புக் கட்டிடத்தில் தீ விபத்துby நிருபர் காவலன்
- திருகோணமலை புத்தர் சிலை பிக்கு கைதுby நிருபர் காவலன்
- தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பலிதா கைதுby நிருபர் காவலன்
- உணவு நஞ்சானதில் உட்க்கொண்ட 35 மாணவர்கள் மருத்துவமனையில்by நிருபர் காவலன்













