Tag: அறுவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்
மதிலில் வேன் மோதியதில் அறுவர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 17/09/2023
மதிலில் வேன் மோதியதில் அறுவர் காயம்
ஹாலிஎல பிரதேச செயலகத்திற்கு முன்பாக வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மதிலில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் படுகாயமடைந்துள்ளதுடன், அவர்கள் லுனுகலவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பண்டாரவளைக்கு இன்று (17) காலை திரும்பிக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் தந்தை, தாய் மற்றும் மூன்று மகள்கள் மற்றும் தந்தையின் சகோதரி ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
- இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலிby நிருபர் காவலன்
- டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.by நிருபர் காவலன்
- கிழக்கு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழைby நிருபர் காவலன்
- மருந்து தட்டுப்பாடு திணறும் இலங்கைby நிருபர் காவலன்
- பாதாள உலக குழு நபர் கைதுby நிருபர் காவலன்












