Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்
ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்
ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்,சாரங்கா பாட்டால் அலறிய சரிகமபா,Saregamapa சாரங்கா,zeetamil saranga
சுவிஸ் ஈழபெண் சரிகமபா பாடல் போட்டியில் கலந்து கலக்கல் .
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சுவிஸ் நாட்டை சேர்ந்த சாரங்கா வரதராஜன் பாடி அசத்தினார் .
சாரங்கா பாட்டால் அலறிய சரிகமபா நிகழ்வு ,இனிமையான குரலில் அவர் பாடிய அந்த பாடல் மக்களை அசரவைத்தது .
Saregamapa சாரங்கா பாட்டை தொடர்ந்து பார்த்து மகிழ மக்கள் பெரும் ஆவலாக உள்ளனர் .
சாரங்கா பாட்டால் அலறிய சரிகமபா
சாரங்கா பாடால் தெரிவில் அவருக்கு பச்சை விளக்கு ஒளிர நடுவர் ஒருவர் அனுமதி வழங்கவில்லை .
அதனை அடுத்து அவர் காத்திருப்பில் வைக்க பட்டுள்ளார் .ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா நிகழ்வில் சாரங்கா கலந்துள்ளதால் ,ஈழ தமிழர்கள் மத்தியில் மிக பெரும் பரபரப்பை இந்த சரிகமபா நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது .
zee tamil சரிகமாபாவில் இம்முறை ஈழ தமிழர்கள் வெற்றி கொடி காட்டுவார்களா ,அல்லது ஏமாற்ற படுவார்களா பொறுத்திருந்து பார்ப்போம் மக்களே .
எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை
எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை
எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை ,யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியிலுள்ள தப்ரபேன் கடலுணவு நிறுவனத்திறற்கு
ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் உள்ளிட்ட குழுவினர் இன்று விஐயம் செய்தனர்.
இதன்போது அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதோடு கடல் உணவு உற்பத்தி நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு பணியாளர்களுடனும் கலந்துரையாடலில் இக்குழு ஈடுபட்டது.
இதன் போது ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் நோர்வே பாராளுமன்றத்தின் தற்போதைய உறுப்பினர் குலாட்டி ஹிமான்ஷு, தப்ரபேன் கடலுணவு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திமோதி ஓ’ரெலி உள்ளிட்ட குழுவினர் வருகை தந்திருந்தனர்.
ஆப்பு வைக்க வந்தார் எரிக் சொல்ஹெய்ம்
இலங்கையில் புலிகளை அழித்த அதே எரிக் சொல்கெம் மீளவும் ,இலங்கை வந்துள்ள செயல் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது .
ரணில் விரித்த வலையின் ஊடாக மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட எரிக்சோல்கெம் புலிகளை திட்டம் போட்டு அழித்தார் .
இப்பொழுது இலங்கை வந்துள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது ,ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தனது கணவரை விடுவிக்க களுத்துறை தெற்கு ஊழல் ஒழிப்பு பிரிவு நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 03 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்புப் பிரிவு
களுத்துறை தெற்கு இலஞ்ச ஒழிப்புப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டி.ஸ்ரீ ரங்கா, ஹெரோயின் போதைப் பொருளுடன் அவரது கணவரை கைது செய்து களுத்துறை தெற்கு பொலிஸுக்கு அழைத்து வந்துள்ளார்.
சந்தேக நபர் சட்டையை எடுத்து வருமாறு மனைவிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும், சுமார் 20 நிமிடங்களின் பின்னர் மனைவி பொலிஸ் நிலையம் வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரிக்கு 3 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்கி ஹெரோயின் வழக்கில் இருந்து சந்தேகநபரை விடுவிக்குமாறு குறித்த பெண் கோரியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி, தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவிற்கு அறிவித்ததை அடுத்து சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம்
விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்க திட்டம்
விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம் ,நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு விவசாயத்திற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில்
கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற டில்மா சினமன் வர்த்தக நாமத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
‘சிலோன் டீ’ என்ற பெயரை சர்வதேச சந்தைக்கு கொண்டு சென்ற டில்மா வர்த்தக நாமம், தனது நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் உள்நாட்டு ஏற்றுமதியை மேலும் விரிவுபடுத்தி இலங்கையின் கறுவா தொழிற்துறையில்
விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம்
பிரவேசித்து டில்மா வர்த்தக நாமத்தின் கீழ் உயர்தர கறுவா உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் உலக சமையல் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் மாஸ்டர் செஃப் தோமஸ் குக்லர் ஆகியோர் டில்மா கறுவா தயாரிப்புகளை அடையாள ரீதியில் வெளியிட்டனர். இதன்போது ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,
கறுவாப் பயிர் விவசாயம் அக்காலத்தில் நம் நாட்டின் முக்கிய பயிராக இருந்தது. பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியடைந்த பின்னர், தென்மேற்கு
ஈரவலயப் பிரதேசத்திற்கு எமது இராச்சியங்கள் இடம்பெயர்ந்த போது, கறுவாத் தொழில்தான் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசென்றது.
எங்களிடம் கறுவா இல்லை என்றால் தம்பதெனிய, யாப்பஹுவ, கம்பளை, ரைகம, கோட்டே ஆகிய இராச்சியங்கள் தோன்றியிருக்காது. இப்படித்தான் கறுவா நம் நாட்டின் வரலாற்றோடு இணைக்கப்பட்டுள்ளது என்றார்.
அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி
அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி
அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி ,இரத்தோட்டை வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
மழையுடன் மின்னல்
நேற்று மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெல்காலயாய , இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மின்னல் தாக்குதல் காரணமாக அண்ணன் தங்கை பலியான சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
கோடைகாலத்தில் ஏற்பட்ட கலாநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட இயற்கையின் தாக்குதலில் சிக்கி அண்ணன் .தங்கை .பலியான சம்பவம் நாடளாவிய ரீதியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
கடந்த தினம் முல்லைத்தீவு பகுதியிலும் இடி தாக்குத்தலில் சிக்கி முன்னாள் போராளி ஒருவர் பலியாகி இருந்தார் .
அதனை அடுத்து தற்போது மின்னல் தாக்கி அண்ணன் தங்கை பலியாகியுள்ளனர் .
கொரியா சென்ற 2000 இலங்கையர்கள்
கொரியா சென்ற 2000 இலங்கையர்கள்
கொரியா சென்ற 2000 இலங்கையர்கள் ,இந்த வருடத்தின் முதல் 04 மாதங்களில் மாத்திரம் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தென் கொரிய வேலை
கடந்த 4 மாதங்களில் 2,064 பேர் தென் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, உற்பத்தித் துறை தொடர்பான வேலைகளுக்காக 1708 பேரும், மீன்பிடித் துறைக்கு 351 பேரும், கட்டுமானத் துறைக்கு 5 பேரும் தென்கொரியாவுக்குச் சென்றுள்ளனர்.
இவர்களில் 1,892 பேர் முதல் முறையாக தென் கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் 41 யுவதிகளும் தென்கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி
இலங்கையின் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை அடுத்து ,இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களினால் ,வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி பல இலங்கையர்கள் செல்கின்றனர் .
அவ்விதம் தற்போது கொரியாவுக்கு பெரும் தொகையில் இலங்கையர்கள் சென்றுள்ளது குறிப்பிட தக்கது
தர்பூசணி மற்றும் நொங்கு விறப்பனை அமோகம்
தர்பூசணி மற்றும் நொங்கு விறப்பனை அமோகம்
தர்பூசணி மற்றும் நொங்கு விறப்பனை அமோகம் ,நாடளாவிய ரீதியில் நிலவி வருகின்ற கடும் வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வெப்பத்தின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் அதிக வெப்பம்
இவ்வாறான நிலையில் மன்னார் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கு தர்பூசணி (வர்த்தக பழம்) மற்றும் நுங்கு கொள்வனவுகளில் பொதுமக்கள் அதிகம் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது.
உள்ளூர் சந்தைகளில் தர்பூசணிகளின் விலை சடுதியாக குறைந்துள்ள நிலையில் மக்கள் அதிகளவான தர்பூசணிகளை கொள்வனவு செய்து வருகின்றனர்.
அதே நேரம் நுங்கு சர்பத் போன்ற இயற்கையான பானங்களையும் பருகி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
வியாபாரிகளால் தர்பூசணி விற்பனை
மன்னார் நகர் பகுதியில் பல இடங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளால் தர்பூசணி விற்பனை இடம் பெற்று வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
வெப்பத்தின் தாக்கம் காரணமாக மக்கள் அதிகம் இவ்வகையான நொங்கு தர்ப்பூசணி என்பனவற்றை அதிகம் வாங்கி உட்க்கொண்டு வருகின்றனர் .
.வெய்யில் காலநிலை தொடர்பாகி மஞ்சள் எச்சரிக்கை விடுக்க பட்ட நிலையில் ,இந்த பழ விற்பனை சூடு பிடித்துள்ளது .
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் நேரலை விவாதம்
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் நேரலை விவாதம்
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் நேரலை விவாதம் ,ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச இன்னும் தனது பங்கேற்பை உறுதிப்படுத்தாத நிலையில், மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் டெய்லி மிரர் மற்றும் லங்காதீப நடத்தும் அரசியல் விவாதத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பை தேசிய மக்கள் சக்தி (NPP) நேற்று ஏற்றுக்கொண்டது.
டெய்லி மிரர் அழைப்பிதழை NPPயின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஏற்றுக்கொண்டார், NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க விவாதத்திற்குத் தயாராக இருப்பதாகவும் அதில் கலந்துகொள்வார் என்றும் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் டெய்லி மிரர் உத்தியோகபூர்வ அழைப்பிதழை கையளித்ததுடன் பங்கேற்பதற்கான மறுமொழஜயைப் பெற குழு எதிர்பார்த்துள்ளது.
சஜித் பிரேமதாசவுக்கு அழைப்புக் கடிதம் கிடைத்துள்ளதை எனினும் நேற்று மாலை உறுதிசெய்த பிரேமதாசவின் அலுவலகம், விவாதங்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாளும் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கு அதனை அனுப்பி வைத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பிதழ் விரைவில் கையளிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை வெற்றி பெற்றால் தாம் நாட்டுக்கு ஆற்றவுள்ள பணி , பொருளாதாரம் மற்றும் அரசியல் கொள்கைகள் மேலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான
திட்டங்கள் குறித்த நேரலை விவாதம்
திட்டங்கள் குறித்த நேரலை விவாதம் ஒன்றை மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களையும் கொண்டு நடாத்த டெய்லி மிரர் மற்றும் லங்காதீப கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி அவர்களுக்கு அழைப்பிதழ்களை அனுப்பி வைத்தது.
இந்த நேர்காணல் டெய்லி மிரர், லங்காதீப ,தமிழ் மிரர் மற்றும் சண்டே டைம்ஸ் டிஜிட்டல் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
மூன்று வேட்பாளர்களும் அழைப்பிதழ்களை ஏற்றுக்கொண்டவுடன் விவாதத்தை நடத்துவதற்கான திகதி மற்றும் நேரம் குறித்த நேரத்தில் அறிவிக்கப்படும்.
பேருந்தை மதுபோதையில் செலுத்திய சாரதி
பேருந்தை மதுபோதையில் செலுத்திய சாரதி
இலங்கை வவுனியா, ஏ9 வீதியில் பேருந்தை மதுபோதையில் செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசார் விசேட சோதனை நடவடிக்கை
வவுனியா தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து பொலிசார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் .
அதன் போது ஏ9 வீதியில் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றின் சாரதி மது போதையில் பேரூந்தை செலுத்தியமை கண்டு பிடிக்கப்பட்டது.
அதனை அடுத்தே சாரதி கைது செய்யப்பட்டார் ,இவ்விரு மதுபோதையில் பேரூந்தை செலுத்தி செல்வதனால் பல விபத்து சம்பவங்கள் ஏற்படுகின்றன .
எனினும் தெய்வாதீனமாக போலீசார் மேற்கொண்ட திடீர் வீதி சோதனை காரணமாக அந்த விபத்ஹு தவிர்க்க பட்டுள்ளது .
இதனையடுத்து பேரூந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேரூந்தும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் சாரதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி சாரதியின் செயல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்
தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்
தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ள செயல் இலங்கை அரசியலில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆட்சியாளர்களுக்கு ஆதரவை தருவிக்க ,சாராய கடை நடத்துவதற்கான அனுமதி பாத்திரத்தை கோரியுளளார் .
அவரது கொறிக்கியை ஏற்றுக்கொண்ட ஆளும் அரசு ,அவருக்கு இரண்டு அனுமதி பத்திரங்கள் வழங்கி உள்ளதாம் .
அதனை இரண்டு கோடிக்கு அந்த தமிழ் அரசியல்வாதி ,சாராய கடை வார்த்தர்களிற்கு விற்பனை செய்துள்ளார் .
விலை போகும் தமிழ் அரசியல்வாதிகள்
மேற்படி சாராயக் கடை நடத்துவதற்கான அனுமதி பத்திரம் இரண்டு கோடிக்கு பெற்று கொண்டவர்கள் ,புத்த பிக்குவிடம் சிக்கிய நிலையில் ,அது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவின் காதுக்கு எட்டியுள்ளது .
அவர் அதனை உடைத்து வெளியிட்ட நிலையில் ,ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
காற்றில் பறந்த தமிழ் உரிமைகள்
தமிழர் உரிமைக்கு குரல் கொடுப்பதாக பேசி கொள்ளும் ,தமிழ் அரசியல்வாதிகள் ,தமது குடும்ப பொருளாதாரத்தில் , நலனில் அக்கறை செலுத்தி ,மக்களை ஏமாற்றி பிழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை மேற்படி விடயம் காண்பிக்கிறது .
கட்டி கொடுப்பதும் ,கூட்டி கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ள சில தமிழ் எம்பிக்கள் செய்திடும் இவ்விதமான ,இழி செயல்கள் ஊடாக அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இழிநிலை ஏற்படுவதாக சுட்டி காட்ட படுகிறது .
எவர் எப்படி போனால் நமக்கு என்ன பணம் வந்தால் சரி மாப்புள்ள ,நீங்க சாராய கடையை திறவுங்கள் .
குடி மகன்கள் குடித்து விட்டு ,உங்களுத்தான் குடி மகன்கள் குத்துக்கரணம் அடித்து ஒட்டு போடுவார்கள் சாமியோ .
வாலிபன் மேல் விழுந்த இடி
வாலிபன் மேல் விழுந்த இடி
முல்லைத்தீவு ஐயன்குளம் பகுதியில் வாலிபன் மேல் விழுந்த இடி யில் ,அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் .
மரத்தின் கீழ் நின்ற 49 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் மீதே இடி விழுந்துள்ளது .
கனமழை மின்னல் இடித்தாக்கம் ஏற்பட்ட பொழுதே ,மேற்படி வாலிபன் பலியாகியுள்ளார் .
மரத்தின் கீழ் மழைக்கு ஒதுங்கி நின்ற பொழுது அவ்வேளை ,அந்த இடியானது வாலிபனை தாக்கியதாக அங்கிருந்த்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
இடி விழுந்து முன்னாள் போராளி பலி
தமது குடும்ப தலைவரை இழந்து மனைவி ,பிள்ளைகள் ,உற்றார் உறவினர்கள் கண்ணீரில் உறைந்துள்ளனர் .
சடலமானது மல்லாவி மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டு ,மரண பரிசோதனைகள் முடிவுற்றதும் ,உறவினர்களிடம் சடலம் கையளிக்க பட்டுள்ளது .

இடி விழுந்து பலியான வாலிபர் சடலம் இறுதி நல்லடக்கம் செய்வதற்கு குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர் .
மேற்படி சம்பவம் அந்த ஐயன்குளத்து மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
இயற்கையின் தாக்குதலில் முன்னாள் போராளி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஈழவேந்தன் முன்னாள் எம்பி காலாமானார்
ஈழவேந்தன் முன்னாள் எம்பி காலாமானார்
ஈழவேந்தன் முன்னாள் எம்பி காலாமானார் .தமிழீழத்தை நேசித்து அதன் மீட்புக்காகத் தன் வாழ்நாளை வரித்துக்கொண்ட திரு.ஈழவேந்தன் ஐயா
அவர்கள் காலாமானார்.(M.K eelaventhan passed away)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த ஈழவேந்தன் காலாமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக கனடா – டொராண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழவேந்தன் முன்னாள் எம்பி காலாமானார்
நல்லூரைச் சேர்ந்த புகையிரத நிலைய அதிபர் கனகசபாபதி அவர்களின் மகனான கனகேந்திரன் என்னும் ஈழவேந்தன் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியிலும் கல்வி பயின்றார்.
ஈழவேந்தன் மறைவையொட்டி மக்கள் இரங்கல்
அவரின் மறைவையொட்டி பலரும் இரங்கல் வெளியிட்டுள்ளனர். Toronto Western வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று ஞாயிறு இரவு (உள்ளூர் நேரம்) உயிரிழந்துள்ளார்.
உயிரிழக்கும் போது அவருக்கு வயது 91 ஆகும்.
கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட அவர் தமிழீழ மண் மீது கொண்ட காதலால் தனது பெயரை ஈழவேந்தன் என மாற்றிக்கொண்டார்.
2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஈழவேந்தன் நாடாளுமன்றம் சென்றார்.
1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி பிறந்த அவர் தனது 72 வது வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
எனினும் மூன்று மாதங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்துக்குச் செல்லாமல் விட்டதை அடுத்து இவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2007 நவம்பரில் பறி போனது.
இதனையடுத்து இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறினார். 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழகத்தில் இருந்து ஈழவேந்தன் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயலாற்றிய ஈழவேந்தன்
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இந்தியாவை கடுமையாக விமர்சித்திக் கொண்டிருந்த காரணத்தினாலும் அவர் நாடு கடத்தப்பட்டிருந்தார்.
கொழும்பு – இரத்மலானையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த ஈழவேந்தன் 2004 ஆம் ஆண்டு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழீழக் கொள்கையில் மிகவும் பிடிப்புள்ளவராக சமரசமில்லாத போராளியாக இறுதி வரை இருந்தவர்.
ஈழம் வெல்ல எழுந்தவன் – பல
இன்னல் தாங்கி நடந்தவன்
பாரில் ஏறி அழுதவன்
பகை நிலை சொன்னவன்
சரிகமபாவில் பாடும் மலையக வாலிபன்
சரிகமபாவில் பாடும் மலையக வாலிபன்
இந்தியா தமிழக தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலை காட்சியில் இடம்பெறும் சரிகமபாவில் பாடும் மலையக வாலிபன்.
இலங்கை மலையகத்தில் இருந்த இந்திரஜித் எனும் மலையக வம்சாவளியான தமிழ் வாலிபன் இந்திரஜித் ஜீ தமிழ் தொலைக்காட்சி பாடல் போட்டியில் பாடுகிறார் .
சரிகமபாவில் பாடும் இந்திரஜித்துக்கு உலக தமிழர்கள் பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்து வருகின்றனர் .
சரிகமபா இந்திரஜித் யார்
பண்டாரவளை பூனாகலை கபரகலையூரை சேர்ந்தவர் தான் இந்த சரிகமபா வில் பாடும் இந்திரஜித்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி இசை போட்டி நிகழ்ச்சியில்
தடம் பதித்து முதல்கட்ட குரல் தேர்வில் தெரிவாகி அசத்தியுள்ளார் இந்திரஜித் .
தனது ஆளுமை திறமையை வெளிக்காட்டி நடுவர்களையும் இசை ரசிகர்களையும் ,வியப்படைய செய்து அசத்தி இருக்கிறார் சரிகமபா இந்திரஜித்
பாட்டு போட்டியில் இந்திரஜித் வெல்வாரா ..?
இந்த சரிகமபா பாட்டு போட்டியில் இந்திரஜித் வெல்வாரா என்ற கேள்வி எழுப்ப படுகிறது .
கண்டிப்பாக அவர் வெற்றி பெறாவிட்டாலும் ,இறுதி வரை நிகழ்ச்சியில் , ஜீ தமிழ் தொலை காட்சி பாடுவதற்கு அனுமதி வழங்கும் , அப்பொழுது தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சரிகமபா நிகழ்வை இலங்கை மக்கள் பார்வையிடுவார்கள் .
ஏதாவது சாட்டு போக்கு சொல்லி இறுதி நிகழ்வுகளில் ,சரிகமபாவில் இருந்து இந்திரஜித் தட்டி கழிக்கப்படலாம் .
அதுவரை சரிகமபா நிகழ்வில் இந்திரஜித்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி வைத்திருக்கும் என்பதை இப்போதே அடித்து கூறுகிறோம் .
வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை
வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை
வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை இலங்கையில் கடந்த வருடத்தில் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியாக 8.54 மில்லியனாக இருந்த இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 8.40 மில்லியனாகக் குறைந்துள்ளது.
தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 2022 ஆண்டில் 49.8 சதவீதத்திலிருந்து 2023 ஆண்டில் 48.6 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
வேலையற்ற மக்கள் தொகை மற்றும் தொழிலாளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவு காரணமாக, வேலையின்மை விகிதம் முந்தைய ஆண்டை விட 2023 ஆண்டில் 4.7 சதவீதமாக மாறாமல் உள்ளது.
2022ல் 0.399 மில்லியனாக இருந்த வேலையில்லாத மக்கள் தொகை 2023ல் 0.39 மில்லியன் வரை சிறிதளவு குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2022 இல் 8.14 மில்லியனாக இருந்த வேலைவாய்ப்பாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 8.01 மில்லியனாகக் குறைந்துள்ளது.
இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி
இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி
அடுத்தடுத்த இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி யை சந்தித்த ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரின் 46வது போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி ஹைதராபாத்துக்கு 213 ஒட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.
சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 98 ஒட்டங்களும் டேரியல் மிட்செல் 52 ஒட்டங்களும் எடுத்தனர்.
பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத் அணியின் அனைத்து முக்கிய வீரர்களின் விக்கெட்டையும் கைப்பற்றி 134 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது.
இதன் மூலம் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.
பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக துசார் தேஸ்பாண்டே 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் பதிரான தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சென்னை அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.
வானிலை இடியுடன் கூடிய மழை
வானிலை இடியுடன் கூடிய மழை வெப்பமண்டல ஒன்றிணைப்பு மண்டலம் (வடக்கு அரைக்கோளம் மற்றும் தெற்கு அரைக்கோளத்தில் இருந்து வரும் காற்று சங்கமிக்கும் மண்டலம்) நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கம் அதிகளவான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம்
கிழக்கு மற்றும் தென் மாகாணங்கள், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.
வானிலை இடியுடன் கூடிய மழை
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை கோரியுள்ளது.
இதேவேளை, இன்று (29) நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு
வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கக்கூடும்.
இதன்போது போதிய அளவு நீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், வெட்ட வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நாட்டின் வர்த்தக சமூகம்
இந்த நாட்டின் வர்த்தக சமூகம்
இந்த நாட்டின் வர்த்தக சமூகம் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலப் போக்கை மக்களே தீர்மானிக்க வேண்டும் – ஜனாதிபதி.
சந்தைப் பொருளாதாரத்தை
சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதும், அதிக போட்டித்தன்மை கொண்டதுமான, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும்,
இந்த நாட்டின் வர்த்தக சமூகம் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறை
தற்போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முறைமையே நாட்டுக்கு அவசியப்படுகின்றதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி நிறைவேற்று ஜனாதிபதி முறையை பேணுவதா இல்லையா என்பது தற்போதைய
பிரச்சினை அல்லவெனவும், நாட்டுப் பொருளாதாரத்தின் எதிர்கால போக்கை தீர்மானிப்பதற்கான வாய்ப்பை மக்கள் இழந்துவிடக்கூடாதெனவும் தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (26) நடைபெற்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான மாவட்ட 3220 சர்வதேச
ரோட்டரி கழகத்தின் 2023/24 வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பம்
இந்த வருடாந்த மாநாடு ஏப்ரல் 26/27 திகதிகளில் கொழும்பில் நடைப்பெறுவதோடு, மாநாட்டில் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்புரையை நிகழ்த்தினார்.
1929 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட, இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான மாவட்ட 3220 சர்வதேச ரோட்டரி கழகம் 17,000 க்கும் மேற்பட்ட
உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கும் சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்கும் இதன் பங்களிப்பு கிடைத்தது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1994 முதல் கொழும்பு சர்வதேச ரோட்டரி கழகத்தின் மாவட்ட 3220 மேற்கு பிரிவின் உறுப்பினராக இருந்து வருகிறார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,
“இலங்கை பயணிக்க வேண்டிய பாதையை தீர்மானிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதன்போது எந்த வழியில் நாம் செல்ல வேண்டும் என்பதை இந்த நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.
நாம் இங்கிருந்து நகர்வோமா? நாம் இங்கேயே நின்றுவிடுவோமா? அல்லது பின்னோக்கி செல்ல வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
இன்று நான் சந்தித்த ஒரு இளைஞர் நாட்டிற்கான உங்கள் திட்டங்கள் என்னவென கேட்டார். இந்த நாட்டின் படித்த மக்களுக்காக என்ன திட்டங்களை எடுத்துள்ளீர்கள்? நாட்டின் பௌதீக உட்கட்டமைப்பை மேம்படுத்த நீங்கள்
என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்
என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்? அந்த அப்படி எந்த திட்டமும் இல்லை என்றேன். நான் சந்தைப் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும் என்று நான் அவரிடம் கூறினேன்.
அதன்போது சந்தை சக்திகள் இந்தத் திட்டங்கள் அனைத்தையும் முடிவு செய்யும். நமது கொள்கை கட்டமைப்பு என்ன என்பதை நாம் தீர்மானிக்கலாம்.
அதன்படி, அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்து, செயல்படுத்தி, தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.
ஆனால், எங்களுக்கு வளர்ச்சியைத் தரும் ஒரு நிலையான திட்டம் குறித்து நீங்கள் சிந்தித்தால், அதைச் செய்ய முடியாது என்று நான் அவரிடம் சொன்னேன். சந்தை செயற்பாடுகளில் எவ்வாறு தாக்கம் செலுத்துவது
வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சந்தை சக்திகளை எவ்வாறு கையாள்வது அல்லது சந்தை சக்திகளை எவ்வாறு இயக்குவது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே நாம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். ஒரு அரசாங்கம் நியமிக்கப்பட்ட பிறகு ஒரு ஐந்தாண்டு திட்டம்
முன்வைக்கப்படுகிறது. அந்தத் திட்டத்தின்படி அரசாங்கமே அனைத்தையும் வழங்குகிறது. எமக்கு இவ்வளவு காலமும் திட்டங்கள் மாத்திரமே இருந்தன. அதனால் தான் இன்னும் வறுமையில் வாடுகிறோம்.
யுத்தத்திற்குப் பிறகு
யுத்தத்திற்குப் பிறகு, வியட்நாம் நம்மை விட மோசமான நிலையில் இருந்தது. 1991இல், வியட்நாமின் தொழில்துறை அமைச்சர் வந்து, வெளிநாட்டு முதலீட்டை எப்படி ஊக்குவிக்கிறோம் என்று கேட்டார்.
அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பது எப்படி என்பதை அவரிடம் கற்றுக் கொள்ள இன்று நான் வியட்நாம் செல்ல வேண்டும். அவர்கள் மாறினர். நாங்கள் ஒரே இடத்தில் இருந்தோம்.
உங்களுக்கு மலேசியா மற்றும் சிங்கப்பூர் பற்றி என்ன கூற முடியும்? இந்த ஒவ்வொரு நாடுகளையும் பற்றி நாங்கள் பேசுகிறோம். அந்த நாடுகள் இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க விரும்புகிறோம்.
ஆனால் அந்த நாடுகளின் நிலையை அடைய, தேவையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இப்போது நாம் அத்தகைய நிலையை அடைந்துள்ளோம்.
இனிமேலும் தேவையான முடிவுகளை எடுக்காமல் இருக்க முடியாது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை. எந்த மாதிரியான பொருளாதாரம் வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை, அதை ஒரு மாதிரி மூலம் மாத்திரமே செய்ய முடியும். இது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம்.
எங்களுக்கு பெரிய சந்தை இல்லை
இந்தியா, சீனா, அமெரிக்கா அல்லது ரஷ்யாவில் எங்களுக்கு பெரிய சந்தை இல்லை. பல நாடுகளில் உள்ள கனிய வளங்கள் நம்மிடம் இல்லை. நாம் அதிர்ஷ்டவசமாக இந்து சமுத்திரத்தில மூலோபாய ரீதியாக அமைந்துள்ள ஒரு சிறிய தீவு.
இப்பகுதியில் பொருளாதார மையமாக மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது. இப்படிப்பட்ட உலகில் நாம் எப்படி முன்னேறுவது? நாம் இனி கற்பனை உலகில் வாழ்கிறோமா? அல்லது தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோமா என்பது நீங்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
ஏனெனில் நாம் மேற்கொண்டுள்ள பொருளாதார ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகள் இந்த வருடத்துடன் முடிவடையும். நாங்கள் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் பெரிஸ் சமவாயத்துடன் கலந்துரையாடி
வருகிறோம். கடன் வழங்குநர்களுடன் அடைய வேண்டிய பெரும்பாலான விடயங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் ஒரு விடயம் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும். அதுவும் விரைவில் தீர்க்கப்படும்.
ஆனால் நாம் இங்கிருந்து எங்கு செல்வது? பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம். நாம் உறுதிப்படுத்திய பொருளாதாரம் இறக்குமதி
இறக்குமதி சார்ந்த பொருளாதாரம்.
சார்ந்த பொருளாதாரம். இந்த இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தில் நாம் முன்னேறிச் செல்கிறோமா? அப்போது நான் கடந்த காலத்தில் செய்த காரியங்கள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்.
ஏனென்றால் இன்னும் 10 அல்லது 15 வருடங்களில் இதுபோன்ற நெருக்கடியை மீண்டும் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே இந்த முடிவை நீங்கள் அனைவரும் எடுக்க வேண்டும். அதை யாரும் தவறவிட முடியாது.
இதுதான் இன்று நாடு எடுக்க வேண்டிய முடிவு. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை தொடர்வதா அல்லது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை
இல்லாதொழிப்பதா என்ற பிரச்சினை இல்லை. இரண்டாவதாக கவனிக்கப்பட வேண்டிய கேள்விகள் அவை. நான் குறிப்பிட்டது போல் மக்களுக்கு பல பிரச்சினைகள் எழுகின்றன.
நமது கல்வி முறை என்ன? நாம் அதை மாற்ற வேண்டுமா இல்லையா? அதை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் நமது எதிர்காலம் என்ன? அதற்கான முடிவுகளை எடுக்க நாம் தயாரா?
ஏற்றுமதி சார்ந்த, அதிக போட்டித்தன்மை கொண்ட பொருளாதாரத்தை நாம் விரும்பினால், அதை எவ்வாறு அடைவது? போட்டி மிகுந்த பொருளாதாரம் வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
நீங்கள் போட்டித்தன்மையுடன் இருக்க விரும்பினால், நீங்கள் போட்டியை எதிர்கொள்ள வேண்டும். போட்டியை எதிர்கொள்ளாமல் போட்டித்தன்மையுடன் இருக்க முடியாது.
இலங்கையில் வர்த்தகத்தில் எனக்கு நம்பிக்கை
இலங்கையில் வர்த்தகத்தில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. நாம் அதை உருவாக்க முடியும். எங்களுக்கு கடினமான காலங்கள் குறுகிய காலம். ஆனால் நாம் அதை முறியடிக்க முடியும் என்று நான் நம்பிக்கையுடன் பரிந்துரைக்கிறேன்.
இந்நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சர்வதேச ரோட்டரி கழக
பிரதிநிதிகள், மாவட்ட 3220 சர்வதேச ரோட்டரி கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி
மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி
மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி Action unity lanka நிறுவனத்தின்
Gift of love and hope எனும் செயற்திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுணதீவில் இடம்பெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர்
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சுய தொழில் முயற்சியாளர்களை
இனங்கண்டு அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய செயற்திட்டமாக ஒரு குடும்பத்திற்கு
75000/= பெறுமதியான, 21 குடும்பம்களுக்கும் 1,578,000 ரூபா பெறுமதியான ஆடுகள் இதன் போது கையளிக்கப்பட்டன.
வவுணதீவு பிரதேச செயலக பிரிவில்
இதன் போது வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 21 குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு தலா மூன்று ஆடுகள் வீதம் மொத்தம் 63 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு Action unity lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.கஜேந்திரன், பிரதேச செயலகம் மற்றும் Action unity lanka நிறுவனம் என்பவற்றின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம் ஆக உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது .நிறுத்த பட்ட இரு நாட்டு கப்பல் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது .
இந்தியா இலங்கைக்கு இடையில் மேற்கொள்ள பட்ட ஒப்பந்தத்தின் அடைப்படையில் ,இந்த கப்பல் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வந்தது .
சீரற்ற காலநிலை காரணமாக தடை பட்டிருந்த ,இந்தியா இலங்கை பயணிகள் கப்பல் சேவைகள், மீளவும் ஆரம்பிக்க படவுள்ள விடயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கப்பல் சேவையின் கட்டண விபரம்
இந்தியா இலங்கைக்கு இடையில் இடம்பெறும் பயணிகள் கப்பல் சேவையின் அதிகரித்த கட்டணம் .
கீழ் தளத்தில், பயணிக்க ஐந்து ஆயிரம் இந்தியா ரூபாய்களும் ,மேல்தளத்தில் பயணிக்க, ஏழு ஆயிரம் ரூபாய்கள் கட்டணமாக அறவிட படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்தியா நாக பட்டினம் ,இலங்கை காங்கேசன் துறைக்கு இடையில் ,இந்த கப்பல் பயண சேவைகள் காணப்படுகின்றன .
இந்த கப்பல் சேவைகள் ஊடாக இரு நாடுகளுக்கும் சிறந்த வர்த்தக பொருளாதார பயன்பெறுகள் உள்ளதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன .
மீளவும் இலங்கை இந்தியாவுக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவைகள் ஆரம்பிக்க படுவதை இட்டு , பயணிகள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .
மீள கப்பல் சேவை நிறுத்த படுமா ..?
பிரதமர் நரேந்திர மோடியினால் ஆரம்பித்து வைக்க பட்ட இந்திய இலங்கை கப்பல் சேவை,பயணிகள் வரவு குறைந்து காணப்பட்டதால் ,அந்த சேவை நிறுத்த .பட்டது
அவ்வாறன நிலையில் மீளவும் இலங்கை இந்தியாவுக்கு இடையில் மக்கள் சென்று வருவதற்கு ,வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ள ,இந்த கப்பல் சேவை நிறுத்த படக்கூடும் என்கின்ற அச்சமும் வெளியிட பட்டுள்ளது .
மக்கள் பயணிக்க அதிக கட்டணத்தை ,கப்பல் சேவை நிறுவனம் அறவிடுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
இதனை இந்தியா இலங்கை போக்குவரத்து அமைச்சர்கள் கவனத்தில் எடுத்து ,மக்களுக்கு சிறந்த விலையில் கட்டணத்தை வசூல் செய்தால் மக்கள் ,கப்பல் ஊடாக பயணம் செய்திட ஏதுவாக இருக்கும் என்கின்ற கருத்து வெளியிட பட்டுள்ளது .
தடைபடாது இந்தியா இலங்கை கப்பல் சேவை தொடர்ந்து பயணிக்க ,இலங்கை அரசு ,இந்தியா அரசு கவனத்தில் எடுத்து செயலாற்றுமா என்பதே கேள்வியாக உள்ளது .
மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் ,குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள்
2.74 மில்லியன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அரிசி விநியோகிக்கப்படுகிறது.
தெரிவு செய்யப்பட்ட பயனாளி குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி விநியோகம் பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெறுகின்றது.
இந்த அரிசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற போதிலும், தங்காலை, நெடோல்பிட்டிய, வெலிபென்ன, லலிதபுர ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பணம் கொடுத்து அரிசியை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாக குற்றம் சுமத்துகின்றனர்.
பல்வேறு தொகைகளில் பணம்
அதன்படி, 20 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை பல்வேறு தொகைகளில் பணம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளரிடம் வினவியபோது, மக்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த அரிசி தொகையை பாதுகாப்பதற்காக இருந்த காவலாளிக்கு பணம் கொடுப்பதற்காக மக்களிடம் பணம் வசூலித்து வழங்கப்பட்டமை குறித்து தகவல் கிடைத்ததாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இது தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கந்தளாய் பிரதேசத்தில் குறைந்த வருமானம்
இதேவேளை, கந்தளாய் பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்குவதற்காக உத்தியோகபூர்வ நிழற்குடை கட்டிடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த வைக்கப்பட்டிருந்த அரசி தொகையில் 20 மூட்டை அரிசியை திருடி செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இன்று (27) காலை குறித்த கட்டிடத்தின் ஜன்னல் திறந்து கிடப்பதைப் பார்த்த பிரதேசவாசி ஒருவர் கிராம அதிகாரி மற்றும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.
கந்தளாய் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அறையின் பிரதான கதவை உடைத்து உள்ளே நுழைந்து யாரும் அரிசியை திருடிச் சென்றிருக்கவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே ஹப்புத்தளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குறைந்த வருமானம் பெறுவோருக்கு நேற்று வழங்கப்பட்ட அரிசி பாவனைக்கு தகுதியற்றது என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அரிசி அம்பாறை பிரதேசத்தில்
இந்த அரிசி அம்பாறை பிரதேசத்தில் உள்ள அரிசி ஆலையொன்றினால் வழங்கப்பட்டதாகவும், காலாவதியாகும் திகதிக்கு மேல் மேலும் ஒரு திகதி குறிப்பிட்டு லேபிள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
எனினும் ஹப்புத்தளை பிரதேச செயலகத்தின் தலையீட்டின் மூலம் காலாவதியான அரிசிக்கு பதிலாக பொருத்தமான அரிசியை வழங்குவதற்கு அரிசி விநியோகஸ்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.









































