Tag: மதுபோதையில்
மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் கைது
மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் கைது
மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் கைது ,பொலிஸ் நிலையத்தில் முரண்பாட்டில் ஈடுபட்டவர் கைது
மது போதையில் வாகனம் செலுத்திய ஒருவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுக்க பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தி
தாக்குதல் நடத்திய சீதாவாக்கை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினரின் தாக்குதலில் காயமடைந்த பாதுக்க பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
முச்சக்கர வண்டியும் கார் ஒன்றும், மோதி விபத்து
நேற்று (15) பிற்பகல் பாதுக்க மாவத்தகம பகுதியில் முச்சக்கர வண்டியும் கார் ஒன்றும், மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனை அடுத்து, பாதுக்க பொலிஸார் காரின் சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், விபத்துக்குள்ளான காரையும் கைப்பற்றினர்.
எவ்வாறாயினும் காரின் சாரதி கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாதுக்க பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சீதாவாக்கை முன்னாள்
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அங்கிருந்த பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
பொலிஸாரை தாக்கிய நிலையில்
பின்னர் பொலிஸாரை தாக்கிய நிலையில், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவரை சிறைக்கு அழைத்து சென்றிருந்தனர்.
எனினும் உடல் நலக் குறைவினால் தமக்கு சிறையில் தங்கியிருக்க முடியாது என முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அறியப்படுத்தியதை தொடர்ந்து, அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
பேருந்தை மதுபோதையில் செலுத்திய சாரதி
பேருந்தை மதுபோதையில் செலுத்திய சாரதி
இலங்கை வவுனியா, ஏ9 வீதியில் பேருந்தை மதுபோதையில் செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசார் விசேட சோதனை நடவடிக்கை
வவுனியா தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து பொலிசார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் .
அதன் போது ஏ9 வீதியில் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றின் சாரதி மது போதையில் பேரூந்தை செலுத்தியமை கண்டு பிடிக்கப்பட்டது.
அதனை அடுத்தே சாரதி கைது செய்யப்பட்டார் ,இவ்விரு மதுபோதையில் பேரூந்தை செலுத்தி செல்வதனால் பல விபத்து சம்பவங்கள் ஏற்படுகின்றன .
எனினும் தெய்வாதீனமாக போலீசார் மேற்கொண்ட திடீர் வீதி சோதனை காரணமாக அந்த விபத்ஹு தவிர்க்க பட்டுள்ளது .
இதனையடுத்து பேரூந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேரூந்தும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் சாரதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி சாரதியின் செயல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
Featured
மதுபோதையில் நண்பனை கிணற்றுக்குள் தள்ளிய இளைஞர்கள்
மதுபோதையில் நண்பனை கிணற்றுக்குள் தள்ளிய இளைஞர்கள்
புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், வெள்ளப்பள்ளம் பகுதியில் இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (05) உடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளப்பளத்தைச் சேர்ந்த 21 அகவையுடைய விஜயராசா யசீகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த வேளை, நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஏனைய மூன்று நண்பர்களால் குறித்த இளைஞன் கிணற்றுக்குள் தள்ளி விழுத்தப்பட்டுள்ளார்.
வாக்குமூலங்களின் அடிப்படையில், பொலிஸ் விசாரணையைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை, புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களை திங்கட்கிழமை (06) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளதுடன்
உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


























