Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்
ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்
ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ,கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக
நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் பழைய விண்ணப்பங்களை விடுத்து புதிய விண்ணப்பங்களை அமுல்படுத்தும் சட்டமூலம் உயர்
நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது அவ் தீர்ப்பின் வாசிப்புகளின் அடிப்படையில் இதற்கான ஆயத்தங்கள் இவ் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்ற அமர்வுகளின் போது இதற்கான சட்டமூலமானது அமுல்படுத்தப்பட்டு இத்தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
நேற்றைய கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக இக்குழு உறுப்பினர் என்னும் அடிப்படையில் பங்குபற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
2 5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட திட்டம்
2 5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட திட்டம்
2 5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட திட்டம் ,தென்னை பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காக கப்ருக நிதி முகாமை சபை ஒன்றியம் மறுசீரமைக்கப்படும் என்று தெங்கு பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.
இந்த செயல்முறையின் முதல் திட்டம் கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்தார்.
அதன்படி, கப்ருகா கடன் திட்டத்திற்கு இணையாக, இந்த கப்ருகா நிதி முகாமை சபை ஒன்றியம் மறுசீரமைப்பட்டு எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
2025ஆம் ஆண்டுக்குள் 2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட தெங்கு பயிர்ச்செய்கை சபை திட்டமிட்டுள்ளது.
இவற்றில் ஒரு மில்லியன் மரங்கள் வடக்கு தென்னை முக்கோண வலயத்திற்கு அருகில் நடப்படும் என்று சுனிமல் ஜயக்கொடி அத தெரணவிடம் தெரிவித்தார்.
உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்
உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்
உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக விரிவான விசாரணை நடத்தி அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைச்சரவை உபக்குழுவொன்றை
நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், பெப்ரவரி மாத இறுதிக்குள் இந்த முன்மொழிவை அமைச்சரவையில் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த 7ஆம் திகதி விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
உமா ஓயா திட்டத்திற்காக நிலம் மற்றும் சொத்துக்களை கையகப்படுத்தியவர்களிடமிருந்து இதுவரை நிவாரணம் வழங்காதவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், திட்ட கட்டுமானத்தின் போது மண் சரிவு மற்றும்
வெடிப்புகள் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குதல், பயிர் இழப்பீடு பெறாதவர்களுக்கு பயிர் இழப்பீடு வழங்குதல், நீர் திட்டங்கள் மூலம் குடிநீரை இழந்தவர்களுக்கு சுத்தமான நீரை வழங்குதல்,
குத்தகைதாரர்களுக்கு செலுத்தப்படாத வாடகை பணத்தை வழங்குதல், வீடுகள் முழுமையாக சேதமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து முழுமையான ஆய்வின் பின்னர் நடவடிக்கை
எடுத்தல், உமா ஓயா தாழ்நில மக்களுக்கு நீர்ப்பாசன நீர் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக ஹல்பிட்டிகல நீர்த்தேக்கத்தை நிர்மாணித்தல், முழு உமா ஓயா திட்டத்திலும் நடந்த மோசடி, ஊழல், முறைகேடுகள் மற்றும்
சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்துதல் போன்ற விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தால் மத்திய மலைநாட்டில் ஏற்படும் மண் அரிப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், அதன்படி, இந்த
நோக்கத்தை அடைய அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்க அமைச்சரவை உபக்குழுவை நியமிப்பது பொருத்தமானது என்று அமைச்சர் லால் காந்த பரிந்துரைத்தார்.
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் தலைமறைவு
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் தலைமறைவு
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் தலைமறைவு ,கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களுடன் தப்பிச் சென்றுள்ளார்.
மேலும், குறித்த கான்ஸ்டபிள் நேற்று (08) இரவு வீதி சோதனை நடவடிக்கைக்காக சென்றபோது மேற்படி துப்பாக்கியையும் 30 தோட்டாக்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரி வீதி சோதனை நடவடிக்கைக்கு சமூகமளிக்காததால், அவரைத் தொடர்பு கொண்டபோது அவரது கையடக்க தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய்க்கு சென்றுள்ளமை தெரியவந்தது.
அதன்படி, சந்தேகத்திற்குரிய பொலிஸ் அதிகாரியை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு சர்வதேச பொலிஸ் மூலம் தேவையான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் வைத்திருந்த துப்பாக்கி இன்னும் மீட்கப்படவில்லை, மேலும் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது .ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை
கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு மீன்பிடி விசைப்படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்து இரணைத்தீவு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணை முடித்துக் கொண்டு மீனவர்கள் 14 பேரும் விசைப்படகுடன் கிளிநொச்சி மீன்வளத்துறை அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
திடீர் மின்வெட்டு
திடீர் மின்வெட்டு
திடீர் மின்வெட்டு ,நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09) முற்பகல் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் மின்சாரம் வழமைக்கு கொண்டுவரப்படும் எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
கொலைச் சம்பவம் மூன்று சந்தேக நபர்களை கைது
கொலைச் சம்பவம் மூன்று சந்தேக நபர்களை கைது
கொலைச் சம்பவம் மூன்று சந்தேக நபர்களை கைது ,கொலைச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (08) வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகளால் ராஜகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 22, 24 மற்றும் 30 வயதுடைய அகரபத்தனை, நமுனுகுல மற்றும் பன்னிலதென்ன பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் 6ஆம் திகதி, இராஜகிரியவில் உள்ள கடை ஒன்றுக்குள் அடையாளம் தெரியாத ஒருவர் விழுந்து கிடந்த நிலையில், பின்னர் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்த நபரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று முன்தினம் (07) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் நடத்தப்பட்டது.
இறந்தவரின் தலையில் உட்புற இரத்தப்போக்கு இருந்ததாகவும், அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, இந்த மரணம் ஒரு கொலை என்பது தெரியவந்துள்ளது.
அதன்படி, விசாரணை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, கொலை இடம்பெற்ற கடையில் பணியாற்றிய மூன்று ஊழியர்களை கைது செய்யதுள்ளனர்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தீ விபத்தில் சிக்கிய யுவதி உயிரிழப்பு
தீ விபத்தில் சிக்கிய யுவதி உயிரிழப்பு
தீ விபத்தில் சிக்கிய யுவதி உயிரிழப்பு ,தீ விபத்தில் சிக்கிய வதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மன்னார் – பண்டிவிரிச்சான் மேற்கு, மடு பகுதியைச் சேர்ந்த மேரி எமில்தா விக்கிரமரட்ன (வயது 27) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி கடந்த மாதம் 12 ஆம் திகதி குளிர்காய்வதற்காக அடுப்பைப் பற்றவைத்துள்ளார். இதன்போது அவரது ஆடையில் தீப்பற்றி தீ விபத்துக்கு உள்ளாகினார். அவர் அன்றையதினமே பண்டிவிரிச்சான் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அதன்பின்னர் மறுநாள் 13ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்
சட்டமா அதிபரை அவசரமாக சந்தித்தார் ஜனாதிபதி
சட்டமா அதிபரை அவசரமாக சந்தித்தார் ஜனாதிபதி
சட்டமா அதிபரை அவசரமாக சந்தித்தார் ஜனாதிபதி ,ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யும் முடிவு குறித்த காரணங்களை அறிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவை இன்று (6) ஜனாதிபதி செயலகத்திற்குl அழைத்துள்ளார்.
இவர்களுடன், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் இணைந்து கொண்டார்.
சுமார் 2 மணி நேரம் நீடித்த கலந்துரையாடலுக்குப் பிறகு, சட்டமா அதிபரும் நீதி அமைச்சரும் மாலை 4 மணியளவில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேறினர்.
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில், சாட்சியங்களை மறைத்தல் மற்றும் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சந்தேக நபர்கள் மூவரை வழக்கில் இருந்து விடுவிக்கலாம் என்று சட்டமா அதிபர் ஒரு கடிதம் மூலம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
கிரிஷ் கட்டிடத்தில் திடீர் தீ
கிரிஷ் கட்டிடத்தில் திடீர் தீ
கிரிஷ் கட்டிடத்தில் திடீர் தீ ,கொழும்பு – கோட்டையில் உள்ள 60 மாடி கிரிஷ் கட்டிடத்தில் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டிடத்தின் 35ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ கட்டிடத்தின் 6 தளங்களுக்கும் பரவியுள்ளதாகவும், தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவினர் கடுமையாகப் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.
அலையில் சிக்கிய மூவர் மீட்பு
அலையில் சிக்கிய மூவர் மீட்பு
அலையில் சிக்கிய மூவர் மீட்பு ,ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிக்கடுவ கடற்கரையில் வியாழக்கிழமை (06) காலையில் குளித்துக் கொண்டிருந்தபோது, வெளிநாட்டு பெண் ஒருவர் மற்றும் இரண்டு ஆண்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில் பணியில் இருந்த உயிர் பாதுகாப்பு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த மூன்று பொலிஸார், அந்த மூவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு 27 வயது, ஆண்கள் 42 மற்றும் 71 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாய்களை தடுக்க விரித்த வலையில் சிக்கிய மகன்
நாய்களை தடுக்க விரித்த வலையில் சிக்கிய மகன்
நாய்களை தடுக்க விரித்த வலையில் சிக்கிய மகன் ,வீட்டுக்குள் நாய்கள் நுழைவதைத் தடுக்க, சட்டவிரோதமாக தந்தை பொருத்தியிருந்த மின்சார வயரில் மகன் மாட்டிக் கொண்டதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக, செவனகல பொலிஸார் தெரிவித்தனர்.
நெலும்வெவ – சமகிபுர பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது தாயார் தனியாக இருந்தபோது, அவருக்கு உணவு வழங்குவதற்காக அவரது வீட்டுக்கு சென்றபோதே, மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அரசியலமைப்பு விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும்
அரசியலமைப்பு விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும்
அரசியலமைப்பு விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும் ,இலங்கை மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தைக் கொண்டுவரும் பரந்த அரசியல், பொருளாதார மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்கு கொழும்பு பேராயர் கார்டினல் மால்க்லம் ரஞ்சித் இன்று அழைப்பு விடுத்தார்.
77வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் சிறப்பு வழிபாட்டின் போது பேசிய கர்தினால் ரஞ்சித், புதிய அரசியலமைப்பு, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் ரத்து செய்தல் மற்றும் அதிகாரம் சலுகைகளை அனுபவிப்பதை விட
மக்களுக்கு சேவை செய்ய அரச தலைவரை வழிநடத்தும் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
“தற்போதைய அரசியலமைப்பு விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் அதிகாரம் மற்றும் சலுகைகளை அனுபவிக்காமல் தேசத்திற்கு சேவை செய்ய
தேசத் தலைவரை சட்டப்பூர்வமாகக் கடமைப்படுத்தும் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
வவுனியா தவசிகுளம் பகுதியில் இளைஞன் மீது தாக்குதல்
வவுனியா தவசிகுளம் பகுதியில் இளைஞன் மீது தாக்குதல்
வவுனியா தவசிகுளம் பகுதியில் இளைஞன் மீது தாக்குதல் ,வவுனியா, தவசிகுளம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து இளைஞர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் செவ்வாய்க்கிழமை (04) தெரிவித்தனர்.
வவுனியா, தவசிகுளம் பகுதியில் இரண்டு அணிகளுக்கிடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது குறித்த மைதானத்திற்குள் வந்த
சிலர் விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், விளையாட்டு நிகழ்வில் வழங்கப்படவிருந்த வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் கதிரைகளையும் உடைத்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பெறப்பட்ட முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
துணை வாகனங்கள் இன்றி வந்த ஜனாதிபதி
துணை வாகனங்கள் இன்றி வந்த ஜனாதிபதி
துணை வாகனங்கள் இன்றி வந்த ஜனாதிபதி 77வது தேசிய சுதந்திர தின பிரதான வைபவம், சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. அதற்காக சுதந்திர சதுக்கத்திற்கு மூன்று பொலிஸ் மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்புடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வந்தார்.
ஆம்புலன்ஸ்கள் அல்லது பிற துணை வாகனங்கள் எதுவும் இல்லை.பிரதமரும் மற்ற விருந்தினர்களும் வந்தபோது, ஒரே ஒரு பொலிஸ் மோட்டார் சைக்கிள் மட்டுமே முன்னால் வந்தது.
முன்னதாக, சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஜனாதிபதி மற்றும் பிற தலைவர்கள் தங்கள் மனைவிகள் மற்றும் கணவர்களுடன் வருகைதந்தர். ஆனால் இந்த முறை அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஜப்பானிடமிருந்து 565 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு
ஜப்பானிடமிருந்து 565 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு
ஜப்பானிடமிருந்து 565 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு ,கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ், இலங்கையின் கழிவு முகாமைத்துவ கட்டமைப்பின் திறனை அதிகரிக்க ஜப்பான் 300 மில்லியன் யென் (565 மில்லியன் ரூபா) அன்பளிப்பை வழங்கியுள்ளது.
இதற்கமைவான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (03) ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் பாராளுமன்ற உப அமைச்சர் இகுஇனா அகிகோ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரால் கைசாத்திடப்பட்டது.
இந்த அன்பளிப்பின் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் கழிவு முகாமைத்துவத் திறனை மேம்படுத்துவதற்காக கழிவுப் போக்குவரத்துக்காக 28 கம்பெக்டர்
வாகனங்கள் வழங்கப்படும், அதில் 14 வாகனங்கள் மேல் மாகாணத்திற்கும், 08 வாகனங்கள் கிழக்கு மாகாணத்திற்கும், 06 வாகனங்கள் வடக்கு மாகாணத்திற்கும் வழங்கப்படும்.
தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் காரணமாக உலக நாடுகளின் முதலீடுகள் இலங்கையை
நோக்கி வருகின்றதென சுட்டிக்காட்டிய, ஜப்பானின் வெளிநாட்டு அலுவல்கள் தொடர்பிலான பாராளுமன்ற உப அமைச்சர் இகுஇனா அகிகோ, தெரிவித்தார்.
அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் எனவும் குறிப்பிட்டார்.
ஜப்பானிய பிரதமரின் வாழ்த்துச் செய்தியையும், உப அமைச்சர் இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வழங்கினார்.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்த ஜப்பானிய அரசாங்கம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டம் எவ்வித பாதிப்பும் இன்றி தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என வலியுறுத்திய ஜனாதிபதி, ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன்
இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பித்தமைக்காகவும், கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் வழங்கிய ஆதரவிற்கும் ஜப்பானிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், அதிகளவான இலங்கைத் தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கிய ஜப்பானிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அந்த வாய்ப்புகளை மேலும் அதிகரித்துக்கொள்ள ஒத்தழைப்பு
வழங்குமாறும், இலங்கையின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்த தலையீடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி ,சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும்,
அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வௌியிட்ட சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி கீழே…
தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்
இன்று நாம் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகிறோம். நாம் தற்போது, இலங்கையின் வரலாற்றை மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து
மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கத்துடன் புதிய பாதையில் நுழைந்துள்ளோம்.
கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த மற்றும் தவறவிட்ட வளமான நாட்டையும் – ஒரு அழகான வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலுடன் நாம் அனைவரும் இப்போது ஒன்றாக போராடுகிறோம்.
நமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும். இரத்தம், கண்ணீரால் போராடிய வரலாற்றின் அனைத்து தலைவர்களினதும் தியாகத்தின் எதிர்பார்ப்பு அதுவேயாகும். அதற்கிணங்க,
நாம் தனித்தனியாகவும், கூட்டாகவும், ஒருங்கிணைந்த சமூகக் கட்டமைப்பாக, சுற்றாடல் மற்றும் ஒழுக்கநெறியூடாக அபிவிருத்தியடைந்த நவீன இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
புதிய அரசாங்கம் என்ற வகையில், கடந்த நான்கு மாதங்களில், வலுவான பொருளாதார அடிப்படையில் நாட்டை ஸ்திரப்படுத்துதல், புதிய அரசியல் கலாசாரத்தை நடைமுறைப்படுத்துதல், அரசியல் மற்றும் அரசியல்வாதிகள்
தொடர்பிலான புதிய முன்னுதாரணத்துக்காக அர்ப்பணித்தல், இனவாதம், மதவாதம் இன்றி மற்றவர்களை சமத்துவம், கௌரவம், கரிசனையுடன் பார்ப்பது, நடத்துவது மற்றும் சட்டத்தை அமுல்படுத்துதல், ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.
கிராமப்புற வறுமையை ஒழித்தல் உள்ளிட்ட முக்கிய நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான எமது கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளை உறுதிப்படுத்தி, பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகக்
குழுக்களை கைவிடாத அணுகுமுறையை உறுதிப்படுத்தும் நலன்புரி பொறிமுறையை உருவாக்குதல், நாம் தவறவிட்ட புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் அடைந்துகொள்ள பொருளாதாரத்தை
டிஜிட்டல் மயமாக்க தேவையான முதல் நடவடிக்கைகளை எடுத்தல், ஊழல் ஆட்சியாளர்கள் நிறைந்த நாடு என்று முன்பு காணப்பட்ட பிம்பத்தை தவித்து, உலகின் அனைத்து நாடுகளுடனும், நாடுகளுடனும் மிகவும்
நம்பகத்தன்மையுடன் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடிய நாடென சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையை மீள அடையாளப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துகிறோம்.
இவ்வாறாக, ஊழல் ஆட்சியாளர்களின் ஆயிரம் அவதூறுகள் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியில் இந்த நாட்டின் பொது மக்களால் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கம் சீராக முன்னோக்கிச் சென்று
கொண்டிருக்கிறது. எமது வாக்குறுதியின்படி இலங்கையை தேசிய மறுமலர்ச்சி யுகத்தை இட்டுச் செல்வதில் நாம் வெற்றி கண்டுள்ளோம்.
அதன்படி, மேற்கூறிய அடிப்படையில், பல நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவை நனவாகிக்கொள்ள வரலாற்றில் மிகவும் ஆக்கபூர்வமான பணிகளை அசைக்க முடியாத நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லவேண்டியுள்ளது.
அதற்காக, அனைத்து இலங்கை மக்களையும் உறுதி மற்றும் நம்பிக்கையுடன் அணிதிரளுமாறும், 77ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில், சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும்
பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும், அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
2025 பெப்ரவரி 04
92 லட்சம் ரூபாய் மோசடி இளைஞன் கைது
92 லட்சம் ரூபாய் மோசடி இளைஞன் கைது
92 லட்சம் ரூபாய் மோசடி இளைஞன் கைது ,மட்டக்களப்பில் ருமேனியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வேலை பெற்று தருவதாக தலா 16 இலட்சம் ரூபாயாக 12 பேரிடம் ஒரு கோடியே 92 லட்சம் பணத்தை பெற்று மோசடியில்
ஈடுபட்டு வந்த வெளிநாட்டு முகவர் நிலைய உரிமையாளரான மூதூரைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் திங்கட்கிழமை (3) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் கல்முனை வீதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய உரிமையாளர் முகநூல் ஊடாக ருமேனியா,
போலாந்து, சோபியா போன்ற நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் வேலை வாய்ப்பு உள்ளதாக விளம்பரம் செய்துள்ளார். இதனையடுத்து வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக பலர் நேரடியாக குறித்த முகவர்
நிலையத்துக்கு சென்று விண்ணப்படிவங்களை நிரப்பி கடவுச்சீட்டுகளின் பிரதிகள் மற்றும் பொலிஸ் நற்சான்று பத்திரங்கள் உட்பட ஆவணங்களுடன் 12 பேர் தலா 16 லட்சம் ரூபாய் பணத்தை 2023ம் ஆண்டில் வழங்கியுள்ளனர்.
பின்னர் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாது நீண்டகாலமாக இழுத்தடித்து வந்துள்ள நிலையில் பணத்தை வழங்கியவர்கள் பணத்தை திருப்பி தருமாறு கேட்ட நிலையில் அதனை வழங்காததையடுத்து அவருக்கு எதிராக சிலர்
மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்ததுடன் கொழும்பில் உள்ள அரச வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் 12 பேர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதையடுத்து வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவு பணிப்பாளர் கபில கருணாரத்தின தலைமையிலான குழுவினர் திங்கள்கிழமை (03) பகல் குறித்த வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை
முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட போது அந்த முகவர் நிலையம் பதிவு செய்யப்படாமல் போலியாக இயங்கி வந்துள்ளமை
தெரியவந்துள்ளதுடன் ருமேனியா, போலாந்து, சோபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக 74 பேரிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஆவணங்கள் அடங்கிய 74 பையில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணையின் பின்னர் மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த முகவர் நிலையம் தொடர்பாக முகநூல் விளம்பரத்தை பார்த்து வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறுவதற்காக, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா. மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 70 க்கும்
மேற்பட்டவர்கள் தலா 16 லட்சம் தொடக்கம் 20 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை விமானப்படையின் விமானங்களை பயன்படுத்தினாரா ஜனாதிபதி
இலங்கை விமானப்படையின் விமானங்களை பயன்படுத்தினாரா ஜனாதிபதி
இலங்கை விமானப்படையின் விமானங்களை பயன்படுத்தினாரா ஜனாதிபதி ,ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை விமானப்படையின் 3 விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரவும் செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான தனது பயணத்திற்காக ஜனாதிபதி இலங்கை விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..
இந்தப் பயணத்திற்கு இலங்கை விமானப்படையின் எந்த விமானமும் பயன்படுத்தப்படவில்லை என்றும், ஜனாதிபதி தனது உத்தியோகப்பூர்வ காரிலேயே பயணம் செய்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

இராட்சத காற்றாலை கோபுரம் இடிந்து வீழ்ந்தது
இராட்சத காற்றாலை கோபுரம் இடிந்து வீழ்ந்தது
இராட்சத காற்றாலை கோபுரம் இடிந்து வீழ்ந்தது ,கல்பிட்டி – துடாவ பகுதியில் கந்தகுளிய பிரதேசத்தில் நேற்று காற்றாலை மின் உற்பத்தி கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.
தனியார் மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை கோபுரத்தின் ஒரு பகுதி திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இடிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவ்விடத்தில் குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான ஐந்து காற்றாலை கோபுரங்கள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்றின் ஒரு பகுதி இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
இந்தக் காற்றாலை விசையாழிகளில் ஒன்று 270 அடிக்கு மேல் உயரமும், அங்கு நிறுவப்பட்ட தளம் சுமார் 129 அடி நீளம் கொண்டது.
காற்றாலை கோபுரம் இடிந்து விழுந்ததில் ஒரு வீடு முற்றிலுமாக சேதமடைந்ததோடு, அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இருப்பினும், கோபுரம் இடிந்து விழுந்த நேரத்தில் வீடுகளில் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்




























