Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஆசிரியைக்கு தாக்குதல் நடத்திய ஆசிரியர்
ஆசிரியைக்கு தாக்குதல் நடத்திய ஆசிரியர்
ஆசிரியைக்கு தாக்குதல் நடத்திய ஆசிரியர் ,எம்பிலிப்பிட்டிய கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (7) ஆசிரியர் ஒருவர் பெண் ஆசிரியை ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை
எடுக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி இன்று (8) பாராளுமன்ற அமர்வில் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த தாக்குதல் பாடசாலை பெண் அதிபரின் முன்னிலையில் நடந்ததாகவும், தாக்கப்பட்ட ஆசிரியை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
அதன் பின்னர் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்த சம்பவம் இன்று காலை தமக்கு தெரியவந்ததாக குறிப்பிட்டார்
இருப்பினும், இந்த தாக்குதல் தொடர்பாக நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
அத்துடன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்படும் என்றும், அதன் முன்னேற்றம் குறித்து இன்றை (8) நாளுக்குள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் கூறினார்
அல் ஜசீரா பேட்டி குறித்து ரணில் அதிரடி அறிவிப்பு
அல் ஜசீரா பேட்டி குறித்து ரணில் அதிரடி அறிவிப்பு
அல் ஜசீரா பேட்டி குறித்து ரணில் அதிரடி அறிவிப்பு ,அல் ஜசீரா நேர்காணல் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒளிபரப்பான சிறிது நேரத்திலேயே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க,
தொகுப்பாளர் மெஹ்தி ஹசனுடன் இணைந்த மூன்று குழு உறுப்பினர்களில் இருவர் விடுதலைப் புலிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்.
“மனித உரிமைகள் வழக்கறிஞரும் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையருமான அம்பிகா சத்குணநாதன் இந்த விவாதத்தில் பங்கேற்பார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. எங்கள் சித்தாந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், நான் அவரை அறிந்திருப்பதால், அதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.
இருப்பினும், பின்னர் அவருக்குப் பதிலாக விடுதலைப் புலிகள் ஆதரவு குழுக்களுடன் தொடர்பு கொண்ட இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதை அறிந்தேன்,” என்று கூறினார்.
நேர்காணலின் வடிவத்தையும் அவர் விமர்சித்தார், அவரது பதில்களின் முக்கிய பகுதிகள் தவிர்க்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
“நான் உள்ளூர் ஊடகங்களுடன் பேசும்போது, அது நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது, எனவே நல்லது கெட்டது இரண்டும் வெளிவரும். இருப்பினும், அல் ஜசீரா இரண்டு மணி நேரம் என்னை நேர்காணல் செய்தது, ஆனால் ஒரு மணி நேர பகுதியை மட்டுமே வெளியிட்டது, அதில் பெரும்பகுதியைத் திருத்தியது” என்று அவர் கூறினார்.
உரத்தை தட்டுப்பாடின்றி வழங்க தீர்மானம்
உரத்தை தட்டுப்பாடின்றி வழங்க தீர்மானம்
உரத்தை தட்டுப்பாடின்றி வழங்க தீர்மானம் ,எதிர்வரும் சிறுபோகத்தின் போது வயல் நிலங்களுக்குத் தேவையான உரத்தைத் தட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக வழங்குவதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
சிறுபோகத்தின் போது பயிர்ச்செய்கைகளை ஆரம்பிப்பதற்காக வயல்நிலங்களுக்குத் தேவையான உரத்தைத் தட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக வழங்குவதன் அவசியத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
சிறு போகத்திற்கு அவசியமான உர விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
சிறு போக நெற்பயிர்ச்செய்கை மற்றும் ஏனைய விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரம் தொடர்பில் ஆராயப்பட்டது .
தடையின்றி விவசாயிகளுக்கு சிறு போக பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த கலந்துரையாடலில், விவசாய, கால்நடை,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ லால்காந்த, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக்க சனத்
குமாநாயக்க, விவசாய, கால்நடை,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டீ.பீ. விக்ரமசிங்க, ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார, விவசாய தொழில்நுட்ப பிரிவு பணிப்பாளர் நாயகம்
ஆர்.டீ.சித்ராநயனா, கமநல சேவை ஆணையாளர் நாயகம் யூ.பீ. ரோஹன ராஜபக்ஷ, தேசிய பசளை செயலக அலுவலக பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே மற்றும் விவசாய, கால்நடை,காணி மற்றும் நீர்ப்பாசன
அமைச்சு மற்றும் நிதி அமைச்சு என்பவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள், தனியார் துறை பசளை விநியோக நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
சடலம் மறைத்த இருவர் கைது
சடலம் மறைத்த இருவர் கைது
சடலம் மறைத்த இருவர் கைது ,தெமடகஹகந்த, நவ்தகல பகுதியில் காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
42 வயதுடைய குறித்த நபரைக் காணவில்லை என அவரது மனைவி கடந்த மாதம் 14 ஆம் திகதி எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த நபரின் சடலம் தெமடகஹகந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசப்பட்டு மண்ணால் மூடப்பட்ட நிலையில் கண்டுபிடித்தனர்.
சம்பந்தப்பட்ட காணியின் உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டுள்ள மின்சார கம்பியில் சிக்கி அந்த நபர் இறந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, அவர் மற்றொரு நபருடன் சேர்ந்து, வெறிச்சோடிய கிணற்றில் சடலத்தை வீசி மூடியிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளரும் அவருக்கு உதவிய நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 38 மற்றும் 46 வயதுடைய தெமடகஹகந்த பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
இந்திய மீனவர்கள் 14 பேர் கைது
இந்திய மீனவர்கள் 14 பேர் கைது
இந்திய மீனவர்கள் 14 பேர் கைது எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் 14 பேரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
நிறக்குறியீடு இல்லாத பானங்கள் சிக்கின
நிறக்குறியீடு இல்லாத பானங்கள் சிக்கின
நிறக்குறியீடு இல்லாத பானங்கள் சிக்கின ,சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகளில் வெள்ளிக்கிழமை (07) திடீர் பரிசோதனை செய்யப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி
டாக்டர் ஜே. மதனின் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். அஸ்லம் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர் ஏ. முஸம்மில் முதலானோர் கலந்து கொண்டனர்.
இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நொறுக்கு தீனிகளும், நிறக்குறியீடு இல்லாத பானங்களும் கைப்பற்றப்பட்டது. அத்துடன்
அக்கடையின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் களும் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமையும், பொறுப்பும் ஆகும். ஆகவே பொதுமக்கள் உங்கள் முறைப்பாடுகளை உரிய
ஆதாரங்களுடன் எங்களுக்கு 0753333453, 0776702703 , 077 375 1749 எனும் இலக்கங்களுக்கு அறியத்தாருங்கள் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
வவுனியா இரட்டை கொலை
வவுனியா இரட்டை கொலை
வவுனியா இரட்டை கொலை ,வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியலை நீடிக்க போதுமான காரணம் இன்மையால் பிணை வழங்கலாம் என வவுனியா மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர்.
குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்த துடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் புதன்கிழமை (05) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சம்பவம் தொடர்பில்
கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ.ஆர்.டி சில்வா ஆஜராகி சந்தேக நபர்கள் சார்பில் மேல் நீதிமன்றில் பிணை கோரி பிணை மனு சமர்ப்பித்தார்.
அதை மறுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட வாதிகளால் பிணை வழங்குவதற்க்கு மறுப்புத் தெரிவித்து விளக்கமறியலை நீடிக்குமாறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இவற்றை கவனம் செலுத்திய மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹால் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பிணை மறுப்புக்கு விசேட காரணங்கள்
முன்வைக்கப்படாமையால் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்க காரணம் போதாமையால் குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் என உத்தரவிட்டார்.
ஈஸ்டர் சூத்திரதாரியை எனக்கு தெரியும்: ஞானசார தேரர்
ஈஸ்டர் சூத்திரதாரியை எனக்கு தெரியும்: ஞானசார தேரர்
ஈஸ்டர் சூத்திரதாரியை எனக்கு தெரியும்: ஞானசார தேரர் ,2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பின்னால் ஒரு மூளை இருப்பதாகவும், அவர் தொடர்பில் தனக்குத் தெரியும் என்று கலகொட அத்தே ஞானசார தேரர் கூறினார்.
கண்டி தலதா மாளிகையில் ஆசீர்வாதம் பெற்று, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
“இங்கே ஒரு மூளையாக இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். நீங்கள் இப்போது மூளையாக இருப்பவர்களை தேடுகிறீர்களா? மூளையாக இருந்தவரை எனக்கு தெரியும் என்று நான் பொறுப்புடன் சொல்ல முடியும். ஆனால் நான் ஊடகங்களுக்கு சொல்ல மாட்டேன்.”
நாட்டின் ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு பொறுப்பில் உள்ளவர்களுக்கும் சொல்லுமாறு ஒரு ஊடகம் சொல்கிறது. ஒரு சூத்திரதாரி இருக்கிறான். எனக்குத் தெரியும், சூத்திரதாரி ரகசியம் தெரிந்துவிட்டது. மூளையாக செயல்பட்டவருக்கு அவர் எங்கிருந்தார் என்பது தெரியும். மூளையாக செயல்பட்டவரைச் சுற்றி இருந்தவர்களுக்கு தெரியும். சஹ்ரானுக்கு எப்படி பயிற்சி அளிப்பது என்பது மூளையாக செயல்பட்ட அவருக்குத் தெரியும். அவர் தற்கொலைக்கு எப்படி வழிநடத்தப்பட்டார் என்பது எனக்குத் தெரியும் என்றார்..
” அவர்களின் பெயர்கள் மற்றும் குடும்ப பெயர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்வேன் எனினும், அப்புஹாமி மற்றும் கருணாவதியிடம் சொல்வதில் பயனில்லை” என்றார்.
கழிப்பறை குழியில் விழுந்து குழந்தை மரணம்
கழிப்பறை குழியில் விழுந்து குழந்தை மரணம்
கழிப்பறை குழியில் விழுந்து குழந்தை மரணம் ,ஆரச்சிகட்டுவ, வைரங்கட்டுவ பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் பாதுகாப்பற்ற கழிப்பறை குழியில் விழுந்து ஒரு மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக ஆரச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஆராச்சிகட்டுவ, வைரங்கட்டுவ பகுதியைச் சேர்ந்த தெனஹண்டிகே வினுகி ஹன்சிமா என்ற பெண் குழந்தையே கழிப்பறை குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
வியாழக்கிழமை மாலை (06) உயிரிழந்த குழந்தையின் தந்தை வீட்டில் இல்லை, மேலும் அவரது தாயார் தேவைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தபோது, அவரது மூத்த சகோதரி மற்றும் சகோதரர், சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.
சுமார் 10 நிமிடங்களில் வீடு திரும்பியபோது, தனது மகள் மற்ற குழந்தைகளுடன் இல்லை என்றும், நீர்த்தேக்கத்தில் விழுந்து, அதில் நிரம்பியிருந்த தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்ததாகவும், தாயார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். குழந்தையை வெளியே இழுத்து, அண்டைய வீட்டாரின் உதவியுடன் உடனடியாக கிராமிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு
நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு
நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு ,மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உருக்குலைந்துள்ள சடலம் ஒன்று இருப்பதாக பொதுமக்கள் புதன்கிழமை (05) மாலை தகவல் வழங்கியதாக அக்கரைப்பற்று பொலிஸார்
தெரிவித்தனர். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை முள்ளிமலையடி பிரதேசத்தில் இந்த சடலம் தொங்கிய நிலையில் நின்று கொண்டிருந்தது.
குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு கிழமையாக துர்நாற்றம் வீசி வந்துள்ள நிலையில் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் அந்த பகுதியை சுற்றி
சோதனையிட்டபோது அங்கு மரம் ஒன்றில் தொங்கி உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தனர்
இதனையடுத்து குறித்த பகுதியில் யானைகள் நடமாடுவதால் அங்கு பொலிஸார் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வியாழக்கிழமை (06)
காலையில் சென்று சடலத்தை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தாகவும் இதுவரை சடலம் அடைiயாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 35 முதல் 38 வரையான வயதுடையதாக மதிக்கப்படும் இச்சடலமானது கடும் நீல நிற ரீசேட் அணிந்து காணப்படுவதுடன் 5 அடி உயரம் கொண்டதாக
காணப்படுவதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்கால சந்ததியை காப்பாற்றுக எம் பி ரவிகரன்கோரிக்கை
எதிர்கால சந்ததியை காப்பாற்றுக எம் பி ரவிகரன்கோரிக்கை
எதிர்கால சந்ததியை காப்பாற்றுக எம் பி ரவிகரன்கோரிக்கை ,வடபகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் ஊடுருவல்களாலும், போதைப்பொருள் பாவனைகளாலும் ஒரு தொகுதி எதிர்கால சந்ததியினர் அழிவடைத்
தொடங்கியுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தி எதிர்கால தலைமுறையினரையும், பொது மக்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றினை பாராளுமன்றில் புதன்கிழமை (05) முன்மொழிந்தார்.
இந்நிலையில் குறித்த சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணைதொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
போதையினால் நாடு மட்டுமல்ல எங்களுடைய மாவட்டங்களும் தள்ளாடிக் கொண்டு தான் இருக்கிறது.
இதுதொடர்பில் ஏற்கனவே நான் பாதுகாப்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தில்கூட போதைப்பொருட்களின் ஊடுருவல்கள் தொடர்பிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் பேசியிருந்தேன்.
இருப்பினும் சக பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவர்களால் முன்மொழியப்பட்ட இந்த ஒத்திவைப்பு வேளைப் பிரேரணைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நிச்சயமாக மிகவும் பொருத்தமான ஒத்திவைப்பு வேளை பிரேரணையாகும்.
நாட்டின் அதியுயர் பீடமாகக் காணப்படும் பாராளுமன்றிலே, தற்போது நாட்டில் போதைப்பொருட்களால் சீரழிந்து கொண்டிருக்கும் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த போதைப்பொருள் ஊடுருவல்கள் பாடசாலைகளில்கூட இடம்பெற்றுவருவதை தற்போதுநாம் அவதானித்துவருகின்றோம்.
போதைப்பொருள் பாவனையால் எமது சந்ததிகள், ஒருதொகுதி எதிர்கால தலைமுறையினர் அழிந்துவருகின்றனர்.
நான் கிராமந்தோறும் மக்கள் சந்திப்பிற்காக செல்கின்றபோது, போதைப்பொருள் பாவனையால் தமது கிராமத்தில் பலர் இறந்துவிட்டதாகவும், பலர் இறக்கும் நிலையில் பாதிக்கப்பட்டு தடுமாறிக்கொண்டிருப்பதாகவும் சில கிராமங்களில் மக்களால் என்னிடம் முறையிடப்பட்டன.
நாட்டில் இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணம்யார்? எமது நாட்டிலிருக்கும் பாதுகாப்புப் படையினர் சீராகச் செயற்பட்டால் இவ்வாறு போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் இறப்புக்களோ, பாதிப்புக்களோ இருக்காது.
இந்தப் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துகின்ற விடயத்தில் பொலிசாருக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றது. சட்டம் ஒழுங்கு முறையாகச் செயற்படுத்துங்கள்.
இந்த விடயத்தில் கூடிய கரிசனைசெலுத்தி போதைப் பொருட்களிடமிருந்து எமது மக்களைக் காப்பாற்றுங்கள். அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் – என்றார்
துப்பாக்கி தயாரித்த இருவர் சிக்கினர்
துப்பாக்கி தயாரித்த இருவர் சிக்கினர்
துப்பாக்கி தயாரித்த இருவர் சிக்கினர் ,உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் துப்பாக்கி ஒன்றுடன் புதன்கிழமை (05) அன்று இருவர் கைது செய்யப்பட்டதாக பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல தெரிவித்தார்.
குறித்த துப்பாக்கியை வைத்திருந்த மஹியங்கனை, 40 ஆம் இலக்க தொழில்துறை காலனியை சேர்ந்த 61 வயதுடைய ஒருவர் மற்றும் துப்பாக்கியை தயாரித்ததாக கூறப்படும் பதியதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மஹியங்கனை தொழில்துறை கொலனி பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேக நபரின் வீட்டிற்கு
அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த துப்பாக்கியை பதியதலாவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தயாரித்தமை தெரியவந்துள்ளது.
அதற்கமைய துப்பாக்கியை தயாரித்த சந்தேக நபர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக வேட்டையாடும் துப்பாக்கிகள் தான் தயாரிப்பதாகவும், யூடியூப் தளத்தில் இருந்த ஒரு காணொளியை பார்த்து குறித்த துப்பாக்கியை தயாரித்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, மேலதிக விசாரணைகளுக்காக மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இரு சந்தேக நபர்களும் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
பாடசாலை மாணவி கடத்தல்
பாடசாலை மாணவி கடத்தல்
பாடசாலை மாணவி கடத்தல் ,பாடசாலை மாணவியை, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிவித்து, கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு உட்படுத்தி விட்டு, 42 நாட்களுக்கு பின்னர், பர்தாவை அணிந்து நடுவீதியில் விட்டு சென்ற இளைஞனை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
இந்த சம்பவம், பிபில பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள பாடசாலையில் தரம் 10 இல் கல்விப்பயிலும் கணுல்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது 04 மாதங்களுமான பாடசாலை மாணவியை, அவருடைய சட்டரீதியான பொறுப்பானவர்களிடமிருந்து கடத்திச் சென்று இவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளார்.
யாயபார கணுல்வெல முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட யுவதி, 2024 மே மாதம் முதல் அந்த இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார். இதற்கு அந்த யுவதியின் தாய் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2025 ஜனவரி 22 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் யுவதியின் வீட்டுக்கு வந்த அந்த இளைஞன், மஹியங்கனையில் உள்ள முஸ்லிம் கிராமத்துக்கு கடத்திச் சென்றுள்ளார். அவ்வாறு கடத்திச் செல்லும் போது அந்த யுவதிக்கு, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து அழைத்துச் சென்றுள்ளார்.
ஜனவரி 22ஆம் திகதி முதல் மார்ச் 04 ஆம் திகதி வரையிலும், அந்த யுவதியை அவ்விளைஞன் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், தான் கொழும்புக்கு கூலி வேலைக்குச் செல்வதாக கூறி, அந்த யுவதிக்கு புர்கா அணிந்து, மஹியங்கனை நகருக்கு மார்ச் 05 ஆம் திகதியன்று அழைத்துவந்து, ஆட்டோவில் ஏற்றி, அந்த யுவதியின் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை தொடர்பில், தன்னுடைய தாயிடம் விபரித்த யுவதி, தாயுடன் சென்று பொலிஸில், மார்ச் 5 ஆம் திகதியன்று முறையிட்டுள்ளார். எனினும், தன்னை தடுத்து வைத்திருந்த வீடு ஞாபகத்தில் இல்லை என்றும் எனினும், சுற்றி முஸ்லிம் மட்டுமே இருந்தனர் என முறைப்பாட்டில் அந்த யுவதி தெரிவித்துள்ளார்.
முறைபாட்டை ஏற்றுக்கொண்ட பிபில பொலிஸார், சந்தேகநபரான அந்த இளைஞனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
வயதான மக்கள் தொகை அதிகரிப்பு
வயதான மக்கள் தொகை அதிகரிப்பு
வயதான மக்கள் தொகை அதிகரிப்பு ,தொற்றா நோய்கள் பரவுதல் மற்றும் வயதான மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக இலங்கையில் ஒவ்வொரு 2 கி.மீற்றருக்கும் இடையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைப்படும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் அவர் கூறியுள்ளதாவது, “இலங்கை மக்கள் தொகையில் சுமார் 14 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், 34 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கூடுதலாக, இலங்கையின் வயதான மக்கள் தொகை, எதிர்வரும் 2032ஆம் ஆண்டுக்குள் மொத்த மக்கள் தொகையில் 20.8 ஆகவும், 2037ஆம் ஆண்டுக்குள் மொத்த மக்கள் தொகையில் 22 சதவீதமாகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொடுக்கப்பட்ட சூழ்நிலை காரணமாக ஆரம்ப சுகாதார சேவையில் நாம் மேலும் மேலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
இலங்கையில் ஒவ்வொரு 2 கி.மீ.க்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைப்படும்” என்றும் அவர் மேலும் கூறினார்.
பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம் இஸ்லாமிய தீவிரவாதம்
பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம் இஸ்லாமிய தீவிரவாதம்
பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம் இஸ்லாமிய தீவிரவாதம் ,பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம் .
இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பதம் இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரண்பட்டது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம் பெற்ற 2025 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர், தொடர்ந்து உரையாற்றுகையில்…
.கிழக்கில் அடிப்படைவாதம் என்ற கூற்றின் ஊடாக எம்மீது பழி சுமத்த பல தீயசக்திகள் முயற்சிக்கலாம். அமைச்சர்களின் கூற்றுக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்த சக்திகள் நிச்சயம் முயற்சிக்கும்.
இவ்வாறான கூற்றுக்களை கொண்டு பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம்.எனவே இந்தக்கூற்றின் உண்மை தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் குறிப்பிட்டுள்ள விடயம் தேசிய பத்திரிகைகளில் பிரதான செய்தியாக, புதன்கிழமை (05) வெளிவந்துள்ளன.
குறிப்பாக ‘ கல்முனை பகுதிகளில் மத அமைப்புக்களினால் பிள்ளைகள் தீவிரவாத கற்பித்தலுக்காக பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும் அதன் காரணமாக உளவுத்துறையினர் கண்காணிப்புக்களை அதிகரிக்க
வேண்டியுள்ளது’ என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த கூற்றினால் எமது பிரதேச மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது என்றார்..
கூற்றுக்களில் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர அமைப்புக்களின் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.கல்முனை ஜும்மா பள்ளிவாசல், பள்ளிவாசல் சம்மேளனம்,
ஜம் இய்யதுல் உலமா சபை உட்பட இஸ்லாமிய அமைப்புகள் உட்பட இஸ்லாமிய மக்கள் தீவிரவாதத்துக்கு எதிராகவும், தீவிரவாதம் தொடர்பான விசாரணைகளுக்கும், தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட தயாராகவுள்ளனர் என்றார்..
இவ்வாறான அடிப்படைவாத போக்குகள் உள்ள குழுக்களின் பின்னணியையும், அவர்களுக்கு யார் நிதி வழங்குகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள எமது மக்கள் ஆர்வமாக உள்ளனர் .
எனவே புலனாய்வு விசாரணைகள் சட்டத்துக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்..
இதற்கு முன்னரும் முஸ்லிம் சமூகம் பல விடயங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுத்தும் உரிய அதிகாரிகள் பொறுப்புடன் செயற்படாதவில்லை.
இதனால் சஹ்ரானின் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன . இன்னொரு சஹ்ரானின் சம்பவம் இந்த நாட்டில் இனி ஒருபோதும் இடம் பெறக் கூடாது என்றார்.
கிழக்கில் அடிப்படைவாதம் என்ற கூற்றின் ஊடாக எம்மீது பழி சுமத்த பல தீய சக்திகள் முயற்சிக்கலாம். அமைச்சர்களின் கூற்றுக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்த சக்திகள் நிச்சயம் முயற்சிக்கும்.
அதிகாரபூர்மற்ற அறிவிப்புக்கள் வீண் அச்சம் மற்றும் சந்தேகங்களை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையை அரசாங்கம் ஏற்படுத்தக் கூடாது. இவ்வாறான பொதுவான கூற்றுக்களினால் சமூகத்தில் இஸ்லாமிய
அடிப்படைவாதம் செயல்படுகிறது என்ற பழைய தவறான அபிப்பிராயம் மீண்டும் தோற்றுவிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, கிழக்கில் அடிப்படைவாதம் என்றஅமைச்சர்களின் கூற்றுக்களை தெளிவுப்படுத்தி அரசாங்கம் பொதுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த
வேண்டும். புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்பதையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றும் கேட்டுக்கொண்டார்.
அஞ்சல் மூலம் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல்
அஞ்சல் மூலம் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல்
அஞ்சல் மூலம் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல் ,அஞ்சல் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கின்ற அதற்கு தகைமை பெற்ற அரச அலுவலர்களுக்கு ஃ பாதுகாப்பு பிரிவு அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிவித்தல் பின்வருமாறு:
- 2025.03.03 ஆம் திகதி பெயர் குறித்த நியமனங்களைக் கோருவதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்ட 336 பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்க தகைமை பெற்றுள்ளவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலப்பகுதி, 2025.03.03 ஆம் திகதியிலிருந்து 2025.03.12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவடையுள்ளது. எவ்விதத்திலும் இத்திகதி நீடிக்கப்பட மாட்டாது.
அதேபோல், அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.elections.gov.lk) சஞ்சரிப்பதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- இத்தேர்தலின் போது குறித்த உள்ளுர் அதிகார சபை அதிகார இடப்பரப்பில் தேருநர்களாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்ற அத்துடன் தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்படவிருக்கின்ற அனைத்து அரச அலுவலர்கள்/ ஊழியர்கள், பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும்,
- இலங்கை போக்குவரத்துச் சபை அலுவலர்கள்/ ஊழியர்கள், அஞ்சல் திணைக்கள் அலுவலர்கள்/ ஊழியர்கள், புகையிரதத் திணைக்கள அலுவலர்கள்/ ஊழியர்கள், முப்படைகளின், பொலிஸ் திணைக்களத்தின் முனைப்பான பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புப் படையணியின் அங்கத்தவர்கள், வேட்பாண்மை காரணமாக தனக்கு ஒதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்க முடியாதிருக்குமென்று அல்லது அவ்வாறு செய்வதற்கு வாய்ப்புள்ள வேட்பாளர்கள் அஞ்சல்மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கத் தகைமை பெறுவதுடன், அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் காலப்பகுதி முடிவடையும் வரை காத்திருக்காமல் தாமதமின்றி தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கத் தகைமை பெறுகின்ற அனைவரும் தயவுடன் வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், இத்தேர்தலின் போது அஞ்சல்மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது அதற்கான தகவல்கள் 2024 உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேருநர் இடாப்பிலிருந்து சரியான முறையில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.
- அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் அஞ்சல்மூலம் வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை தனிப்பட்ட முறையில் பரீட்சித்து விண்ணப்பதாரரின் ஆளடையாளம் குறித்து உறுதிசெய்துகொண்டு அத்தாட்சிப்படுத்த வேண்டுமென்றும், அத்தாட்சிப்படுத்திய விண்ணப்பங்களை இயன்றளவு விரைவாக குறித்த விண்ணப்பதாரர் தேருநராக பதிவுசெய்து கொண்டுள்ள மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கு 2025.03.12 ஆம் திகதி அல்லது அத்திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்க வேண்டுமென்றும், அத்திகதி மீண்டும் நீடிக்கப்பட மாட்டாதென்றும், உரிய திகதி பிந்திக் கிடைக்கின்ற விண்ணப்பங்களும் பூரணமற்ற விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படுமென்றும் அனைத்து அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கும் தயவுடன் அறிவிக்கப்படுகிறது. அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி இரு நாட்களுக்குள் அத்தாட்சிப்படுத்தப்படும் விண்ணப்பங்கள் அஞ்சலுக்கு ஒப்படைப்பதற்குப் பதிலாக மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஒப்படைப்பது மிகவும் உகந்ததென்று கருதப்படுகிறது.
- அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை பூரணப்படுத்துவதற்கு அவசியமான 2024 தேருநர் இடாப்புத் தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர தேவைப்படும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு 2024 உள்ளுர் அதிகாரசபைகளுக்கான தேருநர் இடாப்புக்கள் பின்வரும் இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
i. அனைத்து மாவட்ட செயலகங்கள் (கச்சேரிகள்)
(சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு)
ii. அனைத்து மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்கள்
(உரிய இடாப்புக்கள்)
iii. அனைத்து உள்ளூர் அதிகாரசபைகள்
(ஒவ்வோர் உள்ளூர் அதிகார இடப்பரப்புக்குரிய இடாப்புக்கள்)
iv. அனைத்து கிராம அலுவலர் அலுவலகங்கள்
(ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்குரிய இடாப்புக்கள்) - தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக நிகழ்நிலை முறையில் அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களைப் பூரணப்படுத்திக் கொள்வதற்கான வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
தேருநர் இடாப்பில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் குறிப்பிட்டிருக்காத விண்ணப்பதாரர்கள் மேற்படி இல. 04 இல் குறிப்பிடப்பட்டுள்ள இடமொன்றிலிருந்து தமது பதிவுக்குரிய தகவலகளைப் பெற்றுக் கொண்டு விண்ணப்பப்படினங்களைப் பூரணப்படுத்த வேண்டும்.
அரியாலை மயான விவகாரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அரியாலை மயான விவகாரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அரியாலை மயான விவகாரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ,யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் உள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்புக்கு
மேலதிகமான கண்காணிப்பு பணிக்கு மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஐவரை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கினுடைய கலந்தாய்வு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா தலைமையில், செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்றது
குறித்த கலந்துரையாடலில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் சட்டத்தரணி தற்பரனும் முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணி சுகாசும், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குறித்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு உரிய வகையில் வழங்கப்பட வேண்டும் என்றும் பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமாக குறித்த மயானத்தினுடைய அபிவிருத்தி சங்கத்தின்
உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு பணியை மேற்பார்வை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என சட்டத்தரணிகளால் கோரப்பட்டது.
இதனை ஆராய்ந்த நீதவான், மயான அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் ஐந்து உறுப்பினர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதி வழங்கினார். வழக்கு தொடர் விசாரணைக்காக திகதியிடப்பட்டது
14 8 கிலோ கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தத நடிகை
14 8 கிலோ கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தத நடிகை
14 8 கிலோ கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தத நடிகை ,டுபாயில் இருந்து 14.8 கிலோ கிராம் தங்க நகைகளை கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவ் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த ரன்யா ராவ் (32) கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‛வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் திங்கட்கிழமை (03) இரவு ரன்யா ராவ் டுபாயில் இருந்து பெங்களூருக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்துள்ளார்.
அவர் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிக தங்க நகைகளை அணிந்திருந்தார்.
அவரது உடைமைகளை சோதித்தபோது 25 தங்க கட்டிகள் இருந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கர்நாடக பொலி டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் எனவும், பெங்களூரு மாநகர பொலிஸார் என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள் எனவும் ரன்யா ராவ் கூறியுள்ளார்.
இருப்பினும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் ரன்யா ராவ் கடந்த 15 நாட்களில் 4 முறை டுபாய்க்கு பயணம் செய்தது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் தங்கம் கடத்தி வந்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சட்ட விரோதமாக தங்கம் கடத்தியதாக ரன்யா ராவ் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவரிடம் இருந்த 14.8 கிலோ கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். அவரை நேற்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 3 நாள் காவலில் எடுத்துள்ளனர்.
நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கின் பின்னணியில் முக்கிய புள்ளிகள் சிலர் இருக்கலாம் என வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
அந்த கும்பல், அவரை தங்கம் கடத்த பயன்படுத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
வாகனம் இறக்குமதி செய்த மூவர் கைது
வாகனம் இறக்குமதி செய்த மூவர் கைது
வாகனம் இறக்குமதி செய்த மூவர் கைது ,சட்டவிரோதமாக ஒரு SUV மற்றும் ஒரு காரை இறக்குமதி செய்து போலி இலக்கத் தகடுகளுடன் பயன்படுத்தியதற்காக மூன்று பேரை பெல்மதுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், பெல்மதுல்ல பொலிஸ் அதிகாரிகள் 2024 ஒக்டோபரில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கராஜுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்களைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் விளைவாக நேற்று மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 49, 59 மற்றும் 61 வயதுடைய, எம்பிலிப்பிட்டிய மற்றும் மமடல பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சந்தேக நபர்கள் நேற்று பெல்மதுல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், 2025 மார்ச் 11 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை
பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை
பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை ,மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற அசுத்தமான தேங்காய் எண்ணெய் உள்ளூர் சந்தையில் நுழைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயைப் பெற்று உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வதில் இறக்குமதியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கூறினார்.
“சில இறக்குமதி நிறுவனங்கள் கணிசமான வருவாய் ஈட்டிய பின்னர் 11 மாதங்களில் செயல்படாமல் போய்விட்டன” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்படும் என்றும், மோசடிகளைத் தடுக்க வலுவான விதிகள் மற்றும் விதிமுறைகள் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார்.


























