Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
160200 கர்ப்பிணிகளுக்கு உணவுப் பொதி
160200 கர்ப்பிணிகளுக்கு உணவுப் பொதி
160200 கர்ப்பிணிகளுக்கு உணவுப் பொதி ,நாட்டில் உள்ள 1,60,200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக அரசாங்கம்
1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என தெரிவித்த சிறுவர் மற்றும் மகளிர் விவகாரஅமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ், இந்த திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம் பெற்ற தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும மூலம் நிவாரணம் பெறும் பயனாளிகளுக்கு போசாக்கான உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் அப்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலம் என்பதால் தேர்தல் ஆணையாளரின் உத்தரவுக்கு இணங்க அந்த கொடுப்பனவு வழங்குவதை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கத்தினால்
தீர்மானிக்கப்பட்டது.அந்த நிதியை பயன்படுத்தியே மந்த போசனத்துடன் காணப்படும் தாய்மாருக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.
கடந்த அரசாங்கத்தின் காலங்களில் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இடையில் நிறுத்தி வைக்கப்பட்ட நிதி அப்போதைய அமைச்சர்கள், ஜனாதிபதிக்கும்
போய் சேர்ந்துள்ளது. அந்த வகையில் எமது அரசாங்கம் எப்போதும் மக்கள் நலனுக்கு முன்னுரிமையளித்து செயற்படுகின்றது .
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினூடாக நாட்டில் வாழ்கின்ற கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் ஆறு மாதங்களுக்கும் அதன்
பின்னர் பாலூட்டும் காலங்களில் நான்கு மாதங்களுக்குமாக 10 மாதங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.அந்த வகையில்
டிசம்பர் மாதத்தில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
1,60,200கர்ப்பிணிகளை தெரிவு செய்து அவர்களுக்கு 5000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதியை வழங்குவதற்கான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
2 லட்சத்துக்கு 80 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்கள் நாட்டில் தற்போது உள்ளனர்.அவர்களில் மந்த போசனத்தோடு காணப்படும் தாய்மாரை
முக்கியமாக தெரிவு செய்து உணவுப் பொதியை வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.
முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதிவாழ்வு
முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதிவாழ்வு
முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கக் கடற்படையினரும் வனவளத்திணைக்களத்தினரும் இணைந்து முள்ளிக்குளம்
எம்.பி. துரைராசா ரவிகரன்
கிராமத்தை முற்றாக அபகரித்துவைத்துள்ளதாக தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) அன்று இடம்பெற்ற தேசிய கணக்காய்வு திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டினார்.
மேலும், முள்ளிக்குளம் கிராமத்தில் வாழ்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண நிலைமை காரணமாக தங்களுடைய பூர்வீக வாழ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்தனர். சுமார் 400 தமிழ்க் குடும்பங்களே
இவ்வாறான இடப்பெயர்வைச் சந்தித்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் ஒரு தசாப்த காலத்துக்குப் பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு அவர்களுடைய சொந்த இடமான முள்ளிக்குளத்தில் மீள் குடியேற்றப்பட்டனர்.
இடத்தில் மீள் குடியேறிய மக்களுக்கு
இவ்வாறு தமது சொந்த இடத்தில் மீள் குடியேறிய மக்களுக்கு அக்காலப்பகுதியில் 150 நிரந்தர வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மொத்தமாக 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேறி வாழ ஆரம்பித்தனர். அது நீடிக்கவில்லை. மீள் குடியேறி வெறுமனே ஐந்து வருடங்களிலேயே கடந்த 2007ஆம் ஆண்டு மீளவும் இடம்பெயர வேண்டிய
அவலநிலைக்கு முள்ளிக்குளம் கிராம மக்கள் தள்ளப்பட்டனர்.இவ்வாறான சூழ்நிலையில் யுத்தம் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் முள்ளிக்குளம் மக்கள் தமது பூர்வீக வாழ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்து
இரண்டு தசாப்த காலங்களை அண்மித்துள்ள நிலையில் இதுவரை முள்ளிக்குளம் கிராம மக்களை அவர்களுடைய சொந்த இடத்தில் மீள் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இத்தகைய சூழலில் முள்ளிக்குளம் கிராம மக்கள் அயல் கிராமங்களான மலைக்காடு மற்றும் காயாக்குழி உள்ளிட்ட கிராமங்களில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக மலைக்காடு, காயாக்குழி ஆகிய கிராமங்களில் 250 இற்கும் மேற்பட்ட முள்ளிக்குளம் மக்கள் அகதி என்னும் அவல வாழ்வை வாழ்கின்றனர்.
175 வரையான குடும்பங்கள் இந்தியாவின் அகதி முகாம்களில்
இது தவிர 175 வரையான குடும்பங்கள் இந்தியாவின் அகதி முகாம்களில் வாழ்வதாகவும் மேலும் பல குடும்பங்கள் ஆங்காங்கே சிதறி வாழ்வதாகவும் முள்ளிக்குளம் கிராம மக்கள் முறையிடுகின்றனர்.
இவ்வாறாக முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கக் கடற்படையினரும் வனவளத்திணைக்களத்தினரும்
இணைந்து முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்துவைத்துள்ள நிலையைக் காணக்கூடியதாகவுள்ளது.
குறிப்பாக முள்ளிக்குளம் கிராமத்தைச்சேர்ந்த தமிழ் மக்களுக்குரிய நெற் செய்கைக்குரிய காணிகள், தோட்டக் காணிகள், குடியிருப்புக்காணிகள்,
நீர்ப்பாசனக்குளங்கள் உள்ளடங்கலாக 1500க்கும் அதிகமான ஏக்கர்கள் வனவளத்திணைக்களத்தாலும் கடற்படையாலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனக் குளங்களைப் பொறுத்தவரையில் சின்னத்தனக்கன் குளம்,
பெரியதனக்கன்குளம், பரவெளிக்குளம், பாலடிக்குளம், செட்டியார்குளம், அரக்குளம், புதுக்குளம் உள்ளிட்டவை முற்றாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.
அதேவேளை, தமிழ் மக்களுடைய காணிகள் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தோட்டப் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தமிழ் மக்களுக்கு 2002ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின்போது அமைக்கப்பட்டு வழங்கப்பட்ட வீடுகளில் கடற்படையினரது குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முள்ளிக்குளம் மக்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த இடங்களும் முற்றாக அபகரிக்கப்பட்டுள்ளன .
இத்தகைய சூழலில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தங்களுடைய பூர்வீகக் கிராமத்தை விடுவிப்புச் செய்வதுடன் தம்மை மீள் குடியமர்த்துமாறும் முள்ளிக்குளம் கிராம மக்கள் தொடர்ச்சியாகக் கோரிவருகின்றனர்.
குறிப்பாக தம்மை மீள் குடியமர்த்துமாறும் முள்ளிக்குளம் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் கடந்த 2017 ஆண்டு காலப்பகுதியில் இரண்டுமாத காலம் தொடர்ச்சியாக மேற்கொண்ட தொடர் போராட்டத்தின் பலனாக அப்போதைய ஆளுநர் வருகை தந்து காணிகள் விடுவிப்புச் செய்வதாக
காணிகளை விடுவிப்புச்செய்வதற்கு நடவடிக்கை
உத்தரவாதமளிக்கப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் 77 ஏக்கர் காணிகளை விடுவிப்புச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு காணிகளும் மக்களால் துப்புரவாக்கப்பட்டுள்ளன.
மக்களால் துப்புரவு செய்யப்பட்ட பகுதிகளைத் தீயிட்டு கொளு த்துவதற்கு கடற்படையினர் இடையூறு ஏற்படுத்தியதையடுத்து அந்தக் காணிகள் துப்புரவு செய்வதும் கைவிடப்பட்டது.
இதனால் தமிழ் மக்கள் அந்தக் காணிகளில் மீள் குடியேறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன .
இவ்வாறாக முள்ளிக்குளம் கிராமத்தில் மக்கள் எவரும் மீள் குடியமர்த்தப்படாத நிலையிலும் அங்கு பாடசாலை இயங்கி வருகின்றது. அங்குள்ள தேவாலயத்திற்கும் மக்கள் சென்று வருகின்றனர்.
முள்ளிக்குளம் பகுதியில் இயங்கிவருகின்ற முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் 42 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
மலைக்காட்டுப் பகுதியில் வசிக்கின்ற முள்ளிக்குளத்தை சேர்ந்தவர்களுடைய பிள்ளைகளே முள்ளிக்குளம் பாடசாலைக்குக் காலையில் சென்று மாலையில் திரும்புகின்றனர்.
அதேபோல், முள்ளிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பரலோகமாதா தேவாலயத்துக்கும் மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுலாப் பயணி
இவ்வாறாக தமது சொந்த இடத்துக்குச் சுற்றுலாப் பயணிகளைப் போல, சென்று வருகின்ற அவலத்தைச் சுமந்து அகதி வாழ்க்கையை முள்ளிக்குளம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தாம் வாழ்ந்த, தவழ்ந்த, விளையாடிய, பயிர்செய்த நிலங்கள் அனைத்தும் கண்முன்னே ஆக்கிரமிக்கப்பட்டு இருக்க தமது நிலத்தில் மீள் குடியேற்ற
முடியாத நிலையில் உள்ள முள்ளிக்குளம் கிராம மக்களின் அகதி என்னும் அவல வாழ்வுக்கு முடிவு கட்டப்படவேண்டும்.
அந்த மக்கள் உடன் மீள் குடியமர்த்தப்பட வேண்டும். முள்ளிக்குளம் மக்களை மீள் குடியமர்த்துவதற்கு உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
குளவி தாக்குதலில் பெண் பலி
குளவி தாக்குதலில் பெண் பலி
குளவி தாக்குதலில் பெண் பலி .குளவி தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபகரமாக பலியான சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது .Woman dies in wasp attack
யாழ்ப்பாணம் தெள்ளிப்பாளை பகுதி Jaffna, Tellipalla area
யாழ்ப்பாணம் தெள்ளிப்பாளை பகுதியை சேர்ந்த 82 வயது மூதாட்டி ஒருவர் காவோலை ஒன்று விழுந்துள்ளது அப்பொழுது அதில் கருங்குளவி கூடுகள் காணப்பட்டுள்ளது.
கூடு அழகாய் இருப்பதாக நினைத்து அதனை தடியால் தட்டியுள்ளார் .அப்பொழுது அதற்குள் இருந்த குழவிகள் எழுந்து வந்து அவரை குத்தியது.
யாழ்ப்பாண செய்திகள் Jaffna News
இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமானதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.
குளவி கூட்டினை தடியெடுத்து தட்டாமல் விட்டிருந்தால் இவர் இறந்திருப்பாரா என்ற கேள்வி இப்பொழுது எழுப்பி இருக்கிறது.
விதியின் விளையாட்டு மூதாட்டி குளவி கொட்டி தான் இறக்க வேண்டும் என்ற நிலை இருந்த காரணத்தினால் இந்த விடயம் நிகழ்ந்திருக்கிறது .
மேற்படிச் சம்பவம் அந்த மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மனிதப் புதைகுழிக்கு நீதிபதி விஜயம்
மனிதப் புதைகுழிக்கு நீதிபதி விஜயம்
மனிதப் புதைகுழிக்கு நீதிபதி விஜயம் ,குருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். Judge visits mass grave
1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்க
பட்டு குருக்கள் மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு விசாரணை களுவாஞ்சிக்குடி நீதவான்
நீதிமன்றத்தில் வியாழக்கிழமை(11) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது உரிய நபர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தை நீதிபதி ஜே.பீ.ஏ.ரஞ்சித்குமார்
முன்னிலையில் தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டத்தரணிகள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர், பிரதேச சபைத்
தவிசாளர், பொலிஸார், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக அதிகாரிகள், சட்ட வைத்திய நிபுணர்கள், தடயவியல் பொலிஸார், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், உள்ளிட்ட பலரும் பார்வையிட்டனர்.
இதன்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் உரிய இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களை தோண்டி எடுக்குமாறு ஏற்கனவே களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த
நிலையில் ம் நீதிபதி தலைமையிலான உயர் அதிகாரிகள் உரிய இடத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியை அண்மித்ததாக உள்ள இடம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு பாதுகாப்பு வலயம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
மைத்திரி அரசவீட்டை விட்டு ஓட்டம்
மைத்திரி அரசவீட்டை விட்டு ஓட்டம்
மைத்திரி அரசவீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.Maithri flees from the royal palace
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அரசு சலுகைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ,அதில் மாற்றம் கொண்டுவரப்பட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அரச வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச வெளியேறிய அதே நாளில் On the same day that Mahinda Rajapaksa left
மஹிந்த ராஜபக்ச வெளியேறிய அதே நாளில் மைத்திரியும் தற்போது வெளியேறி இருக்கிறார்.
புதிய நாளில் இருவரும் அரச வீடுகளை விட்டு எப்படி வெளியேற முடிந்தது என்ற விடயம் தான் இங்கு பேசு பொருள் ஆகிறது.
ஆக உள்ளக ரீதியாக கதைத்து பேசி வெளியேறி இருக்கிறார்கள் .
அரசியலெண்டு வருகின்ற பொழுது எதிரும் புதிருமாக மக்கள் மத்தியில் பேசுகிறார்கள்.
எல்லாம் மக்களை ஏமாற்றுகிற ஒரு அரசியல் சித்து நடவடிக்கையாகவும், மனித உரிமை பேரவையை திசை திருப்பு நடவடிக்கை ஒன்றாகவே காணப்படுகிறது.
ஒன்பதாவது மனித உரிமை பேரவை இடம்பெற்று வருகிறது .
இதில் அரசு மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும் கொலையாளிகள் மீது அவர் நடவடிக்கை எடுப்பதாக தோற்றப்பாட்டை காட்டுவதற்கான ஒரு முன்னேற்பாடா இதனை பார்க்க முடிகிறது.
பாராளுமன்றத்தில் குழப்பம் சபை ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தில் குழப்பம் சபை ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தில் குழப்பம் சபை ஒத்துழைப்பு தற்போது ஆளுகிற அரசாங்கத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவர பட்டது .
பிரதி பாதுகாப்பு அமைச்சர்
இந்த பிரதி பாதுகாப்பு அமைச்சர் என்பவர் முன்னாள் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசகுரவுக்கு எதிராக இந்த நம்பிக்கை கொண்டுவர கோரிக்கை விடுக்க பட்டது .
இவர் இறுதி முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழர்களை அழித்ததில் பிரதானியாக கடமையாற்றி இருந்தார்.
அவரே தற்போதுமேயர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டு பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக பதவி விலக்க வேண்டும்
இவரை உடனடியாக பதவி விலக்க வேண்டும் எனக் கூறி பாராளுமன்றத்தில் சஜித் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நம்பிக்கையில் பிரேரணை கொண்டு வந்தனர்.
அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சபாநாயகர் அறிவித்தார் .இதனால் பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டது.
இந்த அமைதியின்மை காரணமாக சபை 10 நிமிடங்களுக்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் அழிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் அழிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் அழிப்பு , ஆட்சியின் செயல்பாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Expiry of privileges of former presidents
மஹிந்த ராஜபக்ஷ தனது அரச வீட்டிலிருந்து வெளியேறினார் Mahinda Rajapaksa left his royal residence
இதனை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ தனது அரச வீட்டிலிருந்து வெளியேறி தனது கார்டன் இல்லத்தில் குடி பெயர்ந்துள்ளார்.
கோடிக்கணக்கில் பணங்களை கொள்ளையடித்து திடீர் பணக்காரர்கள் ஆன மகிந்த அரச வீட்டில் தங்கி இருந்து ஆடம்பரமாக வாழ்கை வாழ்ந்து வந்துள்ளார் .
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டு பாதுகாப்புகள் குறைக்கப்பட்டு அவர்கள் இப்போது பல்லு பிடுங்க பட்ட பமபாக மாற்றம் பெற்றுள்ளனர் .
இந்த செயல்பாடு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கார்ல்டன் ஸ்ரீலங்காவில் இந்த விடயத்தை அனுரா செய்து வருவதால் ,அனுரா மீது ஒருவித நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சொந்த வீட்டுக்கு போன மஹிந்தா அனுரா மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று பேருந்துகள் மோதி விபத்து
மூன்று பேருந்துகள் மோதி விபத்து
மூன்று பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டதில் மாணவர்களிடம் படுகாயம் அமைந்துள்ளார்கள் கொழும்பு பதிலை பிரதான வீதியில் பாலாங்குடை ஆல எல்ல போல பகுதியில் 3 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கன.Three buses collide in accident
தனியார் பேருந்து அரசு பேருந்து Private Bus Government Bus
மாணவர்களை ஏற்றிச் சென்று வந்த பேரிலிருந்தும் தனியார் பேருந்து அரசு பேருந்து உள்ளிட்டவையை இதில் மோதின .
இதன்போது 3 பேருந்துகளும் சேதம் அடைந்தனர் பயணிகளும் காயம் அடைந்தார்கள்.
காயமடைந்த பயணிகள் Injured passengers
காயமடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வரும் இந்த வீதி விபத்துகளினால் தொடர்ந்தும் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதிலிருந்து மக்களை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் தெரிவித்துள்ளார்கள்.
தேசம் எங்கும் புதை குழியா
தேசம் எங்கும் புதை குழியா
தேசம் எங்கும் புதை குழியா என்கிற புதிய பாடல் வெளிவந்துள்ளது.வன்னி மைந்தன் எதிரி இணையம் இணைந்து மேற்கொள்ளும் பாடல் திட்டத்தில் இந்த பாடல் வெளியாகியுள்ளது .
மதுரக்குரலோன் பாவேந்தன்
இந்த பாடலை மதுரக்குரலோன் பாவேந்தன் அவர்கள் பாடியுளளார் ,சிறந்த இசையை இளங்கோ செல்லப்பா வழங்கியுளளார் .
ஐக்கிய நாடுகள் மனித உரிமையின் அறுபதாவது கூட்ட தொடர் இடம்பெறும் இவ்வேளையில் இந்த பாடல் வெளியிட்டுள்ளது .
தமிழர் தேசம் எங்கும் மனித புதைகுழிகள் ,இலங்கை இராணுவத்தின் மனித உயிர் குடிக்கும் வெறியாட்டத்தின் உச்சம் .
தேசம் எங்கும் புதைகுழியா
அதனை மைய படுத்தி தேசம் எங்கும் புதைகுழியா என்கின்ற இந்த பாடலை லண்டனை சேர்ந்த ராஜ் அவர்கள் எழுதியுள்ளார் .
காலத்தின் தேவை அறிந்து இந்த பாடல் திட்டத்தில் பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும் இவ்வேளையில் நெறிகளையும் பாராட்டுக்களையும் தெறிவித்து கொள்கிறோம் .
உனக்கும் எனக்கும் போட்டியா
நீயா நானா ஒரு கை பார்க்கலாம் வா
பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு நம்பிக்கையில்லா தீர்மானம்
பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு நம்பிக்கையில்லா தீர்மானம்
பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவரும் முகமாக இலங்கையின் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மனு ஒன்றிய தாக்கல் செய்துள்ளது. No-confidence motion against Deputy Defense Minister
நம்பிக்கையில் பிரேரணை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது They cannot accept the motion of confidence.
தினம் எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட இந்த நம்பிக்கையில் பிரேரணை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
என இலங்கையின் பாராளுமன்ற சபாநாயகர் அவர்கள் அறிவித்துள்ளார்.
மேற்படி கட்சிகளினால் தெரிவிக்கப்பட்ட காரணங்கள் கூற்றுகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவையாகவும்
,அதனால் அந்த கட்சிகள் வைத்த வேண்டுதலை ஏற்க முடியாது என அவர் நிராகரித்துள்ளார்.
இதை எதிர் அரசியல்வாதிகளுக்கு சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆட்சியை கவிழ்க்கும் நோக்குடன் With the aim of overthrowing the regime
அனுரா ஆட்சிக்கு எதிராக அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த விடயங்கள் அவரது ஆட்சியை கவிழ்க்கும் நோக்குடன்செயல்பாடாகப் பார்க்கப்படுகிறது.
பிரதி பாதுகாப்பு அமைச்சரை குறி வைத்து மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை ஏன் இந்த கேள்விதான் இப்பொழுது எழுப்பப்படுகிறது.
பல் வலிக்கு மருத்துவமனை சென்ற பெண் படுகொலை
பல் வலிக்கு மருத்துவமனை சென்ற பெண் படுகொலை
பல் வலிக்கு மருத்துவமனை சென்ற பெண் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Woman murdered after going to hospital for toothache.
இலங்கை மொனராகலை வைத்தியசாலை Sri Lanka Monaragala Hospital
இலங்கை மொனராகலை வைத்தியசாலைக்கு பல் வலிக்காக சென்ற ஒரு பிள்ளையின் தாயான 24 வயது பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சாதாரண பல்வலி ஒன்றுக்கு சிகிச்சை பெறச் சென்றவருக்கு நடத்தப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவமனையில் இவ்வாறு சிகிச்சை பெறச் செல்கின்ற பல மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகிற சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது.
பெண் மரணத்தில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் Various doubts raised over woman’s death
இந்தப் பெண் மரணத்தில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் உள்ளதாக பெண்ணினுடைய கணவர் உள்ளிட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மருத்துவமனையில் தொடராக இடம்பெறும் முறையற்ற சிகிச்சை மற்றும் மருத்துவர்கள் அலட்சியம் மற்றும் பரிசோதனை நடவடிக்கை ஊடாக இந்த மரணங்கள் ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இலங்கையின் சுகாதார அமைச்சு மற்றும் மக்கள் எதிர்வாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெண் மரணத்தில் சந்தேகம் உள்ளதை எடுத்து இவரது சுடலத்தை வைத்துப் போராட்டம் நடத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விபத்தில் நால்வர் பலி பலர்காயம்
விபத்தில் நால்வர் பலி பலர்காயம்
விபத்தில் நால்வர் பலி பலர்காயம் , இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வீதி விபத்தில் சிக்கி நால்வர் பலியாகி பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது . Four killed, many injured in accident
இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகிறது Road accidents are increasing in Sri Lanka
இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகிற காரணத்தினால் நாள்தோறும் நான்கு முதல் ஏழு பேர் பலியாகி வருகின்றார்கள்.
மேலும் இந்த விபத்து சம்பவத்தை தொடர்ந்து மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான கருத்துக்கள் வலுத்து வருகிறது.
வீதி விபத்துக்கள் எவ்வாறு ஏற்படுகிறது How do road accidents occur?
வீதி விபத்துக்கள் எவ்வாறு ஏற்படுகிறது? ஏன் அதனை இலங்கை காவல்துறையால் தடுக்க முடியவில்லை என்ற கேள்வி தொடராக வைக்கப்பட்டு வருகிறது .
பலியானவர்களில் நான்கு பேர் சிறுவர்கள் முதல் முதியோர்களை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் நால்வர் பலியான சம்பவம் மேலும் பல காயமடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்று தடுக்கப்படும் இந்த விபத்து மக்கள் உயிர் எப்பொழுது காப்பாற்றப்படும்..?
நேபாளத்தில் இலங்கையருக்கு பாதிப்பு இல்லை
நேபாளத்தில் இலங்கையருக்கு பாதிப்பு இல்லை
நேபாளத்தில் இலங்கையருக்கு பாதிப்பு இல்லை ,நேபாளத்தில் இளைஞர்களுக்கு பாதிப்பு இல்லை என இலங்கை அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளது .Sri Lankans travel to Nepal for fun
இலங்கை மக்கள் நேபாளத்திற்கு உல்லாச பயணி
இலங்கை மக்கள் நேபாளத்திற்கு உல்லாச பயணிகளாகவும் சென்று சில வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள்.
இவ்வாறு நேபாளத்திற்குச் சென்ற இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை என இலங்கை வலியுறவு அமைச்சகம் அறிவித்துள்ள
என்னிடம் நேபாளத்தில் வசிக்கிற இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஆளும் அரசுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டங்கள் இடம்பெற்று வருகிற காரணத்தினால் .
போராட்டக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள் மீது தாக்குதல் Protesters attack foreigners
அந்தப் போராட்டக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள் மீது தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சம் காணப்படுகிறது
ஆகவே வெளிநாட்டு மக்கள் இவ்விடையில் மிக கவனமாக செயல்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது
விமான பயணங்கள் என்பன இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ள தமது நாட்டவருக்கு பாதிப்பு இல்லை என்கிறது இலங்கை
சமையல் எரிவாயு கசிவால் பெண்பலி
சமையல் எரிவாயு கசிவால் பெண்பலி
சமையல் எரிவாயு கசிவால் பெண்பலி யாகி உள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.Woman dies due to cooking gas leak
மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி அரபா வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு Gas for making tea
தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு சிலிண்டரை அவர் பயன்படுத்திய போது ,அது திடீரென வெடித்து சிதறியதில் இந்த மரணம் சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் எரி காயங்களுக்கு உள்ளான பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் .
பின்னர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் Great anxiety among the people
மேற்படி எரிவாயு கசிவால் பெண் கருகி இறந்த சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பெண்ணினுடைய மரணம் தொடர்பாக விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.
சமையல் எரிவாயு எப்படி கசிந்தது என்பது தொடர்பிலும் அது எப்படி வெடித்து சிதறியது .
என்பது தொடர்பிலும் இலங்கை குத்த தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
விபத்து மரணமா அல்லது திட்டமிடப்பட்ட படுகொலையா என்பது தொடர்பாகவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
யாழில் வாள்வெட்டு வாலிபன் காயம்
யாழில் வாள்வெட்டு வாலிபன் காயம்
யாழில் வாள்வெட்டு வாலிபன் காயம் அடைந்துள்ளதா யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.Youth injured in sword attack in Jaffna
திடீரென மார்ம நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் Suddenly, a sword attack by religious people
மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த இளைஞன் மீது திடீரென மார்ம
நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயம் அடைந்த வாலிபன் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 35 வயது உடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த வாள்வெட்டு காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வாள்வெட்டிற்கான காரணம் இருதரப்புக்கு இடையில் காணப்பட்ட முரண்பாடே காரணமென போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனவே வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் எங்கும் போலீசார் ராணுவம் Police and military everywhere in Jaffna
யாழ்ப்பாணம் எங்கும் போலீசார் ராணுவம் குறிக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள் வந்து மக்களுக்கு முன்பாக இந்த வாள்வெட்டுதாக்குதலை நடத்த பட்டுள்ளது .
அது வரை காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
எனவே இந்த வாழ்வட்டு தாக்குதலின் பின்புலத்தில் அரசியல் மறைந்திருப்பதும் அரசியல்வாதிகள் ஆதரவு இருப்பதும் அப்பட்டமாக தெரிகிறது.
அனுரா அரசில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை நேபாள விமானசேவைகள் ரத்து
இலங்கை நேபாள விமானசேவைகள் ரத்து
இலங்கை நேபாள விமானசேவைகள் ரத்து ,இலங்கை நேபாள விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. Sri Lanka-Nepal flight services cancelled
அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் Protest against the government
நேபாளத்தில் அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை அடுத்து விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆளும் ஆட்சியாளருக்கு எதிராக இந்த போராட்டங்கள் இடம்பெற்று வருவதால் அவை வன்முறையில் மாறி
விமானங்களுக்கு சேதங்கள் ஏற்படுத்திவிடலாம் என்ற காரணத்தினால். இந்த போக்குவரத்து தற்காலிகமாக தடை நிறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து தற்காலிகமாக தடை Traffic temporarily suspended
இதனை அடுத்து நேபாளம் இலங்கையில் இருந்து சென்று வந்த பயணிகள் தற்போது மிகப்பெரும் அவதியில் சிக்கியிருக்கின்றனர் .
இலங்கையின் விமான சேவைகள் நேபாளத்தில் அமைதி ஏற்பட்ட பின்னரே முழுமையாக ஆரம்பிக்கப்படும் என இலங்கை அரச அதிகாரிகளினால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது
இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா
இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா
இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா என்ற கேள்வியை தமிழர்கள் மீளவும் எழுப்பியுள்ளனர் .
இலங்கை முழுவதும் சிங்கள மயமாக்களுக்கு உள்ளாக்க பட்ட பின்னர் தமிழர்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .
இலங்கை அரச இராணுவம்
அரச நிர்வாகிகள் முதல் இலங்கை அரச இராணுவம் வரைக்கும் தமிழர்கள் அடக்கி ஆட்கொள்ள பட்டு நசுக்க பட்டு வருகின்றனர் .
இப்பொழுது தமிழர்கள் துப்பாக்கி முனையில் வாழும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது .
சுதந்திரம் அற்ற தேசத்தில் சுத்தித்திரமாக வாழும் நிலை எப்பொழுது ஏற்படும் என்பதே தமிழ் மக்கள் கேள்வியாக உள்ளது .
புலிகள் அந்த மண்ணில் வாழ்ந்த பொழுது அச்சமற்ற சிறந்த வாழ்வியல் காணப்பட்டது .
ஆனால் இன்று எப்பொழுது யார் கடத்த படுவார்கள் காணாமல் போவார்கள் என தெரியாத நிலை காணப்படுகிறது .
இதனை தடுத்து நிறுத்தி தமிழர்கள் வாழும் உரிமை யார் பெற்று கொடுப்பார்கள் என்பதே ஒட்டுமொத்த தமிழரின் எதிர் பார்ப்பாங்க உள்ளது .
புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை
புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை
புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை ,காங்கேசன்துறையிலிருந்து கோட்டைக்கு செல்லும் மதியம் 1.30 புகையிரதத்தில் முன்பதிவு செய்த நால்வர் யாழ்ப்பாணத்திலிருந்த ஏறியிருக்கின்றனர்.
காங்கேசன்துறையிலிருந்து நான்கு சிங்களவர்கள்
ஆனால் அவர்கள் முன்பதிவு செய்து பயணச்சீட்டுக்களை பெற்றிருந்த ஆசனங்களில் காங்கேசன்துறையிலிருந்து நான்கு சிங்களவர்கள் அமர்ந்து வந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் முன்பதிவு செய்த நான்கு தமிழர்களும் பயணச்சீட்டைக் காட்டி, அது தம்மால் முன்பதிவு செய்யப்பட்டது எனவும், ஆசனத்தை விட்டுத்தருமாறு கேட்டபோது,
தாமும் முன்பதிவு செய்துதான் புகையிரத த்தில் பயணிக்கிறோம் எனவும் தாம் முன்பதிவு செய்த ஆசனங்கள் வேறொரு பெட்டியில் இருப்பதாகவும், தமிழர் நால்வரும் அந்த ஆசனங்களில் அமர்ந்து வருமாறும் கூறியிருக்கின்றனர்.
தாம் முன்பதிவு செய்துள்ள ஆசனத்தை தம்மிடமே ஒப்படைத்துவிட்டு, நீங்கள் முன்பதிவு செய்த ஆசனங்களுக்கே சென்று அமருங்கள் என யாழ்ப்பாணத்தவர்கள் கோரியபோதும் அதற்கு சிங்களவர்கள் செவிசாய்க்கவில்லை.
சாவகச்சேரி புகையிரத நிலையத்தில்
இதனையடுத்து புகையிரத பரிசோதகர்களிடம் இந்த விடயத்தை பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்தபோது சாவகச்சேரி புகையிரத நிலையத்தில்
புகையிரதம் நிறுத்தப்பட்டு சிங்களவர்களை அவர்கள் முன்பதிவு செய்த ஆசனத்தில் சென்று அமருமாறு புகையிரத பரிசோதகர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதனை ஏற்காத சிங்கள பயணிகள், தாம் அரசியல் செல்வாக்குடையவர்கள் என்றும் தம்மோடு பகைத்துக்கொண்டு யாரும் புகையிரத த்தில் பயணித்து கொழும்பு வரமுடியாது எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.
இந்தப் பிரச்சினைகளால் 30நிமிடம் வரை சாவகச்சேரி புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்க்க்கப்படதாகவும்,
சிங்கள பயணிகள் அடாத்தாக அமர்ந்த ஆசனங்களிலேயே தொடர்ந்தும் பயணம் செய்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்
கெஹலியவின் வழக்கு நிறைவு
கெஹலியவின் வழக்கு நிறைவு
கெஹலியவின் வழக்கு நிறைவு ,நிதி மோசடி தொடர்பான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட
கொழும்பு பிரதான நீதவான்
வழக்கை நிறைவுறுத்துவதாக கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று (9) அறிவித்தார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, கொழும்பு மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கை தொடர்ந்துள்ளதால், கொழும்பு நீதவான்
நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை நிறைவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்தார்.
அதன்படி, பிரதிவாதிகள் பொருத்தமான திகதிகளில் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள்
இதன்போது நீதவான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள், குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக
கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு நடவடிக்கைகளை நிறைவுறுத்த முடியும் என தெரிவித்தனர்.
அதன்படி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் தொடரப்பட்ட குறித்த வழக்கின் நடவடிக்கைகளை நிறைவுறுத்த முடிவு செய்த பிரதான நீதவான்,
பிரதிவாதிகள் பொருத்தமான திகதிகளில் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்ட முன்னாள்
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
அமைச்சராக இருந்த காலத்தில் 97 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வங்கிக் கணக்குகள், ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் வாகனங்களை சட்டவிரோதமாகப் பெற்றதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கொள்கலன்கள் எவ்வாறு வெளியே வந்ததன
கொள்கலன்கள் எவ்வாறு வெளியே வந்ததன
கொள்கலன்கள் எவ்வாறு வெளியே வந்ததன ,ஐஸ் உற்பத்தியுடன் தொடர்புடைய மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களைக்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் செயல்பாட்டில் ஓர் முன்னேற்றமாக அமைந்து காணப்படுகின்றது. இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டதுடன் பல
கேள்விக்குரிய விடயங்கள் வெளிவருவதனால், அரசாங்கம் இந்த விடயத்தின் உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த 2 கொள்கலன்களும் துறைமுகத்திலிருந்து எவ்வாறு வெளியே வந்தன என்பதுதான் இங்குள்ள கடுமையான பிரச்சினையாக காணப்படுகின்றன.
சர்வதேச புலனாய்வு அமைப்புகள் நமது நாட்டில் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருளினது பரவல் தொடர்பிலான தகவல்களை தொடர்ந்தும் வழங்கி வருகின்றன.
இந்த இரண்டு கொள்கலன்கள் குறித்தும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் நமது நாட்டிற்கு ஏலவே தகவல்களை தெரிவித்தனவா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டி காணப்படுகின்றது.
இந்த புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்ற திகதி, தகவல் குறித்து விசாரணைகளை நடத்திய நபர்கள் மற்றும் விசாரணைகள் நடத்தப்பட்ட காலப்பிரிவு, இந்த பரிசோதனைகளுக்குப் பிறகும், ஐஸ் உற்பத்திக்கான
மூலப்பொருட்கள் அடங்கிய இந்த இரண்டு கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனவா போன்ற தகவல்களை அறிந்து கொள்வது அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களினது ஒன்றியத்தினருடன் நேற்று (08) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தால், விடுவிக்கும் செயல்பாட்டில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பிலான உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும். இது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
சர்வதேச புலனாய்வு அமைப்புகள் இது குறித்த தகவல்களை தெரிவித்த பின்னர், குறித்த கொள்கலன்கள் அடையாளம் காணப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதா ? இந்த கொள்கலங்களை விடுவிப்பதற்கு ஏதுவாக அமைந்து
காணப்பட்ட விடயங்கள் யாவை? அதே போல் சமீபத்தில் பரிசோதனை மேற்கொள்ளாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களும் இதைச் சேர்ந்ததா ? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.
போதைப் பொருள் உற்ப்பத்திக்கான மூலப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்கப்பட்டமை குறித்தான சகல தகவல்களையும் நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும்.
இந்த மூலப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதனைச் சுற்றியுள்ள கேள்விகளுக்குரிய உண்மைகளை வெளிக்கொணர முடியும்.
இனம், மதம், சாதி, வர்க்கம் மற்றும் கட்சி வேறுபாடு இல்லாமல் போதைப்பொருள் அச்சுறுத்தலின் பரவலைத் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்தப் பயணத்தின் போது உண்மையான தகவல்களை பொதுமக்களுக்குத் தெரிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
















































