Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வைரஸ் தொற்றால் 357 ஆக சிங்கள படை பாதிப்பு
வைரஸ் தொற்றால் 357 ஆக சிங்கள படை பாதிப்பு
கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 13 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட
பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 மே 27 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
இவ்வாறு வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் 08 நபர்கள் கடற்படை பொது வைத்தியசாலையிலும், 04
நபர்கள் ஹோமாகம வைத்தியசாலையிலும் 01 நபர் முல்லேரியாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
அதன் படி குறித்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுகொண்டிருந்த போது, அவர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் அவர்களின் உடலில் குறித்த வைரஸ்
இல்லை என்பது தெரியவந்ததுடன் அவர்கள் 2020 மே 27 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
இந்த 13 நபர்கள் உட்பட 357 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
வெளியேறிய கடற்படை வீர்ர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
கிளிநொச்சியில் கோரவிபத்து- மகள் முன்னே தாய் மரணம்
கிளிநொச்சியில் கோரவிபத்து- மகள் முன்னே தாய் மரணம்
கிளி நொச்சியில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் மகள் முன்பாக தாயார் பலியான துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது
ஊந்துருளியில் பயணித்த பொழுது எதிரே வந்த டிப்பர் ரக வாகனத்துடன், மோதி விபத்தில் சிக்கியதில் சம்பவ இடத்தில தாய் பலியானார் ,மகள்
படுகாயமடைந்த நிலையில் மீட்க பட்டார் ,
குறித்த விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
வடக்கு பகுதியை மைய படுத்தி வாகன விபத்துக்கள் தொடராக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இது விபத்தாக அல்லது கொலையா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது
யாழில் மணல் மாபியாக்களுக்கு வலை விரிப்பு – ஏன் இந்த அவசரம் .?
யாழில் மணல் மாபியாக்களுக்கு வலை விரிப்பு – ஏன் இந்த அவசரம் .?
யாழ்ப்பாணத்தில் மணல் மாபியாக்கள்பெரும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் .
இவர்களின் இந்த கொள்ளையை முறியடிக்க தற்போது புதிய வியுயுகம் வகுக்க பட்டு அவர்களுக்கு பொறி வைக்க பட்டுள்ளது
ஆளும் கோத்தபாயாவிற்கு இந்த மணல் கொள்ளையில் ஒரு பங்கு உண்டு,அதாவது கமிஷன் ,
தனது முகவர்களை மட்டுமே அள்ளிட அனுமதிக்கும் இவர்கள் ஏனையவர்களை
செயல் படாது முடக்கும் வகையில் இராணுவம் காவல்துறையினரை வைத்து
புதிய செக்மேட் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளார்,எதிர் வரும் நாட்களில்
இந்த வெளிப்பாடுகள் தெரியவரும் என எதிர்பார்க்க படுகிறது
கண்ணி வெடி தாக்குதல் இந்த விடையதாகி அறிமுக படுத்தி வைக்கிறது
அது தவிர கப்பம் அறவிடும் வேட்டை சூடு பிடித்துள்ளது ,ஆளும் தமிழ் அமைச்சர் ஒருவரே இதன் தளபதியாம் என தகவல் கசிகிறது
ஆறுமுகனும், நானும் இரட்டை குழல் ஜனநாயக துப்பாக்கிகள்-மனோ கணேசன்
ஆறுமுகனும், நானும் இரட்டை குழல் ஜனநாயக துப்பாக்கிகள்-மனோ கணேசன்
ஆறுமுகனும், நானும் இரட்டை குழல் ஜனநாயக துப்பாக்கிகள்; இன்று நண்பர், அரசியல் சகபாடி ஆறுமுகன் இல்லை!
- கொழும்பு உட்பட மலையகமெங்கும், வெள்ளை, கறுப்பு கொடிகளை பறக்க விட தமுகூ தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள்
இனரீதியாக கூர்மையாக்கப்பட்டுள்ள இந்நாட்டில், பெரும்பான்மை இன அரசியல் தலைவர்கள், கட்சிகள், அரசாங்கங்கள் மத்தியில்
நாம் சுழியோடி எங்கள் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றோம். எமது மக்களுடைய எதிரிகளுடன், எமக்கு உடன்பாடுள்ள அனைத்து
வழிமுறைகளிலும் நாம் போராடுகிறோம், சண்டையிடுகிறோம், முரண்படுகிறோம்.
இந்த பின்னணியில் நண்பர் ஆறுமுகன் தொண்டமானும், நானும் வெவ்வேறு திசைகளில் பாயும் ஒரே இலக்கை கொண்ட நதிகள். இரட்டை குழல் ஜனநாயக துப்பாக்கிகள். மறைந்த நண்பர்
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கொழும்பு உட்பட மலையகமெங்கும், வெள்ளை, கறுப்பு கொடிகளை பறக்க விடும்படி, தமிழ் முற்போக்கு கூட்டணி
தோழர்களையும், அனைத்து மக்களையும் கோருகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு
, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தொடர்பில் தமுகூ தலைவரின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை இந்திய காங்கிரசின் மறுவடிவம். அந்த உறுதியான ஆரம்பமே இன்று ஒரு தொழிற்சங்கமாகவும், அரசியல் கட்சியாகவும் இதொகாவை
நிலைநிறுத்தி இருக்கிறது. இலங்கை இந்திய காங்கிரஸ் காலத்தில் இருந்தே அதற்குள், நிகழ்ந்து வந்த கோட்பாட்டு முரண்பாடுகள் காரணமாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் பிறந்தது. அந்த
சிந்தனையே இன்று ஜனநாயக மக்கள் முன்னணியாக, இன்று சகோதர கட்சிகளுடன் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணியாக பரிணமித்துள்ளது.
இதொகாவை விட்டு, பலர் பல காரணங்கள காரணமாக பிரிந்து சென்ற போதெல்லாம், அதை பலவீனமடைய விடாமல் கொண்டு
நடத்தியவர் ஆறுமுகன் தொண்டமான். மலையக தமிழ் மக்களின் நலன்களை தனக்கே உரிய, தான் நம்பும் வழிமுறைகளில் அவர் பிரதிநிதித்துவம் செய்து வந்தார்.
அவர் இந்த வயதில் இறந்திருக்க கூடாது. இன்னமும் வாழ்ந்து இருக்க வேண்டும். நமது மக்கள் எதிர்நோக்கும் சவால் மிக்க
இன்றைய காலகட்ட பின்னணியை கணிக்கும் போதே ஆறுமுகன் தொண்டமானின் திடீர் இழப்பின் ஆழம் புரிகின்றது. வேதனை
விளங்குகிறது. அவருடன் அரசியல்ரீதியாக முரண்படுகின்றவர்களுக்கு கூட அவரது இன்றைய மறைவின் வெறுமை தெரிகின்றது.
கடந்த வருடம் இதே மே மாத இறுதியில் புது டில்லியில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் இந்திய அரசின் அழைப்பை ஏற்று அன்றைய நமது நாட்டு ஜனாதிபதியின்
தூதுக்குழுவில் நாம் இருவரும் பயணித்தோம். அதுவே நண்பர் ஆறுமுகன் தொண்டமானும், நானும் ஒன்றாய் கலந்துக்கொண்ட இறுதி வெளிநாட்டு நிகழ்வு.
இதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன், 2009ல் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற இலங்கையின் அனைத்து தமிழ் பேசும்
அரசியல் கட்சி தலைவர்களின் மாநாட்டில் நானும், அவரும் கலந்துக்கொண்டோம்.
இந்நிகழ்வுகளில், நமது மக்களின் நல்வாழ்வு தொடர்புகளிலும், அரசியல் முரண்பாடுகள் மத்தியில் எங்கெங்கே இணைந்து
செயற்படலாம் என்பது பற்றியும், நண்பர் ஆறுமுகமும், நானும் நடத்திய கலந்துரையாடல்கள் என் மனதில் பசுமையாக இருக்கின்றன.
2009ல் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற தமிழ் பேசும் கட்சிகள் மாநாட்டில், நண்பர் பெரியசாமி சந்திரசேகரனும் கலந்துக்கொண்டார். இன்று சந்திரசேகரனும் இல்லை. அவரும்
தனது 53 வயதில் இறந்து போய் விட்டார். இன்று நண்பர் ஆறுமுகன் தொண்டமானும் தனது 56 வயதில் இறந்து போய் விட்டார். இந்த
வெறுமை இன்று மலையக தமிழ் சமூகத்தை வாட்டுகின்றதை நான் உணருகின்றேன். இந்த சவால்களை நாம் ஒருமுகமாக எதிர்கொள்ள திடசங்கற்பம் பூணுவோம்.
தம்பி ஆறுமுகன் தொண்டமானுக்கு ஆழ்ந்த இரங்கல்-இராதாகிருஸ்ணன்
தம்பி ஆறுமுகன் தொண்டமானுக்கு ஆழ்ந்த இரங்கல்-இராதாகிருஸ்ணன்
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமாகிய தம்பி ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் இழப்பு செய்தி கேட்டு
மிகுந்த துக்கத்திற்கு உள்ளானேன். இந்த திடீர் மறைவு மலையக மக்களுக்கு ஓர் பேரிழப்பாகும் என்று கூறுகின்றார் மலையக
மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்.
தொடர்ந்து அவரது அனுதாப செய்தியில்
எனக்கும் அவருக்கும் நீண்டகால உறவு இருக்கின்றது நான் எனது அரசியலை அவரது தாத்தாவான சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களுடனே ஆரம்பித்தேன். ஐயாவின் இறப்பிற்கு பின்னர்
எனக்கு மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சை பெற்றுக் கொடுத்தவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களே. தவிர்க்க முடியாத காரணத்தினால் இவர்களை விட்டு பிரிய வேண்டிய நிலை
ஏற்பட்டு விட்டது. இருந்தும் இவரையோ இவரின் குடும்பத்தையோ ஐயா அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களையே
விமர்சித்து கிடையாது. இவர்களுக்கு என்று ஒரு மறியாதை என்னிடம் இருந்தது.
தற்போது இந்த இக்கட்டான நிலையில் துயரத்தில் இருக்கும் அன்னாரின் மனைவி பிள்ளைகள் உறவினர்கள் உட்பட அவரது
விசுவாகிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவரது இறுதி கிரிகைகள் மலையத்தில் பூரண அரச மறியாதையுடன் நடப்பதற்கு அராங்கம் நடவடிக்கை எடுக்க
வேண்டும். மலையத்தில் தொழிற்சங்க மற்றும் தொழிற்சங்கம் கட்சி பேதங்கள் இன்றி அவருக்கான மறியாதையை அனத்து
மக்களும் செலுத்த வேண்டும். இவரது இறுதி கிரிகைள் முடியும் வரை மலையகத்தில் துக்கத்தினம் அனுஷ்டிக்க வேண்டும் என அவர் மேலும் கருத்து தெரிவித்தார்
ஆறுமுகன் தொண்டமான் மகன் -பதிலாக ஜீவன் தொண்டமான்நியமனம்
ஆறுமுகன் தொண்டமான் மகன் -பதிலாக ஜீவன் தொண்டமான்நியமனம்
ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக நுவரெலியா மாவட்டத்திற்கு ஜீவன் தொண்டமான்
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில்
போட்டியிடுவதற்கு ஜீவன் தொண்டமானை நியமிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் குழு கூடி இந்த தீர்மானத்தை எடுத்ததோடு, அரசியல் குழு உறுப்பினர்கள் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின்
உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (27.05.2020) பிரதமரை சந்தித்தனர். இதன்போது, இந்த தீர்மானத்தை கட்சியின் உப தலைவர் செந்தில் தொண்டமான் பிரதமரிடம் முன் வைத்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து
போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திற்கு மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்
வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு பதிலாக ஜீவன் தொண்டமானை களமிறக்க அனுமதிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
ஆறுமுகம் தொண்டமானுக்கு பதிலாக அவரது மகன் ஜீவன் தொண்டமானை நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட வைக்க
கட்சி எடுத்த இந்த முடிவை இதன்போது பிரதமர் பாராட்டினார். அத்தோடு, இக்கோரிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
பிரதமருடனான இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் குழு உறுப்பினர்களான டி.மதியோகராஜா
, எம்.ராமேஸ்வரன், ஏ.பி.சக்திவேல், ஏ.பிலிப்குமார், கே.கனகராஜ், எல்.பாராதிதாசன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

மக்களுக்கு மூன்றாம் கட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு
மக்களுக்கு மூன்றாம் கட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு
கொரோனா நோய்த் தொற்று காரனமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்த காலங்களில்
கூலித் தொழில்கள் செய்து வந்த மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அரசாங்க அரச சார்பற்ற
நிறுவனங்களினால் நிவாரணங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகஸ்ட பிரதேசமாக வாகரை பிரதேச செயலகத்தில் ஓமடியாம்மடு கிராமம் காணப்படுகின்றது.
இக்கிராமத்தில் வாழ்கின்ற மக்களின் நிலையறிந்த பிரதேச செயலாளர் எஸ்.கரன் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட
செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜாவிற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய கிரான்குளத்தில் இயங்கி வருகின்ற
தன்னார்வ தொண்டு நிறுவனமான விவேகானந்த சமுதாய நிறுவனம் இந்த உதவியினை வழங்க முன்வந்திருந்தது.
நேற்று (27) காலை இந்த நிவாரணப்பொருட்களை ஓமடியாம்மடு கிராம மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வாகரை பிரதேச
செயலாளர் எஸ்.கரன் தலைமையில் ஓமடியாம்மடு கிராம சனசமூக மண்டபத்தில் நடைபெற்றது. இன் நிகழ்விற்கு வாகரை பிரதேச
செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன் விவேகானந்த சமுதாய நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ்
தகவல் திணைக்கள மாவட்ட ஊடக பொறுப்பதிகாரி வ.ஐPவானந்தன் சமுர்த்தி உத்தியோகத்தர் கிராமசேவை உத்தியோகத்தர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வாகரை பிரதேச செயலகப்பிரிவில் அதிகஸ்;டமான கிராமங்களில் இக்கிராமம் முதலிடத்pதில் உள்ளது இங்கு வாழ்கின்ற மக்கள்
பிரதான தொழிலாக விவசாயத்தினையும் ஆடு மாடு வளர்ப்பதும்தான் பிரதானமாக கொண்டுள்ளனர். தற்போதைய
அசாதாரன காலநிலையில் இவர்களின் தொழில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இந்தவகையில் இவர்களுக்கு மூன்றாம் கட்டமாக இந்த நிவாரணப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து உரையாற்றிய விவேகானந்த சமுதாய நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ் கூறுகையில் தங்களுக்கு கிடைக்கப்பட்ட இந்த நிதியானது அவுஸ்திரேலிய
மருத்துவ உதவிக்கான நிதியத்தின் மூலமாகவே இவ்வுதவியினை வழங்குவதாகவும் இவ்வாறு புலம்பேயர்ந்து வாழ்கின்ற எமது
சமுகத்தினாலேயே இவ் உதவிகள் கிடைத்துவருகின்றது எனவும் எதிர்காலத்தில் இக்கிராமங்களுக்கான நிரந்தரமான தொழில்களை
உருவாக்குவதற்கு பிரதேச செயலாளருடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் கூறினார்.
பாலங்களில் சிக்கி இருந்த கழிவுகளை அகற்ற கடற்படை நடவடிக்கை
பாலங்களில் சிக்கி இருந்த கழிவுகளை அகற்ற கடற்படை நடவடிக்கை
வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் காலி, வக்வெல்ல மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும்
மரத்துண்டுகள் கடற்படையினரால் 2020 மே 27 ஆம் திகதி அகற்றப்பட்டன.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவாக கின் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதன்படி, தெற்கு கடற்படை
கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போலின் அறிவுறுத்தல்களின் கீழ், கின் ஆற்றின் குறுக்கே உள்ள வக்வெல்ல
மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கி இருந்த மூங்கில் புதர்கள், மரங்களின் கிளைகள் மற்றும் கழிவுகள் அகற்றும்
பணிகள் தென் கடற்படை கட்டளையின் சுழியோடி பிரிவின் வீரர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அங்கு நீர் சீராக ஓட மிகுந்த முயற்சியுடன் கழிவுகளை அப்புறப்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் பகுதிகளில், எந்த ஒரு அவசர நிலை ஏற்பட்டாலும் உடனடி நடவடிக்கைகளுக்காக
கடற்படை மீட்பு மற்றும் நிவாரண குழுக்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன.
கால நிலை சீற்றம் – மக்களுக்கு எச்சரிக்கை
கால நிலை சீற்றம் – மக்களுக்கு எச்சரிக்கை
ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ
அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இக் கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக
மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம்
குறைந்த கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும்
நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட
கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்
கொரோனா தடுப்பு நடவடிக்கை – மகிந்தவுடன் மோடி பேச்சு
கொரோனா தடுப்பு நடவடிக்கை – மகிந்தவுடன் மோடி பேச்சு
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை – மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு
சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது.
அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.
இந்தியாவிலும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் சிறப்பான
உரையாடல் நடந்தது. பாராளுமன்றத்தில் அவர் 50 ஆண்டுகளை கடந்து வந்ததற்கு வாழ்த்து தெரிவித்தேன். இலங்கையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்துப் பேசினேன்.
மேலும், கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா எப்போதும் தனது ஆதரவை
அளிக்கும். தேவையான உதவிகளை அளிக்கும் என பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்ந்து பேசிவருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 82 பேருக்கு கொரோனா வைரஸ்
இலங்கையில் மேலும் 82 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1453 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினம் இதுவரை 134 கொரோனா நோயாளிகள் நாட்டில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் 732 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 711 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
லண்டன் சிவன் கோயில் ஐயர் தூக்கு மாட்டி தற்கொலை
லண்டன் சிவன் கோயில் ஐயர் தூக்கு மாட்டி தற்கொலை
லண்டன் லூசியம் பகுதியில் அமைய பெற்றுள்ள சிவன் ஆலயத்தில்
பணிபுரிந்து வந்த இளம் வயதுடைய ,கோபி குருக்கள்திடீரென தூக்கு மாட்டி தற்கொலை புரிந்துள்ளார்
இவரது இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக
தெரியவரவில்லை ,மக்கள் ,மத்தியில் ஒவ்வொரு விதமான கதைகள் பரவுகின்றன,
நீண்ட நாளாக மன வீரகத்தி நிலையில் இருந்ததாகவும் அதனை அடுத்தே திடீரென இந்த தற்கொலைக்கு இவர் சென்றுள்ளார்
அழகிய நல்ல மனம் கொண்ட அற்புதம் இளப்பபு பேரிழப்ப்பு ,இந்த லாயத்தில் சில மதங்களே இணைந்து பனி புரிந்து வந்தார் ,
இவரது இந்த சோக செய்தி பக்தர்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது
வாழ்வில் ஏற்பட்ட தோல்வியின் விரக்தியே இந்த தற்கொலை என நம்ப படுகிறது
மிகவும் சிறப்பு வாய்ந்த அழகிய ஆலய சுற்றாடல் பகுதியில் இந்த சமபவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

காவல்துறையால் 357 பேர் கைது
காவல்துறையால் 357 பேர் கைது
இலங்கையில் நிகழ்கால நோயின் விதிகளை மீறி நடமாடிய சுமார் 357 பேர்
கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்
கொழும்பு ,களுத்துறை ,நீர்கொழும்பு ப்குதியில் நடத்த பட்ட வீதி சோதனையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன
இன்றைய தினம் சமுக இடைவெளியை கடை பிடிக்காதவர்கள் கைது செய்ய பட்டு தனிமை படுத்த படுவார்கள் என போலீசார்
அறிவித்திருந்த ,நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
யாழில் வெடித்த கிளாமர் – தேர்தலில் வெல்ல புலி பீதியை கிளப்பும் கோட்டபாய
யாழில் வெடித்த கிளாமர் – தேர்தலில் வெல்ல புலி பீதியை கிளப்பும் கோட்டபாய
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் வீதியோரத்தில் மறைத்து வைக்க பட்ட கிளைமோர் கண்ணி வெடி தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இராணுவத்தினரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளதாம் ,
சுமந்திரனை வைத்து தேர்தலில் வெல்ல போட்ட நாடகம் பிசு பிசுபித்து போன நிலையில்
தற்போது சிங்கள இனவெறியை தூண்டிட இராணுவ கட்டு பாட்டு பகுதிக்குள் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
வரும் மணித்தியாலங்களில் முன்னாள் புலிகள் சிலர் கைதுசெய்ய பட்டு
அவர்களை வைத்து , சிங்கள பவுத்த மக்கள் மத்தியில் புலி பீதியை உருவாக்க மேற்கொள்ள பட்டுள்ள தாக்குதல் இதுவாகும்
முக மாலையில் புலிகள் சீருடை வெடிபொருட்கள் மீட்க பட்டதாக அறிவித்தது சிங்கள படை, அதனை அடுத்து வந்த சில நாட்களில் இந்த தாக்குதக்கல் இடம்பெற்றுள்ளது
மேலும் முள்ளி வாய்க்கால் தினத்தில் இனவாத பேச்சை கோட்டபாய நிகழ்த்தி இருந்தார் ,
அதன் உள்நோக்கம் சிங்கள பவுத்த பேரினவாதத்தை குஷி படுத்தும் நிகழ்ச்சி நிரல் திட்டமாகும் என்பது தற்போது அம்பலமாகியுளளது
யாழில் -கொரனோ நோயாளிகளை ஏற்றி சென்ற அம்புலன்ஸ் விபத்தில் சிதறல்
யாழில் -கொரனோ நோயாளிகளை ஏற்றி சென்ற அம்புலன்ஸ் விபத்தில் சிதறல்
யாழ்ப்பாணத்தில் கொரனோ நோயாளிகள் மூவரை ஏற்றி சென்ற
அம்புலன்ஸ் ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்தவர்கள்
படுகாயமடைந்துள்ளனர்
டிப்பர் வாகனம் ஒன்றுடன் அம்புலன்ஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
என தெரிவிக்க பட்டுள்ளது ,போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
கடல் கொந்தளிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை
கடல் கொந்தளிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக திருகோணமலை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில்
அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இக்
கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாககாலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன்
கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக
பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும்
நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்
யாழ் மாவட்ட வறிய மக்களின் மீளெழுச்சிக்காக -பல்வேறு உதவித் திட்டங்கள்- டக்கிளஸ்
யாழ் மாவட்ட வறிய மக்களின் மீளெழுச்சிக்காக -பல்வேறு உதவித் திட்டங்கள்
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட
குடும்பங்கள் மற்றும் கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதார நலன்கருதி பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கயில், யாழ் மாவட்டத்தில் வறுமை நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வாதார
மேம்பாடுகளை முன்னிறுத்தியே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக பெண்களை
தலைமைத்துவமாகக் கொண்ட 100 க்கும் அதிகமான வறிய குடும்பங்களுக்கு கருவாடு பதனிடும் உபகரணங்கள்
வழங்கப்படவுள்ளது. அத்துடன் கடற்றொழில் சார் மக்களின் சுகாதார மேம்பாடுகளை முன்னிறுத்தி 210 குடும்பங்களுக்கு
மலசல கூடங்கள் திருத்துவதற்கான நிதி உதவியும் எமது அமைச்சினால் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடற்றொழில் சார் 30 குடும்பங்களுக்கு வீடுகளை புனரமைப்பதற்கான குறிப்பாக கட்டி முடியாத நிலையில் உள்ள
வீடுகளை புனரமைப்பதற்கான நிதி உதவியையும் வழங்கப்படவுள்ளது. இதே நேரம் கடற்றொழிலில் ஈடுபடும்
தொழிலாளர்கள் தாம் பிடிக்கும் கடலுணவுகளை பழுதடையாது பாதுகாத்து கரைக்கு கொண்டுவருவதற்காக 75 கடற்றொழிலாளர்களுக்கு ஐஸ் பெட்டிகளும் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டங்களை வழங்குவதற்கான தரவுகள் திரட்டப்பட்டுள்ள நிலையில் சில தினங்களுக்குள் அத்திட்ட உதவிகளை
பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.
தொண்டமான் மரணம் – அரசுக்கு பேரிழப்பு – மகிந்தா
தொண்டமான் மரணம் – அரசுக்கு பேரிழப்பு – மகிந்தா
காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக பிரதமர்
மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்தியத் தூதுவரை சந்தித்து மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறித்த செய்தியை கேள்விப்பட்ட
பிரதமர் மஹிந்த ராஜபக்ச ,தொண்டமானின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த தலங்கம வைத்தியசாலைக்கு விரைந்தார்.
அவரின் மறைவு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் குறிப்பாக மலையக
மக்களுக்கும் பேரிழப்பென அங்கு செய்தியாளர்களிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கட்டாரில் சிக்கி தவித்த 268 இலங்கையர் விசேட விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்
கட்டாரில் சிக்கி தவித்த 268 இலங்கையர் விசேட விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்
கொவிட் 19 தொற்று நோய் காரணமாக கட்டாரில் சிக்கியிருந்த 268 இலங்கையர்கள்
அதிகாலை 5.04 மணியளவில் தாயகம் வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் யூ.எல் – 218 ரக விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வருகைத் தந்தவர்களும் அவர்களின் உடமைகள் அடங்கிய பைகளும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டன.
பின்னர் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் எவரும் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
காட்டுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்ட வாலிபன்
காட்டுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்ட வாலிபன்
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்மதவாச்சி காட்டுப்பகுதிக்குள் நேற்று (26) காலை தேன்
எடுப்பதற்காக சென்ற மூவரில் ஒருவரான 19 வயது மாணவன் ஒருவன்
மரக்கிளை உடம்பில் குத்தியதில் மரணமானதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமானவர் சாம்பல்தீவு பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனவும் நிலாவெளி கைலேஸ்வரன் மஹா வித்தியாலயத்தில்
உயர்தரம் கற்பவர் எனவும் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை எழுத காத்திருப்பவர் எனவும் தெரிவித்தனர்.
சடலம் மரண விசாரணை அதிகாரி திரு.எம் ரூமியினால் மேற்கொள்ளப்பட்டதுடன் சடலம் திருகோணமலை பொது
வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.






