ஆறுமுகன் தொண்டமான் மகன் -பதிலாக ஜீவன் தொண்டமான்நியமனம்

Spread the love

ஆறுமுகன் தொண்டமான் மகன் -பதிலாக ஜீவன் தொண்டமான்நியமனம்

ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக நுவரெலியா மாவட்டத்திற்கு ஜீவன் தொண்டமான்

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில்

போட்டியிடுவதற்கு ஜீவன் தொண்டமானை நியமிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் குழு கூடி இந்த தீர்மானத்தை எடுத்ததோடு, அரசியல் குழு உறுப்பினர்கள் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின்

உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (27.05.2020) பிரதமரை சந்தித்தனர். இதன்போது, இந்த தீர்மானத்தை கட்சியின் உப தலைவர் செந்தில் தொண்டமான் பிரதமரிடம் முன் வைத்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து

போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திற்கு மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்

வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு பதிலாக ஜீவன் தொண்டமானை களமிறக்க அனுமதிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

ஆறுமுகம் தொண்டமானுக்கு பதிலாக அவரது மகன் ஜீவன் தொண்டமானை நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட வைக்க

கட்சி எடுத்த இந்த முடிவை இதன்போது பிரதமர் பாராட்டினார். அத்தோடு, இக்கோரிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

பிரதமருடனான இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் குழு உறுப்பினர்களான டி.மதியோகராஜா

, எம்.ராமேஸ்வரன், ஏ.பி.சக்திவேல், ஏ.பிலிப்குமார், கே.கனகராஜ், எல்.பாராதிதாசன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

ஆறுமுகன் தொண்டமான்
ஆறுமுகன் தொண்டமான்

      Author: நலன் விரும்பி

      Leave a Reply