Tag: காட்டுக்குள் இருந்து சடலமாக
Posted in இலங்கை செய்திகள்
காட்டுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்ட வாலிபன்
Author: நலன் விரும்பி Published Date: 27/05/2020 Leave a Comment on காட்டுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்ட வாலிபன்
காட்டுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்ட வாலிபன்
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்மதவாச்சி காட்டுப்பகுதிக்குள் நேற்று (26) காலை தேன்
எடுப்பதற்காக சென்ற மூவரில் ஒருவரான 19 வயது மாணவன் ஒருவன்
மரக்கிளை உடம்பில் குத்தியதில் மரணமானதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமானவர் சாம்பல்தீவு பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனவும் நிலாவெளி கைலேஸ்வரன் மஹா வித்தியாலயத்தில்
உயர்தரம் கற்பவர் எனவும் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை எழுத காத்திருப்பவர் எனவும் தெரிவித்தனர்.
சடலம் மரண விசாரணை அதிகாரி திரு.எம் ரூமியினால் மேற்கொள்ளப்பட்டதுடன் சடலம் திருகோணமலை பொது
வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.






