பாலங்களில் சிக்கி இருந்த கழிவுகளை அகற்ற கடற்படை நடவடிக்கை

Spread the love

பாலங்களில் சிக்கி இருந்த கழிவுகளை அகற்ற கடற்படை நடவடிக்கை

வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் காலி, வக்வெல்ல மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும்

மரத்துண்டுகள் கடற்படையினரால் 2020 மே 27 ஆம் திகதி அகற்றப்பட்டன.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவாக கின் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதன்படி, தெற்கு கடற்படை

கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போலின் அறிவுறுத்தல்களின் கீழ், கின் ஆற்றின் குறுக்கே உள்ள வக்வெல்ல

மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கி இருந்த மூங்கில் புதர்கள், மரங்களின் கிளைகள் மற்றும் கழிவுகள் அகற்றும்

பணிகள் தென் கடற்படை கட்டளையின் சுழியோடி பிரிவின் வீரர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அங்கு நீர் சீராக ஓட மிகுந்த முயற்சியுடன் கழிவுகளை அப்புறப்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் பகுதிகளில், எந்த ஒரு அவசர நிலை ஏற்பட்டாலும் உடனடி நடவடிக்கைகளுக்காக

கடற்படை மீட்பு மற்றும் நிவாரண குழுக்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன.

    Leave a Reply