Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
யாழில் கொரனோவால் பாதிக்கப்பட்டவர்களை – டெங்கு நோய் என அறிவித்துள்ள யாழ் மருத்துவமனை
யாழில் கொரனோவால் பாதிக்கப்பட்டவர்களை – டெங்கு நோய் என அறிவித்துள்ள யாழ் மருத்துவமனை
யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் இன்று வரை 2195 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்
எனவே மக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் டெங்கு நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது என
யாழ் போதனா வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர்.தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா தெரிவித்துள்ளார் .
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர், தற்போது டெங்கு நோயின் தாக்கம்
அதிகரிக்ககூடிய சாத்திய கூறுகள் காணப்படுகின்றன என முழங்கியுள்ளனர்
யாழ்ப்பாணத்தில் கொரனோ நோயின் தாக்கம் இல்லை என கூறி வாட்ச் மருத்துவர் சத்தியமூர்த்தியின் மருத்துரைப்பு தற்பொழுது அம்பல பட்டுள்ளது
இவ்வாறு ஒரு அறிவித்தல் வெளியாகவும் என நாம முன்னரே மக்களுக்கு தெரிவித்திருந்தமை இங்கே சுட்டி காட்டுகிறோம் ,
அப்படி என்றால் இந்த நோயினால் இறந்தவர்கள் ,எலிக்காய்ச்சல்,மற்றும் ,டெங்கு நோயினால் இறந்துள்ளதாக கணக்கு காட்டி ,தகவல் மூடி மறைக்க பட்டுள்ளது
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ,அரசின் கைக்கூலிகளாக வலம் வரும் இவர்களை தமிழர் தேசம் ஒரு பொழுதும் மறக்காது ,மன்னிக்காது
கோட்டபாய அரசை காப்பாற்றும் கபட நோக்குடன் யாழ்ப்பாண போதனா வைத்திசாலையின் மருத்துவர் சத்தியமூர்த்தி
பலத்த மூடி மறைப்பை செய்துள்ளது இன்று இவர்கள் வெளியிட்டுள்ள செய்திகள் மூலம் அம்பலமாகியுளளது

.
புலிகள் பைத்தியக்காரர்கள் – சம்பந்தன் திமிர் பேச்சு – ஆயுத போராட்டம் பழைய கதையாம்
புலிகள் பைத்தியக்காரர்கள் – சம்பந்தன் திமிர் பேச்சு – ஆயுத போராட்டம் பழைய கதையாம்
இலங்கையில் புரையோடி போன தமிழர் அரசியல் விடுதலை போரில் தவிர்க்க முடியாத அத்தியாயங்களில் ஒன்றாக ஆயுத
போராட்டம் மாற்றம் பெற்றது ,ஒரு விடுதலைப்புலினால் ஏற்படுத்த பட்ட ஆயுதவழியே இன்று உலகில் தமிழர்களின் விடுதலையை பறை சாற்றியுள்ளது
அதுவே சிறுபான்மை தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு , ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு தேவை என்பதையையும் வலியுறுத்தியது ,
ஆனால் புலிகளது ஆயுத போராடட்ம தேவை இல்லை எனவும் அது தவறு எனவும் சுமந்திரன் தெரிவித்தார் ,அதற்கு ஒரு படி மேலே
சென்று தற்போது கிழட்டு சம்பந்தன் புலிகள் ஆயுத போராட்டம் பழைய கதை அது பற்றி இப்பொழுது பேச தேவை இல்லை என தெரிவித்து தமிழர்களை அவமதித்துள்ளார்
ஈழ போராட்டத்தை கொச்சை படுத்தியுளளார்
இலங்கையில் மீளவும் சிங்கள பெரும்பாண்மையுடன் கோட்டபாய அரசு வெல்வதற்கு சுமந்திரனை வைத்து மேற்கொள்ள பட்ட சிங்கள
ஊடக பேட்டி தமிழர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி கூட்டமைப்புக்கள் உடைவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில் .
மீளவுக் சர்ச்சை பேச்சு ஒன்றை கிழட்டு சம்பந்தர் பேசியுள்ளது மக்கள் மத்தியில் மீளவும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
முள்ளி வாய்க்கால் பேரவலம் முடிந்து 11 ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில் ,போரினால் பாதிக்க பட்ட தமிழர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்தது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது
தமிழர் தேசிய பிரச்னைக்கு எவ்வித தீர்வு காணாத கூட்டமைப்பு சிங்கள வாழப்பிடித்து ஏசி அறையில் உலலாசம் அனுபவிக்கும் கிழட்டு சம்பந்தர் ,
சுமந்திரன் திமிர் பேச்சுக்கும் ,தமிழ் இன ஆயுத போராட்ட பிளவுகள் மேலும் தமிழர் நெஞ்சங்களில் வேலாக குத்தியுள்ளன
தமிழர்கள் ,தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தன் ,சுமந்திரனை இம்முறை கண்டிப்பாக தோற்கடிக்க வேண்டும்
,அதன் மூலமே தமிழர்கள் யார் என்பதை நிரூபிக்க முடியும் ,பல்லு பிடுங்கிய பாம்பாக இவர்கள் ஆக்கப்பட வேண்டும் ,ஒன்று பட்டு தமிழா ,உன்பலத்தை பாரளுமன்ற தேர்தலில் காட்டு .
இவர்களினால் தமிழர்களுக்கு எதுவும் பெற்று கொள்ள முடியாது ,அது சாத்தியமும் அல்ல.
இந்த கூட்டமைப்பு இருந்து என்ன இல்லாது போனாலே என்ன என்ற நிலையே தற்போது தமிழர் நெஞ்சங்களில் விசாலமாக வீழ்ந்துள்ள பதிவாக மாற்றம் பெற்றுள்ளது
- வன்னி மைந்தன் –
லண்டனில் 2,6 மில்லியன் பண மோசடி புரிந்த தமிழருக்கு 12 வருடம் சிறை .
லண்டனில் 2,6 மில்லியன் பண மோசடி புரிந்த தமிழருக்கு 12 வருடம் சிறை .
லண்டன் குறைடன் பகுதியில் முப்பத்தி இரண்டு வயதுடைய விஜயகுமார்
கிருஷ்ண மூர்த்தி என்ற நபர் சர்வதேச
ரீதியாக மேற்கொண்டு வந்த பணமோசடி கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவர் ஒரே வீட்டில் இணைய ஐபியில் இருந்து பல வியாபார கணக்குகளை
திறந்து ,சரவதேச ரீதியாக பண பரிமாற்றம் செய்து வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
பார்க்கிலஸ் வங்கியில் கணக்கை வைத்து அதன் ஊடக இந்த பண மோசடியில்
ஈடுபட்டுள்ளார் ,வங்கியானது நிதி குற்ற புலனாய்வு துறையினருக்கு
தகவலை வழங்கிய நிலையில் அவர்கள் நடத்திய தீவிர
கண்காணிப்பு நடவடிக்கையில் இவர் சிக்கி கொண்டார்
குரைடன் நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவர் குற்றவாளி
என அடையாளம் காணப்பட்டுள்ளதால் இவருக்கு பன்னிரெண்டு வருடன் கடூழிய சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது
பல நாள் திருடன் ஒருநாள் மாட்டுவான் என்பது இது தன் , அரசுக்கு வரி செலுத்தாது சூத்துமாத்து புரிந்ததன் விளைவே இது என்பதாக கருத படுகிறது .
வரிகட்டினால் அது எவ்விதம் மணி லோன்ரறியாகும் …? இதுவே இன்றய கேள்வியாகவும் .

வீதியில் சென்ற ஆட்டோவை தாக்கி உடைத்த யானை
வீதியில் சென்ற ஆட்டோவை தாக்கி உடைத்த யானை
இலங்கை மெதவாச்சி பூனாவ பகுதியில் ஆட்டோவில் பயணித்து
கொண்டிருந்த நபர்களை வழிமறித்த யானை திடீரென ஆட்டோ மீது தாக்குதலை நடத்தியது
இதில் யானையின் தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில் நபர் ஒருவர் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

வீடு புகுந்து நபர் வெட்டிக்கொலை – பீதியில் கிராம மக்கள்
வீடு புகுந்து நபர் வெட்டிக்கொலை – பீதியில் கிராம மக்கள்
இலங்கை கம்பாந்தோட்ட பகுதியில் மர்ம நபர்கள் வீடொன்றுக்குள் புகுந்து
அங்கிருந்தவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்
இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது
தனிமைப் படுத்தப்பட்ட 11,056 பேர் வீடுகளுக்கு திரும்பினர்
தனிமைப் படுத்தப்பட்ட 11,056 பேர் வீடுகளுக்கு திரும்பினர்
முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களான பனிச்சங்கேணியில் 7 பேர் மற்றும் ராஜகிரிய
ஆயுர்வேத மருத்துவமனையிலுருந்து 8 பேர் என மொத்தம் 15 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர்
பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் வழங்கி கடந்த 29 ஆம் திகதி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
29ஆம் திகதி வரை 11,056 பேர் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில்
தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய பயன்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் 44 தனிமைபடுத்தும் நிலையங்களில் 5,154
பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். 29ஆம் திகதி வரை மொத்தம் 708 கடற்படை வீரர்கள் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தில் உள்ளாகி
உள்ளனர். 366 பேர் முழுமையாக சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் மேலும் 342 கடற்படையினர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
தெற்கு சூடானில் இலங்கை இராணுவ வைத்திய குழு
தெற்கு சூடானில் இலங்கை இராணுவ வைத்திய குழு
தென் சூடான் ஐக்கிய நாடுகள் நடவடிக்கை கட்டம் ஐஐ இன் மருத்துவமனையில் பணியாற்றும் இலங்கை இராணுவ வைத்திய
படையணியின் படையினருக்கு ஐ.நா அமைதி காக்கும் பதக்கங்கள் புதன்கிழமை 27ம் திகதி தென் சூடானில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன.
ஐ.நா அமைதி காக்கும் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷைலேஷ் சதாஷிவ் தினைகர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு
ஐ.நா. பதக்கங்களை வழங்கினார். லெப்டினன்ட் கேணல் எஸ்எல்எஸ் குமாரகேயின் கட்டளையின் கீழ் 16 அதிகாரிகளும் 50
படையினரும் இந்த இலங்கை இராணுவ வைத்திய படையணியின் குழு பாராட்டப்படுகின்றது.
லெப்டினன்ட் ஜெனரல் ஷைலேஷ் சதாஷிவ் தினைகர் மற்றும் ஐநாவின் தென் சூடான் நடவடிக்கைகான அலுவலகத் தலைவர்
செல்வி டெபோரா கிவென் ஸ்கெய்ன் ஆகியோர் தென் சூடான் நடவடிக்கையில் இலங்கை இராணுவ வைத்திய படையணியின்
மருத்துவத் தரம், சிகிச்சை மற்றும் வலுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் அங்கீகரித்து பாராட்டினர். இலங்கை குழுவானது
2019 ஜூலை மாதம் 03 ம் திகதி முதல் அங்கு சேவை செய்து வருகிறது

அரசின் தொழில் சட்ட ஏற்பாடுகளை மீற எவருக்கும் அனுமதி இல்லை –அமைச்சர் டக்ளஸ்
அரசின் தொழில் சட்ட ஏற்பாடுகளை மீற எவருக்கும் அனுமதி இல்லை –அமைச்சர் டக்ளஸ்
தொழில் நடைமுறைகள் தொடர்பில் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் சட்ட
நடைமுறைகளை அனைவரும் ஏற்று செயற்பட வேண்டும் என்பதுடன் அத்தகைய சட்ட வரையறைகளை மீற எவருக்கும்
அனுமதி கிடையாது என்றும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் சுருக்கு வலை மீன்பிடியினால் சிறுதொழில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடியாளர்களால் ஏற்படுகின்ற
பிரச்சனைகள் தொடர்பில் தீர்வு காண்பதற்கான ஆராய்வுக் கூட்டம் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
திருமலை மாவட்டத்தின் உப்புவெளி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் மாவட்டத்தின் 46 கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தத்தமது
பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர். இதன்போது திருமலை மாவட்டத்தில் சுருக்குவலை தொழிலை
முன்னெடுப்பதற்கு ஒருதரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
குறிப்பாக சுருக்குவலை தொழிலை முன்னெடுப்பவர்கள் அதற்காக கொடுக்கப்பட்ட வரையறைகளை மிறி செய்ற்படுவதாகவும்
இதனால் பலர் மீது வழக்குகள் கூட இருப்பதாகவும் சுட்டிக்காட்டி அத்தொழிலை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அத்தொழிலை முன்னெடுக்க ஒருதரப்பினர் தமது நியாயங்களை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் இருதரப்பினரது நியாயங்களையும் கேட்டறிந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்திற்கு மாவட்டம் தொழிலின் தன்மைகள் மாறுபட்டு
இருக்கின்றது. சுருக்குவலை தொழிலுக்கான சட்டங்கள் நாடுமுழுவதும் ஒரேமாதிரியாக இருப்பதால் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது.
இதனால் இது தொடர்பில் மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடக் கூடிய சட்டவரையறைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இது தொடர்பான சட்டவரையறைகளை சீர்திருத்துவதற்கான பத்திரமொன்றை அமைச்சரவையில் தாக்கல் செய்வதற்கு
நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கின்றேன் என்பதுடன் அதுவரை அரசின் தொழில் சட்ட வரைமுறைகளை மீற எவருக்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பின்போது அமைச்சின் அதிகாரிகள் மற்றும் திருமலை மாவட்ட கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர், கடற்படையினர்
துறைசார் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
நாடு முழுவதும் இன்று ஊரடங்கு – வீதி தடைகளும் நடமாடும் ரோந்து
நாடு முழுவதும் இன்று ஊரடங்கு – வீதி தடைகளும் நடமாடும் ரோந்து
நாடு முழுவதும் இன்று (31) ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு
நாளை (01 ) திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிவரை மாத்திரமே அமுலிலிருக்கும்..
அதேபோன்று, எதிர்வரும் ஜூன் 04 மற்றும் பொசன் நோன்மதி தினமான 05 ஆம் திகதிகளிலும் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைவாக ஜூன் 03 ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்கு 06 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிவரை
அமுலிலிருக்கும். நாளை ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 03 ஆம் திகதி புதன்கிழமை வரை வழமைபோன்று,
தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும.
இன்றைய தினம் நாடு முழுவதும் ஊரடங’கு சட்டம் அமுல்படுத்தப்படுவதினால், அனைத்து மாவட்டங்களிலும்
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய போக்குவரத்து நடவடிக்கைகள்
தடைசெய்யப்பட்டிருப்பதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
சிறிய காரை உருவாக்கிய தமிழ் வாலிபனுக்கு -பிரான்ஸ் முரசுமோட்டை ஒன்றியம் உதவி -photo
சிறிய காரை உருவாக்கிய தமிழ் வாலிபனுக்கு -பிரான்ஸ் முரசுமோட்டை ஒன்றியம் உதவி -photo
முரசுமோட்டை மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்சின் ஏற்பாட்டில் இன்று (30/05/2020) பரந்தன் பகுதியில் வசிக்கும் இளைஞன் அருள்தாஸ்
ரொசானின் புதிய உள்ளூர் உற்பத்தியை பயன் படுத்தி உருவாக்கிய மோட்டார் மகிழுந்து ஊர்த்தி கண்டுபிடிப்பு திறமையைப் பாராட்டி
அவரின் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக நடைபெற்ற 75000/= எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது .
இதில் கலந்து கொண்ட எமது கிராமத்தைச் சேர்ந்தவரும் பரந்தன் பகுதி கிராம சேவகருமானத. நந்தகுமார் அவர்களுக்கும்.
எமது ஒன்றிய பிரதிநிதிகள் ஆகிய ப.பாஸ்கரன்(பாசி)
க.அனுசாந்த், வி.சாந்தன். மற்றும் ஏமது ஒன்றிய தீவிர நலம் விரும்பிகள் ச.கிருபா.
ம.கிருபா மற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முரசுமோட்டை பரந்தன் பகுதி மக்களுக்கும். இத் திட்டத்துக்கு நிதி உதவி வழங்கிய
பிரான்ஸ் வாழ் முரசுமோட்டை உறவுகளுக்கும் ஒன்றியம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
மேலும் இத் திட்டத்தை பரந்தன் பகுதியில் நடை முறை படுத்த பல வழிகளில் உதவி புரிந்த வரதன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம்.
எமது கிராமத்தை கடந்தும் திறமையுடயவர்களை இனம் கண்டு அவர்களை ஊக்கப் படுத்துவதில் எப்பொழுதும் எமது கிராம மக்களும் ,முரசுமோட்டை மக்கள் ஒன்றியமும் பின் நின்றதில்லை
இந்த தமிழ் இளம் கண்டு பிடிப்பாளனுக்கு உரிய நேரத்தில் உதவியதை எண்ணி பிரான்ஸ் பெருமை கொள்கின்றது.
மேலும் முரசுமோட்டை மக்கள் ஒன்றியம் தனது சேவையின் எல்லையை விரிவு படுத்தி வீறு நடைபோட தோள் கொடுத்த
அனைத்து உறவுகளுக்கும் மீண்டும் ஒரு முறை, சிரம் தாழ்ந்த நன்றி களையும் .பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் ,
தொடரட்டும் உங்கள் பணி ,சிறக்கட்டும் எம் தமிழ் தேசம் ,
நன்றி
கவுரவ செயலாளர்,
முரசுமோட்டை மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்




சிங்கள அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் – அதிர்ச்சியில் அரசு
சிங்கள அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் – அதிர்ச்சியில் அரசு
இரண்டு அரசாங்க இணையதளங்கள் இணைய தாக்குதலுக்கு இன்று அதிகாலை (மே,30) இலக்காகியுள்ளன.
பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு
வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் உத்தியோக பூர்வ இணையத்தளங்கள் இணைய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதை
இலங்கை விமானப்படையின் இணைய பாதுகாப்பு மையம் உறுதிப்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் (SLCERT) மேற்கொண்டு வருகிறது.
ஆளுமை மிக்க தலைமையை மலையகம் இழந்துள்ளது-வைத்திய கலாநிதி சிவமோகன்
ஆளுமை மிக்க தலைமையை மலையகம் இழந்துள்ளது-வைத்திய கலாநிதி சிவமோகன்
நேற்றைய தினம்(26) அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் காலமான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது அவர் சிறந்த
தலைவர் மலையக மக்களுக்கு நல்ல பாதுகாப்பு வழிகாட்டி அவருடைய இடம் இனி வெறுமையாகவே இருக்கும் மலையக மக்கள் மனம் தளர்ந்துவிடக் கூடாது
இலங்கை அரசியல் வரலாற்றில் சிறந்த அரசியல் வாதியும் ,முன்னாள் அமைச்சரும்,தொழிலாளர் காங்கிறஸ்
தலைவரும்,மலையக மக்களின் உரிமைக்குரலாக இவ்வளவுகாலமும் ஓயாது ஒலித்துவந்த குரல் சற்று ஓய்ந்துள்ளது
அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் இழப்பு மலையக மக்களுக்கு பேரிழப்பு அவரது நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் தனது மக்களுக்காக கடுமையாக உழைத்துள்ளார்
மலையக அரசியல் அரங்கில் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் இடம் வெறுமையாகவே காணப்படும் மலையக மக்களின்
சம்பளப்பிரச்சனை உட்பட பல்வேறுபட்ட பிரச்சனைகளின் போது அவரால் எடுக்கப்பட்ட முடிவுகள் சரியானதாகவும் துனிச்சல்
மிக்கதாகவும் இருந்திருக்கிறது அமரர் தொண்டமான் அவர்களின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை
தெரிவித்துக் கொள்வதாக வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் தனது அனுதாப அறிக்கையில் தெரிவித்திருந்தார்
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே ஏதாவது ஒரு காரணங்களின் அடிப்படையில் மனுக்கள் மீதான
விசாரணை நிறைவடையும் வரையில் இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்படுமாயின்
பொதுத் தேர்தலை நடத்துவதற்கு சில வருட காலம் செல்லும் என ஜனாதிபதி
சட்டத்தரணி குஷான் டீ அல்விஸ் 29.05.2020 அன்று உயர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் நடத்தும் திகதி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள்
நேற்று பரிசீலிக்கப்பட்டது. கலாநிதி குணதாஸ அமரசேகர சார்பாக ஆஜரான
போது ஜனாதிபதி சட்டத்தரணி குஷான் டீ அல்விஸ் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
இந்த மனுக்களை அரசியல் லாபம் பெறும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக
அவர் கூறினார். இந்த மனுக்களை தாக்கல் செய்தவர்கள் தற்போதைய
அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் என சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PCR பரிசோதனை மத்திய நிலையமொன்றை அமைக்க தீர்மானம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PCR பரிசோதனை
மத்திய நிலையமொன்றை அமைக்க தீர்மானம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் Pஊசு பரிசோதனை மத்திய
நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம்
திகதி மீளத் திறக்கப்படவுள்ளது. இதன்போது, PCR பரிசோதனை மத்திய நிலையத்தையும் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்தார்.
இதனடிப்படையில், சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய விமான
நிலையத்தில் தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு துறைமுகத்தில்- பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பல்கள்
கொழும்பு துறைமுகத்தில்- பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பல்கள்
இலங்கையில் தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் பிரஜைகளை மீன்டும் தாய் நாட்டுக்கு அழைத்துச் செல்ல பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு
சொந்தமான BRP Davao del Sur மற்றும் BRP Ramon Alcaraz ஆகிய இரண்டு கப்பல்கள் நேற்று (மே 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
இராஜதந்திர பணிக்கு இலங்கை கடற்படை உதவி வழங்கியது.
கோவிட் -19 தொற்று நோயின் விளைவாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் உலகெங்கிலும் உள்ள சர்வதேச
விமானங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக மீன்டும் தாய் நாட்டுக்கு செல்ல முடியாமல் இலங்கையில்
தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் பிரஜைகளை அழைத்துச் செல்ல இந்த இரண்டு கப்பல்களும் நேற்று (2020 மே 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
குறித்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திலிருந்து அவற்றுக்கான விநியோகத் தேவைகளை பூர்த்திச் செய்து நாட்டின் நிலைமையைப் பொறுத்து பிலிப்பைன்ஸ் கப்பல்களில் இருந்து இறங்குவதற்கு
எந்தவொரு நபருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. இந்த தொற்றுநோய்களின் கீழ் அனைத்து நிலையான சுகாதார
வழிகாட்டுதல்களையும் பின்பற்றி அனைத்து பிலிப்பைன்ஸ் பிரஜைகளும் கப்பல்களில் பயணிப்பதற்கு முன்னர் முழுமையாக மருத்துவ சோதனைக்ககு உட்படுத்தப்பட்டனர்.
கப்பல்கள் இன்று 30 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து செல்லவுள்ளன.
யாழ் மாவட்டத்திலுள்ள சந்தைகள்- திங்கட்கிழமை மீள திறப்பு
யாழ் மாவட்டத்திலுள்ள சந்தைகள்- திங்கட்கிழமை மீள திறப்பு
யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை மீள
திறக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் .
யாழ் மாட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் யாழ் மாவட்டத்தில் தற்பொழுது இயல்பு நிலை படிப்படியாக திரும்பிக் கொண்டிருக்கும்
நிலையில் பொதுச்சந்தைகளையும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என பலராலும் கோரப்பட்டுள்ளது இது தொடர்பாக ஆளுநர் அவர்களும் சில பணிப்புரைகளையும்
அறிவுறுத்தல்களையும் விடுத்திருக்கின்றார். அதனடிப்படையில் யாழில் முக்கியமான சந்தைகள் அமைந்திருக்கின்ற பிரதேச சபை அங்கத்தவர்கள் மற்றும் ,உள்ளுராட்சி அதிகார சபையின்
அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம் அதனடிப்படையில் தங்களுடைய சந்தை
தொகுதிகளை உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நடைமுறைகளை பின்பற்றி அவற்றை மீளத் திறப்பது குறித்து நடவடிக்கை தற்போது மேற்கொண்டு வருகின்றார்கள் .
இது அநேகமாக எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் அதாவது ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு பிற்பாடு இவற்றை அந்த இடங்களிலே
திறந்து செயல்படுத்தக்கூடியவாறாக இருக்கும் அதே நேரத்தில் சுகாதாதார ஒழுங்கு விதிகளை வியாபாரிகளும் அங்கு செல்லும் பொது மக்களும் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.
அந்தந்த பிரதேச செயலர்களுடன் அந்த பகுதி பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார
பரிசோதகர்களின்அறிவுறுத்தல் அல்லது அவர்களுடைய கண்காணிப்பின் கீழும் இந்த சந்தையினை இயக்குவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது என்றும்
தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் சந்தைகள் யாவும் வழமை போன்று மக்களுக்கு சேவையாற்ற திறக்கப்படவுள்ளது அத்தோடு பொது மக்கள் சுகாதார நடைமுறையிணையும் சமூக
இடைவெளியினையும் பின்பற்றி சந்தையினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் என்று தெரிவித்த அரச அதிபர் , யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகப்பெரிய சந்தையாகிய திருநெல்வேலி சந்தை
பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என உள்ளூராட்சி சபையினரால் தெரிவிக்கப்பட்டதையடுத்து காலை 6 மணி தொடக்கம் 12 மணி
வரையும் அப்பகுதி வீதியினை ஒரு வழிப்பாதையாக நடைமுறைப்படுத்துவதற்கும் நாம் பொலிசாருக்கு அறிவுறுத்தல்
வழங்கி யிருக்கின்றோம் என்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மேலும் தெரிவித்தார் .
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வர நடவடிக்கை
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வர நடவடிக்கை
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் உறுதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுளள ஊடக அறிக்கை பின்வருமாறு:
ஊடக வெளியீடு
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் உறுதி
வெளிநாடுகளில் குறிப்பாக தமது சட்ட ரீதியான அந்தஸ்த்துக்களை மற்றும் / அல்லது தொழில் வாய்ப்புக்களை இழந்து, பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய
கிழக்கு மற்றும் ஏனைய பிராந்தியங்களிலிருந்து நாட்டிற்கு மீள அழைத்து வரும் பணிகள் தொடரும் என வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள்
அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதியளித்தார். சமீபத்தில் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களில் கோவிட் வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர்களின் அதிகரித்த எண்ணிக்கையைத்
தொடர்ந்து, சுகாதாரத் துறை மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களில் தற்போது காணப்படும் கணிசமான அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, கோவிட் பணிக்குழுவுடன் கலந்தாலோசித்து
இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும். எதிர்காலத்தில் அனைத்து விமானங்களிலும் ஏறுவதற்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு முன்மொழியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சின் செயலாளர் சரத் அபேகுணவர்தன, இலங்கை வெளிநாட்டு
வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த மற்றும் இரண்டு அமைச்சுக்களினதும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
கலந்து கொண்ட வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் இன்று மாலை (மே 29, 2020) நடைபெற்ற சந்திப்பில் அமைச்சர் இந்த அவதானிப்புக்களை மேற்கொண்டார்.
அண்மைய புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு அமைய, மே 27ஆந் திகதிய நிலவரப்படி, 123 நாடுகளைச் சேர்ந்த 42,522 பேர் இலங்கைக்கு மீண்டும் நாடு திரும்ப முற்படுகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது. இவர்களில், 34,881 பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாவதுடன், அவர்களில் 20,893 பேர் மத்திய கிழக்கில்
வசிக்கும் அதே நேரத்தில், 4,961 பேர் குறுகிய கால வீசாவையுடையவர்களும், 2,016 பேர் மாணவர்களுமாவர்.
குவைத்திலிருந்து நாட்டிற்கு மீள அழைத்து வரப்பட்டவர்கள் தொடர்பான முன்னேற்றங்களை நோக்குகையில், நாடு திரும்பிய 466 பேரில் 379 பேர் பொது மன்னிப்பின் மூலம் பயனடையும்
நிமித்தம் ஏப்ரல் 21 – 25 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முகாம்களில் சரணடைந்து, திருப்பி அனுப்பப்படுவதற்காகக் காத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 87 பேர் குவைத்
தடுப்புக்காவல் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் இருந்தவர்களாவர். மே 19 ஆந் திகதி குவைத் எயார்வேஸின் இரண்டு விமானங்களின் மூலமாக இவர்கள் குவைத்திலிருந்து
புறப்படுவதற்கு முன்னர், அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை நடாத்துமாறு குவைத் வெளிவிவகார அமைச்சிடம் மே 11 மற்றும் மே 14 ஆந் திகதிய இராஜதந்திரக்
குறிப்புக்களினூடாக குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், இது சாத்தியமில்லை என்றும், கோவிட் தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்ட எந்தப்
பயணியும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டது. குவைத்தை விட்டு வெளியேறிய
ஏனைய நாடுகளைச் சேர்ந்த எவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மேலும் குறிப்பிடப்பட்டது.
தற்போது மாலைதீவில் மிகப் பெரிய பாதிப்புக்கள் காணப்படுவதுடன், தமது பிரஜைகளை வெளியேற்றுமாறு வெளிநாட்டு அரசாங்கங்களிடம் வெளிப்படையாகக் கோரும்
வகையில், மாலைதீவு அரசாங்கத்தினால் கிரேட்டர் மாலியில் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது
மாலைதீவிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்படவேண்டிய 7000 பேரில், கிட்டத்தட்ட 2000 பேர் கிரேட்டர் மாலியில் உள்ளனர். மே
14ஆந் திகதி, 284 பேர் மீள அழைத்து வரப்பட்டுள்ளதுடன், ஒரு சில மருத்துவ அவசரகால நிகழ்வுகளின் காரணமாக, மாலிக்கு
வெளியிலிருந்து நபர்களை வெளியேற்ற சிறப்பு அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. பி.சி.ஆர். பரிசோதனைகளை
மேற்கொள்வதற்காக இலங்கையிலிருந்து பி.சி.ஆர். பரிசோதனை சாதனங்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை வழங்குதல்
வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், நாடு திரும்புவதற்கு முன்னர் இலங்கையர்களுக்கு பி.சி.ஆர்.
பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்த மாலைதீவு அதிகாரிகளிடம் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஆலோசனைகளை நடாத்தியுள்ளது.
ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் – 66 ஆயிரம் பேர் கைது
ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் – 66 ஆயிரம் பேர் கைது
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திககி மாலை 6 .00 மணி தொடக்கம் இன்று காலை 4.00 (2020.05.30) மணி வரையிலான காலப்பகுதியில்
ஊரடங்கு சட்டத்தை மீறிய 66,835 கைது செய்யபட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதிக்குள் கைப்பற்றப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 18,831
23,307 பேருக்கெதிராக நேற்று வரையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வழக்கு தாக்கல் செய்யப்பட்டதற்கு அமைவாக நீதி மன்றத்தினால் 9,494 பேருக்கு தண்டணை விதிக்கப்பட்டதாக தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
143 பேர் கைது – தொடரும் பொலிஸ் வேட்டை
143 பேர் கைது – தொடரும் பொலிஸ் வேட்டை
இலங்கையில் வைரஸ் நோயின் காரணமாக மக்களை வீடுகளை
விட்டு வெளியேற வேண்டாம் என ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
இவ்வாறான கால பகுதியில் வீதியில் நடமாடிய சுமார் 143 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
யாழில் குண்டு வெடிப்பு – ஒருவர் கைது
யாழில் குண்டு வெடிப்பு – ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கண்ணிவெடி தாக்குதலுடன்
தொடர்புடைய நபர் ஒருவரை தாம் கைது செதுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
இந்த குண்டு தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
புலி பீதியை கிளப்பிட இவரது பரப்புரைகளை சிங்கள புலனாய்வுத் துறை திட்டமிட்டு செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது






