Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ரிஷாட்டின் முக்கிய புள்ளி கைது
ரிஷாட்டின் முக்கிய புள்ளி கைது
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
அப்துல்லா மஹ்ரூப், இன்று (15) காலை 6.30 மணியளவில் காலை கிண்ணியாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதொச நிறுவனத்தின் வாகனம் ஒன்றினை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள
உள்ளதாகவும் இதனால் இவரை கொழும்புக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்படும் வேளையில் தனது வாகனத்தில் கொழும்பிற்கு வருவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு
தெரியப்படுத்தியும் தங்களுடைய வாகனத்தில் அழைத்துச் செல்வதாக கூறப்பட்டுள்ளது எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
சிங்கள கடற்படையால் தமிழக மீனவர்கள் 28 பேர் கடத்தல்
சிங்கள கடற்படையால் தமிழக மீனவர்கள் 28 பேர் கடத்தல்
இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 28 பேரை அந்நாட்டு கடற்படை கைது செய்தது.
ராமேசுவரம் மீனவர்கள் 28 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை நடவடிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலையில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 5 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர். இலங்கை கடல் பகுதிக்குள் வந்து
மீன்பிடித்ததாக கூறி 4 விசைப்படகுகளையும், அதில் இருந்த 28 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
பின்னர் 28 பேரையும் கைது செய்து, இலங்கையின் நெடுந்தீவுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 4 படகுகளும் அங்கு கொண்டு செல்லப்பட்டன.
ராமேசுவரம் மீனவர்கள் 28 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
யாழ் உள்ளிட்ட உள்ளூர் விமானநிலையங்களை இயக்க நடவடிக்கை
யாழ் உள்ளிட்ட உள்ளூர் விமானநிலையங்களை இயக்க நடவடிக்கை
எதிர்வரும் 26 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவது நிலையான அட்டவணையின்றி செல்லும்
விமான நடவடிக்கையாகும் Traveling aircraft operations என்று சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச இதுதொடர்பாக தெரிவிக்கையில், இலங்கையில் மீண்டும் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிப்பதற்காக நடவடிக்கைகள்
மேற்கொள்ப்பட்டுள்ளன. வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் 4 விமான நிலையங்களை திறப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்hர்.
இதற்கமைவாக இலங்கையில் யாழ்ப்பாணம், கட்டுநாயக்க, மத்தள மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு வணிக
விமானங்களுக்கும் நிலையான நேர அட்டவணையின்றி செல்லும் விமானங்களும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள
அனுமதிகிடைக்க்கூடும்..இதன்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார
ஆலோசனைகள் பின்னர் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
சர்வதேச விமான சேவைகளுக்காக இலங்கை மீண்டும் திறக்கப்படும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பிரதேசங்கள்!
தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பிரதேசங்கள்!
கொழும்பு, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் இன்று காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், கொழும்பு, களுத்துறை மற்றும்
கம்பஹாமாவட்டங்களில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளது.
இது குறித்த அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
கீழ் குறிப்பிட்ட மாவட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தலை அமுல்படுத்தல் , நீக்குதல் மற்றும் புதிதாக அமுல்படுத்துதல் கீழ் கண்ட வகையில்
இற்றைப்படுத்தப்பட்டுள்ள (முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாக) தாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு
மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டம்
- இன்று (14) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்
• சிரிசந்த செவன குடியிருப்புத் திட்டம் (கிராண்ட்பாஸ் பொலிஸ் வலயம்)
• சிரிமுத்து உயன (கிராண்ட்பாஸ் பொலிஸ் வலயம்)
• லக்ஹிரு செவன தும்மிரிய அடுக்குமாடி குடியிருப்பு ( மாளிகாவத்தை பொலிஸ் வலயம்)
• சிறிசர உயன (பொரள்ளை பொலிஸ் வலயம்)
- தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்படும் பிரதேசங்கள்
• மோதர (முகத்துவாரம் பொலிஸ் பிரிவு)
• கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு
• கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு
• ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவு
• டேம் வீதி பொலிஸ் பிரிவு
• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு
• மாளிகாவத்த பொலிஸ் பிரிவு
• தெமட்டகொடை பொலிஸ் பிரிவு
• மருதானை பொலிஸ் பிரிவு
• கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வேகந்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு
• பொரள்ளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு
• வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் சாலமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் லக்சந்த செவன வீடமைப்பு குடியிருப்பு
• மட்டக்குளி பொலிஸ் பிரிவில் பர்கசன் வீதி தெற்கு
• கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் ஹுணுப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
• குருந்துவத்தை (கறுவாத்தோட்டம்) 60ஆவது தோட்டம்
• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் கோகிலா வீதி
- இன்று (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தும் பிரதேசங்களாக குறிப்பிடப்படும் பிரதேசங்கள்
• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் மயுரா பிளேஸ்
கம்பஹா மாவட்டம்
- இன்று (14) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலிருந்து நீக்கப்படும் பிரதேசம்
வத்தளை பொலிஸ் பிரிவு
• கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
• ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
• குருந்துஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு
• எவரிவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு
• வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
பேலியகொட பொலிஸ் பிரிவு
• பட்டிய – வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
- தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தும் பிரதேசங்கள்
பேலியகொட பொலிஸ் பிரிவு
• பேலியகொடவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு
• பேலியகொட கஹாபட கிராம உத்தியோகத்தர் பிரிவு
• மீகஹாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு
கிரிபத்கொட பொலிஸ் பிரிவு
• வெலேகொட வடக்கு
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு
• தலதுவை கிராம உத்தியோகத்தர் பிரிவில் வீடமைப்பு குடியிருப்புத் தொகுதி வெயங்கொட பொலிஸ் பிரிவு • ஹிரிபிட்டிய தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிதாஸ் மாவத்தை
- இன்று (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தல் பிரதேசமாக பெயரிடும் பிரதேசம்
வத்தளை பொலிஸ் பிரிவு
• கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் நய்துவ பிரதேசம் • வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் துவே வத்தை பிரதேசம்
பேலியகொட பொலிஸ் பிரிவில்
• பட்டியமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரோஹண விகாரை மாவத்தை
கிரிபத்கொடை பொலிஸ் பிரிவு
• ஹுணுப்பிட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெடிகந்த பிரதேசம்
நிட்டம்புவ பொலிஸ் பிரிவில்
• திஹாரி வடக்கு மற்றும் திஹாரி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வாரண பன்சல வீதி, கத்தொட்ட வீதி மற்றும் ஹிஜ்ரா மாவத்தை உள்ளிட்ட பிரதேசங்கள்
களுத்துறை மாவட்டம்
- இன்று (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தலாக பெயரிடப்படும் பிரதேசம்.
• புளத்சிங்கள பிரதேச செயலக பிரிவில் வேகன்கல்ல கிழக்கு மற்றும் வேகன்கல்ல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு • குடா ஹீனிட்டியன்கல கிராம உத்தியோகத்தர் பிரிவில் மரிக்கார் வீதி
நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசம் என்ற ரீதியில் இருப்பதாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் , இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இரு குழுக்கள் இடையில் மோதல் – 8 பேர் காயம்
இரு குழுக்கள் இடையில் மோதல் – 8 பேர் காயம்
கேகாலை, கோலிந்த வத்த பகுதியில் இரு குழுக்கள் இடையில் ஏற்பட்ட மோதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
பெண் ஒருவர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில்
இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருகுழுக்களுக்கிடையில் பல நாட்களாக இருந்த பிரச்சினையின் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை
உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமையாலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம்
இதுவரையான காலப்பகுதியில் 1,390 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழில் பாடசாலைகள் அனைத்தும் பூட்டு
யாழில் பாடசாலைகள் அனைத்தும் பூட்டு
கொவிட் 19 அவதான நிலை காரணமாக யாழ்ப்பாணம் உடுவில் மற்றும் தெல்லிப்பளை கல்வி வலயங்களைச் சேர்ந்த சகல
பாடசாலைகளுக்கும் இன்று(14) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
உடுவில் கல்வி வலயத்தில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியை தனிமைப்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளமையால் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
7211 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்
7211 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 76 தனிமைப்படுத்தல் நிலையங்களில்
7211 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது வரை 23,793 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டணி தேவை :கொசோவோ துணைப்பிரதமர்
இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டணி தேவை : ஈழத்தமிழர்களுக்கு கொசோவோ துணைப்பிரதமர் Haki Abazi தோழமை !
நாடுகளுக்கு இடையே, இனங்களுக்கு இடையேயான சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டிக்கும் இவ்வேளையில், இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டணியொன்று உலகத்தின்
இன்றைய தேவையாக உள்ளதென கொசோவோ நாட்டு துணைப்பிரதமர் அக்கி அபாசி ( Haki Abazi ) அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசெம்பர் 5.6ம் தேதிகளில் நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் சிறப்பு
அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இக்கருத்தினை அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து அகதிகள் பெருமளவில் வெளியேறிவரும் நிலையில்,
ஏதிலிகளின் குரல்களுக்கு நடுவேயே இனச்சிக்கல்குறித்தான் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டியதாகவுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொசோவைவின் துணைப் பிரதமராகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பணியாற்றிய அக்கி அபாசி அவர்கள், ஐரோப்பாவில் சிவில் சமூகத்தினை
வளர்த்தெடுப்பதில் அக்கறை செலுத்தியவர் மட்டுமல்லாது பல சர்வதேச மனிதாபிமான தொண்டு நிறுவனங்களிலும் உயர்பொறுப்புக்களை வகித்தவர்.
கொசோவா மக்களது அரசியல் தலைவிதியை நிர்ணயிக்க அங்கு நடந்த பொதுவாக்கெடுப்பு பொறிமுறை போன்றே, ஈழத்தமிழ் மக்களது அரசியல் தலைவிதியை தீர்மானிக்கின்ற
பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில், ஈழதமிழர்களுக்கான தனது தேசத்தின் தோழமையினை தெரிவித்து அவர் ஆற்றிய உரையின் பிழிவு :
நாடுகளுக்கு இடையே, இனங்களுக்கு இடையே சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. சிக்கல்களை களைவதும் இன்னல்கள் நிறைந்த பாதையாகவே இருக்கின்றது.21ம்
நூற்றாண்டில் இந்த உலகமயமாதலின் பின்னராக தற்போதைய சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்கு பின்னராக இப்பணி எளிதாகவே
இருக்க வேண்டும். ஆனாலும் இந்த இனச்சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்த காலகட்டத்தில் இனச்சிக்கல்களுக்கு எதிரான ஒரு கூட்டணி ஒன்று தேவையாகவுள்ளது. குறிப்பாக இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டணி தேவையாகவுள்ளது.
அகதிகளின் அலைந்துழ்வு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஜேர்மன் நாடுபோன்று பிற நாடுகளும் அகதிகளை திறந்த
கதவுகளுடன் ஏற்றுக் கொண்டால் சிறப்பாக இருக்கும். ஆனால் நிலைமைகள் அவ்வாறு இல்லை.
இனச்சிக்கல்கள் குறைந்தால்தான் குறிக்கீடுகளும் குறையும். குறிப்பாக சிரியா, லிபியா,ஆப்பாகானிஸ்தான் போன்ற நாடுகளில்
இருந்து அகதிகள் பெருமளவில் வெளியேறிவரும் நிலையில், இந்த குரல்களுக்கு நடுவேயே இனச்சிக்கல்குறித்தான குரல்களை ஓங்கி ஒலிக்க வேண்டியுள்ளது.
கொசோவோ தனிநாடாகவிட்டது என்பதால் அதன் பிரச்சனைகள் முடிந்துவிட்டதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவது என்பது பெரும்
பணியாகவுள்ளது.கொசோவோவில் 90 வீதம் அல்பேனியர்களே உள்ளதோடு, அல்பேனிய மக்கள் ஐந்து நாடுகளில் சிதறுண்டு உள்ளனர்.
கொசோ விடுதலைப் போராட்ட தடம்
ஓட்டமான் பேரசு காலத்தில் இடம்பெற்ற ஆக்கிரமிப்பின் போதுதான் அல்பேனிய மக்களை கொண்ட கொசோவோ மற்றவர்களின் கையில் வீழ்ந்தது. ஆக்கிரமிக்கப்பட்டது.
1989ம் ஆண்டு பேர்லின் சுவர் வீழ்ந்தது. அதில் இருந்துதான் பால்கன் பிராந்தியத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழத்தொடங்கின. அவ்வேளையிலே கொசோவோ அல்பேனியவர்கள் செர்பிய
சிறைகளில் காரணங்களன்றி பல்லாயிரணக்கணக்கில் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். 1989ல் இருந்து 1999 வரை கொசோவோ விடுதலைப் போர் உக்கிரமாக நடந்தது. அங்கிருந்து கொசோவோ
அர்பேனியர்கள் தொடர்ந்து அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். குறிப்பாக 1.5 மில்லியன் மக்கள் கொசோவாவில் இருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். அவ்வேளையில் 1999ல்
அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள் தலைமையிலான நோட்டோ அமைப்பு செர்பியா மீது போரைத் தொடுத்தது. 79 நாட்கள் இடம்பெற்ற போருக்கு பின்னராக யுத்த நிறுத்தம் வந்தது.
ஐ.நாவின் தீர்மானம் 1854 சரத்துக்கு அமைய பொதுவாக்கெடுப்பு மூலம் கொசோவோ தனிநாடாகியது. அல்பேனியவர்கள் சுதந்திர
காற்றை சுவாசித்தார்கள் என அவர் தனதுரையில் தெரிவித்திருந்தார்.
கொசோவை மக்களது போராட்டமும், அப்போராட்டம் காரணமாக கொசோவா தனிநாடாக உருவான விதமும் எமது போராட்டத்துக்கும் , எமது அரசியல் குறிக்கோளுக்கும் உற்சாகம்
தருகின்றது என தெரிவித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், கொசோவா மக்களது அரசியல் தலைவிதியை நிர்ணயிக்க அங்கு நடந்த
பொதுவாக்கெடுப்பு பொறிமுறை போன்றே, எங்களுடைய ஈழத்தமிழ் மக்களது அரசியல் தலைவிதியை தீர்மானிக்கின்ற
பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பு கோரி போராடிவருகின்றோம் எனத் தெரிவித்தார்.
கொசோவாவில் நடந்தது ஒரு இனப்படுகொலை. அங்கு இனப்படுகொலை மீண்டு நடந்து விடக்கூடாதிருக்க சுதந்திரமும்
இறையும் கொண்டதாக ஈடுசெய் நீதியினை விளைவாக அங்கு பொதுவாக்கெடுப்பு நடந்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.
விடுதலைப்புலிகளின் போராட்டம் நியாயமானது : பேராசிரியர் Francis A.Boyle video
விடுதலைப்புலிகளின் போராட்டம் நியாயமானது : பேராசிரியர் Francis A.Boyle video
!https://youtu.be/ZXCHVLHTqzg
அயர்லாந்து பின்னணியைக் கொண்ட தனது, பாட்டனால் அயர்லாந்து விடுதலை இயக்கத்தில் இருந்தவர் நிலையில், தமிழீழ
விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் நியாயத்தன்மை தனக்கு புரிகின்றது என பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (Prof Francis A.Boyle ) அவர்கள் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் பொய்ல் அவர்கள், 1995ம் ஆண்டு முதல் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு குரல்
கொடுத்துவருவர் என்பது மட்டுமல்லாது, தமிழ்மக்கள் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ தனியரசுக்கு உரித்துடையவர்கள் உரக்ககூறிவருபவர்.
கடந்த டிசெம்பர் 9ம் நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் பிரிவு ‘அலைகள்’ ஒருங்கிணைத்திருந்த ‘அனைத்துலக
இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான ஐ.நா
பிரகடனத்தின் அனைத்துலக நாள் (International Day of Commemoration and Dignity of the Victims of the Crime of
Genocide) இணைவழி கருத்தரங்கில் சிறப்புரையாற்றும் போதே இக்கருத்தினை பேராசிரியர் அவர்கள் முன்வைத்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், செர்பனிக்கா இனப்படுகொலையில் 8000 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இதனை உலக நீதிமன்றம்
இனப்படுகொலையென ஏற்றுக் கொண்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் 1 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். .இனப்படுகொலைக்கு
படுகொலை என்பது எண்ணி;கையின் அடிப்படையிலானது அல்ல. அப்படுகொலைக்கான நோக்கம் இனப்படுகொலைக்கானது என்பதே முக்கியமானது. ஈழத்தமிழர்களுக்கு நடந்ததும்
இனப்படுகொலைதான். இதற்கான பரிகார நீதியினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள வேண்டும். இதறக்கு நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம். அவ்வாறு நாடுகளின்
ஒத்துழைப்பினை தேடும் பணியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் செயற்பட்டு வருகின்றார்.
தற்போது தமிழர்கள் புறக்கணிப்பு போராட்டத்தினை நடத்த வேண்டும். எவ்வாறு இஸ்றேலுக்கு எதிரான பலஸ்தீனியவர்கள் The Boycott, Divestment, Sanctions (BDS) எனும்
புறக்கணிப்பு இயக்கத்தினை நடத்தினார்களோ (https://bdsmovement.net/ ) அவ்வாறானதொரு இயக்கத்தினை
ஈழத்தமிழர்கள் உருவாக்க வேண்டும் என பேராசிரியர் பொய்ல் அவர்கள் தனதுரையில் இடித்துரைத்திருந்தார்.
பேராசிரியர் அவர்கள் பலஸ்தீன இயக்கங்களுடன் சட்ட ஆலோசகராக நீண்டகாலம் பணியாற்றியிருந்தவர் என்பதோடு,
உலக நீதிமன்றத்தில் பொஸ்னியா-கெர்சிகோவினா இனப்படுகொலைக்கு நீதிவேண்டி அமக்களுக்கு சட்டப்போராட்டம் நடத்தி நீதியை பெற்றவர்.
இணையவழி இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில் பல வளப்பெருமக்கள் கலந்து கொண்டு இனப்படுகொலை, அதற்கான சான்றுகள்,
அதற்கான பரிகார நீதி என்று பல்வேறு கோணங்களில் உரையாடல்களை நிகழ்த்தியிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
கொழும்பு மருத்துவமனை ஊழியர்கள் 50 பேருக்கு கொரனோ
கொழும்பு மருத்துவமனை ஊழியர்கள் 50 பேருக்கு கொரனோ
கொழும்பு தேசிய மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள்
ஐம்பது பேருக்கு பரவி வரும் கொரனோ நோயானது
தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் அனைவரும் உரிய சோதனைக்கு உள்ளாக்க
பட்டுள்ளதுடன் ,ஏனையவர்கள் தனிமை படுத்த பட்டு கண்காணிக்க பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி தொடக்கம் 1000 ரூபா
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி தொடக்கம் 1000 ரூபா
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் 1000 ரூபா
சம்பளம் கிடைக்குமென தாம் நம்புவதாக தோட்ட வீடமைப்பு மற்றும்
சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
1000 ரூபா சம்பளத்தை ஜனவரி தொடக்கம் பெற்றுக் கொடுப்பதாக
ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியளித்துள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்கவேண்டும்-செல்வம் அழைப்பு
அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்கவேண்டும்-செல்வம் அழைப்பு
மற்றவர்களை ஒற்றுமைப்படுத்திவிட்டு தங்களது தனித்துவத்தினை பேணவேண்டும் என்று நினைத்தால் அதில்வெற்றிபெறமுடியாது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
தற்போது வடகிழக்கில் தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் எட்டு கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் இணைப்பதா அல்லது வேறு ஒரு குடையின் கீழ் இணைவதா என்பது குறித்து சிந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டத்தில் பிரச்சினை இருப்பதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம்.மாநகரசபை வரவு செலவு திட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து வாக்களிப்பார்கள் என்ற முடிவினை எட்டியுள்ளோம்.
இன்றைய அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மிக மோசமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை கையாண்டுவருகின்றது.இந்தநிலையில் தமிழர்களின் ஒற்றுமையென்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது.
இன்று தமிழர்களின் பூர்வீக இடங்கள் பல்வேறு திட்டங்கள் என்ற பெயரில் அபகரிக்கும் சூழ்நிலையேற்பட்டுள்ளது. மகாவலி, தொல்பொருள், வன இலாகா போன்ற திணைக்களங்களை வைத்துக்கொண்டு கபடத்தனமாக தமிழர்களின் காணிகளை அபகரித்துக் கொண்டுவருகின்றது.
தற்போதைய ஜனாதிபதி கோத்தபாயவின் திட்டங்களை பார்க்கும்போது தமிழர்கள் பூர்விக வரலாற்றினைக்கொண்ட வடகிழக்கு பிரதேசம் அந்த மக்களை சிதைக்கின்ற நிலங்களை அபகரிக்க மிக மோசமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையினை இன்று காணமுடிகின்றது.
கொரோனா காலத்தில் இராணுவத்தின் பிரசன்னம், நேர்முகத்தேர்வுகளின் போது இராணுவத்தினது பிரசன்னம், அரச உயர் பதவிகளில் இராணுவ உயர் அதிகாரிகளை நியமிக்கும் நிலைமைகள், முப்படைகளையும் கொண்டு ஆளும் செயற்பாடுகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில் தமிழர்கள் பிரிந்து நின்று கட்சி ரீதியாக செயற்படுகின்றபோது அது இன்னும் இந்த அரசாங்கத்திற்கு பிரித்தாளும் தன்மையினையே ஏற்படுத்திக்கொடுக்கும். இன்று மட்டக்களப்பில் வியாழேந்திரன், பிள்ளையான், கருணா போன்றவர்கள் மட்டக்களப்பில் தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் பேசலாமே தவிர செயல்வடிவத்தில் எதனையும் செய்யமுடியாது. கூடுதலான வாக்குகளை தமிழ் மக்களிடம் இருந்து பெற்றவர்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முடியாத நிலையே உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை கால்நடைவளர்ப்பாளர்களின் பிரச்சினைகள் பெரும் பிரச்சினையாகவுள்ளது. அரசாங்கம் மிக மோசமான முறையில் திட்டமிட்ட குடியேற்றங்களை மேய்ச்சல் தரை பகுதிகளில் முன்னெடுத்துவருகின்றது. இதனை தடுப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உhயி தரப்பினருடன் பேசினோம். ஆனால் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அதற்கான சரியான தீர்மானத்தினை எடுக்கவில்லை. அரசாங்கத்துடன் இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது சரியான வேலைகளை செய்யவேண்டும்.
தமிழ் தேசியத்துடன் இருக்கும் கட்சிகள் உளப்பூர்வமாக மக்களின் உரிமைக்காக செயற்படும் கட்சிகளாக இருக்குமானால் ஒற்றுமையாக செயற்படவேண்டும். அரசாங்கத்துடன் இருப்பவர்களை நாங்கள் ஒன்றும் கூறமுடியாது. தமிழ் தேசியத்துடன் செயற்படும் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பாடும் காலம் தற்போது உருவாகியுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டுமாகவிருந்தால் கொள்கையில் ஒன்றுபட்டுள்ள நாங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக ஒன்றுபடமுடியாது. அவ்வாறான ஒரு சூழல் உருவாக்கப்படவேண்டும். இன்று தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் எட்டு கட்சிகள் கூடி முடிவுகளை எடுத்து நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழலில் வடகிழக்கில் ஒன்றிணைந்து செயற்படும் இந்த காலத்தினை தவறவிடுவோமானால் தமிழர்களின் பூர்வீம் வரலாறு, தமிழர்களின் போராட்டம், இறையாண்மை அத்தனையும் இழந்து எங்களையெல்லாம் வந்தேறு குடிகளாக மாற்றும் சிங்களத்தின் கருத்துகளுக்கு துணைபோனதாக அமையும்.
மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசினால் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தடைசெய்யவேண்டும் என்று கூறுகின்ற அமைச்சர்களையே இன்று இந்த பாராளுமன்றம் கொண்டுள்ளது. அரசாங்கத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்கள் தொடர்பாக மிக மோசமான சிந்தனைகளை கொண்டுள்ளார்கள் என்பதை கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் உணரமுடிந்தது.
மூன்று நேரம் உணவு கொடுத்தால் தமிழ் மக்களுக்கு போதும் என்று முக்கியமான அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார்.தமது உரிமைக்காக போராடிய இனம்,தமது உரிமைக்காக தமது உயிர்களை அர்ப்பணித்த இனம் தமிழினம். ஆனால் அமைச்சர் பிரசன்னா ரணதுங்க மிக சாதாரணமாக தமிழ் மக்களுக்கு மூன்று நேர உணவு கொடுத்தால்போதும் என்று கூறுகின்றார். மூன்று நேர சாப்பாடு பிச்சையெடுப்பவனும் சாப்பிடுவான்.
இந்த அரசாங்கம் கடந்த காலத்தில் தமிழர்களை படுகொலைசெய்து இன்று ஐநா மனித உரிமைகள் சபை உட்பட சர்வதேச நாடுகளினால் குற்றஞ்சாட்டப்படும் அரசாங்கமாகவுள்ளது. இன்று பலர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். பீல்ட்மார்சலாக இருக்கின்ற சரத்பொன்சேகா உட்பட பலர் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். அவரும் இன்று கூறுகின்றார் இந்த புயல் மாவீரர் தினமன்று வந்திருக்கவேண்டும் என்று. இவருக்கு வாக்களித்ததற்கு இன்று தமிழ் மக்கள் வெட்கப்படுகின்றார்கள். இவ்வாறான சிந்தனையுடன்தான் இன்று பாராளுமன்றம் இருக்கின்றது.
நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக்கொண்டுள்ளோம். நாங்கள் என்ன செய்தாலும் யாருக்கும் அச்சப்படத்தேவையில்லையென கூறுகின்றார்கள். நிச்சயமாக இவர்கள் சர்வதேசத்திடம் பகைத்துக்கொண்டால் தன்னிறைவுகொண்ட நாடாக மாறாது. இவர்களினால் சர்வதேசத்தினை பகைத்துக்கொண்டு ஒருபோதும் செயற்படமுடியாது.
சர்வதேசத்தினைப் பொறுத்தவரையில் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் தமிழர்களின் பிரச்சினைகளில் முனைப்புக்காட்டிவருகின்றது. இந்த நிலையில் இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மூர்க்கத்தனமாக பல வழிகளிலும் தமிழ் மக்களின் இறையாண்மையினையும் பரவலையும் தடுக்கின்ற வகையில் செயற்படுகின்றது.
நாங்கள் இந்தவேளையில் ஒற்றுமையாக செயற்படமுன்வரவேண்டும். அரசியலமைப்பு புதிதாக எழுதப்படப்போவதாக சொல்கின்றார்கள். நாங்கள் இந்தவேளையில் தனித்தனியாக செயற்படுவதை விட இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களையும் தமிழ் மக்களின் சகல விடயங்களையும் உள்ளடக்கியதான ஒரு தீர்வு திட்டத்தினை அனைவரும் இணைந்து வழங்கவேண்டும். அதற்கு நாங்களும் தயாராகயிருக்கின்றோம். இந்த நிலையில் தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் தங்களது சுய விறுப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக செயற்படுவதாக இருந்தால் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழ் மக்களின் உரிமைசார்ந்து செயற்படும் கட்சிகள் எந்த கட்சியாக இருந்தாலும் தமிழ் மக்களுக்காக சிந்திப்பதாக சொல்லிக்கொண்டு கட்சி பதிவு விடயத்திலும் கட்சி சீரமைப்பு விடயத்திலும் தட்டிக்கழிக்கின்ற செயற்பாடுகள் தொடருமானால் அது மக்களின் நலன் என்று பார்க்கமுடியாது. இதனை எல்லாரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக பயணிக்கும் கட்சிகளுடன் தொடர்ந்து பயணிப்பதே தமிழ் மக்களுக்கு சாதகமான விடயமாகஇருக்கும். மற்றவர்களை ஒற்றுமையாக்கிகொண்டுவந்து அதில் தங்களின் தனித்துவத்தினை காட்டமுற்பட்டால் அதில் எந்தவெற்றியும் பெறமுடியாது.
அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒருங்கிணைப்பது கட்டாயமாகும். ஏற்கனவே எட்டு கட்சிகள் ஒன்றாக இணைந்துகொண்டுள்ளும் சூழ்நிலையுள்ளது. அதனை நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ளீர்க்கலாமா அல்லது வேறு ஒரு குடையின் கீழ் செயற்படமுடியுமா என்பது தொடர்பில் சிந்தித்துவருகின்றோம். எது எவ்வாறு என்றாலும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.இதனை அனைவரும் உணர்ந்துசெயற்பட வேண்டும்.
.
இலங்கையில் கொரோனாவால் 147 பேர் பலி
இலங்கையில் கொரோனாவால் 147 பேர் பலி
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, கொழும்பு -13ஐச் சேர்ந்த 82 வயதான
பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். இவருடன் சேர்த்து, கொரோனா
தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தோரின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது
கட்சியில் இருந்து தப்பி ஓடிய முன்னாள் அமைச்சர்
கட்சியில் இருந்து தப்பி ஓடிய முன்னாள் அமைச்சர்
ஜாதிக எல உறுமயவின் பொதுச்செயலாளராக இருந்த நாடாளுமன்ற
உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அப்பதவியிலிருந்தும், அக்கட்சியிலிருந்து இன்று (12) விலகியுள்ளார்.
இந்த திடீர் விலகல் கோட்டா கட்சியில் இணைய உள்ளதான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறன்றன
சுகாதார விதிமுறைகளை மீறிய 30 தனியார் பஸ்களின் போக்குவரத்து அனுமதி இரத்து
சுகாதார விதிமுறைகளை மீறிய 30 தனியார் பஸ்களின் போக்குவரத்து அனுமதி இரத்து
சுகாதார விதிமுறைகளை மீறிய 30க்கும் மேற்பட்ட தனியார் பஸ்
வண்டிகளின் போக்குவரத்து அனுமதி அரசாங்கத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பேருந்துகளில் பயணிகள் இருக்கையில் அமராமல் நின்று பயணம்
செய்வதற்கும் சுகாதாரத்துறை அனுமதியளித்ததுடன் பஸ் கட்டணங்களை மீண்டும் முந்திய நிலைக்கு கொண்டு வர
நடவடிக்கை எடுப்பதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மகிந்தாவுக்கு புதிய நியமனம் வழங்கிய – கோட்டா
மகிந்தாவுக்கு புதிய நியமனம் வழங்கிய – கோட்டா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள்
தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு புது நியமனம் ஒன்றை வழங்கியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராகவே மஹிந்த
தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீதியின் குறுக்கே வாய்க்கால்; மக்கள் அவதி
வீதியின் குறுக்கே வாய்க்கால்; மக்கள் அவதி
பூநகரி தெளிக்கரை கிராமரத்தில், வீதியின் குறுக்கே வெட்டுப்பட்டுள்ள வாய்க்கால் காரணமாக தாம் போக்குவரத்துச்
செய்வதில் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் பெய்த மழைக் காரணமாக வீதியில் தேங்கியிருந்த வெள்ள நீரை அகற்றுவதற்காக, பொதுமக்கள் நாளாந்தம்
பயன்படுத்தும் வீதியின் குறுக்கே, கனரக வாகனம் கொண்டு வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாய்க்கால் மூடப்படாததால் தாம் போக்குவரத்துச் செய்வதில் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில், பூநகரி பிரதேசசபையின் செயலாளரை தொடர்பு கொண்டுகேட்டபோது, வெள்ளநீரை கடத்துவதற்காக வாய்க்கால்
வெட்டப்பட்டது என்றும் எனவே, நீர் வடிந்தோடியதும் வாய்க்கால் மீண்டும் மூடப்படும் என்றும் தெரிவித்தார்

42 பாடசாலைகள் திங்கள் முதல் மீண்டும் திறப்பு
42 பாடசாலைகள் திங்கள் முதல் மீண்டும் திறப்பு
கண்டி நகரில் மூடப்பட்டுள்ள 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும்
திறக்கப்பட உள்ளதாக மத்திய மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.
இன்று (11) கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் டிரினிட்டி கல்லூரி, கலைமகள் கல்லூரி மற்றும் தக்ஷிலா
கல்லூரி ஆகியன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவி ஒருவருக்கு கொரோனா
பாடசாலை மாணவி ஒருவருக்கு கொரோனா
நாவலபிட்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 12 ஆம் ஆண்டில்
கல்வி கற்று வந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாவலபிட்டிய நகரில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில்
இருந்த ஒருவரின் மகளே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் குறித்த மாணவி பெனிதெனிய தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவியுடன் தொடர்பில் இருந்த 4 ஆசிரியர்கள் மற்றும் 16 மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.






