Posted in இலங்கை செய்திகள்

ஜெனீவா, அத்தனை சந்தேகங்கள், கேள்விகள், கருத்துக்கள் ! யாவற்றுக்கும் தெளிவுரை கூறவருகின்றார் பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

ஜெனீவா, அத்தனை சந்தேகங்கள், கேள்விகள், கருத்துக்கள் ! யாவற்றுக்கும் தெளிவுரை கூறவருகின்றார் பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சிறிலங்காவை பாரப்படுத்துவதன் ஊடாகவே பொறுப்புக்கூற வைக்க முடியும் என்பதோடு, இனப்படுகொலைக்கான பரிகாரநீதி நீதிக்காக தமிழர் தேசம்

போராடிவரும் இவ்வேளையில், ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பிலான தீர்மான வரைவு வாக்கெடுப்பினை நோக்கி முன்வைக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தின் நிலை என்ன ? சர்வதே குற்றவியல் நீதிமன்றுக்கான ஆதரவு இல்லையா ? அடுத்த கட்டம் என்ன ? இப்படி ‘ஜெனீவா’ தொடர்பில் உள்ள ஆயிரம் ஆயிரம் கேள்விகள்,

கருத்துக்கள், சந்தேகங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெளிவுரை வழங்க இருக்கின்றார்.

இணையவழியே இடம்பெற இருக்கின்ற இக்கூட்டமான ZOOM செயலிமூலம் இடம்பெறுவதோடு, www.tgte.tv வலைக்காட்சி உட்பட பல்வேறு உலகத்தமிழ் ஊடகங்கள், சமூகவலைத்தளங்கள் ஊடாக நேரஞ்சலாக ஒளிபரப்பாக இருக்கின்றது.

ஞாயிறு 14-03-2021, US and Canada time:3.30 pm (Eastern Time) ,UK time: 7.30 pm, EU time: 8.30 pm மணிக்கு இடம்பெறுகின்ற இக்கூட்டத்தில் நேரடியாக https://us02web.zoom.us/j/81061037948?pwd=ZzduWWE0MFNLY2NYckxBNElpWDRUZz09 இந்த இணைப்பின் மூலம் பங்கெடுத்துக் கொள்ள முடியும்.

Posted in இலங்கை செய்திகள்

பூசாரி போல வேடமிட்டு போதைவஸ்து விற்ற நபர்கள் கைது

பூசாரி போல வேடமிட்டு ஹெரோயின் போதை பொருள் விற்பனை செய்த இருவரை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய போதைப்பொருள் வாங்குபவர் போல வேடமிட்டு பொலிஸ் அதிகாரி ஒரு குறித்த இடத்திற்கு சென்றே மேற்படி இருவரையும் இன்று

(13) பிற்பகல் கைது செய்துள்ளதுடன் குறித்த பெண்ணிடமிருந்த 140 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கம்பளை அட்டபாகை பகுதியை சேர்ந்த 67 வயதுடைய ஆணும் நாவலப்பிட்டி இங்குருஓயா சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு பூசாரி போல் நடித்து நாவலப்பிட்டி நகரிலுள்ள

கடையொன்றில் சூட்சமமாக நீண்ட காலம் ஈ.சி.கேஷின் ஊடாக பணம் பெற்று ஹெரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபரையும் நாவலபிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதாக நாலவப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்

Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்பு இந்தியாவுக்கு இடையில் இன்று அவசர பேச்சு

கூட்டமைப்பு இந்தியாவுக்கு இடையில் இன்று அவசர பேச்சு

இந்தியாவுக்கும் ,தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இன்று அவசர சந்திப்பு ஒன்று இடம் பெறுகிறது

இந்த சந்திப்பில் இலங்கையின் சமகால அரசியல் நிலை தொடர்பாக பேச படும் என எதிர்பார்க்க படுவதுடன் ,ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வில் இந்தியாவின் காத்திரமான செயல்பாடுகள் தொடர்பாகவும் பேச படும் என எதிர்பார்க்க படுகிறது

கோட்டாவின் நேரடி உளவாளி சுமந்திரன் இந்த பேச்சில் ஈடுபடவுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

10 மில்லியன் போதைவஸ்துடன் பெண் கைது

10 மில்லியன் போதைவஸ்துடன் பெண் கைது

இலங்கை Thalagala in Homagama பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்க பட்டிருந்த நிலையில் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைவஸ்து மீட்க பட்டுள்ளது

விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது இந்த போதைவஸ்து மீட்க பட்டுள்ளது ,கைதான பெண் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

நாடு திரும்பும் இலங்கையர் கட்டாய 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-மனோ

தாம் வாழ்ந்த நாட்டில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று, நாடு திரும்பும் இலங்கையர்களை 14 நாள் கட்டாய தனிமைக்காக, அரசு நடத்தும் நிலையங்களுக்கோ அல்லது சொந்த நிதியை

செலுத்த சொல்லி ஐந்து, மூன்று நட்சத்திர விடுதிகளுக்கோ அனுப்பப்படக்கூடாது. இந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர்களது சொந்த வீடுகளில் சுயதனிமைக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்த யோசனைபற்றி கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளைஇடம் வினவிய போது, இன்னமும் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என நேற்று பாராளுமன்றத்தில் அவர் என்னிடம் தெரிவித்தார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,

தொழில் காரணமாகவோ அல்லது விடுமுறை நோக்கிலோ வெளிநாடு சென்றுள்ள இலங்கையர், தாம் இன்று வாழும் நாட்டில் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்று இருப்பார்கள் எனில், அவர்கள் இன்று தாய் நாடு திரும்பும் போது, அவர்களை தமது சொந்த வீடுகளிலேயே சுய தனிமைக்கு உள்ளாக்க வேண்டும்.

ஐந்து, மூன்று நட்சத்திர விடுதிகளில் தங்க வைப்பது, அதற்கான கட்டண நிர்ணயம், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் விமான பயணசீட்டு கட்டணம் ஆகியவவை தொடர்பில் பெரும் திட்டமிட்ட முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதுபோல், அரசு நடத்தும் நிலையங்களில் நாட்கள் தங்க வைக்கப்படும் நாடு திரும்பும் இலங்கையர்களும், அங்கே முறையாக கவனிக்கப்படுவதில்லை. எல்லா இடங்களிலும் முறைகேடுகள் இடம்பெறுகின்றன.

இவற்றால், வெளிநாடுகள் சென்று உழைத்து அதன்மூலம் இந்நாட்டுக்கு அந்நிய செலவாணியை பெற்று தந்து, இன்று தொழில் இழந்து, பெரும் பொருளாதார சிக்கல்களில் மாட்டி இருக்கும் நம் நாட்டு மக்கள் பெரும் அவதியில் தள்ளப்பட்டுள்ளனர்.

நோயுற்றவர்கள் உடனடியாக வைத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஏனையோர் சொந்த வீடுகளில், கண்காணிப்பின் கீழ் சுய தனிமைக்கு உள்ளாகப்பட வேண்டும். உலகின்பல நாடுகளில் இந்த முறை இப்போது அமுலுக்கு வந்துள்ளது.

எனது இந்த யோசனைபற்றி கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளைஇடம் வினவிய போது, இதுபற்றி, இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அவர் நேற்று பாராளுமன்றத்தில் என்னிடம் தெரிவித்தார்

எது எப்படி இருந்தாலும், நம் நாட்டு அப்பாவி மக்களின் நிர்க்கதி நிலைமையை பயன்படுத்தி பணம் பண்ணும் கோஷ்டிகளுக்கு இடம் அளிக்கும் முறையில் அரசின் சட்ட திட்ட விதி முறைகள் ஒருபோதும் அமைய கூடாது.

Posted in இலங்கை செய்திகள்

யாழ் – சென்னை விமான சேவைகள் மீள ஆரம்பம்

யாழ் – சென்னை விமான சேவைகள் மீள ஆரம்பம்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் மற்றம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை கூறியுள்ளார்.

அத்துடன், இரத்மலானை – யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு இடையிலான உள்ளக விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

மலையகத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை photo

இன்றைய சிவராத்திரி (11) தினத்தில் மலையகத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை

இன்றைய சிவராத்திரி (11) தினத்தில்

வெற்றிலையூர் (புலத்கோபிட்டிய) எதுராபொல தோட்டம் 2 ஆம் பிரிவில் அமைந்திருக்கும் ஸ்ரீ பத்தினி அம்மன் தேவஸ்தான

வளாகத்தில் நேற்று (10) சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று (11) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

இந்த தெய்வீக நிகழ்வில் நாடயாவிய ரீதியில் பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை விடயத்தில் ஐ.நா தனது கடந்தகால தவறை சரிசெய்ய ஓர் வாய்ப்பு ! -நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி இடித்துரைப்பு

இலங்கை விடயத்தில் ஐ.நா தனது கடந்தகால தவறை சரிசெய்ய ஓர் வாய்ப்பு ! -நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி இடித்துரைப்பு

Virtual Statement I 46th Session I UN Human Rights Council I Ministry of International Affairs TGTE


Virtual Statement for the 46th Session of the UN Human Rights Council (HRC) by Minister Manicka Vasagar ( International Affairs – Transnational Government…
youtu.be

உலகெங்கும் போரினாலும், இனப்படுகொலைகளினாலும் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியினை பெற்றுக் கொள்வதில், ஐ.நாவின் தேவை தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில்,

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதன் மூலம், தனது கடந்த கால தவறுகளை சரிசெய்வதற்கு ஐ.நாவுக்கு தற்போது ஓர் வாய்ப்பு கிட்டியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

https://youtu.be/RcLQx52DL-4

இதன் மூலம் ஐ.நா மனித உரிமைச்சபை தனது தலைமைத்துவத்துக்கும், முன்னேற்றத்துக்கும் வாய்ப்பாக இது அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு தொடர்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஐ.நா அங்கத்துவ

நாடுகளுக்கு அனைத்துலக தொடர்பாடலுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் காணொளி வாயிலாக முன்வைத்திருந்தார்.

அவர் தனதுரையில், கடந்த 12 ஆண்டுகளாக நாங்கள் இன்னமும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காகக் காத்திருக்கிறோம்.

ஐ.நா. தீர்மானங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து இணங்காதது, மற்றும் போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உட்பட இடைக்கால நீதி வழிமுறைகளை நிறுவுவதில்

தாமதம் என்பன போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாகும்.

எந்தவொரு தீர்மானத்தையும் நடைமுறைப்படுத்தி நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சூழலை உருவாக்கும் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை உள்நாட்டு பொறிமுறை மூலம் செய்யமுடியாது என்பதை சிறீலங்கா மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்ததன் மூலம் தெளிவாகிவிட்டது.

உங்களது தற்போதைய தீர்மான வரைவு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் துன்பத்திற்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்குவதோடு, சிறிலங்கா இனவாத அரசுக்கும் அதன் குற்றவாளிகளுக்கும் மேலதிக நேரமும் வெகுமதியும் அளிப்பதாக அமைகிறது.

உலகெங்கும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதால் போரினால்

பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐ.நா மனித உரிமைப்பேரவையின் தேவை இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதின் மூலம், தனது தலைமைத்துவத்தைக் காண்பிப்பதற்கும், கடந்த கால தவறுகளை சரிசெய்வதற்கும்,

முன்னேறுவதற்கும் ஐ.நா மனித உரிமைப்பேரவைக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என உறுதிபடத் தெரிவிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

On behalf of The Transnational Government of Tamil Eelam (TGTE), and the victims of the Mulliavaikkal War, appeal to the Council, that after 12 years, we are still waiting for justice and accountability.

As you all are aware, the war has resulted in more than 70 000 dead including women, and children, 89 000 widows, about 40 000 disabled, 60 000 IDPs, and 146 000 are still unaccounted for, either dead or missing.

The continued non-compliance, by the Government of Sri Lanka on the UN HRC resolutions, and delaying the establishment of transitional justice mechanisms, including a special court to prosecute alleged war crimes, is an attempt to avoid delivering on the truth and justice, for the thousands of victims of the country’s civil war.

It has become very clear, and repeated and reiterated by the GoSL, that a home-grown mechanism to implement any resolution will never ever be possible, to build any trust for an environment for reconciliation, justice, or accountability.

Your current draft is only to continue to victimise and suppress the victims with more pain and sufferings, and to reward a rogue state and the perpetrators to buy more time.

The relevancy of the Council for the victims of war, around the world, has now come into question, who are continued to be subjected to structural Genocide, War Crimes and Crimes Against Humanity.

Here, it’s an opportunity for the Council to show leadership, to correct past mistakes and to move forward, by referring Sri Lanka to the ICC.

Thank You.

Posted in இலங்கை செய்திகள்

தடம்புரண்ட ரயில் – போக்குவரத்து பாதிப்பு

தடம்புரண்ட ரயில் – போக்குவரத்து பாதிப்பு

கண்டி – நாவலப்பிட்டிக்கு இடையிலான பயணிகள் ரயில் சேவை தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.

142 ஆம் இலக்க பயணிகள் ரயில் நாவலப்பிட்டி ஜயசுந்த ஓவிட்ட பகுதியில் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ளதாக

நாவலப்பிட்ட ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டாவது பயணத்தை ஆரம்பிக்கவிருத்த குறித்த ரயில் எஞ்சின் பகுதி திருப்ப முற்பட்ட போதே இன்று (11) மதியம் 12.30 மணியளவில் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ளது.

நாவலப்பிட்டி ரயில்வே ஊழியகர் திருத்தப்பணியின் ஈடுபட்டு வருவதுடன் பணி நிறைவடைந்தவுடன் மீண்டும் வழமை போல சேவை இடம்பெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடி-4 பேர் கைது

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடி-4 பேர் கைது

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என,

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நேற்று நிறைவடைந்தது. பரீட்சார்த்திக்குப் பதிலாக பரீட்சை எழுதிய குற்றச்சாட்டில்

நேற்றைய தினம் , 21 வயதுடைய இளைஞன் பலாங்கொட பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

யாழில் 141 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

யாழில் 141 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ் கடற்பரப்பில் கேரள கஞ்சாவுடன் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களிடம் இருந்த 42 மில்லியன் ரூபா பெறுமதியான 141

கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Posted in இலங்கை செய்திகள்

வெடி மருந்துகளுடன் ஒருவர் கைது

வெடி மருந்துகளுடன் ஒருவர் கைது

செட்டிகுளம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு தொகை வெடி பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரங்கேத்கம பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட கல் குவாரி ஒன்றில் குறித்த வெடி

பொருட்களுக்கான அனுமதி காலம் நிறைவடைந்த நிலையில் வைத்திருந்தமை தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது வெடி மருந்து 3 கிலோ, வோட்டர் ஜெல் 49, சாதாரண டெட்னேட்டர் 11, அமேனியம் நைட்ரேட் 149 கிலோ உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் 64 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Posted in இலங்கை செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பள நிர்ணய சபையில் மேற்கொள்ளப்;பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 900 ரூபாவாகவும்,

வரவு செலவு திட்டக் கொடுப்பனவாக 100 ரூபாவாகவும் சேர்த்து நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் கடந்த 5 ஆம் திகதி முதல் செல்லபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

கடலுக்குள் பாய்ந்த வண்டி – காப்பாற்றிய இராணுவம்

கொக்கிளாயிலிருந்து முல்லைத்தீவு பயணித்த மஹீந்திரா ஜீப் ரக வாகனம் ஒன்று நாயாறு களப்புக்குள் குடைச்சாய்தமையால் தண்ணீருக்குள் மூழ்கவிருந்த மூவருடைய உயிர்கள் படையினரால் காப்பாற்றப்பட்டன.

இவ்விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் சேவையாற்றிக் கொண்டிருந்த படையினர் ஆற்றில் குதித்து நீரில் மூழ்கவிருந்த

மூவரையும் காப்பாற்றியதுடன், அவர்களுடைய வாகனத்தையும் மீட்டெடுத்தனர்.

அதனையடுத்து இவ்வாறு விபத்தில் சிக்கியவர்கள் இராணுவ வாகனமொன்றில் சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து களப்பிற்குள் இருந்து வாகனத்தை கரைச்சேர்த்தனர்.

மீட்கப்பட்ட சிவிலியன்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்பு அவர்களுடைய வாகனம் படையினரால் மீட்கப்பட்டது.

Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை மீதான விவாதம்

பாராளுமன்றத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை மீதான விவாதம்

பாராளுமன்ற அமர்வு இன்று (10) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு (ஏப்ரல் 21 ) தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மீது பாராளுமன்றத்தில் இன்று (10) ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் மூன்று நாள் விவாதத்தை முன்னெடுப்பதற்கு கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

இதனடிப்படையில், முதல் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

ஏனைய 2 நாள் விவாதங்களையும் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 5.30 வரையில் குறித்த அறிக்கை மீதான விவாதம் இடம்பெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின்அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக.றிஸ்கா நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின்
அம்பாறை மாவட்ட
இளைஞர் அமைப்பாளராக
றிஸ்கான் முகம்மட் நியமனம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஐக்கிய மக்கள் சக்தியின்
அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக
கே.ஆர்.றிஸ்கான் முகம்மட், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் திங்கட்கிழமை (08) கட்சி தலைமையகத்தில்
வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால்
வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய

இளைஞர் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க
ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்நியமனத்தின் மூலம் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு பல்வேறு நலன் சார்ந்த

திட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரிடம் றிஸ்கான் முகம்மட் கலந்துரையாடினார்.

அத்துடன், இவர் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக கடமையாற்றிய காலத்தில்

இளைஞர்களுக்கு பல்வேறு நலன்சார் திட்டங்களை முன்னெடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை சுற்றிவளைப்பில் 1,158 பேர் கைது

காவல்துறை சுற்றிவளைப்பில் 1,158 பேர் கைது

இலங்கை மேல் மாகாணத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட

திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் பொழுது 1,158 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு கைது செய்ய பட்டவர்களில் நீதிமாறினால் தேட பட்டு வந்த பலரும் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

முல்லையில் ஆயுதங்கள் மீட்பாம் -புலிகளை உருவாக்கும் சிங்கள இராணுவம்

முல்லையில் ஆயுதங்கள் மீட்பாம் -புலிகளை உருவாக்கும் சிங்கள இராணுவம்

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் அதன் ஆயுத பலம் அழிக்க பட்டு 12 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் இப்பொழுதும் புலிகள்

ஆயுதங்கள் வெடிக்காத நிலையில் மீட்க பட்டு வருவதாக சிங்கள இராணுவம் பரப்புரை செய்து வருகிறது

அவர்களே ஆயுதங்களை வைத்து விட்டு ,அவர்களே எடுத்து விட்டு அது புலிகள்

ஆயுதங்கள், மீளவும் புலிகள் எழுச்சி கொள்ள துடிக்கிறார்கள் என்ற போர்வையில் பரப்புரை செய்து மகிழ்கிறது

இதெல்லாம் அரசியலில் சகாயமப்பா

Posted in இலங்கை செய்திகள்

கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட 9 வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது

கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட 9 வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது

இலங்கை கொழும்பு பகுதியில் வைத்து ஒன்பது வெளி நாட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,


இவர்களை அனைவரும் சட்டவிராத செயல் பாட்டில் ஈடுபட்ட குற்ற சாட்டில் இந்த கைது இடம் பெற்றுள்ளது

இவ்வாறு கைதானவர்களில் மூன்று நையீரியா நாட்டை சேர்ந்த

கறுப்பினத்தவர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டனர் என தெரிவிக்க பட்டுள்ளது

இவர்களுடன் நான்கு மாலைதீவு,இரண்டு இந்தியர்கள் கைது

செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர் ,அனைவர் மீதும் நீதி விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது

Posted in இலங்கை செய்திகள்

சாராய கடைக்குள் புகுந்த கொரனோ – அடித்து பூட்டு

சாராய கடைக்குள் புகுந்த கொரனோ – அடித்து பூட்டு

இலங்கை தலவாக்கலை பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஒன்றுக்குள்

கொரனோ நோயாளர்கள் அடையாளம்காண பட்ட நிலையில் ,தற்போது அந்த மதுபான நிலையம் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது

இந்த திடீர் அடித்து பூட்டுதல் நிகழ்வால் குடிமகன்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்