Posted in இலங்கை செய்திகள்

பிரிட்டனில் வெடித்த இளையோர் போராட்டம் – வீடியோ

பிரிட்டனில் வெடித்த இளையோர் போராட்டம் – வீடியோ

பிரிட்டனில் ஈழ தமிழர்க்கு நடத்த பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதிமன்றில் ,நிறுத்தி தாமும்

அவர்களை போன்ற சுதந்திரத்துடன் வாழும் வாழ்வை தர வேண்டும் என கோரி இந்த இளைய போராளிகள் வீதிகளில் இயக்கி போராடடத்தில் ஈடுபட்டுள்ளனர்

அந்த காட்சிகள் இதே காணொளியில் பார்க்கவும்

    Posted in இலங்கை செய்திகள்

    மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி

    மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி

    புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் மாணவ தலைவர்களுக்கான ஒரு நாள் தமைமைத்துவ பயிற்சி கல்லூரியின் அதிபர் எஸ்.சந்திரமோகன் தலைமையில் யாழ்ப்பானம் நோர்த் லங்கா சிட்டி

    பல்கலைகழகத்தின் இக்குனர் வி.கோபால் நோர்த் லங்கா சிட்டி பல்கலைகழகத்தின் மாத்தளை கிளையின் ஒருங்கினைப்பாளர் ஜீவரட்ணம் ஆகியோரின் ஏற்பாட்டில் கல்லூரியில் நடைபெற்றது.

    இவ் தலைதமைத்துவ பயிற்சியின் பிரதான விரிவுரையாளராக யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் உப பீடாதிபதியும் உளவளதுறை ஆலோசகருமான பேராசிரியர் கலாநிதி

    பா. தனபாலன் அவர்கள் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கி வைத்தார்.

    குறிப்பாக மாணவ பராயத்தில் இருந்து மாணவர்களுக்கு தலைமைத்தவ பன்பினை உருவாக்கும் பொருட்டும். இன்றைய மாணவர்கள் நாட்டின் நாளைய தலைவர்கள் என்பதற்கு இனங்க அதற்கு

    மாணவர்களை தயார்படுத்தும் அதே வேலை மலையக சமூகத்திற்கு நல்ல ஒழுக்கம் உள்ள சீடர்களாக மாணவர்களை உறுவாக்கும் நோக்கில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

    இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் பிரதி அதிபர் பொருப்பான ஆசிரியர்கள் அயற் பாடசாலை அதிபர்கள் பாடசாலையின் அபிவிருத்தி குழுவின் செயலாளர் பா.திருஞானம் உட்பட மாணவ தலைவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

      Posted in இலங்கை செய்திகள்

      யாழில் 240 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

      யாழில் 240 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

      யாழ்ப்பாணம், வெத்தலகேனி பகுதியில் நேறறு (2021 மார்ச் 22) மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின்

      போது 239 கிலோ மற்றும் 850 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற டிப்பர் வண்டியுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

      சட்டவிரோத கடத்தல்களைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்

      யாழ்ப்பாணம், வெத்தலகேனி, அலியாவலய் பகுதியில் நேற்று (மார்ச் 22, 2021) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சாலையில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான டிப்பர் வண்டி ஒன்றை சோதனை செய்தனர்.

      அப்போது சுமார் 07 பொலிதீன் பைகளில் அடைக்கப்பட்டுள்ள 239 கிலோ மற்றும் 850 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா 100 பார்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

      அதன் படி கேரள கஞ்சா, டிப்பர் வண்டி மற்றும் அதில் பயணித்த இரண்டு (02) சந்தேக நபர்களை கடற்படை கைது செய்தது.

      கடற்படை கைப்பற்றிய கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் ரூ .71.9 மில்லியன் என்று நம்பப்படுகிறது.

      கொவிட் -19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட, இந்த நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31

      மற்றும் 34 வயதுடைய வெத்தலகேனி, முல்லியன் மற்றும் அலியாவலெய் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

      மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கேரள கஞ்சா, டிப்பர் வண்டி மற்றும் சந்தேக நபர்கள் பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        குறட்டை விட்ட புலி அமைப்புக்களை – எழுந்து ஓடவைத்த அம்பிகை

        குறட்டை விட்ட புலி அமைப்புக்களை – எழுந்து ஓடவைத்த அம்பிகை

        பிரித்தானியாவை மைய படுத்தி இயங்கி வந்த புலிகளினால் உருவாக்க பட்ட அதன் அமைப்புக்கள் ,மற்றும் அதன் கிளை அமைப்புக்கள் என்பன தமிழர்கள் உரிமை போராட்டத்தை

        சிங்கள இனவாத அரசுகளுடன் இணைந்து அடகுவைத்த செயலுக்கு ஒப்பாக போராட்டங்களை உறங்குநிலைக்கு எடுத்து சென்று காணாமல் போயிருந்தன

        இவ்வாறான காலப் பகுதியில் , அமைப்புகளின் சார்பு இன்றி தன்னிச்சையாக அம்பிகை அவர்கள் மேற்கொண்ட உண்ணவைத்த போராடடத்தின் பின்னர் ,இப்போது பதுங்கி கிடந்த புலி அமைப்புக்கள் மீள் எழுந்து ஓட ஆரம்பித்துள்ளன .

        தொடர்ந்து தாம் உறங்கு நிலைக்கு சென்றால் ,மக்கள் தன்னெழுச்சியாக செயல்பட்டு விடுவார்கள் என்பதும் ,அவ்வாரண நிலை ஏற்பட்டால் தாம் செல்லாக் காசாக மாறி விடுவோம்

        என்பதால் ,இப்பொது மீள் செயல்பாட்டுக்கு தம வந்துள்ளதாக காட்டி கொள்ளும் பங்கிற்கு சென்றுள்ளன

        எனினும் எதிர் காலத்தில் யல்லிக்கட்டு போராடடத்தை போன்று ,எவ்வித அமைப்பும் சாராது மக்கள் ஒன்றிணைந்த போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கும் தீவிர ஆலோசனைகளில் உள்ளக

        ரீதியாக ஈடுபட்டு வருகின்றமை மேற்படி மைப்புகளுக்கு பெரும் சவாலாக உருமாற போகிறது என்பதை இங்கே அடித்து கூறலாம்

          Posted in இலங்கை செய்திகள்

          சாக்குமூட்டையில் எட்டு மில்லிய பணம் – விசாரணையில் பெண்

          சாக்குமூட்டையில் எட்டு மில்லிய பணம் – விசாரணையில் பெண்

          இலங்கை -பெல்மதுளையில் பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்


          சாக்கு மூட்டையில் அடுக்கி வைக்க பட்ட நிலையில் சுமார் எட்டு மில்லியன் ரூபா பெறுமதியான பண மீட்க பட்டுள்ளது

          இந்த பணம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் விளக்கம் அளிக்க மறுத்த நிலையில்; 44 வயாதான பெண்மணி கைது செய்ய பட்டுள்ளார்

            Posted in இலங்கை செய்திகள்

            தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு

            திருகோணமலை, தம்பலகாமம் பாலம்போட்டாறு பத்தினிபுரப் பகுதியில் உள்ள வயல் நிலத்தை அண்டிய குடியிருப்பு குடிசையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இன்று (21) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

            நல்லூர், மூதூர் எனும் முகவரியை கொண்ட கந்தவேல் இந்திரானி வயது (46) என்ற பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

            குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

            ஆடு மேய்ப்பதற்காக குறித்த குடியிருப்பு பகுதியில் தனது கணவன் மற்றும் தாயுடன் குறித்த பெண் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

            இந்நிலையிலேயே, குடிசைப் பகுதிக்குள் கழுத்து கட்டப்பட்ட நிலையில் அரைப்பகுதி உடம்பு தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

            இது கொலையா ?தற்கொலையா? எனபது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

              Posted in இலங்கை செய்திகள்

              மன்னாரில் இருந்து இந்தியகடலை நீந்தி கடந்து சென்ற பெண்

              மன்னாரில் இருந்து இந்தியகடலை நீந்தி கடந்து சென்ற பெண்

              தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான பெண் ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.

              தலைமன்னாரில் இருந்து நேற்று (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமாகி நேற்று (19) மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு நிறைவு செய்தார். தமிழகத்தையும், இலங்கையையும் பாக் ஜலசந்தி கடற்பகுதி பிரிக்கிறது.

              ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள மணல் திட்டுக்களான ராமர் பாலமும் பாக்ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது.

              தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதி இது.

              பாக் ஜலசந்தி கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன் முதலாக 1954ஆம் ஆண்டு நீந்திக் கடந்தார்.

              தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் பாக் ஜலசந்தியை தலை மன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரை நீந்திக் கடந்தார்.

              வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971 ஆம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து தனுஸ் கோடிக்கு நீந்தி வந்து, மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்திச் சென்று சாதனை படைத்தார்.

              இந்நிலையில், பல்வேறு நீச்சல்போட்டிகளில் சாதனை படைத்த தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சியாமளா கோலி (வயது-48), தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி சாதனை படைத்தார்.

              தலைமன்னாரில் நேற்று (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமானது. சியாமளா கோலி 30 கி.மீ தூரத்தை தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று (19) மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு சுமார் 13 மணி 40 நிமிட நேரத்தில் சென்றடைந்தார்.

              இதன் மூலம் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்த 13ஆவது நீச்சல் வீரராகவும் உலகளவில் இரண்டாவது வீராங்கனையாகவும், இந்திய அளவில் முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். கடந்த ஆண்டு பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடப்பதற்கு இந்திய-இலங்கை அரசுகளிடம் அனுமதி கிடைத்தது. ஆனால் கொரோனா பரவல் காரணத்தினால் முடியாமல் போனது.

              பாக் ஜலசந்தியை பெண்ணாக நான் நீந்தி கடந்ததன் மூலம் பெண்களால் அனைத்து சாதனைகளையும், உயர்ந்த இலக்குகளை அடைவதற்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என தலைமன்னார் முதல் தனுஸ்கோடி வரையிலான கடலை நீந்தி கடந்த சியாமளா கோலி தெரிவித்தார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  பள்ளத் தாக்கில் வீழ்ந்து நொறுங்கிய பஸ் -13 பேர் மரணம் -30 பேர் காயம்

                  பள்ளத் தாக்கில் வீழ்ந்து நொறுங்கிய பஸ் -13 பேர் மரணம் -30 பேர் காயம்

                  பாசாறை பகுதியில் பயணிகள் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில்

                  வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில் பயணித்த 13 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 30 க்குமேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

                  குறித்த வண்டியை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ,மக்கள் ஈடுபட்டுள்ளனர்


                  சாரதியின் அலட்சிய போக்கே மேற்படி விபத்துக்கு காரணமாக உள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    வெளிநாடு பறக்கும் மகிந்தா

                    வெளிநாடு பறக்கும் மகிந்தா

                    இலங்கை ஆளும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பங்களாதேஸ் நாட்டுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு செல்கிறார்

                    இவரது பயணத்தின் பொழுதுஇரு நாடுகளுக்கு இடையில் அபிவிருத்தி ,மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திட படும் என எதிர் பார்க்க படுகிறது

                    Posted in இலங்கை செய்திகள்

                    புதிதாக நியமனம் பெற்றுவந்த வைத்தியர்களுக்கு கடிதம் வழங்கி வைப்பு

                    புதிதாக நியமனம் பெற்றுவந்த வைத்தியர்களுக்கு கடிதம் வழங்கி வைப்பு

                    கிழக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த ஆயர்வேத வைத்தியர்கள் தங்களின் பயிற்சிகளை

                    பெற்றுக்கொள்வதற்கான கடிதங்களை கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் வைத்திய காலநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் நேற்று (16) வழங்கி வைத்தார்.

                    இந்தக் கடிதங்களைப் பெற்றுக்கொண்ட வைத்தியர்கள் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள மருந்து உற்பத்திப் பிரிவுகளுக்கு

                    நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வைத்தியர்கள் தங்களுக்கான பயிற்சிக் காலங்களில் மருந்து உற்பத்தி நடைமுறை, நிர்வாகம், மற்றும் பதிவேடுகள் தொடர்பான பயிற்சிகளை

                    பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே திருகோணமலை மாவட்ட கப்பல்துறை மருந்து உற்பத்திப் பிரிவுக்கு 04 பேரும், மட்டக்களப்பு மாவட்ட சத்திரகொண்டான் மருந்து உற்பத்திப்

                    பிரிவுக்கு 03 பேரும், அம்பாறை மாவட்ட மருந்து உற்பத்திப் பிரிவவுக்கு ஒருவர் என்ற வீதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் கொரனோவால் 532 பேர் மரணம் – பரவும் நோய்

                    இலங்கையில் கொரனோவால் 532 பேர் மரணம் – பரவும் நோய்

                    இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 532 பேர் மரணமாகியுள்ளனர்

                    இந்த மரண எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என அஞ்ச படுகிறது

                    இன்று மட்டும் ஐநூறுக்கு மேற்பட்ட புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                    Posted in இலங்கை செய்திகள்

                    புத்தாண்டை முன்னிட்டு புதிய பயண தடைகள் – இராணுவம் அறிவிப்பு

                    புத்தாண்டை முன்னிட்டு புதிய பயண தடைகள் – இராணுவம் அறிவிப்பு

                    இலங்கையில் எதிர் வரும் தமிழ் ,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டில் பயண தடையில் ,புதிய தடைகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

                    பரவி வரும் நோயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் முகமாக இந்த இடைக்கால பயன தடைகள் குறிப்பிட்ட பட்ட பகுதியில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    மீன் தொட்டியில் விழுந்து குழந்தை மரணம்

                    மீன் தொட்டியில் விழுந்து குழந்தை மரணம்

                    வீட்டில் இருந்த மீன் தொட்டியில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                    நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் இந்த சம்பவம் இடமபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                    கல்கிரியாகம, கஹல்ல, ஆதியாகல பிரதேசத்தை சேந்த ஒரு வயதுடைய குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

                    சம்பவம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா

                    6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா

                    அம்பாறை பக்மிடியாவ பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செய்கை கிழக்கு பாதுகாப்பு

                    படை தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தின் 1வது கொமாண்டோ படைப்பிரிவு வீரர்களினால் நேற்று முன்தினம் (மார்ச் 14) சோதனையிடப்பட்டது.

                    கஞ்சா செய்கை குறித்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸாருடன் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

                    சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு புதிய சலுகை

                    உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மற்றும் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக வங்கிக் கடன்களை செலுத்தாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக சலுகை காலம் வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) வங்கி பிரதானிகளுக்கு தெரிவித்தார்.

                    வங்கி கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

                    அதன்படி, தொழில்முனைவோரின் நிதிப் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் தொடர்புடைய வங்கிகளுடன் இணைந்து இறுதி முடிவை எட்டுமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.

                    இது போன்ற பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், எந்தவொரு தரப்பும் பாதிக்கப்படாத வகையில் அவற்றைத் தீர்ப்பது முக்கியம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

                    வங்கி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத எந்தவொரு தரப்பினருக்கும், வங்கி தரப்பிற்கும் இடையில் நியாயமான முறையில் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தின் தலையீடு தேவை என்று தெரிவித்த பிரதமர், இது தொடர்பாக சட்டப்பூர்வ அதிகாரங்களைக் கொண்ட அரசு நிறுவனம் அல்லது அதிகாரியை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

                    அதன் மூலம் லீசிங் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் பொருந்தும் கடன் வழங்குநர்களுக்கு நிவாரணம் வழங்க வாய்ப்பு உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வெற்றி கண்டது அன்னை அம்பிகையின் அறப்போர்!

                    மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வெற்றி கண்டது அன்னை அம்பிகையின் அறப்போர்!

                    உண்ணாவிரதத்தை முடிக்குமாறு ஒட்டுமொத்த தமிழினமும் ஏகோபித்த கோரிக்கை!! 
                    இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்த அகிம்சைவழி உண்ணாவிரதப்போராட்டம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது.


                    ஒன்றுக்கு மேற்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றபட்டுள்ள நிலையில் பிரித்தானியாவில் நேற்று கிளர்ந்தெழுந்த புலம்பெயர் தமிழர்களின் வேண்டுதலாகவும் உலகெமெங்குமுள்ள ஒட்டுமொத்த தமிழினத்தினதும் அமைப்புக்கள் கட்சிகளினதும் வேண்டு கோளை யும் ஏற்று அம்பிகையின் உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் (15.03.2021) முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.


                    பிரித்தானிய அரசிடம் 4 அம்சக்கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடுவேன் என இன்றுடன் 17 நாட்கள் பசித்திருந்த அம்பிகை கோரிக்கைகளில் ஒன்று முழுமையாவும் இன்னொன்று அண்ணளவாகவும்

                    நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே வெற்றியுடன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாலும், பாராளுமன்ற உறுப்பினர்களாலும் அனைத்து தமிழ் மக்களாலும் கேட்கப்பட்டுள்ளார். 


                    அம்பிகை முன்வைத்த அனைத்துலக சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்குதல்(IIIM), அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) விசாரித்தல், சிறிலங்காவுக்கான தனியான அறிக்கையாளரை நியமித்தல் மற்றும் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் கருத்து கணிப்பு வாக்கெடுப்புக்கான ஐ.நா வின் பரிந்துரைத்தல்  ஆகிய நான்கு அம்சக்கோரிக்கைகளில்

                    பிரித்தானியாவின் ஐ.நா.வுக்கான இறுதி வரைபில் ஒரு புதிய விதமான அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்று (IIM இன் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய) உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிரந்த ஐநா கண்காணிப்பளருக்கு பதிலாக, தொடர்ச்சியாண கண்காணிப்பு நடைமுறை ஓன்றும் உருவாக்கப்படவுள்ளது. 


                    இந்நிலையிலேயே, திருமதி அம்பிகை செல்வக்குமார் மாபெரும் வெற்றியுடன் இன்று பிரித்தானிய நேரம் பி.ப. 3.00 -5.00 மணியளவில் தனது உண்ணாவிரதத்தை, மத தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் முடித்துக்கொள்ள உள்ளார்.  இது நீண்டதொரு தமிழின போராட்ட வரலாற்றி அகிம்சைவழி மாபெரும் வெற்றியாகும்.

                    ஓட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக்குரலாய் அம்பிகை முன்னெடுத்த அறப்போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றியாகும். அம்பிகையின் கோரிக்கையை நிறைவேற்றி அவரை காப்பாற்றுமாறு நேற்று பிரித்தானியாவில் மாபெரும் பேரணியை நிகழ்த்திய புலம்பெயர் தமிழர்களுக்கும் உலகெங்கும் அவருக்காக குரல் கொடுத்த தமிழினத்தின் ஒற்றுமைக்கும்

                    கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகின்றது. 
                    நிகழ்வினை இயன்ற மாலை இலண்டன் நேரம் 3.00 -5.00 மணிவரை நேரலையாக பின்வரும் இணைப்பில் மெய்நிகர் வழியாக உலெகெங்கும் உள்ள அனைவரும் பார்வையிட்டு அம்பிகைக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கமுடியும். https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09மும்மத தலைவர்களின் ஆசியுரைகளுடன்

                    ஆரம்பமாகவுள்ள குறித்த மெய்நிகர் நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பன்னாட்டு அரசியல் பிரமுகர்களின் சிறப்புரைகளும் அம்பிகை செல்வக்குமாரின் வெற்றியுரையம் இடம்பெறவுள்ளது. 

                    இதனிடையே, நேற்று அம்பிகைசெல்வக்குமாரின் கோரிக்கையை நிறைவேற்றி அவரை காப்பாற்றக்கோரி அவரது போராட்டத்தளத்தின் முன் ஒன்றுதிரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் வழமைபோல் நடைபெறும் அம்பிகையின் ஆதரவு

                    மெய்நிகர் நிகழ்ச்சியிலும் அம்பிகையின் போராட்டம் வெற்றிப்பாதையை அடைந்துள்ளது எனவே போராட்டத்தை நிறைவு செய்யுங்கள் என்ற கோரிக்கைகளுமே வலுப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


                    அந்தவகையில் நேற்று பி.ப. 3 மணிக்கு ஆரம்பமான மெய்நிகர் நிகழ்வில்  Earling ஸ்ரீ கனக துர்க்கையம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜை ஒளிபரப்பப்பட்டதுடன் Enfield நாகபூசணி அம்மன் ஆலய குருக்கள் கமலநாதன் அமெரிக்காவிலிருந்து அருட்தந்தை றொகான் டொமினிக் மற்றும் தமிழகத்திலிருந்து ஷாகுல் ஹமிதத்தின் புதல்வி பாத்திமா பஹானா ஆகியோரின் ஆசியுரைகள் இடம்பெற்றன. 


                    தொடர்ந்து பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாம் டெரி அவர்களின் ஆதரவு அறிகை தொடர்பான கண்ணோட்டமும் தாயகத்திலிருந்து தமிழர் மரபுரிமை பேரவையின் தலைவர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்,  அனைத்துலக மக்களவை சார்பில் திரு. கோபாலபிள்ளை ஜெயசங்கர், ஜேர்மனிலிருந்து வழக்கறிஞர் மாற்றி தேவதாஸ், திருமதி வாசுகி

                    சுதாகர்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – மகளிரணிப் பொறுப்பாளர், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர், தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் தலைவர் திரு. சென் கந்தையா ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெற்றன. 


                    அத்துடன் ஈழ பாரதி எனும் ஈழக்கவிஞர் யூட் நிக்சன் எட்வேட்டின் கவிதையும் சிறப்புப் பாடல்களும்இ கனடாவிலிருந்து சிறப்பு நடனம் இடம்பெற்றிருந்தன 
                    17 ஆவதும் இறுதி நாளுமாகிய இன்றைய மெய்நிகர் நிகழ்வு வழமை போல் பிரித்தானிய நேரம்

                    மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் நீங்களும் இணைந்து அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க பின்வரும் இணைப்பில் இணைந்துகொள்ளலாம். https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09

                    Posted in இலங்கை செய்திகள்

                    சிறிலங்காவில் ஓர் ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டதேயன்றி, தமிழர்களின் நீதிக்கானதல்ல உருத்திரகுமாரன் !

                    சிறிலங்காவில் ஓர் ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டதேயன்றி, தமிழர்களின் நீதிக்கானதல்ல தீர்மான வரைவு : பிரதமர் விஉருத்திரகுமாரன் !

                    சிறிலங்காவில் ஓர் ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டே பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகளால், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், இது தமிழர்களது நீதிக்கானதல்ல எனவ அவர் தெரிவித்துள்ளார்.

                    தீர்மான வரைவின் 9வது சரத்தினை சுட்டிக்காட்டி (Calls upon the Government of Sri Lanka to ensure the prompt, thorough and impartial investigation and, if warranted, prosecution of all allegations of gross human rights violations and serious violations of international humanitarian law, including for long- standing emblematic cases ) , ,இது நீதிவிசாரணையும் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையினை சிறிலங்காவிடமே கையளிப்பதாக அமைகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

                    2014ம் ஆண்டு தீர்மானம் வழங்கிய ஆணைக்கமைய, ஐ.நா ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகள், சாட்சியங்கள், ஆதாரத் திரட்டல்கள் ஊடாக அமைந்த OISL அறிக்கை, பின்னராக முன்வைக்கப்பட்ட கலப்பு நீதிமன்றம் யாவற்றையும் கடந்து, புதிய தீர்மான வரைவானது நிலைமைகளை மேலும் பின்னோக்கி கொண்டு செல்வதாக அமைந்துள்ளதெனவும் அவர் தெரவித்துள்ளார்.

                    ஏற்கனவே ஐ.நாவின் நிறையவே ஆதாரங்கள், சாட்சிகள் உள்ள நிலையில், புதிதாக சாட்சியங்கள், ஆதாரங்களை திரட்டுவதற்கான பொறிமுறையினை மீளவும் ஐ.நா ஆணையாளர் அவலுவலகத்திடம் கொடுத்து காலத்தை இழுத்தடிக்கின்ற செயலாக இது தீர்மான வரை அமைவதோடு, நீதித்துறையினை நோக்கிய செயல்முறை தெளிவாக முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

                    2015ம் ஆண்டு தீர்மானத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை கோரியிருந்தது. ஆனால் இந்த தீர்மான வரைவானது , சர்வதேச நியமங்களின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீளாய்வு செய்யுங்கள் சிறிலங்கா அரசிடம் கோருகின்றது.

                    தமிழ் அமைப்புக்களால் முன்வைக்கப்பட்ட சிற்சில விடயங்கள் மேலோட்டமாக பூச்சுவேலைகள் போல் உள்ளடக்கப்பட்டுள்ளதன்றி, பாதிக்கப்பட்ட மக்களது அடிப்படைக் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளதாக தீர்மான வரைவு அமையவில்லை எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

                    ஜெனீவா, தொடர்பில் தமிழர்களின் நிலைப்பாடு என்ன என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இணையவழி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுப் போதே இக்கருத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.

                    https://youtu.be/Vijpxo_p3x8
                    Posted in இலங்கை செய்திகள்

                    மாணவிக்கு கொரனோ -பாடசாலைக்கு பூட்டு

                    மாணவிக்கு கொரனோ -பாடசாலைக்கு பூட்டு

                    இலங்கை கண்டி நோர்வுட் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் அந்த பாடசாலை அடித்து பூட்ட பட்டுள்ளது

                    மறு அறிவித்தல் வரை குறித்த பாடசாலை திறக்கப்பட மாட்டாது என தெரிவிக்க பட்டுள்ளது
                    தற்போது கிருமி நாசினிகளைக் கொண்டு கழுவும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது

                    Posted in இலங்கை செய்திகள்

                    மரண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய இருவர் மரணம்

                    மரண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய இருவர் மரணம்

                    மதவாச்சி பிரதான வீதி ஊடாக ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த இருவர் வண்டியின் வேக கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி சிதறியதில் அதனை செலுத்தி சென்றவர் சம்பவ

                    இடத்தில பலியானார் ,மற்றவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலியாகியுள்ளார்

                    இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது

                    Posted in இலங்கை செய்திகள்

                    பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான சட்டப்போராட்டம் குறித்து டெய்லி மெயில் செய்தி

                    பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான சட்டப்போராட்டம் குறித்து டெய்லி மெயில் செய்தி

                    பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வரும் சட்டப் போராட்டம் குறித்து,

                    செய்திக்குறிப்பொன்றினை வெளியிட்டுள்ள டெய்லி மெயில் பத்திரிகை, தடையினை மீளாய்வு செய்யுமாறு உள்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு விசேட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது தெரிவித்துள்ளது.

                    2000ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

                    மேலும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

                    இலங்கையில் 1978 இல் உருவாகிய இந்த பிரிவினைவாத அமைப்பு தற்கொலை அங்கியை உருவாக்கியது என சர்வதேச அளவில் கருதப்படுகின்றது.

                    தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இந்த அமைப்பை 2001 இல் பிரிட்டன் தடை செய்தது.

                    எனினும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இந்த அமைப்பு தடைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது.

                    விடுதலைப்புலிகள் தற்போது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

                    எனினும் பிரிட்டனில் பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்துவரும் கூட்டு பயங்கரவாத ஆய்வு நிலையம் விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தினை இன்னமும் கைவிடவில்லை என்பதால் தடை தொடரவேண்டும் என தெரிவித்துள்ளது.

                    விடுதலைப்புலிகளிற்கு எதிரான தடையை நீடிப்பதற்கான காரணங்களில் குறைபாடுகள் உள்ளதால் உள்துறை அமைச்சர் தடை குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

                    தடையை நீக்குவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

                    நாங்கள் சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் அதுவரை விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகவே விளங்கும் எனவும் டெய்லி மெயில் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.