பாலியல் துஸ்பிரயோகம் 3பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பாலியல் துஸ்பிரயோகம் 3பேர் கைது

பாலியல் துஸ்பிரயோகம் 3பேர் கைது

பாலியல் துஸ்பிரயோகம் 3பேர் கைது ,மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், காத்தான்குடி, ஆகிய பொலிஸ் பிரிவுகளில் கடந்த இரு வாரங்களில் பாடசாலை சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம்

தொடர்பாக ஆசிரியர் ஒருவரையும், இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், 4 வயது சிறுவனை சித்திரவதை செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு எதிராக முறைபாடு செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாவட்டதிலுள்ள பிரதேச பாடசாலை ஒன்றில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய மாணவியை கடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலயம் ஒன்றில் தரிசனத்தில்

ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறுமியை அதே பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் 44 வயதுடைய ஆசிரியர் சிறுமியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து மட்டுநகர் பகுதிக்கு பிராயாணித்துள்ளார்

இதனை கண்டுகொண்ட இளைஞர்கள் அவர்களை பின் தொடர்ந்து வந்து நகர்பகுதியில் வைத்து பிடித்து நைப்புடைப்பு செய்த நிலையில் அவர் அந்த அங்கிருந்து

சிறுமியுடன் தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த ஆசிரியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்தனர்.

இதனையடுத்து குறித்த ஆசிரியரை கவியாழக்கிழமை (15)) திகதி ஏறாவூர் பொலிஸார் கைது ஏறாவூர் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலைப்படுத்தினர். அவரை 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அதேவேளை, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமியை 19 வயதுடை இளைஞன் காதலித்து வந்துள்ளார். அச்சிறுமியை கூட்டிச் சென்று ஆயித்தியமலை பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து மறைத்து வைத்திருந்த நிலையில் அவரை கைது செய்து நீதின்றில் ஆஜராக்கிய நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவ்வாறே கஞவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 15 சிறுமியை காதலித்து வந்த 19 வயது இளைஞன் ஒருவர் குறித்த சிறுமியின் வீட்டிற்கு இரவில் மோட்டார் சைக்கிளில் சென்று அதனை மறைவிடம் ஒன்றில் மறைத்து வைத்துவிட்டு மதிலால் ஏறி வீட்டிற்கு சென்று

சிறுமியுடன் காதலில் ஈடுபட்டுபிட்டு திரும்பி வந்து சென்றுவரும் நிலையில் அதனை அவதானித்த இனம் தெரியாதோர் அவர் வழமைபோல மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு காதலியிடம் மதிலால் சென்ற திரும்பிவரும் போது மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கியுள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை தொடர்பான விசாணையில் குறித்த இளைஞன் காதலியான 15 வயது சிறுமியின் வீட்டிற்கு இரவில் களவாக சென்றுவருவதாக அறிந்ததையடுத்து 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர்.

இந்நிலையில், ஆங்கில மொழி மூலமான தனியார் பாடசாலை ஒன்றில் ஆரம்ப பிரிவில் ல்வி கற்றுவரும் 4 வயது சிறுவன் ஒருவன் வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக பாடசாலைக்கு செல்லமுடியாத மருத்துவ விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார்.

இதன் பின்னர் கடந்த வாரம் பாடசாலைக்கு சென்ற நிலையில் அந்த மாணவனுக்கு அங்கு கற்பித்துவரும் ஆசிரியர் ஒருவர் குறித்த நேர பகுதியில் அந்த தவனைக்கான பாடதிட்டத்தை முடிக்கவேண்டும் என தெரிவித்து மாணவனை குறித்த சில நேரத்தில் அந்த பாடங்களை எழுதவைத்துள்ளார்

மாணவன் கை நோகின்றது என தெரிவித்த போதும் அவனை வற்புறுத்திய நிலையில் இருகைகளும் வேதனைக்கு மத்தியில் அதனை எழுதி வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த

கொடூரமான செயலை தெரிவித்ததையடுத்து அந்த ஆசிரியருக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் 15 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த 33 வயது அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

வவுனியாவில் 15 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த 33 வயது அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

பதினைந்து வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் மாவட்ட சமுக பொலிஸ் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்படும் நபர், குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை நிகழ்வுகளில் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

வவுனியாவில் 15 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த 33 வயது அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

குறித்த நபர் வவுனியா நகரையண்டிய பாடசாலையில் கல்வி கற்கும் குருமன்காடு பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவனை வவுனியா, குடியிருப்பு பகுதியில் வைத்து துஸ்பிரயோகம் செய்ததாக பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, ஈச்சங்குளம் பகுதிளையச் சேர்ந்த 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மாணவிகள் துஸ்பிரயோகம் ஒருவர் கைது

யாழில் மாணவிகள் துஸ்பிரயோகம் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் , புதன்கிழமை (12) , தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றினை நடாத்தி இருந்தனர்.

குறிப்பிட்ட கருத்தரங்கின் போது , 13 வயதான மாணவிகள் இருவர் இலவச வகுப்புக்களை நடாத்தி வந்த நபர் ஒருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்ததை அடுத்து குறித்த சந்​தேக நபரை பொலிஸார் கைது செய்யதுள்ளனர்