Tag: விபத்தில் இரு இளைஞர்கள்
Posted in இலங்கை செய்திகள்
விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்
Author: நிருபர் காவலன் Published Date: 30/08/2023
விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்
மட்டக்களப்பு – வாகரை பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வாகரை பகுதிக்குச் சென்று மீண்டும் ஊர் திரும்பிச் சென்ற போது மட்டக்களப்பு – திருகோணமலை வீதி உசன ஏற்றம் எனும் பகுதியில் படி ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகினர்.
விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்
இவ் விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விபத்துச் தொடர்பில் விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது
- பனதுராவில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைதுby நிருபர் காவலன்
- சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் 164 வெளிநாட்டினரை இந்தியா மீட்டதுby நிருபர் காவலன்
- ஏழு மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு போராட்டம்by நிருபர் காவலன்
- தென் கொரியாவின் ஹ்வாசொங்கில் லாரி விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் பலிby நிருபர் காவலன்













