வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை ,இலங்கையில் வாகனச் சாரதிகள் மூன்று ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டுமென, இலங்கை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

வாகனங்களை ஓட்டிச் செல்கின்ற ,வாகன சாரதிகள் தம்முடன் அல்லது வாகனத்துடன் ,வாகன காப்புறுதி , சாரதி அனுமதிப்பத்திரம் என்பன கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர் .

கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பு

இந்த முக்கியமான குறிப்புகள் அடிப்படையில் இவற்றை எடுத்துச் செல்லாதவர்கள், கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வாகன காப்பீடு சான்றிதழ் வாகனத் தகுதிகளை, சான்றிதழ் தேவை என்பனவே இவை அடங்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி ஆவணங்கள் இல்லாது வாகனங்களை செலுத்தி செல்கின்ற சாரதிகள், போலீசாரினால் கைது செய்யப்பட்டு, அவர்கள் விளக்கமுடியில் வைக்கப்படக்கூடிய ஆபத்து காணப்படுகிறது.

இலங்கை தமிழ் மக்களே

எனவே இலங்கை தமிழ் மக்களே உங்களது வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் மேலே கூறப்பட்ட விடயங்களை ,உடனடியாகவே எடுத்துச் செல்லுங்கள் .

அவ்வாறு எடுத்துச் செல்ல தவறுகின்ற பட்சத்தில் நீங்கள் தண்டம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் .

குற்றத்தண்டம் செலுத்தப்பட்டு சிறையில் வாடக்கூடிய அவலமும் காணப்படுகிறது .

ஆதலால் வண்டிகளை செலுத்தி செல்கின்ற பொழுது ,மேற்படி ஆவணங்களை எடுத்துச் செல்ல தவற கூடாது என்று விடையத்தின் மூலம் , இலங்கை மக்களுக்கு இலங்கை போலீசார் எச்சரிக்கை கொடுத்திருக்கின்றனர்.

வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு

வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு

வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு ,யாழ்ப்பாணத்தில் வாள்கள் மீட்பு.

யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து வீடு ஒன்று சுற்றி வளைக்கக்கப்பட்டது .

இதன் பொழுது சுன்னாகம் ஈவினை பகுதியில் வெளிநாட்டு பிரையை ஒருவருக்கு சொந்தமான வீடு ஒன்றை திடீரென சுற்றிவளைத்தனார் .

அதன்பொழுது அங்கிருந்து வாள்கள் கத்திகள் கோடரிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வாள்கள் கூறிய ஆயுதங்கள் மீட்பு

வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கை வந்திருந்த நபரது வீட்டிலேயே இந்த வாள்கள் கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ள, செயல் பர பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

யாழ்ப்பகுதியில் இடம்பெற்ற பல்வேறுபட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற வகையில், தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இங்கு பல வாள்கள் மீட்கப்பட்டதை அடுத்து ,தற்போது சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் .

ஆவா குழு

யாழ்ப்பாணத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஆவா குழு உள்ளிட்ட பல வாள்வெட்டு குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு ,வாள்வெட்டு சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன .

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இந்த நபருடைய வீடு, எவ்வாறு இவர்களுக்கு கிடைக்கப்பெற்றது .

யார் அந்த நபர் எனவும் விசாரணை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

விரைவில் வெளிநாட்டில் உள்ள இந்த வீட்டினுடைய உரிமையாளர்கள் ,மற்றும் அவர்களது தொடர்பு பட்டவர்கள், கைது செய்யப்பட கூடும் என்கின்ற விடயங்கள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது
Posted in இலங்கை செய்திகள்

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது ,இலங்கை இரத்தினபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் தங்கப் புதையல்களை தேடி ஐவர் கைது .

தங்க புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐவரை கைது செய்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

கிளிநொச்சி இரத்தினபுரம் அன்பு முகாம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதையல் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ளது .

ஐந்து பேர் கைது

அந்த தகவலை அடுத்து அதனை தோண்டி எடுப்பதற்காக ,அங்கு அகழ்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் போலீஸ் அதிகாரி ,ஆசிரியர் உள்ளிட்ட ஐவர் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு இலத்திரனியல் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சமீப காலமாக தமிழிழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் ,அவர்களது தங்கம் பணம் மற்றும் இதர பொருட்களை மீட்பதற்காக இவ்வாறு புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிங்கள போலீஸ் அதிகாரிகள் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .

விடுதலை புலிகள்

தமிழீழ விடுதலை புலிகள் அந்த தாய் மண்ணில் முற்றாக அழிக்கப்பட்டு, 14 வருடங்கள் கழிவுற்ற நிலையிலும் தமிழிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கம் பணம் என்பதுவற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் சிங்கள பெரும்பான்மை வாதிகள் ஈடுபட்டு வருகின்றநர் .

இவ்வாறான தங்க புதையல் தேடும் செயல் தொடர்கிறது .

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பல தங்கங்கள் ,ஆயுதங்கள் என்பனவவற்றை மீட்ட மாற்று குழுக்களும் ,அவற்றை வைத்து கோடீஸ்வரராக இலங்கையில் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்தாயிரம் ரூபா உதவி தொகை
Posted in இலங்கை செய்திகள்

பத்தாயிரம் ரூபா உதவி தொகை

பத்தாயிரம் ரூபா உதவி தொகை

பத்தாயிரம் ரூபா உதவி தொகை ,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்க படுகிறது .

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வந்த சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ள விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக ஆளும் அரசு தெரிவித்துள்ளது .

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட அரச அதிகாரிகள் அந்த வீடுகளை சுத்தம் செய்வதற்காக முதற்கட்டமாக 10,000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆண்டுதோறும் இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்ற மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர் .

அதிகம் மழை வீழ்ச்சி

அதிகம் மழை வீழ்ச்சி காரணமாக குளங்கள் நிரம்பி வழிந்ததால் வான் உடைத்து வெள்ளம் பாய்ந்ததில்,தாழ் நில பகுதியில் உள்ள பல ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டன .

இந்த வெள்ளத்தினால் லட்சக்கணக்கான மக்களும் பாதிக்கப்பட்டனர் .

அதனை எடுத்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் திருத்தம் செய்வதற்கும் அதனை சுத்தம் செய்வதற்குமாக இலங்கை ஆளும் அரசினால் தற்பொழுது இந்த 10,000 ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் மக்களை குஷி படுத்த ,தற்பொழுது இவ்விதம் அரசு பத்தாயிரம் ரூபாய் நிதிகளை வழங்கிவருகிறது .

அந்த மக்களை குசி படுத்தி அவர்களது வாக்கு வங்கிகளை சுருட்டிக்கொள்ளவே , இவ்வாறு நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துக்கொண்டனர்.

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி
Posted in இலங்கை செய்திகள்

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி , குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைவு .

என்டேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில், தந்தை மகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த ரயில் கடவையை காரொண்டு கடக்க முற்பட்ட பொழுது வேகமாக வந்த ரயிலில் மோதுண்டு அதில் பயணித்த தந்தையும் மகளும் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய கார் பலத்தை சேதங்களுக்கு உள்ளார நிலையில் தற்போது காணப்படுகின்றது .

ஆபத்தான ரயில் கடவை

ஆபத்தான ரயில் கடவையில் ரயில் வருவதை அவதானிக்காது, கார் கடந்து செல்ல முற்பட்ட பொழுதே ,அந்த ரயிலில் மோதி தந்தையும் மகளும் பரிதாபகரமாக பலியாகி இருக்கின்றனர்.

அபாய கடவைகளுக்கு அருகில் பயணிக்கின்ற பொழுது, மக்கள் மிகவும் அவதானமாக செல்லுமாறு வேண்டுதல் விடுக்கப்பட்டு வருகின்ற பொழுதும் இவ்வாறான விபத்துக்கள் இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது.

பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவ மருத்துவ பரிசோதனை க்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற விபத்தில், தினமும் நால்வர் பலியாகி வருவதாகவும், 10க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருவதான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது .

பிக்கு தாக்கி நபரொருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

பிக்கு தாக்கி நபரொருவர் உயிரிழப்பு

பிக்கு தாக்கி நபரொருவர் உயிரிழப்பு

பிக்கு தாக்கி நபரொருவர் உயிரிழப்பு ,பிக்கு தாக்குதலில் ஒருவர் மரணம் .

இலங்கை கிரியுள்ள அயலந்தவா மாராவில் பிரதேசத்தில் வீடொன்றில் தங்கி இருந்தவரை பிக்கு தாக்கியதில் அவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

போதை குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிக்கு,

மது போதை குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிக்கு, விகாரையிலிருந்து தப்பிச் சென்று தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

அப்பொழுதே அங்கு இருந்த நபர் ஒருவரை, போதை தலைக்கேறிய நிலையில் அவரை அடித்து படுகொலை செய்துள்ளார் .

பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட நபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி தற்பொழுது பலியாகி இருக்கின்றார் .

கொலையை புரிந்த பிக்கு தற்பொழுது தலைமறைவு

இந்த படுகொலையை புரிந்த பிக்கு, தற்பொழுது தலைமறைவாகி உள்ளதை அடுத்து ,அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தும் , நடவடிக்கையில் குற்ற தடுப்பு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் சமீப காலங்களாக துறவிகள் என அழைக்கப்படும் பிக்குகளினால், மக்கள் ,மாணவர்கள், பெண்கள், என பலதரப்பட்டவரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்ற வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது .

இது புத்த பிக்குகள் மீதும், துறவிகள் மீதும் ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்ற செயலாகவே பார்க்கப்படுகின்றது .

ஒருவர் செய்கின்ற செயலினால் ,அனைத்து துறவிகளுக்கும், இழுக்கு ஏற்பட்டு வருவதாகவும் ,புத்த மகாசங்கத்தை சேர்ந்த, சார்பு நபர்கள் தெரிவித்தது வருகின்றனர்.

வனராஜா விபத்தில் மூவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

வனராஜா விபத்தில் மூவர் காயம்

வனராஜா விபத்தில் மூவர் காயம்

வனராஜா விபத்தில் மூவர் காயம் ஹட்டன்- வனராஜா கல்பள்ளி பகுதியில் கார் கவிழ்ந்ததில் மூன்றரை வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச்

சேர்ந்த மூவர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாமிமலை பகுதியில் மரண வீடொன்றுக்கு வந்த குழுவினர் கொழும்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, ​​கார் வீதியை விட்டு விலகி வனராஜா கல்பள்ளிய பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

கார் கவிழ்ந்ததில் மூன்றரை வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் டிக்கோயா- கிளங்கன் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

​​காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலை யில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Error: View 9293b2au4w may not exist
திடீரென பற்றி எரிந்த வாகனங்கள்
Posted in இலங்கை செய்திகள்

திடீரென பற்றி எரிந்த வாகனங்கள்

திடீரென பற்றி எரிந்த வாகனங்கள்

திடீரென பற்றி எரிந்த வாகனங்கள் நாவலப்பிட்டி – குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொலஸ்பாகை மீனகொல்ல பிரதேசத்தில் வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளன.

இதில் மோட்டார் சைக்கிள் மற்றும் வேனும் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீரென தீப் பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணை களை குறுந்துவத்த பொலிஸார் மற்றும் கைரேகை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

வட மாகாண அபிவிருத்தி நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வட மாகாண அபிவிருத்தி நடவடிக்கை

வட மாகாண அபிவிருத்தி நடவடிக்கை

வட மாகாண அபிவிருத்தி நடவடிக்கை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்காக அந்த

பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு

செய்யப்பட்டுள்ளதாகவும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

பின்னடைவைச் சந்தித்த பொருளாதாரம்

கடந்த காலத்தில் பின்னடைவைச் சந்தித்த பொருளாதாரம் தற்போது ஸ்திரமாகி வருவதாகவும், அதனூடாக மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மேம்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,

“இன்று மக்கள் ஓரளவுக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், எமது பகுதிகளில் குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் அரசாங்கத்தின் பாரிய வேலைத் திட்டங்கள் நடந்து வருகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வீழ்ச்சியடைந்திருந்த இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியுள்ளார்.

இதனால் பொருளாதார ரீதியில் நலிவடைந்த மக்களின் வாழ்வு சீராகி வருகிறது. அத்துடன், மக்களுக்கு காணி உரிமைகளையும் ஜனாதிபதி வழங்கி வருகிறார்.

20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் “ உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்திற்கு நேரடியாக வந்து, அந்த மக்களுக்கான முழு உரிமையுடைய காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 18000 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் சுமார் 10,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் சுமார் 12,000 பேருக்கும் காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன.

காணிகளை துரிதமாக வழங்கும்

காணிகளை துரிதமாக வழங்கும் பணிகளில் ஆளணிப் பற்றாக்குறை இருப்பதாக நாம் ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவிடம் கூறியிருந்தோம்.

அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

மேலும், கைவிடப்பட்டுள்ள குளங்கள், வாய்க்கால்கள் மற்றும் சேதமடைந்துள்ள வீதிகளைப் புனமைக்கும் பணிகளும் எமது அமைச்சின் ஊடாக நடைபெற்று வருகின்றது.

அதேபோன்று வாழ்வாதாரத்திற்கான ஆடுகள், தானியப் பயிர்ச்செய்கைக்கான விதைகள் போன்றவற்றை வழங்கும் வேலைத்திட்டமும் நடைபெற்று வருகின்றது.

வெளிநாட்டு நிதி உதவியுடன் கூடிய அபிவிருத்திப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

பொருளாதார நெருக்கடியின்போது இடைநடுவே கைவிடப்பட்ட சுமார் 15 கிலோமீற்றர் வீதியின் அபிவிருத்திப் பணியும் நடைபெற்று வருகிறது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற வகையில் வட மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தி வருகிறார்.

குறிப்பாக அங்கு உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான நிதிகளை ஒதுக்கி அனைவரையும் ஒன்றிணைத்து இப்பணிகளை ஜனாதிபதி முன்னெடுத்து வருகிறார்.

மேலும், யுத்த காலப்பகுதியில் அடர்ந்த காடுகளாக அன்றி, வனப்பகுதியாக அடையாளமிடப்பட்ட, மக்கள் வாழ்ந்து வந்த காணிகளின் விடுவிப்பு பணிகளும் தற்போது படிப்படியாக நடைபெற்று வருகின்றது.

தற்போது நாட்டின் பெரும் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை

சுற்றுலாத்துறையை மேம்படுத்தல்

வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேபோன்று எமது பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் குறித்தும் ஜனாதிபதியின் வடமகாண விஜயத்தின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக புத்தளம் இழவங்குளத்தின் ஊடாக செல்லும் மரிச்சுக்கட்டி – மன்னார் யாழ்ப்பாண வீதியை திறக்க வேண்டிய தேவையும் இருப்பதாக நாம்

ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கின்றோம்” என்று கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மேலும் தெரிவித்தார்.

ஏற்றுமதி தடைகளை நீக்க முன்மொழிவு
Posted in இலங்கை செய்திகள்

ஏற்றுமதி தடைகளை நீக்க முன்மொழிவு

ஏற்றுமதி தடைகளை நீக்க முன்மொழிவு

ஏற்றுமதி தடைகளை நீக்க முன்மொழிவு கள்ளு உள்ளிட்ட கித்துள், பனை மற்றும் தென்னை சார்ந்த தயாரிப்புகளை உள்ளூரில் உற்பத்தி செய்தல்

மற்றும் ஏற்றுமதி செய்தல் தொடர்பான தடைகளை நீக்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள்

பற்றிய குழுவினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

நீண்ட காலமாக கள்ளு உள்ளிட்ட கித்துள், பனை மற்றும் தென்னை சார்ந்த தயாரிப்புகளை உள்ளூரில் உற்பத்தி செய்தல், விநியோகித்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் என்பவற்றுக்கு சிக்கல்கள் காணப்படுவதாகவும், இதனை

பாரியளவு வருமானம்

நிவர்த்தி செய்வதன் மூலம் பாரியளவு வருமானத்தை அரசுக்குப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட

அமைச்சினால் இதற்கு முன்னர் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கமைய, இது தொடர்பில் காணப்படும் சிக்கல்கள் பற்றி கலந்துரையாடி அவற்றைத் தீர்ப்பதற்கு மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம்

உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குழுவினால் அழைக்கப்பட்டிருந்தது. இதன்போது இந்த திணைக்களங்களுடன் கலந்துரையாடி இது தொடர்பில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.


தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய குழு அதன் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் அண்மையில் (04) கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

வட மாகாணத்தில் தயாரிக்கப்படும் பனங்கள்

அத்துடன், வட மாகாணத்தில் தயாரிக்கப்படும் பனங்கள்ளை மொத்தமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விநியோகிப்பதற்குக் காணப்படும் தடைகளை நீக்குவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஏற்றுமதியாளர்களுக்கு வசதியாகவும் முறையாகவும் கித்துள், பனை மற்றும் தென்னை சார்ந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான

பொறிமுறை ஒன்றை தயாரிக்குமாறும் குழுவினால் ஆலோசனை வழங்கப்பட்டது.

கித்துள், பனை மற்றும் தென்னை சார்ந்த தயாரிப்புகளுக்கு வெளிநாட்டில் பாரிய சந்தை வாய்ப்புக்கள் காணப்படுவதாக குழு சுட்டிக்காட்டியது.

அதனால் இந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் எதிர்காலத்தில் பாரியளவு வருமானம் அரசாங்கத்துக்கு வரும் என குழு சுட்டிக்காட்டியது.

அத்துடன், கித்துள், பனை மற்றும் தென்னை சார்ந்த தயாரிப்புகள் தொடர்பான அனைத்து முன்மொழிவுகளும் அடங்கிய அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அஷோக் அபேசிங்க, ஹர்ஷண ராஜகருணா ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன்,

கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம், பனை அபிவிருத்தி சபை, கித்துள்

அபிவிருத்தி சபை, தென்னை அபிவிருத்தி சபை, தென்னைப் பயிர்ச்செய்கை சபை மற்றும் தென்னை ஆராய்ச்சி நிலையம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் புதிய நம்பிக்கை
Posted in இலங்கை செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் புதிய நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் புதிய நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் புதிய நம்பிக்கை கடன் மறுசீரமைப்பில் இலங்கை போதியளவு வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மதிப்பிடுவதாக அதன் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி நிரலுக்கு அமைாக, வெளி வணிகக் கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தங்கள் விரைவில் எட்டப்படும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜூலி கோசாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்த பெண் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வந்த பெண் படுகொலை

இலங்கை வந்த பெண் படுகொலை

இலங்கை வந்த பெண் படுகொலை வெளி நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று (06) இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலஸ்ஸ பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் கூரிய ஆயுதத்தினால் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுகொலை தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சீரற்ற வானிலையால் 5587 வீடுகள் சேதம்
Posted in இலங்கை செய்திகள்

சீரற்ற வானிலையால் 5587 வீடுகள் சேதம்

சீரற்ற வானிலையால் 5587 வீடுகள் சேதம்

மோசமான வானிலை காரணமாக 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளன.

56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 32 ஆக அதிகரித்துள்ளது.

ஒருவரைக் காணவில்லை

அத்துடன், ஒருவரைக் காணவில்லை எனவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,973 பாதுகாப்பான மையங்களில் 7,639 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 63,413 குடும்பங்களைச் சேர்ந்த 239,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச பேரூந்து மோதி விபத்து
Posted in இலங்கை செய்திகள்

அரச பேரூந்து மோதி விபத்து

அரச பேரூந்து மோதி விபத்து

அரச பேரூந்து மோதி விபத்து கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் முன்னால் சென்ற தனியார் பேரூந்தை பின்னால் வந்த அரச பேரூந்து மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இன்று (06) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து யாழ்.

நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேரூந்து தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த போது பின்னால் பயணித்த அரச பேரூந்து மோதியுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து யாழ். நோக்கி அரச பேரூந்தும் தனியார் பேரூந்தும் ஒரு சில நிமிட வித்தியாசத்தில் பயணிப்பதால்,

இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்படுவதாகவும், இதனால் வீதியில் போட்டியிட்டு செல்வதாகவும் பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.

குறித்த போட்டியின் காரணமாகவே திட்டமிட்டு பின்னால் வந்து தனியார் பேரூந்தை அரச பேரூந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் புதிய மின்சார சட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் புதிய மின்சார சட்டம்

அரசாங்கத்தின் புதிய மின்சார சட்டம்

அரசாங்கத்தின் புதிய மின்சார சட்டம் ,மின்சாரத் துறைக்கு புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான திருத்தச் சட்டமூலமொன்று 2002 இல் சமர்ப்பிக்கப்பட்டபோது தற்போதைய அரசாங்கத்தின் சில தரப்பினர் அதை எதிர்த்தனர்.

2002 இல் கொண்டு வரப்பட்ட சட்டத்துடன் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டத்தை, இரண்டு சட்டங்களையும் ஒப்பிடும் போது, பொறுப்புக்கூறல் மற்றும்

வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் 2002 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் காணப்படுகின்ற விடயங்கள் சிறந்து விளங்குகின்றன. நாடும் மக்களும் வங்குரோத்து

நிலையில் உள்ள வேளையில், வீழ்ச்சி கண்டுள்ள நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டமூலமொன்று முறையற்ற முறையிலும், முறைசாரா

முறையிலும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையை வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இலங்கை மின்சார சட்டம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த புதிய சட்டம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த சாதகமான திருத்தங்களை நடைமுறைப்படுத்துங்கள்.

இதன் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தலாம். இவை ஏற்படுத்தப்படும் பட்சத்தில் இதற்கு ஆதரவை வெளிப்படுத்த முடியும்.

ஆனால் இதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சட்டமூலத்தில் கட்டமைப்பு ரீதியான பலவீனம் காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும், இச்சட்டத்தின் மூலம் இந்தத் துறை தீவிரமாக அரசியல்மயமாக்கப்பட்டு, அமைச்சர் கூடிய அதிகாரங்களைப் பெற்று, தடைகள் மற்றும் சமன்பாடுகள் இல்லாது போகிறது.

பனிப்பாளர் சபையை நியமித்துக் கொள்ளும் அதிகாரம் கூட அமைச்சருக்கு செல்கிறது. இதையெல்லாம் அமைச்சரால் கட்டுப்படுத்தவும் முடியும்.

எனவே, இந்த சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த சட்டத்தின் மூலம், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை பலவீனப்படுத்தியுள்ளனர்.

கட்டுப்பாட்டாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, கட்டுப்பாட்டாளர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, அமைச்சருக்கு கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இங்கு தொடராக மின்சாரம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படவில்லை.

இது பாரபட்சமான செயல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சட்டத்தின் மூலம் மின்சார சபையின் சொத்துக்களை மதிப்பிடும் முறை இங்கு குறிப்பிடப்படவில்லை. இலங்கை மின்சார சபை ஒரு டிரில்லியனுக்கும் அதிகமான வளங்களைக் கொண்டுள்ளது.

இந்த பங்குகளுக்கு என்ன நடக்கும் என்பது இங்கு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இங்கு அச்சம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

அமைச்சர் விரும்பியவாறு அரச வளங்களை விற்கும் போக்கு ஏற்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எனவே, கொள்முதல் முறை, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை கண்டிப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்நாட்டில் 220 இலட்சம் மக்கள் மீது அதிக மின் கட்டணத்தை சுமத்தி நடந்து வரும் இந்த சுரண்டல்களை நிறுத்த வேண்டும்.

இதில் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கும் முற்போக்கான திருத்தங்களும் உள்ளடக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மாணவிகளுக்கு இலவச செனிட்டரி நப்கின்
Posted in இலங்கை செய்திகள்

மாணவிகளுக்கு இலவச செனிட்டரி நப்கின்

மாணவிகளுக்கு இலவச செனிட்டரி நப்கின்

மாணவிகளுக்கு இலவச செனிட்டரி நப்கின் பாடசாலை மாணவிகளுக்கு செனிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்கும்

ஆரம்ப நிகழ்ச்சி இன்று (06) நாவல ஜனாதிபதி பெண்கள் கல்லூரியில் இடம்பெற்றது.

பாடசாலைகளில் கற்றல் – கற்பித்தல் செயல்முறையை வெற்றிகரமாகப் பேணுவதற்கு இன்றியமையாத காரணியான மாணவர்களின் ஆளுமை

வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு உதவும் வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் கல்வி அமைச்சு இந்த சுகாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இது மாணவிகளின் பாடசாலை வருகையை ஊக்குவிக்கவும் மாதவிடாயின் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சுகாதார அறியாமை

காரணமாக கல்வியில் சரியான கவனம் இல்லாதது போன்ற பாதகமான சூழ்நிலைகளைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் மொத்த மாணவர்

இலங்கையின் மொத்த மாணவர் சனத்தொகையில் வயது வந்த மாணவிகளின் மொத்த எண்ணிக்கையில் தோட்டப் பாடசாலை தொகுதிக்கு சொந்தமான 07

தேசிய பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாண பாடசாலைகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் 06 மாதங்களுக்கு செனிட்டரி

நப்கின்களை கொள்வனவு செய்வதற்கான இலவச வவுச்சர்களை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஒரு மாணவிக்கு ரூ. 1,200 பெறுமதியான வவுச்சர் வழங்கப்படவுள்ளதுடன், பாடசாலைகள் ஊடாக மாணவிகளுக்கு வவுச்சரை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளது.

இந்த வவுச்சரைப் பயன்படுத்தி, செனிட்டரி நப்கின்களை கல்வி அமைச்சால் பதிவு செய்யப்பட்ட வர்த்தக நிலையத்தில் இருந்து கொள்வனவு செய்யலாம்.

செனிட்டரி நப்கின் கொள்வனவு

சுகாதாரமானவை என இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட செனிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்வது மாணவிகளின் பொறுப்பாகும்.

மாணவிகளுக்கு வழங்கப்படும் அந்தந்த வவுச்சர் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.

இது ரூ. இது 600.00 மதிப்புள்ள ‘A’ மற்றும் ‘B’ ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளதுடன் ‘A’ பகுதியை முதலில் பயன்படுத்த வேண்டும் என்பதுடன் அதன் செல்லுபடியாகும் காலம் 10.06.2024 – 10.07.2024 வரை ஆகும்.

மற்றைய பகுதியான ‘B’ 01.09.2024 – 30.09.2024 இடைப்பட்ட காலம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த காலப்பகுதிக்குள் செனிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.

9 வயது சிறுவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்
Posted in இலங்கை செய்திகள்

9 வயது சிறுவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்

9 வயது சிறுவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்

9 வயது சிறுவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன் ,14 வயது சிறுவன் ஒருவர் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த 9 வயது சிறுவன் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சம்பவத்தின் பின்னர் 14 வயது சிறுவனும் விஷம் குடித்ததால் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஹம்பாந்தோட்டை – அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (05) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அயல் வீடுகளில் வசிக்கும் 2 சிறுவர்களும் நண்பர்களாவர்.

9 வயதுடைய சிறுவனின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

9 வயதுடைய சிறுவனின் உடலில் 6 அல்லது 7 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 வயது சிறுவன் வீடியோ கேம்களுக்கு கடுமையாக அடிமையாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 வயதுடைய சிறுவனின்ன வீட்டில் பணம் திருடப்பட்டமை தொடர்பில் 14 வயது சிறுவனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் பதவி ஏற்புவிழாவில் ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

மோடியின் பதவி ஏற்புவிழாவில் ஜனாதிபதி

மோடியின் பதவி ஏற்புவிழாவில் ஜனாதிபதி

மோடியின் பதவி ஏற்புவிழாவில் ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.

நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (05) பிற்பகல், நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தனது பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தின்

இதேவேளை, தற்போதைய இந்திய அரசாங்கத்தின் கடைசி அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ரஷ்தபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக சனிக்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவும் பங்கேற்க உள்ளார்

15 வயது மாணவன் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

15 வயது மாணவன் உயிரிழப்பு

15 வயது மாணவன் உயிரிழப்பு

15 வயது மாணவன் உயிரிழப்பு ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிக்குளம பகுதியில் நேற்று மாலை (05) பாடசாலை மாணவர் ஒருவர், மற்றுமொரு பாடசாலை மாணவரை தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளாகி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த

மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹம்பாந்தோட்டை, பெத்தேவெல பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை நகரிலுள்ள பாடசாலை

ஹம்பாந்தோட்டை நகரிலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் இவர், நேற்று மேலதிக வகுப்பில் கலந்துகொள்வதற்காக சிப்பிக்குளம பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது ஹம்பாந்தோட்டையில் உள்ள மற்றுமொரு பாடசாலை யைச் சேர்ந்த மாணவர் ஒருவர் குறித்த மேலதிக வகுப்புக்கு அருகில் சென்று 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனை தாக்கியுள்ளார்.

இரு மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே மோதலுக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மாணவனின் மரணம் தொடர்பில் 17 வயதுடைய பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்
Posted in இலங்கை செய்திகள்

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கள் குழு கூட்டத்தின் பின்னர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக்க ராஜபக்ஷ ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான முரண்பாடு தொடர்பில்

அங்கிருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய கோட்டை பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற விரும்புவதாக நேற்று (05) பிற்பகல் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,

பாராளுமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்

மஹிந்தானந்த அளுத்கம, தனது தந்தையை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்சவின் மகன் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற

குணதிலக்க ராஜபக்ஷ

உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாக்குமூலத்தின் பின்னர் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.