எம் பிக்களுக்கான செயலமர்வு நாளை
Posted in இலங்கை செய்திகள்

எம் பிக்களுக்கான செயலமர்வு நாளை

எம் பிக்களுக்கான செயலமர்வு நாளை

எம் பிக்களுக்கான செயலமர்வு நாளை பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு 2024 நவம்பர் மாதம் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01ல் நடத்தப்படவுள்ளது.

அதற்கான முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ளது.

புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பத்தில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாக இந்த திசைமுகப்படுத்தல் செயலமர்வு இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று 25 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப. 9.30 மணிக்கு ஆரம்பமாகிய இந்த செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி

அமரசூரிய, சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல, பிரதி சபாநாயகர் கௌரவ வைத்தியகலாநிதி மொஹமட் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித்

தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர, சபை முதல்வர் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ

வைத்தியகலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம் மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த மூன்று நாள் செயலமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம், பாராளுமன்ற சிறப்புரிமைகள், பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயற்பாடுகள், பாராளுமன்ற குழு முறைமை, பாராளுமன்ற நிலையியற்

கட்டளைகள், அரசியலமைப்பின் ஏற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலத்திரனியல் வாக்களிப்பு முறை குறித்த நடைமுறை அமர்வொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், ஊழலுக்கு எதிரான சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான

ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் பாராளுமன்ற விவகாரப் பிரிவின் பங்கு குறித்தும் இங்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.

மேலும், பாராளுமன்றத்தின் திணைக்களங்கள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், அந்தந்தப் பிரிவுகளின் மூலம் பாராளுமன்றச் செயற்பாடுகளில் உறுப்பினர்களின் பங்களிப்புகள் மற்றும் பணிகள் குறித்து உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

பாபா வங்காவின் 2025ஆம் ஆண்டுக்கான கணிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாபா வங்காவின் 2025ஆம் ஆண்டுக்கான கணிப்பு

பாபா வங்காவின் 2025ஆம் ஆண்டுக்கான கணிப்பு

பாபா வங்காவின் 2025ஆம் ஆண்டுக்கான கணிப்பு ,பாபா வங்காவின் எந்த ஒரு கணிப்பும் இதுவரை தவறாகவில்லை. பாபா வங்கா பல்கேரியாவைச் சேர்ந்த பார்வையற்ற நபர் அடுத்தடுத்து பல கணிப்புகளைச் சரியாகக் கூறியுள்ளார்.

9/11 தாக்குதல் முதல் டயானாவின் மரணம் வரை, கொரோனா வைரஸ் தொற்று பரவல் வரை அனைத்தையும் கணித்தார். 2025 ஆம் ஆண்டில் எந்த ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதையும் பாபா வங்கா கணித்துள்ளார்.

அவற்றை இங்கே காணலாம். பாபா வங்காவின் கணிப்பின்படி,

  1. மேஷ ராசி

2025 ஆம் ஆண்டு இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு மைல்கல் ஆண்டாகும். இந்த ஆண்டு அவர்களின் அதிர்ஷ்டம் திரும்பும். நிதி வாய்ப்புகளும் வெற்றியும் கிடைக்கும். சிறந்தவராக இருப்பதற்கான அற்புதமான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும். பாபா வங்காவின் கூற்றுப்படி, இந்த ராசி அண்டத்தின் ஆசீர்வாதத்தைப் பெறும்.

  1. கும்ப ராசி

2025 ஆம் ஆண்டு இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு முக்கியமான ஆண்டாகும். சனியின் செல்வாக்கால் அவர்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். துணிச்சலான திட்டங்களை நிறைவேற்றுவார்கள். இந்த ஆண்டு அவர்கள் புதிய உயரங்களை அடைவார்கள்.

  1. ரிஷப ராசி

2025 ஆம் ஆண்டு இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நிலைத்தன்மையின் ஆண்டாக இருக்கும். அவர்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். முதலீடு செய்வதற்கான சரியான வாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைக்கும். இந்த ஆண்டு

  1. கடக ராசி

புத்தாண்டு இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். அவர்கள் வெற்றி பெறுவார்கள். சரியான முடிவுகள் மற்றும் கூர்மையான புத்தியின் காரணமாக பல சவால்களை சமாளிக்க முடியும். நிதி ரீதியாக நிலையானவர்களாக இருப்பார்கள்.

  1. மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு சிறப்பாக இருக்கும். எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். வணிகத்தில் பொன்னான வாய்ப்புகள் திறக்கும். பாபா வங்காவின் கணிப்பின்படி, இந்த ராசிக்காரர்கள் தங்கள்

நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2025 ஆம் ஆண்டு அவர்களின் வாழ்க்கையில் சிறந்த ஆண்டுகளில் ஒன்றாக இருக்கலாம்.

தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சிக்குள் நெருக்கடி இல்லை
Posted in இலங்கை செய்திகள்

தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சிக்குள் நெருக்கடி இல்லை

தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சிக்குள் நெருக்கடி இல்லை

தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சிக்குள் நெருக்கடி இல்லை

தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சிக்குள் எந்தவித நெருக்கடியும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர், தேசிய பட்டியல் நியமனம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய பட்டியலுக்காக தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் மிகவும் பொருத்தமானவர்கள்.

நாட்டை கட்டியெழுப்புவதில் அவர்கள் அனைவருக்கும் பெரும் பொறுப்பு இருக்க வேண்டும். இந்த பட்டியலில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் உள்ளனர்.

வீழ்ச்சி கண்டுள்ள நாட்டையும் 220 லட்சம் மக்களையும் மீட்டெடுப்பதே எனது எண்ணப்பாடாக இருக்கிறது என்றார்

75 மில்லியன் ரூபாவை அபகரித்த கொள்ளையர்
Posted in இலங்கை செய்திகள்

75 மில்லியன் ரூபாவை அபகரித்த கொள்ளையர்

75 மில்லியன் ரூபாவை அபகரித்த கொள்ளையர்

75 மில்லியன் ரூபாவை அபகரித்த கொள்ளையர் நவம்பர் 18 அன்று மினுவாங்கொடையில் பணமாற்று நிறுவனமொன்றுக்கு சொந்தமான வேனிலிருந்தவர்களை மிரட்டி சுமார் 75 மில்லியன் ரூபாவை அபகரித்து

சென்ற இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கொள்ளையிட்ட பணத்துடன் தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களை கைது செய்ய கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

கட்டான மற்றும் உடுகம்பொல பிரதேசங்களைச் சேர்ந்த முறையே 37 மற்றும் 40 வயதுடைய இரு சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சந்தேக நபர்களின் இருப்பிடம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை 071 – 8591608 அல்லது 071 – 8591610 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

தலை துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தலை துண்டிப்பு

தலை துண்டிப்பு

தலை துண்டிப்பு ,தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரம்பேகெம பகுதியைச் சேர்ந்த ரொஷான் திமுத்து (35) என்பவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்

மற்றும் அவரது கள்ளக்காதலி எதிர்வரும் டிசம்பர் மாதம் (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை பதில் நீதவான் பாலிந்த மனோஜ் வீரசிங்க உத்தரவிட்டுள்ளார்

சந்தேக நபர் மற்றும் கொலை செய்யப்பட்டவரும், தனமல்வில – ஹம்பேகமுவ, சூரியகொட பிரதேசத்தில் வசிக்கும் விதவை பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்துள்ளனர்.

பலஹருவ பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேக நபர், தனது கள்ளகாதலிக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தநபரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அலுத்வெல ஹமுதுருகந்த காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இவ்வாறே காட்டுக்குள் அழைத்துச்சென்று, தலையை துண்டித்துள்ளார். அவ்வாறு துண்டிக்கப்பட்ட தலையை வேறு இடத்தில் புதைத்து, உடலின் மற்ற பகுதி (கவந்தா) கால்வாய் அருகே வீசியுள்ளார்.

அத்துடன் தாக்குதலுக்கு பயன்படுத்திய மண்வெட்டியை, காட்டுக்குள் மறைத்து வைத்துள்ளார்.

இந்தநிலையில், தனது மகன் ரொஷான் திமுத்து காணாமல் போனதாக பொலிஸாரிடம் அவரது தாய் கடந்த 18ஆம் திகதி முறைப்பாடு அளித்துள்ளார்.

அதன்படிப்டையில் பொலிஸார் சந்தேகநபரின் வீட்டிற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அவரிடமிருந்து கிடைத்த தகவலின்

படி, விதவை பெண்ணொருவரிடம் தகாத உறவை பேணிவரும் தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில், கொலைச் சம்பவம் குறித்து தெரியவந்தது.

அதற்கமைய, உயிரிழந்தவரின் உடல் பாகங்கள் பிரேதப்பரிசோதனைக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, நிபுணர் சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.என்.கே.பி.விஜேதுங்க விசாரணைகளை மேற்கொண்டார்.

சந்தேகநபர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது

மதமாற்றிய குழுவினர் மீது மலம் வீசி தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

மதமாற்றிய குழுவினர் மீது மலம் வீசி தாக்குதல்

மதமாற்றிய குழுவினர் மீது மலம் வீசி தாக்குதல்

மதமாற்றிய குழுவினர் மீது மலம் வீசி தாக்குதல் நோய்களைக் குணப்படுத்த மத வழிபாடு நடத்துகிறோம் என்ற போர்வையில் மதம் மாறிய குழுவினர் மீது மல தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மொனராகலை வராகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வராகம பத்தஹகல, சியாம்பலாண்டுவ, பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது வீட்டில் உள்ள நோய்வாய்ப்பட்ட பெண்களை தெய்வ வழிபாடு நடத்தி குணமாக்குவதாகவும், அவர்கள் மேலும் குணமடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வரகம பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், குறித்த பெண் வாரகமவில் உள்ள தனது வீட்டில் சமய வழிபாடு நடத்தி நோய்களை குணப்படுத்தி வருகின்றார்.

இவ்வாறு சேவையை மேற்கொண்ட நோயாளிகள் குழுவொன்று மேலதிக சிகிச்சைக்காக ஜாஎல வெலிகம்பிட்டிய பிரார்த்தனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் போதே பஸ் மீது இந்த மலக்கழிவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னர் பஸ்ஸில் பயணித்த மக்களின் வேண்டுகோளின் பேரில் பொலிஸார் தலையிட்டு அவர்களை மீண்டும் ஜாஎல பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

சியாம்பலாண்டுவ சாசனார்ஷக சபையின் தலைவர் புத்தம ரஜமஹா விஹாரதி பனமாயே ரதனசர பதிவாளர் மரியராவே தம்மரக்கித மற்றும் பலர் கலந்து அதனமக் பிரதேசவாசிகள் சுமார் 200 பேர் வரை வாரகம பாடசாலைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதி மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் திட்டத்தை செயல்படுத்துவதாக கூறி போராட்டம் நடத்தினர்.

பின்னர், சியம்பலாண்டுவ பிரதேச செயலகத்தின் பௌத்த விவகார இணைப்பாளர் டி.எம்.சரத் அவர்கள் வந்து, நவம்பர் (25) பிற்பகல் இரண்டு மணிக்கு கலந்துரையாடல் இடம்பெறும் எனக் கூறியதையடுத்து, குழுவினர் சமாதானமாக கலைந்து சென்றனர்.

அகுந்துபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனபால வனசிங்க விசாரணைகளை மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு ,இந்த மாதத்தின் முதல் 20 நாள்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 26,717 ஆகும்.

அதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைதந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 41 ஆயிரத்து 676 ஆகும்.

இந்தநிலையில், கடந்த வருடம் இலங்கை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 87 ஆயிரத்து 303 என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது

வெயாங்கொடையில் புதையல்
Posted in இலங்கை செய்திகள்

வெயாங்கொடையில் புதையல்

வெயாங்கொடையில் புதையல்

வெயாங்கொடையில் புதையல் வெயாங்கொடை, வதுரவ பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட புதையல் தேடும் பணிகள் இன்றைய தினமும் (23) முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்தனகல்ல நீதவான் வழங்கிய உத்தரவுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட ஸ்கேன் பரிசோதனையின் போது பூமிக்குள் ஏதோ ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம், பொதுமக்கள் முன்னிலையில் குறித்த

இடத்தில் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு வெயாங்கொடை பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

அகழ்வாராய்ச்சிக்கு இரண்டு நாள் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அதன்படி நேற்றும், முந்தினநாளும் அங்கு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் நேற்று பிற்பகல் வரையிலும் அதனை நிறைவு செய்ய முடியாத நிலையில், பாரிய கல் ஒன்று கிடைத்ததையடுத்து நேற்றைய அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இடமாற்றம் செய்யவும் மன்னார் வைத்தியர் ஆசாத்
Posted in இலங்கை செய்திகள்

இடமாற்றம் செய்யவும் மன்னார் வைத்தியர் ஆசாத்

இடமாற்றம் செய்யவும் மன்னார் வைத்தியர் ஆசாத்

இடமாற்றம் செய்யவும் மன்னார் வைத்தியர் ஆசாத் எனது உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா

மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் உருக்கமான கோரிக்கை யை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு நேற்று (22) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில்,,

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நான் நியமிக்கப் பட்டதில் இருந்து பல சுகாதார தர மேம்பாடுகள் மற்றும்

நோயாளிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல் படுத்துவதன் மூலம் சுகாதார சேவைகளை மேம்படுத்த என்னை அர்ப்பணித்து வந்துள்ளேன்.

எனினும் கடந்த 19 ஆம் திகதி (19) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் துரதிர்ஷ்டவசமான கரு மகப்பேறு மரணம் நிகழ்ந்துள்ளது.

குறித்த தாய் மற்றும் சிசுவின் மரணம் தொடர்பாக உரிய நடவடிக்கையை முன்னெடுத்து வந்தேன்.

எனினும் மகப்பேற்று விடுதியில் புகுந்த கும்பல் பிரசவ அறைக்குள் நுழைந்து மருத்துவமனையின் சொத்துக்களை சேதப்படுத்தியது.

நான் அங்கு சென்ற போது நிலைமை குறித்து விவாதிக்கவும், வருகை தந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் காவல்துறை அதிகாரிகளின் உதவியை நாடினேன்.

எனினும் அவர்கள் என்னை தனிப்பட்ட முறையில் குறி வைத்து சரமாரியாக தாக்க முயன்றனர். அவர்கள் என்னை கொலையாளி என்று கூறி கூச்சலிட்டனர். அவர்களில் சிலர் என்னைத் தாக்க முயன்றனர்.

அதனைத் தொடர்ந்து 20 ஆம் திகதி புதன்கிழமை அன்று மாவட்டச் செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ,மத்திய சுகாதார

அமைச்சின் பிரதி நிதிகள் மற்றும் மதத் தலைவர்களுடன் மேற்கண்ட மரணம் தொடர்பாக சுகாதார அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்க மளித்தோம்.

இதற்கிடையில் அன்றைய தினம் மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நுழைவாயிலை முற்றுகையிட்டு ஒரு பெரிய கூட்டம் அங்கு அவசர சிகிச்சை பிரிவு மற்றும் வெளி நோயாளர் பிராவுக்குள் நுழைந்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் மாவட்ட செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் மன்னார் மாவட்ட பிராந்திய

சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடம் என்னை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

நான் எனது குடியிருப்பில் இருந்து 355 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பயணிப்பதால் இது எனக்கு கடுமையான உயிருக்கு ஆபத்தான எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

எனக்கு எதிரான தனிப்பட்ட முறையில் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் எனக்கு எதிரான பிரச்சாரங்கள் பொது கிளர்ச்சி மற்றும் அமைதியின்மையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே எனக்கு வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற பணிச் சூழல் எனக்கு ஏற்பட்டுள்ளது.

தயவு செய்து எனது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தயவு செய்து என்னை அவசரமாக வடக்கு மாகாணத்திற்கு வெளியே மாற்ற நடவடிக்கை எடுக்கவும்.

எனக்கு எதிராக விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளேன்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

கழுத்தறுத்து ஒருவர் கொலை
Posted in இலங்கை செய்திகள்

கழுத்தறுத்து ஒருவர் கொலை

கழுத்தறுத்து ஒருவர் கொலை

கழுத்தறுத்து ஒருவர் கொலை கொஸ்லந்த, ஹமுதுருகந்த பிரதேசத்தில், ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனமல்வில – அரம்பேகெம பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய நபரே, இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட நபர் கடந்த 18ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் 45 வயதுடைய மற்றுமொரு நபருடன் ஹமுதுருகந்த பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் காணாமல் போனவரின் கழுத்தை அறுத்து தலையை புதைத்ததாக, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதன்படி, கொலை செய்யப்பட்ட நபரின் தலை மற்றும் உடற்பகுதியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய பெண்ணொருவரையும் கைதுசெய்துள்ளனர்

குறைகிறது எம்.பி.க்களின் சிறப்புரிமைகள்
Posted in இலங்கை செய்திகள்

குறைகிறது எம்.பி.க்களின் சிறப்புரிமைகள்

குறைகிறது எம்.பி.க்களின் சிறப்புரிமைகள்

குறைகிறது எம்.பி.க்களின் சிறப்புரிமைகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுபவித்து வந்த சில சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக இதுவரை கலமும் கைத்துப்பாக்கி வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த வசதியை நீக்குவது தொடர்பில், கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதுடன், இதுவும் பெருமளவில் நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த வரியில்லா வாகன அனுமதிப்பத்திரமும் நீக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுக்கு எதிராக CID-யில் முறைப்பாடு

அர்ச்சுனாவுக்கு எதிராக CID-யில் முறைப்பாடு

அர்ச்சுனாவுக்கு எதிராக CID-யில் முறைப்பாடு புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு ஏற்ப ஆசனங்கள் ஒதுக்கப்படாததால், நேற்று (21) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த ஆசனத்திலும் அமர வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன்போது யாழ்.மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார்.

பாராளுமன்ற ஊழியர் ஒருவர் வந்து எம்.பி.யிடம் இது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனம் என்று தெரிவித்தபோதும் அவர் ஆசனத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டார்.

மேலும் சுயேட்சை எம்.பி அங்கு நடந்துகொண்ட விதம் சமூக ஊடகங்களில் கூட பெரிதும் விவாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது

ஆப்படித்த அனுரா |வடை போச்சே |அலறும் புள்ளிகள்
Posted in இலங்கை செய்திகள்

ஆப்படித்த அனுரா |வடை போச்சே |அலறும் புள்ளிகள்

ஆப்படித்த அனுரா |வடை போச்சே |அலறும் புள்ளிகள்

ஆப்படித்த அனுரா |வடை போச்சே |அலறும் புள்ளிகள் காணொளியில் முழுமியன் விபரம் பார்க்க

வீடியோ

மக்கள் ஆணைக்கு எதிரான செயல்படும் அரசாங்கம்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் ஆணைக்கு எதிரான செயல்படும் அரசாங்கம்

மக்கள் ஆணைக்கு எதிரான செயல்படும் அரசாங்கம்

மக்கள் ஆணைக்கு எதிரான செயல்படும் அரசாங்கம் கடந்த அரசாங்கத்தின் மக்களை அழுத்தங்களுக்கு ஆளாக்கும் சர்வதேச நாணய நிதியத்தின்

ஒப்பந்தத்தையே தற்போதைய அரசாங்கமும் முன்னெடுப்பதாக கூறுவதானது மக்கள் ஆணைக்கு எதிரான செயல்பாடாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தற்போதைய அரசாங்கம் தேர்தல் மேடைகளில் முன்வைத்த சில விடயங்கள் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களோடு ஒப்பிடும் போது முரண்பாட்டை காண்பிக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்துடனான

இணக்கப்பாட்டில் இருதரப்பு கடன்கள், பிணை முறிப் பத்திரக் கடன்கள் போன்றவற்றில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து செவிமடுத்த போது ஒருவித அதிர்ச்சிக்கு ஆளானோம். ஏற்கனவே இணக்கப்பாடு

காணப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை மாற்றி புதிய ஒப்பந்தத்தை எட்டுவதாக தற்போதைய ஆட்சியாளர்கள் தேர்தல் மேடைகளில் பிரஸ்தாபித்தனர். ஆனால் அரசு தற்போது அதில் இருந்து விலகி செயல்பட்டு வருகிறது. இது பாரதூரமான விடயம்.

நாட்டு மக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் ஆணையை வழங்கியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தில் உள்ள மக்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் விடயங்களுக்கு தீர்வு கிடைக்கும் என

எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பின்பற்றிய செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கமும் இவ்விவகாரத்தில் பின்பற்றி வருவதாகத் தெரிகிறது. முன்னாள்

ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை அமுல்படுத்த வேண்டாம் என்றே மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆணையைப் பெற்றுத் தந்தனர்

சர்வதேச நாணய நிதியத்தின் சட்டகத்திற்குள் இருந்தவாறு உடன்பாடு காணப்பட்டுள்ள இணக்கப்பாட்டை மக்களுக்கு சாதகமாக மாற்றுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் மேடைகளில் தெரிவித்தது.

ஆனால் இன்று தற்போதைய அரசாங்கம் இந்த இணக்கப்பாட்டை முன்னர் இருந்தவாறு பழைய வழியிலேயே முன்னெடுத்துச் செல்வதைக் காணமுடிகிறது. வறுமையை ஒழித்து, கர்ப்பிணி தாய்மார்கள், சிசுக்கள் மற்றும் சிறுவர்களுக்கான திட்டத்தை முன்னெடுத்து, ஊட்டச்சத்து

குறைபாட்டை நீக்கி, தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் விதமாகவும், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினருக்கு பல்வேறு ஏற்றுமதி சந்தைகளில் சிக்கல்கள் இருந்தாலும், அவற்றை நீக்குவதற்கு ஏற்றாற் போலான இணக்கப்பாட்டை நாம் காண்போம் என

தெரிவித்திருந்தோம். இந்த அரசாங்கமும் மேற்குறித்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இவற்றை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தும் விடயத்தில் நாம் இந்த அரசாங்கத்திற்கு எமது ஆதரவை நல்குவோம்.

தற்போதுள்ள ஐ.எம்.எப். உடன்படிக்கையை அவ்வாறே நடைமுறைப்படுத்த தற்போதைய அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தமையானது நம்மெல்லோரையும் ஆச்சரியப்படுத்துகிறது. வற் மற்றும் வரிக்

கட்டமைப்பையும் அத்துடன் முழுப் பொருளாதாரச் செயல்முறையையும் பழைய முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த மக்கள் ஆணை

வழங்கப்படவில்லை என்பதால், வாக்குறுதியளிக்கப்பட்ட மாற்றங்களை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம். இதற்குத் தேவையான ஆதரவை வழங்குவோம்

நாடு வீழ்ந்துள்ள பெரும் நெருக்கடியான சூழ்நிலையில் அனைவரும் கைகோர்த்து நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.

நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் சகல செயலுக்கும் நாம் உதவ வேண்டும். ஏதேனும் தவறு நடப்பின் அந்த தவறை சுட்டிக்காட்டுவோம். அதேபோல் அந்த தவறுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றார்.

ஹிருணிக்காவுக்கு தேசிய பட்டியல் கொடுக்க முயற்சிக்கிறோம்
Posted in இலங்கை செய்திகள்

ஹிருணிக்காவுக்கு தேசிய பட்டியல் கொடுக்க முயற்சிக்கிறோம்

ஹிருணிக்காவுக்கு தேசிய பட்டியல் கொடுக்க முயற்சிக்கிறோம்

ஹிருணிக்காவுக்கு தேசிய பட்டியல் கொடுக்க முயற்சிக்கிறோம் ,ஐக்கிய மக்கள் சக்திக்காக கடுமையாக உழைத்த எரான் விக்கிரமரத்ன, ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோர் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளினாலேயே தோல்வியடைந்தார்கள்.

எனவே இவர்களுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கிறோம் என அக்கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பிரச் சினைக்கு வெகுவிரைவில் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். கட்சிக்காக கடுமையாக உழைத்த எரான் விக்கிரமரத்ன,

ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோர் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளினாலேயே தோல்வியடைந்தார்கள். இவர்களுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கிறோம்.

ஜனாதிபதியின் உரையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாக

ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதனையே நாங்கள் ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறோம்.

வெளிவிவகார கொள்கை தொடர்பில் ஜனாதிபதி தனது கொள்கை பிரகடனத்தில் தெளிவாக குறிப்பிடவில்லை. ஆகவே இது சற்று அவதானிக்க

கூடிய விடயம். அரசாங்கம் எவ்வகையான வெளிவிவகாரக் கொள்கையை கடைப்பிடிக்கவுள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை 2024 ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடைகின்றன.

இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன.

இதன்படி, அனைத்து பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தபாலட்டைகள்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தபாலட்டைகள்

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தபாலட்டைகள்

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தபாலட்டைகள் இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி

கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் வியாழக்கிழமை (21) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை 21 சர்வதேச மீனவர் தினமாகிய இன்று சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் (ECDO) ஏற்பாட்டில் இந்திய இழுவைப் படகுகளை இலங்கை கடற்பரப்பிற்குள் வரவிடாது தடுப்பதற்குரிய

நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கோரியே தபாலட்டைகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எம்.பி.க்களுக்கு இனி சொகுசு வாகனங்கள் இல்லை
Posted in இலங்கை செய்திகள்

எம்.பி.க்களுக்கு இனி சொகுசு வாகனங்கள் இல்லை

எம்.பி.க்களுக்கு இனி சொகுசு வாகனங்கள் இல்லை

எம்.பி.க்களுக்கு இனி சொகுசு வாகனங்கள் இல்லை ,அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனக்கள் வழங்கப்படும் என, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்தி மக்கள் சேவையை, உறுப்பினர்கள் மேற்கொள்ள முடியும் என, அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

எம்.பி.க்களுக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப்படாது என்றும் கூறினார்.

மக்களின் வரிப்பணம் விரயமாவதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி எம்.பிக்களை இணைத்துக்கொள்ள மொட்டு கட்சி முயற்சி
Posted in இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சி எம்.பிக்களை இணைத்துக்கொள்ள மொட்டு கட்சி முயற்சி

எதிர்க்கட்சி எம்.பிக்களை இணைத்துக்கொள்ள மொட்டு கட்சி முயற்சி

எதிர்க்கட்சி எம்.பிக்களை இணைத்துக்கொள்ள மொட்டு கட்சி முயற்சி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பின்னர் பிரிந்து சென்ற பிரிவினரை மீண்டும் இணைப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து தற்போது பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியில் இருந்து விலகி

ஏனைய கட்சிகளில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்றத்தில் ஒரே குழுவாக செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களை இந்தக் குழுவில் சேர்ப்பது குறித்து,
மொட்டு கட்சி கவனம் செலுத்தி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனா போராடடம் வெடித்தது |மன்னார் மருத்துவமனை சுற்றிவளைப்பு
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா போராடடம் வெடித்தது |மன்னார் மருத்துவமனை சுற்றிவளைப்பு

அர்ச்சுனா போராடடம் வெடித்தது |மன்னார் மருத்துவமனை சுற்றிவளைப்பு

அர்ச்சுனா போராடடம் வெடித்தது |மன்னார் மருத்துவமனை சுற்றிவளைப்பு

video