Posted in சினிமா

அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது – சிருஷ்டி டாங்கே

அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது – சிருஷ்டி டாங்கே

அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது என்று நடிகை சிருஷ்டி டாங்கே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது –
சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ராஜாவுக்கு செக்.

எஸ்டிசி நிறுவனம் வெளியிட்ட இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து இருந்தார்.

ஒரு காட்சியில் நிர்வாணமாகவும் நடித்து இருந்தார். அவரது இந்த அர்ப்பணிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சாய்ராஜ்குமார் அந்த சர்ச்சைக்குரிய காட்சியும் சொன்னார். நான் தயங்கினேன். அந்த காட்சி கதைக்கு எந்த அளவுக்கு

முக்கியம் என்பதையும் எப்படி எடுக்க இருக்கிறோம் என்பதையும் அவர் விளக்கியதால் சம்மதித்தேன். அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது.

ஆனால் படத்தில் மிக முக்கியமான காட்சியாக அதை பார்க்கும்போது நடித்ததன் முக்கியத்துவம் புரிந்தது.

சிருஷ்டி டாங்கே

ராஜாவுக்கு செக் படம் பேசும் பெண்கள் பாதுகாப்பு என்பது இன்றைக்கு மிகவும் முக்கியமான, அவசியமான ஒரு விஷயம். பெண்களுக்கு நடக்கும் தாக்குதல்கள்,

பலாத்காரங்களுக்கு ஆண்கள் தானே காரணம். அவர்களை தான் நாம் கண்டிக்க வேண்டும். பதிலாக பெண்களை தான் நாம் குறை சொல்கிறோம். அது தவறு.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் பெண்களை அவள் அனுமதி இல்லாமல் தொட பயப்படுவார்கள்.

சமீபத்தில் கூட 8ஆம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியரே பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதை எல்லாம் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது.

பெண்கள் தங்களுக்கு நடக்கும் இதுபோன்ற கொடுமைகளை துணிச்சலாக வெளியில் பேச முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.video

Posted in சினிமா

விஜய் சேதுபதி படத்தில் நடிக்க பயந்தேன் – சமந்தா

விஜய் சேதுபதி படத்தில் நடிக்க பயந்தேன் – சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா பேமிலி மேன் என்ற வெப் தொடரிலும் நடித்து இருக்கிறார். வெப் தொடருக்கு மாறியது குறித்து சமந்தா

கூறும்போது, “டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும். வெப் தொடர்கள் இந்தியா முழுவதும் பிரலமாகி வருகின்றன. ரசிகர்களின் வரவேற்பும் கிடைக்கிறது.

எனவேதான் வெப் தொடரில் நடித்தேன். இதில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்தது” என்றார்.

சமந்தா மேலும் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- “சில நேரம் கதாபாத்திரங்கள் கடினமாக இருக்கும். நினைத்த மாதிரி திரையில் வராமல் போனால் அதில்

நடித்தவர்களை விமர்சிப்பார்கள். நினைத்த மாதிரி நடிப்பு அமைந்துவிட்டால் பாராட்டுகள் குவியும். சூப்பர் டீலக்ஸ்

படத்தை நான் ஒப்புக்கொள்வதற்கு முன்னால் இப்படித்தான் யோசித்தேன்.

விஜய் சேதுபதி படத்தில் நடிக்க பயந்தேன் – சமந்தா

சூப்பர் டீலக்ஸ் பட போஸ்டர்

அந்த கதாபாத்திரத்தை ஏற்கும்போதே கொஞ்சம் துணிச்சலாகவும், எதிர்மறை தன்மையோடும் இருப்பதை உணர்ந்தேன். அதில் சிறப்பாக நடிக்க முடியுமா? என்ற

தயக்கம் இருந்தது. நடிப்பு சரியாக இல்லை என்றால் ரசிகர்கள் திட்டுவார்கள் எனவே நடிக்கலாமா? வேண்டாமா? என்று பயந்தேன். இறுதியில் நடிப்பது என்று முடிவு

செய்தேன். எனது கதாபாத்திரத்துக்கு எந்த விமர்சனமும் வரவில்லை. மாறாக சிறந்த நடிகை விருது கிடைத்தது. இந்த படத்தில் நடித்தது இனிமையான அனுபவம்.

இவ்வாறு சமந்தா கூறினார்.

Posted in சினிமா

ஆபாச வீடியோவை பார்க்க வற்புறுத்துகிறார் – நடன இயக்குனர் மீது பெண் பரபரப்பு

ஆபாச வீடியோவை பார்க்க வற்புறுத்துகிறார் – நடன இயக்குனர் மீது பெண் பரபரப்பு

பாலிவுட்டில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர் கணேஷ் ஆச்சாரியா. இவர் தமிழில் ஜீவா-ஸ்ரேயா நடிப்பில்

வெளியான ரெளத்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில பாலிவுட் படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், கணேஷ் ஆச்சார்யா மீது 33 வயது பெண் ஒருவர், மராட்டிய பெண்கள் ஆணையம் மற்றும் அம்போலி

காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில் நடன இயக்குனர் தனது வருமானத்திலிருந்து

கமிஷன் கேட்டதாகவும், ஆபாச வீடியோக்களைப் பார்க்க கட்டாயப்படுத்தியதாகவும் கூறி உள்ளார். இது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணேஷ் ஆச்சாரியா

ஆபாச வீடியோவை பார்க்க வற்புறுத்துகிறார் – நடன இயக்குனர் மீது பெண் பரபரப்பு

முன்னதாக, நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தன்னைப் பற்றி வதந்திகளை பரப்பியதாகவும், நற்பெயரைக் கெடுத்ததாகவும் நடிகை தனுஸ்ரீ தத்தா

கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார். ஏற்கனவே மூத்த நடன இயக்குனர் சரோஜ் கான், கணேஷ் ஆச்சார்யா தனது நடனக் கலைஞர்களை சுயலாபத்திற்கு

பயன்படுத்துவதாகவும். சினிமா டான்சர்ஸ் அசோசியேஷனை (சிடிஏ) கேவலப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

Posted in சினிமா

ஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை

ஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை

ஒரு படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்று ஓவர் பில்டப் கொடுத்த நடிகை தற்போது வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறாராம்.

ஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை
கிசுகிசு
மலையாளத்தில் கண்ணடித்து மிகவும் பிரபலமான நடிகை புகழின் உச்சிக்கு சென்றாராம். அந்த படத்தின்

இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களிடம் என்னை வைத்து புரமோசன்கள் செய்யுங்கள் என்று அவரே

கூறினாராம். அனைவரும் புகழ்ந்து புகழ்ந்து பேச நடிகைக்கு ஓவர் கெத்து வந்துவிட்டதாம்.

படம் வெளியாகி சரியாக ஓடாததால் நடிகை நொந்து போனாராம். மாறாக இந்த படத்திற்குப் பிறகு எனக்கு

நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்க வில்லையாம்.

ஓவர் பில்டப் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும் என்று மலையாள திரையுலகில் பலரும் பேசி வருகிறார்களாம்

Posted in சினிமா

கொலை மிரட்டல்- ரஜினிக்கு விசே‌ஷ பாதுகாப்பு

கொலை மிரட்டல்- ரஜினிக்கு விசே‌ஷ பாதுகாப்பு

பெரியாரை பற்றி நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு தெரிவித்ததால் அவருக்கு கொலை மிரட்டல் வந்தது

. இதனால் அவரது வீட்டிற்கு விசே‌ஷ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல்- ரஜினிக்கு விசே‌ஷ பாதுகாப்பு
நடிகர் ரஜினிகாந்த்
சென்னை:

துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பெரியாரை பற்றி ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

பெரியார் ஆதரவாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் பேசியதாக தெரிகிறது. இது குறித்த சி.டி.

ஆதாரத்துடன் மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் ரஜினி மக்கள் மன்றத்தினர் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் ரஜினிக்கு பாதுகாப்பு வழங்க ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். கோவை மற்றும்

விழுப்புரம் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளும், அந்தந்த மாவட்ட கமி‌ஷனர் மற்றும் காவல்துறை

கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

ரஜினி வீட்டு முன், திராவிடர் கழகத்தின் ஒரு பிரிவினர், போராட்டம் நடத்த வந்த நிலையில், தமிழக அரசு,

அவருடைய வீட்டிற்கு விசே‌ஷ பாதுகாப்பு அளித்துள்ளது.

ரஜினி விவகாரத்தில், உள்துறை அமைச்சகத்திற்கு ரகசிய அறிக்கை ஒன்றை, மத்திய உளவுத்துறையும் அளித்துள்ளது.

ரஜினிக்கு எதிரான போராட்டத்தால், அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது video

Posted in சினிமா

ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்

ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்

தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ள புதிய படத்திற்காக ரஜினி பட வில்லன் நடிகர் 120 கோடி ரூபாய் சம்பளம்

பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்
தனுஷ்
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், ஆனந்த் எல்.ராய் இயக்கிய ராஞ்சனா படம் மூலம் இந்தியில்

அறிமுகமானார். இப்படத்திற்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் மீண்டும் ஷமிதாப் என்னும் படத்தில்

நடித்தார். இப்படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து பல்வேறு பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தும் நடிக்காமல் இருந்த தனுஷ், தமிழ் படங்களில் கவனம்

செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் தமிழ், இந்தியில் தயாராகும் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படத்தை ஆனந்த் எல். ராய் டைரக்டு செய்கிறார்.

அக்‌ஷய்குமார்

இதில் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோரும் நடிக்கிறார்கள் தனுசுக்கு ஜோடியாக சாரா அலிகான்

நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் 2.0 படத்தில் அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்து இருந்தார். தனுஷ்

படத்தில் நடிக்க அக்‌ஷய்குமார் ரூ.120 கோடி சம்பளம் கேட்டதாகவும், அதை கொடுக்க தயாரிப்பாளர்

ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Posted in சினிமா

நடிகையின் 5-வது திருமணம் 74 வயது தயாரிப்பாளரை மணந்தார்

நடிகையின் 5-வது திருமணம்…. 74 வயது தயாரிப்பாளரை மணந்தார்

பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன், 74 வயது தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸை 5-வது திருமணம் செய்துள்ளார்.

நடிகையின் 5-வது திருமணம்…. 74 வயது தயாரிப்பாளரை மணந்தார்
பமீலா ஆண்டர்சன், ஜான் பீட்டர்ஸ்


பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன், பேவாட்ச் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள இசைக் கலைஞர் டோமி லீ என்பவரை கடந்த 1995 -ம் ஆண்டு

காதலித்து திருமணம் செய்தார். அவரிடம் இருந்து 1998 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். 2006-ம் ஆண்டு கிட் ராக் என்ற

பாடகரை காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணமும் நிலைக்கவில்லை. 2007-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

நடிகையின் 5-வது திருமணம் 74 வயது தயாரிப்பாளரை மணந்தார்

ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடமே இருவரும்

பிரிந்தனர். 2014-ம் ஆண்டு மீண்டும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதுவும் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்றனர்.

பமீலா ஆண்டர்சன், ஜான் பீட்டர்ஸ்

பமீலா ஆண்டர்சன் அடுத்து ‘பேட்மேன்’ உட்பட பல படங்களை தயாரித்த ஜான் பீட்டர்ஸை (வயது 74) காதலித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்னர் அவரை முறைப்படி

திருமணம் செய்துள்ளார். கலிபோர்னியாவில் உள்ள மாலிபுவில் இவர்கள் திருமணம் கடந்த திங்கட்கிழமை

எளிமையாக நடந்துள்ளது. பமீலாவும் ஜான் பீட்டரும் முப்பது வருடத்துக்கு முன் முதன்முறையாக, டேட்டிங் சென்றனர்.

இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திருமணம் பற்றி பமீலா ஆண்டர்சன் கூறும்போது, நாங்கள்

நடிகையின் 5-வது திருமணம் 74 வயது தயாரிப்பாளரை மணந்தார்

ஒருவரையொருவர் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். எங்கள் காதல் ஒப்பிடமுடியாதது என்று தெரிவித்துள்ளார்.

புதிதாக திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு ஹாலிவுட் பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Posted in சினிமா

அமலாபாலின் தந்தை மரணம்

அமலாபாலின் தந்தை மரணம்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் இன்று கேரளாவில் காலமானார்.

நடிகை அமலாபாலின் தந்தை காலமானார்
அமலாபால்
பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் மூலம் மிகவும்

பிரபலமானவர் நடிகை அமலாபால். இப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. இப்படத்தை தொடந்து,

தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்தார்.

நடிகை அமலாபாலின் தந்தை

தற்போது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். இந்நிலையில், இவரது

தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார். நாளை மாலை இவரது இறுதி சடங்குகள் கேரளாவில் உள்ள குறுப்பம்படி என்னும் ஊரில் நடைபெற இருக்கிறது.

Posted in சினிமா

கீர்த்தி சுரேஷ் இந்தி படத்தில் இருந்து நீக்கம்

கீர்த்தி சுரேஷ் இந்தி படத்தில் இருந்து நீக்கம்

இந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக மைதான் படத்தில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், திடீரென அப்படத்தில் இருந்து

நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

இந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்? – படக்குழு விளக்கம்
கீர்த்தி சுரேஷ்


மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை படமான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை வென்ற கீர்த்தி சுரேஷ்,

அனைத்து மொழி திரையுலகிலும் கவனம் பெற்றுள்ளார். இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத்

ஷர்மா இயக்கும் ‘மைதான்’ படத்தில் கீர்த்திக்கு நடிக்க வாய்ப்பு வந்தது.

கீர்த்தி சுரேஷ் இந்தி படத்தில் இருந்து நீக்கம்

இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து

இந்த படம் உருவாகி வருகிறது. அஜய் தேவ்கான் சையத் அப்துல் ரஹீமாகவும், அவரது மனைவியாக கீர்த்தி சுரேசும்

நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பிலும் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு நடித்தார்.

கீர்த்தி சுரேஷ்

இந்த நிலையில் ‘மைதான்’ படத்தில் இருந்து கீர்த்தி சுரேசை திடீரென்று நீக்கி விட்டு பிரியாமணியை ஒப்பந்தம்

செய்துள்ளனர். மைதான் படத்துக்காக கீர்த்தி சுரேஷ் உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்தார். இதுவே அவர் நீக்கத்துக்கு காரணம் என்கின்றனர்.

இதுகுறித்து பட நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “அஜய் தேவ்கானுக்கு ஜோடியாகவும்,

ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடிக்க கீர்த்தி சுரேசை தேர்வு செய்தபோது அதற்குரிய தோற்றத்தில் இருந்தார்.

ஆனால் தற்போது எடை குறைந்து ஒல்லியாகி விட்டார். கீர்த்தி சுரேசை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பை

நடத்தினோம். குழந்தைக்கு அம்மாவாக நடிக்க அவரது உடல்வாகு பொருந்தவில்லை.”

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in சினிமா

நடிகை ஷபானா விபத்தில் சிக்கினார்

நடிகை ஷபானா விபத்தில் சிக்கினார்

பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி விபத்தில் சிக்கிய விவகாரம் தொடர்பாக, அவரது கார் டிரைவர் மீது எப்.ஐ.ஆர். பதிவாகியுள்ளது.

நடிகை ஷபானாஆஸ்மி கார் விபத்தில் சிக்கிய விவகாரம் – டிரைவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு
ஷபானா ஆஸ்மி
மும்பை:

இந்தி திரைப்பட உலகின் பழம்பெரும் நடிகைஷபானா ஆஸ்மி (69). இவர் மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்

மாவட்டத்தில் மும்பை-புனே விரைவு சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.

நடிகை ஷபானாவிபத்தில் சிக்கினார்

மும்பையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள காலாப்பூர் அருகே நேற்று மாலை 3.30 மணியளவில் சென்றபோது அவரது கார், லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்கு

உள்ளானது. இதில் அவர் படுகாயமடைந்தார். ஷபானா ஆஸ்மி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சீரான நிலையில் இருந்தாலும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆஸ்மியுடன் அவரது கணவர் மற்றும் திரைப்பட பாடலாசிரியரான ஜாவித் அக்தரும் பயணம் செய்துள்ளார். இந்த விபத்தில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

நடிகை ஷபானாவிபத்தில் சிக்கினார்

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ஷபானா ஆஸ்மியின் கார் டிரைவர் ஆம்லேஷ் யோகேந்திரா குமார் என்பவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆஸ்மியின் கார் லாரியின் பின்புறம் மோதியதில் லாரி சேதமடைந்துள்ளது. இதுபற்றி லாரி டிரைவர் ராஜேஷ் பாண்டுரங் ஷிண்டே போலீசில் புகார் அளித்து உள்ளார்.

அதன்படி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். டிரைவர் வேகமுடன் கார் ஓட்டியதில், லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது என அதில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ஷபானா ஆஸ்மியின் கார் டிரைவர் ஆம்லேஷ் யோகேந்திரா

தண்டனை பெறுவார் எனவும் இவர் மீதே குற்றம் என ரசிகர்கள் கருத்துக்களை

பகிர்ந்து வருகின்றனர் அடுத்து என்ன ..?

நடிகை ஷபானா விபத்தில்
நடிகை ஷபானா விபத்தில்
Posted in சினிமா

மீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம் – தமன்னா

மீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம் – தமன்னா

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா, மீடூ-வில் சிக்காதது தனது அதிர்ஷ்டம் என கூறியுள்ளார்.

மீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம் – தமன்னா
தமன்னா
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்

தமன்னா. இந்தி படங்களிலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாக சொல்வதில் உண்மை

இல்லை. கடந்த ஆண்டில் கைநிறைய படம் வைத்து இருந்தேன். எனது படங்களுக்கு நல்ல வியாபாரமும்

இருந்தது. முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க அவசியம் இல்லை. எனது படங்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்.

அதை வைத்து படங்கள் இல்லாமல் வீட்டில் நான் சும்மா இருப்பதாக சிலர் பேசி இருக்கலாம். மீ டூ வில் தங்களுக்கு

நடந்த பாலியல் தொல்லைகள் பற்றி பலரும் கூறுகிறார்கள். இது சினிமாவில் மட்டும் இல்லை. அனைத்து துறைகளிலும்

இருக்கிறது. நான் பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. அது எனது அதிர்ஷ்டம்.

தமன்னா

பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்கள் அழுதுகொண்டிருந்தால் பிரயோஜனம் இல்லை. எதிர்த்து போராடவேண்டும். மீ டூவில் புகார் சொன்னவர்களுக்கு பட

வாய்ப்புகள் வராமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. நான் கவர்ச்சிக்காக அழகு சாதனங்கள் பயன்படுத்துவது

இல்லை. சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவேன். எண்ணெய் உணவுகளை தள்ளிவைக்க வேண்டும். 7 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும்.”

இவ்வாறு தமன்னா கூறினார்.

Posted in சினிமா

பிரியா பவானி சங்கரை காதலிக்கிறேனா-எஸ்.ஜே.சூர்யா

பிரியா பவானி சங்கரை காதலிக்கிறேனா-எஸ்.ஜே.சூர்யா

இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகை பிரியா பவானி சங்கரை காதலிப்பதாக வந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

பிரியா பவானி சங்கரை காதலிக்கிறேனா? எஸ்.ஜே.சூர்யா விளக்கம்
எஸ்.ஜே.சூர்யா – பிரியா பவானி சங்கர்
தமிழில் வாலி, குஷி உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் எஸ்.ஜே.சூர்யா. நியூ, அன்பே ஆருயிரே,

இசை உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். பொம்மை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

ஏற்கனவே திரைக்கு வந்த மான்ஸ்டர் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர். பொம்மை படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் இருந்த பிரியா பவானி சங்கர்

புகைப்படத்தை பார்த்து கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் திரிஷா போன்று தெரிகிறது இல்லையா என்று எஸ்.ஜே.சூர்யா பாராட்டி இருந்தார்.

எஸ்ஜே சூர்யா ட்விட்

இந்த நிலையில் பொம்மை படப்பிடிப்பில் பிரியா பவானி சங்கர் மீது எஸ்.ஜே.சூர்யா காதல் வயப்பட்டு தனது காதலை அவரிடம் சொன்னதாகவும், அந்த காதலை ஏற்க பிரியா

பவானி சங்கர் மறுத்து விட்டதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவியது. இதனை எஸ்.ஜே.சூர்யா டுவிட்டரில் மறுத்துள்ளார்.

“பிரியா பவானி சங்கரை காதலிப்பதாக நான் அவரிடம் சொன்னதாகவும், காதலை ஏற்க அவர் மறுத்துவிட்டதாகவும் தவறான தகவல் பரவி உள்ளது. மான்ஸ்டர் படத்தில் இருந்து

எனக்கு அவர் சிறந்த தோழியாக இருக்கிறார். அவர் ஒரு திறமையான நடிகை. தயவு செய்து அடிப்படை இல்லாத தவறான தகவலை பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Posted in சினிமா

நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி

நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி

குடும்ப பிரச்சனை காரணமாக டி.வி. நடிகை ஜெயஸ்ரீ சென்னையில் அவரது இல்லத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

டி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி
நடிகை ஜெயஸ்ரீ
வம்சம் டி.வி. தொடரில் வில்லியாக நடித்து வருபவர் ஜெயஸ்ரீ. ஆபிஸ் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர். இருவரும் காதலித்து திருமணம் செய்து

கொண்டனர். பின்னர், அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், தனது கணவர் ஈஸ்வர் அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு கொடுமைபடுத்துவதாகவும்,

தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக நடிகை ஜெயஸ்ரீ புகார் கொடுத்தார்.

அதன்பின், தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க

வேண்டும் என்றும் ஜெயஸ்ரீ சமீபத்தில் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கூறினார்.

மருத்துவமனையில் ஜெயஸ்ரீ

இந்நிலையில், நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்போது சென்னையில் உள்ள தனியார்

மருத்துவமனையில் ஜெயஸ்ரீ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தில் வருகிறார்கள்.

Posted in சினிமா

யாரும் இல்லாத போது என்னை அழைத்தார்

யாரும் இல்லாத போது என்னை அழைத்தார்

1யாரும் இல்லாத போது என்னை அழைத்தார் என்று நடிகை ரூபஞ்சனா மித்ரா இயக்குனர் மீது மீடூ புகார் அளித்துள்ளார்.

யாரும் இல்லாத போது என்னை அழைத்தார் – இயக்குனர் மீது நடிகை மீடூ புகார்
ரூபஞ்சனா மித்ரா


நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தொடர்ந்து ‘மீ டூ’ வில் சிக்கி வருகிறார்கள். நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் சொன்னார்.

,.நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைத்ததாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்களை அம்பலப்படுத்தினார்.

இந்தி இயக்குனர்கள் சாஜித் கான், சுபாஷ் கபூர், சுபாஷ் கை, லவ் ரஞ்சன், நடிகர் அலோக் நாத் மற்றும் தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் மீது ‘மீ டூ’ புகார் கூறப்பட்டது.

இந்த நிலையில் பிரபல பெங்காலி இயக்குனர் அரிந்தம் செல் மீது நடிகை ரூபஞ்சனா மித்ரா ‘மீ டூ’ புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

அரிந்தம் செல் – ரூபஞ்சனா மித்ரா

“இயக்குனர் அரிந்தம் செல் தனது அலுவலகத்துக்கு வரும்படி என்னை அழைத்தார். மாலை 5 மணிக்கு அவரது அலுவலகத்துக்கு நான் சென்றபோது அங்கு அவர் மட்டுமே

இருந்தார். எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் திடீரென்று எழுந்து வந்து என்னை பிடித்து பின்னால் தள்ளிக்கொண்டு போனார்.

அலுவலகத்தில் நாம் இருவர் மட்டுமே இருக்கிறோம் என்றார். அவரது ஆசைக்கு உடன்பட மறுத்தேன். சிறிது

நேரத்தில் அவரது மனைவி அங்கு வந்தார். அதன்பிறகு நான் அரிந்தமின் அலுவலகத்தில் இருந்து அழுதபடியே வெளியே சென்றேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

Posted in சினிமா

அவரை பார்த்து பதட்டம் அடைந்தேன் – ராஷ்மிகா

அவரை பார்த்து பதட்டம் அடைந்தேன் – ராஷ்மிகா

தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, அவரை பார்த்து பதட்டம் அடைந்தேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவரை பார்த்து பதட்டம் அடைந்தேன் – ராஷ்மிகா
ராஷ்மிகா


நடிகர் மகேஷ் பாபு மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் சரிலேரு

நீக்கவேறு. ராஷ்மிகா மந்தனா, இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு. அவரோடு இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் ரொம்பவே மகிழ்ந்தேன்.

ஆனால், படப்பிடிப்பு துவங்கியதும், எனக்குள் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது. பெரிய நடிகர், என்னுடைய நடிப்பை பார்த்து என்ன நினைப்பாரோ என பதற்றம் அடைந்தேன்.

ராஷ்மிகா – மகேஷ் பாபு

படப்பிடிப்பு தளத்தில் அவ்வபோது பயத்தில் சோர்ந்து விடுவேன். இதை கவனிக்கும் நடிகர் மகேஷ் பாபு, என்னை தேடி வந்து, நடிப்பு பற்றி நிறைய விஷயங்ளை என்னிடம்

பகிர்ந்து கொள்வார். நடிக்கும்போது எனக்கு இருக்கும் தயக்கங்களை உணர்ந்தவர், அதை எப்படி உடைக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் சொல்வார்.

இத்தனை பெரிய நடிகர், இவ்வளவு எளிமையாக எல்லோரிடமும் பழகுகிறாரே என வியந்திருக்கிறேன். இவ்வாறு ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்

Posted in சினிமா

படமாகிறது நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல்

படமாகிறது நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல்

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனின் காதலை மையமாக வைத்து ஒரு படம் உருவாகியுள்ளது.

படமாகிறது நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல்
விக்னேஷ் சிவன் – நயன்தாரா
திரி இஸ் ஏ கம்பெனி என்ற பட நிறுவனம் மற்றும்

ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நானும் சிங்கிள் தான்’. இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக

தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டேவிட் ஆனந்த்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்து வருகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கோபி.

இப்படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ‘சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது. அதன்

அடிப்படையிலே ‘நானும் சிங்கிள் தான்’ என்ற டைட்டிலோடு களம் இறங்கி இருக்கிறோம். டைட்டில் போலவே கண்டெண்டிலும் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறோம்.

தினேஷ்- தீப்தி

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம். நயன்தாரா –

விக்னேஷ் சிவன் ஜோடி பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போது வரை சிலரால் ஆச்சர்யமாக பார்க்கும் ஜோடியும் கூட.

இந்த படத்தின் ஹீரோவின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். தமிழ்சினிமாவில் பெரிதாக கல்லா கட்டிய படமான

அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார். அந்த டாட்டூ குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார். நயனுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன்

ஹார்ட்டைப் பறிகொடுக்க காதல் பேய்ப் பிடித்து திரிவது தான் கதை. இதற்குள் நயன் விக்னேஷ் சிவன் காதல்

சமாச்சாரமும் இருக்கும் என்றார். இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.

Posted in சினிமா

நடிகை சாரா அலிகானிடம் அத்துமீறிய ரசிகர்

நடிகை சாரா அலிகானிடம் அத்துமீறிய ரசிகர்

பிரபல பாலிவுட் நடிகையும், சயீப் அலிகானின் மகளான சாரா அலிகானிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சாரா அலிகானிடம் அத்துமீறிய ரசிகர்
சாரா அலிகான்


நடிகைகளிடம் ரசிகர்கள் கையை பிடித்து இழுத்து ரகளை செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. இதில் சில நடிகைகளுக்கு நகக்கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தி நடிகை சாரா அலிகானையும் ரசிகர் ஒருவர் அத்துமீறி முத்தமிட்ட சம்பவம் தற்போது நடந்துள்ளது.

இவர் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான்-நடிகை அம்ரிதா சிங் மகள் ஆவார்.

அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து விட்டு நடிகை கரீனா கபூரை சயீப் அலிகான் 2-வது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாரா அலிகான்

சாரா அலிகானும் பெற்றோரைப்போல் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மும்பையில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து விட்டு திரும்பிய சாரா

அலிகானை ரசிகர்கள் சூழ்ந்து செல்பி எடுத்தனர். அப்போது ஒரு ரசிகர் அவரது கையைப்பிடித்து இழுத்து முத்தமிட்டார்.

இதனால் சாரா அதிர்ச்சியானார். முத்தமிட்டவரை பாதுகாவலர் பிடித்து தள்ளினார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் ஜிம்மில் இருந்து வந்த போது சாரா அலிகான்

ஆபாச ஆடை அணிந்து இருந்ததாக குறைகூறி வருகிறார்கள்.

Posted in சினிமா

அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுத – நயன்தாரா

அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் – நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, முக்கியமான நபர் ஒருவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுததாக தெரிவித்துள்ளார்.

அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் –


சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா.

அதனை அடுத்து ரஜினி, விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்ற இவர்,

அதே நேரம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர் கோவில் கோவிலாக, ஊர் ஊரக சுற்றி வருகிறார்.

இந்நிலையில், நயன்தாரா தனது வாழ்க்கையில் முக்கியமான நபர், அவரைபிரிந்ததற்காக ஒருமணிநேரம் கதறி கதறி அழுத சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

நயன்தாரா

தன்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் சந்தோ‌ஷமான வி‌ஷயம் என்றால் தனது அண்ணன் மகள் பிறந்ததுதான்

எனவும், மேலும் ஏஞ்சலினா பிறந்த பிறகுதான் தனக்கு பட வாய்ப்புகள் கிடைத்து, சந்தோ‌ஷமான சம்பவங்கள் நடந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏஞ்சலினா தன்னுடன் இல்லாமல், துபாய்

சென்றுவிட்டதாகவும், அதை நினைத்து தான் அழுததாகவும் தெரிவித்துள்ளார் நயன்தாரா.

Posted in சினிமா

சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் – தர்பார் பட நிறுவனம் அறிவிப்பு

சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் – தர்பார் பட நிறுவனம் அறிவிப்பு

ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘தர்பார்’ படத்தில் இடம் பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் என்று பட நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் – தர்பார் பட நிறுவனம் அறிவிப்பு
தர்பார் படத்தில் ரஜினி


ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா

அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தின் ஒரு காட்சியில் காவல்துறை அதிகாரி ஒருவர், இப்போதெல்லாம் சிறையிலிருப்பவர்கள் ஷாப்பிங் போகிறார்கள் என்று ரஜினியிடம் பேசுவதாக வசனம்

அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தது.

இந்நிலையில், தர்பாரில் இருக்கும் வசனத்தை நீக்க தயார் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், எங்களின் தர்பார் திரைப்படத்தில் கைதிகள்

சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ அல்லது யார் மனதையும்

புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல. இருப்பினும் அந்த குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதை

புண்படுத்துவதுவாக தெரியவந்ததால், அது படத்திலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துக் கொள்கிறோம்’ இவ்வாறு லைகா நிறுவனம் கூறியுள்ளது.

Posted in சினிமா

பிரிட்டிஷ் எயர் விமான நிறுவனம் மீது சோனம் கபூர் புகார்

பிரிட்டிஷ் எயர் விமான நிறுவனம் மீது சோனம் கபூர் புகார்

பிரபல இந்தி நடிகையும், தனுஷுடன் ராஞ்சனா படத்தில் நடித்தவருமான சோனம் கபூர், விமான நிறுவனம் மீது சரமாரியாக விமர்சித்து புகார் கூறியிருக்கிறார்.

பிரபல விமான நிறுவனம் மீது சோனம் கபூர் புகார்
சோனம் கபூர்
இந்தி நடிகை சோனம் கபூர். அனில்கபூரின் மகளான இவர்

தனுசுடன் ராஞ்சனா என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை சரமாரியாக விமர்சித்துள்ளார்.

சோனம் கபூர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்த மாதம் மூன்று முறை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளேன். இதில் இரண்டு முறை எனது உடமைகளை இழந்து விட்டேன். அதை வேறு விமானத்தில்

அனுப்பி வைத்து விட்டனர். இதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். இனி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

இதை அந்த விமான நிறுவனத்துக்கும் டேக் செய்திருந்தார். இதற்கு மன்னிப்பு கேட்டுள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான

நிறுவனம், லக்கேஜ் தாமதத்துக்கு வருந்துகிறோம், இது பற்றி சரியாக தகவல் அளித்துள்ளீர்களா?’ என்று கேட்டிருந்தது.

சோனம் கபூர் ட்விட்

பிரிட்டிஷ் எயர் விமான நிறுவனம் மீது சோனம் கபூர் புகார்

இதற்கு சோனம் கபூர் ‘எல்லாம் முடிந்துவிட்டது. நீங்கள்தான் இனி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மோசமான நிர்வாக செயல்பாடு’ என்று கோபமாக பதில் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த விமான நிறுவனம் மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளது. விரைவாக உங்கள் உடமைகள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

நடிகை பூஜா ஹெக்டேவும் இதை ஆமோதித்துள்ளார். அவர் ‘கடந்த மாதம் எனது 2 உடமைகளை தொலைத்து

விட்டார்கள். பின்னர் கூரியர் மூலம் அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு இது வாடிக்கை என்று தெரிவித்துள்ளார்.

இவரது சமூக வலைதள பதிவில் இவரது ரசிகர்களும் இந்த விமான சேவையை பயன்படுத்தாமல் விலகி கொள்ளுங்கள்

என் அப்பரப்புரை புரிந்து வருகினறனர் .

அம்மணி செய்த வேலையால் பிரபல விமான சேவை நிறுவனத்திற்கு நஷ்ட்டத்தை ,அவ பெயரை ஏற்படுத்தி விட்டதாக பார்க்க படுகிறது .

சில விமான நிறுவனங்கள் பயணிகளை இவ்வாறு சீண்டி பார்ப்பதில் முன் நிலை வகிப்பது குறிப்பிட தக்கது

பிரிட்டிஷ் எயர் விமான நிறுவனம்